Tuesday, March 8, 2011

பிரதமர், கால் தொட்டு வணங்கிய பெண்மணி

1. “துணிச்சல் ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தன்னையும் தன் குடும்பத்தையும் தான் வாழும் சமூகத்தையும் சுற்றுப்புறத்தையும்.....ஏன் நாட்டையும் வளமாக்கப் போகும் பெண்களுக்குத்தான், இந்த உலக மகளிர் தின வாழ்த்துக்கள்!!!

சொன்னவர் யார்?

முன்னாள் பிரதமர் நாட்டின் சார்பாகப் போற்றி வணங்கி

ஸ்த்ரீ ஷக்தி விருது வழங்கியது யாருக்கு?

2. “
ஆணின் கையிலா பெண் சுதந்திரம்? பெண் எடுத்துக் கொள்வதிலா பெண் சுதந்திரம்?

கேட்பது யார்?


3. “அனுமனின் பலம் அவருக்கே தெரியாதது போல பெண்களின் பெருமையைப் பெண்களே உணராமல் இருக்கிறார்கள்.


ஆதங்கப்படுபவர் யார்?

4. “சொந்தக்காலில் நிற்கவேண்டியது எப்படி ஆண்களுக்கு அவசியமாகிறதோ அதே அவசியம் பெண்களுக்குமிருக்கிறது.

மறுக்க முடியுமா?

வாருங்கள் வலைச்சரத்துக்கு, ஸ்த்ரீ ஷக்தி சிறப்புச்சரம்-செவ்வாய் காண!

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!!!
***பி.கு: வலைச்சரத்தில் பதிந்த ஒவ்வொரு நாள் பதிவையும் வாசிப்பவர் வசதி கருதி, அதேநாட்களில் முத்துச்சரத்தில் இட்ட அறிவிப்புப் பதிவுகளில் இப்போது (14-11-2011) இணைத்துள்ளேன். பதிவுகளுக்கு வந்த கருத்துக்களைக் காண விரும்பினால் வலைச்சரம் செல்லக் கேட்டுக் கொள்கிறேன்:
இன்று மகளிர் தினம்.

அறிவு, திறமை மட்டுமில்லாமல் வாய்ப்பும் வசதியும் இருக்கும் பெண்கள் வாழ்வில் சாதனைகள் புரிந்து முன்னணியில் இருப்பது பெரிய விஷயமில்லை.

மேற்சொன்ன விஷயங்கள் ஏதும் இல்லாமல் துணிச்சல் ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தன்னையும் தன் குடும்பத்தையும் தான் வாழும் சமூகத்தையும் சுற்றுப்புறத்தையும்.....ஏன் நாட்டையும் வளமாக்கப் போகும் பெண்களுக்குத்தான், இந்த உலக மகளிர் தின வாழ்த்துக்கள்!!!


வாழ்த்துகிறார் ‘ninewest’ நானானி. பிரதம மந்திரி வாஜ்பாய் அவர்களிடம் 'ஸ்த்ரீ ஷக்தி’ விருது வாங்கிய திருமதி சின்னப்பிள்ளை பற்றி சொல்லியிருக்கிறார் பாருங்கள் இங்கே.. ‘பெண்ணே! உலகின் கண்ணே!!
***பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். ஆனால் பெண்களின் பெருமையைப் பெண்களே உணராமல் இருக்கிறார்கள்.(அனுமனின் பலம் அவருக்கே தெரியாதது போல)....பெண் பலவீனமானவள் என்று சித்திரிக்கப்பட்டதை உடைத்து, பெண் என்பவள் வீரம், தீரம், செறிந்தவள், திடமனம் உடையவள், மனபலத்தால் உடல் பலம் பெற்றவள் என்பதை உணர்த்த வேண்டும்.” கேட்டுக் கொள்கிறார் ‘திருமதிப் பக்கங்கள்’ கோமதி அரசுஉன்னையே நீ உணர்’என.

“நான் வேலைக்கு அனுப்புறதுக்காக படிக்க வைக்கவில்லை. எங்களுக்கு தேவையும் இல்லை” இப்படிச் சொல்பவர் கண்டு வருந்துகிறார் 'சொல்லத்தான் நினைக்கிறேன்' அம்பிகா, ‘பெண்கள் வேலைக்குச் செல்வது கேவலமா?

ஆணின் கையிலா பெண் சுதந்திரம்? பெண் எடுத்துக் கொள்வதிலா பெண் சுதந்திரம்? பெண்ணே பெண்ணின் சுதந்திரத்தை தடுப்பதிலா பெண் சுதந்திரம்? இல்லை சுதந்திரம் என்பது நம்மிடம்தான் (பெண்களிடம்தான்) உள்ளது....பெண் ஒரு உண்மையான பெண்ணாக இருக்க சுதந்திரம் இல்லையென்றால் ஆணுக்கும் அதே நிலைதான்...

எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் நமக்கென்று ஒரு எல்லைக் கோட்டை விதித்துக் கொண்டு வாழ்க்கையை நடத்துபவளே சுதந்திரமான பெண்..” சொன்னபடியே வாழ்ந்தும் காட்டும் Will To Live ரம்யா தேவி முன் வைக்கிறார் வாதங்களை, மகளிர் தினத்துக்காக தன் நண்பரின் வலைப்பூவில், ‘பெண்கள் தினம்’ குறித்து.
எங்கள் புகுந்த வீட்டுப் பாட்டி கோமளம்மாள்.
என் பிறந்த வீட்டுப் பாட்டி ருக்மணி.
என் அம்மா ஜயலக்ஷ்மி.
என் மாமியார் கமலா சுந்தரராஜன்.
குறுகிய வட்டத்துக்குள் இவர்களை நான் வைக்க விரும்பவில்லை. ஒவ்வொருவரும் தன் சுயத்தை இழக்கவில்லை. சுய மரியாதையை விட்டுக் கொடுக்கவில்லை. மற்றவர்களுக்கும் உதவியாய் இருந்துவிட்டுத்தான் விண்ணுலகம் சென்றார்கள். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்'' இது பாடல். மாதரே மாதரை இழிவு செய்யாமல் நம்மை நாமே உயர்த்திக் கொள்ள நல்ல வாய்ப்பாக இந்தத் தினத்தைக் கொண்டாடுவோம்.
” கொண்டாடுகிறார்‘நாச்சியார்’ வல்லிசிம்ஹன்மகளிர் சக்தி’யை.
கேரியர் மட்டும்தான் முக்கியம் என்றோ அல்லது வேலைக்கு செல்வது மட்டுமே பெண்களின் சுதந்திரம்/முன்னேற்றப்பாதை என்றோ நான் சொல்லவரவில்லை. வேலைக்குச் செல்வதோ செல்லாமலிருப்பதோ, எதுவாக இருப்பினும் தான் விரும்புவதை செய்வதில்தான் சுதந்திரம் என்பது இருப்பதாகக் கருதுகிறேன்.

இருந்தாலும்,பெற்றோரின் உடல் நலத்திற்காகவும், தனது குழந்தைகளுக்காகவும் சம்பாரிக்க வேண்டிய கடமை எப்படி ஆண்களுக்கிருக்கிறதோ அதே கடமை அவர்களுக்குமிருக்கிறது. சொந்தக்காலில் நிற்கவேண்டியது எப்படி ஆண்களுக்கு அவசியமாகிறதோ அதே அவசியம் அவர்களுக்குமிருக்கிறது.
” என்கிறார் அருமையாக, அழுத்தம் திருத்தமாக சித்திரக் கூடம் சந்தனைமுல்லை , X X & X Y in IT.
சக பெண்பதிவர்களின் முன் அருமையான கேள்விகளை முன் வைத்து, சிந்திக்க வைக்கும் பதில்களைப் பெற்று, அவர்களுக்கு ‘சிறுமுயற்சி’ முத்துலெட்சுமி தானே வடிவமைத்து வழங்கிய வியல்*விருதுகள், பெற்றது வெள்ளிப் பதக்கத்தை தமிழ் மணம் விருது 2010 பெண்கள் பிரிவில். அச்சிறப்புக் கட்டுரையில் “இணையத்தில் வியத்தலுக்குரிய செயல்களைச் செய்யும் ஒவ்வொரு வரையும் பெருமைப்படுத்தி இப்பொன் விருதினை வழங்குகிறேன். இங்கு பதிலளித்தவர்களுக்கும் எனக்கு பதிவுகளில் பின்னூட்டம் இட்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் என் சக பதிவாளர்கள் அனைவருக்கும் இவ் “ வியல் ’* விருதினை வழங்குகிறேன். நேர்மறை எண்ணங்களைப் பரப்ப வாழ்த்துகிறேன்.” என மகிழ்ந்து வாழ்த்துகிறார்.
* கள்ளிப் பாலையும்
கருவை முள்ளையும்
கடந்து வந்தவள் நான்..

* முப்பத்து மூன்றே
முடிவாய்க் கொடுத்தாலும்
முக்காலம் ஜெயிப்பவள் நான்.
....

* நல்லதும் நன்மையும்
நிரம்பிக் கிடக்கும்
நாளையப் பெண்ணும் நான்..

* ஒளிவட்டம் சூடாமல்
உயர்வாய் உயரும்
உலகின் எதிர்காலம் நான்..


‘சும்மா’ தேனம்மையின் முழக்கமாகிய ‘என் பெயர் பெண்.. சென்னை சங்கமம் கவிதை’யுடன் நிறைவு செய்கிறேன் இன்றைய ஸ்த்ரீ ஷக்தி சிறப்புச் சரத்தை.

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!!!
***

28 comments:

 1. “//அனுமனின் பலம் அவருக்கே தெரியாதது போல பெண்களின் பெருமையைப் பெண்களே உணராமல் இருக்கிறார்கள்//

  உண்மைதான்..

  ReplyDelete
 2. நல்ல பகிர்வு...

  நான் புதிய முயற்சியாக வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா' விடம் பேட்டி எடுக்க உள்ளேன். இந்தப் பேட்டிக்கான கேள்விகளை நம் வலைப்பூ நண்பர்களே கேட்குமாறு ஏற்பாடு செய்துள்ளேன். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, கீழே லிங்கில் உள்ள MAIL ID - க்கு கேள்விகள் அனுப்ப வேண்டியது மட்டுமே....
  வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்

  ReplyDelete
 3. பெண்கள் தின வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. உண்மைதான். நல்ல பதிவு. பெண்மையின் பெருமையை பெண்களே உணராமல்தான் இருக்கிரார்கள்.

  ReplyDelete
 5. பெண்கள் தின வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. மகளிர் தின வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. மகளிர் தின வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 9. மகளிர் போற்றுதும் என்று பாட வைத்துவிட்டீர்கள் ராமலக்ஷ்மி.இன்று புதிதாகப் பிறந்தது போலப் பலர் உணர்வார்கள்.

  ReplyDelete
 10. வானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் உங்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..

  மகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..

  ReplyDelete
 11. மகளிர் தின வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. சூப்பர்!!!
  பெண்மையின் பெருமையை பெண்களே உணராமல் இருப்பது தான் ரொம்ப வேதனையான விசயம்....

  ReplyDelete
 13. மோகன் குமார் said...
  //அருமை. நன்றி//

  நன்றி மோகன் குமார்.

  ReplyDelete
 14. அமைதிச்சாரல் said...
  ***“//அனுமனின் பலம் அவருக்கே தெரியாதது போல பெண்களின் பெருமையைப் பெண்களே உணராமல் இருக்கிறார்கள்//

  உண்மைதான்..//***

  ஆம், நன்றி சாரல்!

  ReplyDelete
 15. தமிழ்வாசி - Prakash said...
  //நல்ல பகிர்வு...//

  நன்றி தமிழ்வாசி, தங்கள் தகவலுக்கும்.

  ReplyDelete
 16. தமிழ் உதயம் said...
  //பெண்கள் தின வாழ்த்துகள்.//

  நன்றி தமிழ் உதயம்.

  ReplyDelete
 17. Lakshmi said...
  //உண்மைதான். நல்ல பதிவு. பெண்மையின் பெருமையை பெண்களே உணராமல்தான் இருக்கிரார்கள்.//

  நன்றி லக்ஷ்மி. ஆம். அதுகுறித்த பதிவையும் வலைச்சரம் மூலம் வாசித்திடுங்கள்.

  ReplyDelete
 18. இராஜராஜேஸ்வரி said...
  //பெண்கள் தின வாழ்த்துகள்.//

  நன்றி இராஜராஜேஸ்வரி.

  ReplyDelete
 19. அமைதி அப்பா said...
  //மகளிர் தின வாழ்த்துகள்.//

  நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 20. அமைதி அப்பா said...
  //மகளிர் தின வாழ்த்துகள்.//

  நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 21. Chitra said...
  //வாழ்த்துக்கள்!//

  நன்றி சித்ரா.

  ReplyDelete
 22. கோமதி அரசு said...
  //மகளிர் தின வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.//

  நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 23. வல்லிசிம்ஹன் said...
  //மகளிர் போற்றுதும் என்று பாட வைத்துவிட்டீர்கள் ராமலக்ஷ்மி.இன்று புதிதாகப் பிறந்தது போலப் பலர் உணர்வார்கள்.//

  மிக்க நன்றி வல்லிம்மா.

  ReplyDelete
 24. பாரத்... பாரதி... said...
  //வானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் உங்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..

  மகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..//

  மிக்க நன்றி. தங்கள் பள்ளியின் மாணவியர் ஆசிரியர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 25. ஸ்ரீராம். said...
  //மகளிர் தின வாழ்த்துகள்.//

  மிக்க நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 26. தமிழ்மணம், இன்ட்லியில் வாக்களித்தவருக்கும் என் நன்றி.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin