வானம் எனக்கொரு போதி மரம்
செவ்வானத்தில்..
எடுக்கவோ கோர்க்கவோ
காலைக் கதிரவனின்
கனல் முத்துக்களை..
கனல் முத்துக்களை..
பொன்னிற ஏரியில்..
புதையலைத் தேடி
விரையுது படகு
விரையுது படகு
ஓவியனவன் யாரோ
வண்ணங்குழைத்து
விண்ணில் தெளித்து
எண்ணம்போல் இழுத்த
ஓவியனவன் யாரோ
சூரியனவன் பேரோ!
விண்ணில் தெளித்து
எண்ணம்போல் இழுத்த
ஓவியனவன் யாரோ
சூரியனவன் பேரோ!
சுடரொளி
இருளும் ஒளியும்
ஓய்வு
படகுக்கும்
சில மணித்துளியில்
பரிதிக்கும்
சில மணித்துளியில்
பரிதிக்கும்
கீழ் வருவன மீள் படங்களே.
முதல் மூன்றும் சிலநொடி இடைவெளிகளில் பகலவன் காண்பித்த அற்புதங்கள்:
போட்டி அறிவிப்பு: சூர்யோதயம் / அஸ்தமனம்
போட்டிக்கு அணிவகுத்திருக்கும் படங்கள் இங்கே.
போதிமரம் போயிருக்கிறது போட்டிக்கு.
தலைப்பை மறுபடி வாசிங்க. கச்சேரி எப்பூடின்னு சொல்லுங்க:)!
11 மே 2010, யூத்ஃபுல் விகடன் ‘Good Blogs’ பரிந்துரையில் இப்பதிவு:
நன்றி விகடன்!
பொன் எழில் பூத்தது புது வானில்
[PiT நடத்திய மெகா போட்டி 2008-ல் . ‘ஒரு வாழ்த்து அட்டைக்குரிய சர்வ லட்சணங்களும்’ இருப்பதாக நடுவரால் பாராட்டப்பட்டு முதல் சுற்றுக்குத் தேர்வான படம்]
எங்கோ கூவும் குயில்களின் கீதம்
மகிழ்வாய்ப் பாடும் மைனாக்களின் கானம்
'கீச்'சிடும் குருவிகள் தந்திடும் உற்சாகம்
தென்னங்கீற்றுகளும் கேட்டுத் தலையசைக்கும்
மகிழ்வாய்ப் பாடும் மைனாக்களின் கானம்
'கீச்'சிடும் குருவிகள் தந்திடும் உற்சாகம்
தென்னங்கீற்றுகளும் கேட்டுத் தலையசைக்கும்
ஞாயிறு ஒளி மழையில்
குளிக்க வந்த
தென்னை மரங்கள்
தென்னை மரங்கள்
ஆதவப் பிரவாகம்
பொன் அந்தி மாலைப் பொழுது
அந்திமழைக்குப் பின்னே அழகு காட்டும் வானம்
அஸ்தமனத்துக்கு பின்னே இருள் வந்து சூழும்
அஸ்திவாரம் நம்பிக்கைக்கு அதுவே ஆகும்
அடுத்தநாள் விடிகையில் தானாகப் புரியும்.
அஸ்தமனத்துக்கு பின்னே இருள் வந்து சூழும்
அஸ்திவாரம் நம்பிக்கைக்கு அதுவே ஆகும்
அடுத்தநாள் விடிகையில் தானாகப் புரியும்.
பயணங்கள் முடிவதில்லை
[3 ஏப்ரல் 2010, PiT தளத்தின் ‘இந்த வார சிறந்த’ படமாகத் தேர்வானது]
போட்டி அறிவிப்பு: சூர்யோதயம் / அஸ்தமனம்
போட்டிக்கு அணிவகுத்திருக்கும் படங்கள் இங்கே.
போதிமரம் போயிருக்கிறது போட்டிக்கு.
தலைப்பை மறுபடி வாசிங்க. கச்சேரி எப்பூடின்னு சொல்லுங்க:)!
11 மே 2010, யூத்ஃபுல் விகடன் ‘Good Blogs’ பரிந்துரையில் இப்பதிவு:
நன்றி விகடன்!
28 மே 2010 : இன்று வெளியான அறிவிப்பின் படி போட்டியில் கலந்து கொண்ட ‘வானம் எனக்கொரு போதிமரம்’ முதல் சுற்றுப் படங்களில் ஒன்றாகத் தேர்வாகியுள்ளது. நன்றி PiT.
முதல் படமும், ஏரிப்படமும் நல்லா அழகா இருக்கு!
பதிலளிநீக்குநல்லாயிருக்குங்க ...
பதிலளிநீக்குவெற்றி பெற வாழ்த்துக்கள் .
பேசும் படங்கள் அருமை அக்கா..
பதிலளிநீக்குவெற்றிக்கு வாழ்த்துக்கள்.
ஆஹா ஆஹா எல்லாமே அருமையா இருக்குதே எதை எடுக்க எதை விட? அத்தனையும் அழகோ அழகு!!!!
பதிலளிநீக்குகேமராவுக்குள்ளே தூரிகை நுழைந்து விட்டதோ....
பதிலளிநீக்குஆதவன் அஸ்தமனமானாலும் ,ராமலஷ்மிக்கு, வெற்றி உதயம் ஆகுமே
பதிலளிநீக்குமிக அருமை சகா!
பதிலளிநீக்குprofessional touch!
எல்லாமே அழகு. பல படங்கள் போட்டிக்குத் தகுதியானவை. உங்கள் தேர்வும் ஆகச்சிறப்பே.
பதிலளிநீக்கு(உங்களை போட்டியில் கலக்கவிடாமல் பண்ண ஏதாவது வழியிருக்கிறதா என யோசிச்சுக்கிட்டிருக்கேன். பின்ன நாங்க எப்பதான் பரிசு வாங்கறதாம்? ஹும்)
செவ்வானத்தில் அழகாய் இருக்கு டோட்டலா எல்லா படமும் சூப்பரோ சூப்பரேய்ய்ய்ய் :)
பதிலளிநீக்குபிட் நடுவர்கள் லிஸ்ட்ல சீக்கிரம் இணைய வாழ்த்துக்கள் :)
adengappaa. edhai eduppadhu edhai viduppadhu? :)
பதிலளிநீக்குஎல்லோரும் இம்மாதிரியான படங்களை எடுத்து விடமுடியாது.
பதிலளிநீக்குகலாரசனையுடன் கூடிய சிறந்த புகைப்பட திறமை இருந்தால் தான் சாத்தியம்
மனதார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி
விஜய்
எல்லாமே அழகு. எதை தேர்ந்தெடுக்கன்னு சீட்டெடுக்கும் கிளிகளாய் நாங்கள்.
பதிலளிநீக்குபோதிமரம் வெற்றியடைய வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி
பதிலளிநீக்குஉங்கள் கைவண்ணத்தில், புகைப்படங்கள் கவிதைகள் ஆகின்றன. கவிதைகள், அழகை அருமையாக படம் பிடித்து காட்டுகின்றன. வாழ்த்துக்கள், அக்கா!
பதிலளிநீக்குமுன் வரிசையில் உள்ள படங்கள் நன்றாக உள்ளது. பின் வரிசையில் உள்ள படங்களுக்கு வண்ணம் அதிகம் சேர்த்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குராமலக்ஷ்மி உங்கள் பெரிய படங்களில் இருக்கும் கவர்ச்சி இந்த சின்ன படங்களில் இல்லை.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
வாவ்...க்ரீட்டிங் கார்டு மாதிரி இருக்கு எல்லாமே! சூப்பர்! வெற்றி பெற வாழ்த்துகள் ராமலஷ்மி! :-)
பதிலளிநீக்குஎல்லாப் படங்களும் கலக்கல்ஸ்..
பதிலளிநீக்குபின்னுட்டம் வேண்டா கவிதைகள் அத்தனையும்,,,,,,
பதிலளிநீக்குவாழ்த்துகள்..எல்லாமே அழகு..போதி மரம் நல்ல தேர்வு..
பதிலளிநீக்குமேலிருந்து மூன்றாவது படம் மிக..மிக..அழகா இருக்குங்க... நைஸ் ஸாட்....
பதிலளிநீக்குஎல்லாப்படங்களும் கலக்கல்....
படங்களும் ரசனையும் மிக அழகு ராமுமேடம்..
பதிலளிநீக்குநேரம்கிடைக்கும்போது பார்க்கவும்
http://fmalikka.blogspot.com/2010/05/10.html
நீங்க கிளுக்கிய கவிதை மிக அருமை...... மிக நேர்த்தி.
பதிலளிநீக்குபாராட்டுக்கள்.
ராமலட்சுமியின் கச்சேரி அட்டகாசம்.
பதிலளிநீக்குஎல்லா படங்களும் கண்ணையும் கருத்தையும் கவருகின்றன.
வானம் எனக்கொரு போதி மரம்,
சூரியன் வரைந்த ஓவியம் இரண்டும் மிக,மிக அழகு.
பரிசுப் பெற வாழ்த்துக்கள்.
ஃபோட்டோ எடுத்த மாதிரியே இல்லைங்க சில படங்கள். பெயிண்டிங் பண்ணதுபோல, சூப்பர் கலர் காம்பினேஷன்ஸ்!! எப்படித்தான் இவ்வளவு அழகா எடுக்குறீங்களோ!
பதிலளிநீக்குஎன்ன அக்கா எல்லா படமுமே சூப்பர் சிலதை பாத்தால் பெயிண்டிங் செய்தது போல் இருக்கு அற்புதம்.
பதிலளிநீக்குஎல்லாமே ஒவ்வொரு பாடலோடு இருக்கு.
அந்திமழை பொழிகிறது கமலின் ராஜபார்வை.
செவானம்
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
vaanam enakkum oru bodhi maram... nalla kaatchchigal.
பதிலளிநீக்குஅனைத்து படங்களும் மனதை கொள்ளை கொள்கின்றன. Lovely Pics!
பதிலளிநீக்குபோதி மரம் அழகு. மத்ததும் அழகு. ராமலக்ஷ்மி
பதிலளிநீக்குஅசாத்திய முயற்சியில் எடுத்த படங்கள். தேர்ந்தெடுப்பது மிகவும் சிரமம்.:0)
எல்லாமே நல்லா இருக்கு
பதிலளிநீக்குஆதி சொன்னதுதான். நீங்கள் எல்லாம் அடுத்த கட்டத்துக்குப் போயாச்சு. எங்கள மாதிரி கத்துக் குட்டிகளுக்கும் சான்ஸ் கொடுங்க. சரி, நான் எடுத்த ஃபோட்டோவ நான் மட்டும் பார்த்துக்கறேன் :(
பதிலளிநீக்குவாழ்த்துகள் சகோ.
அனுஜன்யா
படங்களே கவிதையாய்....
பதிலளிநீக்குஅற்புதம்..!!
வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
அப்பா..... ரெண்டு கண்ணு போதல போங்க.... அற்புதமான படங்கள். எந்த ஊருங்க இது? ரெம்ப நல்ல இருக்குங்க
பதிலளிநீக்குவானம் எனக்கொரு போதிமரம் மூன்றாவது,
பதிலளிநீக்குஎடுக்கவோ கோக்கவோ இரண்டாவது,
பொன்னிற ஏரியில் முதலாவது....
என் ரசனையில்...
ஆனால்...
எல்லாப் படங்களுமே அருமை.
வாவ்! கொள்ளை அழகு ராமலக்ஷ்மி!
பதிலளிநீக்குஅசத்தலோ அசத்தல் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குதங்களது வலைப்பூவைக் குறித்து 14-05-2010(வெள்ளி) "வலைச்சரம்" இடுகையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.com
வருகை தருக! நன்றி! -சேட்டைக்காரன்
எல்லாமே அழகு!
பதிலளிநீக்குதமிழ் பிரியன் said...
பதிலளிநீக்கு//முதல் படமும், ஏரிப்படமும் நல்லா அழகா இருக்கு!//
முதல் படமே போட்டிக்கு அனுப்பினேன். நன்றி தமிழ் பிரியன்.
நண்டு@நொரண்டு -ஈரோடு said...
பதிலளிநீக்கு//நல்லாயிருக்குங்க ...
வெற்றி பெற வாழ்த்துக்கள் .//
நன்றிங்க.
சுசி said...
பதிலளிநீக்கு//பேசும் படங்கள் அருமை அக்கா..
வெற்றிக்கு வாழ்த்துக்கள்.//
நன்றி சுசி.
அபி அப்பா said...
பதிலளிநீக்கு//ஆஹா ஆஹா எல்லாமே அருமையா இருக்குதே எதை எடுக்க எதை விட? அத்தனையும் அழகோ அழகு!!!!//
நன்றி அபி அப்பா:)!
goma said...
பதிலளிநீக்கு// ஆதவன் அஸ்தமனமானாலும் ,ராமலஷ்மிக்கு, வெற்றி உதயம் ஆகுமே//
உங்க பாராட்டுக்களே வெற்றிதான். நன்றி கோமா.
//கேமராவுக்குள்ளே தூரிகை நுழைந்து விட்டதோ....//
தூரிகையைப் பிடித்தது சூரியன். காமிராவைப் பிடித்தது நான்:)!
பா.ராஜாராம் said...
பதிலளிநீக்கு//மிக அருமை சகா!
professional touch!//
நன்றி பா ரா.
ஆதிமூலகிருஷ்ணன் said...
பதிலளிநீக்கு// எல்லாமே அழகு. பல படங்கள் போட்டிக்குத் தகுதியானவை. உங்கள் தேர்வும் ஆகச்சிறப்பே.//
நன்றி ஆதி.
// (உங்களை போட்டியில் கலக்கவிடாமல் பண்ண ஏதாவது வழியிருக்கிறதா என யோசிச்சுக்கிட்டிருக்கேன். //
இரண்டு வருஷமா ஒரு மாதம் விடாம கலந்துகிட்டு பதிவும் போட்டுக்கிட்டு வர்றேன். கண்ணு வைக்காதீங்க:)))!
ஆயில்யன் said...
பதிலளிநீக்கு// செவ்வானத்தில் அழகாய் இருக்கு டோட்டலா எல்லா படமும் சூப்பரோ சூப்பரேய்ய்ய்ய் :)//
ரொம்ப நன்றி ஆயில்யன்.
//பிட் நடுவர்கள் லிஸ்ட்ல சீக்கிரம் இணைய வாழ்த்துக்கள் :)//
நீங்களே ஜீப்பில் ஏற்றி விட்டு விடுவீர்கள் போலுள்ளதே:))!!
SurveySan said...
பதிலளிநீக்கு//adengappaa. edhai eduppadhu edhai viduppadhu? :)//
ஹி.., நன்றி சர்வேசன்!
விஜய் said...
பதிலளிநீக்கு//எல்லோரும் இம்மாதிரியான படங்களை எடுத்து விடமுடியாது.
கலாரசனையுடன் கூடிய சிறந்த புகைப்பட திறமை இருந்தால் தான் சாத்தியம்
மனதார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி//
மிக்க நன்றி விஜய்.
அமைதிச்சாரல் said...
பதிலளிநீக்கு//எல்லாமே அழகு. எதை தேர்ந்தெடுக்கன்னு சீட்டெடுக்கும் கிளிகளாய் நாங்கள்.//
நன்றி அமைதிச்சாரல். முதன் முறையாக நீங்கள் பிட் போட்டியில் கலந்து கொள்வதற்கும் என் வாழ்த்துக்கள்.
thenammailakshmanan said...
பதிலளிநீக்கு//போதிமரம் வெற்றியடைய வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி//
நன்றி தேனம்மை.
Chitra said...
பதிலளிநீக்கு//உங்கள் கைவண்ணத்தில், புகைப்படங்கள் கவிதைகள் ஆகின்றன. கவிதைகள், அழகை அருமையாக படம் பிடித்து காட்டுகின்றன. வாழ்த்துக்கள், அக்கா!//
அழகான வாழ்த்துக்கும் பாராட்டுக்க்கும் நன்றிகள் சித்ரா.
கிரி said...
பதிலளிநீக்கு// முன் வரிசையில் உள்ள படங்கள் நன்றாக உள்ளது. பின் வரிசையில் உள்ள படங்களுக்கு வண்ணம் அதிகம் சேர்த்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.//
பிற்தயாரிப்பு எப்போதுமே உங்களுக்கு அதிகம் பிடிப்பதில்லையெனத் தெரியும்:)! குறிப்பிட்ட அந்த முறையில் வண்ணம் அப்படிதான் வரும்!
// ராமலக்ஷ்மி உங்கள் பெரிய படங்களில் இருக்கும் கவர்ச்சி இந்த சின்ன படங்களில் இல்லை.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.//
உங்கள் பின்னூட்டம் பார்த்ததும் மீள்படங்கள் தவிர்த்து மற்றதைப் பெரிதாக்கி விட்டேன்:)! நன்றி கிரி.
சந்தனமுல்லை said...
பதிலளிநீக்கு//வாவ்...க்ரீட்டிங் கார்டு மாதிரி இருக்கு எல்லாமே! சூப்பர்! வெற்றி பெற வாழ்த்துகள் ராமலஷ்மி! :-)//
நன்றிகள் முல்லை:)!
SanjaiGandhi™ said...
பதிலளிநீக்கு//எல்லாப் படங்களும் கலக்கல்ஸ்..//
நன்றி சஞ்சய்.
தமிழரசி said...
பதிலளிநீக்கு//பின்னுட்டம் வேண்டா கவிதைகள் அத்தனையும்,,,,,,//
கவிதையாய் ஒரு பின்னூட்டம்.
நன்றி தமிழரசி.
பாச மலர் / Paasa Malar said...
பதிலளிநீக்கு//வாழ்த்துகள்..எல்லாமே அழகு..போதி மரம் நல்ல தேர்வு..//
நன்றி பாசமலர்.
க.பாலாசி said...
பதிலளிநீக்கு//மேலிருந்து மூன்றாவது படம் மிக..மிக..அழகா இருக்குங்க... நைஸ் ஸாட்....//
கதிரவனின் பிம்பமும் ஒளிமுத்துக்களின் பிரதிபலிப்பும் எனக்கும் ரொம்பப் பிடித்திருந்தது அந்தப் படத்தில்:)!
//எல்லாப்படங்களும் கலக்கல்//
நன்றி பாலாசி.
அன்புடன் மலிக்கா said...
பதிலளிநீக்கு// படங்களும் ரசனையும் மிக அழகு ராமுமேடம்..//
நன்றி மலிக்கா.
சி. கருணாகரசு said...
பதிலளிநீக்கு// நீங்க கிளுக்கிய கவிதை மிக அருமை...... மிக நேர்த்தி.
பாராட்டுக்கள்.//
நன்றி கருணாகரசு.
கோமதி அரசு said...
பதிலளிநீக்கு//ராமலட்சுமியின் கச்சேரி அட்டகாசம்.
எல்லா படங்களும் கண்ணையும் கருத்தையும் கவருகின்றன.
வானம் எனக்கொரு போதி மரம்,
சூரியன் வரைந்த ஓவியம் இரண்டும் மிக,மிக அழகு.
பரிசுப் பெற வாழ்த்துக்கள்.//
கச்சேரியை ரசித்துப் பாராட்டியிருப்பதற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கோமதிம்மா.
ஹுஸைனம்மா said...
பதிலளிநீக்கு//ஃபோட்டோ எடுத்த மாதிரியே இல்லைங்க சில படங்கள். பெயிண்டிங் பண்ணதுபோல, சூப்பர் கலர் காம்பினேஷன்ஸ்!! //
இயற்கையின் கைவண்ணம் வியக்க வைக்கிறதுதான். நன்றி ஹுசைனம்மா.
Vijis Kitchen said...
பதிலளிநீக்கு//என்ன அக்கா எல்லா படமுமே சூப்பர் சிலதை பாத்தால் பெயிண்டிங் செய்தது போல் இருக்கு அற்புதம்.//
நன்றி விஜி.
// எல்லாமே ஒவ்வொரு பாடலோடு இருக்கு. //
ஆமாம் விஜி. சில இடங்களில் திரைப்பாடல் வரிகள். சில இடங்களில் சொந்த வரிகள்:)!
Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்) said...
பதிலளிநீக்கு//vaanam enakkum oru bodhi maram...//
:)!
//nalla kaatchchigal.//
நன்றி மைதிலி.
Priya said...
பதிலளிநீக்கு//அனைத்து படங்களும் மனதை கொள்ளை கொள்கின்றன. Lovely Pics!//
ரொம்ப நன்றி ப்ரியா.
வல்லிசிம்ஹன் said...
பதிலளிநீக்கு//போதி மரம் அழகு. மத்ததும் அழகு. ராமலக்ஷ்மி
அசாத்திய முயற்சியில் எடுத்த படங்கள். தேர்ந்தெடுப்பது மிகவும் சிரமம்.:0)//
நன்றி வல்லிம்மா:)!
நசரேயன் said...
பதிலளிநீக்கு//எல்லாமே நல்லா இருக்கு//
நன்றி நசரேயன்.
அனுஜன்யா said...
பதிலளிநீக்கு//ஆதி சொன்னதுதான். நீங்கள் எல்லாம் அடுத்த கட்டத்துக்குப் போயாச்சு. எங்கள மாதிரி கத்துக் குட்டிகளுக்கும் சான்ஸ் கொடுங்க.//
நானும் இன்னும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன்:)!
//சரி, நான் எடுத்த ஃபோட்டோவ நான் மட்டும் பார்த்துக்கறேன் :(//
இப்படி சொன்னால் எப்படி:)? 'எல்லோரையும் பார்க்க வைக்கிறோம்' என்று PiT கூப்பிடுகிறது. களத்தில் இறங்குங்களேன் நீங்களும்!
வாழ்த்துக்களுக்கு நன்றி அனுஜன்யா!
அம்பிகா said...
பதிலளிநீக்கு//படங்களே கவிதையாய்....
அற்புதம்..!!
வெற்றிக்கு வாழ்த்துக்கள்.//
நன்றி அம்பிகா.
அப்பாவி தங்கமணி said...
பதிலளிநீக்கு//அப்பா..... ரெண்டு கண்ணு போதல போங்க.... அற்புதமான படங்கள். எந்த ஊருங்க இது? ரெம்ப நல்ல இருக்குங்க//
நன்றி புவனா. சென்னை மகாபலிபுரம், கேரளா குமரகம், பெங்களூரில் என் வீட்டு மாடியிலிருந்து என பல இடங்களிலும் எடுத்துங்க.
ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//வானம் எனக்கொரு போதிமரம் மூன்றாவது,
எடுக்கவோ கோக்கவோ இரண்டாவது,
பொன்னிற ஏரியில் முதலாவது....
என் ரசனையில்...
ஆனால்...
எல்லாப் படங்களுமே அருமை.//
இரண்டாவதில் சூரியனின் பிரகாசம் சற்றே அதிகமோ[பகலவன் தணலெரி]? பொன்னிற ஏரியும் போதிமரமும்தான் கடைசி சுற்றில் போட்டியிட்டன:)! போதி வென்றது. நன்றிகள் ஸ்ரீராம்.
கவிநயா said...
பதிலளிநீக்கு//வாவ்! கொள்ளை அழகு ராமலக்ஷ்மி!//
நன்றி கவிநயா.
முத்துலெட்சுமி/muthuletchumi said...
பதிலளிநீக்கு//அசத்தலோ அசத்தல் ராமலக்ஷ்மி.//
மிக்க நன்றி முத்துலெட்சுமி:)!
அன்புடன் அருணா said...
பதிலளிநீக்கு//எல்லாமே அழகு!//
நன்றி அருணா.
மின்னஞ்சலில்..
பதிலளிநீக்கு//Hi Ramalakshmi,
Congrats!
Your story titled 'உதய கீதங்களும் அந்தி ராகங்களும்-May PiT போட்டிக்கு..' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 9th May 2010 09:25:01 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/245779
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team//
தமிழிஷில் வாக்களித்த 22 பேர்களுக்கும், தமிழ்மணத்தில் வாக்களித்த 12 பேர்களுக்கும் என் நன்றிகள்.
போதிமரம் வெற்றியடைய வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅத்தனை கை வண்ணங்களும் அருமை அக்கா.இயற்கையோடு கொஞ்சி விளையாடியிருக்கிறீங்க.
பதிலளிநீக்குவெற்றிக்கு வாழ்த்துகள்.
உங்கள் ப்ளாக்-ல் இருந்து திரும்ப தமிழ் கற்றுக் கொள்ளப் போகிறேன்!
பதிலளிநீக்குஇந்தப் படங்களில் எது பெஸ்ட்னு ஒண்ணை எடுக்கனும்னா (choosing one) அது ரியல் சேலெஞ்ச் தான்!
பதிலளிநீக்குபரிசு பெற வாழ்த்க்கள்ங்க, ராமலக்ஷ்மி!
//வானம் எனக்கொரு போதி மரம்//
பதிலளிநீக்குநிச்சயமாக, உங்கள் படங்கள் எங்களுக்கு மனதில் அமைதியைத் தருகிறது மேடம்.
நன்றி.
அருமையா இருக்கு படங்கள் எல்லாம். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குசே.குமார் said...
பதிலளிநீக்கு//போதிமரம் வெற்றியடைய வாழ்த்துக்கள்//
நன்றி குமார்.
ஹேமா said...
பதிலளிநீக்கு//அத்தனை கை வண்ணங்களும் அருமை அக்கா.இயற்கையோடு கொஞ்சி விளையாடியிருக்கிறீங்க.
வெற்றிக்கு வாழ்த்துகள்.//
நன்றி ஹேமா. உங்களுக்கெல்லாம் பிடித்துப் போனதே வெற்றிதான்:)!
James Vasanth said...
பதிலளிநீக்கு//உங்கள் ப்ளாக்-ல் இருந்து திரும்ப தமிழ் கற்றுக் கொள்ளப் போகிறேன்!//
திரும்ப:)? கற்ற தமிழ் எங்கும் போகாது!
நீங்களும் புகைப்படங்களுக்கென ஒரு வலைப்பூ துவங்கலாமே ஜேம்ஸ்?
வருண் said...
பதிலளிநீக்கு// இந்தப் படங்களில் எது பெஸ்ட்னு ஒண்ணை எடுக்கனும்னா (choosing one) அது ரியல் சேலெஞ்ச் தான்!
பரிசு பெற வாழ்த்க்கள்ங்க, ராமலக்ஷ்மி!//
மிக்க நன்றி வருண் :)!
அமைதி அப்பா said...
பதிலளிநீக்கு***/ //வானம் எனக்கொரு போதி மரம்//
நிச்சயமாக, உங்கள் படங்கள் எங்களுக்கு மனதில் அமைதியைத் தருகிறது மேடம்.
நன்றி./***
ரொம்ப சந்தோஷம் அமைதி அப்பா.
முகுந்த் அம்மா said...
பதிலளிநீக்கு//அருமையா இருக்கு படங்கள் எல்லாம். வெற்றி பெற வாழ்த்துக்கள்.//
நன்றி முகுந்த் அம்மா.
வாவ்! எல்லாமே அசத்துதுங்க!
பதிலளிநீக்குதிவா said...
பதிலளிநீக்கு//வாவ்! எல்லாமே அசத்துதுங்க!//
ரொம்ப நன்றிங்க திவா:)!
படங்கள் யாவும் அருமை. கூடவே வரிகளும்.
பதிலளிநீக்கு//வண்ணங்குழைத்து
விண்ணில் தெளித்து
எண்ணம்போல் இழுத்த
ஓவியனவன் யாரோ
சூரியனவன் பேரோ! //
சூரிய ஓவியனின் வரிகள் அற்புதம், அவனது ஓவியங்களைப் போலவே :)
@ சதங்கா,
பதிலளிநீக்குசூரியனின் ஓவியங்களையும் கூடவே வரிகளையும் ரசித்தமைக்கு நன்றிகள் சதங்கா.