Wednesday, December 22, 2010

உன்னோடு நீ..


பெருங்கிளையின் சிறுமுனையில்
ஒற்றைக் குயில் மணிக்கணக்காய்

தேன்மலர்களின் நடுவே
ஊஞ்சலாடிக் கரணமடித்துக்
கூவிக் கொண்டிருந்தது கொஞ்சலாய்

ரசித்தபடி தனித்திருந்த முதியவரின்
இதழ்கடையோரம் பூத்து வழிந்தது
எதற்கோ புன்முறுவல்

'பார்ப்பவர் பரிகசிப்பார்
பார்த்து பெரியவரே'
ஏளனம் செய்தவனை
இரக்கத்துடன் ஏறிட்டார்

“கருணை வைத்து உன்னோடு நீ
இருந்திருக்கிறாயா என்றைக்கேனும்

அனுசரணையாய் அளவளாவ
ஒதுக்கியதுண்டா உனக்காக ஒரு நேரம்

இருந்து பார் பேசிப் பார்
கொடுத்து வைக்கும் ஆன்மாவின் அறிமுகம்

காட்டித் தரும் அதுவே
ஒவ்வொரு உயிரிலும் ஒளிந்திருக்கும்
உன்னை உனக்கு அடையாளம்

அந்நொடி கசியத் தொடங்கும்
சிறுதுளியன்பு போதும்

பெருவெள்ளப் பிரவாகமாகி
பூமிப் பந்தை ஈரத்துடன் காக்க

என்னை நீயும் உன்னை நானும்
பார்வையால்.. சொல்லால்.. கூட
தாக்காது இருக்க”

கசிந்து வழிந்தது
பிறப்பின் அர்த்தம்
பிசிறற்றப் பிரியங்களின் சங்கீதமாய்

அண்டம் நிறைத்தது
வாழ்வின் அனுபவம்
புல்லாங்குழல் துளைவழிக் காற்றாய்.

சிறகுகள் விரித்துப் பறந்தது வானில்
உல்லாசமாய் குயில்

அழைத்த அலைபேசியை
அவசரமாய் அணைத்து விட்டு
சிலிர்த்துச் சிறகு விரிக்கிறான்

முதன்முறையாய்
தன்னைத் தான் சந்திக்க..
தன்னோடு தான் இருக்க..
***

12 டிசம்பர் 2010, திண்ணை இணைய இதழில்.., நன்றி திண்ணை.

87 comments:

 1. அற்புதமான கவிதை ராமலஷ்மி..

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. சிந்திக்க வைத்த கவிதை.அருமை.

  ReplyDelete
 4. அருமையான கவிதை.. சிந்திக்கவும் வைக்கிறது...

  ReplyDelete
 5. ****அழைத்த அலைபேசியை
  அவசரமாய் அணைத்து விட்டு
  சிலிர்த்துச் சிறகு விரிக்கிறான்

  முதன்முறையாய்
  தன்னைத் தான் சந்திக்க..
  தன்னோடு தான் இருக்க..***

  ஏனோ புன்னகை புரிகிறேன், இதை வாசிக்கும்போது.

  உங்க தலைப்பு ரொம்ப நல்லாயிருக்கு!

  ReplyDelete
 6. // “கருணை வைத்து உன்னோடு நீ
  இருந்திருக்கிறாயா என்றைக்கேனும்

  அனுசரணையாய் அளவளாவ
  ஒதுக்கியதுண்டா உனக்காக ஒரு நேரம்

  இருந்து பார் பேசிப் பார்
  கொடுத்து வைக்கும் ஆன்மாவின் அறிமுகம்

  காட்டித் தரும் அதுவே
  ஒவ்வொரு உயிரிலும் ஒளிந்திருக்கும்
  உன்னை உனக்கு அடையாளம் //

  இந்த வாரம் கல்கியில் காஞ்சிப்பெரியவர் உரைகளிலிருந்து
  திருப்பணி என்ன ? என்பது பற்றி சுருக்கமாக எழுதியிருக்கிறார்.
  திரு என்றால் இறைவன். அவனுக்குச் செய்யும் பணி திருப்பணி.
  அந்த திருப்பணி என்ன ? நம்மோடு வாழும் அனைத்து உயிர்கள் மேலும்
  அன்பு பூண்டு ஒழுகுதல் . அதற்கென நம் நாளில் ஒரு நேரம், ஒரு மணித்துளி
  உங்களால் ஒதுக்கி நம்மால் என்ன செய்ய இயலும் என நினைத்து அதைச் செய்வதே
  திருப்பணி என்கிறார்கள்.

  நம் உள்ளிருக்கும் ஆன்மாவை நமக்கே அறிமுகம் படுத்த, உன்னை உனக்கே
  அடையாளம் காட்ட ..

  மறுபடியும் மேலே இருந்து படியுங்கள்.
  " கருணை வைத்து உன்னோடு நீ........."

  சுப்பு ரத்தினம்.
  http://vazhvuneri.blogspsot.com

  ReplyDelete
 7. கருணை வைத்து உன்னோடு நீ
  இருந்திருக்கிறாயா என்றைக்கேனும்//
  ரொம்ப பிடிச்சது ராமலக்‌ஷ்மி :)

  ReplyDelete
 8. அருமை. வாழ்த்துக்கள் மேடம்.

  ReplyDelete
 9. அர்த்த‌ங்க‌ள் பொதிந்த‌து.. வார்த்தை கோர்ப்பு ந‌ல்லாயிருக்கு..(சும்மாவா வெச்சாங்க‌ த‌லைப்பு 'முத்துச்ச‌ர‌ம்'னு :) ) இப்ப‌டி அடிக்க‌டி கோர்க்க‌ வாழ்த்துக்க‌ள்..

  ReplyDelete
 10. ரொம்ப நல்லா இருக்கு! :)

  ReplyDelete
 11. நல்ல கவிதைங்க... அன்புதானே அனைத்தின் அடிநாதமும்..

  ReplyDelete
 12. வரிகள் வெகு அழகு :)

  ReplyDelete
 13. http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/

  கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!

  நூல் வெளியிடுவோர்:
  ஓவியர் மருது
  மருத்துவர் ருத்ரன்

  சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
  தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

  நாள்: 26.12.2010

  நேரம்: மாலை 5 மணி

  இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை

  அனைவரும் வருக !

  ReplyDelete
 14. ||தன்னைத் தான் சந்திக்க..
  தன்னோடு தான் இருக்க||

  இது மட்டும் போதும், வாழ்க்கை புரியும், இனிக்கும்.

  ReplyDelete
 15. தேடிக் கோர்த்த வார்த்தைகள் முத்துச்சரம்தான்.
  அருமையாயிருக்கு அக்கா !

  ReplyDelete
 16. வார்த்தைகளில் கோர்த்த கவிதை பிரமாதம். ஆனால் மனிதன் தன்னோடு தானே பேசிக் கொள்வதுதானே அதிகம்? தன்னைத் தேடுவது தனக்கான அன்பிற்காய் ஏங்குவதும்தானே எப்போதும் நடப்பது..?

  //"காட்டித் தரும் அதுவே
  ஒவ்வொரு உயிரிலும் ஒளிந்திருக்கும்
  உன்னை உனக்கு அடையாளம்"//

  இந்த வரிகளில் கொஞ்சம் புரிகிறது மேலே வந்த கேள்விக்கு பதில்!

  ReplyDelete
 17. வாழ்வைத் தொலைக்காமலிருக்க சொன்னவிதம் அருமை.

  ReplyDelete
 18. மிகவும் அருமை. வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 19. \\கசிந்து வழிந்தது
  பிறப்பின் அர்த்தம்
  பிசிறற்றப் பிரியங்களின் சங்கீதமாய்\\

  சிந்திக்க வைத்த கவிதை.அருமை

  ReplyDelete
 20. கவிதைகள் மெருகேறிக் கொண்டே வருகின்றன! தலைப்பும் அருமை, கவிதையைப் போலவே. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி :)

  ReplyDelete
 21. அருமை. வார்த்தை சிக்கனம் காண முடிகிறது இக்கவிதையில்

  ReplyDelete
 22. அற்புதமான கவிதை.

  ReplyDelete
 23. அமைதிச்சாரல் said...
  //அற்புதமான கவிதை ராமலஷ்மி..//

  நன்றி சாரல்.

  ReplyDelete
 24. goma said...
  //வாழ்த்துக்கள்//

  நன்றிகள் கோமா.

  ReplyDelete
 25. asiya omar said...
  //சிந்திக்க வைத்த கவிதை.அருமை.//

  மிக்க நன்றி ஆசியா.

  ReplyDelete
 26. வெறும்பய said...
  //அருமையான கவிதை.. சிந்திக்கவும் வைக்கிறது...//

  மிக்க நன்றிங்க.

  ReplyDelete
 27. வருண் said...
  //****அழைத்த அலைபேசியை
  அவசரமாய் அணைத்து விட்டு
  சிலிர்த்துச் சிறகு விரிக்கிறான்

  முதன்முறையாய்
  தன்னைத் தான் சந்திக்க..
  தன்னோடு தான் இருக்க..***

  ஏனோ புன்னகை புரிகிறேன், இதை வாசிக்கும்போது.

  உங்க தலைப்பு ரொம்ப நல்லாயிருக்கு!//

  மிக்க நன்றி வருண்:)!

  ReplyDelete
 28. sury said...
  ***// “கருணை வைத்து உன்னோடு நீ
  இருந்திருக்கிறாயா என்றைக்கேனும்

  அனுசரணையாய் அளவளாவ
  ஒதுக்கியதுண்டா உனக்காக ஒரு நேரம்

  இருந்து பார் பேசிப் பார்
  கொடுத்து வைக்கும் ஆன்மாவின் அறிமுகம்

  காட்டித் தரும் அதுவே
  ஒவ்வொரு உயிரிலும் ஒளிந்திருக்கும்
  உன்னை உனக்கு அடையாளம் //

  இந்த வாரம் கல்கியில் காஞ்சிப்பெரியவர் உரைகளிலிருந்து
  திருப்பணி என்ன ? என்பது பற்றி சுருக்கமாக எழுதியிருக்கிறார்.
  திரு என்றால் இறைவன். அவனுக்குச் செய்யும் பணி திருப்பணி.
  அந்த திருப்பணி என்ன ? நம்மோடு வாழும் அனைத்து உயிர்கள் மேலும்
  அன்பு பூண்டு ஒழுகுதல் . அதற்கென நம் நாளில் ஒரு நேரம், ஒரு மணித்துளி
  உங்களால் ஒதுக்கி நம்மால் என்ன செய்ய இயலும் என நினைத்து அதைச் செய்வதே
  திருப்பணி என்கிறார்கள்.

  நம் உள்ளிருக்கும் ஆன்மாவை நமக்கே அறிமுகம் படுத்த, உன்னை உனக்கே
  அடையாளம் காட்ட ..

  மறுபடியும் மேலே இருந்து படியுங்கள்.
  " கருணை வைத்து உன்னோடு நீ........."//

  அருமையான இந்தப் பகிர்வுக்கு மிகவும் நன்றி.

  மூன்று அன்புச் செய்திகளில் ஒன்றாக இக்கவிதையின் வரிகளை இடம்பெறச் செய்த தங்கள் நேற்றைய பதிவுக்கு என் வணக்கங்கள் சார்.

  ReplyDelete
 29. எல் கே said...

  //நல்லக் கவிதை//

  நன்றி எல் கே.

  ReplyDelete
 30. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //கருணை வைத்து உன்னோடு நீ
  இருந்திருக்கிறாயா என்றைக்கேனும்//
  ரொம்ப பிடிச்சது ராமலக்‌ஷ்மி :)//

  நாம கருணை வச்சாதான் அது சாத்தியம், இல்லையா:)? நன்றி முத்துலெட்சுமி.

  ReplyDelete
 31. புவனேஸ்வரி ராமநாதன் said...
  //அருமை. வாழ்த்துக்கள் மேடம்.//

  நன்றிகள் புவனேஸ்வரி.

  ReplyDelete
 32. அஹமது இர்ஷாத் said...
  //அர்த்த‌ங்க‌ள் பொதிந்த‌து.. வார்த்தை கோர்ப்பு ந‌ல்லாயிருக்கு..(சும்மாவா வெச்சாங்க‌ த‌லைப்பு 'முத்துச்ச‌ர‌ம்'னு :) ) இப்ப‌டி அடிக்க‌டி கோர்க்க‌ வாழ்த்துக்க‌ள்..//

  கோர்க்கிறேன்:)! நன்றிகள் இர்ஷாத்.

  ReplyDelete
 33. தமிழ் உதயம் said...
  //நல்லா இருக்குங்க.//

  மிக்க நன்றி தமிழ் உதயம்.

  ReplyDelete
 34. Bharkavi said...
  //ரொம்ப நல்லா இருக்கு! :)//

  வாங்க பார்கவி. மிக்க நன்றி:)!

  ReplyDelete
 35. க.பாலாசி said...
  //நல்ல கவிதைங்க... அன்புதானே அனைத்தின் அடிநாதமும்..//

  ஆம். அதைக் கேட்க முடிந்து விட்டால் போதும். நன்றிகள் பாலாசி.

  ReplyDelete
 36. sakthi said...
  //வரிகள் வெகு அழகு :)//

  மிக்க நன்றி சக்தி.

  ReplyDelete
 37. @ ? ,
  தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 38. ஈரோடு கதிர் said...
  ***||தன்னைத் தான் சந்திக்க..
  தன்னோடு தான் இருக்க||

  இது மட்டும் போதும், வாழ்க்கை புரியும், இனிக்கும்.***

  சரியாய் சொன்னீர்கள். நன்றி கதிர்.

  ReplyDelete
 39. ஹேமா said...
  //தேடிக் கோர்த்த வார்த்தைகள் முத்துச்சரம்தான்.
  அருமையாயிருக்கு அக்கா !//

  நன்றிகள் ஹேமா.

  ReplyDelete
 40. ஸ்ரீராம். said...
  //வார்த்தைகளில் கோர்த்த கவிதை பிரமாதம். ஆனால் மனிதன் தன்னோடு தானே பேசிக் கொள்வதுதானே அதிகம்? தன்னைத் தேடுவது தனக்கான அன்பிற்காய் ஏங்குவதும்தானே எப்போதும் நடப்பது..?

  //"காட்டித் தரும் அதுவே
  ஒவ்வொரு உயிரிலும் ஒளிந்திருக்கும்
  உன்னை உனக்கு அடையாளம்"//

  இந்த வரிகளில் கொஞ்சம் புரிகிறது மேலே வந்த கேள்விக்கு பதில்!//

  நம்மை நாம் தேடுவதை சரியான பாதையில் தேடுகிறோமா என்பதுவும் கேள்வியே. நன்றிகள் ஸ்ரீராம்.

  ReplyDelete
 41. "உழவன்" "Uzhavan" said...
  //வாழ்வைத் தொலைக்காமலிருக்க சொன்னவிதம் அருமை.//

  நன்றி உழவன்.

  ReplyDelete
 42. S பாரதி வைதேகி said...
  //அருமை !!//

  தொடரும் வருகைக்கு நன்றி பாரதி வைதேகி:)!

  ReplyDelete
 43. Jaleela Kamal said...
  //மிக அருமை//

  வாங்க ஜலீலா. மிக்க நன்றி.

  ReplyDelete
 44. கனாக்காதலன் said...
  //மிகவும் அருமை. வாழ்த்துக்கள் !//

  மிக்க நன்றிங்க.

  ReplyDelete
 45. அம்பிகா said...
  ***\\கசிந்து வழிந்தது
  பிறப்பின் அர்த்தம்
  பிசிறற்றப் பிரியங்களின் சங்கீதமாய்\\

  சிந்திக்க வைத்த கவிதை.அருமை***

  நன்றி அம்பிகா.

  ReplyDelete
 46. கவிநயா said...
  //கவிதைகள் மெருகேறிக் கொண்டே வருகின்றன! தலைப்பும் அருமை, கவிதையைப் போலவே. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி :)//

  மகிழ்ச்சியும் நன்றியும் கவிநயா.

  ReplyDelete
 47. மோகன் குமார் said...
  //அருமை. வார்த்தை சிக்கனம் காண முடிகிறது இக்கவிதையில்//

  கடைப்பிடிக்க முயன்றிடுகிறேன்:)! நன்றி மோகன் குமார்.

  ReplyDelete
 48. சே.குமார் said...
  //அற்புதமான கவிதை.//

  நன்றிகள் குமார்.

  ReplyDelete
 49. தமிழ்மணத்தில் வாக்களித்த 15 பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த 28 பேருக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 50. அருமையான கவி வரிகள் ...

  அள்ளி கொடுங்க கவிதைகளை ... நாங்கள் துள்ளி பருகிகொள்கின்றோம்....

  ReplyDelete
 51. அருமையான கவிதை ராமலக்ஷ்மி.

  சூரி சாரின் விளக்கமும் நன்றாக இருக்கிறது.

  குயில் படமும் அழகு.

  ReplyDelete
 52. குயிலின் குரல் இன்னும்...

  அழகான அருமையான உணர்வு

  நல்லதொரு கவிதை

  வாழ்த்துகள்

  ReplyDelete
 53. @ கோமதி அரசு,

  மிக்க நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 54. @ திகழ்,

  //குயிலின் குரல் இன்னும்...//

  மகிழ்ச்சியும் நன்றியும் திகழ்.

  ReplyDelete
 55. மிக எளிமையான வரிகளில்
  மிக வலிமையான எண்ணங்களின் பிரதிபலிப்பு..... இனி நானும் முயல்வேன் என்னோடு நானிருக்க..... கவிதை காலம் வெல்லும்!

  சில காலம் வலைப்பக்கம் வர இயலாத வேலைச்சூழல்......

  உங்க ஆதரவுக்கும் அன்பிற்கும் மிக்க நன்றிங்க.

  ReplyDelete
 56. அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 57. சிந்திக்க வைத்த கவிதை....


  அன்புடன்,

  ஆர்.ஆர்.ஆர்.

  ReplyDelete
 58. //“கருணை வைத்து உன்னோடு நீ
  இருந்திருக்கிறாயா என்றைக்கேனும்

  அனுசரணையாய் அளவளாவ
  ஒதுக்கியதுண்டா உனக்காக ஒரு நேரம்

  இருந்து பார் பேசிப் பார்
  கொடுத்து வைக்கும் ஆன்மாவின் அறிமுகம்//

  இது அத்தனையும் நானும் உணர்கிறேன்
  ராம லக்ஷ்மி அவர்களே
  இனம் இனத்தோடு சேரும், உங்களோடு சேர்ந்திடலாம்
  என்று முடிவெடுத்து விட்டேன்!

  காட்டித் தரும் அதுவே
  ஒவ்வொரு உயிரிலும் ஒளிந்திருக்கும்
  உன்னை உனக்கு அடையாளம்

  அந்நொடி கசியத் தொடங்கும்
  சிறுதுளியன்பு போதும்

  பெருவெள்ளப் பிரவாகமாகி
  பூமிப் பந்தை ஈரத்துடன் காக்க//

  ReplyDelete
 59. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் (Advance 28/12)

  ReplyDelete
 60. திகழ் said...
  இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் (Advance 28/12)//

  அப்படியா....?
  எனதினிய நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 61. கவிதை அருமை!

  ReplyDelete
 62. மிக அருமை ராமலெக்ஷ்மி.. திண்ணையிலேயே ரசித்தேன்.. தன்னோடு தான் இருக்க..ஹ்ம்ம்ம்

  ReplyDelete
 63. ரா.ல.அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

  ReplyDelete
 64. கவிதை அருமை.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 65. சி. கருணாகரசு said...
  //மிக எளிமையான வரிகளில்
  மிக வலிமையான எண்ணங்களின் பிரதிபலிப்பு..... இனி நானும் முயல்வேன் என்னோடு நானிருக்க..... கவிதை காலம் வெல்லும்!//

  கவிதை தங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி. நன்றிகள் கருணாகரசு.

  ReplyDelete
 66. Lakshmi said...

  //அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி லக்ஷ்மி.

  ReplyDelete
 67. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
  //சிந்திக்க வைத்த கவிதை....//

  நன்றிகள் ஆர்.ஆர்.ஆர்.

  ReplyDelete
 68. Meena said...
  //இது அத்தனையும் நானும் உணர்கிறேன்
  ராம லக்ஷ்மி அவர்களே
  இனம் இனத்தோடு சேரும், உங்களோடு சேர்ந்திடலாம்
  என்று முடிவெடுத்து விட்டேன்!//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் மீனா.

  ReplyDelete
 69. திகழ் said...
  //இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் (Advance 28/12)//

  அட்வான்ஸாக வாழ்த்தியதோடு நின்றிடாமல் அழகான கவிபாடிப் பதிவிட்டு நெகிழ வைத்து விட்டீர்கள். நன்றிகள் திகழ்!!!

  ReplyDelete
 70. சி. கருணாகரசு said...
  //திகழ் said...
  இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் (Advance 28/12)//

  அப்படியா....?
  எனதினிய நல் வாழ்த்துக்கள்.//

  நன்றிகள் கருணாகரசு. நானானி அவர்கள் பதிவிலும் உங்கள் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டேன்:)!

  ReplyDelete
 71. Sriakila said...
  //கவிதை அருமை!//

  மிக்க நன்றிங்க ஸ்ரீஅகிலா.

  ReplyDelete
 72. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  //மிக அருமை ராமலெக்ஷ்மி.. திண்ணையிலேயே ரசித்தேன்.. தன்னோடு தான் இருக்க..ஹ்ம்ம்ம்//

  நன்றிகள் தேனம்மை:)!

  ReplyDelete
 73. பாலராஜன்கீதா said...
  //ரா.ல.அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்//

  நலமாக இருக்கிறீர்களா:)? மிக்க நன்றி பாலராஜன்கீதா.

  ReplyDelete
 74. ஸாதிகா said...
  //கவிதை அருமை.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!//

  நன்றிகள் ஸாதிகா:)!

  ReplyDelete
 75. அருமையான கவிதை..
  வாழ்த்துக்க‌ள்.

  ReplyDelete
 76. @ ஜிஜி,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜிஜி.

  ReplyDelete
 77. சிந்திக்க வைத்த அற்புதமான கவிதை வாழ்த்துக்கள் ராமுமேடம்

  ReplyDelete
 78. கவிதை.. சிந்திக்க வைக்கிறது...

  ReplyDelete
 79. அன்புடன் மலிக்கா said...
  //சிந்திக்க வைத்த அற்புதமான கவிதை வாழ்த்துக்கள் ராமுமேடம்//

  நன்றி மலிக்கா.

  ReplyDelete
 80. Kanchana Radhakrishnan said...
  //கவிதை.. சிந்திக்க வைக்கிறது...//

  நன்றி மேடம்.

  ReplyDelete
 81. //அந்நொடி கசியத் தொடங்கும்
  சிறுதுளியன்பு போதும்

  பெருவெள்ளப் பிரவாகமாகி
  பூமிப் பந்தை ஈரத்துடன் காக்க

  என்னை நீயும் உன்னை நானும்
  பார்வையால்.. சொல்லால்.. கூட
  தாக்காது இருக்க”
  //

  அழகான கருத்தாழமிக்க கவிதை அக்கா...

  ReplyDelete
 82. @ கவிநா,

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin