Monday, August 16, 2010

மேகங்களுக்குப் பின்னால்.. - உயிரோசையில்..

யு.எஸிலிருந்து இரண்டு வார விடுப்பில் மகன்கள் இருவருடனும் வந்திருந்த சின்ன தங்கை ஒவ்வொருவர் வீடாக சென்றால் பயணத்திலேயே பாதி நாட்கள் கழியுமே என நானும் பெங்களூரில் இருக்கும் இன்னொரு தங்கையும் நெல்லையில் அம்மா வீடு செல்ல முடிவெடுத்தோம். என் மகனுக்கும் செமஸ்டர் விடுமுறை. தங்கை மகளுக்கும் விடுமுறை. வசதியாயிற்று. அத்தைகளுக்காகவும் கஸின்களுக்காகவும் அங்கே ஆவலாய் காத்திருந்தான் தம்பியின் ஒன்றரை வயது மகன். குடும்பம் ஒன்று கூடினால் குதூகலத்துக்குக் கேட்க வேண்டுமா? இனிதே கழிந்தது விடுமுறை.

ருங்குளம் சென்றிருந்தோம். குன்றின் மேல் அமைந்த பெருமாள் கோவில்.சுற்றிச் சூழ பசுமையைப் பறை சாற்றும் வயல்கள். ஆங்காங்கே மந்தை மந்தையாய் ஆடுகள். வயல்வெளிகள். சுதந்திரமாய் உலவியபடி சில குதிரைகளும் குட்டிகளும்.மேலே சென்றதும் அப்படியொரு இதமான காற்று. மேகங்கள் விரைந்தபடி இருக்க வெகு அழகாய் ஆகாயம். எல்லாவற்றையும் விட என்னைக் கவர்ந்தது அங்கு காண நேர்ந்த மக்களின் மிக எளிமையான வாழ்க்கை.

தரிசனம் முடித்து வெளிவந்த சமயம் கோவிலுக்கு எதிரே ஒரு முதியவர், வயதின் காரணமாக பார்வை குறைந்த நிலையில். பக்கத்தில் ஒரு எவர்சில்வர் கேனில் சூடான சுக்குவென்னீர். வேட்டி மடிப்பில் கட்டி வைத்திருந்த கவரில் டிஸ்போஸிபிள் கோப்பைகள். எங்கிருந்தோ ஒலிபெருக்கியில் மிதந்து வந்த பாடலுக்கு அவரது விரல்கள் விடாமல் தாளமிட்டபடி இருந்தன.கூடவே இளம் வயதில் சுண்டல் வியாபாரி. அவர் மகன் எனத் தெரிய வந்தது. ‘சூடாயிருக்கு கொண்டை கடலை. வாங்குங்கம்மா’ என்றார். ‘அத்தனை பேருக்கும்’ என்றதும் முகத்தில் ஒரு பளீர் சிரிப்பு. சந்தோஷமாய்ப் பொட்டலமிட ஆரம்பித்தார்.
‘அண்ணே ரெண்ரெண்ட் ரூபாய்க்கா அஞ்சு சுண்டல்’ என வந்து நின்றார்கள் சில சிறுமியர். ‘முதலில் அவர்களுக்கு கொடுங்க’ என்றோம். பேச்சுக் கொடுத்ததில் சிலர் பக்கத்து கிராமம். அத்தை வீடு வந்தோம் வார இறுதி என்பதால் என்றார்கள் இருவர். எல்லோருமாய் சுண்டலை வாங்கிக் கொண்டு பக்கத்திலிருந்த பாறையை நோக்கி நடையைக் கட்டினார்கள்.

அந்த வயதிலும் பேரனைத் தூக்கிக் கொண்டு கிடுகிடுவெனப் படியேறி அவர்களிடம் வந்தார் ஒரு வயதான பெண்மணி. ‘வந்துட்டியா?’ எங்களுக்காக சுக்குவென்னீர் கோப்பையை ஒன்றொன்றாக மகனிடம் தந்தபடியிருந்த முதியவர் சந்தோஷமாய் குரல் எழுப்பினார். பெண்மணி ‘ம்’ என்றிட ‘அவன்’ என்றார். ‘அவனில்லாம நா ஏன் வாரேன்’ என சிரித்தார்.
வேலையை முடித்து விட்டு ‘கொண்டா கொண்டா’ எனக் காற்றைக் கைகளால் துழாவினார். மகன் வாங்கி அந்த சிசுவை தாத்தாவின் மடியில் வைக்க, முதியவருக்கு என்ன ஒரு சந்தோஷம். குழந்தையும் தாத்தாவிடம் தாவி வந்தமர்ந்து சிரித்து விளையாடத் தொடங்கியது. சிறிது நேரத்தில் ‘இருட்டப் போவுது. நாளை வாரேன்’ என குழந்தையை வாங்கிக் கொண்டு மறுபடி சிட்டாய்ப் பறந்தார் பாட்டி, படிகளின் வழியே.

அது தினசரி வழக்கம் என்பதும் குழந்தை தாத்தாவோடு வசிக்கவில்லை என்பதும் புரிந்தது. அவரிடம் காட்டுவதற்காக மட்டுமே அழைத்து வரப்படுவது கோவிலுக்குச் செல்லாமல் அப்பெண்மணி மறுபடி விடுவிடுவென படியிறங்கிச் சென்றதில் புரிந்தது. மகள் வயிற்றுப் பேரனோ கொள்ளுப் பேரனோ சகோதரியின் பேரனோ தெரியாது.

குன்றின் கீழிருக்கும் சிவன் கோவிலுக்கு செல்லலாமென வந்த வாகனங்களை நோக்கி நாங்கள் நடக்க ஆரம்பிக்க கண்ணில் பட்டார்கள் சுண்டல் வாங்கிச் சென்ற சிறுமியர். ஆகா என்ன ரசனையான வாழ்க்கை. பாறை மேல் அமர்ந்து மலை, வாழைத்தோப்பு, பரந்த வானம், மறையும் சூரியன், வீசும் தென்றல் எல்லாவற்றையும் அனுபவித்து ரசித்தபடி சுண்டலைக் கொறித்தவாறு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். ‘முகம் பார்க்காமல் அலைதொலைபேசிகளிலும் இணையத்திலும் அடிக்கும் அரட்டையெல்லாம் ஒரு அரட்டையா? எங்களைப் பாருங்கள்’ என ‘கப கப’க்க வைத்தார்கள்.

டிவாரத்தில் சிவன் கோவில். ‘காரிலேயே செருப்பை விட்டு விடட்டுமா’ பெங்களூர் கோவில் வாசலில் இதுவரை நாலைந்து முறை குடும்பமாக, ஏழெட்டு ஜோடிகளை மொத்தமாக தொலைத்த அனுபவத்தில் மகன் கேட்டான். அதுவும் மிகச் சமீபமாக ஊர் கிளம்பும் இரண்டு தினம் முன்னர் தொலைத்ததும், அவசரமாய் வேறு வாங்கியதும் நினைவிடுக்கிலிருந்து எட்டிப் பார்த்து எச்சரிக்கை மணி அடித்திருக்க வேண்டும்:). ‘இங்கேயெல்லாம் யாரும் அப்படி எடுக்க மாட்டார்கள். தைரியமாய் அணிந்து வா. கோவில் வாசலில் விட்டுக் கொள்ளலாம்’ என்றேன்.

அரைமணியில் வெளிவந்தோம். குன்றின் மேல் பார்வை சென்ற போது அந்தச் சிறுமியர் கைகளை நீட்டி ஆட்டி இன்னும் அரட்டை அடித்தபடி. என் மகனுக்கும் சின்னத் தங்கைக்கும் ‘நாமெல்லாம் அப்படி உட்கார்ந்து பேசவில்லையே. எவ்வளவு ஜாலியாய் இருந்திருக்கும்’ மறுபடி காதிலே புகை. ‘சரி ஊர் போகும் முன் இன்னொரு முறை வருவோம்’ என அம்மா சமாதானம் செய்து அடுத்திருந்த ஐயப்பன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள்.

குழந்தைகளுக்கு ஐயப்பன் கதையையும் புலிவாகனத்தைக் காட்டி புராணத்தையும் சொல்லியபடியே அங்கிருந்து கிளம்பிய வேளையில் மெதுவாக இருள் கவியத் தொடங்கியிருந்தது. கோவில் முன்னிருந்த குறுகிய சாலையில் கூட்டத்தின் ஊடாக மெல்ல மெல்ல நகர்ந்த வாகனத்துள் இருந்து கண்ட காட்சி.. சுண்டல் வியாபாரியின் ஒரு கை தலையிலிருந்த கூடையைப் பிடித்திருக்க மறு கையிடுக்கில் சற்று நீண்ட கம்பு. கம்பின் இன்னொரு முனையைப் பற்றியபடி அவனுடன் வேகமாய் நடந்து கொண்டிருந்தார் முதியவர்.

நெகிழ்வாய் உணர்ந்தோம். 'பேசாம வீட்டோடு இரு’ யாரும் சொல்லவில்லை. ஒருபடி மேலாக அக்கறையுடன் அழைத்துச் செல்லும் மகன். தாத்தாவைப் பார்க்க தினசரி பேரன் அனுப்பி வைக்கப் படுகிறான். உறவுகளின் மேலான மரியாதை, முதிய காலத்தில் அவரது விருப்பங்களை நிறைவேற்ற குடும்பம் எடுத்துக் கொள்ளப்படும் சிரத்தை எதை என்று சொல்ல. பெரிய கனவுகள் லட்சியங்கள் இவர்களுக்கு இருக்குமா தெரியாது. அன்றாட உழைப்பில் அன்றைய ஜீவனம். தேவைகள் தீர்மானிக்கப்பட்டு தேடல்கள் வரையறுக்கப்பட்டு சீரான பாதையில் செல்லும் தெளிந்த நீரோடையை போன்றதான வாழ்க்கை. கிராமத்துக் காற்றைப் போல சுத்தமாய் மனம்.

அவரசயுகத்தில் இழந்த வாழ்க்கை முறைகளுக்காகவும், ஏன்.. அந்த சிறுமியரைப் போன்று ஏகாந்தமான சூழலில் அரட்டையடிக்க முடியாததற்கும் கூட எழுகிற நம் ஏக்கம் எத்தனை உண்மையானது? தேவதை நேரில் தோன்றி ‘இனி இம்மனிதரைப் போல எளிமையாய் வாழ வரம் தருகிறேன்’ என குக்கிராமத்துக் குடில் ஒன்றுக்கு ஒருநொடியில் நம்மை இடம் மாற்றினால் எத்தனைபேர் அதை மனம் உவந்து ஏற்றுக் கொள்வோம்? பட்டணத்து சுகங்கள் என்னதான் அலுத்தாலும் எத்தனை செருப்புக்கள் திருட்டுப் போனாலும் கிராமத்து மண்ணோடு எவ்வளவுதூரம் நம்மால் பொருந்திப் போக இயலும்? எத்தனை நாள் அவை நமக்கு இனிக்கும்?

கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக எழுந்து, காற்றில் அங்குமிங்கும் அலைந்து, வேகவேகமாய் வெள்ளை மேகங்களுக்குப் பின்னால் சென்று ஒளிந்து கொண்டன வெட்கப்பட்டு.
***


உயிர்மை.காமின் இன்றைய உயிரோசையிலும்.., நன்றி உயிரோசை!

92 comments:

 1. படங்கள் அருமை ராமலக்ஷ்மி.

  குறிப்பாக அந்த கருப்பு வெள்ளை பட்டி படம் சூப்பர் :-)

  ReplyDelete
 2. //உறவுகளின் மேலான மரியாதை, முதிய காலத்தில் அவரது விருப்பங்களை நிறைவேற்ற குடும்பம் எடுத்துக் கொள்ளப்படும் சிரத்தை//

  புரிந்துகொள்கிறோம்!

  தனித்துவிடப்பட்ட பெற்றோர், அவர்களை விட்டு விட்டு தனித்து இருக்கும் சூழல்,ஒவ்வொரு நாளும் வேண்டும் இறைவனிடம் வரங்கள் கேட்கின்றேன். அனைவரும் சேர்ந்திருக்கும் நாளில் மகிழ்ச்சி - மகிழ்ச்சியினை மட்டுமே கொண்டு வந்து சேர் என்று!


  குழந்தையினை தூக்கி வைத்துகொண்டிருக்கும் பாட்டி & தனித்து அமர்ந்திருக்கும் தாத்தா + விளக்கு சிறுமியர் என போட்டோக்கள் அழகு!

  ReplyDelete
 3. மிக மிக அருமையானதொரு பகிர்வுங்க..

  எழுத்துக்கு உண்மையான, உயிரோட்டமான படமும் அமைந்திருப்பது மிக பொருத்தம் கூடவே வலு சேர்க்கிறது..

  ||இங்கேயெல்லாம் யாரும் அப்படி எடுக்க மாட்டார்கள்||

  இந்த வரி திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.

  ReplyDelete
 4. மிகவும் ரசித்த பதிவு..!

  ரெண்ரெண்டாவிலே வியந்தேன் ஆழ்ந்த கவனிப்பும் இருக்கிறது உங்களிடம்..!

  கடைசி மூன்றுவரியில் எழுதியிருப்பவை கவிதை...!

  உயிரோசை இதழில் வந்தமைக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 5. படங்களும், பகிர்வும் நன்று

  ReplyDelete
 6. நல்ல கேள்விகள் கேட்டிருக்கீங்க முடிவில்..ஏக்கமும் உண்மையே , நம்மை மாத்திக்கமுடியாம இருக்கிறது ம் உண்மையே.. ராமலக்‌ஷ்மி

  ReplyDelete
 7. மிக மிக அருமையான பகிர்வு வாழ்க்கையில் பல கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியவில்லை

  ReplyDelete
 8. ம்ம்..இந்தக் கருங்குளம் கோவிலுக்கு நான் கூட ஒருமுறை போயிருக்கிறேன்.ஒரு ஆறு பக்கத்தில் உண்டே!மீண்டும் போய் வந்த உணர்வு.

  ReplyDelete
 9. எனக்கும் இந்த கட்டுரைகளின் மீது இருக்கும் ஒரு அன்னியோன்யம் கவிதையின் மீது இல்லை என்றே சொல்லலாம். ஆனால் போட்டோக்களை அப்படி சொல்லிவிடவும் முடியாது.

  இந்த கட்டுரை ஒரு வித சந்தோஷம் கொடுத்தது. உடன்பிறந்தவங்க கூட இருக்கும் போது ஒரு தனி கர்வம் வரும். சின்ன வயசிலே சண்டை போட்டுக்கொண்ட (அற்ப விஷயத்துக்கு எல்லாம் கூட) விஷயங்கள் நியாபகம் வந்து சிரிக்க வைக்கும். நம்ம பசங்க கிட்ட அதை பகிர்ந்துக்கும் போது நம்மை அறியாமலே வெட்கம் வந்து தொலைக்கும்.

  ஒரு நாவல் பழத்துக்கு அடித்து கொண்டு பேசாமல் இருந்ததும், இப்போது கண் முன்னே ஒரு படி நாவல் கொட்டி கிடந்தாலும் தான் தின்னாமல் உடன்பிறந்தவங்களுக்கு கொடுத்து சாப்பிட சொல்லும் விட்டு கொடுத்தல் தாராளமாக வரும்.

  திரும்ப எல்லோரும் அவரவர் கூட்டுக்கு திரும்பும் போது ஒரு ஏக்கம் வரும்.

  ஆனா இந்த கட்டுரை முதல் பத்தியிலேயே அதை கடந்து அந்த பார்வை குறைந்த தாத்தாவிடம் வந்து விட்டாலும் என் மனது அங்கயே நிற்பது தான் உண்மை!

  ReplyDelete
 10. படங்களும், பகிர்வும் அருமை.
  கருங்குளம் கோயிலுக்கு போய் நிறைய நாட்களாகி விட்டன. பக்கத்தில் இருக்கும் அழகை பதிவில் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
  நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 11. அருமையான பகிர்வு ராமலெஷ்மி

  ReplyDelete
 12. ***அவரசயுகத்தில் இழந்த வாழ்க்கை முறைகளுக்காகவும், ஏன்.. அந்த சிறுமியரைப் போன்று ஏகாந்தமான சூழலில் அரட்டையடிக்க முடியாததற்கும் கூட எழுகிற நம் ஏக்கம் எத்தனை உண்மையானது? தேவதை நேரில் தோன்றி ‘இனி இம்மனிதரைப் போல எளிமையாய் வாழ வரம் தருகிறேன்’ என குக்கிராமத்துக் குடில் ஒன்றுக்கு ஒருநொடியில் நம்மை இடம் மாற்றினால் எத்தனைபேர் அதை மனம் உவந்து ஏற்றுக் கொள்வோம்? பட்டணத்து சுகங்கள் என்னதான் அலுத்தாலும் எத்தனை செருப்புக்கள் திருட்டுப் போனாலும் கிராமத்து மண்ணோடு எவ்வளவுதூரம் நம்மால் பொருந்திப் போக இயலும்? எத்தனை நாள் அவை நமக்கு இனிக்கும்?***

  இதைப்பற்றி நெறையவே விவாதிக்கலாம்!

  பலர் பட்டணத்திலேயே பிறந்து வளர்ந்ததால், இந்த கிராமம் பார்ட் அவங்களுக்கு தெரியாது. இவங்களுக்கு அந்த கிராமப் பார்ட் புரிவதும் இல்லை, அதை பெருசா நெனைப்பதும் இல்லை

  கிராமம், பட்டணம்னு வரும்போது, பிரச்சினை என்னனாங்க பிள்ளைகள் படிப்பு, "நல்ல வேலை" என்கிற விசயங்கள்தான் நம்மை "செருப்புத் திருடும்" பட்டணத்தில் வாழ வேண்டிய அவசியத்தை உண்டாக்குகிறது. After a while we hardly live for ourselves or can make any decision. Situations force us to sacrifice lots of things. நெறைய சூழ்நிலையில் நான் தியாகியாக்கப் பட்டுள்ளேன்- மனம் உவந்து ஆகலை!

  ஆனால், கிராமம் அல்லது டவுன்ல ஒருவர் ரிட்டயர்ட் ஆன பிறகு வாழ்வது முடியும்னு நெனைகிறேன். அதே போல் ஒருவர் குழந்தைகள், அவர்கள் எதிர்காலம் என்று மாட்டாமல் சிங்கிளாக இருந்தாலும் கிராமத்தில் வாழலாம்தான். (அஃப் கோர்ஸ் லாப் டாப் இண்டெர் னெட் வசதியுடன்).

  இன்னொரு சூழ்நிலை, கிராமமா, பட்டணமா, இல்லை அயல்நாடா (அமெரிக்கா). கிராமத்தில் பிறந்து பட்டம்போயி, அமெரிக்கா போய் பாழாப்போன மக்கள் :))) In this situation my preference would be,
  corruption-less foreign life, then, village life then only the big city life comes! :)

  let me stop here!

  ReplyDelete
 13. எத்தனை முறை செருப்பு
  திருட்டு போனாலும்
  என்ற இடத்தில் வாழ்வின் உண்மையை
  ஆழமாக பதிவு செய்துள்ளீர்கள்

  ReplyDelete
 14. உறவுகளின் மேலான மரியாதை, முதிய காலத்தில் அவரது விருப்பங்களை நிறைவேற்ற குடும்பம் எடுத்துக் கொள்ளப்படும் சிரத்தை எதை என்று சொல்ல. பெரிய கனவுகள் லட்சியங்கள் இவர்களுக்கு இருக்குமா தெரியாது. அன்றாட உழைப்பில் அன்றைய ஜீவனம். தேவைகள் தீர்மானிக்கப்பட்டு தேடல்கள் வரையறுக்கப்பட்டு சீரான பாதையில் செல்லும் தெளிந்த நீரோடையை போன்றதான வாழ்க்கை. கிராமத்துக் காற்றைப் போல சுத்தமாய் மனம்.


  ....... வாசிக்க வாசிக்க, மனதில் தென்றலாய் பல எண்ண காற்று அலைகள்....... ம்ம்ம்ம்...... ரசித்தேன்.... மிகவும் அருமையான பதிவு, அக்கா.

  ReplyDelete
 15. //அவரசயுகத்தில் இழந்த வாழ்க்கை முறைகளுக்காகவும், ஏன்.. அந்த சிறுமியரைப் போன்று ஏகாந்தமான சூழலில் அரட்டையடிக்க முடியாததற்கும் கூட எழுகிற நம் ஏக்கம் எத்தனை உண்மையானது? தேவதை நேரில் தோன்றி ‘இனி இம்மனிதரைப் போல எளிமையாய் வாழ வரம் தருகிறேன்’ என குக்கிராமத்துக் குடில் ஒன்றுக்கு ஒருநொடியில் நம்மை இடம் மாற்றினால் எத்தனைபேர் அதை மனம் உவந்து ஏற்றுக் கொள்வோம்? பட்டணத்து சுகங்கள் என்னதான் அலுத்தாலும் எத்தனை செருப்புக்கள் திருட்டுப் போனாலும் கிராமத்து மண்ணோடு எவ்வளவுதூரம் நம்மால் பொருந்திப் போக இயலும்? எத்தனை நாள் அவை நமக்கு இனிக்கும்?
  //

  நான் எப்போதும் சொல்வேன் அக்கா..
  என்னால் முடியாது. புலம்பிப் புலம்பி பட்டணத்து வாழ்க்கையோடே வாழ பழகியாச்சு.

  ReplyDelete
 16. //பட்டணத்து சுகங்கள் என்னதான் அலுத்தாலும் எத்தனை செருப்புக்கள் திருட்டுப் போனாலும் கிராமத்து மண்ணோடு எவ்வளவுதூரம் நம்மால் பொருந்திப் போக இயலும்? எத்தனை நாள் அவை நமக்கு இனிக்கும்?//


  அழகாக நம்மூர் மண்ணின் மகிமையை சொல்லிருக்கீங்க ராமலக்ஷ்மி மேடம். இப்படி பாசத்துக்காகவும் அன்புக்காகவும் ஏங்கும் எத்தனையோபேர் இதை படிக்கும்போது மனதுக்கு ஆறுதலாக இருக்கும்..

  இதைபோல மறக்கமுடியாத அனுபவங்களை நாம் நினைத்துப் பார்க்கும்போது மன‌துக்கு இதமாக இருக்கும்..

  ஊர்ல இருக்குபோது கருங்குளம் தாதன்குளம் போனது.. சின்னவயசுல பஸ்ஸிலிருந்து இற‌ங்கி கருங்குளத்துலருந்து தாதன்குளத்துக்கு அம்மா அப்பாவோட சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போனது.. போகும்வழியில் வெள்ளரிப்பிஞ்சி சாப்பிட்டுக்கிட்டே நடந்துபோனது நல்லாருந்தது.

  நல்ல பகிர்வு.. வாழ்த்துகள் மேடம்.

  ReplyDelete
 17. குழந்தைகளுக்கு புராணக் கதைகள் சொல்லக்கூடிய அருமையான சந்தர்ப்பம். படங்கலெல்லாம் மிக அருமை, வாழ்த்துக்கள், ச்கோதரி.

  ReplyDelete
 18. என்ன அருமையான பகிர்வு சகா!

  thanks.

  ReplyDelete
 19. ///அன்றாட உழைப்பில் அன்றைய ஜீவனம். தேவைகள் தீர்மானிக்கப்பட்டு தேடல்கள் வரையறுக்கப்பட்டு சீரான பாதையில் செல்லும் தெளிந்த நீரோடையை போன்றதான வாழ்க்கை. கிராமத்துக் காற்றைப் போல சுத்தமாய் மனம்.//

  அடடடா. சூப்பர்.

  தேவதை மேட்டரும் உண்மை.

  யாவும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே :)

  ReplyDelete
 20. பதிவும் படங்களும் மனசை அள்ளுகின்றன!

  ReplyDelete
 21. உறவுகளின் மேலான மரியாதை, முதிய காலத்தில் அவரது விருப்பங்களை நிறைவேற்ற குடும்பம் எடுத்துக் கொள்ளப்படும் சிரத்தை எதை என்று சொல்ல..//

  பாராட்டப் பட வேண்டிய ஒன்று. அதே சமயம் அவர் ஏன் இவர்களுடன் சேர்ந்து இருக்கவில்லை என்ற கேள்வியும்..! பட்டணத்தை விடுத்துக் குடிசையில் இருக்க எவ்வளவு பேர்கள் வரத்தை ஏற்றுக் கொள்வார்கள். நல்ல சிந்தனை. நல்லதொரு பதிவு.

  ReplyDelete
 22. மிகவும் ரசித்த பதிவு..!

  ReplyDelete
 23. எதனை பாராட்டுவது? எழுத்தையா? படங்களையா? ரெண்டையும் தான்!! அருமை மேடம்

  ReplyDelete
 24. நகரத்திலும்கூட ஓரளவு முடிந்தமட்டும் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ முயற்சிக்கலாம்.

  //‘முகம் பார்க்காமல் அலைதொலைபேசிகளிலும் இணையத்திலும் அடிக்கும் அரட்டையெல்லாம் ஒரு அரட்டையா? எங்களைப் பாருங்கள்’ //

  உயிரோடு நம் அருகில் இருக்கும் உறவுகள், நண்பர்களை விட்டு முகமறியா நண்பர்களைத்தானே முகப்புத்தகத்திலும் இன்னபிறக்களிலும் தேடித்தேடி நட்பு பாராட்டுகிறோம்??!!

  ReplyDelete
 25. அருமையான பகிர்வு ராமலக்ஷ்மி. இப்பவே ஊருக்கு போகணும் போல இருக்கு ..

  ReplyDelete
 26. நல்லா இருக்கு வழக்கத்தை விட வித்தியாசமா! படங்களை பற்றி சொல்லவும் வேண்டுமா! :-)

  ReplyDelete
 27. எதுக்காகவோ ஓட ஆரமிச்சு எதுக்கு ஓடுறோம்னே தெரியாம ஓடிக்கிட்டு இருக்கோம் :((

  ReplyDelete
 28. வீட்டவிட்டு வெளியிலப்போனா கிடைக்கிற இந்த ரசனைக்குரிய தருணங்கள் எவ்வளவு அழகு பாருங்க... படிக்கும்பொழுதே இப்படி சுண்டியிழுக்குதே.. அனுபவிச்ச உங்களுக்கு சொல்லவா வேணும்...

  படங்களும் அருமை...

  ReplyDelete
 29. வழக்கம் போல நல்லா எழுதி இருக்கீங்க

  ReplyDelete
 30. சபாஷ் :-)
  ஒவ்வொரு நிகழ்வையும் அழகான எழுத்துகளால் வாசகனுக்குத் தந்துள்ளீர்கள். உயிரோசையில் இடம்பெற்றமைக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
 31. கண்களையும் மனதையும் திறந்து வைத்துக்கொண்டால் எவ்வளவு கதைகள் நம்மைச்சுற்றி! அருமையான பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 32. அழகான படங்களும் சிந்தனைகளும் தோழி. பல நினைவுகளை கிளறுகின்றன. மேகங்களுக்குள் வெட்கப்பட்டு ஒளிந்து கொண்டு விட்ட கேள்விகளை மிகவும் ரசித்தேன்

  ReplyDelete
 33. நெனச்சேன்....! சகோதரிகளின் சங்கமத்தில் சந்தோசமான பதிவுகள் வருமென்று. அருமை..அருமை!

  கிராமீய வாழ்கைக்ககு நான் தயார்!!
  சாணம் மெழுகிய தரை, திண்ணை, சுத்தமாக வருடும் காற்று,வெள்ளந்தியாய் உறவாடும் மக்கள், பதினெட்டுப் பட்டியும் கூடும் பஞ்சாயத்து, கேழ்வரகுகூழ்,நீர்மோர்...ஆஹா...உள்ளம் கேக்குமே மோர்!!!!

  ஆமா...கருங்குளம் ஆற்றில் குளித்தீர்களா? நல்லாருக்கும்.

  ReplyDelete
 34. ஆரம்பத்திலிருந்தே,மனதில் சில கேள்விகளுடன் படித்து வந்தேன். ஆனால், கடைசியில் அந்தக் கேள்விகளைக் கேட்டு 'பெரியவர்கள் என்றும் பெரியவர்களே' என்பதை நிரூபித்துவிட்டீர்கள் மேடம்.
  நன்றி.

  ReplyDelete
 35. அருமையான பதிவு ராமலக்ஷ்மி.

  மலைமேல் அமர்ந்து சுண்டல் உண்டுக் கொண்டு ,மகிழ்ச்சியாய் அரட்டை அடிக்கும் குழந்தைகள் நம்மையும் ஏங்க வைப்பது உண்மை.

  சுக்கு காப்பி விற்கும் பெரியவருக்கும் பேரனுக்கும் உள்ள பாசப்பிணைப்பு நெஞ்சை நெகிழ வைக்கிறது.

  படங்கள் அருமை.

  ReplyDelete
 36. சிங்கக்குட்டி said...
  //படங்கள் அருமை ராமலக்ஷ்மி.

  குறிப்பாக அந்த கருப்பு வெள்ளை பாட்டி படம் சூப்பர் :-)//

  நன்றி சிங்கக்குட்டி. பாட்டியின் படத்தைதான் முதலாவதாக உயிரோசையில் வெளியிட்டிருந்தார்கள்.

  ReplyDelete
 37. ஆயில்யன் said...
  ****//உறவுகளின் மேலான மரியாதை, முதிய காலத்தில் அவரது விருப்பங்களை நிறைவேற்ற குடும்பம் எடுத்துக் கொள்ளப்படும் சிரத்தை//

  புரிந்துகொள்கிறோம்!

  தனித்துவிடப்பட்ட பெற்றோர், அவர்களை விட்டு விட்டு தனித்து இருக்கும் சூழல்,ஒவ்வொரு நாளும் வேண்டும் இறைவனிடம் வரங்கள் கேட்கின்றேன். அனைவரும் சேர்ந்திருக்கும் நாளில் மகிழ்ச்சி - மகிழ்ச்சியினை மட்டுமே கொண்டு வந்து சேர் என்று!/****

  புரிகிறது. அவ்வண்ணமே அனைவருக்கும் அமையட்டும்.

  //குழந்தையினை தூக்கி வைத்துகொண்டிருக்கும் பாட்டி & தனித்து அமர்ந்திருக்கும் தாத்தா + விளக்கு சிறுமியர் என போட்டோக்கள் அழகு!//

  ஹரிகேன் விளக்கு, பாருங்கள் இப்போதும் புழக்கத்தில். நன்றி ஆயில்யன்.

  ReplyDelete
 38. ஈரோடு கதிர் said...
  //மிக மிக அருமையானதொரு பகிர்வுங்க..

  எழுத்துக்கு உண்மையான, உயிரோட்டமான படமும் அமைந்திருப்பது மிக பொருத்தம் கூடவே வலு சேர்க்கிறது..

  ||இங்கேயெல்லாம் யாரும் அப்படி எடுக்க மாட்டார்கள்||

  இந்த வரி திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.//

  நன்றி கதிர்.

  ReplyDelete
 39. ப்ரியமுடன் வசந்த் said...
  //மிகவும் ரசித்த பதிவு..!

  ரெண்ரெண்டாவிலே வியந்தேன் ஆழ்ந்த கவனிப்பும் இருக்கிறது உங்களிடம்..!//

  அவர்கள் பேசுவதைக் கேட்பதே ஒரு இனிமை:)!

  //கடைசி மூன்றுவரியில் எழுதியிருப்பவை கவிதை...!

  உயிரோசை இதழில் வந்தமைக்கு வாழ்த்துகள்!//

  மிக்க நன்றி வசந்த்.

  ReplyDelete
 40. நசரேயன் said...
  //படங்களும், பகிர்வும் நன்று//

  நன்றி நசரேயன்.

  ReplyDelete
 41. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //நல்ல கேள்விகள் கேட்டிருக்கீங்க முடிவில்..ஏக்கமும் உண்மையே , நம்மை மாத்திக்கமுடியாம இருக்கிறது ம் உண்மையே.. ராமலக்‌ஷ்மி//

  ஆமாம், இரண்டும் உண்மையே:)! நன்றி முத்துலெட்சுமி.

  ReplyDelete
 42. Gayathri said...
  //மிக மிக அருமையான பகிர்வு வாழ்க்கையில் பல கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியவில்லை//

  விடைகள் தெரிய வரும் போது வெட்கமாகதான் இருக்கின்றது. நன்றி காயத்ரி.

  ReplyDelete
 43. ஜெரி ஈசானந்தன். said...
  //நல்லதொரு படைப்பு.//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெரி ஈசானந்தன்.

  ReplyDelete
 44. அன்புடன் அருணா said...
  //ம்ம்..இந்தக் கருங்குளம் கோவிலுக்கு நான் கூட ஒருமுறை போயிருக்கிறேன்.ஒரு ஆறு பக்கத்தில் உண்டே!மீண்டும் போய் வந்த உணர்வு.//

  போயிருக்கிறீர்களா? அருமையான இடம்தானே:)? ஆற்றுக்கு செல்ல நேரமில்லை அன்று. நன்றி அருணா.

  ReplyDelete
 45. August 16, 2010 9:46 PM
  அபி அப்பா said...
  //எனக்கும் இந்த கட்டுரைகளின் மீது இருக்கும் ஒரு அன்னியோன்யம் கவிதையின் மீது இல்லை என்றே சொல்லலாம். ஆனால் போட்டோக்களை அப்படி சொல்லிவிடவும் முடியாது.//

  எப்போதும் படங்களாகவும் அனுபவங்களை கவிதை கதைகளாகவுமே தருகிறீர்களே, அவற்றில் ஒரு அந்நியத்தன்மை இருந்தே இருக்கிறது. இந்த முறை கட்டுரை ப்ளீஸ் என நண்பர் ஒருவர் கேட்டுக் கொள்ள எடுத்துக் கொண்ட முயற்சிதான் இது:)! படங்கள்.. உண்மைதான்.

  //இந்த கட்டுரை ஒரு வித சந்தோஷம் கொடுத்தது. உடன்பிறந்தவங்க கூட இருக்கும் போது ஒரு தனி கர்வம் வரும். சின்ன வயசிலே சண்டை போட்டுக்கொண்ட (அற்ப விஷயத்துக்கு எல்லாம் கூட) விஷயங்கள் நியாபகம் வந்து சிரிக்க வைக்கும். நம்ம பசங்க கிட்ட அதை பகிர்ந்துக்கும் போது நம்மை அறியாமலே வெட்கம் வந்து தொலைக்கும்.

  ஒரு நாவல் பழத்துக்கு அடித்து கொண்டு பேசாமல் இருந்ததும், இப்போது கண் முன்னே ஒரு படி நாவல் கொட்டி கிடந்தாலும் தான் தின்னாமல் உடன்பிறந்தவங்களுக்கு கொடுத்து சாப்பிட சொல்லும் விட்டு கொடுத்தல் தாராளமாக வரும்.

  திரும்ப எல்லோரும் அவரவர் கூட்டுக்கு திரும்பும் போது ஒரு ஏக்கம் வரும்.//

  உண்மை உண்மை.

  //ஆனா இந்த கட்டுரை முதல் பத்தியிலேயே அதை கடந்து அந்த பார்வை குறைந்த தாத்தாவிடம் வந்து விட்டாலும் என் மனது அங்கயே நிற்பது தான் உண்மை!//

  முதல் பத்தி இல்லாமலே கட்டுரை இருந்திருக்கலாமோ என்றார் ஒரு நண்பர். உங்கள் பின்னூட்டம் கண்டு ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று முக்கியமாகி, நெருக்கமாகிப் போகிறதென ஒத்துக் கொண்டார்:)! நன்றி அபி அப்பா.

  ReplyDelete
 46. அம்பிகா said...
  //படங்களும், பகிர்வும் அருமை.
  கருங்குளம் கோயிலுக்கு போய் நிறைய நாட்களாகி விட்டன. பக்கத்தில் இருக்கும் அழகை பதிவில் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
  நன்றி ராமலக்ஷ்மி.//

  சீக்கிரமே ஒருமுறை போய் வாருங்கள்:)! நன்றி அம்பிகா.

  ReplyDelete
 47. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  //அருமையான பகிர்வு ராமலெஷ்மி//

  நன்றி தேனம்மை.

  ReplyDelete
 48. வருண் said...
  ***அவரசயுகத்தில் இழந்த வாழ்க்கை முறைகளுக்காகவும், ஏன்.. அந்த சிறுமியரைப் போன்று ஏகாந்தமான சூழலில் அரட்டையடிக்க முடியாததற்கும் கூட எழுகிற நம் ஏக்கம் எத்தனை உண்மையானது? தேவதை நேரில் தோன்றி ‘இனி இம்மனிதரைப் போல எளிமையாய் வாழ வரம் தருகிறேன்’ என குக்கிராமத்துக் குடில் ஒன்றுக்கு ஒருநொடியில் நம்மை இடம் மாற்றினால் எத்தனைபேர் அதை மனம் உவந்து ஏற்றுக் கொள்வோம்? பட்டணத்து சுகங்கள் என்னதான் அலுத்தாலும் எத்தனை செருப்புக்கள் திருட்டுப் போனாலும் கிராமத்து மண்ணோடு எவ்வளவுதூரம் நம்மால் பொருந்திப் போக இயலும்? எத்தனை நாள் அவை நமக்கு இனிக்கும்?***

  இதைப்பற்றி நெறையவே விவாதிக்கலாம்!

  //பலர் பட்டணத்திலேயே பிறந்து வளர்ந்ததால், இந்த கிராமம் பார்ட் அவங்களுக்கு தெரியாது. இவங்களுக்கு அந்த கிராமப் பார்ட் புரிவதும் இல்லை, அதை பெருசா நெனைப்பதும் இல்லை//

  உண்மை.

  //கிராமம், பட்டணம்னு வரும்போது, பிரச்சினை என்னனாங்க பிள்ளைகள் படிப்பு, "நல்ல வேலை" என்கிற விசயங்கள்தான் நம்மை "செருப்புத் திருடும்" பட்டணத்தில் வாழ வேண்டிய அவசியத்தை உண்டாக்குகிறது. After a while we hardly live for ourselves or can make any decision. Situations force us to sacrifice lots of things. நெறைய சூழ்நிலையில் நான் தியாகியாக்கப் பட்டுள்ளேன்- மனம் உவந்து ஆகலை!

  ஆனால், கிராமம் அல்லது டவுன்ல ஒருவர் ரிட்டயர்ட் ஆன பிறகு வாழ்வது முடியும்னு நெனைகிறேன்.//

  நிச்சயமா, எங்களுக்கும் கூட ரிடையர்மெண்ட் காலத்தில் நெல்லை திரும்பிவிடும் ஆசை உள்ளது.

  // (அஃப் கோர்ஸ் லாப் டாப் இண்டெர் னெட் வசதியுடன்).//

  அப்புறம் அது குடில் இல்லை. பட்டண வசதிகள் புகுத்தப்பட்ட பண்ணை வீடு. ‘காட்டேஜ்’:))!

  //இன்னொரு சூழ்நிலை, கிராமமா, பட்டணமா, இல்லை அயல்நாடா (அமெரிக்கா). கிராமத்தில் பிறந்து பட்டம்போயி, அமெரிக்கா போய் பாழாப்போன மக்கள் :))) In this situation my preference would be,
  corruption-less foreign life, then, village life then only the big city life comes! :)

  let me stop here!//

  கிராமமா, பட்டணமா என்பதை அடுத்து அயல்நாடும் இந்த விவாதத்துக்குள் வந்து விடுகிறது. அவரவர் சொந்த விருப்புகளின் அனுபவங்களின் அடிப்படையிலேயே அவரவர் பார்வையும் அமைந்து போகின்றன. விரிவான பகிர்வுக்கு நன்றி வருண்.

  ReplyDelete
 49. தமிழ் யாளி said...

  //எத்தனை முறை செருப்பு
  திருட்டு போனாலும்
  என்ற இடத்தில் வாழ்வின் உண்மையை
  ஆழமாக பதிவு செய்துள்ளீர்கள்//

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ் யாளி.

  ReplyDelete
 50. புலவன் புலிகேசி said...
  //Good one...//

  நன்றி புலிகேசி.

  ReplyDelete
 51. படங்களை ஏற்றி விட்டால் மட்டும் மேருகேரிவிடாது என்பதை உலகிற்க்கு அழகாய் உணர்த்துகிறீர்கள்
  அதை வார்த்தைகளால் டியூன் பண்ணும் உங்கள் விதம் மிக அழகு

  ReplyDelete
 52. Chitra said...
  ****உறவுகளின் மேலான மரியாதை, முதிய காலத்தில் அவரது விருப்பங்களை நிறைவேற்ற குடும்பம் எடுத்துக் கொள்ளப்படும் சிரத்தை எதை என்று சொல்ல. பெரிய கனவுகள் லட்சியங்கள் இவர்களுக்கு இருக்குமா தெரியாது. அன்றாட உழைப்பில் அன்றைய ஜீவனம். தேவைகள் தீர்மானிக்கப்பட்டு தேடல்கள் வரையறுக்கப்பட்டு சீரான பாதையில் செல்லும் தெளிந்த நீரோடையை போன்றதான வாழ்க்கை. கிராமத்துக் காற்றைப் போல சுத்தமாய் மனம்.


  ....... வாசிக்க வாசிக்க, மனதில் தென்றலாய் பல எண்ண காற்று அலைகள்....... ம்ம்ம்ம்...... ரசித்தேன்.... மிகவும் அருமையான பதிவு, அக்கா.****

  நன்றி சித்ரா.

  ReplyDelete
 53. தெய்வசுகந்தி said...
  //நல்ல பகிர்வு!!!//

  நன்றி தெய்வசுகந்தி.

  ReplyDelete
 54. சுசி said...
  ****//அவரசயுகத்தில் இழந்த வாழ்க்கை முறைகளுக்காகவும், ஏன்.. அந்த சிறுமியரைப் போன்று ஏகாந்தமான சூழலில் அரட்டையடிக்க முடியாததற்கும் கூட எழுகிற நம் ஏக்கம் எத்தனை உண்மையானது? தேவதை நேரில் தோன்றி ‘இனி இம்மனிதரைப் போல எளிமையாய் வாழ வரம் தருகிறேன்’ என குக்கிராமத்துக் குடில் ஒன்றுக்கு ஒருநொடியில் நம்மை இடம் மாற்றினால் எத்தனைபேர் அதை மனம் உவந்து ஏற்றுக் கொள்வோம்? பட்டணத்து சுகங்கள் என்னதான் அலுத்தாலும் எத்தனை செருப்புக்கள் திருட்டுப் போனாலும் கிராமத்து மண்ணோடு எவ்வளவுதூரம் நம்மால் பொருந்திப் போக இயலும்? எத்தனை நாள் அவை நமக்கு இனிக்கும்?
  //

  நான் எப்போதும் சொல்வேன் அக்கா..
  என்னால் முடியாது. புலம்பிப் புலம்பி பட்டணத்து வாழ்க்கையோடே வாழ பழகியாச்சு.//

  எல்லோருமே அப்படிதான், புலம்பியபடியே பொருத்திக் கொண்டாயிற்று நம்மை பட்டண வாழ்வோடு. நன்றி சுசி.

  ReplyDelete
 55. Starjan ( ஸ்டார்ஜன் ) said...
  ****//பட்டணத்து சுகங்கள் என்னதான் அலுத்தாலும் எத்தனை செருப்புக்கள் திருட்டுப் போனாலும் கிராமத்து மண்ணோடு எவ்வளவுதூரம் நம்மால் பொருந்திப் போக இயலும்? எத்தனை நாள் அவை நமக்கு இனிக்கும்?//


  அழகாக நம்மூர் மண்ணின் மகிமையை சொல்லிருக்கீங்க ராமலக்ஷ்மி மேடம். இப்படி பாசத்துக்காகவும் அன்புக்காகவும் ஏங்கும் எத்தனையோபேர் இதை படிக்கும்போது மனதுக்கு ஆறுதலாக இருக்கும்..

  இதைபோல மறக்கமுடியாத அனுபவங்களை நாம் நினைத்துப் பார்க்கும்போது மன‌துக்கு இதமாக இருக்கும்..

  ஊர்ல இருக்குபோது கருங்குளம் தாதன்குளம் போனது.. சின்னவயசுல பஸ்ஸிலிருந்து இற‌ங்கி கருங்குளத்துலருந்து தாதன்குளத்துக்கு அம்மா அப்பாவோட சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போனது.. போகும்வழியில் வெள்ளரிப்பிஞ்சி சாப்பிட்டுக்கிட்டே நடந்துபோனது நல்லாருந்தது.

  நல்ல பகிர்வு.. வாழ்த்துகள் மேடம்.//****

  உங்கள் நினைவலைகளைப் பதிவு கிளப்பி விட்டிருப்பது தெரிகிறது. நன்றி ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 56. நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
  //குழந்தைகளுக்கு புராணக் கதைகள் சொல்லக்கூடிய அருமையான சந்தர்ப்பம். படங்கலெல்லாம் மிக அருமை, வாழ்த்துக்கள், ச்கோதரி.//

  கருத்துக்கும் முதல் வருகைக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 57. பா.ராஜாராம் said...
  //என்ன அருமையான பகிர்வு சகா!

  thanks.//

  வாங்க பா ரா. நன்றி.

  ReplyDelete
 58. SurveySan said...
  ****///அன்றாட உழைப்பில் அன்றைய ஜீவனம். தேவைகள் தீர்மானிக்கப்பட்டு தேடல்கள் வரையறுக்கப்பட்டு சீரான பாதையில் செல்லும் தெளிந்த நீரோடையை போன்றதான வாழ்க்கை. கிராமத்துக் காற்றைப் போல சுத்தமாய் மனம்.//

  அடடடா. சூப்பர்.

  தேவதை மேட்டரும் உண்மை.

  யாவும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே :)//****

  அதே:)! நன்றி சர்வேசன்.

  ReplyDelete
 59. ஷைலஜா said...
  //பதிவும் படங்களும் மனசை அள்ளுகின்றன!//

  மிக்க நன்றி ஷைலஜா.

  ReplyDelete
 60. ஸ்ரீராம். said...
  ****உறவுகளின் மேலான மரியாதை, முதிய காலத்தில் அவரது விருப்பங்களை நிறைவேற்ற குடும்பம் எடுத்துக் கொள்ளப்படும் சிரத்தை எதை என்று சொல்ல..//

  பாராட்டப் பட வேண்டிய ஒன்று. அதே சமயம் அவர் ஏன் இவர்களுடன் சேர்ந்து இருக்கவில்லை என்ற கேள்வியும்..!****

  ‘மகள் வயிற்றுப் பேரனோ கொள்ளுப் பேரனோ சகோதரியின் பேரனோ தெரியாது.’ன்னு சொல்லியிருக்கிறேனே:)! ஒரு பேட்டி போல எல்லாம் அவர்களிடம் கேட்டிருந்திருக்கலாம். அதைவிடவும் நம் அனுமானங்களே சுகமாய் உள்ளதாய் தோன்றுகிறது. எப்படி செருப்புகள் அங்கே தொலையாது என உறுதியாக சொல்ல முடிந்ததோ அதே போல குடும்பத்தில் விரிசல்கள் இருக்காது என உறுதியாக எண்ணவே மனம் விளைகிறது.

  //பட்டணத்தை விடுத்துக் குடிசையில் இருக்க எவ்வளவு பேர்கள் வரத்தை ஏற்றுக் கொள்வார்கள். நல்ல சிந்தனை. நல்லதொரு பதிவு.//

  நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 61. வெறும்பய said...
  //மிகவும் ரசித்த பதிவு..!//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 62. மோகன் குமார் said...
  //எதனை பாராட்டுவது? எழுத்தையா? படங்களையா? ரெண்டையும் தான்!! அருமை மேடம்//

  நன்றிகள் மோகன் குமார்.

  ReplyDelete
 63. ஹுஸைனம்மா said...
  //நகரத்திலும்கூட ஓரளவு முடிந்தமட்டும் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ முயற்சிக்கலாம்.//

  உண்மைதான்.

  **//‘முகம் பார்க்காமல் அலைதொலைபேசிகளிலும் இணையத்திலும் அடிக்கும் அரட்டையெல்லாம் ஒரு அரட்டையா? எங்களைப் பாருங்கள்’ //

  உயிரோடு நம் அருகில் இருக்கும் உறவுகள், நண்பர்களை விட்டு முகமறியா நண்பர்களைத்தானே முகப்புத்தகத்திலும் இன்னபிறக்களிலும் தேடித்தேடி நட்பு பாராட்டுகிறோம்??!!//**

  அதுவேதான்!!! நன்றி ஹுஸைனம்மா.

  ReplyDelete
 64. James Vasanth said...
  //அருமையான பகிர்வு ராமலக்ஷ்மி. இப்பவே ஊருக்கு போகணும் போல இருக்கு ..//

  நல்லது. சீக்கிரம் கிளம்புங்கள்:)! நன்றி ஜேம்ஸ்.

  ReplyDelete
 65. சந்தனமுல்லை said...
  //நல்லா இருக்கு வழக்கத்தை விட வித்தியாசமா! படங்களை பற்றி சொல்லவும் வேண்டுமா! :-)//

  நன்றி முல்லை!

  ReplyDelete
 66. எம்.எம்.அப்துல்லா said...
  //எதுக்காகவோ ஓட ஆரமிச்சு எதுக்கு ஓடுறோம்னே தெரியாம ஓடிக்கிட்டு இருக்கோம் :((//

  அதேதான் அப்துல்லா:(! நன்றி.

  ReplyDelete
 67. க.பாலாசி said...
  //வீட்டவிட்டு வெளியிலப்போனா கிடைக்கிற இந்த ரசனைக்குரிய தருணங்கள் எவ்வளவு அழகு பாருங்க... படிக்கும்பொழுதே இப்படி சுண்டியிழுக்குதே.. அனுபவிச்ச உங்களுக்கு சொல்லவா வேணும்...//

  அனுபவம் அப்படியே பசுமையா இருக்கட்டுமென்றே பதிந்தும் விட்டேன்.

  //படங்களும் அருமை...//

  நன்றி பாலாசி.

  ReplyDelete
 68. சசிகுமார் said...
  //வழக்கம் போல நல்லா எழுதி இருக்கீங்க//

  நன்றி சசிகுமார்.

  ReplyDelete
 69. "உழவன்" "Uzhavan" said...
  //சபாஷ் :-)
  ஒவ்வொரு நிகழ்வையும் அழகான எழுத்துகளால் வாசகனுக்குத் தந்துள்ளீர்கள். உயிரோசையில் இடம்பெற்றமைக்கும் வாழ்த்துகள்//

  நன்றி உழவன்:)!

  ReplyDelete
 70. திவா said...
  //கண்களையும் மனதையும் திறந்து வைத்துக்கொண்டால் எவ்வளவு கதைகள் நம்மைச்சுற்றி! அருமையான பகிர்வுக்கு நன்றி!//

  உண்மைதான் திவா. வருகைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 71. ஜெஸ்வந்தி said...
  //அழகான படங்களும் சிந்தனைகளும் தோழி. பல நினைவுகளை கிளறுகின்றன. மேகங்களுக்குள் வெட்கப்பட்டு ஒளிந்து கொண்டு விட்ட கேள்விகளை மிகவும் ரசித்தேன்//

  வெட்கம் வராமல் என்ன செய்யும்? நன்றி ஜெஸ்வந்தி:)!

  ReplyDelete
 72. நானானி said...
  //நெனச்சேன்....! சகோதரிகளின் சங்கமத்தில் சந்தோசமான பதிவுகள் வருமென்று. அருமை..அருமை!

  கிராமீய வாழ்கைக்ககு நான் தயார்!!
  சாணம் மெழுகிய தரை, திண்ணை, சுத்தமாக வருடும் காற்று,வெள்ளந்தியாய் உறவாடும் மக்கள், பதினெட்டுப் பட்டியும் கூடும் பஞ்சாயத்து, கேழ்வரகுகூழ்,நீர்மோர்...ஆஹா...உள்ளம் கேக்குமே மோர்!!!!//

  இன்னும் கிளப்புகிறீர்களே:))?

  //ஆமா...கருங்குளம் ஆற்றில் குளித்தீர்களா? நல்லாருக்கும்.//

  அங்கு செல்ல நேரமில்லை. பின்னொருநாள் முரப்பநாடு ஆற்றுக்கு சென்றிருந்தோம்.

  ReplyDelete
 73. அமைதி அப்பா said...
  //ஆரம்பத்திலிருந்தே,மனதில் சில கேள்விகளுடன் படித்து வந்தேன். ஆனால், கடைசியில் அந்தக் கேள்விகளைக் கேட்டு 'பெரியவர்கள் என்றும் பெரியவர்களே' என்பதை நிரூபித்துவிட்டீர்கள் மேடம்.
  நன்றி.//

  கேள்விகளே உணர்த்தியிருக்குமே அமைதி அப்பா, நானும் சாமான்யர்களில் ஒருவள் என்பதை. மிக்க நன்றி.

  ReplyDelete
 74. கோமதி அரசு said...
  //அருமையான பதிவு ராமலக்ஷ்மி.

  மலைமேல் அமர்ந்து சுண்டல் உண்டுக் கொண்டு ,மகிழ்ச்சியாய் அரட்டை அடிக்கும் குழந்தைகள் நம்மையும் ஏங்க வைப்பது உண்மை.

  சுக்கு காப்பி விற்கும் பெரியவருக்கும் பேரனுக்கும் உள்ள பாசப்பிணைப்பு நெஞ்சை நெகிழ வைக்கிறது.

  படங்கள் அருமை.//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 75. mervinanto said...
  //படங்களை ஏற்றி விட்டால் மட்டும் மேருகேரிவிடாது என்பதை உலகிற்க்கு அழகாய் உணர்த்துகிறீர்கள்
  அதை வார்த்தைகளால் டியூன் பண்ணும் உங்கள் விதம் மிக அழகு//

  மிக்க நன்றி மெர்வின்:)!

  ReplyDelete
 76. //மலை, வாழைத்தோப்பு, பரந்த வானம், மறையும் சூரியன், வீசும் தென்றல் எல்லாவற்றையும் அனுபவித்து ரசித்தபடி //

  பழைய வாசனை எட்டி பாக்குதே..? :P

  பத்தி பத்தியா எழுதினா பாருங்க எவ்ளோ கேள்வி எல்லாம் கேக்க முடியுது..? :))

  என்ன இவ்ளோ மேட்டரை வெச்சு பத்து கவிதை எழுதி இருப்பீங்க. :)

  ரொம்ப நல்லா கோர்வையா வந்ருக்கு.

  ReplyDelete
 77. மிக அருமையான எழுத்து! கவித்துவம் மிக்க எண்ண அலைகள்!
  இன்றைய இயந்திர வாழ்வின் அதிவேகமான சுழற்சியில் எத்தனையோ அருமையான விஷயங்கள் நிறைவேறாத கனவுகள் போல காற்றில் மறைந்து போய்க்கொண்டிருக்கின்றன! அவற்றை உணர்வதற்குக்கூட நேரமிருப்பதில்லை! என்றாவது இந்த மாதிரி நிஜங்களின் தரிசனம் விஸ்வரூபம் எடுத்து நாம் இழந்து கொண்டிருப்பவற்றை ஞாபகப்படுத்தி விடுக்கிறது!
  கடைசி இரண்டு வரிகள் ஒரு அழகான கவிதை!

  ReplyDelete
 78. ambi said...
  ***//மலை, வாழைத்தோப்பு, பரந்த வானம், மறையும் சூரியன், வீசும் தென்றல் எல்லாவற்றையும் அனுபவித்து ரசித்தபடி //

  பழைய வாசனை எட்டி பாக்குதே..? :P//***

  கட்டுரை என்றால் கவித்துவமாய் இருக்கக் கூடாதென எதுவும் கட்டாயம் இருக்கிறதா:)?

  //பத்தி பத்தியா எழுதினா பாருங்க எவ்ளோ கேள்வி எல்லாம் கேக்க முடியுது..? :))

  என்ன இவ்ளோ மேட்டரை வெச்சு பத்து கவிதை எழுதி இருப்பீங்க. :)

  ரொம்ப நல்லா கோர்வையா வந்ருக்கு.//

  ஆகா, நன்றி அம்பி! ஆனால் இந்தப் பாராட்டுக்களால் கவிதையை நிறுத்திவிடுவேன் என்று மட்டும் கனவிலும் நினைக்காதீர்கள். அத்தனை லேசில் யாரையும் தப்பிக்க விடுவதாய் இல்லை:))!!!

  ReplyDelete
 79. மனோ சாமிநாதன் said...
  //மிக அருமையான எழுத்து! கவித்துவம் மிக்க எண்ண அலைகள்!
  இன்றைய இயந்திர வாழ்வின் அதிவேகமான சுழற்சியில் எத்தனையோ அருமையான விஷயங்கள் நிறைவேறாத கனவுகள் போல காற்றில் மறைந்து போய்க்கொண்டிருக்கின்றன! அவற்றை உணர்வதற்குக்கூட நேரமிருப்பதில்லை! என்றாவது இந்த மாதிரி நிஜங்களின் தரிசனம் விஸ்வரூபம் எடுத்து நாம் இழந்து கொண்டிருப்பவற்றை ஞாபகப்படுத்தி விடுக்கிறது! கடைசி இரண்டு வரிகள் ஒரு அழகான கவிதை!//

  தங்கள் விரிவான கருத்துக்கு மிக்க நன்றி மனோ சாமிநாதன்.

  ReplyDelete
 80. அருமையான பகிர்வும் படங்களும்...
  உங்கள் நெல்லை சந்தோஷம் நீடிக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 81. சே.குமார் said..
  //அருமையான பகிர்வும் படங்களும்...
  உங்கள் நெல்லை சந்தோஷம் நீடிக்க வாழ்த்துக்கள்.//

  பெங்களூர் திரும்பி வாரம் இரண்டாகி விட்ட பின்னும் விடுமுறை தித்திப்பு இன்னமும் விலகவில்லை:)! நன்றி குமார்.

  ReplyDelete
 82. அங்கேயும் படிச்சாச்சு, இங்கேயும் படிச்சாச்சு

  ReplyDelete
 83. படங்களும், அனுபவமும் அருமை, ராம லக்ஷ்மி.

  ReplyDelete
 84. yeskha said...
  //அங்கேயும் படிச்சாச்சு, இங்கேயும் படிச்சாச்சு//

  நீயா நானா?

  உயிரோசையின் அதே இதழில் இடம் பெற்ற உங்க கட்டுரையை நானும் படிச்சாச்சு:)!!

  நன்றி எஸ்கா.

  ReplyDelete
 85. Ammu said...
  //படங்களும், அனுபவமும் அருமை, ராம லக்ஷ்மி.//

  நன்றி அம்மு:)!

  ReplyDelete
 86. வெற்றி பெற வாழ்த்துகள்

  ReplyDelete
 87. தமிழ்மணத்தில் வாக்களித்துள்ளேன் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 88. @ மகாதேவன்-V.K,

  என் நன்றிகள்!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin