வியாழன், 27 பிப்ரவரி, 2014

இலைகளுக்குள் ஒளிந்திருக்கும் கவித்துவம் - நன்றி திரு. க. அம்சப்ரியா!

தமிழாசிரியரும், மாதமிருமுறை வெளியாகும் “புன்னகை - கேட்பினும் பெரிது கேள்!” கவிதை இதழின் ஆசிரியருமாகிய கவிஞர். க. அம்சப்ரியா அவர்கள் எனது கவிதைத் தொகுப்புக்கு அளித்திருக்கும் மதிப்புரையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்:
இலைகளுக்குள் ஒளிந்திருக்கும் கவித்துவம் 
இதற்கு முன்பும் இலைகள் உதிர்ந்து கொண்டிருந்தன. இனியும் உதிரும்... நீங்களும் நானும் இந்தத் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கையில் ஆயிரமாயிரம் இலைகள் உதிர்ந்தபடியிருக்கும். ஒரு மரம் துளிர்த்துக் கொண்டிருக்கும் போது, ஒரு செடி தனக்கான கடைசி இலையையும் உதிர்த்துவிட்டு வெறுமனே தண்டோடு நின்றிருக்கத்தான் செய்யும். மறுபடியும் மழை வரும்... தான் செழித்து வளர்வதற்கான வாய்ப்பும் அமையுமென்று காத்திருக்கும் செடிகளாக ஒவ்வொரு இலையாக உதிர்த்த செடி மனிதர்கள் காத்திருக்கிறார்கள்.

புதன், 26 பிப்ரவரி, 2014

2014 ஜனவரி மாதத்தில்.. - குங்குமம் தோழி fb_யில்..

எடுத்த ஒளிப்படங்களோடு நான் பகிர்ந்து வரும் மொழிகளிலிருந்து பதினொன்று, குங்குமம் தோழியின் FB பக்கத்தில் தினமொழிகளாக.. சென்ற மாதத்தில்..!

தன் வாசகர்களுடன் பகிர்ந்திருக்கும் 
குங்குமம் தோழிக்கு என் நன்றி!

#1

#2

#3

சனி, 22 பிப்ரவரி, 2014

முப்பாட்டன் சொத்தா பூமி? - ஹல்சூரு ஏரி, பெங்களூரு

#1
பழமையானதும் பெங்களூரின் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றும் ஆன அல்சூர்(ஹல்சூரு) ஏரி, நகரின் மையத்தில், மகாத்மா காந்தி சாலைக்கு அருகே உள்ளது. பெங்களூரை உருவாக்கிய முதலாம் கெம்பகெளடா (1513-1569), அல்சூர் கிராமத்தை விஜய நகர அரசர்களிடமிருந்து பரிசாகப் பெற்றிருக்கிறார். அல்சூர் ஏரி இரண்டாம் கெம்ப கெளடாவினால் நிர்மாணிக்கப் பட்டது. ஏரிக்கு அருகாமையில் ஒரு பலாப்பழத் தோட்டம் இருந்திருக்கிறது. கன்னட மொழியில் பலாவை 'ஹலசின ஹன்னு' என்பார்கள். அதனாலேயே இந்த இடம் ‘ஹல்சூரு’ என அழைக்கப்பட்டிருக்கிறது. பின்னாளில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஹல்சூரு.. அல்சூர் ஆகிவிட்டது. 1807_ல்முதல் பிரிட்டிஷ் இராணுவ நிலையம் இங்குதான் அமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

123 ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரந்திருக்கும் ஏரி பல சிறு தீவுகளைத் தன்னுள் கொண்டது.
#2

ஏரியைச் சுற்றிய கரையின் நீளம் சுமார் 3 கிலோ மீட்டர்.

புதன், 19 பிப்ரவரி, 2014

மெளனத்தின் வலிமை

1. வலிமையான ஆயுதங்கள் புன்னகையும் மெளனமும். பிரச்சனைகளைத் தீர்க்க வல்லது புன்னகை. தவிர்க்க வல்லது மெளனம்.

2. மனம் அமைதியுறும் போது ஆன்மா பேசத் தொடங்குகிறது.

திங்கள், 17 பிப்ரவரி, 2014

“பெங்களூர், உங்கள் பார்வையில்..”- AID நடத்தும் ஒளிப்படப் போட்டி

AID (Association for India's Development) ஒரு இலாப நோக்கற்ற, தன்னார்வ நிறுவனம். பாராபட்சமற்ற நடுநிலையான, நியாயமான சமுதாயத்தை உருவாக்கவும், சமுதாயத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்காவும் பாடுபட்டு வருகிறது. கல்வி,வாழ்வாதாரம், ஆரோக்கியம், பெண்கள் உரிமை, இயற்கை வளம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் AID, பெங்களூரில் பரவலாக மக்களிடம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்தப் போட்டியை அறிவித்துள்ளது. அத்தோடு நிதி திரட்டி இது போன்ற சேவைகளுக்கு ஊக்கம் தரும் முயற்சியிலும் இறங்கியுள்ளது.


*
SOUL - SPACE - SOCIETY
BANGALORE AS YOU SEE IT
[ஆன்மா - வெளி - சமூகம்
பெங்களூர், உங்கள் பார்வையில்..]
இதுதான் தலைப்பு.

*இதற்கென உருவாக்கப்பட்டுள்ள Face Book பக்கத்தில் படங்களை வலையேற்ற வேண்டும்: https://www.facebook.com/AIDIndiaBangalore?sk=app_292725327421649 [படம் ஏற்றுவதில் error message வருமாயின் வேறொரு browser உபயோகித்துப் பார்க்கவும்.]

அங்கேயே விதிமுறைகளும் தரப்பட்டிருந்தாலும் தமிழில் இங்கும்:

*ஒருவருக்கு 5 படங்கள் வரை அனுமதி.

*இரண்டே பரிசுகள்தாம். முதல் பரிசு ரூ 10000/- இரண்டாம் பரிசு ரூ 5000/-

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு..

(Indoor) உள்ளரங்குப் படங்கள்.. ஒரு தொகுப்பு..

#1 குழலூதும் கண்ணன்

#2 சாக்லேட் ஊற்று

#3 மயிற்பீலி

#4 மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு..

சனி, 15 பிப்ரவரி, 2014

இரா. குணா அமுதன் பார்வையில்.. - இலைகள் பழுக்காத உலகம்

ஒளிப்படக் கலைஞரும் எழுத்தாளருமான இரா. குணா அமுதன் அவர்களின் ‘இலைகள் பழுக்காத உலகம்’ குறித்த ஃபேஸ்புக்கில் பகிர்வை இங்கும் பதிந்து வைப்பதில் மகிழ்ச்சி.
விதைகளுக்கான களத்தில் இருந்து சற்று விலகி நின்று கொண்டே இதை எழுதுகிறேன்.வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவருமே கவிஞர்கள் ஆகி விட்டபடியால் நல்ல கவிதைக்கான சாத்தியங்கள் வெகுவாகக் குறைந்து போனதாக எனக்குத் தோன்றியது.இதே மன நிலையில் வெகு எளிதாகக் கடந்து விடலாம் என்ற நம்பிக்கையோடு தான் இராமலக்ஷ்மி அவர்களின் "இலைகள் பழுக்காத உலகம்" கவிதை நூலைக் கையில் எடுத்தேன்.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

தூறல் 14 - என் வானம்; அடை மழை; அகநாழிகை; பெஸ்ட் ஃபோட்டோகிராபி டுடே; குமரியில் புகைப்படப் பிரியன்

அடை மழை
சென்னை புத்தகக் கண்காட்சிக்கு எனது புத்தகங்களை வாங்கவென்றே சென்றதுடன், வாங்கிய கையோடு அங்கிருந்து மகிழ்வோடு வாழ்த்துத் தெரிவித்தவர், நான் விரும்பி வாசிக்கும் 'என் வானம்' தளத்துக்குச் சொந்தக்காரரான அமுதா. அடுத்த இருதினங்களில் திடீர்ப் பயணமாக அலுவலக வேலையாக பெங்களூர் வந்தவர் வேலை முடிந்ததும் மறுநாள் காலையில் கிளம்பும் திட்டத்தை என்னைச் சந்திக்கவென மாற்றிக் கொண்டு மாலை விமானத்துக்கு டிக்கெட் எடுத்திருந்தார். அடைமழை போன்றதான அன்புக்கு நன்றி அமுதா:). இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர் பெங்களூர் வந்திருந்தபோது முயன்றும் முடியாது போன சந்திப்பு, இந்த முறை இனிதாக நடந்தது என் இல்லத்தில். சென்னையில் வாங்கிய என் நூல்களை பெங்களூர் வரை கொண்டு வந்து கையெழுத்து வாங்கி, ஜீப்பில் ஏற்றினார் என்னை:)!அவருக்கு நான் ஊக்கம் தருவதாகச் சொல்வார். நான் ஃபேஸ்புக்கில் சிந்தனைத் துளிகள் பகிர ஆரம்பித்த போது, ‘நீங்கள் எடுத்த படங்களோடு பகிர்ந்திடுங்கள்’ என்ற அவரது ஆலோசனையைப் பின்பற்றத் தொடங்கியதில், பகிரும் ஒவ்வொரு படத்துக்கும் பொருத்தமான தினமொழிகளைத் தேட, சிந்திக்கக் காரணமாகி விட்டார்.  எழுத்துக்கும் சரி, ஒளிப்படங்களுக்கும் சரி இணையத்தில் என் வானமாக இருப்பது நட்புகள் தரும் ஊக்கமே. எனக்கு மட்டுமன்றி இது நம் அனைவருக்குமே பொருந்தும்தான், இல்லையா:)?
 **

ண்காட்சியில் என் புத்தகங்கள் ஓரளவுக்கு நல்ல விற்பனையானதாகப் பதிப்பாளர் தெரிவித்தது மகிழ்ச்சியைத் தந்தது. வாங்கிய நண்பர்கள் அத்தனை பேருக்கும் இங்கு எனது மனமார்ந்த நன்றி! புதிய வெளியீடுகள் அனைத்தையுமே நல்ல முறையில் முன்னெடுத்துச் சென்றதற்கும் ஃபேஸ்புக்கில் அவ்வப்போது படங்களைப் பகிர்ந்து பரவலாகப் பலரையும் தகவல் சென்றடையச் செய்ததற்கும் அகநாழிகை பொன்.வாசுதேவனுக்கு நன்றி.

#அடை மழை சிறுகதைத் தொகுப்பில் கையெழுத்திட்டுத் தருகிறார் உயிர்மை ஆசிரியர் மனுஷ்யபுத்திரன். அவருக்கு என் நன்றி.

வியாழன், 13 பிப்ரவரி, 2014

சோழமண்டல மீனவர்கள் - சரோஜினி நாயுடு கவிதை (2)

விழித்தெழுங்கள், சகோதரர்களே, விழித்தெழுங்கள்;  விழித்தெழும் வானம் காலைக் கதிரவனிடம் பிரார்த்திக்கிறது,
இரவெல்லாம் அழுது களைத்தக் குழந்தையைப் போல் உறங்குகிறது காற்று, விடியலின் கைகளிலே.

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

பொம்மியின் பொம்மைகள் - நம்மைச் சுற்றி உலகம்

தினசரி வாழ்வில் எதிர்கொண்ட காட்சிகளாக ஃப்ளிக்கரில் பகிர்ந்து வந்தவற்றை “நம்மைச் சுற்றி உலகம்” எனத் தொகுப்பாக அவ்வப்போது இங்கும் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

#1 அணிலும் மரமும்

#2 எதிரும் புதிரும்
#3 பீடு நடை

#4 போப்பா..
#5 இதற்காகத்தானே ஆசைப்பட்டாய், ராஜக்குமாரி?

வியாழன், 6 பிப்ரவரி, 2014

தேனம்மை லெக்ஷ்மணன் பார்வையில்.. ‘அடை மழை’ சிறுகதைத் தொகுப்பு

அடைமழை சிறுகதைத் தொகுப்பு குறித்து தேனம்மை லெஷ்மணன் தனது தளத்தில் பதிந்த விமர்சனத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்:

ரு சிறுகதைத் தொகுப்பு செக்ஸ், கிரைம், திரில்லர், வல்கர் இல்லாமல் சிறப்பாக இருக்க முடியுமா. அட்லீஸ்ட் ஒரு கெட்ட வார்த்தை.. இல்லன்னா காமம் பற்றிய கசா முசா கருத்துக்கள்.. இதெல்லாம் இல்லாம  சிறப்பான மனிதநேயமிக்க சிறுகதைகள் வாசிக்கணும்னா நீங்க அடைமழையை தேர்ந்தெடுக்கலாம்.

நீங்க மட்டுமில்ல உங்க குடும்பம்,  ( குழந்தைகள், அப்பா, அம்மா ) படிக்க நண்பர்களுக்குப் பரிசளிக்க, பெருமையா புத்தக அலமாரியில் அடுக்கி வைத்துக் கொள்ளன்னு இந்தப் புத்தகத்தை நான் பரிந்துரைக்கிறேன்.

மொத்தம் 13 சிறுகதைகள். நிறைய கதைகளை நான் வலைத்தளத்திலேயே படித்திருக்கிறேன்.

வசந்தா குழந்தைத் தொழிலாளி பற்றிய கதை .. பொட்டலம் பள்ளியில் குழந்தைகளுக்கு நிகழும் ஒரு எதிர்பாராத அவலம் பற்றியது.

புதன், 5 பிப்ரவரி, 2014

நினைத்துப் பார்க்க ஒரு புன்னகை – சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதை

ங்களிடம் தங்கமீன்கள் இருந்தன 
சித்திரங்கள் கொண்ட சன்னலை மறைத்த 
கனமான திரைச்சீலைகள் அருகே
மேசையின் மேலிருந்த குடுவைக்குள்
சுற்றிச் சுற்றி வந்தபடி
என் அம்மா, எப்போதும் புன்னகைப்பவள், நாங்கள் எல்லோரும் 
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென விரும்புகிறவள்
சொல்வாள் என்னிடம் “சந்தோஷமாய் இரு ஹென்ரி” என.
சரியாகதான் சொன்னாள். சந்தோஷமாக இருக்கலாம்தான்
நம்மால் முடியுமானால்..

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

தெரிஞ்சுக்கலாம் வாங்க.. - ஒட்டகச் சிவிங்கி

லகின் மிக உயரமான விலங்கினம் ஒட்டகச் சிவிங்கி. மைசூர் விலங்கியல் பூங்காவினுள் நுழைந்ததுமே நம்மை வரவேற்பது இவைதாம்.

#1

ஆப்பிரிக்காவில் அதிகம் காணப்படும் பாலூட்டிகளான இவை, வனத்தில் வாழ்வது போலவே சுதந்திரமாக உலாவர மிகப் பெரிய பரப்பளவிலான இடத்தை ஒதுக்கியிருக்கிறார்கள்.

#2

நான் எடுத்த படங்களுடன், ஒட்டகச்சிவிங்கி பற்றி நாம் அறிந்த.. அறியாத.. ஆச்சரியம் தரும் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

[படங்கள் திறப்பதற்கு நேரம் எடுத்தால் ஏதேனும் ஒன்றின் மேல் க்ளிக் செய்து light box_ல் வரிசையாகக் காணலாம்.]

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin