Friday, July 11, 2008

இரவு நேரம் ஒளியின் ஜாலம்-ஜூலை PIT போட்டிஒளியின் பெருமை இருளில் அருமை
[போட்டிக்குப் போகிறோமென இதற்குப் பெருமை]
வெளிச்சத்தில் தெரிகின்ற வெளிச்சங்கள்
ஆச்சரியத்தன்மை அற்றதாகி விடுகின்றன.
இருளிலேதான் ஒளிவெள்ளங்கள் ஜொலிப்பாகி
உயிர்ப்பாகி உயர்வாகத் தெரிகின்றன.

வசந்தமே வாழ்வாக இருக்கையிலே
வாசலிலே இறைவன் போட்டு வைத்த
வண்ணக் கோலங்கள் நம்
கண்களுக்கு விருந்தாவதில்லை.

இன்னல் ஒன்று வருகையிலேதான்
சின்னச் சின்ன சந்தோஷம் கூட
சிறகடித்துப் பறக்க வைக்குது
நம்மை வானிலே!
*** *** ***


தகதகக்கும் தங்க புத்தர்

இருளிலிருந்து ஒளிக்கு-
அஞ்ஞானத்திலிருந்து ஞானத்துக்கு-
வழிகாட்டிய மகான்
இருண்ட அரங்கில்
பிரமாண்டமாய் எழுந்து
தங்கமாய் ஜொலிக்கிறார்
தன் போதனைகளைப் போலவே!
*** *** ***மினுங்கும் மைசூரு மாளிகை*** *** ***
வான்வெளியில் ஒளிச் சிதறல் தீபாவளித் திருநாளில்


பூவாய் சிதறும் ஒளியைக் கண்டு
பூரித்து நிற்கும் மனசே
கரியாப் போகும் காசைப் பார்த்து
கவலைப் படா விட்டாலும்
சுற்றுப் புற மாசை நினைத்து
மாற்றிக்க மாட்டாயா உன்னை?
*** *** ***

பதுங்குவது பாயத்தான்!


இருளும் ஒளியும் உருளும்
மேடையிலே பள்ளிப் பாலகர்கள்
அமைதிப் பூனைகளாய் பதுங்குவது
நாளை எல்லாம் வல்ல
அசுரப் புலிகளாய் பாயத்தானோ?
*** *** ***

சிப்புக்குள் முத்துக்கள்!


உள்ளிருக்கும் முத்துக்கள் ஒளிர்வதால்
மிளிர்கின்ற சிப்பிக்கள்!

*** *** *** *** ***

57 comments:

 1. முதல் படம் தானே போட்டிக்கு? எல்லாமே சூப்பர். புத்தர் ரொம்ப கவர்கிறார். :))

  ReplyDelete
 2. அட எல்லாமே நல்லாருக்கு...முக்கியமா முதல் படம், ஜொலிக்கும் புத்தர், மைசூர் மாளிகை......!இதிலே எது போட்டிக்குன்னு சொல்லலையே?

  ReplyDelete
 3. முதல் படம்தான் அம்பி,போட்டிக்கு. பெங்களூரிலிருந்து கூர்க் போகும் வழியிலுள்ள குஷால் நகரில்தான் இப்படித் தகதகக்கிறார் புத்தர். பாராட்டுக்கு நன்றி.

  ReplyDelete
 4. நானானி said...
  //இதிலே எது போட்டிக்குன்னு சொல்லலையே?//

  PIT விண்ணப்பப் படிவில் படத்தை upload செய்து விட்டதால் எதுவெனக் குறிப்பிடாது விட்டிருந்தேன். நீங்கள் கேட்டதும் பதிலை பதிவிலேயே போய் சேர்த்து விட்டேன். மிக்க நன்றி பாராட்டுக்கும்!

  ReplyDelete
 5. படங்களெல்லாம் மிக அருமை.

  //அது போல-
  வெளிச்சத்தில் தெரியும் வெளிச்சங்கள்
  ஆச்சரியத்தன்மை அற்றதாகி விடுகின்றன.
  இருளிலேதான் ஒளிவெள்ளங்கள் ஜொலிப்பாகி
  உயிர்ப்பாகி உயர்வாகத் தெரிகின்றன.//

  தத்துவம் சூப்பரு..! :))

  ReplyDelete
 6. ராமலஷ்மி மேடம்,

  //பெங்களூரிலிருந்து கூர்க் போகும் வழியிலுள்ள குஷால் நகரில்தான் இப்படித் தகதகக்கிறார் புத்தர்//

  தாய்லாந்து புத்தரா என யோசித்தேன் இதைப் படிக்கும் வரை.

  படங்களோடு எளிமையான பாடல்களும் சூப்பர். கலக்கறீங்க போங்க. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. படத்துடன் தத்துவத்தையும் ரசித்தமைக்கு நன்றி கவிநயா!

  ReplyDelete
 8. முதல் படம் அருமை. அழகான வண்ணங்கள்! மைசூர் மாளிகை படமும் ரொம்ப நல்லா இருக்கு! படங்களுக்கு பார்டர் போட்டீங்கனா இன்னும் அழகா தெரியும்!

  ReplyDelete
 9. முதல் படத்தில தெரிகிறது ஒரு டவர். அதைத்தவிர படத்தில் இருக்கும் விளக்குகள் என்னப்பா. அதுவும் சொல்லி வச்ச மாதிரி ஒண்ணொண்ணும் ஒவ்வொரு வண்ணம்.

  ரொம்ப உயர்வான எண்ணங்களை எழுப்பும் பாடல்களோடு படங்கள்.

  வாழ்த்துகள் மா.

  ReplyDelete
 10. //ராமலக்ஷ்மி said...
  நானானி said...
  //இதிலே எது போட்டிக்குன்னு சொல்லலையே?//

  PIT விண்ணப்பப் படிவில் படத்தை upload செய்து விட்டதால் எதுவெனக் குறிப்பிடாது விட்டிருந்தேன். நீங்கள் கேட்டதும் பதிலை பதிவிலேயே போய் சேர்த்து விட்டேன். மிக்க நன்றி பாராட்டுக்கும்!
  //


  புகைப்படபேழை படைத்திட்ட கவிதைகளும்
  புகழாரம் பேசிச்சிலிர்க்கும்
  கவிதைகளும்

  சூப்பர்

  PIT போட்டியில் பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்.

  போட்டியில் எப்படிபங்கெடுப்பது என்ற தகவலை விதிமுறைகளுடன் தெரிவிக்கவும்.

  தி.விஜய்
  http://pugaippezhai.blogspot.com

  ReplyDelete
 11. //சதங்கா said...
  தாய்லாந்து புத்தரா என யோசித்தேன் இதைப் படிக்கும் வரை.//

  அப்படி நினைத்து விடக் கூடாதென்றுதான் விவரம் கொடுத்தேன். கூர்க், குஷால் நகர் அருகே 'பைலக்குப்பே'யில் அமைந்த திபெத்தியன் செட்டில்மென்டினுள்ளே இருக்கிறது இந்த தங்க புத்தர் எழுந்தருளியுள்ள தங்கக் கோயில்.

  //படங்களோடு எளிமையான பாடல்களும் சூப்பர்.//

  பாடல்களும் பிடித்திருந்ததா? பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சதங்கா!

  ReplyDelete
 12. Sathiya said...
  //முதல் படம் அருமை. அழகான வண்ணங்கள்! மைசூர் மாளிகை படமும் ரொம்ப நல்லா இருக்கு!//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சத்யா!

  //படங்களுக்கு பார்டர் போட்டீங்கனா இன்னும் அழகா தெரியும்!//

  இனி அதையும் கண்டிப்பாகக் கவனிக்கிறேன். நன்றி!

  ReplyDelete
 13. வல்லிசிம்ஹன் said... //முதல் படத்தில தெரிகிறது ஒரு டவர். அதைத்தவிர படத்தில் இருக்கும் விளக்குகள் என்னப்பா. //

  அவை வண்ண மின் விளக்குகளால் ஆன முழு உயர செயற்கை மரங்களின் அணிவகுப்பு. நீங்கள் குறிப்பிடுவது இடது பக்கத்தில் தெரிகிற டவரா? வலப் புறத்தில் உருண்டையான தூண் போல உயர்த்து செல்வது நம்ம தூர்தர்ஷனின் பெங்களூரு டவரு!

  //ரொம்ப உயர்வான எண்ணங்களை எழுப்பும் பாடல்களோடு படங்கள். வாழ்த்துகள் மா.//

  நன்றி மா.

  ReplyDelete
 14. Out of station... today only reached chennai...Nice pictures Ramalakshmi...will write in detail...Sorry for the font

  ReplyDelete
 15. விஜய் said...//புகைப்படபேழை படைத்திட்ட கவிதைகளும்
  புகழாரம் பேசிச்சிலிர்க்கும்
  கவிதைகளும்

  சூப்பர்//

  உங்கள் கவிதையும்தான் சூப்பர் விஜய்!

  //PIT போட்டியில் பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்.//

  வாழ்த்துக்களுக்கு நன்றி. ஆட்டத்தில் இருக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் இந்தப் பங்கேற்பு.

  //போட்டியில் எப்படிபங்கெடுப்பது என்ற தகவலை விதிமுறைகளுடன் தெரிவிக்கவும்.//

  போட்டி விவரங்களுக்கு http://photography-in-tamil.blogspot.com சென்று பாருங்கள். உங்கள் புகைப்பட ஆர்வத்தைதான் உங்களது வலைப்பூவின் முகப்பிலேயே குறிப்பிட்டிருக்கிறீர்களே. களத்தில் குதியுங்கள். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. இரவுக் காட்சி, வண்ணமயமாய் :). கான்ட்ராஸ்டிங்.:) நல்லா இருக்கு.

  நீங்க இவ்வளவு படம் போட்டு, பாடல் எழுதினாலும், எனக்கு ஒரே ஒரு (ரொம்ப முக்கியமான) கேள்வி தான் கேக்கத் தோணுது.

  முதல் படத்தில் இருக்கும் இதயம் யாருடையது? :P :D.

  ReplyDelete
 17. //பாடல்களும் பிடித்திருந்ததா? //

  பிடித்திருந்ததா வா ? உண்மையிலேயே சிம்பிளான கலக்கல்கள் அவை. சூப்பர்.

  ReplyDelete
 18. ////போட்டியில் எப்படிபங்கெடுப்பது என்ற தகவலை விதிமுறைகளுடன் தெரிவிக்கவும்.//

  போட்டி விவரங்களுக்கு http://photography-in-tamil.blogspot.com சென்று பாருங்கள். உங்கள் புகைப்பட ஆர்வத்தைதான் உங்களது வலைப்பூவின் முகப்பிலேயே குறிப்பிட்டிருக்கிறீர்களே. களத்தில் குதியுங்கள். வாழ்த்துக்கள்!

  வாழ்த்துக்கு நன்றி.இராக் காலத்தில் ஒளியின் செப்படி வித்தைகளின் படங்களை( camera-canon eos 400d digital) அடுத்த பதிவில் இணைக்கிறேன்.போட்டிபற்றிய தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 19. // பூவாய் சிதறும் ஒளியைக் கண்டு
  பூரித்து நிற்கும் மனசே
  கரியாப் போகும் காசைப் பார்த்து
  கவலைப் படா விட்டாலும்
  சுற்றுப் புற மாசை நினைத்து
  மாற்றிக்க மாட்டாயா உன்னை?//  // பூவாய் சிதறும் ஒளியைக் கண்டு
  பூரித்து நிற்கும் மனசே
  கரியாப் போகும் காசைப் பார்த்து
  கவலைப் படா விட்டாலும்
  சுற்றுப் புற மாசை நினைத்து
  மாற்றிக்க மாட்டாயா உன்னை?//


  சிங்காரச் சென்னையிது.
  செல்லுமிடமெல்லாம்
  சாக்கடைகள். ஆங்காங்கே தெருவெலாம்
  வழிந்தோடும் குப்பைத்தொட்டிகள்.
  அத்தொட்டிகளின் அருகிலே
  தெருவோர உணவகங்கள்
  வருவோரும் போவோரும்
  அனைவரும் அமர்ந்து நின்று
  ஆசை தீர பசியாற வகை வகையாய்
  இட்டிலி தோசை பூரி எனத்
  தின்றிடுவார் எறியும் இலைகளை
  எட்ட‌ நின்று எதிர்பார்க்கும்
  பைரவர்கள்.
  பெருவூர்தி வந்து நில்லும் இடங்களிலே
  எருமைகள்.
  எக்காளமாய் எக்காலமும்
  பக்கத்திலே புகை மண்டலங்கள்.

  இவையெல்லாம் மாசு இல்லை !
  என்றோ ஒரு நாள் ஆண்டில்
  தைப்பொங்கல் முதல் நாளில்
  வைத்திருந்த குப்பை கூளம்
  வாசலில் எறிந்ததனை
  மாசென எரிப்பதுதான்
  மாசு எனச் சட்டம் சொல்லும்
  மனசே நீ
  இனி அறிவாய் .

  சுப்பு ரத்தினம்.
  தஞ்சை.

  ReplyDelete
 20. மதுமிதா said...
  //Out of station... today only reached chennai...Nice pictures Ramalakshmi...//

  பாராட்டுக்கு நன்றி மதுமிதா. இந்த முறை சரியான நேரத்தில் ஊருக்குத் திரும்பி வந்து அருமையான படங்களைப் போட்டிக்குக் கொடுத்து விட்டீர்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 21. வெளிச்சத்தில் தெரிகின்ற வெளிச்சங்கள்
  ஆச்சரியத்தன்மை அற்றதாகி விடுகின்றன.
  இருளிலேதான் ஒளிவெள்ளங்கள் ஜொலிப்பாகி
  உயிர்ப்பாகி உயர்வாகத் தெரிகின்றன.

  வசந்தமே வாழ்வாக இருக்கையிலே
  வாசலிலே இறைவன் போட்டு வைத்த
  வண்ணக் கோலங்கள் நம்
  கண்களுக்கு விருந்தாவதில்லை.

  இன்னல் ஒன்று வருகையிலேதான்
  சின்னச் சின்ன சந்தோஷம் கூட
  சிறகடித்துப் பறக்க வைக்குது
  நம்மை வானிலே/

  முதல் படம்
  அருமை
  அதைவிட
  அருமை
  வரிகள்

  ReplyDelete
 22. NewBee said... //இரவுக் காட்சி, வண்ணமயமாய் :). கான்ட்ராஸ்டிங்.:) நல்லா இருக்கு.//

  நன்றி newbee. உங்கள் ஊரில் சூரியன் தூங்க இரவு 9.15 ஆகிறது என போட்டியிலிருந்து நழுவப் பார்த்திருக்கிறீர்களே நந்துவின் வலைப்பூவில். இன்னும் இருக்கிறது முழுதாக இரண்டு நாட்கள். 'ஜோடி' தலைப்பில் வீட்டுக்குள்ளேயே எடுத்த படங்களை வைத்து கதை, வசனம், டைரக்ஷன் என அமர்க்களப் படுத்தியிருந்தீர்களே. நந்து சொன்ன மாதிரி குறைந்த ஒளியில் வீட்டினுள்ளேயே முயற்சியுஙகள்!

  //நீங்க இவ்வளவு படம் போட்டு, பாடல் எழுதினாலும், எனக்கு ஒரே ஒரு (ரொம்ப முக்கியமான) கேள்வி தான் கேக்கத் தோணுது. முதல் படத்தில் இருக்கும் இதயம் யாருடையது? :P :D.//

  அதானே, யாருடையது? நல்ல கேள்வி! "இதயங்களை என்னைப் போலவே அழகாக வைத்துக் கொள்ளுங்கள்" எனச் சொல்லாமல் சொல்லத்தான் இந்த வடிவத்தில் நிற்கிறதோ செயற்கை மரம்? உள்ளம் அழகாய் ஆரோக்கியமாய் இருந்தால்தான் உடலும் ஆரோக்கியமாக இருக்க இயலும். உடல் ஆரோக்கியம்தான் உலகில் உள்ளவற்றிலேயே உயர்ந்த செல்வம் என பெரியவங்க சொல்லியிருக்காங்களே!

  ReplyDelete
 23. எழுத மட்டும்தான்னு பாத்தா படமெடுக்கறதிலயும் கலக்குறிங்க...:)
  வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
 24. சதங்கா (Sathanga) said...
  //உண்மையிலேயே சிம்பிளான கலக்கல்கள் அவை. சூப்பர்.//

  சிம்பிளான பாடல்களுக்கு
  'கலக்கல்'னு சூப்பரான கமெண்ட். நன்றி சதங்கா!

  ReplyDelete
 25. விஜய் said...//.இராக் காலத்தில் ஒளியின் செப்படி வித்தைகளின் படங்களை( camera-canon eos 400d digital) அடுத்த பதிவில் இணைக்கிறேன்.போட்டி பற்றிய தகவலுக்கு நன்றி.//

  நல்லது விஜய். செய்யுங்கள். வந்து பார்க்கிறேன்.

  ReplyDelete
 26. sury said...
  //என்றோ ஒரு நாள் ஆண்டில்
  தைப்பொங்கல் முதல் நாளில்
  வைத்திருந்த குப்பை கூளம்
  வாசலில் எறிந்ததனை
  மாசென எரிப்பதுதான்
  மாசு எனச் சட்டம் சொல்லும்
  மனசே நீ
  இனி அறிவாய் .//

  பெயர்தான் சிங்காரச் சென்னை. ஆனால் எங்கெங்கு திரும்பினாலும் காண இயலவில்லை சிங்காரத்தை என்பதை அழகுறக் கூறி //இவையெல்லாம் மாசு இல்லை !// என அலுப்புடன் முடித்து, அடுத்து கேள்வியொன்றும் எழுப்பியுள்ளீர்கள். போகி அன்று புகையும் நெருப்பை மாசெனச் சென்னைச் சட்டம் சொல்கிறதா என அறியேன் ஐயா! ஏனெனில் பெங்களூரில் தெருக் குப்பைகளைத் தினந்தோறும் அகற்றும் மாநகராட்சியே சமயத்தில் குப்பை தொட்டியிலே நெருப்பு வைத்து விட்டும் செல்லும். அது ஏனெனத் தெரியாது. போகிப் புகையின் மாசு, அரசு வைக்கும் சட்டம் எல்லாம் தாண்டி என் மனசு என்ன சொல்கிறது என்றால்- இந்தத் தீபாவளித் திருநாளில் வெடிக்கின்ற பட்டாசுகளும், வாண வேடிக்கைகளும் வானில் விடுகின்ற கெமிக்கல் புகை மிக மிக மாசானது. அந்த சில தினங்களில் மனிதனுக்கு சுவாசிக்க நல்ல காற்று என்பதே கேள்விக்குறியாகி விடுகிறது என்பதுதான்.

  ReplyDelete
 27. உங்கள் ஃபோட்டோக்களுக்கு ஒரு சவாலாக
  இதோ ஒன்றா, இரண்டா, மூன்று போட்டோக்கள்.
  எங்கே ?
  http://menakasury.blogspot.com
  ஆனால், பாவம், எந்த ஸ்டேஷனுக்கு போகவேண்டும்
  எனத் தெரியாமல், ப்ளாட்ஃபார்ம் லேயே நின்று கொண்டிருக்கின்றன.
  இவைகளை எந்த வலைப்பதிவுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் ?

  May I help You ?
  counter எங்கேன்னு
  யாரேனும்
  may i help you
  சொல்லிட்டு வருவாங்களா ?

  சுப்பு தாத்தா.
  ( பாவம்)

  ReplyDelete
 28. திகழ்மிளிர் said...
  //முதல் படம்
  அருமை
  அதைவிட
  அருமை
  வரிகள்//

  அத்தனை வரிகளையும் அப்படியே மேற்கோளிட்டிருப்பதிலேயே புரிந்து கொண்டேன் திகழ் படத்துடன் வாசித்த வரிகளையும் தாங்கள் நேசித்திருப்பதை. முதல் வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி!

  ReplyDelete
 29. தமிழன்... said...//எழுத மட்டும்தான்னு பாத்தா படமெடுக்கறதிலயும் கலக்குறிங்க...:) வாழ்த்துக்கள்...!//

  பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி தமிழன்.

  ReplyDelete
 30. sury said...
  //May I help You ?
  counter எங்கேன்னு
  யாரேனும்
  may i help you
  சொல்லிட்டு வருவாங்களா ?
  சுப்பு தாத்தா.
  ( பாவம்)//

  இதோ வந்தேன்.

  ReplyDelete
 31. முதல் படம் டிவி டவர்க்கு எதிரா இருக்கிற ஃஃபன் வோர்ல்ட் தானே :D

  ReplyDelete
 32. ஆஹா!அருமை...வெற்றிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 33. சகோதரி ராமலக்ஷ்மி,
  முதல் முறையாக PIT ஜுலை 2008 போட்டிக்கு நான் கோவையில் எடுத்த ஒளி வெள்ளத்தில் காந்திபுரம் மெயின் சிக்னல்...தகவல் தந்தமைக்கு நன்றி..

  விஜய்
  --www.pugaippezhai.blogspot.com

  ReplyDelete
 34. Jeeves said...
  //முதல் படம் டிவி டவர்க்கு எதிரா இருக்கிற ஃஃபன் வோர்ல்ட் தானே :D//

  அதே:)! டவர் காட்டிக் கொடுத்து விட்டது இல்லையா?

  ReplyDelete
 35. புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
  //ஆஹா!அருமை...வெற்றிக்கு வாழ்த்துக்கள்//

  பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி அப்துல்லா! வெற்றி:))! போட்டியில் இருக்கும் படங்களையெல்லாம் பார்த்தீர்களா? நானெல்லாம் ஆட்டத்தில் இருக்கும் ஆர்வத்தில் கலந்து கொள்கிறேன்.

  ReplyDelete
 36. விஜய் said...
  //முதல் முறையாக PIT ஜுலை 2008 போட்டிக்கு நான் கோவையில் எடுத்த ஒளி வெள்ளத்தில் காந்திபுரம் மெயின் சிக்னல்...தகவல் தந்தமைக்கு நன்றி..//

  நல்லது விஜய். படத்தைப் பார்த்தேன். வாழ்த்துக்கள். தொடர்ந்து போட்டியில் பங்கு பெறுங்கள்.

  ReplyDelete
 37. முதல் படம் அருமை.. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 38. SanJai said...
  //முதல் படம் அருமை.. வாழ்த்துக்கள்.//

  நன்றி சஞ்சய்!

  ReplyDelete
 39. முதல் படம் வித்தியாசமான ஒளிஅழகுகள்..

  நீங்க படத்துக்கு கொடுத்திருக்கும் விமர்சனக்கவிதை இன்னும் அழகு.

  போகி அப்போ பழயக்குப்பையை எரிக்கும் வழக்கத்தை டயர் எரிக்கும் போராட்டம் போல மாற்றியதால் தான் சட்டம் வந்திருக்கும்.. பழயகாலத்தில் நாம் பயன்படுத்தியக்குப்பைகளை எரித்தால் ஆபத்தில்லாமல் இருந்தது .. இப்பத்தான் பாலிதீன் ப்ளாஸ்டிக் என்று எரித்தால் மாசாகும் படியாக்கிவிட்டோமே.. இப்ப எரிப்பது தடை போடுவது சரிதானே...

  ReplyDelete
 40. கயல்விழி முத்துலெட்சுமி said...
  //முதல் படம் வித்தியாசமான ஒளிஅழகுகள்..

  நீங்க படத்துக்கு கொடுத்திருக்கும் விமர்சனக்கவிதை இன்னும் அழகு.//

  வழிமேல் விழி வைத்திருக்க வந்து சேர்ந்த கயல்விழி:), தங்கள் பாராட்டுக்கு நன்றி!

  போகி அன்று குப்பை எரிப்பு பற்றிய உங்கள் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன்.

  ReplyDelete
 41. நிஜமா நல்லவன் said...
  //எல்லாமே சூப்பர்.//

  ரொம்ப நன்றி நிஜமா நல்லவன்.

  ReplyDelete
 42. அன்பின் ராமலக்ஷ்மி,

  படங்கள் அழகோ அழகு. அதிலும் அந்த மைசூர் அரண்மனை..கேமராவைச் சுத்திப் போடுங்க சகோதரி...
  கவிதைகளோடு கலக்குறீங்க :)

  ReplyDelete
 43. அன்பின் ராமலக்ஷ்மி,

  படங்கள் அழகோ அழகு. அதிலும் அந்த மைசூர் அரண்மனை..கேமராவைச் சுத்திப் போடுங்க சகோதரி...
  கவிதைகளோடு கலக்குறீங்க :)

  ReplyDelete
 44. pit போட்டி முடிவு எப்போது என காத்திருக்கிறேன்.போட்டிப் படங்கள் அத்துணையும் காமிராக் கவிதைகள்

  தி.விஜய்
  pugaippezhai.blogspot.com
  வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 20 மறுமொழிகள் | விஜய்

  ReplyDelete
 45. நிழற்படங்களுக்கேற்றாற்போல் கவிதைகளைத் தீட்டி நிழற்படங்களுக்கு மெழுகேற்றியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 46. எம்.ரிஷான் ஷெரீப் said...
  //படங்கள் அழகோ அழகு.//

  //கவிதைகளோடு கலக்குறீங்க :)//

  கவிஞருக்குக் கவிதைகள் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி! படங்களைப் பற்றிய பாராட்டுக்கும் நன்றி ரிஷான்!

  ReplyDelete
 47. விஜய் said...
  //pit போட்டி முடிவு எப்போது என காத்திருக்கிறேன்.//

  உங்கள் கோவை பைக் ரேஸ் படங்கள் பார்த்தேன் விஜய். துல்லியமான படங்கள். பாராட்டுகிறேன். இனி மாதாமாதம் போட்டி எப்போது எனவும் காத்திருங்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 48. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அமுதா!

  ReplyDelete
 49. உங்களுக்கு புகைப்பட போட்டியில் முதல் பரிசு கிடைக்கவேண்டுமென ஸ்ரீ சக்ரராஜ சிம்மாஸனேஸ்வரி
  ராஜராஜேஸ்வரியிடம் பிரார்த்தனை இங்கு செய்யப்படுகிறது.

  http://ceebrospark.blogspot.com

  suppu thatha.

  ReplyDelete
 50. பரிசு கிடைக்கிறதோ இல்லையோ தங்கள் நல்ல உள்ளத்துக்கு மிக்க நன்றி சுப்பு தாத்தா:)!

  ceebrospark வந்திருந்தேன்.

  நான் நித்தம் வணங்கும் ராஜேஸ்வரியையே அங்கே எழுந்தருளச் செய்திருப்பீர்கள் என்பது நான் எதிர்பாராத ஒன்று. நன்றி. அப்படமானது என் மே பிட் போட்டி 'ஜோடி' தலைப்புக்காக எனது பூஜை அறையில் எடுத்தது. http://tamilamudam.blogspot.com/2008/05/pit_8670.html . அப்படத்தின் மூலமானது எனது தாத்தா பூஜித்து வந்த சுமார் எழுபது ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய
  (4' * 3')தஞ்சாவூர் ஓவியமாகும். நாங்கள் வளர்ந்த இல்லத்திலே இன்னும் என் பெரியப்பா குடும்பத்தினரால் வழிபடப் பட்டு வருகிறது. அப்படத்தின் புகைப் படத்தைக் கொடுத்து சகோதரிகள் நாங்களும் (சின்னத் தங்கையின் பெயர் ராஜராஜேஸ்வரி), அம்மாவும் அதே போல தஞ்சாவூரிலிருந்து செய்து தருவித்து அவரவர் இல்லங்களில் வழிபட்டு வருகிறோம். தஞ்சையைச் சேர்ந்த தாங்கள் இத் தகவலையும் ரசிப்பீர்கள் எனத் தந்தேன்.

  பாடலைப் பாவத்துடன் அருமையாகப் பாடியிருக்கும் சகோதரிக்கு என் பாராட்டைத் தெரிவியுங்கள்.

  ReplyDelete
 51. //பூவாய் சிதறும் ஒளியைக் கண்டு
  பூரித்து நிற்கும் மனசே
  கரியாப் போகும் காசைப் பார்த்து
  கவலைப் படா விட்டாலும்
  சுற்றுப் புற மாசை நினைத்து
  மாற்றிக்க மாட்டாயா உன்னை//

  அட போங்க..உங்களை எத்தனை முறை தான் பாராட்டுவது..

  அனைத்து படங்களும் சூப்பர் னு சொன்னா எதோ சொல்றதுக்காக சொன்ன மாதிரி ஆகிடும் அதனால உண்மைய சொல்லிடுறேன் 1,2 மற்றும் கடைசி சூப்பர்.

  முதல் இரண்டு படங்கள் சுற்றலா சென்றால் எடுப்போமே அதுபோல இருக்கு..கடைசி படம் போட்டிக்காக எடுத்த மாதிரி நச் னு இருக்கு

  ReplyDelete
 52. // இருளிலிருந்து ஒளிக்கு-
  அஞ்ஞானத்திலிருந்து ஞானத்துக்கு-
  வழிகாட்டிய மகான்
  இருண்ட அரங்கில்
  பிரமாண்டமாய் எழுந்து
  தங்கமாய் ஜொலிக்கிறார்
  தன் போதனைகளைப் போலவே!//

  அருமை போங்க.

  ReplyDelete
 53. கிரி said...
  //அனைத்து படங்களும் சூப்பர் னு சொன்னா எதோ சொல்றதுக்காக சொன்ன மாதிரி ஆகிடும் அதனால உண்மைய சொல்லிடுறேன்//

  சொல்லுங்க சொல்லுங்க உண்மையான கருத்தை தாராளமா சொல்லுங்க. அதுதான் எவரையும் மேம்படுத்திக் கொள்ள உதவும்.

  // 1,2 மற்றும் கடைசி சூப்பர்.
  முதல் இரண்டு படங்கள் சுற்றலா சென்றால் எடுப்போமே அதுபோல இருக்கு..கடைசி படம் போட்டிக்காக எடுத்த மாதிரி நச் னு இருக்கு//

  கடைசி படம் மட்டும்தான் போட்டி அறிவிப்புக்காக எடுத்தது. மற்றவை இரவு நேரத்துப் படங்கள் என எடுத்ததில் இருப்பவற்றையெல்லாம் போட்டது. அதிலும் தீபாவளிப் படங்கள் ரொம்ப சுமார்தான்.

  ////பூவாய் சிதறும் ஒளியைக் கண்டு
  பூரித்து நிற்கும் மனசே
  கரியாப் போகும் காசைப் பார்த்து
  கவலைப் படா விட்டாலும்
  சுற்றுப் புற மாசை நினைத்து
  மாற்றிக்க மாட்டாயா உன்னை//

  அட போங்க..உங்களை எத்தனை முறை தான் பாராட்டுவது.. ////

  இப்படி பாராட்டைப் பெறணும் என்பதை விட ஒரு கருத்துப் பரிமாற்றத்துக்கான வாய்ப்பாகக் கருதிதான் அப்படங்களைக் கொடுத்தேன்.[ஆனாலும் தங்கள் அறிவுரையை இனிக் கவனத்தில் கொள்வேன்]. சூரி சார், கயல்விழி முத்துலட்சுமி ஆகியோர் மாசு பற்றிய தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

  புகைப் படத் துறையில் பெரிதாக ஏதும் தெரியா விட்டாலும், இம் மாதிரி போட்டிகளில் எம் போன்றோர் பங்கெடுப்பது ஒரு ஆர்வத்திலும் உற்சாகத்திலும்தான் கிரி!

  ReplyDelete
 54. கார்த்திக் said...
  //// இருளிலிருந்து ஒளிக்கு-
  அஞ்ஞானத்திலிருந்து ஞானத்துக்கு-
  வழிகாட்டிய மகான்
  இருண்ட அரங்கில்
  பிரமாண்டமாய் எழுந்து
  தங்கமாய் ஜொலிக்கிறார்
  தன் போதனைகளைப் போலவே!//

  அருமை போங்க. ////

  கார்த்திக், வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. அந்த மகானின் போதனைகளில் ஒன்றான அஹிம்சையை கடைப் பிடித்தால் ஊரும் நாடும் உலகமும் எப்படி இருக்கும் ஒற்றுமையாய்...?!?!

  ReplyDelete
 55. //எம் போன்றோர் பங்கெடுப்பது ஒரு ஆர்வத்திலும் உற்சாகத்திலும்தான் கிரி!//

  எம் என்பதை நம் என்று மாற்றி கொள்ளுங்கள் ..நானும் அப்படியே :-))

  ReplyDelete
 56. கிரி said...
  ////எம் போன்றோர் பங்கெடுப்பது ஒரு ஆர்வத்திலும் உற்சாகத்திலும்தான் கிரி!//

  எம் என்பதை நம் என்று மாற்றி கொள்ளுங்கள் ..நானும் அப்படியே :-))//

  சரிதான். கோபிச் செட்டியின் 'பச்சை பசேல்' பசுமைப் படங்களைப் போட்டுப் புரட்சி பண்ணிய கையோடு இப்படிச் சொன்னால் எப்படி:))?

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin