Wednesday, June 12, 2019

குயில் பாட்டு

படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 52
பறவை பார்ப்போம் - பாகம்: 40


#1
‘குயிலிசை போதுமே, அட குயில் முகம் தேவையா?’

#
‘பூங்குயில் யாரது..?’

#3
 ‘கொஞ்சம் பாருங்க 
பெண் குயில் நானுங்க.’

Thursday, June 6, 2019

மாநில மைய நூலகம், தொங்கு பாலம், அசோகா தூண் - பெங்களூர்.. சில Landmarks.. (3)

மாநில மைய நூலகம்:
#1

திவுலகம் நுழைந்த 2008_ஆம் ஆண்டிலிருந்து ஏழெட்டு முறைகளேனும் பதிவர், எழுத்தாளர் மற்றும் புகைப்படக் கலைஞர்களுடனான சந்திப்புகள் கப்பன் பூங்காவில் இந்த நூலகத்தைச் சுற்றி இருக்கும் சிறு தோட்டங்கள், மரத்தடிகளில் நடந்திருக்கின்றன :). அப்படிச் சென்ற பல சமயங்களில் எடுத்த படங்களுடன், தகவல்கள்:

மாநில மைய நூலகம் இயங்கி வரும் சேஷாத்ரி ஐயர் நினைவுக் கூடம் அதனது தனித்துவம் வாய்ந்த கட்டுமானத்திற்காக புகழ் பெற்றிருப்பதோடு, பெங்களூரில் பார்க்க வேண்டிய இடங்களிலும் முன்னணியில் இருக்கிறது. 

#2
பின் பக்கத்தின் அழகிய தோற்றம்

Sunday, June 2, 2019

அடுத்த கட்டம்

அணிற்பிள்ளையின் படங்கள்: 
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 51

#1
'நான் திண்டாடுவதை நீங்கள் காண நேரலாம்.
 ஆனால் ஒரு போதும் நான் வீழ்வதைக் காணும் வாய்ப்பு 
உங்களுக்குக் கிட்டாது.'

#2
"வாழ்க்கையைக் கண்டு அஞ்சாதீர்கள். 
வாழ்க்கை வாழத் தகுந்தது என்பதை நம்புங்கள்,
 அந்த நம்பிக்கை அதை உண்மையாக்கிடும்"
_ Henry James

#3

Thursday, May 30, 2019

இந்திய சாம்பல் இருவாச்சி ( Indian Grey Hornbill ) - பறவை பார்ப்போம்: பாகம் (39)

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 50
#1
இந்திய சாம்பல் இருவாச்சி
(இளம் பறவை)

ங்கள் குடியிருப்பில் இருக்கும் வீட்டுத் தோட்டங்களுக்கு பலவிதமான பறவைகள் வந்தபடி இருப்பதையும், அவற்றைப் படமாக்கி நான் பகிர்ந்து வருவதையும் அறிவீர்கள். சமீபத்திய வரவு ’இந்திய சாம்பல் இருவாச்சி'.  குடியிருப்பின் கடைசி வீட்டையொட்டிய மரத்தில் கூடமைத்திருந்த ஒரு ஜோடி, மற்றும் அதன் இளம் பறவைகள் அவ்வப்போது ஒவ்வொருவர் தோட்டத்திற்கு வந்தமர்ந்து தரிசனம் தந்து போகலாயின. ‘இன்று நான் பார்த்தேன்.. இதோ இன்று எங்கள் தோட்டத்தில்..’ என அவரவர் படங்களை வாட்ஸ் அப் குழுமத்தில் பகிர்ந்து வந்தனர். 

#2
தாய்ப் பறவை

வளர்ந்த பறவைகள் மிகுந்த ஜாக்கிரதை உணர்வு கொண்டவை.  பலமுறை அதிகாலை வேளையில் முருங்கை மரத்தில் அமர்ந்து பருந்தினைப் போலப் பெரும் குரலெழுப்பிப் பார்த்திருக்கிறேன் என்றாலும் அறைக்குள் நின்று படம் எடுக்க முயன்றிடும் என்னை எப்படியோ கவனித்து உடனே பறந்து போய் விடும். ஆனால் இளம் பறவை கண்டு கொள்ளாமல் நேற்று படம் எடுக்க விட்டது.  அதன் தாய், தந்தையைப் படமாக்கும் வேளைக்காகக் காத்திருந்தேன். இன்று அதிகாலை, தோட்டத்துச் சுற்றுச் சுவருக்கு அந்தப் பக்கம் சற்று தொலைவில் இருக்கும் உயர்ந்த மரத்தில் ஒன்றாக அமர்ந்திருந்த அதன் பெற்றோரையும் இன்று படமாக்கி விட்டேன்:). வாட்ஸ் அப் குழுமத்திலும் பகிர்ந்து கொண்டாயிற்று:).

#3
ஜோடியாக பெண் பறவையும் ஆண் பறவையும்..


இப்போது உங்களுடன்.. இணையத்தில் சேகரித்துத் தமிழாக்கம் செய்த சுவாரஸ்யமான தகவல்களுடன்..

#4

Sunday, May 26, 2019

கிளிப் பேச்சு

முருங்கை மரத்துக் கிளிகள்:

#1
“எங்கிட்ட மோதாதே..”

ரு காலை நேரம். தோட்டத்து முருங்கை மரத்தின் மேல் கிளிகள் கீச் மூச் என ஒரே சத்தம். சத்தத்தைக் கேட்டு நாம் அவசரமாகக் கேமராவை எடுத்துக் கொண்டு போகும் முன்னரே சிலநேரங்களில் அவை பறந்து விடுவது உண்டு. சாப்பாட்டு நேரமாகையால் தவிர்க்க நினைத்தேன். ஆனால் விடாமல் பத்து நிமிடங்களாகியும் சத்தம் நிற்காததால் கேமராவுடன் சென்றால் பலனிருக்கும் எனத் தோன்றவே கேமராவுடன் முதல் மாடிக்கு விரைந்தேன்.

#2
“எதுவானாலும் பேசித் தீத்துக்கலாம்..”

Friday, May 17, 2019

ஆதியும் நீயே - 'வளரி' வைகாசி இதழில்..

கிலமெங்கும்
ஆதிப்பெண்கள்,
ஆங்காங்கே 
மலர்களைக் கொண்ட
முட்கிரீடங்கள் தரித்து.
மாறவில்லை எதுவும்.

Wednesday, May 15, 2019

அட்டர கச்சேரி, KGID, GPO - பெங்களூர்.. சில Landmarks.. (2)

கர்நாடக உயர் நீதி மன்றம்:

#1

ர்நாடகாவின் சட்ட சபை இயங்கி வரும் விதான செளதாவுக்கு நேர் எதிரே உள்ளது கர்நாடக உயர் நீதி மன்றம். ஒரு காலத்தில் மைசூர் உயர் நீதி மன்றம் என்ற பெயரில் இயங்கி வந்திருக்கிறது. இக் கட்டிடத்திற்கு ‘அட்டர கச்சேரி’ (பதினெட்டு அலுவலகங்கள்) என்ற பெயரும் உண்டு.  கற்களாலும் செங்கல்களாலும் கட்டப்பட்டு, முழுவதும் சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட இந்தக் கட்டிடம் இரண்டு தளங்களைக் கொண்டது. ராவ் பகதூர் ஆர்காட் நாராயணசாமி முதலியார் என்பவரின் மேற்பார்வையில் கிரேக்க மற்றும் ரோம கட்டிடக்கலைப் பாணியைப் பின்பற்றி 1868_ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ‘பழைய பொது அலுவலகங்கள்’ என அழைக்கப்பட்டது. 

#2


திப்பு சுல்தானின் கோடை அரண்மனையிலிருந்து இடமின்மையால் மைசூர் அரசாங்கம் 18 பொதுத்துறை அலுவலகங்களை இந்தக் கட்டிடத்திற்கு மாற்றிய போது ‘அட்டர கச்சேரி’ என்ற பெயர் வந்திருக்கிறது.

Wednesday, May 8, 2019

விதான செளதா.. விகாஸ செளதா.. - பெங்களூர்.. சில Landmarks.. (1)

விதான செளதா:
#1

ர்நாடக மாநிலத்தின் சட்டசபைக் கட்டிடமான விதான செளதா, இந்தியாவின் மிகப் பெரிய சட்டசபைக் கட்டிடமும் ஆகும். மைசூர் நியோ திராவிடப் பாணியையும், இந்தோ-சராசனிக் பாணியின் சில அம்சங்கங்களையும், திராவிடப் பாணியையும் பின்பற்றிக் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 1956_ல் கட்டி முடிக்கப்பட்ட விதான செளதா  தரையிலிருந்து மேலே நான்கு தளங்களையும், தரைக்குக் கீழே ஒரு தளத்தையும் கொண்டது.

2300 அடி x 1150 அடி நீள அகலம் கொண்டது.

#2


முகப்புத் தாழ்வாரத்திற்கு இட்டுச் செல்லும் 45 படிகளும் 200 அடி அகலம் கொண்டவை. கிழக்குப் பக்க தாழ்வாரம் 40 அடி உயரம் கொண்ட 12 கிரானைட் தூண்களைக் கொண்டவை.  அழகான கூரைச் சித்திரங்களும் உண்டு.

#3

Friday, May 3, 2019

அனந்தபுரம் ஏரிக் கோயில் - சைவ முதலையும்.. கடு சர்க்கரை யோகமும்.. - கேரளம் (5)

#1

கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் அனந்தபுரா கிராமத்தில் ஒரு ஏரியின் நடுவில் அமைந்திருக்கிறது “அனந்தபுரம் ஏரிக் கோவில்”.  கேரள மாநிலத்தில் ஏரிக்குள் அமைந்திருப்பது இந்தக் கோவில் மட்டுமேயாகும். கும்பாலா எனும் இடத்திலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ளது. நாங்கள் பேகலில் இருந்து மங்களூர் திரும்பும் வழியில் இந்தக் கோவிலுக்குச் சென்றிருந்தோம்.

நண்பகல் ஒரு மணி ஆகிவிட்டபடியால் கோவிலின் மூலஸ்தானம் மூடி விட்டிருந்தார்கள். அமைதியான சூழலில் அமைந்த கோவில். ஆலயம் எழும்பி நிற்கும் ஏரியானது சுமார் 302 சதுர அடி அளவிலானது.

#2

#3
 #4

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் குடிகொண்டுள்ள அனந்த பத்மநாபசுவாமியின் மூலம் இதுவே என்கிறார்கள்.  புராணங்களின் கூற்றுப்படி பரந்தாமன் ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி அசலாக முதன்முதலில் குடியிருந்த இடம் இது என நம்பப் படுகிறது. இதை அங்கிருந்த பெரியவர் ஒருவரும் கூறினார்.

Wednesday, May 1, 2019

மே தினம் - இவர்கள் இல்லையேல்..

ழைப்பென்பது மனிதனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை அல்ல. கனவு மெய்ப்படவும்,  வாழ்வுக்கான ஒரு அர்த்தத்தைத் தேடவும் அதில் மனநிறைவு கொள்ளவும் கொடுக்கிற விலை. அர்ப்பணிப்புடன் கடுமையான உடல் உழைப்பைக் கொடுக்கும் பாட்டாளி மக்கள் தம் உழைப்பில் பெருமிதம் கொள்கிறார்கள். அவர்களின் தேவைகள் நிறைவேறவும் உரிய அங்கீகாரம் கிடைக்கவும் வாழ்த்துவோம்.

சிறு வியாபாரிகள்

#1
குழந்தைகளைக் குதூகலப்படுத்த
பெங்களூர் லால்பாக் தோட்டத்தில்..

#2
கோடைத் தாகம் தணிக்க
பெங்களூரு உயர்நீதி மன்ற வளாகத்தில்..

Sunday, April 28, 2019

ஒரு வார்த்தை.. நம் மொழியில்.. - ‘சொல்வனம்’ இருநூறாவது இதழில்..

ஒரு வார்த்தை.. நம் மொழியில்..


ங்களுக்கும் எங்களுக்கும்
தொடர்ந்து நடக்கிறது 
பேச்சு வார்த்தை
எங்கள் பக்கத்திலிருந்து
கோரிக்கைகளாகவும்
உங்கள் பக்கத்திலிருந்து
அறிக்கைகளாகவும்.
நாம் ஒரே மொழியைதாம்
உபயோகிப்பதாக நினைக்கிறோம்.

Saturday, April 20, 2019

சித்ரா பெளர்ணமி - Pink Full Moon 2019

சித்திரை நிலவு நமக்கு சித்ரா பெளர்ணமி. உலகின் சில பாகங்களில் ஏப்ரல் நிலவு ‘இளஞ்சிவப்பு நிலவு’ எனப் பார்க்கப் படுகிறது. அதற்காக நிலவு இளஞ்சிவப்பாகத் தெரியுமென நினைத்து விட வேண்டாம். அப்படி நேற்றிரவு தேடியிருந்தால் ஏமாற்றமே மிஞ்சியிருக்கும்.


Exif: 1/160s, f/9, ISO 400
Focal length: 300mm
Nikkor 70-300mm f/4.5-5.6G AF-S VR IF-ED
19-04-2019 22:23
#HandHeld

ஓல்ட் ஃபார்மர்ஸ் அல்மனாக் (old farmer's almanac) என்பது ஓரளவுக்கு நம் ஊர் பஞ்சாங்கம் போல.

Monday, April 15, 2019

மனிதர்களற்ற வெளியில்.. - ‘தி இந்து’ காமதேனு வார இதழில்..

மனிதர்களற்ற வெளியில்..

‘தி இந்து’ குழுமத்திலிருந்து வெளிவரும் காமதேனு வார இதழில்..

 ‘நிழற்சாலை’ பக்கத்தில்..

Sunday, April 14, 2019

கல்லிலே கலை வண்ணம் - விவான்டா சிற்பங்கள் - பேகல், கேரளம் (4)

ந்தப் பாகத்தில்,  பேகலில் இருக்கும் தாஜ் விவான்டாவின் வளாகத்தினுள்  காணக் கிடைத்த சிற்பங்களின் படங்களைத் தொகுக்கிறேன்.  பொதுவான கருவாக யானையையும் பிள்ளையாரையும் தேர்ந்தெடுத்து  விதம் விதமான வடிவில் செதுக்கப்பட்டச் சிலைகளை வளாகம் எங்கும் ஆங்காங்கே ரசனையுடன் நிறுவியிருக்கிறார்கள்.

#1
#2

#3

Tuesday, April 9, 2019

தேடு, உனைக் கண்டடைவாய்.. - பேகல், கேரளம் (3)

#1
கேரளத்தை, குறிப்பாக உப்பங்கழிப் பகுதிகளை இறைவனின் சொந்த நாடு எனக் கொண்டாடுகிறோம்.  பேகலில் 26 ஏக்கர் பரப்பளவில் அமைந்த தாஜ் விவான்டா, இயற்கையின் எழிலை ரசித்தபடி அமைதியாக விடுமுறையைக் கழிக்கச் சிறந்த இடம்.  “தேடு, உனைக் கண்டடைவாய்” எனும் வாசகம் இங்கே இருக்கும் நாட்களுக்குப் பொருந்திப் போகும் என்கிறார்கள். அது ஓரளவு உண்மைதான்.

#2தங்கியிருக்கும் குடில்களின் பின் பக்கத்தில் அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் நீரை, பாறைகளில் வந்தமரும் பறவைகளை, சுற்றி அசைந்தாடும் தென்னைகளை மெய்மறந்து இரசித்துக் கிடக்கலாம் அறையின் முதல் தளத்து பால்கனியில் இருக்கும் ஊஞ்சலில் ஆடியசைந்தபடி.

#3

Sunday, April 7, 2019

ஒரே ஆயுதம்

படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 48

#1
"அழகென்பது அகத்தில் இருக்கும் ஒளி"
_ Khalil Gibran

#2
"அமைதிக்கென்று எந்த வழியும் இல்லை. 

Friday, April 5, 2019

நட்பு - கலீல் ஜிப்ரான் (4)


ங்கள் நண்பன் உங்களது தேவைகளுக்குக் கிடைத்த பதில்.
வன் நீங்கள் அன்பை உழுது நன்றி நவிலுதலை அறுவடை செய்யும் உங்களது நிலம்.
வன் நீங்கள் இளைப்பாறும் குளிர்காயும் இடம்.
நீங்கள் அவனை நாடி உங்கள் பசியோடு வருகிறீர்கள், அமைதிக்காக அவனைத் தேடுகிறீர்கள்.

Sunday, March 31, 2019

Friday, March 29, 2019

உப்பங்கழி.. இயற்கையிடம் சரணாகதி.. - பேகல், கேரளம் (2)

ப்பங்கழி (Backwaters) என்றால் என்னவென்பதை 2010 கேரளப் பயணப் பகிர்வான ‘ஏரிக்கரைப் பூங்காற்றே’ பதிவில் சொல்லியிருக்கிறேன். அதாவது, மழைக்காலத்தில் மலையிலிருந்து பாய்ந்துவரும் நதிகளின் நீர் கடலில் கலக்கும்போது அந்த நல்லநீர் சுற்றியுள்ள மாவட்டங்களில் விவசாயத்துக்கு மிக உகந்ததாய் பயன் படுகிறது. மழையற்ற கோடையில் தாழ்வான மட்டத்தில் இருக்கும் காரணத்தால் கடலின் உப்புநீர் நதி வந்த பாதைகளில் புகுகின்றது. இதைத்தான் உப்பங்கழி (பேக் வாட்டர்ஸ்) என்கிறார்கள். அந்த சமயம் மட்டும் விவசாயத்துக்கு ஏற்றதாக இருப்பதில்லை.

நாங்கள் தங்கியிருந்த தாஜ் விவாண்டா விடுதியின் பின்பக்கமே அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது உப்பங்கழி. கரையோர மரங்களோடு அக்காட்சிகள் சிலவற்றை இங்கே தொகுக்கிறேன்:

#1

#2

Monday, March 25, 2019

பேகல் கோட்டை - கேரளம் (1)

கேரளத்தின் காசரகோடு மாவட்டத்தில், . மங்களூரிலிருந்து 65கிமீ தூரத்தில், பேகல் எனும் இடத்தில் இருக்கிறது 40 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் ‘பேகல்’ கோட்டை.

#1

பம்பாய் திரைப்படத்தின் “உயிரே.. உயிரே..” பாடல் காட்சி படமாக்கப் பட்ட இடம் என்றால் உங்கள் எல்லோருக்கும் சட்டெனப் புரிந்து போகும். பலர் இந்தப் பாடல் கோவாவில் எடுக்கப்பட்டது என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

#2


இந்தக் கோட்டையின் சிறப்பம்சம் இது கடற்கரையோரம் அமைந்திருப்பது. கண்காணிப்பு கோபுரங்கள், தண்ணீர் தொட்டிகள், குகைகள், தளவாட கிடங்குகள் என்று பல வகை வரலாற்று ஈர்ப்புகள் இங்கு இருக்கின்றன. உள்ளே செல்லலாம் வாருங்கள்.

#3

Sunday, March 17, 2019

தூறல்: 35 - இன்றைய செய்திகள்

 ஒரு படம்.. ஒரு லட்சம்++ பக்கப் பார்வைகள்..!

ளிப்படங்களுக்கான ஃப்ளிக்கர் தளத்தில் எக்ஸ்ப்ளோர் பக்கம் என்றால் என்னவென்பதை முன்னரே பலமுறைகள் பகிர்ந்திருக்கிறேன். நாளொன்றுக்கு அத்தளத்தில் சுமார் பதினாறு இலட்சம்++ படங்கள் வலையேறுகின்றன. அதிலிருந்து 500 படங்கள் தெரிவு செய்யப்பட்டு ‘எக்ஸ்ப்ளோர்’ பக்கத்தில் வெளியிடப்படும். இதுவரையிலும் அப்பக்கத்தில் தேர்வான எனது படங்களைப் பற்றி பகிர்ந்து வந்திருக்கிறேன். இப்போது அந்த வரிசையில் இம்மாதம் சிவராத்திரியையொட்டி நான் பகிர்ந்த நடராஜர் படமும்:


சென்னை விமானநிலையத்தில் இருக்கும் சிலை இது. இதுவரையிலும் தான் பார்த்த இந்த சிலையின் படங்களில் இதுவே சிறப்பானது என

Sunday, March 10, 2019

கோவில் வீதி

பெங்களூரு மல்லேஸ்வரத்தில் 15வது குறுக்குத் தெரு பல புராதான மற்றும் புதிய கோவில்களை வரிசையாகக் கொண்டிருப்பதால் டெம்பிள் ஸ்ட்ரீட் - கோவில் தெரு என்றே அழைக்கப்படுகிறது. இங்கிருக்கும் கோவில்களைப் பற்றி தனித்தனியே ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன். அவற்றுக்கான இணைப்புகள் பதிவின் இறுதியில்..

சென்ற மாதம் ஓர் நாள் அங்கிருக்கும் கோவில்களுக்குச் சென்றிருந்த போது 50mm லென்ஸ் உபயோகித்து எடுத்த படங்களின் தொகுப்பு இது..

#1
ஓம் சக்தி
தேவி கங்கம்மா கோவில் வாசலில்..

#2
எலுமிச்சைகள்
மாலைகளாகவும்
விளக்கேற்றி வழிபடவும்

#3
பஜ கோவிந்தம்
கோபுர தரிசனம்

Sunday, March 3, 2019

மகா சிவராத்திரி வாழ்த்துகள்!

சிவ பெருமானை வழிபடச் செல்லுகையில் நம்மை முதலில் வரவேற்பவர் நந்தி தேவரே. சிவனின் அருளைப் பெற நந்தியையே முதலில் வணங்குகிறார்கள். பிரதோஷக் காலங்களில் நந்திக்குதான் முதலில் விசேஷ பூஜைகளும் அபிஷேகமும் நடக்கும். நந்தியின் காதுகளில் தமது பிரச்சினைகளைச் சொன்னால், அவர் ஈசனிடம் சொல்லி, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

#1
‘பெருமைமிகு வாழ்வருளும் நந்தியம் பெருமான்'
காடு மல்லேஸ்வரர் ஆலயம்,
பெங்களூரு
மீபத்துப் பயணத்தின் போது மொபைலில் (OnePlus6T) க்ளிக் செய்த சில படங்கள்:

#2
‘மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ.
மறைநான்கின் அடிமுடியும் நீ. மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ.'

Sunday, February 24, 2019

பட்டாம்பூச்சிப் பண்ணை, ஜூப்ளி பூங்கா - ஜம்ஷெட்பூர் (4)

#1
ட்டாம்பூச்சிகளைப் படமாக்குவது ஒரு சுவாரஸ்யமான சவால். ஓரிடத்தில் நில்லாது பூவுக்குப் பூ தாவியபடி இருப்பவற்றை சத்தமின்றிப் பின் தொடர்ந்து, அவை பூவில் தேனை உறிஞ்சும் போதோ, இலைகளின் மேல் இளைப்பாறும் போதோ கேமராவில் சிறைப்பிடிப்பது பரவசமானது.

#2

#3

ஜூப்ளி பூங்காவில் பட்டாம்பூச்சிகள் வெளியே பறந்து விட முடியாதபடி கூரையைக் கொண்ட ஒரு அரங்கில் ஒரு சிறு பண்ணை அமைத்திருந்தார்கள். திறந்த வெளித் தோட்டங்களில் அவற்றுக்குப் பின் பதுங்கிப் பதுங்கி விரைய வேண்டும். குறிப்பாகக் காலை பத்து, பதினொரு மணியளவில் அவை மிக சுறுசுறுப்பாகி விடும்.

Thursday, February 21, 2019

இயற்கைச் சூழலில் விலங்குகள்.. - ஜூப்ளி பூங்கா, ஜம்ஷெட்பூர் (3)

#1

ம்ஷெட்பூர் நகரின் ஜூப்ளி பூங்காவின் வளாகத்தின் உள்ளேயே ஒரு மூலையில் இருக்கிறது டாடா ஸ்டீல் உயிரியல் பூங்கா. 97 ஏக்கர் பரப்பளவில், இயற்கை விரும்பிகளை மனதில் கொண்டு உருவாக்கப் பட்டிருக்கும் இந்தப் பூங்காவில் எல்லா விலங்குகளுக்கும் பிரத்தியேகமான இடங்கள் ஒதுக்கப்பட்டு, கானகத்தில் வாழ்கின்ற மாதிரியான சூழலில் பராமரிக்கப் படுவது தனிச் சிறப்பு.

2

அத்தனை விலங்குகளும் மனிதர்களைக் கண்டால் மிரண்டு விடாமல், அல்லது பாய்ந்து விடாமல் பழக்கப்படுத்தப் பட்டவை என்பதால் குழந்தைகளை அழைத்துச் செல்ல பாதுகாப்பான இடம் என உத்திரவாதம் கொடுக்கிறார்கள். அது ஓரளவு உண்மைதான். நேருக்கு நேர் பார்க்க நேரினும் எந்தச் சலனமும் இன்றி அவை தாம் பாட்டுக்கு உலாவிக் கொண்டிருந்தன!

புலியை தூரத்திலிருந்துதான் படம் எடுத்தேன். ஆனால்  அகழிக்கு அந்தப் பக்கம் நின்ற இந்தக் கரடியை சுமார் 10, 15 அடி தொலைவிலிருந்தே படமாக்கினேன். புலியைப் போல அதுவும் நேருக்கு நேர் பார்த்த காட்சி...

Sunday, February 10, 2019

வாழ்வை நேசி

படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 47
பறவை பார்ப்போம் - பாகம்: 37

#1
"நம்மை மகிழ்விக்கக் கூடிய ஒரே விஷயம், 
நாம் யாராக இருக்கிறோம் என்பதில் அடைகிற மகிழ்வே."
_  Goldie Hawn

#2
“உங்கள் தலை நிமிர்ந்திருக்கட்டும். 
உங்கள் இலக்குகளோ அதைவிடவும் உயர்ந்திருக்கட்டும்."

#3
“வாழும் வாழ்வை நேசித்திடு. 
நேசத்துக்குரிய வாழ்வை வாழ்ந்திடு.”
_ Bob Marley

Friday, February 8, 2019

ஜயந்தி சரோவர், ஜூப்ளி பூங்கா - ஜம்ஷெட்பூர் (2)

#1

மைசூரின் பிருந்தாவன் தோட்டத்தைப் போலவே வடிவமைக்கப்பட்ட ‘ஜூப்ளி பூங்கா’, ஜம்ஷெட்பூரின் ‘மொகல் கார்டன்’ என அறியப்படுகிறது. சுமார் 237 ஏக்கர் அளவில் பரந்து விரிந்திருக்கும் பூங்காவின் நடுவே நன்கு பராமரிக்கப்பட்டு வரும் அழகான ஜயந்தி சரோவர் (ஏரி) சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.

#2

அழகான இந்த ஏரியைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் உடற்பயிற்சிக்கான ஓட்ட மற்றும் நடை பாதைகள் மேலும் சிறப்பு சேர்க்கின்றன.

#3

Wednesday, February 6, 2019

இரும்பாலையின் நூற்றாண்டு கால வரலாறு - ருஸ்ஸி மோடி அருங்காட்சியகம் - ஜம்ஷெட்பூர் (1)

#1

ம்ஷெட்பூரின் மிக அழகிய கட்டிடங்களில் ஒன்றான ருஸ்ஸி மோடி மையம் Russi Modi Centre of Excellence (Tata Steel Museum) ஜூப்ளி பூங்காவிற்கு அடுத்தாற்போல் அமைந்துள்ளது. ஹஃபீஸ் ஒப்பந்தக்காரர்களால் வடிவமைக்கப்பட்டது.

#2

#3

இது ஜம்ஷெட்பூர் நகரின் வரலாற்றுத் தகவல்களின் சேமிப்புக் கூடமாக விளங்குகிறது.

வரிசையாக உயர்ந்து நிற்கும் வெண்ணிறத் தூண்கள்,
பிரமிட் வடிவ கட்டிடத்தின் சிகரம் ஆகியன எப்போதும் நேர்த்தியை நோக்கியதான டாட்டா நிறுவனத்தின் குறிக்கோளை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

#4

#5


உலகின் மிகப் பெரிய மற்றும் வெற்றிகரமான தொழிற்சாலைகளில் ஒன்றான டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தொடக்கம்,

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin