Friday, June 23, 2017

மரணம் இல்லாத வாழ்க்கை

#1
‘வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள்!’

#2
"மற்றவர்களை அறிந்து கொள்வது மெய்யறிவு,  
உன்னை நீ அறிந்து கொள்வது ஞானம்" 
- Lao Tzu 


#3
“ஒரு வாசகன் மரணிக்கும் முன் ஆயிரம் வாழ்க்கைகளை வாழ்ந்து விடுகிறான். எதுவுமே வாசிக்காதவன் ஒரே ஒரு வாழ்க்கையை மட்டுமே வாழ்கிறான்.”_George R.R. Martin

Thursday, June 15, 2017

கருவேப்பிலை - தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில்.. (10)

கருவேப்பிலை (அ) கறிவேப்பிலை 
#1
நான்கு முதல் எட்டு மீட்டர் உயரத்திற்கு வளரக் கூடிய சிறிய மரம்..
Murraya koenigii

14 ஜூன் 2017, தினமலர் “பட்டம்” இதழின் பக்கம் நான்கில்..

#2

Tuesday, May 30, 2017

வெண்புருவக் கொண்டலாத்தி ( White-browed Bulbul ) - தெரிஞ்சுக்கலாம் வாங்க..

#1

வெண்புருவக் கொண்டலாத்தி, ஒரு  கொண்டை வகைப் பறவை. ஆங்கிலப் பெயர்: White-browed Bulbul. உயிரியல் பெயர்: Pycnonotus luteolus. 
இலங்கையிலும் இந்திய தீபகற்பத்திலும் வாழ்கின்றன. தென்னிந்தியாவில் ஆண்டின் குறிப்பிட்ட காலங்களில் காணப்படுகின்றன. வடக்கே குஜராத், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய இடங்களில் காய்ந்த பரந்த கிராமப்புற குறுங்காடுகளிலும், அடர்த்தியான புதர்களுள்ள குறுங்காடுகளிலும் மற்றும் தோட்டங்களிலும் காணப்படும்.

#2

வெண்புருவக் கொண்டலாத்தியின் நீளம் 20 செ.மீ (சுமார் 7 அங்குலம் 8) இருக்கும். உடலின் மேற்பகுதி ஆலிவ் நிறத்திலும், கீழ்ப் பகுதியின் மேற்பக்கம் வெண்மையாகவும், அடிப்பக்கம் மஞ்சளாகவும் காணப்படும். வெண் கண் புருவம், கண்களுக்குக் கீழ் வெள்ளை நிறப் பிறை வடிவம் மற்றும் மீசை போன்ற கரிய கோடு ஆகியன இவற்றின் சிறப்பு அடையாளம் எனலாம்.

Sunday, May 28, 2017

தேவதைகள் நிஜமாகவே இருக்கிறார்கள்..

[மழலைப் பூக்கள் - படங்கள் பத்து..]

#
வெட்கப் புன்னகை

#
மகிழ்ந்தாடு மகளே மகிழ்ந்தாடு
உயரங்கள் பல நீ தொட
உறுதுணையாய் உடனிருப்போம்!
2016 சர்வதேசப் பெண் குழந்தைகள் தினத்தன்று
ஃப்ளிக்கரில் பகிர்ந்த படம்
#
பட்டுக் கிளியின் குட்டி உலகம்

Tuesday, May 23, 2017

’தென்றல்’ அமெரிக்கப் பத்திரிகையில்.. - வரம்.. நான்.. முடிவிலி..

மே 2017 , தென்றல் அமெரிக்கப் பத்திரிகையில்..
அட்டையில் அறிவிப்புடன்.. 
பக்கம் 70 - கவிதைப் பந்தலில்,
நான் எடுத்த படங்களுடன்..
கவிதைகள் மூன்று!

வரம்

Saturday, May 20, 2017

தோல்விகளும் தேவை.. - மாயா ஏஞ்சலோ வரிகள்

#1
“உங்களது கண்களால் என்னை வெட்டலாம்.  
உங்களது வெறுப்பால் என்னைக் கொல்லலாம். 
ஆனால் அப்போதும் காற்றைப் போல் 
மேலெழுந்து வருவேன் நான்.”

#2
“நிலவுகளைப் போல் சூரியன்களைப் போல்.., 
பொங்கும் கடலின் நிச்சயத்தன்மையுடன்.., 
ஊற்றெடுக்கும் நம்பிக்கையுடன்.., 
மேலெழுந்து வருவேன் நான்.” 


#3
“பல தோல்விகளை நீங்கள் சந்திக்கலாம், ஆனால் ஒருபோதும் நீங்கள் தோற்று விடக் கூடாது. ஒரு வகையில் தோல்விகள் நமக்குத் தேவையும் கூட, அப்போதுதான்.. ..

Tuesday, May 16, 2017

வினா வினா - சொல்வனத்தில்..

புரிபடாத விடயங்கள்
குறித்த வினாக்கள்
புரிந்து செய்த செயல்கள்
குறித்த மனக்கிலேசங்கள்
ஆகாயத்தின் பிரமாண்டத்துடன்
அச்சுறுத்தின பெரிதாக

பெரிய வினாக்களுக்கு
தயாராக இருந்தன
ஒரு நட்சத்திர அளவில்
எப்போதும் என்னிடத்தில்
சிறிய விடைகள்

Sunday, May 14, 2017

Saturday, April 29, 2017

அண்டிப் பிழைக்கும் ஆசியக் குயில்கள் - தெரிஞ்சுக்கலாம் வாங்க..

#1
ஆண் குயில்
ஆசியக் குயில் - Asian Koel 
உயிரியல் பெயர் - Eudynamys scolopacea

இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமாகப் பார்த்தால் மூன்று வகைக் குயில்கள் உள்ளன. அவற்றுள் ஆசியக் குயில் வகை பெரும்பாலும் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகின்றன. பங்களாதேஷ், பாகிஸ்தான், மியான்மர் ஆகிய நாடுகளிலும் வாழ்கின்றன.

#2
பெண் குயில்

குயில் காகத்தைவிட சற்று சிறியதாக ஆனால், உருண்டு திரண்டு பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வால் நீண்டிருக்கும். 

குயில் மரத்தில் மட்டுமே வாழும் பறவை, தரையில் காணப்படாது. சுமார் 36-46 செ.மீ அளவு வரை இருக்கும். குயிலுக்கு ‘காளகண்டம்’ என்ற பெயரும் உண்டு.

ஆண் குயில் பளபளப்பான கருமை நிறமுடையது; அலகு மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலும் கண்கள் இரத்தச்சிவப்பு நிறத்திலும் இருக்கும்.

#3

பெண் குயில் பழுப்பு அல்லது சாம்பல் நிற உடலுடன், மேலே முத்து முத்தாக வெண் புள்ளிகள் நிறைந்து  காணப்படும்.

#4
கிளிகள் போன்று கூட்டமாக அல்லாமல் குயில்கள் தனியாகப் பறந்து செல்லும். ..

Wednesday, April 26, 2017

கிருஷ்ணராஜபுர ஏரியும்.. பெங்களூர் நீர் நிலைகளும்..

#1
40 ஏக்கர் பரப்பளவிலான வெங்கையா அல்லது வெங்கைநகரே ஏரி, பெங்களூரின் (Old Madras Road) பழைய சென்னை சாலையில் உள்ளது. சில வருடங்களுக்கு முன் வரையிலும் இது மோசமான நிலைமையில் இருந்தது. ஏரி முழுவதும் தீங்கு விளைவிக்கும் நீர் பதுமராகம் மற்றும் களைகளால் நிரம்பியிருந்திருக்கிறது. மேலும் மோசமாகும் முன் ஏதேனும் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டிய கட்டத்தில், பெங்களூர் மாநகராட்சி 15 வருடங்களுக்குப் பராமரிக்குமாறு ஏரியை Lake Development Authority (LDA) - ஏரி வளர்ச்சி அதிகாரக்குழுவிடம் ஒப்படைத்தது. ஏரியை ஓரளவுக்கு சீரமைத்த LDA,  “ஃபேன்டஸி லகூன்” என்ற பெயரில் இயங்கும் தீம் பார்க் நிர்வாகத்திடம் மாதாந்திர வாடகைத் திட்டத்தில், ஒப்படைத்து விட்டது.

#2

ஸ்கூட்டர் படகு, பெடல் படகு, வேகப் படகு என விதம் விதமான படகுச் சவாரிக்கு பிரபலமாகி விட்டது. சிறுவர் பூங்கா, நடை மற்றும் ஓட்டப் பயிற்சிக்கான பாதைகள், ஆங்காங்கே இளைப்பாற இருக்கைகள், நீருக்கு நடுவே படகில் மட்டுமே செல்ல முடிகிற செயற்கைத் தீவுப் பூங்கா, சிறு உணவகங்கள் என நுழைவுக்கு, கேமராவுக்கு, பூங்கா விளையாட்டுகளுக்கு, படகுச் சவாரிக்கு எனத் தனித்தனியாக கட்டணம் வசூலித்து இலாபம் பார்க்கும் ஃபேண்டஸி லகூன் ஏரியையும் பூங்காங்களையும் சரிவரப் பராமரிக்கிறதா என்பது மிகப் பெரிய கேள்விக் குறி.

#3

Sunday, April 23, 2017

எளிய மனிதர்களும்.. எழுதப்படாத கதைகளும்..

#1
‘எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ..
அதுவரை நாமும் சென்றிடுவோம்..’
@ டாடா நகர்
#2
‘ரெண்டு பத்து ரூவா.. நாலு பதினஞ்சே ரூவா..’
@ நெல்லை

#3
சலவை
# முக்கூடல்

#4
நாளைய பாரதம்

Wednesday, April 19, 2017

இரட்டைவால் குருவி (Black Drango) - தெரிஞ்சுக்கலாம் வாங்க..

#1


சிறு பாடும் பறவையான இரட்டைவால் குருவி அல்லது கரிக்குருவியானது, கிளை அல்லது கொம்பினைப் பற்றிக் கொண்டு அமர்வதற்கேற்ற கால்களையுடைய passerine பறவையினஞ் சார்ந்தது. சிட்டுக்குருவியை விடச் சற்றே பெரிதான இப்பறவை கரிச்சான், காரி, கருவாட்டு வாலி என்றும் அழைக்கப்படும். ஆங்கிலத்தில் Black Drongo எனப்படும். இதன் உயிரியல் பெயர் 'Dicrurus macrocercus'.

திவ்யப் பிரபந்தங்களில் வழங்கப்படும் ஆனைச்சாத்தன் என்ற பெயரும் இப்பறவையைக் குறிப்பதே என்கிறார்கள்.

Tuesday, April 18, 2017

இவனும் அவனும் - சிறுகதைத் தொகுப்பு - ஒரு பார்வை

னிதர்களை, அவர்களது பல்வேறு குணாதிசயங்களை, மேன்மையான கீழ்மையான எண்ணங்ளை, புரிந்து கொள்ள முடியாத  மனச் சிக்கல்களை, கனவுகள் - நம்பிக்கைகள் - ஏமாற்றங்களை, சமூக அவலங்களை தீர்க்கமாகச் சொல்லிச் செல்கிறார் தன் எழுத்தெங்கிலும் கதாசிரியர் திரு. ஹேமலதா பாலசுப்பிரமணியம். 
1950ஆம் ஆண்டு முதல் 1980 வரையிலுமாக பல பத்திரிகைகளில் வெளியானவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 25 கதைகளின் தொகுப்பே “இவனும் அவனும்”.

Friday, April 14, 2017

ஹேமலம்ப சம்வத்சரம்

இன்று தொடங்குகிறது 'ஹேவிளம்பி' (அ)  'ஹேமலம்ப சம்வத்சரம்'.

#1

சம்வத்சரம் என்றால் ஆண்டு, வருடம் என்று அர்த்தம்.

‘ஹேம என்றால் தங்கம்..லம்ப என்றால் லட்சுமி. இரண்டையும் சேர்த்து சொல்லிப் பார்க்கும்போது இந்த வருடப் பெயரின் அர்த்தம் விளங்கும்.
எல்லா வகையிலும் 'செழிப்பான' ஆண்டாக இருக்கும்’ என்கிறார்கள்.

#2

அகஸ்தியர் பரம்பரையில் வந்த சித்தர்களால் இந்த வருடம் 'ஹேவிளம்பி' வருடம் என்றும் அழைக்கப்படுகிறது.

இறையருளால் வெற்றி விநாயகரின் திருவருளால்
 எல்லோருக்கும் இனிதாகட்டும் ‘ஹேவிளம்பி’!

#3
கணேஷ சரணம் சரணம் கணேஷ

Sunday, April 9, 2017

வண்ணக் கனவுகள்

#1
‘திரும்பும் வழிகள் அடைபட்டுப் போகையில், உங்கள் உள்ளுணர்வு உங்களை முன்னடத்திச் செல்லும்.’
#2
பெருமைகளைக் கடந்து நிற்பது நல்ல விஷயம், ஆனால் அப்படி கடப்பதற்குப் பெருமைப்படக் கூடிய விஷயம் இருந்தாக வேண்டும்.
- Georges Bernanos

#3
‘உங்கள் வாழ்க்கையைக் கருப்பு வெள்ளையில் காண்பது போல உணருகிறீர்களா?

Wednesday, April 5, 2017

தூறல்: 29 - ஆட்டிஸ தினம்; சூழல் மாசு; வல்லமை; ஆல்பம்

ப்ரல் 2, உலக ஆட்டிஸ விழிப்புணர்வு தினம். மாதம் முழுவதுமே அனுசரிக்கப்படுகிறது. பத்திரிகைகள், செய்தி ஊடகங்கள், தன்னார்வலர்கள், பெற்றோர் மற்றும் பயிற்சி மையங்கள் என அனைத்துத் தரப்பினரும் விழிப்புணர்வுக்கான முயற்சிகளைப் பரவலாக முன்னெடுத்துச் செல்கின்றனர். இது குறித்த சில பகிர்வுகள் இங்கே:

ஆட்டிஸ குழந்தைகளுக்கு இலவசப் பயிற்சிகள் வழங்குவதோடு அவர்களின் பெற்றோர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி அரவணைக்கும் அரசு நிறுவனமான நிப்மெட் குறித்து விரிவாக இந்த இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்:
#


ஆட்டிஸ குழந்தைகளின் பெற்றோர் மட்டுமின்று சமூகத்தின் அங்கத்தினராக அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய தகவல்கள் இங்கே:

#ஏப்ரல் 2,  ‘தி இந்து’ செய்தியாளர் பக்கத்தில் திரு யெஸ். பாலபாரதியின் கட்டுரை:நேற்றைய ‘தி இந்து’ இணைய தளத்தில் லக்ஷ்மி பாலக் கிருஷ்ணன் எழுதியிருக்கும் சிறப்பு கட்டுரை..


மற்றும் இவர் தனது ‘மலர் வனம்’ வலைப்பூவில் எழுதியுள்ள கட்டுரை:


**
சில ஆண்டுகளுக்கு முன்  ‘ஐடி நகரின் அவலம்’ என உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த, சாயக் கழிவுகளால் நுரைந்துப் பொங்கி வழிந்த, பெங்களூர் வர்த்தூர் ஏரியின் மாசுப் பிரச்சனை இன்னும் தீர்ந்த பாடில்லை.

கீழ் வரும் படங்கள் அனைத்தும் பத்து நாட்களுக்கு முன்னர் அந்தப் பக்கமாகச் சென்ற போது வண்டிக்குள் இருந்து எடுத்தவை...
#

ஏதோ பனிப்பிரதேசத்தில் இருப்பது போல பொங்கிக் கொண்டே இருக்கும் இந்த நச்சு நுரையானது பறந்து  பாலங்களிலும் சாலைகளிலும் உருண்டோடி பல விபத்துகளையும் ஏற்படுத்தி வருகிறது.

#

Sunday, March 26, 2017

ஆயிரம் சூரியன்கள்

#1
“இருளால் இருளை விரட்ட இயலாது: ஒளியால் மட்டுமே இயலும். வெறுப்பால் வெறுப்பை விரட்ட இயலாது: அன்பால் மட்டுமே அது சாத்தியம்.”
_Martin Luther King Jr.


#2
 ‘ஏற்றுங்கள் விளக்கை. இருள் தானாக அகலும்.’
_Desiderius Erasmus


#3
“உன்னுள்ளேயே இருக்கிறது ஆயிரம் சூரியன்களின் வெளிச்சம்”
_Robert Adams

Saturday, March 25, 2017

புன்னகையால் புரிய வைப்போம்! - பெண் சக்தி

ங்கள் சக்தி, அறிவு, திறமையை உலகுக்கு வெளிப்படுத்தும் வாய்ப்புக் கிடைத்த பெண்களில் சிலருக்கு அங்கீகாரங்களும் மரியாதைகளும் தேடி வர, சிலருக்கு அவை மறுக்கப்படுகின்றன. இன்னும் பலருக்கோ அவற்றை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்காமலே போகின்றன. ஆனால் ஒவ்வொரு பெண்ணும் தன் வழியில் பல போராட்டங்களைச் சமாளித்து, தோல்விகளில் கற்று, வெற்றிகளில் களித்து நின்றிடாமல் இயல்பாகக் கடந்து, மேலும் வேகத்தோடு முயன்று, வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்கள்.

மகளிர் தினம் அனுசரிக்கப்படும் மார்ச் மாதத்தில் நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் அப்படியான பல அசாதாரணப் பெண்மணிகளின் படங்களை ஃப்ளிக்கரில் பகிர்ந்து பின்னர் இங்கே தொகுப்பாக்கி வருகிறேன், கடந்த சில வருடங்களாக.  இந்த வருடத் தொகுப்பாக.. கருப்பு வெள்ளைப் படங்கள் பத்து.. பொன்மொழிகளுடன்..

#1
‘நம்மால் இதற்கு மேல் முடியாது என நினைத்து, ஆனாலும் தொடர்ந்து பயணிக்கையில் அதிகரிக்கிறது பலம்’
__Karen Salmansohn
#2
‘வாழ்க்கைச் சவால்களை எதிர் கொள்ளும் நம்பிக்கை இருப்பதை
புன்னகை மூலமாகப் புரிய வையுங்கள் உலகுக்கு’


#3
‘தன்னம்பிக்கை என்பது மற்ற எவரும் உங்களை நம்பாத போது, உங்களை நீங்களே நம்புவது’

Wednesday, March 15, 2017

அணில் ( Squirrel ) - தெரிஞ்சுக்கலாம் வாங்க..

#1
உயிரியல் பெயர்: Sciuridae

ணில் (Squirrel) மரத்தில் வசிக்கும் ஒரு கொறிணி (Rodent) அதாவது உணவைக் கொறித்து உண்ணும் சிறு விலங்கு. அணிலில் பலவகை உண்டு. இந்தியாவில் காணப்படும் அணில்கள் வெளிர்சாம்பல் நிறத்தில் முதுகில் மூன்று கோடுகளைக் கொண்டிருக்கும்.

#2
  ஆங்கிலப் பெயர்: Squirrel        
இவை 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்துள்ளன என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

Sunday, March 12, 2017

உள்ளது உள்ளபடி..

#1
‘சென்று திரும்ப இனிமையானது, கடந்த காலம். ஆனால் நிரந்தரமாகத் தங்க உகந்ததன்று.’


#2 ‘மந்தையோடு செல்வது எளிது. தனித்து நிற்கத் தைரியம் வேண்டும்.’

#3
உறக்கம் ஒரு சிறந்த தியானம்
_ தலாய் லாமா

Wednesday, March 8, 2017

மாறி வரும் பணி உலகில் மகளிர் - பெண்கள் தின வாழ்த்துகள்!

#1

சர்வதேச மகளிர் தினத்தின் இந்த வருடக் கரு: 

Be Bold for Change
#2
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உலகின் பல பாகங்களிலும் ஒன்றாக இந்நாளை மகளிர் தினமாகக் கொண்டாடி வருகிறார்கள். இதற்கான வித்தாக இருந்தது..

Sunday, March 5, 2017

உன்னுள்ளே பிரபஞ்சம்

#1
நம்மால் முடியும் என நம்பினாலே பாதி தூரத்தைக் கடந்து விட்டோம் என்று பொருள்.
_ தியோடர் ரூஸ்வெல்ட்

#2
‘நம்மால் மாற்றிக் கொள்ள முடியாதவற்றைப் பற்றி
குறைபட்டுக் கொள்ளாதிருப்போமாக!’


#3
உங்கள் கருணை உங்கள் மீது இல்லாது போகுமானால், அது முழுமை அடையாது.
-புத்தர்

Wednesday, March 1, 2017

"சுதந்திரம்" சிறு குறிப்பு வரைக - குறும்படம் - ஒரு பார்வைகாலம் எவ்வளவோ மாறி விட்டது. வெளியிடங்களிலும் சரி, வீட்டிலும் சரி, பெண்கள் இன்று எல்லா வகையிலும் சுதந்திரமாக வாழ்கிறார்கள், இயங்குகிறார்கள்’ என்பது ஒரு மாயத் தோற்றம்தான். ‘என்றைக்குப் பெண்கள் நடுநிசியில் நம் நாட்டின் வீதிகளில் நடந்து செல்லுகையில் பாதுகாப்பாக உணருகிறார்களோ அப்போதுதான் இந்தியா உண்மையான சுதந்திரத்தை அடையும்’ என்றார் காந்தி. நடுநிசி என்ன, நந்தினி, ஹாஸினி எனக் குழந்தைகளைக் கூட விட்டுக் வைக்காத கொடுமைகள் நடக்கும் கலியுகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

உண்மைதான், இருபது முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய காலக் கட்டத்தை விடவும் அதிக அளவில் இன்று பெண்கள் கல்வியில், பணியிடங்களில் பிரகாசிக்கிறார்கள். பல்வேறு துறைகளில் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஒரு உயர்ந்த நிலையை அடைய எத்தனையோ இடர்களையும் போராட்டங்களையும் அவர்கள் சந்திக்க நேர்ந்திருப்பினும், பெற்ற வெற்றி அவற்றைப் பின்னுக்குத் தள்ளி விட்டுப் பெருமையைக் கொடுக்கிறது. ஆறுதல் அளிக்கிறது. அதே நேரம் நாட்டின் இன்னொரு பக்கம், போராடுவதற்கான வாய்ப்புகள் கூட அளிக்கப் படாமல், பிறப்புரிமையான கல்வி கூட ஆசைப்பட்டபடிக் கிடைக்காமல், திறமைகளை வெளிக்காட்ட வழியில்லாத சிறகொடிந்த கூண்டுப் பறவைகளாக பல இலட்சம் பெண்கள். குழந்தைத் தொழிலாளர்களாக மாறிக் கொண்டிருக்கும் சிறுமியரோடு, சிறார்களும் இதில் சேர்த்தி. இவர்கள் எல்லோரும் பழமையான எண்ணங்களிலிருந்து விடுபடாத நவ நாகரீக மனிதர்கள் நிறைந்த சமூகத்திடம் அல்லது அந்த சமூகத்திடம் கைதிகளாகிப் போன பெற்றோர்களிடம் தோற்று, தங்கள் அடையாளங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதை உரத்துப் பேசுகிறது, M பிக்ஸர்ஸின் மூன்றாவது குறும்படமான "சுதந்திரம்" சிறு குறிப்பு வரைக

Monday, February 27, 2017

சின்னஞ்சிறு தேன் சிட்டு

#1

ண்மூடித் திறக்கும் முன் மலருக்கு மலர் தாவி தேனை உறிஞ்சி விட்டு மின்னல் வேகத்தில் பறந்து விடும் சின்னஞ்சிறு பறவை தேன் சிட்டு. 10 செ.மீட்டருக்கும் குறைவான அளவிலானது. கூரான வளைந்த அலகைக் கொண்டது. முருங்கைப் பூக்களிலும் தேன் உண்ணுமாயினும் செம்பருத்தியே இதற்கு மிக இஷ்டம். தோட்டத்தில் அடுத்தடுத்து நான்கு வகை செம்பருத்தி மரங்கள் உள்ளன. சிகப்பு, இளஞ்சிகப்பு, அடுக்குச் செம்பருத்தி மற்றும் வெள்ளை. வெள்ளை செம்பருத்தி மரத்தில் ஒரே நேரத்தில் பத்து முதல் பதினைந்து வரை பூக்கள் பூக்கும்.  காற்றில்லாத வேளையிலும் மலர்கள் மேலும் கீழுமாக ஊஞ்சலாடிக் கொண்டிருந்தால், ‘இவன் வந்து விட்டான்’ என்று பொருள் :)! 

#2
https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/32950185392/
‘கொஞ்சம் இருப்பா.. மின்னல்..’ எனக் கெஞ்சிய படியே கேமராவில் இவனை சிறை பிடிக்கப் பலமுறை முயன்று, பலனளிக்காமலே போயிருக்கிறது.  ‘சிட்டாகப் பறந்தான்.. பறந்தாள்..’ எனும் உவமைகள் எத்தனை சரியானது எனப் புரிந்தது.
சென்ற வாரம் ஓசைப் படாமல் கதவருகே காத்திருந்து காட்சிப் படுத்திய, ஓரளவுக்கு வெற்றி கிட்டிய படங்கள்.. இங்கே..

Monday, February 20, 2017

4 & 5 மார்ச், 2017 - நாகர்கோயிலில்.. புகைப்படப் போட்டி.. மற்றும் புகைப்படக் கண்காட்சி

தமிழ் நாடு வீடியோ ஃபோட்டோகிராஃபர்ஸ் அசோசியேசன் 
மற்றும் 
 புகைப்படப்பிரியன் (www.facebook.com/pugaipadapirian
ஆதரவுடன்..

கன்னியாகுமரி மாவட்ட போட்டோ வீடியோ அசோசியேசன் 
நடத்தும்..

மாபெரும் புகைப்படப்போட்டி மற்றும் புகைப்பட கண்காட்சி..

நாள்:
 மார்ச் 4 & 5 - 2017

இடம்:
வளனார் மண்டபம் , அசிசி வளாகம், வெப்பமூடு ஜங்ஷன், நாகர்கோயில்


தீம்:

Thursday, February 9, 2017

செங்குதச் சின்னான் (கொண்டலாட்டி) - தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில்.. (9)

 செங்குதச் சின்னான்
உயரம்: 20 செ.மீ
ஆயுள்:  9-10 ஆண்டுகள்

6 பிப்ரவரி 2017 தினமலர் “பட்டம்” இதழின்.. 

பக்கம் நான்கில்.. 


படத்துடன் சேகரித்த தகவல்கள்..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin