நன்றி நவிலல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நன்றி நவிலல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 ஜூலை, 2026

பண்புடன் மின்னிதழ் கவிதைப்போட்டியில் பரிசு




பண்புடன் மின்னிதழ் நடத்திய கவிதைப் போட்டியில் நான் எழுதிய ‘இல்லாத எல்லாமும்’ கவிதைக்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. இந்த அங்கீகாரத்திற்காக பண்புடன் மின்னிதழ் ஆசிரியர் குழுவினர், நடுவர் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி. வெற்றி பெற்ற மற்ற நான்கு கவிஞர்களுக்கும் நல்வாழ்த்துகள்! 

கவிதை, சிறுகதை மற்றும் கட்டுரை போட்டிகளுக்காக வெளியான அறிவிப்பை ஏற்கனவே சென்ற தூறல் பதிவில் இங்கே பகிர்ந்திருந்தேன். 

தற்போது முடிவுகள் குறித்து வெளியான ஃபேஸ்புக் பதிவுகளின் இணைப்புகளை உங்களுடனான பகிர்வாகவும் எனக்கான சேமிப்பாகவும் இங்கே தருகிறேன்.

கவிதைப்போட்டி முடிவுகள் - முதற்கட்ட அறிவிப்பு: https://www.facebook.com/groups/9775181859227666/posts/27696031563382754

போட்டி முடிவு அறிவிப்பு - பரிசு பெற்ற கவிதைகள். 

முதன்மை நடுவர் எழுத்தாளர் அய்யனார் விஸ்வநாத் குறித்த அறிமுகம்: https://www.facebook.com/groups/9775181859227666/posts/27666075506378360

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபமாகக் கவிதைகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்தப் பரிசு அதைத் தொடர ஒரு ஊக்கமாக அமைந்துள்ளது எனில் அது மிகையன்று. 

பரிசு பெற்றக் கவிதை பண்புடன் இதழில் வெளியான பிறகு இங்கே பகிர்ந்திடுவேன்.

நன்றி பண்புடன்!

*

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

FLICKR 2000 - ஹாட்ரிக் - உலகப் புகைப்பட தின மாதம்

https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/
ஏழேகால் ஆண்டுகள்.. இரண்டாயிரம் படங்கள்..! சீரான வளர்ச்சிக்கும் ஓரளவு பெற்றிருக்கும் தேர்ச்சிக்கும் இடைவிடாத முயற்சி மட்டுமே காரணமன்று.

புதன், 25 பிப்ரவரி, 2015

திருநாகேஸ்வரம் புஷ்கரணி - ஓவியமானது ஒளிப்படம்

# திருநாகேஸ்வரம் புஷ்கரணி

நான் எடுத்த இப்படம், சமீபத்தில் (என் ஒளிப்படப் பயணம் குறித்த கட்டுரை வெளியான) ‘தினகரன் வசந்ததின் அட்டை’யிலும் இடம் பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.

இக்காட்சியை அற்புதமான ஓவியமாகத் தீட்டி, எனக்கானப் பரிசாக அளித்துக் கெளரவப்படுத்தி, மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டார் நண்பரும், ஓவியருமான..

வெள்ளி, 10 அக்டோபர், 2014

பெண் எழுத்தாளர்களுக்கான இலக்கியப் பரிசுகள் 2014 - திருப்பூரில் விழா

'இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்புக்கு மு.ஜீவானந்தம் இலக்கியப்பரிசு அறிவிப்பாகியிருந்ததை இங்கே பகிர்ந்திருந்தேன்.

பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நிரல், பங்கேற்பாளர்கள், நடுவர்கள், பரிசு பெறும் படைப்புகள் ஆகியவற்றின் விவரங்கள் அடங்கிய விழா அழைப்பிதழையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

# திருப்பூரில்..


# நிகழ்ச்சி நிரல்

கவிதை, நாவல், மொழிபெயர்ப்பு, சிறுகதை, கட்டுரை ஆகிய பிரிவுகளில் பரிசு பெற்ற படைப்புகள் மற்றும் எழுத்தாளர்கள்..

# கவிதை, நாவல் மற்றும் மொழிபெயர்ப்பு

செவ்வாய், 7 அக்டோபர், 2014

‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’ இலக்கியப் போட்டி 2014_ல் பரிசு

“இலைகள் பழுக்காத உலகம்” கவிதைத் தொகுப்புக்கு மற்றுமொரு விருது.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்திய இலக்கியப் போட்டி 2014-ல்!
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்திற்கும்  நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கும், தேர்வுக் குழுவினருக்கும், வெளியிட்ட அகநாழிகை பதிப்பகத்திற்கும் என் நன்றிகள்!

பல பிரிவுகளில் நடைபெற்றப் போட்டியில் பரிசு பெற்ற நூல்கள் மற்றும் எழுத்தாளர்கள் பற்றிய விவரங்களும், விழா நிகழ்வு குறித்தத் தகவல்களும்...

சனி, 1 மார்ச், 2014

தூறல் 15 - ரியாத் தமிழ்ச் சங்கம்; பெங்களூரின் ஆன்மா; குங்குமம் தோழி fb; Flickr 1500

நன்றி ரியாத் தமிழ்ச் சங்கம்!

சென்ற வருடம் ரியாத் தமிழ் சங்கம் நடத்திய . ‘கல்யாண் நினைவு’ உலகளாவிய கவிதைப் போட்டியில் எனது கவிதை ‘நட்சத்திரக் கனவு’ சிறப்புப் பரிசு பெற்றிருந்ததைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். சில மாதங்களுக்கு முன் அதற்கான சான்றிதழ் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது:
#
இதைத் தொடர்ந்து,  இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இப்னு ஹம்துன் மூலமாகத் தற்போது பரிசுத் தொகையையும் கேடயத்தையும் அனுப்பி வைத்துள்ளார்கள்.
#
#
ரியாத் தமிழ்ச் சங்கத்தினருக்கும், நடுவர்களுக்கும் என் நன்றி. பரிசு பெற்றக் கவிதை இங்கே.
***

பெங்களூரின் ஆன்மா - வெளி - சமூகம்:

AID நடத்தும் பெங்களூர் உங்கள் பார்வையில்.. போட்டிக்குப் படங்களை அனுப்பும் கடைசித் தேதி 1 மார்ச் ஆக நீட்டிக்கப் பட்டுள்ளது:
படங்களை அனுப்ப விரும்புகிறவர்கள் இன்று இரவு வரைக்கும் இங்கே சமர்ப்பிக்கலாம். பெங்களூர்வாசிகள் இன்றைய நாளைப் பயன்படுத்திக் கொண்டு பொருத்தமாக 5 படங்களைப் புதிதாக எடுத்தும் அனுப்பலாம்.  மார்ச் 8,9 தேதிகளில் நடைபெறவிருந்த ஒளிப்படக் கண்காட்சியும் 15,16 தேதிகளுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரிவான விவரங்கள் இந்தப் பதிவில். 

மாதிரிக்கு.. கலந்து கொள்ளும் எனது ஐந்தாவது படம்:

# சுமையைக் குறைக்க அன்றி தோளின் வலிமைக்காகப் பிரார்த்திக்கும் சாதாரண மனிதர்கள்.. (கமர்ஷியல் தெரு, பெங்களூருவில்..)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin