திங்கள், 28 ஜூன், 2010

ஆயிரமாயிரம் கேள்விகள் - 'புன்னகை' கவிதை

இரண்டு நிமிடங்களே இருந்தன
இரயிலைப் பிடிக்க

எந்த நிபந்தனையும் விதிக்காமல்
கனத்த பெட்டிகளையும்
பெருத்த பைகளையும் வாங்கிக்கொண்டு
‘எந்தவண்டி எந்தகோச்’
கேட்டபடிகூட்டத்துள் புகுந்து புறப்பட்டு
ஓடியகூலியைப் பின்தொடர்ந்தேன்
ஒருகையில் குழந்தையும்
மறுகையில் அழுத்திப்பிடித்த
மனைவியின் கரமுமாக

இலாவகமாய் சுமையை உள்சேர்த்து
ஏறவும் கைகொடுத்தவன்
தெய்வமாகத் தெரிந்தான்

‘எவ்வளவு சொல்லுப்பா’
தப்பாகி விடக்கூடாதேயெனும்
தவிப்பில் நானும்
‘நீயேதான் போட்டுக்கொடு சார்’
அதீத நம்பிக்கையில் அவனும்

இடம்மாறிய நோட்டுத்தாள்களில்
அடைந்தானா திருப்தியென
அளவெடுக்கும் முன்னரே
நகரத்தொடங்கியிருந்தது வண்டி

அவசரமாய் இறங்கிச்சென்றவன்
இமைகளுக்கிடையே இருந்தது
சங்கடமா சந்தோஷமா
எழுந்த சந்தேகம்
வழியனுப்பிப் பார்த்துநின்ற
பலநூறு விழிகளின்
விதவிதமான உணர்வுகளுக்குள்
வேகவேகமாய்க் கரைந்து
காணாமல் போய்க்கொண்டிருந்தது

இனிஆராய்ந்து விடைதேட
அவசியமற்றதாய்க் கருதி மறந்துபோகும்
ஆயிரமாயிரம் கேள்விகளுள் ஒன்றாக!
***
படம்: இணையத்திலிருந்து..நன்றி புன்னகை!

'புன்னகை' , க.அம்சப்ரியா அவர்களை ஆசிரியராகக் கொண்டு கடந்த பத்து ஆண்டுகளாக பொள்ளாச்சியிலிருந்து வெளிவரும் கவிதை இதழ். ஏப்ரல் மாதம், தனது அறுபதாவது இதழை அறுபது கவிஞர்களின் கவிதைகளுடன் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. அறுபதில் ஒன்றாக இக் கவிதையும்..!

96 கருத்துகள்:

 1. அருமைங்க.

  ரொம்ப கனமா இருக்கு... :)

  பதிலளிநீக்கு
 2. கவிதை அருமை!
  ரசித்தேன்!

  பதிலளிநீக்கு
 3. பூங்கொத்துடன் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!

  பதிலளிநீக்கு
 4. இது போல் நிறைய கேள்விகள்,
  விடை தேடி,
  விழுதென வீழ்ந்து
  கவிதைக்கு வித்தினை ஊன்றுகின்றன.

  பதிலளிநீக்கு
 5. 1. இதே போல அழுந்தி மறைந்து போகும் நிறைய கேள்விகள் என்று கவிதையை முடித்திருந்தது அழகு.

  2. எளிய வார்த்தைகளில் காட்சியையும், உணர்வுகளையும் கண்முன் கொண்டுவந்திருக்கிறீர்கள்.

  3. விழிகளிலே என்பதற்குப்பதிலாக இமைகளுக்கிடையே என்ற பதம் புதுமை.

  மொத்தத்தில் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 6. //இனிஆராய்ந்து விடைதேட
  அவசியமற்றதாய்க் கருதி மறந்துபோகும்
  ஆயிரமாயிரம் கேள்விகளுள் ஒன்றாக!
  ***//
  அருமை. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!

  பதிலளிநீக்கு
 7. நல்லாயிருக்குங்க கவிதை... வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 8. \\இனிஆராய்ந்து விடைதேட
  அவசியமற்றதாய்க் கருதி மறந்துபோகும்
  ஆயிரமாயிரம் கேள்விகளுள் ஒன்றாக!\\
  ஆனால் மறந்து போகாமல் அழகான கவிதையாக வடித்து விட்டீர்களே.
  வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 9. கவிதை அருமை அக்கா. நான் ரசித்து படித்தேன்

  பதிலளிநீக்கு
 10. ஒரு போர்ட்டரை மனிதராக மதித்த போதே நீங்கள் உயர்ந்து விட்டீர்கள்

  பதிலளிநீக்கு
 11. வாழ்த்துக்கள் அக்கா..

  கண்கள் படிக்கும்போது காட்சிகள் தானாகவே மனதில உருவாகிச்சு.. உங்க எழுத்தோட சிறப்பு..

  கனம்..

  பதிலளிநீக்கு
 12. மிக ரசித்த கவிதை. இதுபோல விடை தெரியாமல் கடந்துபோகும் எண்ணற்ற தருணங்கள் நினைவுக்கு வருகின்றன.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 13. ரயிலடிக்கு போனா இந்த மாதிரி ஏதாவது மனசை கனக்க வைக்குது

  பதிலளிநீக்கு
 14. சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 15. பிரண்ட்! இதிலே ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்குன்னு நினைக்கிறேன். தான் உழைத்த உழைப்புக்கு எத்தனை கூலின்னு நிர்ணயிக்க தெரியாத போர்ட்டரின் குற்றம். அல்லது நாம் எதிர் பார்ப்பதை விட அதிகம் அவர் கொடுப்பார் என்ற அதீத நம்பிக்கை. அந்த நம்பிக்கை கெட்டுச்சுன்னா அது கொடுத்தவர் மேல் தப்பில்லை. போர்ட்டரின் தவறான நம்பிக்கையின் மீது தான் தவறு.

  அடுத்து கொடுத்தவர் - இந்த உழைப்புக்கு இன்ன கூலி தரலாம் என கூட உலகம் தெரியாத அளவுக்கு வளர்ந்து விட்ட குற்றம். பின் ரயில் போன பின்னே வருத்தப்பட்டும் பிரயோசனம் இல்லை. சந்தோஷப்பட்டும் ஒன்னும் ஆக போவதில்லை.

  ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம். நீங்க சொல்வது போல ஆயிரமாயிரம் கேள்வி மிச்சம் ஆவது என்னவோ உண்மை! நல்லா இருக்குது இந்த கவிதையும்!

  பதிலளிநீக்கு
 16. Migavum arumayana kavithai.. en valai thalathirku varugai tharungall. nandri.. following you

  பதிலளிநீக்கு
 17. மிக நல்ல கவிதைங்க... வாழ்த்துக்களும்.....

  பதிலளிநீக்கு
 18. யாரும் தொடாத களம்... கவிதை மிக உணர்வோடு இருக்கிறது.
  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 19. இதுபோன்ற தருணங்கள் ஏற்படுவதுண்டு.

  அருமை வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 20. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 21. ரோம்ப எதார்த்தமான வரிகளால் அழகுப்படுத்துகின்றது.... வாழ்த்துகள்

  அன்புடன்
  ஆ.ஞானசேகரன்

  பதிலளிநீக்கு
 22. எத்தனையோ கேள்விகள் பதில் இல்லாமல் போகின்றன...ஒரு கால அளவுக்கு மேல் அதைப் பற்றி கவலைப் படுவதும் இல்லை.

  அபி அப்பாவின் முதல் பாரா .. ஆமோதிக்கிறேன்.

  அடுத்தவர் அபிப்ராயங்களைப் பற்றி யோசிக்க வைத்த கவிதை.

  பதிலளிநீக்கு
 23. அருமையான கவிதை.. ஆயிரமாயிரம் கேளிவிகளுக்கு பதில்கள் தெரியாமலே வலியுடன் கூடிய கவிதை பயணிக்கிறது.

  வாழ்த்துகள் ராமலட்சுமி மேடம்.

  பதிலளிநீக்கு
 24. பெட்டி தூக்கியவரை அங்கேயே இறக்கி விடாமல், இவ்வளவு தூரம் சுமந்து வந்து கவிதையாக்கி உள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 25. பெட்டி தூக்கியவரை அங்கேயே இறக்கி விடாமல், இவ்வளவு தூரம் சுமந்து வந்து கவிதையாக்கி உள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 26. /*இனிஆராய்ந்து விடைதேட
  அவசியமற்றதாய்க் கருதி மறந்துபோகும்
  ஆயிரமாயிரம் கேள்விகளுள் ஒன்றாக!
  */
  ம்... உண்மை தான் அந்நிமிட அவசரம் .. அவசியம்.. முடிந்த பின்.. அவசியமற்றதாய்க் கருதி மறந்துபோகும்
  ஆயிரமாயிரம் கேள்விகளுள் ஒன்றாக!
  மனம் சற்றே கனம் ஆனது

  பதிலளிநீக்கு
 27. Poignant
  வாழ்த்துக்கள் - ராமலக்ஷ்மி !

  பதிலளிநீக்கு
 28. இனிஆராய்ந்து விடைதேட
  அவசியமற்றதாய்க் கருதி மறந்துபோகும்
  ஆயிரமாயிரம் கேள்விகளுள் ஒன்றாக!

  .... அருமையான கவிதைக்கும் 'புன்னகைக்கும்" வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 29. நல்லதொரு தாக்கம் கவிதையாகியிருக்கு.இப்படித்தான் எத்தனை எத்தனை கேள்விகளோடு வாழ்க்கை !வாழ்த்துகள் அக்கா.

  பதிலளிநீக்கு
 30. //இடம்மாறிய நோட்டுத்தாள்களில்
  அடைந்தானா திருப்தியென
  அளவெடுக்கும் முன்னரே
  நகரத்தொடங்கியிருந்தது வண்டி//

  காட்சிகள் கவிதை வழியாக கண்முன்னே அரங்கேறி ஒரு வித சுணங்கலை மனம் கனத்து போதலை ஏற்படுத்துகிறது...

  பதிலளிநீக்கு
 31. ரொம்ப யதார்த்தமா இருக்குங்க

  பதிலளிநீக்கு
 32. இவ்ளோ வேணும்னு கேட்டா தைரியமா ஏம்ப்பான்னு பேரம் பேசிடலாம். //‘நீயே பாத்து போட்டுக்கொடு சார்’//னு சொன்னா, நமக்கு தடுமாற்றம் வருவது நிச்சயம்!! முடிவெடுக்கும் பொறுப்பில் இந்தப் பக்கமும் போய்விடக்கூடாது, அந்தப் பக்கமும் போகக்கூடாது என்று ரொம்பக் கஷ்டம்!!

  பதிலளிநீக்கு
 33. நினைவில் நிற்கும் கவிதை அக்கா.

  எத்தனையோ தருணங்களில் இப்படித்தான் தடுமாறிநிற்கிறோம். அடுத்துவரும் நிகழ்வுகளில் அதை எளிதாய் மறந்தும்விடுகிறோம்.

  'புன்னகை'க்கு மனம்நிறைந்த வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 34. ***‘எவ்வளவு சொல்லுப்பா’
  தப்பாகி விடக்கூடாதேயெனும்
  தவிப்பில் நானும்
  ‘நீயேதான் போட்டுக்கொடு சார்’
  அதீத நம்பிக்கையில் அவனும்***

  ரெண்டு "அறிமுகமில்லாதவர்கள்" இங்கே இருக்காங்க! நான் "போர்ட்டரா" இருந்து இருந்தால், அவரைக் கஷ்டப்படுத்தாமல் எவ்வளவு வேணும்னு (என் உழைப்பின் மதிப்பு எனக்குத்தான் தெரியும்- அதுவுமிந்த தொழிலில் அனுபவம் உள்ளவன் நான்) கேட்டு இருப்பேன்! இது என்னாலான சின்ன உதவி அவருக்கு! :)

  நான் அந்த பிரயாணியா இருந்து இருந்தால், "உள்ள தொல்லை போதாதுனு, நீ வேற ஏன்ப்பா? நான் வருசத்தில் ஒரு நாள் பிரயாணம் செய்பவன், எவ்வளவுனு சொல்லுப்பா, நான் பார்த்து கொடுக்கிறேன் னு கேட்டு இருப்பேன்!

  ----------------

  இந்த போர்ட்டரை தூக்கசொல்றது, கடைசி நிமிடத்தில் ரயில்வே ஸ்டேஷன் போவது ரெண்டுமே எனக்கு ஒத்து வராத சமாச்சாரம்ங்க. I am an "early guy" and like to be a "porter" for myself too :) அதனால் இதுபோல இக்கட்டில் இதுவரை மாட்டியதில்லை.

  I am not too strong or a "muscle man" but I am sure I will be able carry my own luggage by renting a cart or bringing "some assistance" from home or something. I think of that as a nice "work out" when I do the "porter job"! LOL

  இதுல கொடுமை என்னனா இந்த போர்ட்டர் வேலையில் உள்ளவங்க பலர், ரொம்ப உடல் பலஹீனமானவங்களா வயசானவங்களா இருப்பாங்க! :( அவங்க தூக்க முடியாமல் பெட்டிகளைத் தூக்கி வருவதைப்பார்த்தால் கஷ்டமா இருக்கும். காசு கொடுத்து இப்படி ஒரு கஷ்டத்தை அனுபவிப்பதில்லை :)

  --------------

  அப்புறம், இவ்ளோ பெரிய பின்னூட்டம் போட வைக்கிற அளவுக்கு உங்க கவிதை நல்லாயிருக்குங்க :)

  பதிலளிநீக்கு
 35. ஒரு ஆணின் கோணத்தில் இருந்து சூழலை அணுகியிருக்கிறீர்கள். சாதாரண சம்பவங்களில் இருந்து கவிதை எடுக்கும் வித்தை கைகூடியிருக்கிறது உங்களுக்கு. புத்தகத்தில் பெயரை "ராமலக்ஷ்மி" என்று அறிவிக்கிறீர்களா? அல்லது புனைபெயர் ஏதேனும் உண்டா?

  - எஸ்கா

  பதிலளிநீக்கு
 36. ஒரு ஆணின் கோணத்தில் இருந்து சூழலை அணுகியிருக்கிறீர்கள். சாதாரண சம்பவங்களில் இருந்து கவிதை எடுக்கும் வித்தை கைகூடியிருக்கிறது உங்களுக்கு. புத்தகத்தில் பெயரை "ராமலக்ஷ்மி" என்று அறிவிக்கிறீர்களா? அல்லது புனைபெயர் ஏதேனும் உண்டா?

  - எஸ்கா

  பதிலளிநீக்கு
 37. அருமை! இப்படித்தான் ஒவ்வொரு நாள் போகும்போது நிறைய நிகழ்வுகள்!!
  கணக்கற்ற கேள்விகள்....எல்லாவற்றையும் தாண்டிக் கொண்டு வாழ்க்கைப் பயணமும் தொடர்கிறது, ரயில் பயணம் போல்!!

  பதிலளிநீக்கு
 38. கவிதை அருமை. Photo is also chosen appropriately.

  பதிலளிநீக்கு
 39. //இனிஆராய்ந்து விடைதேட
  அவசியமற்றதாய்க் கருதி மறந்துபோகும்
  ஆயிரமாயிரம் கேள்விகளுள் ஒன்றாக!//

  நிச்சயமா இந்தக்கேள்விய மறக்க முடியாதுங்க. அருமையான கவிதை.

  பதிலளிநீக்கு
 40. புன்னகை வாழ்த்துக்கள்

  விஜய்

  பதிலளிநீக்கு
 41. //அவசரமாய் இறங்கிச்சென்றவன்
  இமைகளுக்கிடையே இருந்தது
  சங்கடமா சந்தோஷமா//

  ரொம்ப நல்ல இருக்குங்க!

  பதிலளிநீக்கு
 42. Vidhoosh(விதூஷ்) said...

  // அருமைங்க.

  ரொம்ப கனமா இருக்கு... :)//

  நன்றி விதூஷ்.

  பதிலளிநீக்கு
 43. வழிப்போக்கன் said...

  // கவிதை அருமை!
  ரசித்தேன்!//

  நன்றி வழிப்போக்கன். ஹிட் கவுன்டர் தலைப்பு குறித்த உங்கள் கருத்தும் கவனிக்கப்பட்டது. வெகுநாளாக நானே மாற்ற எண்ணி விட்டு வைத்தது:)!

  பதிலளிநீக்கு
 44. அன்புடன் அருணா said...

  // பூங்கொத்துடன் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!//

  மகிழ்ச்சி அருணா.

  பதிலளிநீக்கு
 45. goma said...

  // இது போல் நிறைய கேள்விகள்,
  விடை தேடி,
  விழுதென வீழ்ந்து
  கவிதைக்கு வித்தினை ஊன்றுகின்றன.//

  உண்மைதாங்க கோமா. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 46. ஆதிமூலகிருஷ்ணன் said...

  // 1. இதே போல அழுந்தி மறைந்து போகும் நிறைய கேள்விகள் என்று கவிதையை முடித்திருந்தது அழகு.

  2. எளிய வார்த்தைகளில் காட்சியையும், உணர்வுகளையும் கண்முன் கொண்டுவந்திருக்கிறீர்கள்.

  3. விழிகளிலே என்பதற்குப்பதிலாக இமைகளுக்கிடையே என்ற பதம் புதுமை.

  மொத்தத்தில் சிறப்பு.//

  ரசித்ததைக் குறிப்பிட்டுப் பாராட்டியிருப்பதற்கு நன்றி ஆதி.

  பதிலளிநீக்கு
 47. ஜெஸ்வந்தி said...

  ***/ //இனிஆராய்ந்து விடைதேட
  அவசியமற்றதாய்க் கருதி மறந்துபோகும்
  ஆயிரமாயிரம் கேள்விகளுள் ஒன்றாக!***//

  அருமை. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!/***

  மிக்க நன்றி ஜெஸ்வந்தி.

  பதிலளிநீக்கு
 48. அஹமது இர்ஷாத் said...

  // நல்லாயிருக்குங்க கவிதை... வாழ்த்துக்கள்..//

  நன்றி இர்ஷாத்.

  பதிலளிநீக்கு
 49. அம்பிகா said...

  ***/ \\இனிஆராய்ந்து விடைதேட
  அவசியமற்றதாய்க் கருதி மறந்துபோகும்
  ஆயிரமாயிரம் கேள்விகளுள் ஒன்றாக!\\
  ஆனால் மறந்து போகாமல் அழகான கவிதையாக வடித்து விட்டீர்களே.
  வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி./***

  மிக்க நன்றி அம்பிகா.

  பதிலளிநீக்கு
 50. சசிகுமார் said...

  // கவிதை அருமை அக்கா. நான் ரசித்து படித்தேன்//

  நல்லது. நன்றி சசிகுமார்.

  பதிலளிநீக்கு
 51. VELU.G said...

  //ஒரு போர்ட்டரை மனிதராக மதித்த போதே நீங்கள் உயர்ந்து விட்டீர்கள்//

  எல்லோரும் மனிதர்கள்தானே. நம்மால் இயலாத ஒன்றை அவரது வேலையாக என்றாலும் கூட, செய்து தருபவர்கள் ‘தெய்வமாக’வும் தெரிவார்கள் என்பதே உண்மை. அதையும் கவிதையில் கூற விழைந்துள்ளேன். மிக்க நன்றி வேலு.

  பதிலளிநீக்கு
 52. சுசி said...

  //வாழ்த்துக்கள் அக்கா..

  கண்கள் படிக்கும்போது காட்சிகள் தானாகவே மனதில உருவாகிச்சு.. உங்க எழுத்தோட சிறப்பு..

  கனம்..//

  நன்றி சுசி.

  பதிலளிநீக்கு
 53. செ.சரவணக்குமார் said...

  // மிக ரசித்த கவிதை. இதுபோல விடை தெரியாமல் கடந்துபோகும் எண்ணற்ற தருணங்கள் நினைவுக்கு வருகின்றன.

  நன்றி.//

  நன்றி சரவணக்குமார். உண்மை. எண்ணற்ற தருணங்கள். ஆகையால்தான் கேள்விகள் ‘ஆயிரமாயிரம்’ ஆயிற்று.

  பதிலளிநீக்கு
 54. சின்ன அம்மிணி said...

  //ரயிலடிக்கு போனா இந்த மாதிரி ஏதாவது மனசை கனக்க வைக்குது//

  ஏதாவது சம்பவங்கள், காட்சிகள் எத்தனையோ. நன்றி அம்மிணி.

  பதிலளிநீக்கு
 55. Priya said...

  //சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்!//

  நன்றி ப்ரியா. அடிக்கடி வாருங்கள்:)!

  பதிலளிநீக்கு
 56. அபி அப்பா said...

  // பிரண்ட்! இதிலே ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்குன்னு நினைக்கிறேன். தான் உழைத்த உழைப்புக்கு எத்தனை கூலின்னு நிர்ணயிக்க தெரியாத போர்ட்டரின் குற்றம். அல்லது நாம் எதிர் பார்ப்பதை விட அதிகம் அவர் கொடுப்பார் என்ற அதீத நம்பிக்கை. அந்த நம்பிக்கை கெட்டுச்சுன்னா அது கொடுத்தவர் மேல் தப்பில்லை. போர்ட்டரின் தவறான நம்பிக்கையின் மீது தான் தவறு.

  அடுத்து கொடுத்தவர் - இந்த உழைப்புக்கு இன்ன கூலி தரலாம் என கூட உலகம் தெரியாத அளவுக்கு வளர்ந்து விட்ட குற்றம். பின் ரயில் போன பின்னே வருத்தப்பட்டும் பிரயோசனம் இல்லை. சந்தோஷப்பட்டும் ஒன்னும் ஆக போவதில்லை.//

  அபி அப்பா, உங்க எல்லா விளக்கங்களுக்கும் என் பதில் ‘அந்த முதல் இரண்டு வரிகள்’:)! வழக்கமான பேரம் உரையாடல் எதற்கும் நேரமில்லாத சூழல்.

  // ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம். நீங்க சொல்வது போல ஆயிரமாயிரம் கேள்வி மிச்சம் ஆவது என்னவோ உண்மை! நல்லா இருக்குது இந்த கவிதையும்!//

  நன்றி. அப்புறம், இப்போதெல்லாம் பதிவுகளை முழுசா நல்லா வாசித்துப் பின்னூட்டமிடுகிறீர்கள் என வல்லிம்மாவிடம் சொல்லி விடுகிறேன்:)! சரியா?

  பதிலளிநீக்கு
 57. srividhya Ravikumar said...

  //Migavum arumayana kavithai..//

  நன்றி ஸ்ரீவித்யா. வலைப்பக்கம் வருகிறேன் நேரமிருக்கையில்.

  பதிலளிநீக்கு
 58. க.பாலாசி said...

  // மிக நல்ல கவிதைங்க... வாழ்த்துக்களும்.....//

  நன்றி பாலாசி.

  பதிலளிநீக்கு
 59. சி. கருணாகரசு said...

  // யாரும் தொடாத களம்... கவிதை மிக உணர்வோடு இருக்கிறது.
  பாராட்டுக்கள்.//

  பாராட்டுக்களுக்கு நன்றி கருணாகரசு.

  பதிலளிநீக்கு
 60. மாதேவி said...

  //இதுபோன்ற தருணங்கள் ஏற்படுவதுண்டு.

  அருமை வாழ்த்துகள்.//

  நன்றி மாதேவி.

  பதிலளிநீக்கு
 61. இராமசாமி கண்ணண் said...

  //ரொம்ப ந்ல்ல கவிதைங்க.//

  நன்றிங்க கண்ணன்.

  பதிலளிநீக்கு
 62. Jeeves said...

  //நல்ல கவிதை. வாழ்த்துகள்.//

  நன்றி ஜீவ்ஸ்.

  பதிலளிநீக்கு
 63. apnaafurniture said...

  //நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 64. ஆ.ஞானசேகரன் said...

  //ரோம்ப எதார்த்தமான வரிகளால் அழகுப்படுத்துகின்றது.... வாழ்த்துகள்//

  நன்றிகள் ஞானசேகரன்.

  பதிலளிநீக்கு
 65. ஸ்ரீராம். said...

  // எத்தனையோ கேள்விகள் பதில் இல்லாமல் போகின்றன...ஒரு கால அளவுக்கு மேல் அதைப் பற்றி கவலைப் படுவதும் இல்லை.//

  அதுதான் நிதர்சனம்.

  //அபி அப்பாவின் முதல் பாரா .. ஆமோதிக்கிறேன்.//

  ஆனால் இப்படியான மனிதர்களை நிறையப் பார்க்கிறோம்.

  //அடுத்தவர் அபிப்ராயங்களைப் பற்றி யோசிக்க வைத்த கவிதை.//

  கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 66. Starjan ( ஸ்டார்ஜன் ) said...

  // அருமையான கவிதை.. ஆயிரமாயிரம் கேளிவிகளுக்கு பதில்கள் தெரியாமலே வலியுடன் கூடிய கவிதை பயணிக்கிறது.

  வாழ்த்துகள் ராமலட்சுமி மேடம்.//

  மிக்க நன்றி ஸ்டார்ஜன்.

  பதிலளிநீக்கு
 67. பா.ராஜாராம் said...

  // நல்ல கவிதை சகா.

  வாழ்த்துகள்!//

  நன்றி பா ரா.

  பதிலளிநீக்கு
 68. சே.குமார் said...

  //அருமைங்க.//

  விடுப்பு முடிந்து வந்ததும் வாசித்து விட்டுள்ளீர்கள்:)! நன்றி குமார்.

  பதிலளிநீக்கு
 69. தமிழ் உதயம் said...

  // பெட்டி தூக்கியவரை அங்கேயே இறக்கி விடாமல், இவ்வளவு தூரம் சுமந்து வந்து கவிதையாக்கி உள்ளீர்கள்.//

  நீங்கள் சொல்லியிருக்கும் விதத்தை ரசித்தேன். மிக்க நன்றி தமிழ் உதயம்.

  பதிலளிநீக்கு
 70. அமுதா said...

  ***/ /*இனிஆராய்ந்து விடைதேட
  அவசியமற்றதாய்க் கருதி மறந்துபோகும்
  ஆயிரமாயிரம் கேள்விகளுள் ஒன்றாக!
  */
  ம்... உண்மை தான் அந்நிமிட அவசரம் .. அவசியம்.. முடிந்த பின்.. அவசியமற்றதாய்க் கருதி மறந்துபோகும்
  ஆயிரமாயிரம் கேள்விகளுள் ஒன்றாக!
  மனம் சற்றே கனம் ஆனது/***

  கருத்துக்கு நன்றி அமுதா.

  பதிலளிநீக்கு
 71. James Vasanth said...

  // Poignant
  வாழ்த்துக்கள் - ராமலக்ஷ்மி !//

  வாங்க ஜேம்ஸ்! மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 72. Chitra said...

  ***/ இனிஆராய்ந்து விடைதேட
  அவசியமற்றதாய்க் கருதி மறந்துபோகும்
  ஆயிரமாயிரம் கேள்விகளுள் ஒன்றாக!

  .... அருமையான கவிதைக்கும் 'புன்னகைக்கும்" வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!/***

  புன்னகைக்குமான வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சித்ரா.

  பதிலளிநீக்கு
 73. ஹேமா said...

  //நல்லதொரு தாக்கம் கவிதையாகியிருக்கு.இப்படித்தான் எத்தனை எத்தனை கேள்விகளோடு வாழ்க்கை !வாழ்த்துகள் அக்கா.//

  கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஹேமா.

  பதிலளிநீக்கு
 74. ப்ரியமுடன்...வசந்த் said...

  ***/ //இடம்மாறிய நோட்டுத்தாள்களில்
  அடைந்தானா திருப்தியென
  அளவெடுக்கும் முன்னரே
  நகரத்தொடங்கியிருந்தது வண்டி//

  காட்சிகள் கவிதை வழியாக கண்முன்னே அரங்கேறி ஒரு வித சுணங்கலை மனம் கனத்து போதலை ஏற்படுத்துகிறது.../***

  அது கவிதைக்கான வெற்றி என்று எடுத்துக் கொள்ளலாம்தானே? நன்றிகள் வசந்த்.

  பதிலளிநீக்கு
 75. ஈரோடு கதிர் said...

  //ரொம்ப யதார்த்தமா இருக்குங்க//

  மிக்க நன்றி கதிர்.

  பதிலளிநீக்கு
 76. ஹுஸைனம்மா said...

  ***/ இவ்ளோ வேணும்னு கேட்டா தைரியமா ஏம்ப்பான்னு பேரம் பேசிடலாம். //‘நீயே பாத்து போட்டுக்கொடு சார்’//னு சொன்னா, நமக்கு தடுமாற்றம் வருவது நிச்சயம்!! முடிவெடுக்கும் பொறுப்பில் இந்தப் பக்கமும் போய்விடக்கூடாது, அந்தப் பக்கமும் போகக்கூடாது என்று ரொம்பக் கஷ்டம்!!/***

  அதேதான். நன்றி ஹுஸைனம்மா.

  பதிலளிநீக்கு
 77. சுந்தரா said...

  //நினைவில் நிற்கும் கவிதை அக்கா.

  எத்தனையோ தருணங்களில் இப்படித்தான் தடுமாறிநிற்கிறோம். அடுத்துவரும் நிகழ்வுகளில் அதை எளிதாய் மறந்தும்விடுகிறோம்.

  'புன்னகை'க்கு மனம்நிறைந்த வாழ்த்துக்கள்!//

  நன்றி சுந்தரா ’புன்னகை’க்கான வாழ்த்துக்களுக்கும்.

  பதிலளிநீக்கு
 78. உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்றுக்கொள்ளவும்.

  http://amaithicchaaral.blogspot.com/2010/07/blog-post_02.html

  பதிலளிநீக்கு
 79. வருண் said..
  //***‘எவ்வளவு சொல்லுப்பா’
  தப்பாகி விடக்கூடாதேயெனும்
  தவிப்பில் நானும்
  ‘நீயேதான் போட்டுக்கொடு சார்’
  அதீத நம்பிக்கையில் அவனும்***

  ரெண்டு "அறிமுகமில்லாதவர்கள்" இங்கே இருக்காங்க! நான் "போர்ட்டரா" இருந்து இருந்தால், அவரைக் கஷ்டப்படுத்தாமல் எவ்வளவு வேணும்னு (என் உழைப்பின் மதிப்பு எனக்குத்தான் தெரியும்- அதுவுமிந்த தொழிலில் அனுபவம் உள்ளவன் நான்) கேட்டு இருப்பேன்! இது என்னாலான சின்ன உதவி அவருக்கு! :)

  நான் அந்த பிரயாணியா இருந்து இருந்தால், "உள்ள தொல்லை போதாதுனு, நீ வேற ஏன்ப்பா? நான் வருசத்தில் ஒரு நாள் பிரயாணம் செய்பவன், எவ்வளவுனு சொல்லுப்பா, நான் பார்த்து கொடுக்கிறேன் னு கேட்டு இருப்பேன்!//

  அபி அப்பாவுக்கு சொன்ன அதே பதில்தாங்க இதற்கு. எதற்கும் நேரமில்லாத சூழல் என்பதில்தான் கவிதையே ஆரம்பமாகிறது. கற்பனை நிஜம் எல்லாம் கலந்ததுதான் படைப்புகள். எப்படிப் பிறந்தது என்பதை விலாவாரியாகச் சொல்வது படைப்புகளின் சுவாரஸ்யத்தை பல நேரங்களில் குறைத்து விடும். அதை விடுத்து பார்த்தாலும், கறாராய் தங்கள் உழைப்பின் மதிப்பு இன்ன என தெரிவிப்பவர்களும் இருக்கிறார்கள். ‘நீங்களேதான் போட்டுக் கொடுங்க’ என 'அடமாய்' நிற்பவரை (தோட்டக்காரர், எலக்ட்ரீஷன், கார்பெண்டர், வீட்டு உதவிக்கு வருபவர் என) இப்போதுவரை சந்தித்துக் கொண்டேதான் இருக்கிறேன்.
  ----------------

  //இந்த போர்ட்டரை தூக்கசொல்றது, கடைசி நிமிடத்தில் ரயில்வே ஸ்டேஷன் போவது ரெண்டுமே எனக்கு ஒத்து வராத சமாச்சாரம்ங்க. I am an "early guy" and like to be a "porter" for myself too :) அதனால் இதுபோல இக்கட்டில் இதுவரை மாட்டியதில்லை.//

  நான் கூட இந்த விஷயங்களில் முன் ஜாக்கிரதைதான் என்பதை சொல்லிக் கொள்கிறேன்:)! வீட்டிலிருந்து கடைசி நேரத்தில் கிளம்புவதை விடவும், ரயிலடியில் அதிகநேரம் காத்திருப்பதில் தவறில்லை என்கிற கட்சிதான். இருப்பினும் சிட்டியின் எதிர்பாராத ட்ராஃபிக்கில் 'மணிக்கணக்கில்' மாட்டிவிட நேரும் அசம்பாவிதங்கள் தவிர்க்க முடியாதவை.

  //I am not too strong or a "muscle man" but I am sure I will be able carry my own luggage by renting a cart or bringing "some assistance" from home or something. I think of that as a nice "work out" when I do the "porter job"! LOL.

  இதுல கொடுமை என்னனா இந்த போர்ட்டர் வேலையில் உள்ளவங்க பலர், ரொம்ப உடல் பலஹீனமானவங்களா வயசானவங்களா இருப்பாங்க! :( அவங்க தூக்க முடியாமல் பெட்டிகளைத் தூக்கி வருவதைப்பார்த்தால் கஷ்டமா இருக்கும். காசு கொடுத்து இப்படி ஒரு கஷ்டத்தை அனுபவிப்பதில்லை :)//

  இங்கே உங்களுடன் ஒத்துப் போகிறேன். இப்போதெல்லாம் வயதானவர்களை இந்த வேலையில் காண்பதும் வெகு அரிது. யாருமே அவர்களை வேலை வாங்கத் தயங்குவார்கள்.

  எல்லா சமயங்களிலும் cart எடுப்பதெல்லாம் இங்கே இயலாத காரியம். பெங்களூர் சிட்டி ஸ்டேஷனை எடுத்துக் கொண்டால் முதல் ப்ளாட்ஃபார்ம் தவிர்த்து மற்ற எல்லாவற்றிற்கும் 40 படி இறங்கி 40 படி ஏறணும். பேருக்கு ஒரு லிஃப்ட். அது உபயோகத்திலிருந்து நான் பார்த்ததில்லை. மேலும் ஜனத்திரளுக்கு அது போதுமானதும் இல்லை. இந்த பிரச்சனை இல்லாத கண்டோன்மெண்ட் ஸ்டேஷனில் கூட நான் போர்ட்டர்தான் வைத்துக் கொள்வேன். காசு கொடுத்து கஷ்டத்தை வாங்குறதாய் நாம நினைக்கிறோம். ஆனா இன்றைய பெட்டி, பைகள் எல்லாமே சக்கரங்களுடனானவை என்பதால் எவருமே போர்ட்டர் துணையை நாடாமல் தத்தமது பெட்டிகளை செல்ல நாய்க்குட்டி போல இழுத்துச் செல்ல, போர்ட்டர்களில் அதை ஏக்கமாய் பார்ப்பவரும், நமக்கு இந்த வேலையைக் கொடுத்தால் வயிற்றுப்பாட்டுக்கு ஆகுமே என நினைப்பவரும்தான் அதிகமாய் இருப்பார்கள் ! அதனால்தான் நம்மால் இயலாத உடல் உழைப்பை நமக்காக செய்து தருபவரை ‘தெய்வமாகத் தெரிந்தான்’ வரிகளில் வைத்தேன். வீட்டிலிருந்து யாரேனும் வந்திருந்தாலும் கூட ‘இந்தாப்பா’ என பேரம் பேசி போர்ட்டரைத் தூக்கி வரச் செய்வதில் ஒருவருக்கு வேலை கொடுத்து உதவிய சின்ன திருப்தி கிடைக்கிறது. இதெல்லாமே தனிநபர் விருப்பம்தான்! உங்கள் கொள்கையிலும் நிச்சயம் தவறில்லை.

  --------------

  //அப்புறம், இவ்ளோ பெரிய பின்னூட்டம் போட வைக்கிற அளவுக்கு உங்க கவிதை நல்லாயிருக்குங்க :)//

  இவ்வளவு பெரிய விளக்கம் தரும் அளவு உங்கள் பின்னூட்டங்களும் பலநேரங்களில் அப்படியே என சொல்லவும் வேண்டுமா? நன்றி வருண்.

  பதிலளிநீக்கு
 80. yeskha said...
  //ஒரு ஆணின் கோணத்தில் இருந்து சூழலை அணுகியிருக்கிறீர்கள். சாதாரண சம்பவங்களில் இருந்து கவிதை எடுக்கும் வித்தை கைகூடியிருக்கிறது உங்களுக்கு.//

  நன்றி எஸ்கா.

  //புத்தகத்தில் பெயரை "ராமலக்ஷ்மி" என்று அறிவிக்கிறீர்களா? அல்லது புனைபெயர் ஏதேனும் உண்டா?//

  எங்கேயும் எப்போதும் ராமலக்ஷ்மிதான்:)! புனைப்பெயரில் தருவதில்லை. இக்கவிதை 'புன்னகை 60' இதழின் 34, 35 ஆம் பக்கங்களில் இடம் பெற்றுள்ளது.

  பதிலளிநீக்கு
 81. ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...
  //அருமை! இப்படித்தான் ஒவ்வொரு நாள் போகும்போது நிறைய நிகழ்வுகள்!!
  கணக்கற்ற கேள்விகள்....எல்லாவற்றையும் தாண்டிக் கொண்டு வாழ்க்கைப் பயணமும் தொடர்கிறது, ரயில் பயணம் போல்!!//

  ஆமாங்க ரயில் பயணம் போலவே. கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 82. மோகன் குமார் said...
  //கவிதை அருமை. Photo is also chosen appropriately.//

  கவிதையுடன் படத்தேர்வையும் கவனித்துப் பாராட்டியிருப்பதற்கு நன்றிகள் மோகன் குமார்.

  பதிலளிநீக்கு
 83. அமைதிச்சாரல் said...
  ***/ //இனிஆராய்ந்து விடைதேட
  அவசியமற்றதாய்க் கருதி மறந்துபோகும்
  ஆயிரமாயிரம் கேள்விகளுள் ஒன்றாக!//

  நிச்சயமா இந்தக்கேள்விய மறக்க முடியாதுங்க. அருமையான கவிதை./***

  மிக்க நன்றி அமைதிச்சாரல்.

  பதிலளிநீக்கு
 84. விஜய் said...
  //புன்னகை வாழ்த்துக்கள்//

  ஒரு புன்னகையுடன் ‘நன்றி’:)!

  பதிலளிநீக்கு
 85. ஜான் கார்த்திக் ஜெ said...
  ***//அவசரமாய் இறங்கிச்சென்றவன்
  இமைகளுக்கிடையே இருந்தது
  சங்கடமா சந்தோஷமா//

  ரொம்ப நல்ல இருக்குங்க!/***

  உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜான் கார்த்திக்.

  பதிலளிநீக்கு
 86. @ அமைதிச்சாரல்,

  பெற்றுக் கொண்டேன் விருதை. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. சீக்கிரமே வலைப்பூ முகப்பிலும் பொருத்திக் கொள்கிறேன்:)!

  பதிலளிநீக்கு
 87. மின் மடலில்..

  //Hi Ramalakshmi,

  Congrats!

  Your story titled 'ஆயிரமாயிரம் கேள்விகள்-’புன்னகை’ கவிதை' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 28th June 2010 06:05:02 PM GMT

  Here is the link to the story: http://www.tamilish.com/story/288070

  Thank you for using Tamilish.com

  Regards,
  -Tamilish Team//

  தமிழிஷில் வாக்களித்த 38 பேருக்கும்,
  தமிழ்மணத்தில் வாக்களித்த 19 பேருக்கும் என் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 88. ***எதற்கும் நேரமில்லாத சூழல் என்பதில்தான் கவிதையே ஆரம்பமாகிறது. கற்பனை நிஜம் எல்லாம் கலந்ததுதான் படைப்புகள்.***

  உண்மைதாங்க, இந்த ஒரு சூழ்நிலையில் இப்படி ஏற்படும் இக்கட்டில் என்றுதான் சொல்லியிருக்கீங்க. This kind of incidents do happen. நான் இப்படி செய்து இருப்பேன், அவாயிட் பண்ணியிருப்பேன் என்று நான் சொல்வது ஒருவகையில் going away from the topic னுதான் சொல்லனும்! :)

  --------------

  However, I certainly do not like the "magnanimity" of the porter as it makes the situation more complicated. If he feels "not satisfied" with the money he received, it is certainly his fault and he deserves it, imho. I wish he learns his lesson (feels not satisfied) and corrects himself next time!

  பதிலளிநீக்கு
 89. வருண் has left a new comment on your post "ஆயிரமாயிரம் கேள்விகள் - 'புன்னகை' கவிதை":

  ***எதற்கும் நேரமில்லாத சூழல் என்பதில்தான் கவிதையே ஆரம்பமாகிறது. கற்பனை நிஜம் எல்லாம் கலந்ததுதான் படைப்புகள்.***

  உண்மைதாங்க, இந்த ஒரு சூழ்நிலையில் இப்படி ஏற்படும் இக்கட்டில் என்றுதான் சொல்லியிருக்கீங்க. This kind of incidents do happen. நான் இப்படி செய்து இருப்பேன், அவாயிட் பண்ணியிருப்பேன் என்று நான் சொல்வது ஒருவகையில் going away from the topic னுதான் சொல்லனும்! :)

  --------------

  However, I certainly do not like the "magnanimity" of the porter as it makes the situation more complicated. If he feels "not satisfied" with the money he received, it is certainly his fault and he deserves it, imho. I wish he learns his lesson (feels not satisfied) and corrects himself next time!

  Posted by வருண் to முத்துச்சரம் at July 6, 2010 2:15 AM

  பதிலளிநீக்கு
 90. @ வருண்,

  புரிதலுக்கு நன்றி.

  //ஒருவகையில் going away from the topic னுதான் சொல்லனும்! :)//

  பரவாயில்லை. ஒன்றை வாசிக்கையில் அதனுடன் தொடர்புடையதான எண்ணங்கள் எழுவது இயல்பே:)!

  --------------------

  //I wish he learns his lesson (feels not satisfied) and corrects himself next time!//

  நம்புவோம்:)!வாழ்க்கை எல்லோருக்கும் கற்றுக் கொடுத்தபடியேதான் இருக்கிறது. கவனித்து உள்வாங்குவது அவரவர் சாமர்த்தியத்திலும்.
  ----------------------

  மீள் வருகைக்கு நன்றி வருண். நேற்றைய ப்ளாகர் பிரச்சனையில் உங்கள் பின்னூட்டம் மறைந்து விட்டது. மின்னஞ்சலில் இருந்து மீட்டெடுத்துப் பதிந்து விட்டேன்:)!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin