“அதிகாலையில் எடுக்கப்பட்ட படமா இருக்கணும். படத்தில், பனி படர்ந்த தெருவும் இருக்கலாம், அதிலிருக்கும் ஃப்ரெஷ்ஷான கோலமும் இருக்கலாம், பேப்பர் போடும் பையனும் இருக்கலாம், ஓரமா குந்திக்கினு பீடி பிடிக்கும் பெரியவரும் இருக்கலாம், டீ ஆத்தும் நாயரும் இருக்கலாம், பால் பூத்தில் வரிசையாக நிற்கும் யுவதிகளும் இருக்கலாம், ஜாகிங்க் செல்லும் பெருசுகளும் இருக்கலாம்,..”
இப்படிப் போகிறது காட்சி விதிமுறைகளின் பட்டியல்:)!
1.புலரும் காலைப் பொழுதினிலே..
பிழைப்புக்குப் புறப்படும் தோணியிலே..
அன்றைய சவாரி பற்றிய சிந்தனையிலே..
இருக்கும் இவர்களுக்கு இயற்கையை ரசிக்கத் தோன்றிடுமா? சந்தேகமே:(!
இப்படத்தை சிலதினம் முன்னர் என் ஃப்ளிக்கர் தளத்தில் மகாக்கவியின் வரிகளோடு பதிந்திருந்தேன், ‘கேணி’ எனும் வார்த்தையை மட்டும் ‘ஏரி’யாக்கி. வரிகளை முணுமுணுத்தபடியே படத்தை மறுமுறை பாருங்களேன்:)!
காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்கு
'ஏரி'யருகினிலே - தென்னைமரம்
கீற்று மிளநீரும்.
பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும், - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.
***
2. விடியல்
வாழ்வின் நம்பிக்கை
***
3. நடைப் பயிற்சி
பனி விலகாக் காட்டுக்குள்ளே பொடி நடையாப் போறாக..
***
4.
அதிகாலை நேரம்
ஆத்தங்கரையோரம்
அழகான குடும்பம்
குளித்து முடித்து.. துவைத்துப் பிழிந்து..
***
5. சலவை
'கும்மு கும்மு'ன்னு கும்மி.. 'பொளேர் போளேர்'னு நாலு சாத்தி.. அலசிப் பிழியும் சலவை. மறந்தே போச்சு இல்லே:)?
***
6. இதோ மேக ஊர்வலம்
கிழக்கு சிவக்கையிலே மேற்கு சிலிர்த்துக் கொள்ள
உறங்கிக் கொண்டிருந்த மேகக்கூட்டம்
அடிவானிலிருந்து சிலுப்பிக் கொண்டு
கிளம்புகின்ற அற்புதக் காட்சி.
இந்தக் கடைசி படமே தலைப்புக்காக கடந்த வாரம் ஒரு ‘அதி’காலையில் எடுத்தது:)! அதிகாலை உணர்வு அதிகம் வெளிப்படாததால் போட்டிக்கு அன்றி, பார்வைக்கு வைத்தாயிற்று. [இன்னும் பெரிதாகக் காண விரும்பினால் படத்தின் மேல் சொடுக்குங்கள்.]
***
விடியல் மற்றும் நடைப் பயிற்சி தவிர்த்து மற்ற நான்கும் முதன் முறையாகப் பதிந்தவையே.
உங்களுக்குப் பிடித்ததாக இருப்பதையும் சொல்லிச் செல்லலாம்:)!
இதுவரை அணிவகுத்திருக்கும் போட்டிப் படங்கள் இங்கே.
படங்கள் வழக்கம் போல் அருமை. குறிப்பாய் முதலும் கடைசி படமும்..
பதிலளிநீக்குபோட்டி விதியில் பனி படர்ந்த என்று சொல்லி உள்ளார்களே?? படங்களில் பனி இருக்கிற மாதிரி தெரியலை. (தவறை எண்ண வேண்டாம்)
அஞ்சு அம்சமா இருக்கு :)
பதிலளிநீக்குஎப்போதும் போல் படங்கள் மிக அருமை.
பதிலளிநீக்குபடங்களைப் பர்ர்க்கும் பொழுதே குளிருதுங்க!
பதிலளிநீக்குஅழகு ஆயிரம் உலகம் முழுவதும் பாடல், புகைப்படங்களை பார்த்ததும் மனதில் ஓடுகிறது.
பதிலளிநீக்குஅருமைங்க.. எல்லா படமும்.. கடைசி படம் ரொம்பக் கவர்ந்தது..
பதிலளிநீக்குஇந்தமுறை அசத்தல் கொஞ்சம் கம்மி.
பதிலளிநீக்குமேகமே மேகமே ஓகே.ஆனால், அது காலை மேகமில்லை.
தென்னைமரம் அதிகாலைக்கு பொருத்தம்
ஒருவேளை அனைத்த் படங்களும் ஏற்கனவே பார்த்ததால் இருக்குமோ.
ellaame arumai. 4 & 5 kaalaikku super thervu
பதிலளிநீக்குஇரண்டாவது அருமை
பதிலளிநீக்குபடங்கள் மிக அருமை..
பதிலளிநீக்குஎல்லா படங்களும் அழகாய் இருந்தாலும், அந்த 4 - அதிகாலை நேரம் ஆத்தங்கரையோரம் அழகான குடும்பம் என்ற படமே தலைபிற்கு மிக பொருத்தம். மெதுவாக ஆதவானின் ஒளி வெளியில் வர, வீட்டு முற்றத்தின் அருகிலேயே குளித்து முடிந்தும் துணிகளை அலசும் காட்சியும், குளிக்க காத்திருக்கும் பிள்ளைகளும் அருமை. பின்னணியில் அடர்ந்த தோப்பும் தூய்மை விளங்கும் அந்த புதிய வீடும் மெல்லிய ஒளியில் காலை நேர உணர்வை தருகிறது.
பதிலளிநீக்குnice snaps.....
பதிலளிநீக்குExcellent photos Madam
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் அழகோ அழகு. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மேம்!
பதிலளிநீக்குபடங்கள் மிக அழகு...! அந்த மேகம் எந்த ஊரு மேகம்னு சொல்லி இருக்கலாம்..!;)
பதிலளிநீக்குமோகன் குமார் said...
பதிலளிநீக்கு//படங்கள் வழக்கம் போல் அருமை. குறிப்பாய் முதலும் கடைசி படமும்..//
கடைசிப் படம் உங்களுக்குப் பிடித்ததில் வியப்பே இல்லை. மேகங்களின் ரசிகராயிற்றே:)!
//போட்டி விதியில் பனி படர்ந்த என்று சொல்லி உள்ளார்களே?? படங்களில் பனி இருக்கிற மாதிரி தெரியலை. (தவறை எண்ண வேண்டாம்)//
பனி படர்ந்த தெருவும் ‘இருக்கலாம்’ என்றால் இல்லாமலும் இருக்கலாம்தானே:))? ஆனாலும் உற்றுப் பாருங்க, காட்டுப் படத்தின் மறு முனையில் பனி விலகாதது தெரியும். தெரியுதா:)? நன்றி மோகன் குமார்.
ஆயில்யன் said...
பதிலளிநீக்கு//அஞ்சு அம்சமா இருக்கு :)//
என் கணிப்பிலும் முன்னணியில். நன்றி ஆயில்யன்.
புவனேஸ்வரி ராமநாதன் said...
பதிலளிநீக்கு//எப்போதும் போல் படங்கள் மிக அருமை.//
நன்றி புவனேஸ்வரி.
kggouthaman said...
பதிலளிநீக்கு//படங்களைப் பர்ர்க்கும் பொழுதே குளிருதுங்க!//
மார்கழி ஃபீலிங் இருக்கணும் என்றும் போட்டி விதி சொல்லுது. உங்க கருத்து எனக்கு ‘ஜில்’:)! நன்றி கெளதமன்.
தமிழ் உதயம் said...
பதிலளிநீக்கு//அழகு ஆயிரம் உலகம் முழுவதும் பாடல், புகைப்படங்களை பார்த்ததும் மனதில் ஓடுகிறது.//
நல்ல வரிகள். நன்றி தமிழ் உதயம். உண்மைதான். கவனிக்க மறந்து போகிறோம் அவசரவாழ்வின் தினசரி ஓட்டத்தில்.
கையேடு said...
பதிலளிநீக்கு//அருமைங்க.. எல்லா படமும்.. கடைசி படம் ரொம்பக் கவர்ந்தது..//
மிக்க நன்றிங்க. அது ஒன்றுதான் தலைப்புக்காக என்றே பெங்களூரு குளிருக்குள்ள எடுத்தேன்.
goma said...
பதிலளிநீக்கு//இந்தமுறை அசத்தல் கொஞ்சம் கம்மி.//
இருத்தலின் அடையாளமாகதான் ஒவ்வொரு போட்டியிலும் தவறாமல் ஓடியபடி:)!
//மேகமே மேகமே ஓகே.ஆனால், அது காலை மேகமில்லை.//
காலை மேகமே:)! ஆனால் மேற்கு அடி வானில். ஆகவேதான் அந்த உணர்வு கம்மியாகி விட்டது. அதுவுமில்லாமல் எடுத்த ஏழுமணிக்கு கிழக்கே சூரியன் வரும் அறிகுறியே இருக்கவில்லை, பெங்களூரு வானில்.
//தென்னைமரம் அதிகாலைக்கு பொருத்தம்//
நன்றி கோமா. தலைப்பைப் பார்த்ததுமே முதலில் நினைத்தது அதைத்தான்:)!
//ஒருவேளை அனைத்த் படங்களும் ஏற்கனவே பார்த்ததால் இருக்குமோ.//
உங்க கமெண்டைப் பார்த்ததும் ஒரு குறிப்பை சேர்த்து விட்டேன்:)! 2,3 தவிர மற்ற ‘அனைத்து’ம் புத்தம் புதியவையே. அழகான குடும்பம் ‘தண்ணீர்’ தலைப்பில் வேறு கோணத்தில் வேறு காட்சியாகப் பார்த்திருக்கிறீர்கள்! ஆக அப்படி எண்ணம் எழுந்ததில் வியப்பில்லை.
mervin anto said...
பதிலளிநீக்கு//ellaame arumai. 4 & 5 kaalaikku super thervu//
அதுல எது உங்கள் தேர்வு:)?
LK said...
பதிலளிநீக்கு//இரண்டாவது அருமை//
அதிகாலைச் சூரியனின் பிரவாகம். மிக்க நன்றி எல் கே.
வெறும்பய said...
பதிலளிநீக்கு//படங்கள் மிக அருமை..//
மிக்க நன்றிங்க.
கக்கு - மாணிக்கம் said...
பதிலளிநீக்கு//எல்லா படங்களும் அழகாய் இருந்தாலும், அந்த 4 - அதிகாலை நேரம் ஆத்தங்கரையோரம் அழகான குடும்பம் என்ற படமே தலைபிற்கு மிக பொருத்தம். மெதுவாக ஆதவானின் ஒளி வெளியில் வர, வீட்டு முற்றத்தின் அருகிலேயே குளித்து முடிந்தும் துணிகளை அலசும் காட்சியும், குளிக்க காத்திருக்கும் பிள்ளைகளும் அருமை. பின்னணியில் அடர்ந்த தோப்பும் தூய்மை விளங்கும் அந்த புதிய வீடும் மெல்லிய ஒளியில் காலை நேர உணர்வை தருகிறது.//
எனக்கு ஏற்பட்ட அதே உணர்வை வெகு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.
அரசன் said...
பதிலளிநீக்கு//nice snaps.....//
நன்றிகள் அரசன்.
படங்கள் அருமை.
பதிலளிநீக்கு#4 touches/reaches the heart more than the others - although, I liked the other photo better (where the thambis were hugging the annan ... that was so cute :)
பதிலளிநீக்குgood luck !
கனாக்காதலன் said...
பதிலளிநீக்கு//படங்கள் அருமை.//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமேகமே மேகமே அருமை.
Someone like you said...
பதிலளிநீக்கு//#4 touches/reaches the heart more than the others - although, I liked the other photo better (where the thambis were hugging the annan ... that was so cute :)
good luck !//
என்னவொரு நினைவாற்றல் உங்களுக்கு. உண்மைதான். . ‘தண்ணீர்’ பதிவில் அதுவொரு கவிதைக் காட்சி. முதலில் அதைத்தான் இணைக்க எண்ணினேன். பிறகுதான் கவனித்தேன் நான்காவது குழந்தை தண்ணீருக்குள்ளிருந்து ‘குபுக்’ என்று இப்படத்தில் வெளிவருவதை:))! பழைய படத்தில் தண்ணீர் மேலே தலை மட்டும் தெரிகிறது. சரி, குளியல் காட்சி அதிகாலைக்கு சாலப் பொருத்தமே என இதைப் பதிந்தாயிற்று:)!
வாழ்த்துக்களுக்கு நன்றி:)!
மாதேவி said...
பதிலளிநீக்கு//வெற்றி பெற வாழ்த்துக்கள்.
மேகமே மேகமே அருமை.//
மகிழ்ச்சியும் நன்றியும்:)!
/இந்தமுறை அசத்தல் கொஞ்சம் கம்மி./
பதிலளிநீக்குஉண்மைதான்!
@ அருணா,
பதிலளிநீக்கு'இருத்தல்' என்பதற்காக மட்டுமே பதிவுலகு வந்த மாதத்திலிருந்து விடாமல் போட்டியிலும், தவறாமல் மாதமொரு பிட் பதிவுமாக:)!
கடைசியாகத் தந்திருக்கும் சுட்டியைச் சொடுக்குங்கள். அசத்தல் படங்களுக்கு தருகிறேன் உத்திரவாதம்:)!
வருகைக்கு நன்றி அருணா.
படங்களில் அழகு ஊர்வலம் போகிறது,
பதிலளிநீக்குவானவெளியின் வழியே...
முதல் படம் அசத்துகிறது. அந்த வீட்டில் இருக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமோ என்று தோன்றினாலும் நமக்கு சில நாட்களிலேயே அந்தச் சூழல் போரடித்து விடும் என்றும் தோன்றுகிறது! நடைப் பயிற்சிப் படம் வெறுமையையும் அச்சத்தையும் (பாம்பு, மிருகம்,,,!) தோற்றுவிக்கிறது. ஏனோ? அசத்தும் மெகா ஊர்வலம்! மேக ஊர்வலம்.
பதிலளிநீக்குஅக்கா!!! எனக்கெல்லாம் அதிகாலை 10 மணி தான் .... அப்புரம் எப்படி இதை எல்லாம் பார்க்க !!!! இந்த மாதிறி நல்ல படங்கள பார்த்து மனத தேத்திக்க வேண்டியது தான் !!!
பதிலளிநீக்கு2 ம் 4 ம் அசத்தல். நான்காவது படம் கவிதையாய் தெரிகிறது. வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குcongrats....
பதிலளிநீக்குஇயற்க்கையோடு ஒன்றிய வாழ்க்கை என்ன ஒரு அழகு.
பதிலளிநீக்குசலவை டாப்பு
பதிலளிநீக்குமற்றவை அனைத்தும் அருமை
வாழ்த்துக்கள் சகோ
விஜய்
பாரத்... பாரதி... said...
பதிலளிநீக்கு//படங்களில் அழகு ஊர்வலம் போகிறது,
வானவெளியின் வழியே...//
பிடித்ததில் மகிழ்ச்சி. நன்றி பாரத்.
ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//முதல் படம் அசத்துகிறது. அந்த வீட்டில் இருக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமோ என்று தோன்றினாலும் நமக்கு சில நாட்களிலேயே அந்தச் சூழல் போரடித்து விடும் என்றும் தோன்றுகிறது!//
உண்மைதான்:)! யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே:)!
//நடைப் பயிற்சிப் படம் வெறுமையையும் அச்சத்தையும் (பாம்பு, மிருகம்,,,!) தோற்றுவிக்கிறது. ஏனோ? //
பாம்பு தெரியவில்லை. ஆனால் மிருகம் இல்லை. அது குமரகம் தாஜ் விடுதியையொட்டி அமைந்த பறவைகள் சரணாலயம். அதிகாலை ஆறுமணியளவில் ஒருகிலோ மீட்டர் போலே உள்ளே நடந்தால் பலவித பறவைகள் காணக் கிடைக்குமென கூட்டிச் செல்கிறார்கள். ஆனால் விரல் விட்டும் எண்ணும் அளவே இருந்தன நாங்கள் சென்றிருந்த வேளை.
//அசத்தும் மெகா ஊர்வலம்! மேக ஊர்வலம்.//
நன்றி ஸ்ரீராம்.
குறை ஒன்றும் இல்லை !!! said...
பதிலளிநீக்கு//அக்கா!!! எனக்கெல்லாம் அதிகாலை 10 மணி தான் .... அப்புரம் எப்படி இதை எல்லாம் பார்க்க !!!! இந்த மாதிறி நல்ல படங்கள பார்த்து மனத தேத்திக்க வேண்டியது தான் !!!//
:))! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அம்பிகா said...
பதிலளிநீக்கு//2 ம் 4 ம் அசத்தல். நான்காவது படம் கவிதையாய் தெரிகிறது. வெற்றிக்கு வாழ்த்துக்கள்.//
நன்றி அம்பிகா. 4-வதில் இருக்கும் குடும்பம் வேறொரு காட்சிக் கவிதையாய் தண்ணீர் பதிவிலும். பார்க்கலாம். இங்கே.
----
@ someone like you,
சுட்டி உங்களுக்காகவும்:)!
ஜெரி ஈசானந்தன். said...
பதிலளிநீக்கு//congrats....//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெரி ஈசானந்தன்.
மோனிஷா said...
பதிலளிநீக்கு//இயற்க்கையோடு ஒன்றிய வாழ்க்கை என்ன ஒரு அழகு.//
உண்மைதான் மோனிஷா. வருகைக்கு மிக்க நன்றி.
விஜய் said...
பதிலளிநீக்கு//சலவை டாப்பு
மற்றவை அனைத்தும் அருமை
வாழ்த்துக்கள் சகோ//
நன்றி விஜய்:)! அதுதான் சென்றது போட்டிக்கு.
மோகன்குமார் சொன்னதுபோல முதலும் கடைசியும் ரொம்ப நல்லாயிருக்குங்க :)
பதிலளிநீக்குSimply Superb! Very nice, akka... :-)
பதிலளிநீக்குதமிழ் திரட்டி உங்களுக்கான புதியத் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
பதிலளிநீக்குஇவன்
http://tamilthirati.corank.com/
மேகம் அழகா இருக்கு.. ஆனா துணி துவைக்கிறது தான் கச்சிதமா இருக்கு தலைப்புக்குன்னு தோணிச்சு. அந்த குடும்பமும் அழகு தான். எதை அனுப்பினீங்க..
பதிலளிநீக்குஅழகான குடும்பப் படம், சலவைப் படம் இரண்டும் அருமை.
பதிலளிநீக்குவெற்றிப் பெற வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
அழகான கருத்துள்ள படைப்பு நண்பரே
பதிலளிநீக்குபடங்கள் மிக அருமை.
பதிலளிநீக்குவருண் said...
பதிலளிநீக்கு//மோகன்குமார் சொன்னதுபோல முதலும் கடைசியும் ரொம்ப நல்லாயிருக்குங்க :)//
நன்றிகள் வருண்:)!
Chitra said...
பதிலளிநீக்கு//Simply Superb! Very nice, akka... :-)//
Thanks Chitra:)!
@ தமிழ் திரட்டி,
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி.
முத்துலெட்சுமி/muthuletchumi said...
பதிலளிநீக்கு//மேகம் அழகா இருக்கு.. ஆனா துணி துவைக்கிறது தான் கச்சிதமா இருக்கு தலைப்புக்குன்னு தோணிச்சு. அந்த குடும்பமும் அழகு தான். எதை அனுப்பினீங்க..//
நன்றி முத்துலெட்சுமி. கல்லில் துணி துவைக்கும் படமே அனுப்பியுள்ளேன்:)!
கோமதி அரசு said...
பதிலளிநீக்கு//அழகான குடும்பப் படம், சலவைப் படம் இரண்டும் அருமை.
வெற்றிப் பெற வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.//
சலவைப் படம் சென்றது போட்டிக்கு. மிக்க நன்றி கோமதிம்மா:)!
யாதவன் said...
பதிலளிநீக்கு//அழகான கருத்துள்ள படைப்பு நண்பரே//
நன்றிகள் யாதவன்.
சே.குமார் said...
பதிலளிநீக்கு//படங்கள் மிக அருமை.//
நன்றிகள் குமார்.
meenu-asha said...
பதிலளிநீக்கு//Excellent photos Madam//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மீனு ஆஷா. நெல்லையா நீங்க:)? சந்தோஷம்.
Priya said...
பதிலளிநீக்கு//படங்கள் அனைத்தும் அழகோ அழகு. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மேம்!//
தேர்ந்த ஓவியர் உங்களின் ரசனையில் படங்கள் தேர்வானதில் மகிழ்ச்சி ப்ரியா:)! நன்றி.
தமிழ் அமுதன் said...
பதிலளிநீக்கு//படங்கள் மிக அழகு...! அந்த மேகம் எந்த ஊரு மேகம்னு சொல்லி இருக்கலாம்..!;)//
நான் இருக்கும் பெங்களூரு மேகமே:)! ஆறாவது தளத்திலிருந்து எடுத்த படம்.
நன்றிகள் ஜீவன்.
2. விடியல்தான் போட்டிக்கு அம்சமா இருக்கும் :-)
பதிலளிநீக்குபடம் அருமை. போட்டிக்கு வந்த படங்களையும் உங்கள் வழியாகவே பார்த்தேன். அதில் காலையை உணர்த்தும் படங்கள் உங்களது (துணி துவைத்தல்) கோமா (கோலம்) துளசிகோபால் (காபி) மெர்வின் (சூரிய நமஸ்காரம்) நான்கும்தான். மற்றதெல்லாம் சன்ரைஸ் சீன். அதில் கார்த்தி, செந்தில்குமார் இருவரின் படங்கள் அழகு. ஏழு படங்களும் "முதல் பத்து" லிஸ்டில் வரும் பாருங்கள்.
பதிலளிநீக்குபாராட்டுக்கள்.
ஜனவரி போட்டியில் கலந்து கொள்ள முயல்கிறேன்.
சகாதேவன்
@ உழவன்,
பதிலளிநீக்குசொல்லப்போனா அதில்தான் நிஜம்மா கிழக்கு சிவந்திருக்கு தலைப்புக்குப் பொருத்தமா:)! நன்றி உழவன்.
சகாதேவன் said...
பதிலளிநீக்கு//படம் அருமை. போட்டிக்கு வந்த படங்களையும் உங்கள் வழியாகவே பார்த்தேன்.//
நன்றி. ஒவ்வொரு பதிவின் ஆரம்பத்திலும் அறிவிப்புக்கான வழியையும், இறுதியில் அணிவகுப்புப் படங்களுக்கான வழியையும் வைக்க மறப்பதில்லை. அவை இன்னும் பலருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி போட்டியில் கலந்து கொள்ளச் செய்யுமே எனும் ஆசைதான்:)!
//அதில் காலையை உணர்த்தும் படங்கள் உங்களது (துணி துவைத்தல்) கோமா (கோலம்) துளசிகோபால் (காபி) மெர்வின் (சூரிய நமஸ்காரம்) நான்கும்தான். மற்றதெல்லாம் சன்ரைஸ் சீன். அதில் கார்த்தி, செந்தில்குமார் இருவரின் படங்கள் அழகு. ஏழு படங்களும் "முதல் பத்து" லிஸ்டில் வரும் பாருங்கள்.
பாராட்டுக்கள்.//
உங்கள் பாராட்டே பரிசுதான். சன் ரைஸ் ஸீனை அதற்காகவே தவிர்த்தேன் படம் 2 பொருத்தமாய் இருந்தாலும். [உழவன், கவனியுங்கள்:)!]
//ஜனவரி போட்டியில் கலந்து கொள்ள முயல்கிறேன்.//
நீங்கள் கலந்து கொள்வதில்லையே என்பது பெரிய ஆதங்கம் எப்போதும் எனக்கு. இதைக் கேட்க மகிழ்ச்சியாய் உள்ளது. இனி வரும் போட்டிகளில் உங்கள் பங்களிப்பை எதிர்பார்த்திருப்பேன்:)!
நன்றிகள் சகாதேவன்.
மிக அழகு
பதிலளிநீக்குமேகம் படம் மிக அருமை
பதிலளிநீக்குமேகக் கூட்டம் அள்ளுது அக்கா..
பதிலளிநீக்குஎல்லா படங்களும், கவிதை பதிவு எல்லாமே மிக அருமை
பதிலளிநீக்குஒவ்வொரு படமும் மிகவும் நேர்த்தியான கலைநயத்தோடு விளங்குகின்றது.
பதிலளிநீக்குஎனக்கு மேக ஊர்வலம் ரொம்பப் பிடிக்குது :)
பதிலளிநீக்குமேக ஊர்வலம் - Super
பதிலளிநீக்குஅட்டஹாசமா இருக்குங்கோ...
பதிலளிநீக்குஅதுவும்.. சுத்தபத்தமா துணி துவைக்கிறது... excellent capture
ஆ.ஞானசேகரன் said...
பதிலளிநீக்கு//மிக அழகு//
நன்றி ஞானசேகரன்.
சசிகுமார் said...
பதிலளிநீக்கு//மேகம் படம் மிக அருமை//
நன்றி சசிகுமார்.
சுசி said...
பதிலளிநீக்கு//மேகக் கூட்டம் அள்ளுது அக்கா..//
மகிழ்ச்சியும் நன்றியும் சசி.
Jaleela Kamal said...
பதிலளிநீக்கு//எல்லா படங்களும், கவிதை பதிவு எல்லாமே மிக அருமை//
வாங்க ஜலீலா. நன்றி. இடத்தை.. படத்தை.. பார்த்ததும் மகாக்கவியின் வரிகள் மனதில் ஓடியதால் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
S பாரதி வைதேகி said...
பதிலளிநீக்கு//ஒவ்வொரு படமும் மிகவும் நேர்த்தியான கலைநயத்தோடு விளங்குகின்றது.//
நன்றிகள் பாரதி.
கவிநயா said...
பதிலளிநீக்கு//எனக்கு மேக ஊர்வலம் ரொம்பப் பிடிக்குது :)//
க்ளிக் செய்து பாருங்க:)! நன்றி கவிநயா.
சாய் said...
பதிலளிநீக்கு//மேக ஊர்வலம் - Super//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சாய்.
Deepa said...
பதிலளிநீக்கு//அட்டஹாசமா இருக்குங்கோ...
அதுவும்.. சுத்தபத்தமா துணி துவைக்கிறது... excellent capture//
ஆஹா, நன்றிகள் தீபா:)! போட்டிக்கும் தந்ததும் அதையே. பிட் குரு உங்கள் பாராட்டில் மகிழ்ச்சி:)!
அழகான படங்கள். பார்த்தாலே ஒரு சுறுசுறுப்பு வருது.
பதிலளிநீக்குதமிழ்மணத்தில் வாக்களித்த 18 பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த 31 பேருக்கும் என் நன்றிகள்.
பதிலளிநீக்குஅமுதா said...
பதிலளிநீக்கு//அழகான படங்கள். பார்த்தாலே ஒரு சுறுசுறுப்பு வருது.//
மகிழ்ச்சியும் நன்றியும், அமுதா:)!
நீல வானம் படம் நன்றாக உள்ளது..ஆனால் நீங்கள் கூறிய காரணமும் சரியாக உள்ளது :-)
பதிலளிநீக்கு@ கிரி,
பதிலளிநீக்குநீலவானப் படம் எனது புதிய SLR-ன் முதல் படமாக வலைப்பூவில் பதிந்தது என்பதை உங்களுக்கான பதிலில் தெரியப் படுத்துகிறேன்:)! அதுகுறித்து விரைவில் வரும் ஒரு பதிவு.