Sunday, November 7, 2010

உலகம் அழகானது - கலைமகள் தீபாவளி மலர் 2010-ல்..

372 பக்கங்களுடன் பல எழுத்துலக மேதைகளின் படைப்புகளைத் தாங்கி வெளியாகியுள்ளது கலைமகள் தீபாவளி மலர் 2010. அவற்றிற்கு நடுவே ஐந்து பக்கங்களுக்கு எனது சிறுகதை, ஓவியர் ஜெயராஜின் உயிர்ப்பான சிந்திரங்களுடன்...

‘இந்த ஆண்டு மகளிர் தினக் கொண்டாட்டத்தின் நூறாவது ஆண்டு ஆகையால் கலைமகள் தீபாவளி மலரில் அனைத்துமே பெண்கள் சம்பந்தமான கட்டுரைகள், பெண் எழுத்தாளர்களின் சிறப்புரைகள், பல துறைகளில் சாதனை புரிந்த பெண்மணிகள் பற்றிய பல அரிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. பழைய காலப் பெண்மணிகள்(ஆர். சூடாமணி, லக்ஷ்மி, வசுமதி ராமசாமி, அநுத்தமா,வை.மு. கோதைநாயகி அம்மாள் போன்ற பலர்) எழுதிய சிறுகதைகளோடு, இன்றைய பெண் எழுத்தாளர்களும் கைகோர்க்கிறார்கள்’ என மலரின் முன்னுரையில் குறிப்பிடுகிறார் ஆசிரியர் கீழாம்பூர்.

இன்றைய அன்றைய எழுத்துலகப் பெரியவர்கள் பலரின் படைப்புகளுக்கு நடுவே எனது படைப்பும் என்பதில் முதல் மகிழ்ச்சி. நான் விரும்பி வாசித்த பல எழுத்தாளர்களின் கதாபாத்திரங்களைக் கண்முன் கொண்டு வந்த ஓவியர் ‘ஜெ...’ இன்று எனது கதாபாத்திரங்களுக்கும் உயிர் கொடுத்திருப்பது பார்த்து கூடுதல் மகிழ்ச்சி:)!ளம் தொந்தியைப் பற்றிக் கவலைப்படாமல் முப்பதுகளின் நடுவிலேயே எதற்கு உடற்பயிற்சி என்கிற எண்ணத்துடன் எந்த வஞ்சனையும் இல்லாமல் வகை வகையாய்ச் சாப்பிட்டு வாழ்க்கையை அனுபவித்து வந்த எனக்கு எச்சரிக்கை மணி அடித்தது, அலுவலகத்தின் கட்டாய வருடாந்திர மருத்துவப் பரிசோதனை. அது கூடியிருக்கு இது குறைந்து போயிருக்கு என என்னென்னமோ சொல்லி வாயைக் கட்டுப்படுத்தச் சொன்னதோடு தினசரி ஒரு மணிநேரம் நடந்தே ஆக வேண்டுமென்று கட்டளையும் பிறப்பித்துவிட்டார்கள்.

நண்பனை அழைத்தேன். “டேய் சீதா, எனக்கு ஒரு நல்ல ட்ரெட்மில் வாங்கணும். பார்த்து செலக்ட் பண்ண கூட வர்றியா?”

விவரம் கேட்ட சீதாராமன் ”கிறுக்கா பிடிச்சிருக்கு. கார்டன் சிடியிலே இருந்துகிட்டு ட்ரெட்மிலில் ஓடப் பார்க்கிறியேடா சோம்பேறி” என்று சீறினான்.

எந்த வியாதியும் இல்லாமலே, நாள் தவறாமல் லால்பாகில் நடைபயிற்சிக்குச் செல்லும் அவனை எத்தனையோ முறை வேலையற்ற முட்டாள் எனத் திட்டியிருக்கிறேன்.

”ஒழுங்கு மரியாதையா நாளையிலிருந்து காலை ஆறுமணிக்கு டாண்னு லால்பாக் வாசலில் வந்து நிற்கணும் ஆமா” என்றான்.

“அதில்லே, இந்த பெங்களூரு குளிரு.., அப்புறம் அவ்வளவு தூரம் வந்து..”

“பொல்லாத தூரம். உன் வீட்டிலிருந்து பத்து நிமிஷ ட்ரைவ். உன் அப்பா வயசு ஆளுங்கெல்லாம் குல்லா ஸ்வெட்டருடன் ஓடிட்டிருக்காங்க. உனக்கு வெடவெடங்குதோ”

மேலும் மறுக்கத் தைரியமில்லாமல் “ம்” என்றேன்.

***

டக்கத் தொடங்கிவிட்டேன் சீதாராமனுடன். எத்தனை வகை மரங்கள். செடிகள். மலர்கள். அவற்றை ரசித்தபடியே சுத்தமான காற்றை சுவாசித்தபடி நண்பனுடன் நடப்பது பிடித்திருந்தது. இயற்கையான அந்த சூழல் ஒருநாள் விடாமல் உற்சாகமாய் போகத் தூண்டியது. களைத்து திரும்புகையில் கிழக்கு கேட் பக்கமாக இருக்கும் ஆறு தள்ளு வண்டிகளில் ஏதேனும் ஒன்றில் அருகம்புல் சாறு வாங்கிக் குடிப்பதும், அப்படியே அவரவர் வந்த வாகனங்களில் ஏறிப் பிரிவதும் வழக்கமாயிற்று.

முதல் நாள் அந்த பச்சைச் சாற்றினைப் பார்த்து நான் ‘உவ்வே எனக்கு வேண்டாம்பா’ என்ற போது சீதாராமன் வற்புறுத்தவில்லை. ‘என்ன தண்ணியோ, எந்தப் புல்லோ’ என அடுத்தநாள் முணுமுணுத்த போது ‘ரொம்பதான் அலட்டிக்காதே. நல்லா கவனி. வாங்கிப் பருகுபவரில் முக்காவாசிப்பேரு வசதியானவங்க. ஹெல்த் கான்ஷியஸ் உள்ளவங்க. சுகாதாரம் பாக்குறவங்க. பக்கத்திலிருக்கும் ஒரு முதியோர் ஆசிரமத்திலிருந்துதான் இந்த ஜூஸ் தயாராகி வருகிறது. விற்பது மட்டுமே இந்த வண்டிக்காரங்க வேலை” என்றான்.

உண்மைதான். ஆசிரமத்து பெயர் தாங்கிய ஒரு வேனில் கேன்கள் வந்து இறங்குவதை ஒருநாள் சீக்கிரமாய் போனவேளையில் காண முடிந்தது.
‘நான் சொன்னா திருப்தி இருக்காது உனக்கு. நீயே கூகுள் செய்து பாரு. புரியும் இதோட மருத்துவக் குணங்கள்’ சீதாராமன் சொல்ல அன்றே தேடினேன்.
‘வியாதிகளுக்கு விடை-அருகம்புல், அருகம்புல் சாற்றின் மகிமை’ என வரிசையாக வந்து விழுந்தன கட்டுரைகள். எதற்காக எனக்கு நடைபயிற்சி வற்புறுத்தப் பட்டதோ அதற்கான தீர்வும் அதிலிருப்பதாய்த் தோன்ற நானும் அருகம்புல் ரசிகனாகி விட்டேன்.

***

ருநாள் வேகமாய் நடந்தபடியே தோட்டத்தின் உள்ளிருந்து மெயின் கேட் பக்கமாக பார்வையை வீசியபோது அங்கும் ஒரு அருகம்புல் வியாபாரி.

”இந்த கேட் பக்கம் அப்படிப் பெரிசா ஒண்ணும் போணி ஆகாதே” என்றான் சீதாராமன்.

நான்கு வாசல்களைக் கொண்ட மாபெரும் தோட்டமாயிற்றே லால்பாக். வாகனங்களில் வருபவர் கிழக்கு வாசல் வழியாகவே நுழைய இயலும் என்பதால் அங்குதான் அருகம்புல் வியாபாரம் ஜேஜே என்றிருக்கும்.

“வாயேன். என்னன்னு கேட்டுட்டு இன்னைக்கு இவனிடம் வாங்கலாம்.” என்றழைத்தான்.

“ரெண்டு கப்” என இருபது ரூபாயை நீட்டினேன் புதியவனிடம்.

“ஏம்பா, இங்கே நிக்கறே. இந்தப் பக்கம் அத்தனை வேகமாய் விற்காதே” பேச்சுக் கொடுத்தான் சீதாராமன் சாற்றை உறிஞ்சியபடி.

“நெசந்தாங்க. ஆனா கிழக்குவாசலில் இருக்கிற ஆறுபேரும் என்னை விட மாட்டேனுட்டாங்க. சரின்னு இந்தப் பக்கமா வந்துட்டேன். என்ன ஒண்ணு. அவங்க ஒரு மணியிலே வித்து முடிக்கிறதை இங்கே நான் காலி பண்ண ரெண்டு மணி நேரமாயிடுது. சிலசமயம் முழுசுமா விற்க முடியாமலே வேலைக்கு கிளம்ப வேண்டியதாயிடுது” என்றான்.

“எங்க வேலை பாக்கறே”

“ஒரு ஜவுளிக் கடையில சேல்ஸ்மேனா இருக்கேங்க. என் பொண்ணுக்கு அரசு கோட்டாவில் மெடிக்கல் சீட் கிடைச்சு காலேஜிலும் சேர்ந்திட்டா. சாதாரண படிப்பா அது. மேலே எத்தனை செலவிருக்கு. மொனைப்பா படிச்சு சீட்டு வாங்குனவளுக்கு தகப்பனா நான் என்னதான் செய்ய? மனசு கிடந்து அடிச்சுக்குது. அதான் பார்ட் டைமா என்னென்ன வேலை கிடைக்கோ எல்லாத்தையும் செய்யறேன். ஒரு ஸ்கூலிலே நைட் வாட்ச் மேனாவும் சேர்ந்திருக்கேன். எப்படியோ இந்த நாலு வருசம் நான் கஷ்டப் பட்டுட்டா அவ டாக்டராயிடுவா இல்லே” என்றான் கண்கள் மினுங்க.

‘நிச்சயமா’ மனதார நினைத்தோம். அன்றிலிருந்து அவனிடமே வாங்கிப் பருகவும் தீர்மானித்தோம். தினசரி தங்களில் ஒருவரிடம் வாங்குபவர்கள் இப்போது நேராக அவரவர் வாகனங்களில் ஏறிப் பறப்பதை இரண்டுவாரமாகக் கவனித்த கிழக்குவாசல் வியாபாரிகளுக்கு மூக்கில் வியர்த்திருக்க வேண்டும்.

***

ன்றுதாங்க கடைசி. நாளையிலிந்து நான் வர்றதில்லை” என்றான் திடுமென ஒருநாள், வருங்கால டாக்டரின் தந்தையான செந்தில். முகமோ வாடி வெளிறிப் போயிருந்தது.

“ஏன்” என்றோம் ஒரே சமயத்தில்.

“அந்த ஆறுபேரும் டர்ன் போட்டு வந்து மிரட்டிட்டுப் போயிட்டாங்க இன்னிக்கு. அவங்களை எதிர்த்து என்னால ஒண்ணும் செய்ய முடியாதுங்க. விடுங்க, எல்லோருமே புள்ளைப் புட்டிக்காரங்க. அவங்க நியாயம் அவங்களுக்கு. நல்லாயிருக்கட்டும்” என்றான்.

“ என்ன அநியாயம்? நீ எடுத்துச் சொல்லியிருக்கணும். முட்டாத்தனமா பேசாதே” வெடித்தான் சீதாராமன்.

“காலில விழாத குறையா கெஞ்சியாச்சுங்க. ஒரு பலனுமில்லே. விட்டுட்டேன். அக்கறையா விசாரிச்ச உங்களிடமும் இன்னும் சில ரெகுலர் கஸ்டமருங்களிடமும் ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போலாமேன்னுதான் காத்திருந்தேங்க”

“சரி மொபைல் நம்பர் இருந்தா கொடு. உனக்காக அவங்ககிட்டே பேசிப் பார்த்துட்டு சொல்றோம்”

“ஐயோ வேண்டாம் சார். ரொம்பப் பொல்லாதவங்க. ஆள வச்சு அடிச்சுப் போட்றுவோம்னு மிரட்டினவங்க. அவங்ககிட்டே எதுவும் வச்சுக்காதீங்க. என்னால நீங்க பிரச்சனையில மாட்டிக்கப்படாது” பெரிய கும்பிடுடன் பிடிவாதமாய் மறுத்து விட்டான்.

***

ன்ன உலகமடா இது? இதை இப்படியே விடக் கூடாது. வா ரெண்டுல ஒண்ணு பார்த்திடுவோம்” என்றான் சீதாராமன். தொடை சற்று நடுங்கினாலும் காட்டிக் கொள்ளாமல் கூட நடந்தேன்.

விற்று முடித்துக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

“அந்தாளு செந்தில் அங்கே கடை போட்டிருப்பதிலே உங்களுக்கென்னங்க கஷ்டம்?” நைச்சியமாகதான் ஆரம்பித்தான் சீதாராமன்.

“தூது விட்டிருக்கானா உங்களை. நினைச்சேன் இது போல ஏதாவது செய்வான்னு” என்றான் ஒருவன்.

“என்ன கஷ்டம்னு எப்படி சார் கேட்க முடியுது உங்களால. மெயின் வாசல்வழி வந்து போறவங்க மட்டுமில்லாம எங்களிடம் வாங்கினவங்களில் நிறையப் பேரு அவன்கிட்டே வாங்க ஆரம்பிச்சிட்டாங்க உங்களையும் சேர்த்து. தெரியாத மாதிரி நடிக்காதீங்க” இது அடுத்தவன்.

“ஏம்பா இங்க கூட நான் இன்னாரிடம்னு வாங்கினதில்லையே. அப்பல்லாம் பேசாமதான இருந்தீங்க? ஆறோடு ஏழேன்னு அவன் ஒரு ஓரமா பொழச்சிட்டுப் போட்டுமே.” என்றான் சீதாராமன் விடாப்பிடியாக.

“ஆகா. பின்ன ஏழு பத்தாகும். பத்து இருபதாகும். நல்லாயிருக்கு சார் உங்க வாதம்” என்றவனின் குரல் உயரத் தொடங்கியிருந்தது.

எப்போதும் பணிவான பேச்சும் சிநேகமான புன்னகையுமாகவே பார்த்துப் பழக்கமாகியிருந்தவர்களின் கண்களில் தெறித்த கோபம் அச்சுறுத்துவதாய் இருந்தாலும் சீதாராமன் அசரவேயில்லை.

“அஞ்சு ஏன் ஆறாகணும்னு இதே போல உங்களில ஒருத்தர் நினைச்சிருந்தா என்னாயிருக்கும்னு யோசிங்களேன்” என்றான்.

“நாங்கல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு சார். இதெல்லாம் இங்கே எழுதப்படாத சட்டம். உங்க மாதிரி மேட்டுக்குடி ஆளுங்களுக்கு புரியாது”

”நீங்கதாம்ப்பா புரியாம பேசறீங்க. மழைக்காலந் தவிர்த்து என்னைக்காவது ஒரு நாளாவது வித்து முடிக்கமா திரும்பிப் போயிருக்கீங்களா சொல்லுங்க பாப்போம்? தேவை இருக்குமிடத்தில கூட ஒருநபரை பெரிய மனசு பண்ணி சேர்த்துக்கிட்டா என்னவாம்? சரின்னு உடனே விலகிப் போகும் அவனிடமிருக்கும் பெருந்தன்மை உங்களிடம் இல்லையே”

“இப்ப என்னாங்கறே” என்றான் ஒருவன் மிகக் கடுப்பாக.

***
சீதாராமனின் கையைப் பிடித்து அழுத்தினேன் இனி நான் பார்த்துக் கொள்கிறேன் என்பது போல. அவர்களின் எதிர்பேச்சு ஒவ்வொன்றும் ஏற்கனவே எனக்குள்ளும் ஒரு கனலை எழுப்பி விட்டிருந்தது.

“அவன் பொண்ணு டாக்டருக்கு படிக்கிறா. தெரியுமா உங்களுக்கு? அவளை படிக்க வைக்கதான்..”

“வா சாரே வா. நல்லா வாங்குறியே வக்காலத்து? ஏன் எம்புள்ளைக்கும்தான் வக்கீலுக்குப் படிக்க ஆசை. இதோ இவன் மகளுக்கு இஞ்சினீரு ஆகணும்னு ஆசை. எல்லாருக்கும் புள்ளைங்க குடும்பம்னு இருக்கு. நாங்க யாரும் கஸ்டமருங்க கிட்டே கஸ்டத்தை சொல்லி பேஜாரு பண்றதில்லை.”

என்ன சொல்லி புரிய வைப்பது? விலங்குகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? இவர்கள் போன்ற கடைக்கோடி மனிதர் முதல் கோடானு கோடீஸ்வரர் வரை ‘சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட்’ என சொல்லித் தங்களை நியாயப்படுத்திக் கொண்டு, இவ்வுலகையே போட்டியும் பொறாமையும் நிறைந்ததாக்கி விட்டார்கள் என்றே தோன்றியது. அதைத் தாண்டி ‘மனித நேயம்’ என்பதைப் பற்றியதான சிந்தனை அற்றுதான் போய் விட்டது. எல்லோரும் எல்லாவற்றையும் ’தமக்கென்ன லாபம்’ என்கிற சுயநல நோக்கிலேயே பார்க்கப் பழகி விட்டார்கள். சரியென அதே வழியில் சென்று அவர்களை மடக்க முயன்றேன்.

“ஏம்பா உங்கள மாதிரியான ஒரு குடும்பத்திலயிருந்த ஒரு பொண்ணு கஷ்டப்பட்டு படிச்சு சீட் வாங்கியிருக்கு. அதை உதாரணமா காட்டியே உங்க புள்ளைங்களயும் நல்லாக் கொண்டு வர முடியும். வக்கீலாக்கி என்ஜினீயராக்கிப் பார்க்க முடியும்”

ஆசை காட்டியதோடு “அடுத்தவன் மரத்துக்கு ஆண்டவன் ஊத்துற தண்ணியத் தட்டி விட்டுப் பாவத்த சேக்காதீங்க” என்று கடைசி அஸ்திரமாய், எச்சரித்து ஒரு பிட்டையும் போட்டேன்:

”அதேதான் நாங்களும் கேட்டுக்கறோம். எங்களுக்கு ஆண்டவன் ஊத்தறதை நீங்க தட்டி விட்டுப் பாவத்த சேக்காதீங்க. மரம் வச்சவனே அவனுக்கு வேற வழியக் காட்டுவான்” ஒருவன் சொல்ல “அப்படிப் போடு” மற்றவர்கள் பெரிதாகச் சிரித்தார்கள்.

எரிச்சலானேன்.

“புல்லைப் புடுங்கிப் புடுங்கிச் சாறு வித்தே பழகிட்ட உங்களுக்கு ஒரு தளிரு வளர்ந்து ஆலமரமாய் விரியற வாய்ப்பைக் கொடுக்கும் மனசும் இல்ல, அது உலகத்துக்கு தரக்கூடிய நிழலைப் பற்றிய தொலைநோக்கோ புரிதலோ சுத்தமா இல்ல. நாளைக்கே உங்க குடும்பத்துல ஒருத்தருக்கு ஒண்ணுன்னா அந்தப் பொண்ணு நன்றியோட ஓடிவரும். இதையெல்லாம் எட்டி யோசிக்கிற அறிவு ஊஹூம், ஜீரோ”

கோபமாய் நான் ஆள்காட்டி விரலால் காற்றில் பெரிய வட்டம் வரைய..

“என்ன சார் விட்டா பேசிட்டே போற? பாருங்கடா. நம்பளை முட்டாளுங்கறாரு. முட்டை வேற வரையிறாரு. இதே இன்னொருத்தரா இருந்தா வரைஞ்ச கைய வளைச்சு முறிச்சி அடுப்பில வச்சிருப்போம். நல்லபடியா வூடு போய் சேரு” மூர்க்கமாய் ஒருவன் கத்த ஆரம்பிக்க சீதாராமன் என்னை இழுத்துக் கொண்டு நகர்ந்தான்.

***

றுநாளிலிருந்து அவர்கள் பக்கமே நாங்கள் திரும்பவில்லை. எதேச்சையாக பார்வைகள் சந்திக்க நேர்ந்தாலும் முகத்தைத் திருப்பிக் கொண்டு நகர்ந்தோம்.
அருகம்புல் சாறும் வெறுத்துப் போனது. பதிலுக்கு அதே முறைப்புடன் அவர்களும் இருக்க ஒருவாரம் கழிந்த நிலையில் “என்னா சார்? எங்க மேலே உள்ள கோபத்தை ஏன் அருகம்புல்லு மேலே காட்டறீங்க? அது வேற இது வேற!” என்றான் ஒருவன். நாங்கள் கண்டு கொள்ளாமல் விரதத்தைத் தொடர்ந்தோம். மேலும் ஒருவாரம் சென்றிருக்க, அது ஒரு ஞாயிறு. அன்றைக்கு சற்று தாமதமாக உள்ளே நுழைந்தோம்.

“சாரே”

வந்த குரலை வழக்கம் போல சட்டை செய்யவில்லை.

”சாரே” இப்போது குரல்கள் ஓங்கி ஒலித்தன கோரசாக. திரும்பிப் பார்த்தால் எங்கள் கண்களை எங்களாலேயே நம்ப முடியவில்லை. ஆறாவது வண்டிக்கு அடுத்து ஏழாவதாய், முகம் முழுக்க சிரிப்பாய் நின்றிருந்தான் செந்தில்.

விரைந்தோம்.

“எப்படி” வியப்பில் திணறினோம்.

“நேத்தைக்கு என் வூடு தேடி வந்துட்டாங்க சார் இவங்கெல்லாம். பொண்ணுக்கு ஹான்ட்பேக் பேனால்லாம் கூட வாங்கி வந்திருந்தாங்க. கூடவே அவங்க புள்ளைங்களையும் கூட்டி வந்திருந்தாங்க.” என்றான் செந்தில் நெகிழ்வுடன்.

“நிச்சயமா அவரு பொண்ணுட்ட ஓசி வைத்தியம் பார்த்துக்க இல்ல சார். நீங்க சொன்னதெல்லாம் யோசிச்சு யோசிச்சு பார்த்ததிலே பொறந்த ஞானம்” ஒருவன் சொல்ல நானும் சீதாராமனும் ஓடிப்போய் ஒவ்வொருவர் கையையும் தனித்தனியாகப் பிடித்துக் குலுக்கினோம்.

“இனிமே அருகம்புல் மேலே கோபமில்லையே?” ஒருவன் கேட்க அசடு வழிந்தோம்.

ஆனால் யாரிடம் வாங்குவது? செந்திலைக் கை காட்டினார்கள் எங்களின் திகைப்பைப் புரிந்து கொண்டவர்களாய்.

பர்சை எடுக்கப் போன சீதாராமனைத் தடுத்தான் செந்தில்.

“உங்க ரெண்டு பேருக்கும் என்னைக்கும் இலவசம் சார். என் நன்றியா நினைச்சு ஏத்துக்கிட்டா மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கும்” நெஞ்சைத் தொட்டபடி சொன்னான்.

“நாங்க அவங்களைப் போல இல்லேப்பா. உன் பொண்ணுகிட்ட கண்டிப்பா ஓசி வைத்தியம் பார்க்க வருவோம். அதுக்கான ஃபீஸைதான் இப்பவே கொடுக்கறோம். நினைவில வச்சுக்க ஆமா” சிரித்தபடி அவன் சட்டைப் பையில் நோட்டுத் தாளைச் செருகினான் சீதாராமன்.

மேலே மேலே வந்து கொண்டிருந்த கிழக்குச் சூரியனின் கதிர் உடம்புக்கும் மனதுக்கும் இதமாக இருந்தது. பூத்துக்குலுங்கிய மரங்களுடன் தோட்டம் எப்போதை விடவும் மிகமிக அழகாகத் தெரிந்தது. உலகமும்.

*****நன்றி கலைமகள்!

97 comments:

 1. கதை அருமை... வாழ்த்துக்கள் மேடம்

  ReplyDelete
 2. அருமை. கற்பனையா நிஜமா என தெரியலை; நீங்கள் வசிக்கும் பெங்களூர் போன்ற தகவல் நிஜம் என நினைக்க வைத்தால், ஆண் வியூவில் கதை உள்ளதால் கற்பனையோ என தோன்றுகிறது. Anyhow, வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. ரொம்ப நல்லாயிருக்குங்க கதை

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் ராமலஷ்மி.

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. மிக்க மகிழ்ச்சி மேடம். வாழ்த்துக்கள். அழகான கதை. அழகான கருத்து. உலகம் அழகானதுதான்... மனித மனம் அழகானால்...

  ReplyDelete
 7. கதை மிக நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. சூப்பரோ சூப்பரு!பூங்கொத்து!

  ReplyDelete
 9. உலகம் எப்பவுமெ இப்படி அழகாக இருக்கட்டும் ராமலக்ஷ்மி. நடையில் ஆரம்பித்துக் கல்வியை வளர்த்த பதிவு. கலைமகளுக்கு ஏற்ற சம்பவம். அவர்கள் பிரசுரித்ததில் அதிசயமே இல்லை. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. அருமையான கரு. மிக அழகான கதை. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 11. அருமை. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. ஊருக்கு ஒரு சீதாராமன் இருந்தால் "இது கதையல்ல நிஜம்" என்றாகிவிடும். நல்ல கற்பனை. பாராட்டுக்கள்.

  சகாதேவன்

  ReplyDelete
 13. கதை அருமை... வாழ்த்துக்கள் மேடம்.

  ReplyDelete
 14. அருமையான கதை. படித்து முடித்ததும் மிக சந்தோஷமாக இருந்தது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள் அக்கா.. அருமையான கதை..

  ReplyDelete
 16. அருமையான கரு.
  மிக அழகான கதை.
  வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 17. கதையில் கூட இவ்வளவு சமூக அக்கறையோடு எழுதும் உங்களை பாராட்ட வார்த்தை வரவில்லை.

  தொடரட்டும் உங்கள் பணி!

  ReplyDelete
 18. ஒருத்தருக்கொருத்தர் புரிந்துணர்வு இருந்தா நிச்சயமா உலகம் அழகானதுதான்.. வாழ்த்துக்கள் :-)

  ReplyDelete
 19. உலகம் அழகானது தான்,அதனை நாம் உணரவும்,உணர்த்தவும் தெரிந்திருக்கணும்.என்னுடைய அன்பான கைகுலுக்கல் உங்களுக்கு.

  ReplyDelete
 20. வாழ்த்துகள் அக்கா ! :)

  ரொம்ப புடிச்சிருந்தது

  //புல்லைப் புடுங்கிப் புடுங்கிச் சாறு வித்தே பழகிட்ட உங்களுக்கு ஒரு தளிரு வளர்ந்து ஆலமரமாய் விரியற வாய்ப்பைக் கொடுக்கும் மனசும் இல்ல, அது உலகத்துக்கு தரக்கூடிய நிழலைப் பற்றிய தொலைநோக்கோ புரிதலோ சுத்தமா இல்ல. //

  ReplyDelete
 21. அருமையான கதை இயல்போடு.உலகம் அழகானது தான்.வாழ்த்துகள் அக்கா!

  ReplyDelete
 22. அருமையாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். எல்லாப் பத்திரிக்கைகளிலும் கால் பதிக்கிறீர்கள்...மன்னிக்கவும் கை பதிக்கிறீர்கள்!! நேற்று வந்த தினமணி கதிரில் உங்கள் கதை...அது அடுத்த பதிவா? மீண்டும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 24. கதை அருமை, அருமை.. உலகம் இப்படியே அழகாகட்டும்..ராமலக்‌ஷ்மி

  ReplyDelete
 25. ஆகா வாழ்த்துக்கள்! இப்ப தான் தெரிஞ்சுது. நான் படிச்சுட்டு வர்ரேன்! கலைமகள் வாங்கனுமே!

  ReplyDelete
 26. அக்கா, அருமையான கதைக்கு நன்றி. பிரசுரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்!
  கலக்குறீங்க, அக்கா!!!

  ReplyDelete
 27. பிரசுரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 28. மிக அருமையான கதை. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 29. வாழ்த்துக்கள் மேடம்..

  ReplyDelete
 30. வித்தியாசமான களம். நல்லா இருக்குக்கா.

  ReplyDelete
 31. தலைப்பைப் பார்த்தவுடன் எந்த மாதிரியான கதையிது என்ற யூகத்துக்கே வரமுடியவில்லை.. போகப்போக அழகாய் கதை பரந்து விரிந்து அழகான உலகோடு ஒன்றிவிட்டது. மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்:-)

  ReplyDelete
 32. நல்லா இருக்குங்க. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 33. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
  கதை அருமை.

  ReplyDelete
 34. படிச்சுட்டேன்! இது ஒரு யுத்தி.எல்லோரும் உலகத்திலே நல்லவங்க தான் என புரிஞ்சுகிட்டு அவங்களை நம்ம வழிக்கு கொண்டு வ்ருவது ஒரு யுத்தி.ரொம்ப இயல்பா வந்திருக்கு கதை!

  ReplyDelete
 35. முன்னாளில் பிரபலமான பெண் எழுத்தாளர்கள் வரிசையில் இனி உங்கள் பெயரும் வரும். லக்ஷ்மி, சூடாமணி, வசுமதிராமசாமி, அநுத்தமா போல மிக அழுத்தமா எழுதி இருக்கிறீர்கள். நான் குமுதம், விகடன் மட்டுமே வாங்குகிறேன். நீங்கள் ஸ்ரீராம் சொன்னது போல எல்லா பத்திரிகையிலும் கை பதிக்கிறீர்களே. பாராட்டுக்கள்.
  பத்மா

  ReplyDelete
 36. // நீயே கூகுள் செய்து பாரு//

  ஹ ஹ ஹா இடைச்செருகல் வார்த்தைவிளையாட்டு...

  மிகவும் அருமையான கதை ..
  வாழ்த்துகள் மேடம்!

  //thamarai said...
  முன்னாளில் பிரபலமான பெண் எழுத்தாளர்கள் வரிசையில் இனி உங்கள் பெயரும் வரும். லக்ஷ்மி, சூடாமணி, வசுமதிராமசாமி, அநுத்தமா போல மிக அழுத்தமா எழுதி இருக்கிறீர்கள். //

  நிஜமான வார்த்தைகள் ...

  ReplyDelete
 37. முத்துச்சரம் ,
  கலைமகள் மகுடத்தில் வைரச்சரமானது .
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 38. சூப்பர். வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!

  ReplyDelete
 39. அடடே...

  கலைமகள் தீபாவளி மலர் 2010-ல் உங்கள் கதையா!!

  பேஷ்...பேஷ்... நல்ல அச்சீவ்மெண்ட் தான்... சூப்பர் ப்ரமோஷன் தான் போங்க...

  அருமையான கதை... வாசிக்க புது அனுபவத்தை தந்தது...

  வாழ்த்துக்கள் ராமலஷ்மி....

  ReplyDelete
 40. LK said...
  //கதை அருமை... வாழ்த்துக்கள் மேடம்//

  மிக்க நன்றி எல் கே.

  ReplyDelete
 41. மோகன் குமார் said...
  //அருமை. கற்பனையா நிஜமா என தெரியலை; நீங்கள் வசிக்கும் பெங்களூர் போன்ற தகவல் நிஜம் என நினைக்க வைத்தால், ஆண் வியூவில் கதை உள்ளதால் கற்பனையோ என தோன்றுகிறது. Anyhow, வாழ்த்துக்கள்.//

  நன்றி மோகன் குமார். பார்த்தவை கேட்டவையுடன் கற்பனையைக் கலந்தால் கதைகள்:)!

  ReplyDelete
 42. ஈரோடு கதிர் said...
  //ரொம்ப நல்லாயிருக்குங்க கதை//

  நன்றி கதிர்.

  ReplyDelete
 43. மாதேவி said...
  //வாழ்த்துக்கள் ராமலஷ்மி.//

  நன்றி மாதேவி.

  ReplyDelete
 44. நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
  //கதை அருமைங்க. வாழ்த்துக்கள்.//

  நன்றிகள் நித்திலம்.

  ReplyDelete
 45. ஈ ரா said...
  //வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி ஈ ரா.

  ReplyDelete
 46. அமுதா said...
  //மிக்க மகிழ்ச்சி மேடம். வாழ்த்துக்கள். அழகான கதை. அழகான கருத்து. உலகம் அழகானதுதான்... மனித மனம் அழகானால்...//

  அழகாய் சொன்னீர்கள் அமுதா:)! மிக்க நன்றி.

  ReplyDelete
 47. எஸ்.கே said...
  //கதை மிக நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்!//

  வாங்க எஸ் கே. மிக்க நன்றி.

  ReplyDelete
 48. அன்புடன் அருணா said...
  //சூப்பரோ சூப்பரு!பூங்கொத்து!//

  மகிழ்ச்சி அருணா:)!

  ReplyDelete
 49. வல்லிசிம்ஹன் said...
  //உலகம் எப்பவுமெ இப்படி அழகாக இருக்கட்டும் ராமலக்ஷ்மி. நடையில் ஆரம்பித்துக் கல்வியை வளர்த்த பதிவு. கலைமகளுக்கு ஏற்ற சம்பவம். அவர்கள் பிரசுரித்ததில் அதிசயமே இல்லை. மனம் நிறைந்த வாழ்த்துகள்.//

  ஆசிகளுக்கு நன்றி வல்லிம்மா.

  ReplyDelete
 50. அம்பிகா said...
  //அருமையான கரு. மிக அழகான கதை. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.//

  மிக்க நன்றி அம்பிகா.

  ReplyDelete
 51. Kanchana Radhakrishnan said...
  //அருமை. வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றிங்க.

  ReplyDelete
 52. சகாதேவன் said...
  //ஊருக்கு ஒரு சீதாராமன் இருந்தால் "இது கதையல்ல நிஜம்" என்றாகிவிடும். நல்ல கற்பனை. பாராட்டுக்கள்.//

  உண்மைதான். என் நன்றிகள் சகாதேவன்.

  ReplyDelete
 53. சே.குமார் said...
  //கதை அருமை... வாழ்த்துக்கள் மேடம்.//

  மிக்க நன்றி குமார்!

  ReplyDelete
 54. புவனேஸ்வரி ராமநாதன் said...
  //அருமையான கதை. படித்து முடித்ததும் மிக சந்தோஷமாக இருந்தது. வாழ்த்துக்கள்.//

  மகிழ்ச்சியும் நன்றியும் புவனேஸ்வரி.

  ReplyDelete
 55. சுசி said...
  //வாழ்த்துக்கள் அக்கா.. அருமையான கதை..//

  மிக்க நன்றி சுசி.

  ReplyDelete
 56. goma said...
  //அருமையான கரு.
  மிக அழகான கதை.
  வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.//

  மிக்க நன்றி கோமா.

  ReplyDelete
 57. அமைதி அப்பா said...
  //கதையில் கூட இவ்வளவு சமூக அக்கறையோடு எழுதும் உங்களை பாராட்ட வார்த்தை வரவில்லை.

  தொடரட்டும் உங்கள் பணி!//

  மிக்க நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 58. அமைதிச்சாரல் said...
  //ஒருத்தருக்கொருத்தர் புரிந்துணர்வு இருந்தா நிச்சயமா உலகம் அழகானதுதான்.. வாழ்த்துக்கள் :-)//

  அதேதான் அமைதிச்சாரல்:), மிக்க நன்றி.

  ReplyDelete
 59. asiya omar said...
  //உலகம் அழகானது தான்,அதனை நாம் உணரவும்,உணர்த்தவும் தெரிந்திருக்கணும்.என்னுடைய அன்பான கைகுலுக்கல் உங்களுக்கு.//

  மகிழ்ச்சியும் நன்றியும் ஆசியா ஓமர்.

  ReplyDelete
 60. ஆயில்யன் said...
  ***//வாழ்த்துகள் அக்கா ! :)

  ரொம்ப புடிச்சிருந்தது

  //புல்லைப் புடுங்கிப் புடுங்கிச் சாறு வித்தே பழகிட்ட உங்களுக்கு ஒரு தளிரு வளர்ந்து ஆலமரமாய் விரியற வாய்ப்பைக் கொடுக்கும் மனசும் இல்ல, அது உலகத்துக்கு தரக்கூடிய நிழலைப் பற்றிய தொலைநோக்கோ புரிதலோ சுத்தமா இல்ல. //***

  ரசித்தமைக்கு நன்றி ஆயில்யன். 'அருகம்புல்லும் ஆலமரமும்' என்கிற தலைப்பும் என் பரிசீலனையில் இருந்தது:)!

  ReplyDelete
 61. ஹேமா said...
  //அருமையான கதை இயல்போடு.உலகம் அழகானது தான்.வாழ்த்துகள் அக்கா!//

  மிக்க நன்றி ஹேமா. சிலகால இடைவெளிக்குப் பிறகு உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி.

  ReplyDelete
 62. ஸ்ரீராம். said...
  //அருமையாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். எல்லாப் பத்திரிக்கைகளிலும் கால் பதிக்கிறீர்கள்...மன்னிக்கவும் கை பதிக்கிறீர்கள்!! நேற்று வந்த தினமணி கதிரில் உங்கள் கதை...அது அடுத்த பதிவா? மீண்டும் வாழ்த்துக்கள்.//

  கதிர் கதை வாசித்து விட்டீர்களா? நன்றி ஸ்ரீராம். விரைவில் அதையும் பதிவேன். அடுத்தது ‘லேடீஸ் ஸ்பெஷல்’ தீபாவளி மலர் கதை:)!

  ReplyDelete
 63. Kousalya said...
  //வாழ்த்துக்கள்...//

  மிக்க நன்றி கெளசல்யா.

  ReplyDelete
 64. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //கதை அருமை, அருமை.. உலகம் இப்படியே அழகாகட்டும்..ராமலக்‌ஷ்மி//

  நன்றி முத்துலெட்சுமி, உங்க வாக்குப்படியே ஆகட்டும்:)!

  ReplyDelete
 65. அபி அப்பா said...
  //ஆகா வாழ்த்துக்கள்! இப்ப தான் தெரிஞ்சுது. நான் படிச்சுட்டு வர்ரேன்! கலைமகள் வாங்கனுமே!//

  நன்றி அபி அப்பா. வாய்ப்புக் கிடைத்தால் வாங்குங்கள். மிகுந்த சிரத்தையுடன் தயாரித்துள்ளார்கள் தீபாவளி மலரை.

  ReplyDelete
 66. Chitra said...
  //அக்கா, அருமையான கதைக்கு நன்றி. பிரசுரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்!
  கலக்குறீங்க, அக்கா!!!//

  மிக்க நன்றி சித்ரா.

  ReplyDelete
 67. சசிகுமார் said...
  //பிரசுரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்!//

  நன்றி சசிகுமார்.

  ReplyDelete
 68. தி. ரா. ச.(T.R.C.) said...
  //மிக அருமையான கதை. வாழ்த்துக்கள்//

  வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தி. ரா. ச.

  ReplyDelete
 69. மணிஜீ...... said...
  //வாழ்த்துக்கள் மேடம்..//

  மிக்க நன்றி மணிஜீ:)!

  ReplyDelete
 70. ஹுஸைனம்மா said...
  //வித்தியாசமான களம். நல்லா இருக்குக்கா.//

  மகிழ்ச்சியும் நன்றியும் ஹுஸைனம்மா.

  ReplyDelete
 71. "உழவன்" "Uzhavan" said...
  //தலைப்பைப் பார்த்தவுடன் எந்த மாதிரியான கதையிது என்ற யூகத்துக்கே வரமுடியவில்லை.. போகப்போக அழகாய் கதை பரந்து விரிந்து அழகான உலகோடு ஒன்றிவிட்டது. மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்:-)//

  உங்களுக்குப் பிடித்ததில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி உழவன்:)!

  ReplyDelete
 72. வரதராஜலு .பூ said...
  //நல்லா இருக்குங்க. வாழ்த்துக்கள்//

  நன்றிகள் முதல் வருகைக்கும்.

  ReplyDelete
 73. ஜெஸ்வந்தி said...
  //வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
  கதை அருமை.//

  மிக்க நன்றி ஜெஸ்வந்தி:)!

  ReplyDelete
 74. அபி அப்பா said...
  //படிச்சுட்டேன்! இது ஒரு யுத்தி.எல்லோரும் உலகத்திலே நல்லவங்க தான் என புரிஞ்சுகிட்டு அவங்களை நம்ம வழிக்கு கொண்டு வ்ருவது ஒரு யுத்தி.ரொம்ப இயல்பா வந்திருக்கு கதை!//

  உண்மைதான். நல்ல உத்திதான் இல்லையா:)? கருத்துக்கு மிக்க நன்றி அப்பா.

  ReplyDelete
 75. thamarai said...
  //முன்னாளில் பிரபலமான பெண் எழுத்தாளர்கள் வரிசையில் இனி உங்கள் பெயரும் வரும். லக்ஷ்மி, சூடாமணி, வசுமதிராமசாமி, அநுத்தமா போல மிக அழுத்தமா எழுதி இருக்கிறீர்கள். நான் குமுதம், விகடன் மட்டுமே வாங்குகிறேன். நீங்கள் ஸ்ரீராம் சொன்னது போல எல்லா பத்திரிகையிலும் கை பதிக்கிறீர்களே. பாராட்டுக்கள்.
  பத்மா//

  அவர்கள் எங்கே நான் எங்கே? அன்பு மிகுதியில் வந்த ஆசிகளாய் கொள்கிறேன்:)! வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி தாமரை.

  ReplyDelete
 76. ப்ரியமுடன் வசந்த் said...
  ***// நீயே கூகுள் செய்து பாரு//

  ஹ ஹ ஹா இடைச்செருகல் வார்த்தைவிளையாட்டு...//***

  கதை எழுதும் முன், நானே கூகுள் செய்துதான் அருகம்புல்லின் மகிமையைத் தெரிந்து கொண்டேன்:)!


  ***/மிகவும் அருமையான கதை ..
  வாழ்த்துகள் மேடம்!

  //thamarai said...
  முன்னாளில் பிரபலமான பெண் எழுத்தாளர்கள் வரிசையில் இனி உங்கள் பெயரும் வரும். லக்ஷ்மி, சூடாமணி, வசுமதிராமசாமி, அநுத்தமா போல மிக அழுத்தமா எழுதி இருக்கிறீர்கள். //

  நிஜமான வார்த்தைகள் .../***

  ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு நன்றி வசந்த்:)!

  ReplyDelete
 77. goma said...
  //முத்துச்சரம் ,
  கலைமகள் மகுடத்தில் வைரச்சரமானது .
  வாழ்த்துக்கள்//

  கோர்த்த முதல் முத்தில் இருந்து கவனித்து வரும் உங்கள் வாழ்த்துக்கள் மேலும் உற்சாகம் தருகிறது. நன்றி கோமா.

  ReplyDelete
 78. கவிநயா said...
  //சூப்பர். வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!//

  நன்றி கவிநயா:)!

  ReplyDelete
 79. R.Gopi said...
  //அடடே...

  கலைமகள் தீபாவளி மலர் 2010-ல் உங்கள் கதையா!!

  பேஷ்...பேஷ்... நல்ல அச்சீவ்மெண்ட் தான்... சூப்பர் ப்ரமோஷன் தான் போங்க...

  அருமையான கதை... வாசிக்க புது அனுபவத்தை தந்தது...

  வாழ்த்துக்கள் ராமலஷ்மி....//

  மகிழ்ச்சியும் நன்றியும் கோபி.

  ReplyDelete
 80. தமிழ்மணத்தில் வாக்களித்த 17 பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த 30 பேருக்கும் என் வாழ்த்துக்கள்.
  Post

  ReplyDelete
 81. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி மேடம்..

  ReplyDelete
 82. அருமையான நடையில் அற்புதமான கதை.வாழ்த்துக்கள் சகோதரி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 83. அஹமது இர்ஷாத் said...
  //வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி மேடம்..//

  நன்றி அஹமது.

  ReplyDelete
 84. Bharkavi said...
  //nalla ezhudhi irukeenga :)//

  நன்றி பார்கவி.

  ReplyDelete
 85. ஸாதிகா said...
  //அருமையான நடையில் அற்புதமான கதை.வாழ்த்துக்கள் சகோதரி ராமலக்ஷ்மி.//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸாதிகா.

  ReplyDelete
 86. அன்புள்ள ராமலட்சுமி,
  அருமையான கதை. மனதைத் தொட்டது. என் மகளுக்குத் தமிழ் அவ்வளவாகப் படிக்கத் தெரியாது. அவளுக்கு இந்தக் கதையைப் படித்துக் காட்டினேன். அவள் இப்போது உங்கள் ரசிகர்கள். உங்களது மற்றைய படைப்புகளை வாசித்துக் காட்டுவதுதான் இப்பொழுது எங்கள் அம்மா - பெண் பொழுதுபோக்கு என்றால் பாருங்களேன்.

  ReplyDelete
 87. @ mynah,

  மிக்க மகிழ்ச்சி! நீண்ட இடைவெளிக்குப் பிறகான உங்கள் வருகைக்கு என் நன்றிகள். மகளுக்கு என் அன்பைச் சொல்லுங்கள்:)!

  ReplyDelete
 88. உலகம் அழகானது தான் ராமலக்ஷ்மி.
  அருமையான கதை.

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 89. @ கோமதி அரசு,

  மிக்க நன்றி கோமதிம்மா:)!

  ReplyDelete
 90. அருமையான கதை ராமலஷ்மி மேம் கிரேட்!!!

  ReplyDelete
 91. @ சக்தி,

  மிக்க நன்றி :)!

  ReplyDelete
 92. மிக அருமை ராம்லெக்ஷ்மி,.. இன்றுதான் நேரம் கிடைத்தது..

  ReplyDelete
 93. @ தேனம்மை லெக்ஷ்மணன்,

  நன்றிகள் தேனம்மை:)!

  ReplyDelete
 94. sila kadaigal padithaleh puriyum. pala kadaikal padika padika thaan puriyum. idhu muthal ragem. sindhanai sedhukiya uole. parutugal. Indraiya pozhudhu inimayana thuvakkam. vazhthukal.endru endrum...'Angarai Anand' 20.3.2016

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin