ஞாயிறு, 13 மார்ச், 2011

ஜனாதிபதி அப்துல்கலாமும்.. அன்பான ஏழைத்தாயும்..


  • இந்தாருங்கள் பணம்...என் கம்மலை அடமானம் வைத்து கொண்டுவந்துள்ளேன்!.. நான் படிக்கவில்லை..எனது கிராமத்தை விட்டு(ஆண்டிபாளையம்) திருப்பூரை விட்டுச் சென்றதில்லை..ஆனால் என்மகள் டெல்லியைப் பார்க்க வேண்டும்.. தாஜ்மகாலைப் பார்க்க வேண்டும்..இதற்கும் மேலாக இப்பொழுதுள்ள ஜனாதிபதிக்கு மாணவர்கள் என்றால் பிரியம் என்கிறார்கள். மாணவர்கள் முன்னேற வழிகாட்டுகிறார் என்று கூறுகிறார்கள்!.அவர் வீட்டிற்கும் அழைத்துச் சென்று அவரையும் காட்டுங்கள்..என்னால் முடியாததை என் மகள் காண வேண்டும்” சொன்ன ஏழைத் தாயைக் கண்டு கண்கலங்கியவர்.
யார்?

  • இன்றைய கால கட்டத்தில் அரங்கேறி வரும் அரசியல் நாடகங்களைக் கண்டு வெறுத்துப் போய் இருக்கும் நாம், இத்தகைய தலைவர்களும் இருந்தார்கள் நம் இந்தியத் திருநாட்டில் என பெருமைப் பட்டுக் கொள்ள அவர்களை நினைவு கூர்ந்தவர்.
யார்?

  • ‘வாழும் கடவுள்’ எனப் பாராட்டுகிறார் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு கிருஷ்ண ராஜ் அவர்களை, உலகெங்கும் அமைதி நிலவ விரும்பி மகனுக்குப் பெயர் வைத்தவர்.
யார்?

  • திரு. சீனா அவர்கள், முத்துலெட்சுமி ஆகியோருடன்..

தமிழ் பிரியன்,கோகுலன்,ஆயில்யன், கவிஞர் N.சுரேஷ், நானானி, ரம்யா தேவி, அமுதா, ஞானசேகரன், தேனம்மை , ஈரோடு கதிர், ரிஷான் ஷெரீஃப், கோமா , ப்ரியமுடன் வசந்த் , சேட்டைக்காரன் , வித்யா , நீச்சல் காரன், மோகன் குமார்

இவர்களுக்கும் நன்றி!


படம் நன்றி:‘உலக மாணவர் தினமாகக் கொண்டாடுவோம்’ பதிவு.


பி.கு: வலைச்சரத்தில் பதிந்த ஒவ்வொரு நாள் பதிவையும் வாசிப்பவர் வசதி கருதி, அதேநாட்களில் முத்துச்சரத்தில் இட்ட அறிவிப்புப் பதிவுகளில் இப்போது (14-11-2011) இணைத்துள்ளேன். பதிவுகளுக்கு வந்த கருத்துக்களைக் காண விரும்பினால் வலைச்சரம் செல்லக் கேட்டுக் கொள்கிறேன்:



நிறைவுப் பதிவில் நிற்க வருகிறார்கள் அனுபவத்திலும் வயதிலும் நம்மில் மூத்த இப்பதிவர்கள்:

ஜெய்வாபாய் ஈசுவரன்

இந்திய அளவில் 7300 மாணவிகள் படிக்கும் மாபெரும் பள்ளியாக, பல்வேறு சாதனைகளைப் படைத்து, பெண்கல்விக்கு முன்னோடியாகத் திகழ்ந்து வரும் “திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின்” விஸ்வரூப வளர்ச்சிக்கு இவரின் பங்களிப்பு அசாத்தியமானது. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தன்னார்வலராக இப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்ததினத்தை ‘உலக மாணவர் தினமாகக் கொண்டாடுவோம்’ எனப் பதிவிட்டவரின் இடுகையில் குறிப்பிட்டிருக்கும் ஒரு சம்பவம் மிகவும் நெகிழ்வுக்குரியது: “இந்தாருங்கள் பணம்...என் கம்மலை அடமானம் வைத்து கொண்டுவந்துள்ளேன்!.. நான் படிக்கவில்லை..எனது கிராமத்தை விட்டு(ஆண்டிபாளையம்) திருப்பூரை விட்டுச் சென்றதில்லை..ஆனால் என்மகள் டெல்லியைப் பார்க்க வேண்டும்.. தாஜ்மகாலைப் பார்க்க வேண்டும்..இதற்கும் மேலாக இப்பொழுதுள்ள ஜனாதிபதிக்கு மாணவர்கள் என்றால் பிரியம் என்கிறார்கள். மாணவர்கள் முன்னேற வழிகாட்டுகிறார் என்று கூறுகிறார்கள்!.அவர் வீட்டிற்கும் அழைத்துச் சென்று அவரையும் காட்டுங்கள்..என்னால் முடியாததை என் மகள் காண வேண்டும்

இந்த ஏழைப் பெண்ணின் தாய்மைக்கு எது ஈடாகும்? முழு விவரம் அறிய பதிவுக்கே செல்லுங்கள்.


அமைதி அப்பா
நாட்டிலும் உலகிலும் அமைதியே நிலவ வேண்டும் என விரும்பிப் பெயர் வைத்த இவரது மகன் ‘அமைதி விரும்பி’ சட்டம் படித்து வருகிறார். சமூக அக்கறையுடனான பதிவுகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார்.

வாழும் கடவுள்...! எனப் பாராட்டுகிறார் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு கிருஷ்ண ராஜ் அவர்களை:“செய்தித்தாள்கள் வழியாக அறியவரும், பண வசதி இல்லாததால்,படிப்பைத் தொடரமுடியாத பல ஏழை மாணவிகளுக்கு கல்வியைத் தொடர தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார். அதில் பலர் பொறியியல் மற்றும் ஆசிரியர் பயிற்சிப் பெறுகிறார்கள். இவர் ஆசிரியராகப் பணிபுரிந்தக் காலத்திலிருந்தே ஏழை மாணவர்களுக்கு சாப்பாடு, நோட்டு, சீருடை என்று வாங்கி கொடுத்து வந்திருக்கிறார்.

உறவினர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கவனத்திற்கு!, அக்கறையுடன் வழங்குகிறார் ஆலோசனைகளை.
‘வெடிவால்’ சகாதேவன்
நேரிலோ இணையத்திலோ பார்த்தது, ரசித்தது, மற்றவருக்குப் பயனாகும் தகவல்கள் என அனைத்தையும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து வருபவர். வரலாற்றை நினைவு கூர்ந்து இடும் பதிவுகளும் சிறப்பானவை ஹே ராம்;

பொது வாழ்க்கை அது ஒரு உத்தியோகம் போலவும், பதவி, அதிகாரம்தான் முக்கியம்’:“அதிகாரம்தான் முக்கியம் என்று நினைப்பதால் அடிப்படை சேவை ஒதுக்கப் படுகிறது;

அக்டோபர் 2 அன்று சாஸ்திரியை மறக்கலாமோ?: “ரயில் விபத்தில் 112 பேர் இறந்ததால் தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார்...அங்கீகரித்த பிரதமர், பார்லிமெண்டில் இதை சாஸ்திரியின் பொறுப்பு குறைவு என்பதல்ல, பதவியில் இருப்பவர்களுக்கு, இது ஒரு முன் உதாரணமாக இருக்கும் என்று சொன்னாராம்.

இன்றைய கால கட்டத்தில் அரங்கேறி வரும் அரசியல் நாடகங்களைக் கண்டு வெறுத்துப் போய் இருக்கும் நாம், இத்தகைய தலைவர்களும் இருந்தார்கள் நம் நாட்டில் என பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
அணில் சுமந்த கற்களாய்..
வரவர் வாசிப்பில், நினைவில் நின்ற பதிவுகளைப் பகிர்வதன் மூலமாக சிறந்த இடுகைகள் ஆவணப்படுத்தப் படுகிற ஒரு தளமாகவும், அதைப் படைத்தவர்களை அறியாதவர் அறிந்திட உதவும் ஒரு பாலமாகவும் திகழ்ந்து வருகிறது வலைச்சரம். தினம் தினம் நீளும் அப்பாலத்துக்கு, இராமருக்கு உதவிய அணிலைப் போல ஏழுகற்களை எடுத்து வைத்துள்ளேன்.

என் வலைவாசிப்பில் ரசித்தவரின் பட்டியலில் வெகுசிலரை மட்டுமே சொல்ல இயன்றதற்கு நேரமின்மை மட்டுமே காரணம். விரிவாகச் செய்ய நினைத்ததில், ஒருநாளைக்கு பத்து பதினைந்து பதிவர்கள் எனத் திட்டமிட்டிருந்ததை செயல்படுத்த இயலவில்லை.

என் வாசிப்பு வட்டதுள் வந்த புதியவர்கள் சிலரையும் அறிமுகப்படுத்தி இருக்கிறேன் என்றாலும்.. மேலும் பலரையும், பிரமிக்க வைத்த இடுகைகளைத் தந்த பதிவர்கள் எத்தனையோ பேரினையும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒரு வாய்ப்பினை சீனா சாரிடம் கேட்டுப் பெற்று இங்கே பகிர்ந்திட முயன்றிடுவேன்.

பல நல்ல இடுகைகளை உங்கள் முன் வைத்த மன நிறைவுடனும், சில பதிவர்களை இதன் மூலமாக ‘அறிய வந்திருப்பதாகவும் இனித் தொடருவதாகவும்’ வந்திருக்கும் பின்னூட்டங்களால் கிடைத்த திருப்தியுடனும், வாய்ப்பளித்த சீனா சாருக்கும், வரவேற்றுப் பதிவிட்ட முத்துலெட்சுமிக்கும், என்னை இதுகாலமும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய கீழ்வரும் அத்தனை நண்பர்களுக்கும்
தமிழ் பிரியன்,கோகுலன்,ஆயில்யன், கவிஞர் N.சுரேஷ், நானானி, ரம்யா தேவி, அமுதா,ஞானசேகரன், தேனம்மை , ஈரோடு கதிர், ரிஷான் ஷெரீஃப், கோமா , ப்ரியமுடன் வசந்த் ,சேட்டைக்காரன் , வித்யா , நீச்சல் காரன் , மோகன் குமார்
[அறிமுகமான பதிவுகளின் இணைப்புடனே தொகுத்திருப்பதில்,
எவர் பெயரேனும் விடுபட்டிருப்பின் அது என் கவனக்குறைவே, மன்னியுங்கள்.]

ஒருவாரமும் பதிவுகளைப் படித்துக் கருத்து கூறியவருக்கும்

என் மனமார்ந்த நன்றி!
***

22 கருத்துகள்:

  1. என்னாங்கோ வலை சரத்தில் நானும் தான் உங்களை அறிமுகபடுத்தினேன். மறந்துட்டிங்களா? :)))

    Good job done for the past 1 week.

    பதிலளிநீக்கு
  2. 350-க்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. சுவாரஸியத்தை கூட்டி இருக்கிறீர்கள். இதோ வந்தாச்சு, வலைச்சரத்திற்கு..

    பதிலளிநீக்கு
  4. மோகன் குமார் said...
    //என்னாங்கோ வலை சரத்தில் நானும் தான் உங்களை அறிமுகபடுத்தினேன். மறந்துட்டிங்களா? :)))//

    என் கவனக் குறைவே! அதனால்தான் அட்வான்ஸாக மன்னிப்பைக் கேட்டு வைத்தேன்:)! இதோ இணைத்தாயிற்று.நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி.

    //Good job done for the past 1 week.//

    நன்றி, அட்வான்ஸ் வாழ்த்துக்களுக்கும்:)!

    பதிலளிநீக்கு
  5. பாரத்... பாரதி... said...
    //சுவாரஸியத்தை கூட்டி இருக்கிறீர்கள். இதோ வந்தாச்சு, வலைச்சரத்திற்கு..//

    மிக்க நன்றி பாரதி. அறியப்பட வேண்டிய பதிவர்களைத் தவறவிட்டுவிடக் கூடாதென்றே இங்கே அறிவிப்புப் பதிவும்:)!

    பதிலளிநீக்கு
  6. வலைச்சரத்துக்கு வந்துக்கிட்டே இருக்கேன் :-)

    பதிலளிநீக்கு
  7. //உலகெங்கும் அமைதி நிலவ விரும்பி மகனுக்குப் பெயர் வைத்தவர்//

    இப்ப வீட்ல அமைதி கிடைச்சாலே போதும்னு தோணுது மேடம்:-)))))!

    நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  8. இவர் தற்போதைய ஜனாதிபதி இல்லை. தலைப்பு தவறு.

    kannan from abu dhabi.
    http://samykannan.blogspot.com/

    பதிலளிநீக்கு
  9. அமைதி அப்பா said...
    ***//உலகெங்கும் அமைதி நிலவ விரும்பி மகனுக்குப் பெயர் வைத்தவர்//

    இப்ப வீட்ல அமைதி கிடைச்சாலே போதும்னு தோணுது மேடம்:-)))))!

    நன்றி மேடம்.//***

    நற்சிந்தனையுடனேயே இருக்கிறீர்கள். நிச்சயம் கிடைக்கும்:)! நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  10. சசிகுமார் said...
    //வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றி சசிகுமார்.

    பதிலளிநீக்கு
  11. Kannan said...
    //இவர் தற்போதைய ஜனாதிபதி இல்லை. தலைப்பு தவறு.//

    நீங்கள் சுட்டிக் காட்டியிருப்பதில் தவறு இல்லை. அதே நேரம், இவர் இப்போதைய ஜனாதிபதி இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே. கடந்த வருடம் அவரது பிறந்ததினத்தின் போது நினைவுகூர்ந்து பதியப்பட்ட ஒரு நிகழ்வை முன் நிறுத்தும் நோக்கத்தில் வைத்த தலைப்புதான். நன்றி.

    பதிலளிநீக்கு
  12. சகோதரிக்கு வணக்கத்துடன் நன்றியை உரித்தாக்கிக்கொள்கிறேன்..ஒரு நகராட்சிப்பள்ளியை ஒரு தனியார் பள்ளிக்கு இணையாக மாற்ற முடியுமா..எனக்கனவு கண்டு ஒரளவு வெற்றி பெற்றுள்ளேன் என்றே நினைக்கிறேன்..எனது அனுபவங்களை எழுதச்சொல்லி ஒரு சில கல்வியாளர்களின் தூண்டுதலின் பேரில் பதியத்துவங்கினேன்..இடையில் கொஞ்சம் மனச்சோர்வு..இன்று உங்கள் பதிவு கண்டு மனச்சோர்வு நீங்கிவிட்டது... நன்றி சகோதரி..புகைப்படக்காட்சிகள் பிரமாதம்...

    பதிலளிநீக்கு
  13. //இப்ப வீட்ல அமைதி கிடைச்சாலே போதும்னு தோணுது மேடம்:-)))))! //

    நற்சிந்தனையுடனேயே இருக்கிறீர்கள். நிச்சயம் கிடைக்கும்:)! நன்றி அமைதி அப்பா.
    *******************
    உங்களுடைய இந்த பதில் மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  14. அப்பாடி! மூச்சு விடாமல் தரமுள்ள பதிவுகளாக தந்து வந்திருக்கிறீர்கள். வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!

    பதிலளிநீக்கு
  15. சே.குமார் said...
    //வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி குமார்:)!

    பதிலளிநீக்கு
  16. ESWARAN.A said...
    //சகோதரிக்கு வணக்கத்துடன் நன்றியை உரித்தாக்கிக்கொள்கிறேன்..ஒரு நகராட்சிப்பள்ளியை ஒரு தனியார் பள்ளிக்கு இணையாக மாற்ற முடியுமா..எனக்கனவு கண்டு ஒரளவு வெற்றி பெற்றுள்ளேன் என்றே நினைக்கிறேன்..எனது அனுபவங்களை எழுதச்சொல்லி ஒரு சில கல்வியாளர்களின் தூண்டுதலின் பேரில் பதியத்துவங்கினேன்..இடையில் கொஞ்சம் மனச்சோர்வு..இன்று உங்கள் பதிவு கண்டு மனச்சோர்வு நீங்கிவிட்டது... நன்றி சகோதரி..புகைப்படக்காட்சிகள் பிரமாதம்...//

    நிச்சயம் இது பிரமிக்கத்தகு வெற்றிதான். மற்ற பள்ளிகளுக்கு முன் உதாரணமும். தொடர்ந்து உங்கள் அனுபவங்களை பதிந்து வந்தால் மற்றவர் நிச்சயம் அதனால் பயனுறுவர். அவசியம் செய்யுங்கள். நன்றியும் வணக்கங்களும்.

    பதிலளிநீக்கு
  17. கவிநயா said...
    //அப்பாடி! மூச்சு விடாமல் தரமுள்ள பதிவுகளாக தந்து வந்திருக்கிறீர்கள். வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!//

    ”மூச்சு விடாமல்”

    ஆம்:), ஆசுவாசமாக இரண்டு நாள் எடுத்துக் கொண்டாயிற்று. மிக்க நன்றி கவிநயா.

    பதிலளிநீக்கு
  18. ஸ்ரீராம். said...
    //சிறப்பாகச் செய்தீர்கள்.//

    மிக்க நன்றி ஸ்ரீராம்:)!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin