ஒன்றையொன்று
ஒருவரையொருவர்
சார்ந்ததே ஜீவிதமென்பதை
ஏற்காத இறுமாப்பும்
எனக்கு ஈடு யாருமில்லை
எவர் உதவியும் தேவையில்லை
என்கிற அகந்தையுமாய்
வாழ்ந்தே பழகிவிட்ட மாவீரன்
விழுந்து வைத்தான்
வேட்டைக்குச் சென்ற இடத்தில்
யானைக்கு வெட்டிய குழியில்
யாருமற்ற வனவெளியில்.
பார் போற்றும் பலசாலிக்கும்
சூழ்ந்தது நெஞ்சினில் பயமேகம்
பரவியிருந்த இருளில்
பார்வைக்கு எதுவும் புலப்படாத பள்ளத்தில்.
கொள்கையைக் கொஞ்சம் தள்ளிவைத்து
எழுப்பிய அபயக்குரல்
கானகத்தின் காற்றோடு கரைந்துபோக
மெல்ல நகர்ந்த மணித்துளிகள்
மேலும் அச்சுறுத்த
சிங்கமா சிறுத்தையா
அனுமானிக்க இயலா உறுமல்களில்
முதுகுத் தண்டுகள் சில்லிட
இறைஞ்சி அழைத்தான் வனதேவதையை
இருகரம் குவித்து
இருக்கட்டுமே இதுவொரு
இறுதி நம்பிக்கையாக என்று.
ஓங்கி வீசிய காற்றில்
மோதியது முகத்தில்
ஓரிரு நொடிகளில் எல்லாம்
பக்கத்து ஆலமரவிழுது
தட்டுத்தடுமாறித் தப்பித்து மேலேறி
போய்கொள்ளலாம் பொழுதோடு என
ஆலங்கிளையோடு கிளையாக
ஆசுவாசமானவன் அகமகிழ்ந்தான்
‘நல்லவேளை
எவருக்கும் நன்றிசொல்லத் தேவையின்றி
அந்த வனதேவதையும் வரும் முன்னே
காப்பாற்றிக் கொண்டேன் என்னை நானே!’
தோற்றுப் போனதாய் வருந்தவில்லை
கொள்கையும் நம்பிக்கையும்
தெளிவாய் இருந்தன
‘ஒன்றையொன்று’ நியதியின்படி..
தமது ஜீவிதம்
சரிந்தும் சாய்ந்தும் கொடுத்தபடி
சந்தர்ப்பங்களையும் செளகரியங்களையும்
சார்ந்தே என்று.
*** *** ***
படம் நன்றி: உயிரோசை
உயிர்மை.காமின் 2 ஆகஸ்ட் 2010 உயிரோசை இணைய இதழில்..
வித்தியாசமான கவிதை.
பதிலளிநீக்குஅருமை.. எல்லாவற்றையும்விட தன்னையும் நம்பியதால்தான் தப்பித்தான் போலும்..
பதிலளிநீக்குவித்தியாசமான கவிதை... அருமை.
பதிலளிநீக்குநல்ல கருத்துள்ள கவிதை.அருமை.
பதிலளிநீக்குNice .Congrats.
பதிலளிநீக்குகவிதையின் ஒவ்வொரு வரியும் அர்த்தம் பொதிந்த வரிகள். அருமை!
பதிலளிநீக்குநல்ல கவிதை.
பதிலளிநீக்குபல ஆண்டுகளுக்கு முன்,இதேபோல் தனிமனிதனுக்கு அறிவுரையாக வந்த மற்றொரு கவிதை ஒன்று
பதிலளிநீக்குதிண்ணையில் வாசித்த ஞாபகம்
கவிதை அருமை அக்கா
பதிலளிநீக்குஅக்கா...அப்படியே ஏதோ பாடம் சொல்லித் தாறமாதிரி இருக்கு.அசத்தல்.வாழ்த்தும்கூட !
பதிலளிநீக்குகவிதை அருமை ராமலெக்ஷ்மி.. ஏன் இத்தனை நாளாக போஸ்ட் செய்யவில்லை..!!
பதிலளிநீக்குபுதிய பார்வையில் புதுக்கருத்து ஹேமா சொன்ன மாதிரி பாடம் படிச்ச மாதிரி இருந்ததுப்பா,,,
பதிலளிநீக்குநல்ல கருத்தான கவிதை!!
பதிலளிநீக்குஎளிமையான வரிகளில் நல்ல கவிதை
பதிலளிநீக்கு\\நல்லவேளை
பதிலளிநீக்குஎவருக்கும் நன்றிசொல்லத் தேவையின்றி
அந்த வனதேவதையும் வரும் முன்னே
காப்பாற்றிக் கொண்டேன் என்னை நானே!//
:)
ஆகா..மனுசங்க! சஜமப்பா..
நல்லதொரு கருத்து ராமலக்ஷ்மி..
பதிலளிநீக்குநிமிடங்களின் இடைவேளையில் மாறிவிடுகிறது மனம்...
பதிலளிநீக்குநல்லாயிருக்குங்க.
அருமையான கவிதை, அக்கா... பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குஇரு பக்கமும் கூரான கத்திபோல
பதிலளிநீக்குஇக்கவிதையில் இரண்டு வகையிலும்
பொருள் கொள்ளவழி இருக்கிறது
இக்கவிதையின் சிறப்பே அதுதான்
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
பிடித்த கவிதையில் இதுவும் ஒன்று
பதிலளிநீக்குவாழ்த்துகள்!
//தோற்றுப் போனதாய் வருந்தவில்லை
பதிலளிநீக்குகொள்கையும் நம்பிக்கையும்//
arumai... vaalththukkal
:) 'ச்சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்' கதைதான் :) நேரத்துக்குத் தகுந்தாற் போல் மாறிக் கொள்ளும் மனித மனம். நல்லா சொல்லியிருக்கீங்க ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குகவிதையில் அருமை,புதுமை மிளிர்கின்றது,
பதிலளிநீக்குமிக நல்ல கருத்து அக்கா.
பதிலளிநீக்குஅருமையான கவிதை ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
கலாநேசன் said...
பதிலளிநீக்கு//வித்தியாசமான கவிதை.//
நன்றி கலாநேசன்.
அமைதிச்சாரல் said...
பதிலளிநீக்கு//அருமை.. எல்லாவற்றையும்விட தன்னையும் நம்பியதால்தான் தப்பித்தான் போலும்..//
தன் மேலான நம்பிக்கை குறைய ஆரம்பித்தபோது வனதேவதையை அழைத்துப் பார்த்தான் என்றாலும் இயல்பான நம்பிக்கையும் துணை இருந்திருக்கும்தான்:)! நன்றி சாரல்.
சே.குமார் said...
பதிலளிநீக்கு//வித்தியாசமான கவிதை... அருமை.//
நன்றி குமார்.
asiya omar said...
பதிலளிநீக்கு//நல்ல கருத்துள்ள கவிதை.அருமை.//
நன்றி ஆசியா.
மோகன் குமார் said...
பதிலளிநீக்கு//Nice .Congrats.//
நன்றி மோகன் குமார்.
Sriakila said...
பதிலளிநீக்கு//கவிதையின் ஒவ்வொரு வரியும் அர்த்தம் பொதிந்த வரிகள். அருமை!//
நன்றி ஸ்ரீஅகிலா.
தமிழ் உதயம் said...
பதிலளிநீக்கு//நல்ல கவிதை.//
நன்றி தமிழ் உதயம்.
goma said...
பதிலளிநீக்கு//பல ஆண்டுகளுக்கு முன்,இதேபோல் தனிமனிதனுக்கு அறிவுரையாக வந்த மற்றொரு கவிதை ஒன்று
திண்ணையில் வாசித்த ஞாபகம்//
அனுபவத்தில் உணர்ந்தது பார்த்தது கேட்டதுதானே எழுத்தாகிறது. அவை சிலருக்குப் படைப்பாகவும் சிலருக்குப் பாடமாகவும் தெரிகிறது. இங்கு மனிதர்களின் கையில் மாட்டிக் கொண்டு அல்லலுறும் கொள்கையையும் நம்பிக்கையையும் பற்றி என் பார்வையில் பதிந்துள்ளேன்! நன்றி கோமா:)!
சசிகுமார் said...
பதிலளிநீக்கு//கவிதை அருமை அக்கா//
நன்றி சசிகுமார்.
ஹேமா said...
பதிலளிநீக்கு//அக்கா...அப்படியே ஏதோ பாடம் சொல்லித் தாறமாதிரி இருக்கு.அசத்தல்.வாழ்த்தும்கூட !//
நன்றி ஹேமா:)!
தேனம்மை லெக்ஷ்மணன் said...
பதிலளிநீக்கு//கவிதை அருமை ராமலெக்ஷ்மி.. ஏன் இத்தனை நாளாக போஸ்ட் செய்யவில்லை..!!//
இன்னும் இதுபோல சில ட்ராஃடில் அப்படியே உள்ளன:)! சீக்கிரம் பதிகிறேன். நன்றி தேனம்மை!
தமிழரசி said...
பதிலளிநீக்கு//புதிய பார்வையில் புதுக்கருத்து ஹேமா சொன்ன மாதிரி பாடம் படிச்ச மாதிரி இருந்ததுப்பா,,,//
மிக்க நன்றி தமிழரசி.
S.Menaga said...
பதிலளிநீக்கு//நல்ல கருத்தான கவிதை!!//
நன்றி மேனகா.
VELU.G said...
பதிலளிநீக்கு//எளிமையான வரிகளில் நல்ல கவிதை//
நன்றி வேலு.
முத்துலெட்சுமி/muthuletchumi said...
பதிலளிநீக்கு***\\நல்லவேளை
எவருக்கும் நன்றிசொல்லத் தேவையின்றி
அந்த வனதேவதையும் வரும் முன்னே
காப்பாற்றிக் கொண்டேன் என்னை நானே!//
:)
ஆகா..மனுசங்க! சஜமப்பா../***
ஆமா, அப்படித்தான் போக வேண்டியிருக்கு:)! நன்றி முத்துலெட்சுமி.
பாச மலர் / Paasa Malar said...
பதிலளிநீக்கு//நல்லதொரு கருத்து ராமலக்ஷ்மி..//
நன்றி பாசமலர்.
சி.கருணாகரசு said...
பதிலளிநீக்கு//நிமிடங்களின் இடைவேளையில் மாறிவிடுகிறது மனம்...
நல்லாயிருக்குங்க.//
உண்மைதான். நன்றி கருணாகரசு.
Chitra said...
பதிலளிநீக்கு//அருமையான கவிதை, அக்கா... பாராட்டுக்கள்!//
நன்றி சித்ரா.
Ramani said...
பதிலளிநீக்கு//இரு பக்கமும் கூரான கத்திபோல
இக்கவிதையில் இரண்டு வகையிலும்
பொருள் கொள்ளவழி இருக்கிறது
இக்கவிதையின் சிறப்பே அதுதான்
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்//
மிக்க நன்றிங்க ரமணி.
ஈரோடு கதிர் said...
பதிலளிநீக்கு//பிடித்த கவிதையில் இதுவும் ஒன்று
வாழ்த்துகள்!//
மிக்க நன்றி கதிர்.
மதுரை சரவணன் said...
பதிலளிநீக்கு***//தோற்றுப் போனதாய் வருந்தவில்லை
கொள்கையும் நம்பிக்கையும்//
arumai... vaalththukkal?***
நன்றி சரவணன்.
கவிநயா said...
பதிலளிநீக்கு//:) 'ச்சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்' கதைதான் :) நேரத்துக்குத் தகுந்தாற் போல் மாறிக் கொள்ளும் மனித மனம். நல்லா சொல்லியிருக்கீங்க ராமலக்ஷ்மி.//
நன்றி கவிநயா:)!
ஸாதிகா said...
பதிலளிநீக்கு//கவிதையில் அருமை,புதுமை மிளிர்கின்றது,//
வாங்க ஸாதிகா. மிக்க நன்றி.
சுசி said...
பதிலளிநீக்கு//மிக நல்ல கருத்து அக்கா.//
நன்றி சுசி!
கோமதி அரசு said...
பதிலளிநீக்கு//அருமையான கவிதை ராமலக்ஷ்மி.
வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி கோமதிம்மா.
தமிழ்மணம், இன்ட்லியில் வாக்களித்த அனைவருக்கும் என் நன்றி.
பதிலளிநீக்குபார் போற்றும் பலசாலிக்கும்
பதிலளிநீக்குசூழ்ந்தது நெஞ்சினில் பயமேகம்
தன்னம்பிக்கையால் தப்பிப் பிழைத்தவருக்கு வாழ்த்துக்கள்.
அந்த வன தேவதைதான் ஆலம் விழுதை முகத்தில் மோத விட்டது என்று ஏன் அவனுக்குத் தோன்றவில்லை?
பதிலளிநீக்கு