சனி, 26 ஜனவரி, 2013

குடியரசு தின மலர்க் கண்காட்சி 2013 - பெங்களூர் லால்பாக் - படங்கள்

#1


18 ஜனவரி 2013, அன்று கர்நாடக முதலமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டு பெங்களூர் லால்பாகில் நடந்து கொண்டிருக்கிறது மலர் கண்காட்சி. இந்த வருடத்தின் பிரதான அம்சமாக 35 அடி உயரமும், 20X20 அடி பரப்பளவும் கொண்ட ஈஃபில் டவர் உருவாகியிருக்கிறது இரண்டரை இலட்சம் ரோஜாக்களாலும் பத்தாயிரம் ஆர்க்கிட் மலர்களாலும். அதன் முன்னே 6 அடி உயரத்தில் எழுந்தருளி நிற்கிறார் விவேகானந்தர். அவரது பொன்மொழிகளும் சிலையைச் சுற்றி பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. விவேகானந்தரின் 150-வது பிறந்த தினம் அனுசரிக்கப்படுகிற ஆண்டு இது. இந்த இரண்டு மலர்க் கட்டுமானங்களுடன் அந்தூரியம் மலர்களால் ஆன உடையணிந்த பார்பி பொம்மையும் இடம் பெற்றிருக்கிறது. போகச் சுற்றி வரப் பல மலர் அலங்காரங்கள், போன்சாய் பார்க்கில் 500 செடிகள் என நீள்கிறது மக்களைக் கவரும் அம்சங்கள். .... 

'இத்தனை வருடங்களிலும் பெங்களூரில் எது மாறினாலும், திருவிழா போல் வருடம் இருமுறை நடைபெறும் மலர்கண்காட்சிகளும், அலைமோதும் கூட்டமும், ஆர்வத்துடன் காண வரும் மக்களின் உற்சாகமும் மட்டும் மாறவேயில்லை' என ஒருவர் பத்திரிகைப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். அது உண்மையும் கூட.” என சென்ற பதிவில்  கண்காட்சி குறித்த தகவல்களைப் பகிர்ந்திருந்தேன். சென்று வந்து, படங்கள் இருபத்து மூன்றைப் பகிர்ந்து கொள்கிறேன் குடியரசு தின வாழ்த்துகளுடன்.

#2


#3 முக்கிய அம்சங்களாய் பாரீஸின் ஈஃபில் கோபுரமும் விவேகானந்தரும்..


வியாழன், 24 ஜனவரி, 2013

தூறல்:11 - ஆட்டிசம்; பெங்களூர் மலர் கண்காட்சி, சித்திரச் சந்தை தகவல்கள்; குழந்தைத் தொழிலாளர் மீட்பு

கடந்த சில தினங்களாக எனது முந்தைய மலர்கண்காட்சிப் பதிவுகளையும், சென்ற வருடச் சித்திரச் சந்தை பதிவையும் தேடி யாரேனும் வந்தபடி இருப்பதைக் காட்டுகிறது ஸ்டாட்ஸ். மின்னஞ்சல் அனுப்பியும் நண்பர்கள் தகவல் கேட்கவே, செல்ல விரும்புகிறவர்களுக்குப் பயனாகும் என விவரங்களைப் பகிருகிறேன்.

செவ்வாய், 22 ஜனவரி, 2013

தோகை மயில்கள் - மைசூர் காரஞ்சி பூங்கா (3)

கைபுனையாச் சித்திரங்கள்
பாகம் 1 ; பாகம் 2 .

எனது 400-வது பதிவு. முத்துச்சரம் தொடர்ந்து  இயங்கக் காரணமாய், வாசித்தும் ஊக்கம் தந்தும் வருகிற அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பு கலந்த நன்றி!

#1
அழகிய மயிலே! அழகிய மயிலே
அஞ்சுகம் கொஞ்ச, அமுத கீதம்
கருங்குயி லிருந்து விருந்து செய்யக்,
கடிமலர் வண்டுகள் நெடிது பாடத்,
தென்றல் உலவச் சிலிர்க்கும் சோலையில்
அடியெடுத் தூன்றி அங்கம் புளகித்
தாடு கின்றாய் அழகிய மயிலே!

உனதுதோ கைபுனையாச் சித்திரம்
ஒளிசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம்!
- பாவேந்தர் பாரதிதாசனார்
இரண்டு வருடங்களுக்கு முன் ‘மயிலே மயிலே’ என, திருச்செந்தூர் மற்றும் பெங்களூர் பனர்கட்டா தேசியப்பூங்காவில் எடுத்த சில மயில் படங்களுடன் ‘எப்போதேனும் தோகை விரித்தாடும் மயில்களைப் படமாக்க வேண்டும்’ என்கிற எனது ஆசையையும் பகிர்ந்திருந்தேன்.  சிங்கப்பூர் ஜூராங் பூங்காவில் எப்படி ஆசை தீரக் கிளிகளை [ மூக்கும் முழியுமா.. கிளிகள் இத்தனை விதமா? ] விதம் விதமாய்ப் படமாக்கினேனோ, அதே போல இங்கு மயில்களைப் படமாக்க முடிந்தது. கிளிகளைப் போல் மயில்களில் பல விதம் கிடையாது என்றாலும் சில ரகங்கள் இருக்கவே செய்கின்றன. (14 படங்களுடன் ஒரு பகிர்வு..)

வெள்ளி, 18 ஜனவரி, 2013

பறவைப் பண்ணை - மைசூர் காரஞ்சி நேச்சர் பார்க் (2)

உள்ளக் களிப்பின் ஒளியின் கற்றை.. 

இருபது மீட்டர் உயரம், அறுபது மீட்டர் நீளம், நாற்பது மீட்டர் அகலம் கொண்ட பிரமாண்டமான கூண்டுடன், மக்கள் நுழைந்து பறவைகளை மிக அருகில் இரசிக்கும் வகையில் அமைந்திருக்கிறது மைசூர் காரஞ்சி ஏரி பறவைப் பண்ணை. இந்தியாவிலேயே மிகப் பெரிய “walk-through aviary” இதுதான். பல வகைப் பறவைகள் முப்பது-நாற்பது வரை இருந்தன. படமாக்கிய ஒருசில வகைகள் இங்கே:

#1  Silver Pheasant
நிமிர்ந்த நன்னடை .

#2 தமிழில் “வெள்ளி நிறக் கோழி” என அறியப்படுகிறது

இந்தப் படங்களை ஃப்ளிக்கரில் பகிர்ந்த போது கிழக்கு ஆசியப் பகுதியில் இவற்றின் இயற்கையான வாழ்விடத்துக்கே சென்று எடுத்தேனோ என நினைத்து விட்டார் நண்பர்  விஜயாலயன். இவர் நூற்றுக்கும் மேலான வகை ஆஸ்திரேலியப் பறவைகளை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் படமாக்கியிருக்கிறார். எடுத்த படங்களை Birdlife Austrlia (www.birdlife.org.au) உபயோகத்திற்கு வழங்கியும் விட்டார். ஒரு சில படங்கள் educational slides ஆகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பதிவிலிருக்கும் சில பறவைகளின் பெயர்களை அறியவும் உதவினார். இவரைப் போலவும், திரு. கல்பட்டு நடராஜன் அவர்களைப் போலவும் காட்டிலும் மேட்டிலும் தேடிச் சென்று பறவைகளை அவதானிக்க இயலாத சிலருக்காகதானே இது போன்ற பூங்காக்கள் இருக்கின்றன:)?

#3 கருப்பு அன்னம்

வியாழன், 17 ஜனவரி, 2013

இதுவும் கடந்து போகும் - பொங்கல் சிறப்புச் சிறுகதை - அதீதத்தில்...


சென்னை விமான நிலையத்திலிருந்து நேராகப் புதுவையை நோக்கி விரைந்து கொண்டிருந்தது டாக்ஸி.

‘வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டுக் கிளம்பலாமேக்கா’ என்ற தங்கையிடம் . “அதுக்கெல்லாம் நேரமில்ல. இன்னைக்கு எனக்கு என் வீட்டுல இருந்தாகணும், தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ” படபடப்பாய்ப் பர்வதம் பேசி விட ஃபோனை வாங்கி “அதான் பொங்கல் வரைக்கும் இருப்பமே சித்தி. வர்றோம் பிறகு” எனச் செந்தில் சமாதானம் செய்ய வேண்டியதாயிற்று.

ரு வருடம் முன் இதே நாளின் இரவில்தான் தாண்டவமாடிக் கொண்டிருந்தது ‘தானே’ புயல்.

காற்றின் சீற்றம் கட்டுக்கடங்காததாக, இடிமுழக்கங்கள் இதயத்துடிப்பை நிறுத்தி நிறுத்தி இயங்க வைப்பதாக இருக்க, பொழிந்த பெருமழை மொத்த வீட்டையும் அதிர வைத்துக் கொண்டிருந்தது. நடுக்கூடத்தில் நடுக்கத்துடன் அமர்ந்திருந்தாள் பர்வதம்.  நல்லவேளையாக அடித்துப் பிடித்து அந்தக் கிறுஸ்துமஸ் லீவுக்கு வந்தோம் என நினைத்தான் செந்தில். இல்லையென்றால் இயற்கையின் இந்தக் கோர தாண்டவத்தைத் தனியொருத்தியாக அல்லவா அம்மா எதிர் கொண்டிருந்திருப்பாள் எனும் சிந்தனையே அதிகக் கிலியாக இருந்தது.

செவ்வாய், 15 ஜனவரி, 2013

வன தெய்வங்களின் ஆசிர்வாதம் - மைசூர் காரஞ்சி ஏரி இயற்கை பூங்கா (1)

# 1

இரவு பனியில் குளித்துக் காலைச் சூரியனில் தமை உலர்த்திக் கொண்டிருந்த வனதெய்வங்களுக்குக் காட்டு மலர்களைச் சூட்டிச் சென்றிருந்தனர் பணியாளர்கள். இதயத்தை விட்டு அகலா எளிமையான அழகு. யாரை ஆசிர்வதித்து எங்கே வீற்றிருக்கின்றன இவை?

# 2
காவல் தெய்வம்

ஐம்பத்தைந்து ஹெக்டேர் தண்ணீர் பரப்பளவைக் கொண்ட காரஞ்சி ஏரியின் கரையோரமாய் இன்னுமொரு முப்பத்தைந்து ஹெக்டேர் பரப்பளவில் விரிந்து கிடக்கிற இயற்கைப் பூங்காவில் அதன் செழுமைக்குக் காவலாக..

# 3

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!

பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!


முற்றமெங்கும் விரிந்திருந்த சுண்ணாம்புக் கோலங்கள், காவி பூசப்பட்ட மண்கட்டி அடுப்புகள், அக்னி வளர்க்க குவிக்கப்பட்டிருந்த பனையோலைகள், பொட்டும் மஞ்சள் குலையுமாக மினுங்கிய வெண்கலப் பானைகள், சூரியனை வரவேற்க ஏற்றி வைத்த ஐந்துமுகக் குத்து குளக்கு, பக்கத்தில் நெல்குவித்த நிறை நாழி, படைத்திருந்த காய் கனிகள், பனங்கிழங்கு கரும்புக் கட்டுகள்..!

வியாழன், 10 ஜனவரி, 2013

நிலவு பார்த்தல் - மட்சுவோ பாஷோ ஜப்பானிய துளிப்பாக்கள் (ஏழு)


1.
உழவனின் குழந்தை
அரிசி குத்துவதை அவ்வப்போது நிறுத்தி
ஓய்வு எடுக்கிறது நிலவு பார்ப்பதில்.

2.
குதிரை மேல் உறக்கம்
தொடரும் கனவில் தூரத்து நிலவு
மணக்கிறது வறுபடும் தேயிலை.

செவ்வாய், 8 ஜனவரி, 2013

பெங்களூர் ‘வாகை’ முதல் சந்திப்பு - வா. மணிகண்டனின் ‘என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி’ கவிதைத் தொகுப்பு வெளியீடு



கடந்த ஞாயிறு மாலை பெங்களூர் கப்பன் பார்க்கில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட வாகை அமைப்பின் முதல் சந்திப்பு நடந்து முடிந்தது. இணையத்தில் வலைப்பூ மூலமாக இயங்க ஆரம்பித்த கடந்த நான்கரை வருடங்களில் சந்திப்புகள் சில நடந்திருக்கின்றன, இதே கப்பன் பூங்காவில். விரல் விட்டும் எண்ணும் அளவில், வெளியூர்களிலிருந்து நண்பர்கள் வந்தபோது நிகழ்ந்தவை. (இன்னொரு சமயம் முந்தைய சந்திப்புகள் குறித்தும் பகிர்ந்திடுகிறேன்.) புகைப்பட ஆர்வலர்கள் சந்திப்பாக ஒருமுறை. இவை எல்லாமே பதிவுகள், மின்னஞ்சல், அலைபேசிகளின் வாயிலாக முன்னதாக அறிமுகமானவர்களின் சந்திப்பாக இருந்திருக்கின்றன. மாறாக முற்றிலும் அறிமுகமில்லாதவர்கள் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது ‘வாகை’.

சனி, 5 ஜனவரி, 2013

சூரியனைக் கண்டாலே உற்சாகம் - குங்குமம் தோழியில்.. சுபா ஸ்ரீகுமாருடன் ஒரு கலந்துரையாடல்


 
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ரசனை. அது அவரவர் செயல்களிலும், ஈடுபடும் கலைகளிலும் பிரதிபலிக்கிறது. “புகைப்படக் கலையில் பல பிரிவுகள் இருந்தாலும், என்னை ஈர்ப்பது அழகுணர்ச்சியை வெளிப்படுத்தும் படங்களே. நான் எடுக்கும் படங்களில் ஒன்று கூட பார்ப்பவர் மனதை வாடச் செய்யவோ, சோக உணர்ச்சியை எழும்பும்படி இருக்கவோ கூடாது என்பதில் தனிக்கவனம் செலுத்துவேன்” என்கிற சுபா ஸ்ரீகுமாரின் உள் அரங்கு ஒளிப்படங்கள் எனக்கு மிகப் பிடித்தமானவை. மகிழ்ந்து மகிழ்விக்கும் கலைஞர் இவரின் ஒளிப்பட அனுபவங்களைக் கேட்கலாம் வாருங்கள், அவர் எடுத்த படங்களையும் ரசித்தபடி...

புதன், 2 ஜனவரி, 2013

ஒரு குழந்தையின் கேள்விக்குப் பதில் - சாமுவேல் டெய்லர் கொலரிட்ஜ் (2)


பறவைகள் என்ன சொல்கின்றன, கேட்டிருக்கிறாயா?
குருவி, புறா, இசைக்கும், பாடும் பறவைகள் சொல்கின்றன:
“நான் நேசிக்கிறேன், நான் நேசிக்கிறேன்”

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin