வியாழன், 3 டிசம்பர், 2009

தேவதையும் முத்துச்சரமும்

தேவதையின் கழுத்தினை அலங்கரித்தபடி இருக்கப் போகிறது 'முத்துச்சரம்', டிசம்பர் 1-15 வரையில் :)!

மாதமிருமுறையாக கடந்த ஜூலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் பெண்களுக்கான பத்திரிகைதான் தேவதை:தன்னம்பிக்கை மிளிரும் பெண்களையும், சாதித்து வரும் மகளிரையும் ஒருபக்கம் முன் நிறுத்தி வரும் தேவதை [இந்த இதழின் அட்டையில் அறிவிப்பாகியிருக்கும் சாதனைப் பெண்மணி நம் ரம்யா தேவி], சமையல் வீட்டுக்குறிப்புகள் ஆன்மீகம் கோலங்கள் கைவேலை ஷாப்பிங் ஃபேஷன் ஷேர்மார்க்கெட் என எதையும் விட்டு வைக்காமல் எல்லா வயது மற்றும் துறையைச் சேர்ந்த மங்கையரையும் கவருவதாக இருக்கிறது.

வ்வொரு இதழிலும் 'வலையோடு விளையாடு' எனகிற பகுதியில் ஒரு பெண் வலைப்பதிவரை அறிமுகப்படுத்தி வருகிறது. அப்பதிவரின் பல இடுகைகளிலிருந்து தனது வாசகர்களை சுவாரஸ்யப் படுத்தக் கூடியவற்றைத் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறது. அந்த வரிசையில்தான் இந்த இதழில் நான்:[கடந்த வருட மெகா PiT போட்டியில் முதல் சுற்றுக்குத் தேர்வான
கடற்கரை சூரியோதம் மேலிரண்டு பக்கங்களுக்கும் பின்னணியாக..]
ல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என அதனைத் திறம்பட நிர்வகித்தபடி, மற்றவர் சாதிக்க உறுதுணையாகவும், நிதி மதி இன்னபிற இலாகா மந்திரிகளாகவும் இயங்கி வருகின்ற இல்லத்தரசிகளுக்கும்..

அலுவலகம் வெளியுலகம் வீடு எனக் கால்களில் கழட்டி வைக்க நேரமே இல்லாத சக்கரங்களுடன் சுழன்றபடி அதை சிரமமாகவும் நினைக்காமல் சவாலாய் அழகாய் பேலன்ஸ் செய்துகொண்டு வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்தவாறே இருக்கும் பெண்களுக்கும்..

தாமும் தமது எண்ணங்களை கருத்துக்களை அனுபவங்களை சுதந்திரமாக முன் வைக்க இப்படி ஒரு களம் இருப்பதைக் கண்டு கொள்ள வைக்கும் முயற்சியாகவும் இருக்கின்றது தேவதையின் 'வலையோடு விளையாடு'. இதனால் பல வலைப்பூக்கள் மலருமென நம்புவோம். வாழ்த்தி அவற்றை வரவேற்போம்.

முத்துச்சர அறிமுகத்துக்கு மனமார்ந்த நன்றிகள் தேவதை!
***

139 கருத்துகள்:

 1. நான் தான் பஷ்ட்டு. மனமார்ந்த வாழ்த்துக்கள். :))

  பதிலளிநீக்கு
 2. வேலைக்கும் போயிட்டு, வீட்லயும் ஒத்தாசையா இருந்து தங்கள் கருத்தை சுதந்திரமாக சொல்லக் கூட வழியில்லாத ஒடுக்கப்பட்ட ஒரு சமூகமான ரங்கமணிகளுக்கும் இந்த பிளாக் தான் ஒரே அவுட்லெட் என இங்கு பதிவு செய்து கொள்கிறேன். :))

  (மக்கா! வரிசையா வந்து வழிமொழியுங்கடே!)

  பதிலளிநீக்கு
 3. தேவதை சூடிய முத்துச் சரம் கண்டேன்.
  வாழ்த்துக்கள்.
  சைக்கிள் வாங்கப் போறேன்னு தொடங்கிய பள்ளிப் பருவத்து நடைவண்டி பாடலிலிருந்து, தேவதை வரை உங்கள் வெற்றி நடை கண்டு பூரித்து எழுதுகிறேன், மேன்மேலும் வளர என் ஆசிகள்[வாழ்த்தவும் ஆசி கூறவும் வயசு இருக்கிறது]

  பதிலளிநீக்கு
 4. பை தி பை வாழ்த்துக்கள் முத்துசரத்துக்கும், ரம்யாவுக்கும்!!!!

  பதிலளிநீக்கு
 5. \\வேலைக்கும் போயிட்டு, வீட்லயும் ஒத்தாசையா இருந்து தங்கள் கருத்தை சுதந்திரமாக சொல்லக் கூட வழியில்லாத ஒடுக்கப்பட்ட ஒரு சமூகமான ரங்கமணிகளுக்கும் இந்த பிளாக் தான் ஒரே அவுட்லெட் என இங்கு பதிவு செய்து கொள்கிறேன். :))

  \\

  அம்பியை கன்னா பின்னான்னு அழுது புரண்டு, பெரிய கோவில் உச்சில ஏறி,அங்கிருந்து திருகுளத்திலே குதித்து வழிமொழியும் அப்பாவி

  அபிஅப்பா!!

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துக்கள் அக்கா...

  //தேவதையின் கழுத்தினை அலங்கரித்தபடி இருக்கப் போகிறது 'முத்துச்சரம்'//
  குடுத்து வைத்த தேவதை....

  தேவதையின் பயணத்துக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. தேவதையின் முத்துச்சரத்திற்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. அன்புச் சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்.. தொடருங்கள் !

  பதிலளிநீக்கு
 9. //அம்பியை கன்னா பின்னான்னு அழுது புரண்டு, பெரிய கோவில் உச்சில ஏறி,அங்கிருந்து திருகுளத்திலே குதித்து வழிமொழியும் அப்பாவி

  அபிஅப்பா!!//

  அபி அப்பா தொபுக்கடீர்ன்னு குதிச்சு வழி மொழிவதை,பெரியகோவில் உச்சியிலிருந்து பார்த்தபடியே ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய் கூவும்

  அன்புடன்
  ஆயில்யன்

  பதிலளிநீக்கு
 10. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!

  தேவதைக்கு மேலும் அழகூட்டும் உங்கள்
  முத்துச்சரம்.

  பதிலளிநீக்கு
 11. தேவதைக்கும் முத்துச் சரத்துக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 12. ஹை.. இதுவரை தேவதை வாங்கினதில்லை. இந்த முறை வாங்குகிறேன். ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்.
  (ரம்யா & நீங்க)

  பதிலளிநீக்கு
 13. வேலை பளுவால் இப்போதுதான் பார்த்தேன் ராமலஷ்மி...வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 14. தேவதையில் உங்களின் பேசும் படங்கள் அருமை. என்னோட கட்டுரை வந்த அதே இதழில் உங்களின் வலை அறிமுகம். அருமை சகோதரி. இந்த டிசம்பர் மாதம் என்னால் மறக்க இயலாது.

  என்னை உங்கள் வலையில் பெருமைப் படுத்தியதிற்கு மிக்க நன்றி. கண்களில் என்னையும் மீறி கண்ணீர் வருகிறது.

  நன்றி சகோ!

  பதிலளிநீக்கு
 15. வாழ்த்துகள் மேடம்.

  முன்னரே எதிர்பார்த்தேன்..

  பதிலளிநீக்கு
 16. வாவ்!

  வாழ்த்துக்கள் சகா!(ஹி..ஹி..சம வயது!)சந்தோசமாய்,நிறைவாய் இருக்கு,ராமலக்ஷ்மி!

  அன்பின் ரம்யாவிற்கும் இங்கு என் வாழ்த்தை பதிகிறேன்.வாழ்த்துக்கள் ரம்யா!

  பதிலளிநீக்கு
 17. ரொம்ப சந்தோசமா இருக்கு மேம்...

  நம் சக பதிவர்கள் இதழ்களில் மின்னுகின்றனர்..

  தொடர்ந்து சிறந்த படைப்புகள் படைத்து இன்னும் பல இதழ்களில் வலம் வர வாழ்த்துக்கள் சகோ

  ரம்யாக்காக்கும் வாழ்த்துக்கள்...

  யாராச்சும் என்னோட போஸ்ட் ஒண்ணு சொர்கத்துக்கு ஒரு கடிதம்
  + எழுதுகிறேன் ஒரு கடிதம் தமிழரசி
  தேவதைல வந்துச்சாமே அத ஸ்கேன் பண்ணி அனுப்புனா நல்லாயிருக்கும்
  என் கண்ணால பாத்துக்குவேன் அவ்வ்வ்வ்வ்வ்......

  பதிலளிநீக்கு
 18. வாழ்த்துக்களுடன் பூங்கொத்துக்கள் பல !

  பதிலளிநீக்கு
 19. அன்பின் ராம்லக்ஷ்மி

  தேவதையில் முத்துச்சரம் - வாழ்த்துகிறேன்

  நல்வாழ்த்துகள் ராமலக்ஷ்மி

  பதிலளிநீக்கு
 20. அடடே...!சூப்பரம்மா! ஒரு பக்கம் விருதுகளால் நிரம்ப, இன்னொரு பக்கம்
  கவனிப்புகளால் உலகை ஈர்க்க, முத்துச்சரத்தின் ஒளி எங்கெங்கும் ஒளிர
  அத்தை மனசு ஆனந்தப்படுது!!!!

  பதிலளிநீக்கு
 21. ராமலக்ஷ்மி,
  உங்கள் முத்துச்சரம் தேவதையில் ஒளிர்கிறதா? அந்த இத்ழை வாங்கி பார்க்கிறேன்.
  பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 22. மனமார்ந்த வாழ்த்துக்கள். :))

  பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 23. வாவ், கலக்கிட்டீங்க மேடம்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 24. //ரங்கமணிகளுக்கும்//

  தட்டச்சுப் பிழை அம்பி :) 'த' வுக்கு பதில் 'ர' போட்டுட்டீங்க! :)

  பதிலளிநீக்கு
 25. வாழ்க! வாழ்க!!

  ரம்யாவிற்கும் உங்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!

  பதிலளிநீக்கு
 26. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 27. வாழ்த்துக்கள். முத்துச்சரம் அழுத்தமான பதிவுகளை அச்சிலும் வார்க்கிறது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 28. //ambi said...
  வேலைக்கும் போயிட்டு, வீட்லயும் ஒத்தாசையா இருந்து தங்கள் கருத்தை சுதந்திரமாக சொல்லக் கூட வழியில்லாத ஒடுக்கப்பட்ட ஒரு சமூகமான ரங்கமணிகளுக்கும் இந்த பிளாக் தான் ஒரே அவுட்லெட் என இங்கு பதிவு செய்து கொள்கிறேன். :))

  (மக்கா! வரிசையா வந்து வழிமொழியுங்கடே!)
  //

  வந்தாச்சு .... :))

  பதிலளிநீக்கு
 29. உங்க முத்துச்சரத்தின் மூலம்தான் எனக்கு இந்த "தேவதை"யே அறிமுகமாகிறாள்.

  படங்கள்னு பொதுவா சொல்றாங்க. ஒரு வேளை அந்த "நான்தாங்க" படங்களையோ? :-)))

  வாழ்த்துக்கள் ங்க, ராமலக்ஷ்மி!

  பதிலளிநீக்கு
 30. நன்றாக வந்திருக்கிறது ராமலக்‌ஷ்மி... :) மேலும் பல பூவையரின் வலைப்பூக்கள் மலர வாழ்த்துவோம்...

  பதிலளிநீக்கு
 31. வாவ்..வாழ்த்துகள் ராமலஷ்மி! முத்துச்சரம் ஜொலித்துக்குகொண்டே இருக்கட்டும்! :-)

  பதிலளிநீக்கு
 32. ரொம்ப சந்தோஷமா இருக்கு. மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி.

  பதிலளிநீக்கு
 33. அட்டகாசம் ராம் மேடம் :-) மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. மேன்மேலும் வளர வாழ்த்த வயதில்லையென்றாலும் வாழ்த்திதானே ஆகவேண்டும் :-)
  வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள் !! வாழ்த்துக்கள் !!!

  பதிலளிநீக்கு
 34. வாழ்த்துக்கள் அக்கா...

  பதிலளிநீக்கு
 35. அக்கா...தேவதை இதழ் பற்றி சுருக்கமா ஆனா எல்லா விவரத்தையும் அறிமுகம் செய்துட்டீங்க. மெகா சீரியல் பார்த்து ஒப்பாரி வைக்கிறதே வேலையா போச்சுன்னு என் அம்மாவை கிண்டல் பண்றதுதான் இது நாள் வரை என்னுடைய முக்கிய வேலை. ஆனால் தேவதையில வந்த ஒரு கட்டுரை என்னை கண்ணீர் வடிக்க வெச்சுட்டுது. அது பற்றி சின்ன விளக்கம் கீழ...
  http://writer-saran.blogspot.com/2009/12/blog-post_592.html

  பதிலளிநீக்கு
 36. அடப்போங்க! உங்களை எத்தனை முறை தான் பாராட்டுவது ;-)

  பதிலளிநீக்கு
 37. அக்கா, வாழ்த்துக்கள். உங்களுக்கு வந்த பெருமை, நம் convent உக்கும் சேர்த்துதான். இன்னும் பல உச்சங்கள் தொட வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 38. கலக்குங்க ராமலக்ஷ்மி. மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 39. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் தோழி

  விஜய்

  பதிலளிநீக்கு
 40. வாழ்த்துக்கள் மேடம். மென் மேலும் recognitino பல தங்களை வந்து சேர வாழ்த்துகிறேன்

  பதிலளிநீக்கு
 41. வாழ்த்துக்கள் தோழி.. இன்னும் நிறைய நிறைவாய் எழுதி விருதுகள்,அங்கீகாரம்,புகழ் பெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 42. தேவதைக்கு வாழ்த்துகள் :)

  அம்பியை கன்னாபின்னாவென வழிமொழிவதில் சற்றே உள்ளம் ஆறுதல் அடைகிறேன். உண்மையை பட்டென்று எடுத்துக் கூறும் அம்பிக்கும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 43. சிறப்பான செய்தி. வாழ்த்துகள் உங்களுக்கும், ரம்யாவிற்கும்.!

  பதிலளிநீக்கு
 44. மீ த 57..!!

  மிக்க மகிழ்ச்சி..வாழ்த்துக்கள் மா!!

  ரம்யாவுக்கு வாழ்த்துக்கள் அங்கயே சொல்லிட்டேன்..இருந்தாலும் இங்கயும் சொல்லிக்கிறேன்..

  வாழ்த்துக்கள்..ரம்யா!!!

  பதிலளிநீக்கு
 45. ambi said...

  // நான் தான் பஷ்ட்டு. மனமார்ந்த வாழ்த்துக்கள். :))//

  நன்றி அம்பி:)!

  //வேலைக்கும் போயிட்டு, வீட்லயும் ஒத்தாசையா இருந்து தங்கள் கருத்தை சுதந்திரமாக சொல்லக் கூட வழியில்லாத ஒடுக்கப்பட்ட ஒரு சமூகமான ரங்கமணிகளுக்கும் இந்த பிளாக் தான் ஒரே அவுட்லெட் என இங்கு பதிவு செய்து கொள்கிறேன். :))//

  கிளம்பிட்டாங்கைய்யா கிளம்பிட்டாங்க:))!

  //(மக்கா! வரிசையா வந்து வழிமொழியுங்கடே!)//

  சொல்லிட்டீங்களே விடுவாங்களா? பாருங்க வரிசையா அபி அப்பா, ஆயில்யன், ஜீவ்ஸ்..:)))!

  பதிலளிநீக்கு
 46. goma said...

  //தேவதை சூடிய முத்துச் சரம் கண்டேன்.
  வாழ்த்துக்கள்//

  வாழ்த்துக்களுக்கு நன்றி கோமா. பள்ளிவயதில் எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று வரை அந்தந்த காலக் கட்டத்தில் அவற்றை வாசித்து வாழ்த்தியபடியே வரும் உங்கள் ஆசிகள் என்றைக்கும் எனக்கு உண்டெனத் தெரியும். ஆசிகளுக்கும் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 47. துளசி கோபால் said...

  //இனிய வாழ்த்து(க்)கள்!//

  நன்றிகள் மேடம்:)!

  பதிலளிநீக்கு
 48. மகா said...

  //வாழ்த்துக்கள் ....//

  முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி மகா.

  பதிலளிநீக்கு
 49. அமுதா said...

  //மனமார்ந்த வாழ்த்துக்கள்//

  நன்றி அமுதா.

  பதிலளிநீக்கு
 50. அமிர்தவர்ஷினி அம்மா said...

  //வாழ்த்துக்கள் ராம் மேடம்//

  நன்றி அமித்து அம்மா.

  பதிலளிநீக்கு
 51. அபி அப்பா said...
  //அம்பியை கன்னா பின்னான்னு அழுது புரண்டு, பெரிய கோவில் உச்சில ஏறி,அங்கிருந்து திருகுளத்திலே குதித்து வழிமொழியும் அப்பாவி

  அபிஅப்பா!!//

  அப்பாவியா சரிதான் சரிதான்:))!

  //பை தி பை வாழ்த்துக்கள் முத்துசரத்துக்கும், ரம்யாவுக்கும்!!!!//

  நன்றிகள் ரம்யாவின் சார்பாகவும்.

  பதிலளிநீக்கு
 52. சுசி said...

  ***/ வாழ்த்துக்கள் அக்கா...

  //தேவதையின் கழுத்தினை அலங்கரித்தபடி இருக்கப் போகிறது 'முத்துச்சரம்'//

  குடுத்து வைத்த தேவதை....

  தேவதையின் பயணத்துக்கும் வாழ்த்துக்கள்./***

  உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கும் நான் கொடுத்து வைத்திருக்கணும். நன்றிகள் சுசி.

  பதிலளிநீக்கு
 53. தண்டோரா ...... said...

  //வாழ்த்துக்கள் சகோதரி//

  மிக்க நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 54. மாதேவி said...

  //தேவதையின் முத்துச்சரத்திற்கு வாழ்த்துக்கள்.//

  நன்றி மாதேவி.

  பதிலளிநீக்கு
 55. திகழ் said...

  //வாழ்த்துகள்//

  மிக்க நன்றி திகழ்!

  பதிலளிநீக்கு
 56. எம்.ரிஷான் ஷெரீப் said...

  //அன்புச் சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்.. தொடருங்கள் !//

  ஒவ்வொரு சமயமும் என்னை ஊக்கப் படுத்தி வருவதற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ரிஷான்.

  பதிலளிநீக்கு
 57. ஆயில்யன் said...

  //வாழ்த்துக்கள் அக்கா :))))//

  நன்றி ஆயில்யன்:)!

  //அபி அப்பா தொபுக்கடீர்ன்னு குதிச்சு வழி மொழிவதை,பெரியகோவில் உச்சியிலிருந்து பார்த்தபடியே ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய் கூவும்

  அன்புடன்
  ஆயில்யன்//

  சாட்சி மட்டும்தான் என்று பார்த்தால் மறுக்கா வேறு கூவி மகிழ்கிறீர்களா:))?

  பதிலளிநீக்கு
 58. கோமதி அரசு said...

  //வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!

  தேவதைக்கு மேலும் அழகூட்டும் உங்கள்
  முத்துச்சரம்.//

  வருகைக்கும் உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிம்மா!

  பதிலளிநீக்கு
 59. Mrs.Menagasathia said...

  // மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 60. ஜெஸ்வந்தி said...

  //தேவதைக்கும் முத்துச் சரத்துக்கும் வாழ்த்துக்கள்.//

  நன்றி ஜெஸ்வந்தி!

  பதிலளிநீக்கு
 61. கபீஷ் said...

  //ஹை.. இதுவரை தேவதை வாங்கினதில்லை. இந்த முறை வாங்குகிறேன். ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்.
  (ரம்யா & நீங்க)//

  வாங்கிப்பாருங்கள் கபீஷ். ரம்யாவைப் பற்றியதான கட்டுரை மிகச் சிறப்பானது.

  பதிலளிநீக்கு
 62. புலவன் புலிகேசி said...

  //வேலை பளுவால் இப்போதுதான் பார்த்தேன் ராமலஷ்மி...வாழ்த்துக்கள்...//

  வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி புலவன் புலிகேசி.

  பதிலளிநீக்கு
 63. RAMYA said...

  // தேவதையில் உங்களின் பேசும் படங்கள் அருமை. என்னோட கட்டுரை வந்த அதே இதழில் உங்களின் வலை அறிமுகம். அருமை சகோதரி. இந்த டிசம்பர் மாதம் என்னால் மறக்க இயலாது.//

  உங்களைப் பற்றிய அதிலுள்ள விவரங்கள் ஏற்கனவே உங்கள் வலைப்பூவில் படித்திருந்தாலும் அவர்களின் அறிமுகம் சிறப்பு ரம்யா. தன்னம்பிக்கைக்கு முன் உதாரணம் என்றால் அது நீங்கள்தான்.

  // என்னை உங்கள் வலையில் பெருமைப் படுத்தியதிற்கு மிக்க நன்றி. கண்களில் என்னையும் மீறி கண்ணீர் வருகிறது.

  நன்றி சகோ!//

  அதில் எனக்குத்தானேங்க பெருமை. உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 64. butterfly Surya said...

  //வாழ்த்துகள் மேடம்.

  முன்னரே எதிர்பார்த்தேன்..//

  மிக்க நன்றி சூர்யா. ஆமாம் வரிசையாக நம் வலைப்பதிவர் பலரையும் தேவதையில் இனிநாம் எதிர்பார்க்கலாம். நல்ல விஷயம்தானே.

  பதிலளிநீக்கு
 65. வால்பையன் said...

  // பகிர்வுக்கு நன்றி!//

  வருகைக்கும் நன்றி வால்பையன்.

  பதிலளிநீக்கு
 66. பா.ராஜாராம் said...

  //வாவ்!

  வாழ்த்துக்கள் சகா!(ஹி..ஹி..சம வயது!)சந்தோசமாய்,நிறைவாய் இருக்கு,ராமலக்ஷ்மி!//

  மிக்க நன்றி சகா:)!

  //அன்பின் ரம்யாவிற்கும் இங்கு என் வாழ்த்தை பதிகிறேன்.வாழ்த்துக்கள் ரம்யா!//

  ரம்யாவின் சார்பாகவும் என் நன்றிகள்!

  பதிலளிநீக்கு
 67. பிரியமுடன்...வசந்த் said...

  // ரொம்ப சந்தோசமா இருக்கு மேம்...

  நம் சக பதிவர்கள் இதழ்களில் மின்னுகின்றனர்..

  தொடர்ந்து சிறந்த படைப்புகள் படைத்து இன்னும் பல இதழ்களில் வலம் வர வாழ்த்துக்கள் சகோ

  ரம்யாக்காக்கும் வாழ்த்துக்கள்...//

  உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி வசந்த்.

  // யாராச்சும் என்னோட போஸ்ட் ஒண்ணு சொர்கத்துக்கு ஒரு கடிதம்
  + எழுதுகிறேன் ஒரு கடிதம் தமிழரசி தேவதைல வந்துச்சாமே அத ஸ்கேன் பண்ணி அனுப்புனா நல்லாயிருக்கும்
  என் கண்ணால பாத்துக்குவேன் அவ்வ்வ்வ்வ்வ்......//

  ரம்யாவின் உதவியுடன் கண்ணால் பார்த்து மகிழ்ந்தது அறிந்து மிக்க சந்தோஷம்:)!

  பதிலளிநீக்கு
 68. அன்புடன் அருணா said...

  //வாழ்த்துக்களுடன் பூங்கொத்துக்கள் பல !//

  தவறாமல் வருகை தந்து தந்தபடி இருக்கும் பூங்கொத்துக்களுக்கு நன்றி அருணா.

  பதிலளிநீக்கு
 69. cheena (சீனா) said...

  //அன்பின் ராம்லக்ஷ்மி

  தேவதையில் முத்துச்சரம் - வாழ்த்துகிறேன்

  நல்வாழ்த்துகள் ராமலக்ஷ்மி//

  தங்கள் வருகைக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சீனா சார்.

  பதிலளிநீக்கு
 70. ஸ்ரீராம். said...

  // வாழ்த்துக்கள் மேடம்(ஸ்)!//

  ரம்யாவின் சார்பாகவும் நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 71. நானானி said...

  //அடடே...!சூப்பரம்மா! ஒரு பக்கம் விருதுகளால் நிரம்ப, இன்னொரு பக்கம்
  கவனிப்புகளால் உலகை ஈர்க்க, முத்துச்சரத்தின் ஒளி எங்கெங்கும் ஒளிர
  அத்தை மனசு ஆனந்தப்படுது!!!!//

  என் வலைப் பிரவேசமே உங்கள் வலைப்பூவினைப் பார்த்து ஏற்பட்ட ஈர்ப்பினால்தான்! அதற்கும், தேவதையை உடனே வாங்கிப் பார்த்தமைக்கும் என் நன்றிகள்:)!

  பதிலளிநீக்கு
 72. செ.சரவணக்குமார் said...

  //மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா.//

  நன்றி சரவணக்குமார்.

  பதிலளிநீக்கு
 73. சகாதேவன் said...

  //ராமலக்ஷ்மி,
  உங்கள் முத்துச்சரம் தேவதையில் ஒளிர்கிறதா? அந்த இத்ழை வாங்கி பார்க்கிறேன்.
  பாராட்டுக்கள்//

  ஆசிகளாய் வந்திருக்கும் பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி:)!

  பதிலளிநீக்கு
 74. தமிழ் பிரியன் said...

  // வாழ்த்துக்கள் அக்கா! //

  நன்றிகள் தமிழ் பிரியன்!

  பதிலளிநீக்கு
 75. ஆ.ஞானசேகரன் said...

  //மனமார்ந்த வாழ்த்துக்கள். :))

  பாராட்டுக்கள்//

  வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் நன்றி ஞானசேகரன்:)!

  பதிலளிநீக்கு
 76. Truth said...

  //வாவ், கலக்கிட்டீங்க மேடம்.
  வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி ட்ரூத்:)!

  பதிலளிநீக்கு
 77. கவிநயா said...

  // வாழ்க! வாழ்க!!

  ரம்யாவிற்கும் உங்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!//

  நல்வாழ்த்துக்களுக்கு நன்றி, ரம்யாவின் சார்பிலும்.

  ***/ //ரங்கமணிகளுக்கும்//

  தட்டச்சுப் பிழை அம்பி :) 'த' வுக்கு பதில் 'ர' போட்டுட்டீங்க! :)/***

  அப்படிப் போடுங்க கவிநயா:))!

  பதிலளிநீக்கு
 78. நசரேயன் said...

  //வாழ்த்துக்கள் ....//

  நன்றி நசரேயன்.

  பதிலளிநீக்கு
 79. சின்ன அம்மிணி said...

  //மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

  நன்றி அம்மிணி.

  பதிலளிநீக்கு
 80. சதங்கா (Sathanga) said...

  //வாழ்த்துக்கள். முத்துச்சரம் அழுத்தமான பதிவுகளை அச்சிலும் வார்க்கிறது. வாழ்த்துக்கள்.//

  வாழ்த்துக்களுக்கு நன்றி சதங்கா:)!

  ***/ //ஒடுக்கப்பட்ட ஒரு சமூகமான ரங்கமணிகளுக்கும் இந்த பிளாக் தான் ஒரே அவுட்லெட் என இங்கு பதிவு செய்து கொள்கிறேன். :))

  (மக்கா! வரிசையா வந்து வழிமொழியுங்கடே!)//

  வந்தாச்சு .... :))/***

  அட நீங்களும் அந்த வரிசையில்தானா:)))? சரியாப் போச்சு:)!

  பதிலளிநீக்கு
 81. வருண் said...

  // உங்க முத்துச்சரத்தின் மூலம்தான் எனக்கு இந்த "தேவதை"யே அறிமுகமாகிறாள்.//

  சமீபத்தில் (கடந்த ஜூலை) ஆரம்பிக்கப் பட்டதல்லவா? இப்போதுதான் மக்கள் மத்தியில் பரவலாக அறிமுகமானபடி இருக்கிறாள்.

  //படங்கள்னு பொதுவா சொல்றாங்க. ஒரு வேளை அந்த "நான்தாங்க" படங்களையோ? :-)))//

  ஹி.., அவை என் தந்தை எடுத்ததவையாயிற்றே:)? எப்படியானாலும் என் புகைப்படக் கலை மீதான ஆர்வம் அவரிடமிருந்தே வந்திருக்கக் கூடும் என்பது என் எண்ணம். இப்போது அந்த ஆர்வம் தொடர PiT நடத்தும் போட்டிகளும் ஒரு காரணம்.

  //வாழ்த்துக்கள் ங்க, ராமலக்ஷ்மி!//

  தொடர் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி வருண்.

  பதிலளிநீக்கு
 82. முத்துலெட்சுமி/muthuletchumi said...

  // நன்றாக வந்திருக்கிறது ராமலக்‌ஷ்மி... :) மேலும் பல பூவையரின் வலைப்பூக்கள் மலர வாழ்த்துவோம்...//

  நன்றி முத்துலெட்சுமி. அதுவேதான் என் ஆசையும். வாழ்த்தி வரவேற்போம்:)!

  பதிலளிநீக்கு
 83. சந்தனமுல்லை said...

  // வாவ்..வாழ்த்துகள் ராமலஷ்மி! முத்துச்சரம் ஜொலித்துக்குகொண்டே இருக்கட்டும்! :-)//

  மிக்க நன்றி முல்லை:)!

  பதிலளிநீக்கு
 84. புதுகைத் தென்றல் said...

  //ரொம்ப சந்தோஷமா இருக்கு. மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி.//

  தங்கள் மகிழ்ச்சி எனக்கும் மகிழ்ச்சி. நல்வாழ்த்துக்களுக்கு நன்றி தென்றல்.

  பதிலளிநீக்கு
 85. சரண் said...

  //அக்கா...தேவதை இதழ் பற்றி சுருக்கமா ஆனா எல்லா விவரத்தையும் அறிமுகம் செய்துட்டீங்க.//

  நன்றி சரண். கடந்த பதிவில் வந்து விவரம் தந்தமைக்கும்.

  உங்கள் பதிவினைப் பார்த்தேன். பகிவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 86. கிரி said...

  //அடப்போங்க! உங்களை எத்தனை முறை தான் பாராட்டுவது ;-)//

  ஒவ்வொரு புகைப்படப் பதிவிலும் என் விடாத ஆர்வத்தைப் பாராட்டுவதாய் கூறுவீர்களே, அவைதான் ‘பேசும் படங்களாக’ இன்று தேவதையில்:)! நன்றி கிரி.

  பதிலளிநீக்கு
 87. Chitra said...

  //அக்கா, வாழ்த்துக்கள். உங்களுக்கு வந்த பெருமை, நம் convent உக்கும் சேர்த்துதான்.//

  நிச்சயமாய்.

  // இன்னும் பல உச்சங்கள் தொட வாழ்த்துக்கள். //

  மிக்க நன்றி சித்ரா.

  பதிலளிநீக்கு
 88. சிங்கக்குட்டி said...

  // மீண்டும் மீண்டும் வாழ்த்துகள் :-)//

  நன்றி சிங்கக்குட்டி:)!

  பதிலளிநீக்கு
 89. Shakthiprabha said...

  //கலக்குங்க ராமலக்ஷ்மி. மனமார்ந்த வாழ்த்துக்கள்!//

  மிக்க நன்றி ஷக்தி:)!

  பதிலளிநீக்கு
 90. கவிதை(கள்) said...

  //நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் தோழி

  விஜய்//

  மிக்க நன்றி விஜய்.

  பதிலளிநீக்கு
 91. Mohan Kumar said...

  //வாழ்த்துக்கள் மேடம். மென் மேலும் recognitino பல தங்களை வந்து சேர வாழ்த்துகிறேன்//

  தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி மோகன் குமார்.

  பதிலளிநீக்கு
 92. வித்யா said...

  // வாழ்த்துகள் சிஸ்டர்:) //

  வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி வித்யா.

  பதிலளிநீக்கு
 93. பூங்குன்றன்.வே said...

  //வாழ்த்துக்கள் தோழி.. இன்னும் நிறைய நிறைவாய் எழுதி விருதுகள்,அங்கீகாரம்,புகழ் பெற வாழ்த்துக்கள்.//

  முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி பூங்குன்றன்.

  பதிலளிநீக்கு
 94. eeves said...

  //தேவதைக்கு வாழ்த்துகள் :)//

  நன்றி ஜீவ்ஸ்.

  // அம்பியை கன்னாபின்னாவென வழிமொழிவதில் சற்றே உள்ளம் ஆறுதல் அடைகிறேன். உண்மையை பட்டென்று எடுத்துக் கூறும் அம்பிக்கும் வாழ்த்துகள்//

  மனம் குளிர்ந்ததா:)? அம்பியிடம் உங்கள் வாழ்த்துக்களை சேர்ந்து விடுகிறேன்:)!

  பதிலளிநீக்கு
 95. ஆதிமூலகிருஷ்ணன் said...

  //சிறப்பான செய்தி. வாழ்த்துகள் உங்களுக்கும், ரம்யாவிற்கும்.!//

  ரம்யாவின் சார்பாகவும் நன்றிகள் ஆதி!

  பதிலளிநீக்கு
 96. ரங்கன் said...

  // மீ த 57..!!

  மிக்க மகிழ்ச்சி..வாழ்த்துக்கள் மா!!//

  நன்றிகள் ரங்கன்:)!

  //ரம்யாவுக்கு வாழ்த்துக்கள் அங்கயே சொல்லிட்டேன்..இருந்தாலும் இங்கயும் சொல்லிக்கிறேன்..

  வாழ்த்துக்கள்..ரம்யா!!!//

  சாதனைப் பெண்மணி அவரை எல்லோரும் வாழ்த்தியபடியேதான் இருப்போம். அவர் சார்பாகவும் நன்றி.

  பதிலளிநீக்கு
 97. நிஜமா நல்லவன் said...

  //மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா!//

  நன்றிகள் நிஜமா நல்லவன்!

  பதிலளிநீக்கு
 98. திறமைசாலிகள் எங்கே மறைந்திருந்தாலும் வெளிச்சப் பார்வை பட்டே தீருமாம்..!

  பதிலளிநீக்கு
 99. எனது சகோதரி ராமலக்ஷ்மியின் வலையில் வாழ்த்துக் கூறிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

  உங்களின் இந்த அன்பு என்னை மேன்மேலும் ஊக்கப் படுத்துகிறது.

  இந்த நட்புக்கள் ஒன்றே எனக்கு போதும், நான் இன்னும் எத்துனை உயரமான சிகரத்தையும் அடைந்து விடுவேன்.

  எனக்கு வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் நன்றி கூறிய சகோதரிக்குதான் எவ்வளவு பெரிய மனது. இவைகள் எல்லாம் நட்பில்தான் சாத்தியம்.

  நன்றி சகோதரி!!

  பதிலளிநீக்கு
 100. சூப்பர் மேடம்.... கலக்குங்க.....

  பதிலளிநீக்கு
 101. நிலாரசிகன் said...

  //வாழ்த்துகள் வாழ்த்துகள் :)//

  வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நிலாரசிகன்:)!

  பதிலளிநீக்கு
 102. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

  //திறமைசாலிகள் எங்கே மறைந்திருந்தாலும் வெளிச்சப் பார்வை பட்டே தீருமாம்..!//

  வருகைக்கும் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கும் நன்றி உண்மைத் தமிழன்!

  பதிலளிநீக்கு
 103. RAMYA said...
  //இந்த நட்புக்கள் ஒன்றே எனக்கு போதும், நான் இன்னும் எத்துனை உயரமான சிகரத்தையும் அடைந்து விடுவேன்.//

  நிச்சயமாக, அனைவரின் நல்வாழ்த்துக்களும் உங்களுக்கு எப்போதும் உடன் இருக்கும்!

  உங்கள் சார்பில் நன்றிகள் சொல்ல எனக்கொரு நல்வாய்ப்பு. அதுதான் உண்மை ரம்யா.

  பதிலளிநீக்கு
 104. ஈ ரா said...

  //சூப்பர் மேடம்.... கலக்குங்க.....//

  நன்றி ஈ ரா:)!

  பதிலளிநீக்கு
 105. " உழவன் " " Uzhavan " said...

  //அட்டகாசம் ராம் மேடம் :-) மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. மேன்மேலும் வளர வாழ்த்த வயதில்லையென்றாலும் வாழ்த்திதானே ஆகவேண்டும் :-)
  வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள் !! வாழ்த்துக்கள் !!!//

  வாழ்த்தியிருக்கும் விதத்தில் உங்கள் மகிழ்ச்சி புரிகிறது, மிக்க நன்றி உழவன்.

  பதிலளிநீக்கு
 106. கடையம் ஆனந்த் said...

  //வாழ்த்துக்கள் அக்கா..//

  நன்றிகள் ஆனந்த்.

  பதிலளிநீக்கு
 107. நாந்தான் தாமதமா சொல்றேனோ? மன்னிக்கவும் ராமலஷ்மி நேரம் கிடைக்கல அதான்..
  மனம் நிறைந்த வாழ்த்துகள் சாதனை தொடரட்டும்!

  பதிலளிநீக்கு
 108. @ ஷைலஜா,

  வாங்க ஷைலஜா. உங்கள் வாழ்த்துக்கள் எப்போதும் எனக்குண்டு எனத் தெரியாதா? மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 109. அனுஜன்யா has left a new comment on your post "தேவதையும் முத்துச்சரமும்":

  வாவ். வாழ்த்துகள். உங்களுக்கும், ரம்யாவுக்கும். Way to go.

  அனுஜன்யா

  Posted by அனுஜன்யா to முத்துச்சரம் at December 9, 2009 11:47 AM

  பதிலளிநீக்கு
 110. @ அனுஜன்யா,

  ரம்யாவும் சார்பாகவும் வாழ்த்துகளுக்கு நன்றிகள் அனுஜன்யா:)!

  கூகுள் பிழையால் மறைந்த உங்கள் கமெண்டை மெயிலில் இருந்து மீட்டு விட்டிருக்கிறேன்:)!

  பதிலளிநீக்கு
 111. ஆஹா! வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி அக்கா!

  முத்துச்சரத்தை அணிந்துகொண்ட
  தேவதை இன்னும் கொஞ்சம் அழகாகியிருக்கும்.

  வெற்றிகள் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 112. @ சுந்தரா,

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சுந்தரா:)!

  பதிலளிநீக்கு
 113. @ நிகே,
  முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நிகே.

  பதிலளிநீக்கு
 114. மிக்க மகிழ்ச்சி

  வாழ்துக்கள்கா

  ரம்யாவுக்கும் எனது வாழ்துக்கள் :-))

  பாருங்க உங்களுக்குள்ள இருக்க புகைப்படக் கலைஞன்(ஞி)தான் உங்கள வெளியுலக்கு காட்டிருக்கு.
  மென்மேலும் சிறக்க எனது வாழ்துக்கள்கா.

  பதிலளிநீக்கு
 115. @ கார்த்திக்,
  வாங்க கார்த்திக். வலைப்பூவில் மட்டுமின்றி ஃப்ளிக்கர் தளத்திலும் என் புகைப்படங்களைப் பாராட்டி ஊக்கம் தரும் உங்களைக் காணவில்லையே எனப் பார்த்திருந்தேன். உங்கள் வாழ்த்துக்கள் இங்கே ரொம்ப ஸ்பெஷல்:)! நன்றி நன்றி:)!

  பதிலளிநீக்கு
 116. வாழ்த்துக்கள்

  நல்லதொரு பகிர்வு

  பதிலளிநீக்கு
 117. @ Jaleela,

  வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் ஜலீலா.

  பதிலளிநீக்கு
 118. தேவதையின் முத்துச்சரத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 119. அன்புடன் மலிக்கா said...

  //தேவதையின் முத்துச்சரத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி மலிக்கா.

  பதிலளிநீக்கு
 120. கண்மணி said...

  // மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி கண்மணி!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin