Monday, March 22, 2010

நோட்டு மாலைகள்


பசித்துப்
பாலுக்கு அழுதபடியே இருக்கும்
பாவஜீவனாய்
எங்கோ ஒரு கைக்குழந்தை

மருந்துக்கு வழியின்றி
ஏதோவொரு வீட்டின் மூலையில்
விடாமல் இருமிக் கொண்டிருக்கும்
முதிய தாய்

உடைந்துபோன மூக்குக் கண்ணாடியின்
சட்டத்தைத் தினம்தினம்
தொட்டுப் பார்த்து
மகனிடம் புதுசுக்கு
மனுப்போட்டுக் காத்திருக்கும்
வயோதிகர்

அஸ்தமனம்வரை உழைத்து
அரைவயிற்றுக் கஞ்சிக்காவது ஆகுமென
உலைவைக்க வந்தவளிடம்
உதைத்துப் பிடுங்கிக்கொண்டவனை
நினைத்து நொந்து சுருண்டவளாய்
மனைவியெனும் ஒரு பிறவி

'பரீட்சைக்குப் பணம் கட்டினாதான்
பள்ளிக்கூடம் போவேன்'
சொன்னாதாலே அடிவாங்கி
கன்னம்வீங்கிக் கலங்கிநிற்கும்
சின்னஞ்சிறு பாலகன்

'இந்த ஒரு வருசமாவது
பொறந்த நாளைக்கி
புதுசு வாங்கித் தாப்பா'
கிழிந்த பாவாடையில்
வழிந்த கண்ணீரைத்
துடைத்துக் கொள்ளும்
பதின்ம வயது மகள்

ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்
ஒவ்வொரு நோட்டுக்குள்ளும்.
***
நன்றி விகடன்!96 comments:

 1. ம்ம்ம்..:(

  யார் என்ன சொன்னாலும்....எந்த ஊரில் எவள் எக்கேடு கெட்டு போனாலும் பரவாயில்லை, எனக்கு நோட்டு மாலை தான் முக்கியம் னு ஒரு அம்மா அலைஞ்சுட்டு இருக்கு... என்ன சொல்ல..வேதனை தான் மிஞ்சுகிறது

  ReplyDelete
 2. ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்
  ஒவ்வொரு நோட்டுக்குள்ளும்.

  ......அவர்களுடன் அவர்களின் கண்ணீரும் ஒளிந்து கொண்டு, சிலருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் பணமாலை ஆகின்றன.

  ReplyDelete
 3. நோட்டு மாலைகள் இன்னும் எத்தனை எத்தனை பார்க்க போகிறோமோ? :(

  ReplyDelete
 4. நோட்டுக்குள் நோகும் சிலமனங்கள்
  நோட்டுக்குள் வேகும் சிலமனங்கள்
  நோட்டுக்குள் புரழுளும் பலமனங்கள்..

  வாழ்த்துக்கள் ராமுமேடம்..

  ReplyDelete
 5. கவிதையின் உள்குத்து நல்லா இருக்கு...

  ReplyDelete
 6. தங்கள் வழக்கமான பாணியில் அசத்தலான கவிதை...மனதை பாரமாக்கும் கவிதையும் கூட!

  ReplyDelete
 7. //ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்
  ஒவ்வொரு நோட்டுக்குள்ளும்.//

  அவர்கள் அறிந்திருக்க போவதில்லை அவலங்களை, ஏனைனில் போலி அரசியலின் அடையாளங்கள் அவர்கள்.புரிந்துகொள்ளத்தான் நம்மவர்கள் தயாரில்லை.

  ReplyDelete
 8. ராமலக்ஷ்மி,கவிதை மனதை ஏதோ செய்கிறது.

  ஒவ்வொரு நோட்டுக்குள்ளும் ஒவ்வொரு கண்ணீர் கதை உள்ளது.(நீங்கள் எழுதிய கவிதையில்)

  பணம் பந்தியிலே குணம் குப்பையிலே,என்பார்கள்.
  இந்த பணம் படுத்தும் பாடு என்ன என்று அளவிட முடியாத அளவு ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொரு நோட்டுக்குள்ளும்.

  ReplyDelete
 9. //ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்
  ஒவ்வொரு நோட்டுக்குள்ளும்.//

  அசத்தல் வரிகள்..

  எல்லோரையும் போல எனக்கும் இந்த வரிகள்தான் மிகவும் பிடித்தது.

  யூதபுல் விகடனில் வந்ததற்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. முதல்ல இப்படி ரூபாய் நோட்டை அவமதிப்பு செய்தவங்க மேல நடவடிக்கை எடுக்கணும். ஆனா அதெல்லாம் எங்க நடக்கப்போகுது.

  அரசியல் வியாதிங்க மட்டுமில்ல. சில தொழில் அதிபர்களும் தன் கிட்ட வேலை செயுறவங்களுக்கான கூலியை உரிய நேரத்துல கொடுக்காம ஏமாத்திதான் ஆடம்பர பொருளா மாத்திகிட்டு இருக்காங்க. இதையெல்லாம் பார்க்கும்போது என்னால கோபப்பட மட்டும்தான் முடியுது.

  ReplyDelete
 11. அக்கா..

  அவ்ளோ யதார்த்தமா இருக்கு..

  ஒவொரு காட்சியும் கண்முன்னே தெரியுறாமாதிரி இருக்கு உங்க எழுத்து.

  ReplyDelete
 12. /*ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்
  ஒவ்வொரு நோட்டுக்குள்ளும்*/
  :-(

  ம்... என்ன என்று சொல்வது... வறுமையில் துடிக்கும் மக்களைப் பற்றி கவலைப்படாது நோட்டு மாலைகளோடு வலம் வருபவர்களை?

  ReplyDelete
 13. சரியான நேரத்தில் சரியான பதிவு அக்கா.
  //
  பசித்துப்
  பாலுக்கு அழுதபடியே இருக்கும்
  பாவஜீவனாய்
  எங்கோ ஒரு கைக்குழந்தை
  //
  நிறைய குழந்தைகள் இருக்காங்க.... அரசியல்வாதிகளுக்கு அது எங்க தெரிய போது... ஏ.சி. அறை.... கணணாடி அறையில் குழந்தையின் அழுகுறல் கேட்கவா போகிறது....


  இது ஒரு புறம்..... மறுபுறம் போலி மருந்து கொடுக்கிறhங்க.... சென்னையில ஒரு குழந்தை இறந்து இருக்கு... உயிர எடுத்து பணம் சம்பாதிக்கிறhங்க... புணத்துல பணத்தை தேடுறவாங்க...இவங்க மத்தியில என்ன செய்ய முடியும். 2 அடி அடிச்சிரலன்னு தோணுது.

  ReplyDelete
 14. எப்படிதான் சங்கடமே இல்லாமல் போஸ் கொடுக்கறாங்களோ ..? இதுல ரெண்டு தடவை வேற...உங்கள் கவிதைகள் இந்த விஷயத்தில் புதிய சிந்தனைகளாய் ஒளிர்கின்றன.

  ReplyDelete
 15. நல்லாயிருக்கு.

  மங்கை சொன்னது போல்
  இந்த போட்டோவை போட்டிருக்க்லாம்.

  http://gulfnews.com/polopoly_fs/bahujan-samaj-party-bsp-leader-and-uttar-pradesh-chief-minister-mayawati-1.598812!image/2462798776.jpg_gen/derivatives/box_475/2462798776.jpg

  ReplyDelete
 16. ரொம்ப கனமா இருக்குங்க.

  ReplyDelete
 17. அரசியலில் தந்தைக்குலம் ஒரு கோலம் என்றால் தாய்க்குலமோ அலங்கோலம்....

  ReplyDelete
 18. யதார்த்தமான கவிதை...இந்நேர சூழ்நிலைக்குப் பொருத்தமானது....

  ReplyDelete
 19. கவிதையா இருக்குமுன்னே நினச்சுகிட்டு வந்தேன்!தலைப்பும் பொருளும் அழகாக பொருந்துகிறது.

  அதென்ன வீட்டில் பொறுப்பா நடந்து கொள்ளும் பெண்கள் அரசியலுக்குப் போனா ஏதாவது ஒரு விதத்தில் சறுக்கி விடுறாங்க.

  ReplyDelete
 20. ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்
  ஒவ்வொரு
  நோட்டுக்குள்ளும//

  கவிதையின் பலமே இந்த வரிகளில்தான்.. நல்ல சிந்தனை.

  ReplyDelete
 21. அப்பட்டமான நிஜம் அருமையான கவிதையாகியிருக்கிறது.

  வரிகள் ஒவ்வொன்றும் வறுமையை உரித்துக் காட்டுகிறது.

  விகடனிலும் படித்தேன். வாழ்த்துக்கள் அக்கா!

  ReplyDelete
 22. கோபத்தின் அழகான வெளிப்பாடு கவிதையாய்..

  ReplyDelete
 23. //ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்
  ஒவ்வொரு நோட்டுக்குள்ளும்.//

  உண்மை தான்

  இருப்பவனுக்கு எல்லாமே
  மாலை யாகும். மாலை மட்டும் விதிவிலக்கு அல்ல. மனிதர்களையும் மாலையாய்க் கோர்த்துப் போட்டுக் கொள்வார்கள்

  பணம் செய்யும் வேலை
  மனம் இருந்தால் தானே ?

  ReplyDelete
 24. ரொம்ப நல்ல கவிதை சகா!!

  ReplyDelete
 25. மிக அருமையான கவிதை.

  விகடனில் வெளிவந்ததற்க்கு வாழ்த்துகள்!!

  ReplyDelete
 26. மிக எதார்த்தமான கவிதை.

  என்னத்த சொல்ல.

  ReplyDelete
 27. மனதை என்னவோ செய்கிறது கவிதை.

  படிக்கும் போது, 1000 ருபாய் நோட்டு மாலை ஏனோ கண்முன் வந்து அவஸ்தை கொடுக்கிறது :((

  ReplyDelete
 28. உண்மையிலேயே வருந்த வைத்த கவிதை ராமலெக்ஷ்மி

  ReplyDelete
 29. //பரீட்சைக்குப் பணம் கட்டினாதான்
  பள்ளிக்கூடம் போவேன்'
  சொன்னாதாலே அடிவாங்கி
  கன்னம்வீங்கிக் கலங்கிநிற்கும்
  சின்னஞ்சிறு பாலகன்//

  :(
  :(
  :(
  :(
  :(

  கொஞ்ச நாளைக்கு முன்னே ஊரெல்லாம் சிலை இப்போ நோட்டு மாலை இன்னும் என்னவெல்லாம் பண ஆட்டம் ஆடப்போகிறதோ பணவதி......

  ReplyDelete
 30. ஜெயா பரவாலை போல் ம்க்கள் தேர்தல் முலம் பதில் பதில் சொல்லா வேண்டும்.

  ReplyDelete
 31. மங்கை said...

  //ம்ம்ம்..:(

  யார் என்ன சொன்னாலும்....எந்த ஊரில் எவள் எக்கேடு கெட்டு போனாலும் பரவாயில்லை, எனக்கு நோட்டு மாலை தான் முக்கியம் னு ஒரு அம்மா அலைஞ்சுட்டு இருக்கு... என்ன சொல்ல..வேதனை தான் மிஞ்சுகிறது//

  பயமும் எழுகிறது, இந்த அம்மாவுடன் முடியுமா அல்லது சங்கிலியாய் தொடருமா என்று:(! கருத்துக்கு நன்றி மங்கை.

  ReplyDelete
 32. Chitra said...

  //ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்
  ஒவ்வொரு நோட்டுக்குள்ளும்.

  ......அவர்களுடன் அவர்களின் கண்ணீரும் ஒளிந்து கொண்டு, சிலருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் பணமாலை ஆகின்றன.//

  உண்மைதான் சித்ரா, அது வாழ்த்து மாலையாகவா இருக்கப் போகிறது? கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 33. SurveySan said...

  //good one and timely. :(//

  நன்றி சர்வேசன்.

  ReplyDelete
 34. ஆயில்யன் said...

  //நோட்டு மாலைகள் இன்னும் எத்தனை எத்தனை பார்க்க போகிறோமோ? :( //

  அதுவேதான் அனைவரது கவலையும்.
  கருத்துக்கு நன்றி ஆயில்யன்.

  ReplyDelete
 35. அன்புடன் மலிக்கா said...

  //நோட்டுக்குள் நோகும் சிலமனங்கள்
  நோட்டுக்குள் வேகும் சிலமனங்கள்
  நோட்டுக்குள் புரழுளும் பலமனங்கள்..

  வாழ்த்துக்கள் ராமுமேடம்..//

  நன்றி மலிக்கா. நன்றாகச் சொன்னீர்கள்.

  ReplyDelete
 36. நாடோடி said...

  //கவிதையின் உள்குத்து நல்லா இருக்கு...//

  கருத்துக்கு நன்றி நாடோடி. தாக்க வேண்டிய விஷயம்தானே?

  ReplyDelete
 37. சந்தனமுல்லை said...

  //தங்கள் வழக்கமான பாணியில் அசத்தலான கவிதை...மனதை பாரமாக்கும் கவிதையும் கூட!//

  நன்றி சந்தனமுல்லை.

  ReplyDelete
 38. கோமதி அரசு said...

  //ராமலக்ஷ்மி,கவிதை மனதை ஏதோ செய்கிறது.

  ஒவ்வொரு நோட்டுக்குள்ளும் ஒவ்வொரு கண்ணீர் கதை உள்ளது.(நீங்கள் எழுதிய கவிதையில்)//

  குடும்பத்தை இப்படிக் கண்ணீரில் தத்தளிக்க விட்டுவிட்டு அரசியல்வாதிகளின் பின்னே செல்லும் தொண்டர்களையும் என்னவென்று சொல்ல:(?

  // பணம் பந்தியிலே குணம் குப்பையிலே,என்பார்கள்.
  இந்த பணம் படுத்தும் பாடு என்ன என்று அளவிட முடியாத அளவு ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொரு நோட்டுக்குள்ளும்.//

  மிகச் சரி. கருத்துக்கு நன்றிம்மா.

  ReplyDelete
 39. aambalsamkannan said...

  //அவர்கள் அறிந்திருக்க போவதில்லை அவலங்களை, ஏனைனில் போலி அரசியலின் அடையாளங்கள் அவர்கள்.புரிந்துகொள்ளத்தான் நம்மவர்கள் தயாரில்லை.//

  உண்மைதான். வாக்களிக்கும் மக்கள் ஒருபக்கம். உறிஞ்சப்படும் உணர்வின்றி பின்னே சென்று பெரும்விழா எடுக்கும் தொண்டர்கள் இன்னொரு பக்கம். கருத்துக்கு நன்றி aambalsamkannan.

  ReplyDelete
 40. கண்ணா.. said...

  ***/ //ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்
  ஒவ்வொரு நோட்டுக்குள்ளும்.//

  அசத்தல் வரிகள்..

  எல்லோரையும் போல எனக்கும் இந்த வரிகள்தான் மிகவும் பிடித்தது.

  யூதபுல் விகடனில் வந்ததற்கும் வாழ்த்துக்கள்/***

  மிக்க நன்றி கண்ணா.

  ReplyDelete
 41. திருவாரூரிலிருந்து சரவணன் said...

  //முதல்ல இப்படி ரூபாய் நோட்டை அவமதிப்பு செய்தவங்க மேல நடவடிக்கை எடுக்கணும். ஆனா அதெல்லாம் எங்க நடக்கப்போகுது.//

  ஆதங்கம் சரியே.

  //அரசியல் வியாதிங்க மட்டுமில்ல. சில தொழில் அதிபர்களும் தன் கிட்ட வேலை செயுறவங்களுக்கான கூலியை உரிய நேரத்துல கொடுக்காம ஏமாத்திதான் ஆடம்பர பொருளா மாத்திகிட்டு இருக்காங்க. இதையெல்லாம் பார்க்கும்போது என்னால கோபப்பட மட்டும்தான் முடியுது.//

  மக்கள் உணர்ந்து விழித்துக் கொண்டால்தான் விடிவு. கருத்துப் பகிர்வுக்கு நன்றி சரவணன்.

  ReplyDelete
 42. சுசி said...

  //அக்கா..

  அவ்ளோ யதார்த்தமா இருக்கு..

  ஒவ்வொரு காட்சியும் கண்முன்னே தெரியுறாமாதிரி இருக்கு உங்க எழுத்து.//

  கருத்துக்கு நன்றி சுசி.

  ReplyDelete
 43. அமுதா said...

  ***/ /*ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்
  ஒவ்வொரு நோட்டுக்குள்ளும்*/
  :-(

  ம்... என்ன என்று சொல்வது... வறுமையில் துடிக்கும் மக்களைப் பற்றி கவலைப்படாது நோட்டு மாலைகளோடு வலம் வருபவர்களை?/***

  எந்த உறுத்தலும் அவர்களுக்கு இல்லை:(!

  கருத்துக்கு நன்றி அமுதா.

  ReplyDelete
 44. கடையம் ஆனந்த் said...

  ***/ சரியான நேரத்தில் சரியான பதிவு அக்கா.
  //
  பசித்துப்
  பாலுக்கு அழுதபடியே இருக்கும்
  பாவஜீவனாய்
  எங்கோ ஒரு கைக்குழந்தை
  //
  நிறைய குழந்தைகள் இருக்காங்க.... அரசியல்வாதிகளுக்கு அது எங்க தெரிய போது... ஏ.சி. அறை.... கணணாடி அறையில் குழந்தையின் அழுகுறல் கேட்கவா போகிறது..../***

  அப்படித்தான் இருக்கிறது நிலைமை.

  //இது ஒரு புறம்..... மறுபுறம் போலி மருந்து கொடுக்கிறhங்க.... சென்னையில ஒரு குழந்தை இறந்து இருக்கு... உயிர எடுத்து பணம் சம்பாதிக்கிறhங்க...//

  ஒவ்வொரு முறையும் யாரையேனும் இழந்த பின்னரே மக்கள் விழிக்கிறார்கள்:(!

  கருத்துக்கு நன்றி ஆனந்த்.

  ReplyDelete
 45. ஸ்ரீராம். said...

  //எப்படிதான் சங்கடமே இல்லாமல் போஸ் கொடுக்கறாங்களோ ..? இதுல ரெண்டு தடவை வேற...உங்கள் கவிதைகள் இந்த விஷயத்தில் புதிய சிந்தனைகளாய் ஒளிர்கின்றன.//

  உண்மை. உறுத்தல் என்பதே இல்லை. தத்தமது குடும்பங்களின் தேவைகளைக் கண்டு கொள்ளாமல் இப்படிப்பட்ட அரசியல்வாதிகளைக் கொண்டாடும் தொண்டர்களும் சிந்திக்க வேண்டும்.

  கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 46. butterfly Surya said...

  //நல்லாயிருக்கு.

  மங்கை சொன்னது போல்
  இந்த போட்டோவை போட்டிருக்க்லாம்.//

  சுட்டிக்கு மிக்க நன்றி சூர்யா. அந்தப் படத்தைப் போட்டு அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட இம்மாதிரியான மக்களின் சிரமங்களை முன்நிறுத்த எண்ணியே அதைத் தேர்ந்தெடுக்கவில்லை நான். முடிவு சரிதானே?

  ReplyDelete
 47. விக்னேஷ்வரி said...

  //ரொம்ப கனமா இருக்குங்க.//

  கருத்துக்கு நன்றி விக்னேஷ்வரி.

  ReplyDelete
 48. பாச மலர் said...

  //அரசியலில் தந்தைக்குலம் ஒரு கோலம் என்றால் தாய்க்குலமோ அலங்கோலம்....//

  ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல என நிரூபித்தபடி..:(!

  நன்றி பாசமலர்.

  ReplyDelete
 49. க.பாலாசி said...

  //யதார்த்தமான கவிதை...இந்நேர சூழ்நிலைக்குப் பொருத்தமானது....//

  நன்றி பாலாசி.

  ReplyDelete
 50. ராஜ நடராஜன் said...

  //கவிதையா இருக்குமுன்னே நினச்சுகிட்டு வந்தேன்!தலைப்பும் பொருளும் அழகாக பொருந்துகிறது.//

  நீண்ட இடைவெளிக்குப் பின்னான வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  //அதென்ன வீட்டில் பொறுப்பா நடந்து கொள்ளும் பெண்கள் அரசியலுக்குப் போனா ஏதாவது ஒரு விதத்தில் சறுக்கி விடுறாங்க.//

  அரசியல் மாயைக்குள் விழுந்துவிட்ட பின்னால் ஆணென்ன பெண்ணென்ன என்றாகி விடுகிறது. விதிவிலக்காய் இருக்கவும் செய்கிறார் வெகுசிலர் இருபக்கமும்.

  ReplyDelete
 51. "உழவன்" "Uzhavan" said...

  **// ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்
  ஒவ்வொரு
  நோட்டுக்குள்ளும//

  கவிதையின் பலமே இந்த வரிகளில்தான்.. நல்ல சிந்தனை.//**

  மிக்க நன்றி உழவன்.

  ReplyDelete
 52. சுந்தரா said...

  ** //அப்பட்டமான நிஜம் அருமையான கவிதையாகியிருக்கிறது.

  வரிகள் ஒவ்வொன்றும் வறுமையை உரித்துக் காட்டுகிறது.

  விகடனிலும் படித்தேன். வாழ்த்துக்கள் அக்கா!//**

  கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சுந்தரா.

  ReplyDelete
 53. முத்துலெட்சுமி/muthuletchumi said...

  // good one :)//

  நன்றி முத்துலெட்சுமி.

  ReplyDelete
 54. கண்ணகி said...

  //கோபத்தின் அழகான வெளிப்பாடு கவிதையாய்..//

  ஆம் கண்ணகி. கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 55. திகழ் said...

  ***/ //ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்
  ஒவ்வொரு நோட்டுக்குள்ளும்.//

  உண்மை தான்

  இருப்பவனுக்கு எல்லாமே
  மாலை யாகும். மாலை மட்டும் விதிவிலக்கு அல்ல. மனிதர்களையும் மாலையாய்க் கோர்த்துப் போட்டுக் கொள்வார்கள்//***

  அதைத்தான் செய்திருக்கிறார்கள், எத்தனைபேரின் தேவைகள் அந்த மாலைக்குள் மறைந்து கிடக்கின்றது என்கிற உறுத்தலேயின்றி:(!

  //பணம் செய்யும் வேலை
  மனம் இருந்தால் தானே ?//

  இதில் முந்தையது ஒன்றே முக்கியம் என வாழும் மாந்தர். கருத்துக்கு நன்றி திகழ்.

  ReplyDelete
 56. பா.ராஜாராம் said...

  //ரொம்ப நல்ல கவிதை சகா!!//

  நன்றி பா ரா.

  ReplyDelete
 57. Mrs.Menagasathia said...

  //மிக அருமையான கவிதை.

  விகடனில் வெளிவந்ததற்க்கு வாழ்த்துகள்!!//

  நன்றிகள் மேனகா.

  ReplyDelete
 58. அக்பர் said...

  //மிக எதார்த்தமான கவிதை.

  என்னத்த சொல்ல.//

  ஒண்ணுஞ் சொல்றதுக்கில்ல:(!

  நன்றி அக்பர்.

  ReplyDelete
 59. முகுந்த் அம்மா said...

  //மனதை என்னவோ செய்கிறது கவிதை.

  படிக்கும் போது, 1000 ருபாய் நோட்டு மாலை ஏனோ கண்முன் வந்து அவஸ்தை கொடுக்கிறது :((//

  ஐநூறிலும் அணிந்து மகிழ்ந்தாயிற்றாம் அடுத்து.

  கருத்துக்கு நன்றி முகுந்த் அம்மா.

  ReplyDelete
 60. thenammailakshmanan said...

  // உண்மையிலேயே வருந்த வைத்த கவிதை ராமலெக்ஷ்மி//

  நன்றி தேனம்மை.

  ReplyDelete
 61. பிரியமுடன்...வசந்த் said...

  ***/ //பரீட்சைக்குப் பணம் கட்டினாதான்
  பள்ளிக்கூடம் போவேன்'
  சொன்னாதாலே அடிவாங்கி
  கன்னம்வீங்கிக் கலங்கிநிற்கும்
  சின்னஞ்சிறு பாலகன்//

  :(
  :(
  :(
  :(
  :(

  கொஞ்ச நாளைக்கு முன்னே ஊரெல்லாம் சிலை இப்போ நோட்டு மாலை இன்னும் என்னவெல்லாம் பண ஆட்டம் ஆடப்போகிறதோ பணவதி......//***

  நல்ல பெயர் வைத்தீர்கள். கருத்துக்கு நன்றி வசந்த்.

  ReplyDelete
 62. NATRAJAN said...

  //ஜெயா பரவாலை போல் ம்க்கள் தேர்தல் முலம் பதில் பதில் சொல்லா வேண்டும்.//

  சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம். முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நடராஜன்.

  ReplyDelete
 63. மின்னஞ்சலில்...

  //Hi Ramalakshmi,

  Congrats!

  Your story titled 'நோட்டு மாலைகள்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 22nd March 2010 09:21:01 AM GMT

  Here is the link to the story: http://www.tamilish.com/story/208497

  Thank you for using Tamilish.com

  Regards,
  -Tamilish Team

  தமிழிஷில் வாக்களித்த 23 பேர்களுக்கும், தமிழ் மணத்தில் வாக்களித்த 13 பேர்களுக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 64. நல்ல சிந்தனைக் கவிதை

  வாழ்த்துக்கள்

  விஜய்

  ReplyDelete
 65. நோட்டுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும்

  * பாலுக்கு அழுதுகொண்டிருக்கும் குழந்தை

  * இருமிக்கொண்டிருக்கும் முதிய தாய்

  * மனுப்போடக் காத்திருக்கும் வயோதிகர்

  * நொந்து சுருண்டவளாக இருக்கும் மனைவி என்னும் பிறவி

  * கன்னம்வீங்கி கலங்கி நிற்கும் சிறு பாலகன்

  * பொறந்த நாளுக்கு புதுசு கட்டனும்னு ஏங்கி நிற்கும் மகள்

  எல்லாரையுமே நீங்கள் காட்டியபிறகுதான் என்னால் பார்க்க முடிந்தது!

  கண்ணிருந்தும் குருடராய்த்தான் என்னைப்போல் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! :(

  ReplyDelete
 66. விஜய் said...

  //நல்ல சிந்தனைக் கவிதை

  வாழ்த்துக்கள்//

  நன்றி விஜய்!

  ReplyDelete
 67. வருண் said...

  //நோட்டுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும்...

  எல்லாரையுமே நீங்கள் காட்டியபிறகுதான் என்னால் பார்க்க முடிந்தது!//

  நம்மைச் சுற்றியிருப்பவரின் முகங்களில் ஓடும் கவலை ரேகைகளுக்குள்ளும் இவர்கள் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அனுசரணையுடன் அணுகி நம்மால் ஆனதை செய்யலாம். அவர்களைப் போலவேதான் இன்னும் எத்தனை பேர்கள் இருக்கக் கூடும். படித்தவர்களை விடவும் இவர்கள்தான் ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் வாக்களிக்கிறார்கள். விடிவு மட்டும் பிறப்பதேயில்லை:( !

  கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி வருண்.

  ReplyDelete
 68. ஒவ்வொரு வரியையும் வாசித்து முடித்தபின் “அதான் எங்களுக்குத் தெரியுமே “அதான் எங்களுக்குத் தெரியுமே என்று யோசித்துக் கொண்டே கடைவரி வந்த பின் தான் தெரிந்தது “மாப்பு வச்சுட்டாயா ஆப்பு...”ங்றமாதிரி
  ஒவ்வொரு நோட்டுக்குள்ளும் ஒழிந்திருந்த விஷயம் பிறகுதான் புரிந்த்தது...

  ReplyDelete
 69. @ goma,

  //கடைவரி வந்த பின் தான் தெரிந்தது “மாப்பு வச்சுட்டாயா ஆப்பு...”ங்றமாதிரி
  ஒவ்வொரு நோட்டுக்குள்ளும் ஒழிந்திருந்த விஷயம் பிறகுதான் புரிந்த்தது...//

  வோட்டுக்களை வாங்கிக்கொண்டு கடைசியில் அரசியல்வாதிகள் வைக்கும் ‘ஆப்பு’ தொண்டர்களுக்கும் பொதுஜனங்களுக்கும் புரியவேண்டும் விழித்துக் கொள்ள வேண்டுமென வேண்டிக் கொள்வோம். நன்றி கோமா.

  ReplyDelete
 70. ஆஹா அரசியல் பதிவா! நல்லா இருக்கு. இப்ப தான் வழிக்கு வருகிறீர்கள்! ;-) அரசியலை சாட கவிதை ஒரு அற்புதமான வழி..

  ReplyDelete
 71. ஏற்கனவே விகடன்ல படிச்சுட்டேன்....சூப்பரு....அழகான வார்த்தை கோர்வை

  ReplyDelete
 72. நல்லாயிருக்குங்க...

  -
  DREAMER

  ReplyDelete
 73. தமிழ் நாட்டு அம்மாவின் நிலையை பார்த்த பிறகாவது, ஆடம்பரத்தை தவிர்க்க கற்றுக்கொள்ள வேண்டும் உ.பி. அம்மா.

  ReplyDelete
 74. கிரி said...

  //ஆஹா அரசியல் பதிவா! நல்லா இருக்கு. இப்ப தான் வழிக்கு வருகிறீர்கள்! ;-) அரசியலை சாட கவிதை ஒரு அற்புதமான வழி..//

  அரசியல் பற்றி முன்னரும் எழுதியிருக்கிறேன் கிரி:)! நன்றி.

  ReplyDelete
 75. அப்பாவி தங்கமணி said...

  //ஏற்கனவே விகடன்ல படிச்சுட்டேன்....சூப்பரு....அழகான வார்த்தை கோர்வை//

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தங்கமணி.

  ReplyDelete
 76. DREAMER said...

  // நல்லாயிருக்குங்க...//

  மிக்க நன்றி Dreamer.

  ReplyDelete
 77. அமைதிச்சாரல் said...

  //தமிழ் நாட்டு அம்மாவின் நிலையை பார்த்த பிறகாவது, ஆடம்பரத்தை தவிர்க்க கற்றுக்கொள்ள வேண்டும் உ.பி. அம்மா.//

  சரியாகச் சொன்னீர்கள் அமைதிச்சாரல். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 78. //ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்
  ஒவ்வொரு நோட்டுக்குள்ளும்.//

  அசத்தல் வரிகள்..கவிதை மனதை ஏதோ செய்கிறது.
  வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 79. @ ஜெஸ்வந்தி,

  மிக்க நன்றி ஜெஸ்வந்தி.

  ReplyDelete
 80. \\ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்
  ஒவ்வொரு நோட்டுக்குள்ளும்.\\
  உண்மைதான்.
  கோபத்தை அழகா வெளிப்படுத்தியிருக்கீங்க.

  ReplyDelete
 81. @ அம்பிகா,

  மிக்க நன்றி.

  ReplyDelete
 82. கவிதை கண்களில் நீர் வரவழைத்துவிட்டது. உருக்கமான சிந்தனை.

  ReplyDelete
 83. நோட்டு மாலைகள் இன்னும் எத்தனை எத்தனை பார்க்க போகிறோமோ?

  வாழ்த்துக்கள் ராமுமேடம்..

  ReplyDelete
 84. நோட்டுக்குள் ஒளிந்திருக்கும் சோகத்தை அருமையாக எல்லோருக்கும் உணர்த்தியிருக்கிறீர்கள். இனி பணத்தை கையில் எடுக்கும் போது சிலருக்காவது இது ஞாபகம் வரும்.

  ReplyDelete
 85. வலி தரும் கவிதையின் உள்குத்து, நோட்டு மாலைக்குள்ளிருந்து முள்ளாய் குத்துமா? குத்தினாலும் வலிக்குமா? வலித்தாலும் உணருமா? உணர்ந்தாலும் திருந்துமா?
  பராபரமே யாம் அறியோமே!!!

  ReplyDelete
 86. Dr.P.Kandaswamy said...

  //கவிதை கண்களில் நீர் வரவழைத்துவிட்டது. உருக்கமான சிந்தனை.//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டாக்டர்.

  ReplyDelete
 87. சே.குமார் said...

  //நோட்டு மாலைகள் இன்னும் எத்தனை எத்தனை பார்க்க போகிறோமோ?//

  புதிது புதிதாக ஆரம்பித்து வைக்கிறார்களே:(?

  //வாழ்த்துக்கள் ராமுமேடம்..//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க குமார்.

  ReplyDelete
 88. மைதிலி கிருஷ்ணன் said...

  //நோட்டுக்குள் ஒளிந்திருக்கும் சோகத்தை அருமையாக எல்லோருக்கும் உணர்த்தியிருக்கிறீர்கள். இனி பணத்தை கையில் எடுக்கும் போது சிலருக்காவது இது ஞாபகம் வரும்.//

  மாலை தொடுப்பவர் சிந்தித்தால் நன்றாக இருக்கும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மைதிலி.

  ReplyDelete
 89. நானானி said...

  //வலி தரும் கவிதையின் உள்குத்து, நோட்டு மாலைக்குள்ளிருந்து முள்ளாய் குத்துமா? குத்தினாலும் வலிக்குமா? வலித்தாலும் உணருமா? உணர்ந்தாலும் திருந்துமா?
  பராபரமே யாம் அறியோமே!!!//

  ஆமாங்க நானானி, யாரும் அறியோம்:(!

  கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 90. நல்ல பதிவு ஏழைகளின் உழைப்பு மாலையாக தொங்குகிறது.

  ReplyDelete
 91. ருக் என முள்ளாய் குத்தும் வரிகள்.நிறைய எழுதுங்கள்,ராமு.

  ReplyDelete
 92. அச்சோ இதை எப்பிடி விட்டேன்????அருமைப்பா!பூங்கொத்து!

  ReplyDelete
 93. ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்
  ஒவ்வொரு
  நோட்டுக்குள்ளும//

  கவிதையின் பலமே இந்த வரிகளில்தான்.. உண்மையிலே எனக்கு இந்த வரி ரொம்ப பிடித்து இருக்கு இதில் தான் கவிதையின் அர்த்தமே இருக்கு. நல்ல கவிதை.

  நான் இன்று தான் முதன் முதலில் வந்து பதிவு போடுகிறேன்.
  என்ன ராமலஷிமி அக்கா நம்ம பக்கம் வந்து உங்க அன்பான் கவிதை நடையில் வந்து நல்ல ஒரு கருத்தை எடுத்து விடுங்க. அன்புடன் இந்த...

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin