திங்கள், 21 ஜூன், 2010

சீற்றம்


ஆறுவது சினம்
ரெளத்திரம் பழகு

முரண்களாய்த் தோன்றும் இவற்றின்
தேவைகள் சந்திக்கும்
கூர்வாளின் முனைபோன்ற புள்ளியில்
அடங்கிய ரகசியமாய்
சீற்றத்தின் சூத்திரம்

சரியான நபரிடத்தில்
சரியான காரணத்துக்கு
சரியான நேரத்தில்
சரியான கோணத்தில்
சரியான அளவிலும்
வெளிப்படுத்தவேண்டிய ஓர் உணர்வாய்..

புரிந்தால்
வாழ்வோடு வசப்படும் வானமும்.
***


படம்: இணையத்திலிருந்து..

7 ஜூன் 2010 யூத்ஃபுல் விகடனில் வெளிவந்த கவிதை.

75 கருத்துகள்:

 1. ஹை நாந்தான் பஸ்ட் அப்படின்னு நினைக்கிறேன்.

  சீற்றம் சூப்பர்..

  விகடனுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. சீற்றத்தின் சூத்திரம் அருமை ராமலக்‌ஷ்மி.. கூர்வாளின் முனையில் ரகசியமாய் இருப்பது ..ஹ்ம்.. எல்லாருக்கும் வசப்படட்டும் வானம்.

  பதிலளிநீக்கு
 3. எல்லாருக்கும் வசப்படட்டும் தேவையான பொழுதினில் சீற்றமும் கொஞ்சமாய்...! :)

  பதிலளிநீக்கு
 4. முரண்பட்ட கருத்துக்கு கவிதை விளக்கம்.... மிக அருமைங்க.
  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 5. புரிந்தால்
  வாழ்வோடு வசப்படும் வானமும்.//

  முற்றிலும் உண்மையே.

  பதிலளிநீக்கு
 6. சினம்...
  ரௌத்திரம்...
  இரண்டும் வேறல்லவா?

  பதிலளிநீக்கு
 7. //கூர்வாளின் முனைபோன்ற புள்ளியில்//

  இருவேறு உணர்வுகள் சந்திக்குமிடம்.. ரசித்தேன் உவமையை.

  பதிலளிநீக்கு
 8. வாழ்த்துக்கள்.
  கத்தி முனையில் சூத்திரம் அருமை

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
  படமும், கவிதை விளக்கமும் மிக நன்று
  !

  பதிலளிநீக்கு
 10. நல்ல விளக்கம், அக்கா! கவிதை யூத்புல் விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 11. வாழ்த்துக்கள் அக்கா..

  //புரிந்தால்
  வாழ்வோடு வசப்படும் வானமும்.//

  அருமையான வார்த்தைகள்..

  பதிலளிநீக்கு
 12. சரியான நபரிடத்தில்
  சரியான காரணத்துக்கு
  சரியான நேரத்தில்
  சரியான கோணத்தில்
  சரியான அளவிலும்
  வெளிப்படுத்தவேண்டிய ஓர் உணர்வாய்..
  //

  கண்டிப்பாக இதை உணர்ந்தவர்களுக்கு வானம் வசப்படும்...

  வாழ்த்துகள் மேடம்...

  பதிலளிநீக்கு
 13. //முரண்களாய்த் தோன்றும் இவற்றின்
  தேவைகள் சந்திக்கும்
  கூர்வாளின் முனைபோன்ற புள்ளியில்
  அடங்கிய ரகசியமாய்
  சீற்றத்தின் சூத்திரம்//

  அழகான சீற்றம்....

  பதிலளிநீக்கு
 14. சரியான விளக்கம்
  சரியான தகவல்

  சகாதேவன்

  பதிலளிநீக்கு
 15. ஆமாம், கோவத்தை இடம் பொருள் பார்த்து அழகா பயன் படுத்தினா தான் நல்லது. அது எப்படி பெரிய விஷயத்தை கவிதையிலே சின்னதா சொல்ல முடியுது? நல்லா இருக்கு கவிதை!

  பதிலளிநீக்கு
 16. சீற்றம் கவிதை நல்லா இருக்கு ராமலக்ஷ்மி.


  சரியாக சொன்னீர்கள்.சரியாக வெளிப்படுத்த வேண்டிய உணர்வு தான் கோபம்.

  பதிலளிநீக்கு
 17. சின்ன சின்ன வரிகளில் பெரிய விஷயங்களை அழகாக சொல்லியிருக்கிறிர்கள், ராமலக்ஷ்மி.
  சிறப்பான கவிதை.

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் மேடம்!

  சீற்றம்- அந்த ரகசியத்தை எல்லாரும் தெரிஞ்சுகிட்டா எத்தனையோ பிரச்சனகள சமாளிச்சுடலாம். வாழ்த்துக்கள் மேடம்.

  பதிலளிநீக்கு
 19. //சரியான நபரிடத்தில்
  சரியான காரணத்துக்கு
  சரியான நேரத்தில்
  சரியான கோணத்தில்
  சரியான அளவிலும்
  வெளிப்படுத்தவேண்டிய ஓர் உணர்வாய்..
  //

  சரியான வரிகள்:)

  பதிலளிநீக்கு
 20. அன்புடன் மலிக்கா said...

  // ஹை நாந்தான் பஸ்ட் அப்படின்னு நினைக்கிறேன்.

  சீற்றம் சூப்பர்..

  விகடனுக்கு வாழ்த்துக்கள்//

  நீங்கதான் ஃபஸ்ட்:)! நன்றி மலிக்கா.

  பதிலளிநீக்கு
 21. முத்துலெட்சுமி/muthuletchumi said...

  //சீற்றத்தின் சூத்திரம் அருமை ராமலக்‌ஷ்மி.. கூர்வாளின் முனையில் ரகசியமாய் இருப்பது ..ஹ்ம்.. எல்லாருக்கும் வசப்படட்டும் வானம்.//

  அப்படியே ஆகட்டும் முத்துலெட்சுமி:)! நன்றி.

  பதிலளிநீக்கு
 22. ஆயில்யன் said...

  // எல்லாருக்கும் வசப்படட்டும் தேவையான பொழுதினில் சீற்றமும் கொஞ்சமாய்...! :)//

  கொஞ்சமாய்தான் என்றில்லை ஆயில்யன். ‘சரியான’ அளவில்:)!

  பதிலளிநீக்கு
 23. சி. கருணாகரசு said...

  ***/முரண்பட்ட கருத்துக்கு கவிதை விளக்கம்.... மிக அருமைங்க.
  பாராட்டுக்கள்./

  கதிர் இந்தப் பதிலை வாசிப்பார். முரணாய் ‘தோன்றும்’ கருத்துக்கள்:)!

  ***/புரிந்தால்
  வாழ்வோடு வசப்படும் வானமும்.//

  முற்றிலும் உண்மையே./***

  வசப் படுத்துவோம் வானத்தை. நன்றி கருணாகரசு.

  பதிலளிநீக்கு
 24. கமலேஷ் said...

  //நல்லா இருக்கு தோழி...//

  நன்றி கமலேஷ்.

  பதிலளிநீக்கு
 25. //சரியான நபரிடத்தில்
  சரியான காரணத்துக்கு
  சரியான நேரத்தில்
  சரியான கோணத்தில்
  சரியான அளவிலும்
  வெளிப்படுத்தவேண்டிய ஓர் உணர்வாய்...//

  இது புரியாமல்தான் ஒவ்வொரு மனிதனும் நல்ல வாய்ப்புகளை இழந்து, எதிரிகளை சம்பாதித்து, அன்புள்ளங்களின் ஆதரவு அகன்று ....இப்படி எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம்.

  பதிலளிநீக்கு
 26. ஈரோடு கதிர் said...

  // சினம்...
  ரௌத்திரம்...
  இரண்டும் வேறல்லவா?//

  நிச்சயம் வேறேதான்.

  நன்றாகப் பாருங்கள் கதிர். முரண்களாய் ‘தோன்றும்’ இவற்றின்(இக்கருத்துக்களின்)- எனக் குறிப்பிட்டேன் அதற்காகவே.

  நீங்கள் சொல்கிற மாதிரி, வேறான இரு நேர்கோடுகள் போலதான் கூர்வாளின் கைப்பிடியிலிருந்து தொடங்கவும் செய்கின்றன. ஆனால் கோபம் எனும் உணர்வாகவே பொதுவாகப் பார்க்கப்படும் இவற்றின் தேவையைப் பற்றிய புரிதல் பெரும்பாலும் இருப்பதில்லை. எதுவரை பொறுமை காக்க வேண்டும், எப்போது பொங்கி எழ வேண்டும் என்கிற புள்ளியில்தான் எல்லாமே அடக்கம் என சொல்ல வந்தேன். கவனிக்க, சொல்ல வந்தேன்:)! உங்கள் கருத்து வேறாயினும் வரவேற்கிறேன்.

  இந்த தலைப்பும் வெறுமனே படமும் மட்டும் பார்க்கையில் இப்போது இப்படியும் தோன்றுகிறது. 'சரியான' முறையில் கத்தியை சுழற்றத் தெரியாவிட்டால் அது நம்மையே பதம் பார்த்து விடும். சீற்றமும் அப்படியே.

  ஆங், மறந்து விட்டேனே! ‘சரியான’ நபரைத்தான் தேர்ந்தெடுத்துள்ளார்கள் செம்மொழி மாநாட்டில் உரையாற்ற:)!

  பதிலளிநீக்கு
 27. அமைதிச்சாரல் said...

  ***/ //கூர்வாளின் முனைபோன்ற புள்ளியில்//

  இருவேறு உணர்வுகள் சந்திக்குமிடம்.. ரசித்தேன் உவமையை./***

  ஆம் அமைதிச்சாரல். இருவேறு உணர்வுகளேதான். நன்றி.

  பதிலளிநீக்கு
 28. goma said...

  // வாழ்த்துக்கள்.
  கத்தி முனையில் சூத்திரம் அருமை//

  நன்றிகள் கோமா.

  பதிலளிநீக்கு
 29. James Vasanth said...

  // வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
  படமும், கவிதை விளக்கமும் மிக நன்று!//

  நன்றி ஜேம்ஸ், கவிதையோடு படத் தேர்வையும் ரசித்ததற்கு:)!

  பதிலளிநீக்கு
 30. Chitra said...

  //நல்ல விளக்கம், அக்கா! கவிதை யூத்புல் விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள்!//

  நன்றி சித்ரா. உங்கள் கண்ணாடி ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் புன்னகைக்க வைக்கிறது:)!

  பதிலளிநீக்கு
 31. அப்பாவி தங்கமணி said...

  //அழகான சிந்தனை கவிதை... வாழ்த்துக்கள்//

  நன்றி புவனா.

  பதிலளிநீக்கு
 32. சுசி said...

  ***/ வாழ்த்துக்கள் அக்கா..

  //புரிந்தால்
  வாழ்வோடு வசப்படும் வானமும்.//

  அருமையான வார்த்தைகள்../***

  நன்றி சுசி.

  பதிலளிநீக்கு
 33. ப்ரியமுடன்...வசந்த் said...

  ***/ சரியான நபரிடத்தில்
  சரியான காரணத்துக்கு
  சரியான நேரத்தில்
  சரியான கோணத்தில்
  சரியான அளவிலும்
  வெளிப்படுத்தவேண்டிய ஓர் உணர்வாய்..
  //

  கண்டிப்பாக இதை உணர்ந்தவர்களுக்கு வானம் வசப்படும்...

  வாழ்த்துகள் மேடம்.../***


  மிக்க நன்றி வசந்த்.

  பதிலளிநீக்கு
 34. Sangkavi said...

  ***/ //முரண்களாய்த் தோன்றும் இவற்றின்
  தேவைகள் சந்திக்கும்
  கூர்வாளின் முனைபோன்ற புள்ளியில்
  அடங்கிய ரகசியமாய்
  சீற்றத்தின் சூத்திரம்//

  அழகான சீற்றம்..../***

  நன்றி சங்கவி.

  பதிலளிநீக்கு
 35. சகாதேவன் said...

  // சரியான விளக்கம்
  சரியான தகவல்//

  கவிதையின் பாணியிலேயே..

  ரசித்தேன்:)!

  நன்றிகள்!

  பதிலளிநீக்கு
 36. அபி அப்பா said...

  // ஆமாம், கோவத்தை இடம் பொருள் பார்த்து அழகா பயன் படுத்தினா தான் நல்லது. அது எப்படி பெரிய விஷயத்தை கவிதையிலே சின்னதா சொல்ல முடியுது? நல்லா இருக்கு கவிதை!//

  நன்றி அபி அப்பா.

  பதிலளிநீக்கு
 37. கோமதி அரசு said...

  // சீற்றம் கவிதை நல்லா இருக்கு ராமலக்ஷ்மி.


  சரியாக சொன்னீர்கள்.சரியாக வெளிப்படுத்த வேண்டிய உணர்வு தான் கோபம்.//

  நன்றி கோமதிம்மா.

  பதிலளிநீக்கு
 38. சசிகுமார் said...

  // கவிதை அருமை அக்கா//

  நன்றி சசிகுமார்.

  பதிலளிநீக்கு
 39. அம்பிகா said...

  // சின்ன சின்ன வரிகளில் பெரிய விஷயங்களை அழகாக சொல்லியிருக்கிறிர்கள், ராமலக்ஷ்மி.
  சிறப்பான கவிதை.//

  மிக்க நன்றி அம்பிகா.

  பதிலளிநீக்கு
 40. VELU.G said...

  //அருமையான வெளிப்பாடு//

  நன்றிகள் வேலு.

  பதிலளிநீக்கு
 41. sindhusubash said...

  // வணக்கம் மேடம்!//

  நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்துள்ளீர்கள். நலமா:)?

  //சீற்றம்- அந்த ரகசியத்தை எல்லாரும் தெரிஞ்சுகிட்டா எத்தனையோ பிரச்சனகள சமாளிச்சுடலாம். வாழ்த்துக்கள் மேடம்.//

  உண்மைதான். நன்றி சிந்து.

  பதிலளிநீக்கு
 42. D.R.Ashok said...

  //நல்லாயிருக்குங்க :)//

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் அஷோக்.

  பதிலளிநீக்கு
 43. அஹமது இர்ஷாத் said...

  // அழகான கவிதை... வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி இர்ஷாத்.

  பதிலளிநீக்கு
 44. Deepa said...

  // நல்லா இருக்கு ராமலக்ஷ்மி!//

  மிக்க நன்றி தீபா.

  பதிலளிநீக்கு
 45. திருவாரூரிலிருந்து சரவணன் said...

  ***/ //சரியான நபரிடத்தில்
  சரியான காரணத்துக்கு
  சரியான நேரத்தில்
  சரியான கோணத்தில்
  சரியான அளவிலும்
  வெளிப்படுத்தவேண்டிய ஓர் உணர்வாய்...//

  இது புரியாமல்தான் ஒவ்வொரு மனிதனும் நல்ல வாய்ப்புகளை இழந்து, எதிரிகளை சம்பாதித்து, அன்புள்ளங்களின் ஆதரவு அகன்று ....இப்படி எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம்./***

  சரியாய் சொன்னீர்கள் சரவணன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 46. மின்மடலில்..

  //Hi Ramalakshmi,

  Congrats!

  Your story titled 'சீற்றம் - யூத்ஃபுல் விகடன் கவிதை' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 22nd June 2010 01:50:04 AM GMT

  Here is the link to the story: http://www.tamilish.com/story/282994

  Thank you for using Tamilish.com

  Regards,
  -Tamilish Team//

  தமிழிஷில் வாக்களித்த 24 பேருக்கும், தமிழ்மணத்தில் வாக்களித்த 15 பேருக்கும் என் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 47. //சரியான நபரிடத்தில்
  சரியான காரணத்துக்கு
  சரியான நேரத்தில்
  சரியான கோணத்தில்
  சரியான அளவிலும்
  வெளிப்படுத்தவேண்டிய ஓர் உணர்வாய்..
  //

  சரியா சொன்னீங்க அக்கா

  பதிலளிநீக்கு
 48. ***/அத்திரி said...
  //சரியான நபரிடத்தில்
  சரியான காரணத்துக்கு
  சரியான நேரத்தில்
  சரியான கோணத்தில்
  சரியான அளவிலும்
  வெளிப்படுத்தவேண்டிய ஓர் உணர்வாய்..
  //

  சரியா சொன்னீங்க அக்கா/***

  நன்றி அத்திரி.

  பதிலளிநீக்கு
 49. பழகாத ரௌத்திரம்
  அடங்காத சினம் இரண்டுமெ அர்த்தமற்றுப் போகும்.
  செல்லுமிடத்தில் செல்லவேண்டிய ரௌத்திரம் பயன் கொடுக்கும்.
  கவிதைவரிகள் மிகவும் அருன்மை.

  பதிலளிநீக்கு
 50. ***சரியான நபரிடத்தில்
  சரியான காரணத்துக்கு
  சரியான நேரத்தில்
  சரியான கோணத்தில்
  சரியான அளவிலும்
  வெளிப்படுத்தவேண்டிய ஓர் உணர்வாய்..

  புரிந்தால்***

  இதெல்லாம் புரிந்த ஒரு நபர்கூட அந்த சரியான நேரத்தில், சரியான அளவு, சரியான முறையில் "சீற்றத்தை"க் காட்டும்போதுகூட அதை சரி என்று உலகம் ஏற்றுக்கொள்ளுமா என்பது தெரிலைங்க, ராமலக்ஷ்மி :)

  பதிலளிநீக்கு
 51. வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி.. மிக அருமை.. ரௌத்ரம் கூட..

  பதிலளிநீக்கு
 52. /*ஆறுவது சினம்
  ரெளத்திரம் பழகு

  முரண்களாய்த் தோன்றும் ...*/

  அருமையாகக் கருத்தை முன்வைத்துள்ளீர்கள்

  பதிலளிநீக்கு
 53. //புரிந்தால்
  வாழ்வோடு வசப்படும் வானமும்//
   
  வாழ்க்கையே புரிதலில்தான். .அழகு :-)

  பதிலளிநீக்கு
 54. //சீற்றத்தின் சூத்திரம்//

  எப்படித்தான் பிடிப்பீங்களோ வார்த்தைகளை!!

  அருமை!

  பதிலளிநீக்கு
 55. வல்லிசிம்ஹன் said...
  //பழகாத ரௌத்திரம்
  அடங்காத சினம் இரண்டுமெ அர்த்தமற்றுப் போகும்.//

  அழகாய்ச் சொன்னீங்க.

  //செல்லுமிடத்தில் செல்லவேண்டிய ரௌத்திரம் பயன் கொடுக்கும்.
  கவிதைவரிகள் மிகவும் அருன்மை.//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வல்லிம்மா.

  பதிலளிநீக்கு
 56. வழிப்போக்கன் said...
  //கவிதை அருமை//

  நன்றி வழிப்போக்கன்.

  பதிலளிநீக்கு
 57. வருண் said...
  //***சரியான நபரிடத்தில்
  சரியான காரணத்துக்கு
  சரியான நேரத்தில்
  சரியான கோணத்தில்
  சரியான அளவிலும்
  வெளிப்படுத்தவேண்டிய ஓர் உணர்வாய்..

  புரிந்தால்***

  இதெல்லாம் புரிந்த ஒரு நபர்கூட அந்த சரியான நேரத்தில், சரியான அளவு, சரியான முறையில் "சீற்றத்தை"க் காட்டும்போதுகூட அதை சரி என்று உலகம் ஏற்றுக்கொள்ளுமா என்பது தெரிலைங்க, ராமலக்ஷ்மி :)//

  சரியான கேள்வி:)))!

  புரிந்தவருக்கும் சரியான புள்ளியில் அந்த ‘சரியான’வற்றைப் பிடிப்பது ஒரு சவால்தான் வாழ்க்கையில்.

  உலகம்? என்றைக்கும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டேதானே உள்ளது? நம் அளவில் புரிதலுடனும் கவனத்துடன் இருப்போமே.

  நன்றி வருண்.

  பதிலளிநீக்கு
 58. thenammailakshmanan said...
  //வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி.. மிக அருமை.. ரௌத்ரம் கூட..//

  நன்றி தேனம்மை:)!

  பதிலளிநீக்கு
 59. அமுதா said...
  // /*ஆறுவது சினம்
  ரெளத்திரம் பழகு

  முரண்களாய்த் தோன்றும் ...*/

  அருமையாகக் கருத்தை முன்வைத்துள்ளீர்கள்//

  நன்றி அமுதா.

  பதிலளிநீக்கு
 60. "உழவன்" "Uzhavan" said...
  ***/ //புரிந்தால்
  வாழ்வோடு வசப்படும் வானமும்//

  வாழ்க்கையே புரிதலில்தான். .அழகு :-)/***

  அழகாய்ச் சொன்னீர்கள்:)! நன்றி உழவன்.

  பதிலளிநீக்கு
 61. ஹுஸைனம்மா said...
  ***/ //சீற்றத்தின் சூத்திரம்//

  எப்படித்தான் பிடிப்பீங்களோ வார்த்தைகளை!!

  அருமை!/***

  நன்றி ஹுஸைனம்மா:)!

  பதிலளிநீக்கு
 62. விருது பெற்றுகொள்ளுங்கள்

  விஜய்

  பதிலளிநீக்கு
 63. கோபமும் தேவையான ஒன்றுதான்....கவிதை நன்று ராமலட்சுமி...

  பதிலளிநீக்கு
 64. தமிழ் வெங்கட் said...
  //கூர்மையான கவிதை..//

  நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
 65. விஜய் said...
  //விருது பெற்றுகொள்ளுங்கள்//

  பசுந்தமிழ் விருதுக்கு நன்றிகள் விஜய். முகப்பில் அணிந்தாயிற்று பாருங்கள்:)!

  பதிலளிநீக்கு
 66. பாச மலர் / Paasa Malar said...
  //கோபமும் தேவையான ஒன்றுதான்....கவிதை நன்று ராமலட்சுமி...//

  நன்றி பாசமலர்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin