Sunday, December 5, 2010

படைப்பாளி


தூங்கும் மலரைத் தொட்டெழுப்பும்
பனித்துளியைப் பார்த்து வரும்
மேனிச் சிலிர்ப்பும்
தேனின் தித்திப்பும் பாகலின் கசப்பும்
சொல்லிப் புரிவதில்லை

கவிதையில் கசியும் காதலும்
கதையில் துளிர்த்து நிற்கும் கண்ணீரும்
பத்தி எழுத்தில் பற்றித் துடிக்கும்
தார்மீகக் கோபங்களும் வலியும்

அனுபவித்தவருக்கே வாய்க்கும்
முழுமையாய் ரசிக்க
நெருக்கமாய் உணர
தாக்கத்துடன் உள்வாங்க

வருவதில்லையோ ஆதலினாலேயே
ஆதிபகவன் தானே நேரில்
மெய்ப்பொருள் விளக்க?

அடைந்திடு அனுபவத்தில் என
ஒதுங்கிடத் தெரிந்த
ஒப்பற்ற படைப்பாளி!
*** *** ***

படம்: இணையத்திலிருந்து..

2 அக்டோபர் 2010 திண்ணை இணைய இதழில்.. நன்றி திண்ணை!

76 comments:

 1. படைப்பாளி என்பனே ஒரு அனுபவத்தை வெளிக்கொணர்பவன் தானே.. ;-)

  ReplyDelete
 2. T.V.ராதாகிருஷ்ணன் said...
  //அருமை//

  மிக்க நன்றி டி வி ஆர் சார்.

  ReplyDelete
 3. தமிழ் பிரியன் said...
  //படைப்பாளி என்பனே ஒரு அனுபவத்தை வெளிக்கொணர்பவன் தானே.. ;-)//

  நிச்சயமா. ஆனால் அதே போல மற்றவரும் அனுபவித்துப் புரியட்டும் என ஒதுங்கத் தெரிவதில்லை பெரும்பாலும். நாம் படைத்த ஒவ்வொன்றையும் விளக்க முயன்றபடி... [இதோ இப்போ செய்கிறேனே:)!] உரிமை கொண்டாடிய படி..

  ஆக, நானில்லை ஒப்பற்ற படைப்பாளி :)!

  ReplyDelete
 4. LK said...
  //அருமை//

  மிக்க நன்றி எல் கே.

  ReplyDelete
 5. கவிதையில் கசியும் காதலும்
  கதையில் துளிர்த்து நிற்கும் கண்ணீரும்ஃஃ

  காதல் என்றால் கண்ணீா் தானா! நல்ல கவிதை...

  ReplyDelete
 6. புவனேஸ்வரி ராமநாதன் said...
  //அருமை.//

  நன்றி புவனேஸ்வரி.

  ReplyDelete
 7. KANA VARO said...
  ***/கவிதையில் கசியும் காதலும்
  கதையில் துளிர்த்து நிற்கும் கண்ணீரும்ஃஃ/

  காதல் என்றால் கண்ணீா் தானா! நல்ல கவிதை..***

  மன்னிக்கவும். கதையில் கண்ணீர். அது எதைப்பற்றியதாகவும் இருக்கலாம். பொதுவாக ஒரு படைப்பின் சோகம்.

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 8. க‌விதை சோக‌மானாலும் ந‌ல்லாயிருக்கு..

  ReplyDelete
 9. அஹமது இர்ஷாத் said...
  //க‌விதை சோக‌மானாலும்//
  சோகக் கவிதை இல்லைங்க :)!
  //ந‌ல்லாயிருக்கு..// நன்றி!

  ReplyDelete
 10. அடைந்திடு அனுபவத்தில்.. :) நல்லா இருக்கு ராமலக்‌ஷ்மி

  தமிழ்பிரியனுக்கு பதில் ஹஹ்ஹா..:))

  ReplyDelete
 11. @ முத்துலெட்சுமி,

  மிக்க நன்றி :)!

  ReplyDelete
 12. சில விஷயங்கள் சொல்லி புரிவதில்லை.. உண்மை!!

  வர வர பத்திரிக்கைகளில் முதலிலும் ப்ளாகில் பின்னர் பகிர்வதுமா இருக்கீங்க. (முன்பே இப்படி தான்; இப்போ கொஞ்சம் அதிகம்) :))

  ReplyDelete
 13. படைப்பாளி...
  சிலசமயம் படுத்துவதும், சிலசமயம் படுவதும்(!)

  ReplyDelete
 14. //தார்மீகக் கோபங்களும் வலியும்

  அனுபவித்தவருக்கே வாய்க்கும்//

  இந்த வரிகளை ரசித்தேன்

  ReplyDelete
 15. அழகா இருக்கு. பூவின் படமும் அருமை.

  ReplyDelete
 16. மோகன் குமார் said...
  //சில விஷயங்கள் சொல்லி புரிவதில்லை.. உண்மை!!

  வர வர பத்திரிக்கைகளில் முதலிலும் ப்ளாகில் பின்னர் பகிர்வதுமா இருக்கீங்க. (முன்பே இப்படி தான்; இப்போ கொஞ்சம் அதிகம்) :))//

  நன்றி மோகன் குமார். ஒரு சோகம் பாருங்க:)! இதனால விரும்பும் இடுகைகளை தமிழ்மணம் விருதுக்குப் பரிந்துரைக்க முடியாத நிலையில். ப்ளாகில் பதிந்தபின் பிறவற்றில் வெளிவந்தவையாக ஓரிரெண்டு பதிவுகளே தேறுகின்றன.

  ReplyDelete
 17. ஈரோடு கதிர் said...
  //படைப்பாளி...
  சிலசமயம் படுத்துவதும், சிலசமயம் படுவதும்(!)//

  உண்மைதான். ‘அறிந்துள்ளேன் அனுபவத்தில்’ இரண்டு வகையிலும் அடங்குவதால்.. :)!

  ReplyDelete
 18. அன்பரசன் said...
  *** //தார்மீகக் கோபங்களும் வலியும்

  அனுபவித்தவருக்கே வாய்க்கும்//

  இந்த வரிகளை ரசித்தேன்***

  மிக்க நன்றி அன்பரசன்.

  ReplyDelete
 19. ஸ்ரீராம். said...
  //அழகா இருக்கு. பூவின் படமும் அருமை.//

  படத்துக்கு பொருத்தமாக இணையத்தில் கிடைத்தது. குறிப்பிட மறந்திருந்தேன். இப்போது சேர்த்து விட்டேன்:)! நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 20. தன்னோட எண்ணங்களை தனது நடவடிக்கைகள் ( எழுத்து, நடிப்பு பேச்சு.. etc) கலைகளின் மூலம் வெளிப்படுத்தும் ஒருவன் படைப்பாளிதான்.

  நல்லாருக்கு கவிதை. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி மேடம்.

  ReplyDelete
 21. அருமையா இருக்கு அக்கா.

  ReplyDelete
 22. Starjan ( ஸ்டார்ஜன் ) said...
  //தன்னோட எண்ணங்களை தனது நடவடிக்கைகள் ( எழுத்து, நடிப்பு பேச்சு.. etc) கலைகளின் மூலம் வெளிப்படுத்தும் ஒருவன் படைப்பாளிதான்.

  நல்லாருக்கு கவிதை. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி மேடம்.//

  நன்றி ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 23. வழிப்போக்கன் - யோகேஷ் said...
  //நல்ல கவிதை.........//

  மிக்க நன்றி யோகேஷ்.

  ReplyDelete
 24. சுசி said...
  //அருமையா இருக்கு அக்கா.//

  நன்றிகள் சுசி:)!

  ReplyDelete
 25. @ யாதவன்,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 26. கவிதை அருமை ராமலக்ஷ்மி.

  மலரில் பனித்துளி வெடித்து சிதற ஆயத்தமாவது தெரிகிறது.

  படம் அவ்வளவு துல்லியம்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. படமும் அழகு
  கவிதையும் அழகு

  ReplyDelete
 28. முதல் தபா படிச்சதும், எனக்கு தெளிவாப் புரியல்ல. நான் மக்கு ;)

  ReplyDelete
 29. அடைந்திடு அனுபவத்தில் என
  ஒதுங்கிடத் தெரிந்த
  ஒப்பற்ற படைப்பாளி!

  ...Super, akka!

  ReplyDelete
 30. கோமதி அரசு said...
  //கவிதை அருமை ராமலக்ஷ்மி.

  மலரில் பனித்துளி வெடித்து சிதற ஆயத்தமாவது தெரிகிறது.

  படம் அவ்வளவு துல்லியம்.

  வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி கோமதிம்மா :)!

  ReplyDelete
 31. அமுதா said...
  //படமும் அழகு
  கவிதையும் அழகு//

  நன்றிகள் அமுதா.

  ReplyDelete
 32. SurveySan said...
  //முதல் தபா படிச்சதும், எனக்கு தெளிவாப் புரியல்ல. நான் மக்கு ;)//

  இரண்டாவது தபா வாசிக்கையில் புரிஞ்சுதா, சொல்லலையே :))! நன்றி சர்வேசன்.

  ReplyDelete
 33. Chitra said...
  //அடைந்திடு அனுபவத்தில் என
  ஒதுங்கிடத் தெரிந்த
  ஒப்பற்ற படைப்பாளி!

  ...Super, akka!//

  நன்றி சித்ரா :)!

  ReplyDelete
 34. //கவிதையில் கசியும் காதலும்
  கதையில் துளிர்த்து நிற்கும் கண்ணீரும்
  பத்தி எழுத்தில் பற்றித் துடிக்கும்
  தார்மீகக் கோபங்களும் வலியும்

  அனுபவித்தவருக்கே வாய்க்கும்
  முழுமையாய் ரசிக்க
  நெருக்கமாய் உணர
  தாக்கத்துடன் உள்வாங்க//

  அருமையான கவிதை அம்மா.... அதிலும் மேலுள்ள வரிகள் மிகவும் பிடித்தது....
  ஊதாப்பூவும் பனித்துளியும் கவிதைக்கேற்ப, அழகு....

  --
  அன்புடன்
  கவிநா...

  ReplyDelete
 35. க‌விதை சோக‌மானாலும் ந‌ல்லாயிருக்கு..

  ReplyDelete
 36. கவிநா... said...
  //அருமையான கவிதை அம்மா.... அதிலும் மேலுள்ள வரிகள் மிகவும் பிடித்தது....
  ஊதாப்பூவும் பனித்துளியும் கவிதைக்கேற்ப, அழகு....//

  மகிழ்ச்சியும் நன்றியும் கவிநா!

  ReplyDelete
 37. @ சே.குமார்,

  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 38. எப்பவும் போல் அழகான பதிவு.

  ReplyDelete
 39. //அடைந்திடு அனுபவத்தில் என
  ஒதுங்கிடத் தெரிந்த
  ஒப்பற்ற படைப்பாளி!//

  அருமை அக்கா.

  அனுபவத்தில் அர்த்தம் கிடைக்கிறது சிலருக்கு...பலர் அதை உணராமலே கடந்துசென்றுவிடுகிறார்கள்.

  ReplyDelete
 40. சசிகுமார் said...
  //எப்பவும் போல் அழகான பதிவு.//

  நன்றி சசிகுமார்.

  ReplyDelete
 41. சுந்தரா said...
  ***//அடைந்திடு அனுபவத்தில் என
  ஒதுங்கிடத் தெரிந்த
  ஒப்பற்ற படைப்பாளி!//

  அருமை அக்கா.

  அனுபவத்தில் அர்த்தம் கிடைக்கிறது சிலருக்கு...பலர் அதை உணராமலே கடந்துசென்றுவிடுகிறார்கள்./***

  உண்மைதான் சுந்தரா. மிக்க நன்றி.

  ReplyDelete
 42. கவிதை அருமை ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 43. /கவிதையில் கசியும் காதலும்
  கதையில் துளிர்த்து நிற்கும் கண்ணீரும்
  பத்தி எழுத்தில் பற்றித் துடிக்கும்
  தார்மீகக் கோபங்களும் வலியும்

  அனுபவித்தவருக்கே வாய்க்கும்
  முழுமையாய் ரசிக்க
  நெருக்கமாய் உணர
  தாக்கத்துடன் உள்வாங்க/  இந்த வரிகள் மிகவும் அருமை

  ReplyDelete
 44. அருமையாக இருக்குது ராமலஷ்மி, தான் அனுபவித்த உணர்வுகளை பிறரும் அறியத்தருவதுதானே ஒரு படைப்பாளியின் வேலை :-))))))

  ReplyDelete
 45. கவியும் பூவும் அழகு.

  ReplyDelete
 46. அனுபவித்தவருக்கே வாய்க்கும்
  முழுமையாய் ரசிக்க
  நெருக்கமாய் உணர
  தாக்கத்துடன் உள்வாங்க

  அருமையான கவிதை..

  ReplyDelete
 47. //ஒதுங்கிடத்தெரிந்த
  ஒப்பற்ற படைப்பாளி//

  'Let go'--ங்கிறது மிகப்பெரிய விடயம்.

  'அனுபவம் என்பது யாதெனக் கேட்டேன்!
  அந்த அனுபவம் என்பதே நான்தான் என்றான்!' இந்த வரிகள் நினைவுக்கு வருகின்றன ராமலக்‌ஷ்மி!

  கவிதை அருமை :)

  ReplyDelete
 48. ஜெஸ்வந்தி - Jeswanthy said...
  //கவிதை அருமை ராமலக்ஷ்மி.//

  நன்றி ஜெஸ்வந்தி.

  ReplyDelete
 49. திகழ் said...
  ***/கவிதையில் கசியும் காதலும்
  கதையில் துளிர்த்து நிற்கும் கண்ணீரும்
  பத்தி எழுத்தில் பற்றித் துடிக்கும்
  தார்மீகக் கோபங்களும் வலியும்

  அனுபவித்தவருக்கே வாய்க்கும்
  முழுமையாய் ரசிக்க
  நெருக்கமாய் உணர
  தாக்கத்துடன் உள்வாங்க/

  இந்த வரிகள் மிகவும் அருமை/***

  மகிழ்ச்சியும் நன்றியும் திகழ்.

  ReplyDelete
 50. அமைதி அப்பா said...
  //நன்று.//

  நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 51. அமைதிச்சாரல் said...
  //அருமையாக இருக்குது ராமலஷ்மி, தான் அனுபவித்த உணர்வுகளை பிறரும் அறியத்தருவதுதானே ஒரு படைப்பாளியின் வேலை :-))))))//

  அதே. மிக்க நன்றி அமைதிச்சாரல்:)!

  ReplyDelete
 52. மாதேவி said...
  //கவியும் பூவும் அழகு.//

  நன்றிகள் மாதேவி.

  ReplyDelete
 53. ரிஷபன் said...
  ***/அனுபவித்தவருக்கே வாய்க்கும்
  முழுமையாய் ரசிக்க
  நெருக்கமாய் உணர
  தாக்கத்துடன் உள்வாங்க/

  அருமையான கவிதை..***

  வருகைக்கும் கருத்துக்கு நன்றிகள் ரிஷபன்.

  ReplyDelete
 54. NewBee said...
  ***//ஒதுங்கிடத்தெரிந்த
  ஒப்பற்ற படைப்பாளி//

  'Let go'--ங்கிறது மிகப்பெரிய விடயம்.

  'அனுபவம் என்பது யாதெனக் கேட்டேன்!
  அந்த அனுபவம் என்பதே நான்தான் என்றான்!' இந்த வரிகள் நினைவுக்கு வருகின்றன ராமலக்‌ஷ்மி!

  கவிதை அருமை :)/***

  உண்மைதான். நன்றி புதுவண்டு:)! நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களைப் பதிவுலகம் பக்கம் பார்ப்பதில் அளவிலா மகிழ்ச்சி. நலம்தானே?

  ReplyDelete
 55. நீங்களும் கூட ஒரு படைப்பாளிதானே.கவிதை அருமையா வந்திருக்கு அக்கா !

  ReplyDelete
 56. நல்லாயிருக்குங்க

  ReplyDelete
 57. ஹேமா said...
  //நீங்களும் கூட ஒரு படைப்பாளிதானே.கவிதை அருமையா வந்திருக்கு அக்கா !//

  ஆமாம், ஒதுங்கிடத் தெரியாத படைப்பாளி:)! மிகவும் நன்றி ஹேமா.

  ReplyDelete
 58. ஆ.ஞானசேகரன் said...
  //நல்லாயிருக்குங்க//

  மிக்க நன்றி ஞானசேகரன்.

  ReplyDelete
 59. உங்க கவிதைமூலம் படைப்பாளி பற்றி நீங்க சொல்ல வர்றது சரியா புரியலைங்க, ராமலக்ஷ்மி!

  கவிதை "திண்ணை"யில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 60. @ வருண்,

  அனுபவத்தில் அறிவதே முழுமையான புரிதலாக உள்ளது. ஆதிபகவனே மெய்ப்பொருள். தன்னை புரிய வைக்க, உணர வைக்க நேரில் வருவதில்லை. மெய்ப்பொருளை அனுபவத்தாலாயே அடைய இயலுகிறது. அனைத்தையும் படைத்தவனே ‘அடைந்திடு அனுபவத்தில்’ என ஒதுங்கி விடுகிறான். நாமோ படைத்த ஒவ்வொன்றுக்கும் உரிமை கொண்டாடியபடி.. 'விளக்க' முயன்றபடி..(தமிழ் பிரியனுக்கு சொன்னதே)! நாம் சிறந்த படைப்பாளியா என மனதில் எழுகிற கேள்வியை முன் வைக்க முயன்றுள்ளேன். கொஞ்சமாவது புரியும்படி 'விளக்கி'யிருக்கிறேனா:))?

  வாழ்த்துக்களுக்கு நன்றி:)!

  ReplyDelete
 61. தமிழ்மணத்தில் வாக்களித்த 19 பேருக்கும் இன்ட்லியில் வாக்களித்த 36 பேருக்கும் என் நன்றிகள்!

  ReplyDelete
 62. நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 63. A very nice blog & good post shared. overall You have beautifully maintained your blog with good layout, you must submit it for free in this website to gain more exposure. hope u have a wonderful day & awaiting for more new post. Keep Blogging!

  ReplyDelete
 64. ***Blogger ராமலக்ஷ்மி said...

  @ வருண்,

  அனுபவத்தில் அறிவதே முழுமையான புரிதலாக உள்ளது. ஆதிபகவனே மெய்ப்பொருள். தன்னை புரிய வைக்க, உணர வைக்க நேரில் வருவதில்லை. மெய்ப்பொருளை அனுபவத்தாலாயே அடைய இயலுகிறது. அனைத்தையும் படைத்தவனே ‘அடைந்திடு அனுபவத்தில்’ என ஒதுங்கி விடுகிறான். நாமோ படைத்த ஒவ்வொன்றுக்கும் உரிமை கொண்டாடியபடி.. 'விளக்க' முயன்றபடி..(தமிழ் பிரியனுக்கு சொன்னதே)! நாம் சிறந்த படைப்பாளியா என மனதில் எழுகிற கேள்வியை முன் வைக்க முயன்றுள்ளேன். கொஞ்சமாவது புரியும்படி 'விளக்கி'யிருக்கிறேனா:))?***

  இப்போ புரியுதுங்க!நல்ல கேள்வியை முன் வைத்துள்ளீர்கள்! நன்றிங்க ராமலக்ஷ்மி :)

  ReplyDelete
 65. அருமையான கவிதை. ஒரு சந்தேகம்

  இதனை எவ்வாறு அமைத்து பொருள் கொள்வது?

  //அடைந்திடு அனுபவத்தில் என
  ஒதுங்கிடத் தெரிந்த
  ஒப்பற்ற படைப்பாளி!
  //

  விளக்குவீர்களா?
  நன்றி

  ReplyDelete
 66. நீங்கள் முன்பே கொடுத்திருந்த விளக்கம் கண்டு புரிந்து கொண்டேன்
  நீங்கள் காலத்திற்கேற்ற ஒப்பற்ற படைப்பாளி. விளக்கம் தர வில்லை எனில்
  பெரும்பாலான ரசிகர்கள் உங்கள் கவிதைகளின் சிறப்பை அறிய வாய்ப்பு இல்லாமலே போய் விடும்

  ReplyDelete
 67. கனாக்காதலன் said...
  //நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 68. Maria Mcclain said...
  //A very nice blog & good post shared. overall You have beautifully maintained your blog with good layout, you must submit it for free in this website to gain more exposure. hope u have a wonderful day & awaiting for more new post. Keep Blogging!//

  Thanks for the information.

  ReplyDelete
 69. வருண் said...
  //இப்போ புரியுதுங்க!நல்ல கேள்வியை முன் வைத்துள்ளீர்கள்! நன்றிங்க ராமலக்ஷ்மி :)//

  நல்லதாயிற்று:))! நன்றி வருண்.

  ReplyDelete
 70. Meena said...
  //அருமையான கவிதை.//

  நன்றி மீனா.

  //நீங்கள் முன்பே கொடுத்திருந்த விளக்கம் கண்டு புரிந்து கொண்டேன்

  நீங்கள் காலத்திற்கேற்ற ஒப்பற்ற படைப்பாளி. விளக்கம் தர வில்லை எனில்

  பெரும்பாலான ரசிகர்கள் உங்கள் கவிதைகளின் சிறப்பை அறிய வாய்ப்பு இல்லாமலே போய் விடும்//

  ஹாஹா, அப்போ விளக்கத்தைத் தொடரலாம்ங்கறீங்க:)!

  நானே வருணுக்கு அளித்த பதிலைப் பார்த்திடுமாறு கேட்டுக் கொள்ள இருந்தேன். நீங்களே பார்த்து மறுபடி கருத்தும் உரைத்ததில் மகிழ்ச்சி.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin