Thursday, March 31, 2011

ஆனந்த விகடனில் சுகாவின் ‘மூங்கில் மூச்சு’ - ஒரு பகிர்வு

லகமெங்கும் விரவி ஊரின் நினைவோடு வாழும் திருநெல்வேலிக்காரர்கள் அனைவரும் கடந்த 12 வாரங்களாக ஆனந்த விகடன் கைக்குக் கிடைத்ததுமே முதலில் வாசிப்பது ‘மூங்கில் மூச்சாகவே’ இருக்கக் கூடும் என்பது என் அனுமானம்.

சில அத்தியாயங்கள் அப்படியே நம்மை எண்பதுகளின் காலக் கட்டதுக்குக் கொண்டு செல்லுபவையாக இருக்க, அதில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் அறிந்தவர்களாகவோ அல்லது அறிந்தவர்களுடன் தொன்னூறு சதவிகிதம் ஒப்பிடும்படியாகவோ சுவாரஸ்யம் கூட்டுகிறார்கள்.ஹை லைட்டாக அமைந்து தொடரை மேலும் நெருக்கமாக உணரச் செய்கிறது நெல்லைப் பேச்சுத் தமிழ்.

இழையோடும் நகைச்சுவையைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் வாசிக்கையில் அடக்க முடியாமல் சிரிப்பார் கணவர். அவருக்கும் நெல்லைதான். அப்படி என்னதான் என அடுத்து வாசிக்கையில் அடக்க முடியாது எனக்கும் சிரிப்பை!

தொடர் நிறைவுற்றுத் தொகுப்பாக வெளிவருகையில் வாங்கிட்டுத்தான் அடுத்த வேலை:)!

தவறவிட்டவர்கள் இனித் தொடருங்கள் ஆனந்த விகடனில்..

ழுத்தாளர் சுகாவுக்கு ஒரு வலைப்பூவும் இருப்பது சமீபத்தில் நண்பர்களின் buzz மூலமாக அறிய வந்தேன். வேணுவனம் அதன் பெயர். இதுவும் நெல்லைக்காரர்களுக்காக மட்டுமின்றி எல்லோருக்குமான தகவல்:)!

40 comments:

 1. மிக அருமை ராமலெக்ஷ்மி..:)) சுகாவுக்கு வாழ்த்துக்கள்..:))

  ReplyDelete
 2. ஏதேச்சையாக உங்களிடம் இத்தொடரைப் பற்றி சிலாகித்த என்னை, மற்றவருடனும் பகிர்ந்திடத் தூண்டியது நீங்களே:)! அதற்கும் சேர்த்து நன்றி!

  ReplyDelete
 3. நானும் கூட மிக அதிகம் ரசிக்கும் தொடர் இது. வானவில்லில் குறிப்பிட நினைத்திருந்தேன். நீங்கள் சொன்னாலும் பரவாயில்லை, நானும் கொஞ்ச நாள் கழித்தாவது இதனை மீண்டும் பகிர்கிறேன்

  ReplyDelete
 4. நம்ம ஊரு பாசம், எப்படி அக்கா போகும்? புத்தகம் வந்ததும் வாங்க வேண்டும், அக்கா.

  ReplyDelete
 5. சுகாவுக்கு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 6. நானும் தொடர்ந்து படித்து வருகிறேன். நன்றாக போகிறது.
  அவசியாமான பகிர்வு மேடம்.

  //மோகன் குமார் said...
  நானும் கூட மிக அதிகம் ரசிக்கும் தொடர் இது. வானவில்லில் குறிப்பிட நினைத்திருந்தேன். நீங்கள் சொன்னாலும் பரவாயில்லை, நானும் கொஞ்ச நாள் கழித்தாவது இதனை மீண்டும் பகிர்கிறேன்//

  மோகன் சார், நீங்கள் அவசியம் வானவில்லில் எழுதவும். இப்பொழுதே எழுதினால்தான் படிக்கத் தவறியவர்களுக்கு படிக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.
  நன்றி.

  ReplyDelete
 7. ஊர்ப்பாசம் :)

  இதை தொடர் படிக்க தொடங்கிய பிறகும் சுகா’வின் தாயார் சன்னதி புத்தகம் வாங்கி படித்ததும் நெல்லையின் மீது ஒரு பற்று உண்டாகிவிட்டது :) இது போல - சுகாவின் ஊர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களோடு அந்த காலக்கட்டத்திற்கே அழைத்துச்செல்லும் பாங்கினை பின்பற்றி ஒவ்வொருவரும் தம் ஊர் பற்றிய சிந்தனைகளோடு பயணிக்க ஏதுவாகவும் அமைந்திருக்கிறது !

  வாழ்த்துகள் சுகா

  &
  நெல்லை மக்களுக்கு

  தொடரினை படியுங்கள் முழுவதுமாய் ஊர் நினைவுகளை அனுபவியுங்கள்!

  ReplyDelete
 8. புத்தகமாக வந்ததும் வாங்கவேண்டும்.

  ReplyDelete
 9. அவரோட தாயார் சன்னிதி புத்தகத்தயும் வாங்கி படிங்க.. சொல்வனம் வெளியிடு :)

  ReplyDelete
 10. நானும் சுவாரஸ்யமாக படித்து வருகிறேன் இந்தப் பகுதியை...

  ReplyDelete
 11. எனக்கும் படிக்க ஆசையா இருக்குது....

  ReplyDelete
 12. \\தவறவிட்டவர்கள் இனித் தொடருங்கள் ஆனந்த விகடனில்..\\

  ஆகா! கண்டிப்பாக தொடருகிறேன். சென்னைக்காரனாக இருந்தாலும் ;)

  ReplyDelete
 13. நானும் மிகவும் ரசிக்கும் தொடர்.
  குறிப்பாக, டவுசர் போடும் காலத்தில் வேஷ்டி கட்டி கேலிக்காளான கதையை இப்போது பர்முடாஸ் போட்டுக்கொண்டு பேசிக்களித்ததை படித்ததும் பக்னு சிரித்துவிட்டேன்.

  ReplyDelete
 14. இந்த வார விகடனில் படித்து விட்டு சுகாவின் மூங்கில் மூச்சை முதலில் இருந்து படித்தாக வேண்டும் என்று சுவடுகள் போய் உத்தேசமாய் கிளிக் செய்து ஜனவரி 12 இதழில் இருந்து படித்து முடித்தேன்.யாரிந்த சுகா என்று கேட்க வேண்டும் போல் இருந்தது. பின்னூட்டம் இட்டவர் அதற்கான பதிலும் கொடுத்திருந்தார்.அருமையான நடை. பக்கத்து ஊர் காரியாக பெருமை பட்டுக் கொள்ளலாம்

  ReplyDelete
 15. நானும் படித்து வருகிறேன் ராமலக்ஷ்மி.
  நான் பார்த்த நெல்லை வேறுதான்.
  இப்போதிருக்கும் நெல்லை பற்றிப் படிக்கும் போது மனம் நிறைகிறது. அவருக்குக் கட்டாயம் நன்றிகள் போய்ச் சேர வேண்டும். சுட்டியதற்கு நன்றி.

  ReplyDelete
 16. சுகாவின் வேணுவனம் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். ஆனந்தவிகடனிலும் படித்தேன். ஆயில்யன் சுட்டி கொடுத்திருந்தார். நன்றி மா. மிக அருமையான சொல்வளம் இவருக்கு. சுகா அனுபவம் தான்.

  ReplyDelete
 17. மூங்கில் மூச்சு படித்தேன் ராமலக்ஷ்மி.

  ஊர் ஊராய் மாற்றல் ஆனாலும் என் அம்மா பெரியம்மா எல்லாம் ஒண்னா கூடினால் பேசுவது நெல்லை தமிழ்.

  எங்களுக்கு எல்லா ஊர் பாஷையும் கலந்து வரும்.

  துளசிகூட அவர்கள் பதிவில் வாரியலை சும்மா அப்படி அடியில் விட்டு தூத்தா (பெருக்கினா) என்று எழுதி இருந்தார்கள்.

  சில வார்த்தைகளை (தாய் மண்ணின்)
  மறக்க முடியாது.

  ஊர் பாசம் ஏற்பட வைக்கும் சுகாவிற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. நானும் படித்து வருகிறேன்

  ReplyDelete
 19. மோகன் குமார் said...
  //நானும் கூட மிக அதிகம் ரசிக்கும் தொடர் இது. வானவில்லில் குறிப்பிட நினைத்திருந்தேன். நீங்கள் சொன்னாலும் பரவாயில்லை, நானும் கொஞ்ச நாள் கழித்தாவது இதனை மீண்டும் பகிர்கிறேன்//

  அமைதி அப்பா சொல்வதே சரி:)! அடுத்த வானவில்லில் பகிர்ந்திடுங்கள்.

  நன்றி மோகன் குமார்.

  ReplyDelete
 20. Chitra said...
  //நம்ம ஊரு பாசம், எப்படி அக்கா போகும்? புத்தகம் வந்ததும் வாங்க வேண்டும், அக்கா.//

  ஆம் சித்ரா:), நன்றி.

  ReplyDelete
 21. S.Menaga said...
  //சுகாவுக்கு வாழ்த்துக்கள்!!//

  நன்றி மேனகா.

  ReplyDelete
 22. அமைதி அப்பா said...
  //நானும் தொடர்ந்து படித்து வருகிறேன். நன்றாக போகிறது.
  அவசியாமான பகிர்வு மேடம்.//

  நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 23. ஆயில்யன் said...
  //ஊர்ப்பாசம் :)

  இதை தொடர் படிக்க தொடங்கிய பிறகும் சுகா’வின் தாயார் சன்னதி புத்தகம் வாங்கி படித்ததும் நெல்லையின் மீது ஒரு பற்று உண்டாகிவிட்டது :) இது போல - சுகாவின் ஊர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களோடு அந்த காலக்கட்டத்திற்கே அழைத்துச்செல்லும் பாங்கினை பின்பற்றி ஒவ்வொருவரும் தம் ஊர் பற்றிய சிந்தனைகளோடு பயணிக்க ஏதுவாகவும் அமைந்திருக்கிறது !

  வாழ்த்துகள் சுகா

  &
  நெல்லை மக்களுக்கு

  தொடரினை படியுங்கள் முழுவதுமாய் ஊர் நினைவுகளை அனுபவியுங்கள்!//

  'தாயார் சன்னதி’ அவசியம் வாங்கி வாசிக்கின்றேன்.

  ‘ஒவ்வொருவரும் தம் ஊர் பற்றிய சிந்தனைகளோடு..’

  ஆம், மிக்க நன்றி ஆயில்யன்.

  ReplyDelete
 24. Lakshmi said...
  //புத்தகமாக வந்ததும் வாங்கவேண்டும்.//

  நிச்சயம். நன்றி லக்ஷ்மி.

  ReplyDelete
 25. இராமசாமி said...
  //அவரோட தாயார் சன்னிதி புத்தகத்தயும் வாங்கி படிங்க.. சொல்வனம் வெளியிடு :)//

  நல்லது. அவசியம் செய்கிறேன். மிக்க நன்றிங்க:)!

  ReplyDelete
 26. ஸ்ரீராம். said...
  //நானும் சுவாரஸ்யமாக படித்து வருகிறேன் இந்தப் பகுதியை...//

  நன்றி ஸ்ரீராம்:)!

  ReplyDelete
 27. MANO நாஞ்சில் மனோ said...
  //எனக்கும் படிக்க ஆசையா இருக்குது....//

  ஆனந்த விகடனில் தொடருங்கள்!

  ReplyDelete
 28. கோபிநாத் said...
  ***\\தவறவிட்டவர்கள் இனித் தொடருங்கள் ஆனந்த விகடனில்..\\

  ஆகா! கண்டிப்பாக தொடருகிறேன். சென்னைக்காரனாக இருந்தாலும் ;)/***

  சென்னை வாழ்வைப் பற்றிய பகுதிகளும் அதில் உண்டு:)! நன்றி கோபிநாத்.

  ReplyDelete
 29. நசரேயன் said...
  //படிக்கிறேன்//

  நன்றி நசரேயன்:)!

  ReplyDelete
 30. நானானி said...
  //நானும் மிகவும் ரசிக்கும் தொடர்.
  குறிப்பாக, டவுசர் போடும் காலத்தில் வேஷ்டி கட்டி கேலிக்காளான கதையை இப்போது பர்முடாஸ் போட்டுக்கொண்டு பேசிக்களித்ததை படித்ததும் பக்னு சிரித்துவிட்டேன்.//

  இப்படி பல இடங்கள் தொடரில்:)! நன்றி நானானி.

  ReplyDelete
 31. செ.சரவணக்குமார் said...
  //நல்ல பகிர்வு.//

  மிக்க நன்றி சரவணக்குமார்.

  ReplyDelete
 32. Mahi_Granny said...
  //இந்த வார விகடனில் படித்து விட்டு சுகாவின் மூங்கில் மூச்சை முதலில் இருந்து படித்தாக வேண்டும் என்று சுவடுகள் போய் உத்தேசமாய் கிளிக் செய்து ஜனவரி 12 இதழில் இருந்து படித்து முடித்தேன்.யாரிந்த சுகா என்று கேட்க வேண்டும் போல் இருந்தது. பின்னூட்டம் இட்டவர் அதற்கான பதிலும் கொடுத்திருந்தார்.அருமையான நடை. பக்கத்து ஊர் காரியாக பெருமை பட்டுக் கொள்ளலாம்//

  நல்லது. தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி:)!

  ReplyDelete
 33. வல்லிசிம்ஹன் said...
  //நானும் படித்து வருகிறேன் ராமலக்ஷ்மி.
  நான் பார்த்த நெல்லை வேறுதான்.
  இப்போதிருக்கும் நெல்லை பற்றிப் படிக்கும் போது மனம் நிறைகிறது. அவருக்குக் கட்டாயம் நன்றிகள் போய்ச் சேர வேண்டும். சுட்டியதற்கு நன்றி.//

  நாங்கள் வளர்ந்த காலத்து நெல்லையை கண் முன் கொண்டு வந்துள்ளார்:)!

  //சுகாவின் வேணுவனம் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். ஆனந்தவிகடனிலும் படித்தேன். ஆயில்யன் சுட்டி கொடுத்திருந்தார். நன்றி மா. மிக அருமையான சொல்வளம் இவருக்கு. சுகா அனுபவம் தான்.//

  ஆம். தொடருங்கள். நன்றி வல்லிம்மா.

  ReplyDelete
 34. கோமதி அரசு said...
  //மூங்கில் மூச்சு படித்தேன் ராமலக்ஷ்மி.

  ஊர் ஊராய் மாற்றல் ஆனாலும் என் அம்மா பெரியம்மா எல்லாம் ஒண்னா கூடினால் பேசுவது நெல்லை தமிழ்.

  எங்களுக்கு எல்லா ஊர் பாஷையும் கலந்து வரும்.

  துளசிகூட அவர்கள் பதிவில் வாரியலை சும்மா அப்படி அடியில் விட்டு தூத்தா (பெருக்கினா) என்று எழுதி இருந்தார்கள்.

  சில வார்த்தைகளை (தாய் மண்ணின்)
  மறக்க முடியாது.

  ஊர் பாசம் ஏற்பட வைக்கும் சுகாவிற்கு வாழ்த்துக்கள்.//

  ஆம், தொடரில் வரும் பல நெல்லைச் சீமை வார்த்தைகள் மற்றவருக்குப் புரியுமா என்று கூட நான் நினைப்பதுண்டு:)! மண்ணுக்கே உரிய மணத்துடன் எழுதி வருகிறார்.

  நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 35. க‌ரிச‌ல்கார‌ன் said...
  //நானும் படித்து வருகிறேன்//

  தொடருங்கள்:)! மிக்க நன்றி.

  ReplyDelete
 36. தமிழ்மணம், இன்ட்லியில் வாக்களித்த அனைவருக்கும் என் நன்றி.

  ReplyDelete
 37. அக்கா, அந்தத் தொடரின் பெயரைப் பார்த்து, கவிதைத் தொடராக இருக்கும் என்று நினைத்துப் படிக்காமலிருந்தேன். அடடா, மிஸ் பண்ணிவிட்டேன்!! இணையத்டில் வாசிப்பதால் இப்படித்தான் நிறையவற்றை ஒதுக்க நேரிடுகிறது. கையில் புத்தகத்தை வைத்து, படுத்துக் கொண்டே வாசிப்பது போன்ற சுகம் இணையத்தில் வாசிக்கும்போது வருவதில்லை.

  இனி முழுதும் வாசிக்கிறேன். நல்லவேளை சொன்னீங்க!! ;-))))

  ReplyDelete
 38. @ ஹுஸைனம்மா,

  நல்லது ஹுஸைனம்மா:)! இனித் தொடருங்கள். முந்தைய அத்தியாயங்களையும் தேடிப் பிடித்து வாசித்து விடுங்கள்!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin