ஞாயிறு, 13 ஜூன், 2010

ஒரு பூ வனத்தில்..- நூறாவது பதிவு



வலைப்பூ வனத்தில் என் நூறாவது மலர்.

இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் இப்போதுதான் சதம்:)!

ரொம்பவும் நிதானம் என்று தோன்றினாலும் பரவாயில்லை இந்த டெஸ்ட் மாட்சில் நின்று ஆடிக் கொண்டிருக்கிற வரையில் சந்தோஷம்தானே என்றிருக்கிறேன். அடித்த சதம் ஒருபுறமிருக்க, இரண்டு வருடங்கள் தொடர்வேன் என்பதே நான் எதிர்பார்க்காத ஒன்று. எப்போதாவது எழுதுவது என்றிருந்த என்னை ஓரளவு தொடர்ந்து எழுத வைத்து விட்டது வலைப்பூ.

ஆரம்ப ஆர்வம் வேகம் தாகம் எல்லாம் ஒரு கட்டத்தில் வடிந்து விடுவது எல்லோருக்கும் பொதுவாக நடக்கக் கூடியதே. நானும் அதற்கு விதிவிலக்கல்ல.

நானறிந்து அற்புதமான பதிவுகள் தந்து கொண்டிருந்த பலர், பல்வேறு காரணங்களால் ஒதுங்கிக் கொண்டு விட்டுள்ளார்கள்.

அவர்களில் சிலர் அவ்வப்போது மைதானத்தில் தலை காட்டுவதும், சிலபல சிக்ஸர்களை விளாசி மகிழ்வித்து விட்டு ‘மீண்டும் விரைவில் சந்திப்போம்’ என உத்திரவு வாங்கிக் கொள்வதுமாய் இருக்கிறார்கள்.

சிலருக்கு பதிவிடுவது பொழுதுபோக்கு, ரிலாக்ஸேஷன். சிலருக்கு வடிகால். சிலருக்குத் தம் எழுத்துக்களை ஆவணப்படுத்தும் இடம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

சிலருக்கோ தவம். இவர்கள் எத்தனையோ வேலைகளுக்கிடையிலும் எழுதுவதையும் பதிவதையும் ஒருவித தொடர் ஈடுபாட்டுடன் நேர்த்தியுடன் செய்து பிரமிக்க வைக்கிறார்கள். என் போன்றவர்களுக்குப் ‘போதுமோ’ எனும் எண்ணம் வருகையில் எல்லாம் தொடர்கின்ற உத்வேகத்தைத் தருகிறார்கள்.

புதிதாய் வருகிறவர்கள் பிரமாதப் படுத்துகிறார்கள். இவர்களின் உற்சாகம் எல்லோரையும் தொற்றிக் கொள்கிறது. இன்னும் பல புதியவர்கள் இணைய வேண்டும். அதற்கு ஆரோக்கியமானதொரு சூழல் பதிவுலகில் என்றைக்கும் நிலவுமாறு இருப்பவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சரி இப்போது ஒரு சில வரிகளில் என் நூறினைப் புரட்டலாம்.

மொத்தப் பதிவுகளில் 25 சதவிகிதம் புகைப்படப் பதிவுகள், நிபுணராய் இல்லாவிட்டாலும் ஒரு ஆர்வலராய்..

50 சதவிகிதம் கவிதைகள், இலக்கணங்களுக்கு உட்பட்ட இலக்கியங்களாய் இல்லாவிட்டாலும் என் எண்ணங்களின் பிரதிபலிப்புகளாய்..

சிறுகதைகள் கட்டுரைகள் நினைவலைகள் இன்னபிறவுமாக..

பெரிய இடைவெளியின்றி தொடர்ந்து கொடுத்து வந்துள்ளேன் சராசரியாக வாரம் ஒன்றென. இனிவரும் காலத்தில் இந்த விகிதம் மாறலாம். கூடவோ இன்னும் குறையவோ செய்யலாம். இடைவெளிகள் ஏற்படலாம். அவை தற்காலிகமானதாகவே இருக்க மனம் விளைகிறது.

எழுதும் ஆர்வத்தை உயிப்பித்ததால், பலரையும் வாசித்து நம்மை மேம்படுத்திக் கொள்ளத் தூண்டுவதால் பதிவுலகில் தொடர்வது விருப்பமாய் உள்ளது. இது புகைப்பட ஆர்வத்துக்கும் பொருந்தும்.

நூறு இடுகைகளுக்கு என்ற கணக்கில் அரைலட்சம் தொடவிருக்கும் ஹிட்ஸ், ஏழாயிரத்து முன்னூறு ப்ரொஃபைல் வ்யூஸ் ஆகியவை என் வரையில் பரவாயில்லை எனத் தெம்பைத் தருவதாக உள்ளன. [கெத்தை என அவசரத்தில் வாசித்தோ புரிந்தோ கொண்டால் நிச்சயமாய் கொம்பெனி பொறுப்பேற்காது:)]


தமிழ் ப்ளாகர் திரட்டியின் தனிப்பட்டத் தேர்வாகிய நூற்றியொரு தமிழ் வலைப்பூக்கள் வரிசையில் Tamil Amudam's Blog ஆக முத்துச்சரமும் என்பதில் ஒரு சின்ன மகிழ்ச்சி.

தமிழ் மணம் விருதுகளிலோ அளவற்ற மகிழ்ச்சி:)!

எல்லாவற்றிற்கும் மேலாக., கிடைத்திருக்கும் நல்ல நட்புகள். பின்பலமாய் இருந்து தந்த அன்பு, ஊக்கம். அதுவே இங்கு என்னை உற்சாகமாய் வைத்துள்ளது.

அந்நியப் படுத்துவது போல் நன்றி நன்றி என சொல்வது நமக்குள் தேவையா என்கிற மாதிரியான ஒன்றுபட்டதொரு உணர்வு வந்து விட்ட நிலையிலும் சொல்லாமல் இருக்க முடியுமா?

ஃபாலோயராகத் ப்ளாகரில் தொடரும் 210 பேருக்கும், ரீடரில் தொடரும் 282 பேருக்கும், வாசித்துக் கருத்துக்களைப் பகிர்ந்து வந்திருந்தவருக்கும், முத்துச்சரத்தை எட்டிப் பார்த்துச் சென்றவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

தமிழ்மணம், தமிழிஷ், சங்கமம் திரட்டிகளுக்கும் நன்றிகள்.

முடிவாய்..

விரும்பியதைப் பதிய இத்தனை எளிதாய் நமக்கென ஒரு தளம், அதைப் பிறரிடம் கொண்டு சேர்க்க திரட்டிகளெனும் களம் என இணையம் தந்திருக்கும் வரங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வோம்.

இடைவெளிகள் தவிர்க்க முடியாது போனாலும் எழுதுவதை முழுவதுமாய் நிறுத்தி விடாது இருப்போம்.
நேரம் அனுமதிக்கையில் பதிவதைத் தொடர்வோம். மற்றவரை இயன்றவரை வாசிப்போம். கருத்துக்களைப் பகிர்ந்திடுவோம். ஊக்கம் எனும் உரத்தினால் ஆக்கங்களும் பகிர்வுகளும் பதிவுகளாய் மலரட்டும். வலைப்பூ வனம் செழிக்கட்டும்.

* படம்: லால்பாக் மலர் கண்காட்சியில் நான் எடுத்தது.



பி.கு: கடந்த மாதமே நூறாவது பதிவினைத் தந்து விடுவேன் என நினைத்து எழுதி சேமிப்பில் வைத்திருந்ததை அப்படியே ஒரு எழுத்தும் மாறாமல் பதிந்துள்ளேன், இப்பொழுதும் பதிவுலகம் குறித்த என் ஆசை இதுவாகவே இருப்பதால்!



14 ஜூன் 2010,
யூத்ஃபுல் விகடன் ‘Good Blogs' பரிந்துரையில் இந்தப் பதிவு. நன்றி விகடன்!

161 கருத்துகள்:

  1. சிலருக்கு பதிவிடுவது பொழுதுபோக்கு, ரிலாக்ஸேஷன். சிலருக்கு வடிகால். சிலருக்குத் தம் எழுத்துக்களை ஆவணப்படுத்தும் இடம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.]]

    நிதர்சணம்

    --------------------------
    99க்கும் +1க்கும் வாழ்த்துகள்!!!

    பதிலளிநீக்கு
  2. மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். 100 தான் எழுதியுள்ளீர்களா? ஆச்சரியமாய் உள்ளது! அதற்கு மேலும் எழுதிய மாதிரி தாக்கம் !!

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள்...

    இனிமேலும் கொம்பெனி ஸ்ஸ்ஸ்ஸ்லோவா இல்லாம... கொஞ்சூண்டு ஓவர்டைம் பார்த்து வாரத்துக்கு ரெண்டு அல்லது மூனு வர வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி மேடம். 100... முடிவில்லாமல் தொடர என் அன்பான வாழ்த்துகள். உங்கள் ஸ்டார்ஜன்.

    பதிலளிநீக்கு
  5. உங்க 100 வது பதிவே ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க. 200ம் மேல பாலோயர்ஸ். எதுவுமே சோடை இல்லாத அழகான படைப்புகள். இன்னும் பல நூறு ஆயிரமாக வளர வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. அன்பு ராமல்ச்க்ஷ்மி, இன்னும் நிறைய செய்திகளும் ,கவிதைகளும், அன்பு எண்ணங்களும் இங்கெ பரிமளிக்க என் வாழ்த்துகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களைப் பற்றி நீங்களே அப்ரைஸ் செய்திருப்பது,தன்னம்பிக்கையையும், நேர்மையையும் காண்பிக்கிறது. மனம் நிறைந்த வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துக்கள் சகோதரி.
    சந்தோஷமாக இருக்கிறது.

    \\விரும்பியதைப் பதிய இத்தனை எளிதாய் நமக்கென ஒரு தளம், அதைப் பிறரிடம் கொண்டு சேர்க்க திரட்டிகளெனும் களம் என இணையம் தந்திருக்கும் வரங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வோம்.\\
    உற்சாகத்துடன் தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  8. மிகுந்த வாழ்த்துக்கள் அக்கா!
    இந்த ஊர்சுற்றி ஜோன்சன், திரும்பவும் வலைசுற்ற வந்தாச்சு! :)

    எனக்கான தமிழ்மண விருதுக்கு, உங்களுடைய வாழ்த்துக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.. சதம் அடிச்சாச்சு.. இனி அடிச்சு ஆடுங்க.. ;)

    பதிலளிநீக்கு
  10. 100 அடிச்சுட்டு ஸ்டெடியா போறதுக்கு வாழ்த்துகள். மேலும் 1000 அடிப்பதற்கான அட்வான்ஸ் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. வலையுலகில் உங்களுக்கென ஒரு நிரந்தர இடத்தினை பெற்று இருக்கின்றீர்கள்..!
    வாழ்த்துக்கள்..!

    பதிலளிநீக்கு
  12. இன்னும் பல சென்ச்சுரி போட வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  13. முதல் சதத்திற்கு வாழ்த்துக்கள் அக்கா!!

    பதிலளிநீக்கு
  14. இடைவெளி விட்டு மெதுவாக செஞ்சுரி அடிச்ச வலையுல ராகுல்திராவிட் ராமலக்ஷ்மி மேடம்ன்னு கூட சொல்லலாமோ?

    ஒரு பிளாக்கராக 100

    ஒரு கவிஞராக கதயாசிரியராக விகடன் அங்கீகரித்தது 39 + 1 அடுத்து வரப்போகும் சீற்றமும் சேர்த்து...

    சிறந்த இடுகையாக விகடன் அங்கீகரித்தது 10

    அகநாழிகையில் 1

    இலக்கியபீடத்தில் 1

    உயிரோசையில் 1

    கலை மகளில் 2

    கீற்றுல 2

    திண்ணையில் 34

    தினமணியில் 1

    தேவதையில் 1

    வடக்கு வாசலில் 2

    வார்ப்பில் 20

    மனிதம் மின்னிதழில் 2

    இது தவிர்த்து புகைப்படகலைஞராக 27

    தமிழ் மண விருது பட்டியலில் சமூக விமர்சனம் பிரிவில் முதல் பரிசு, காட்சி படைப்புகள் பிரிவில் 2வது பரிசு

    அப்பாடி சத்தியமாக இந்த வலையுலகின் சிறந்த வலைப்பதிவர் நீங்கதான் மேடம்...

    ******************************************

    ஒரு ஊக்குவிப்பாளராக உங்களின் பின்னூட்டங்கள் புதியவர் பழையவர் என்ற வித்யாசமின்றி அது தவிர்த்து அடித்து கூறுகிறேன் எந்த தளத்திலும் முகச்சுளிப்பு யாருக்குமே வந்திருக்காது அதே சமயம் மிகவும் பிரச்சினைகள் உங்களுக்கு பிடிக்காத இடுகைகளுக்கு கண்டிப்பாக உங்களின் பின்னூட்டங்களை காண இயலாது இந்த ஒரு விஷயத்தை உங்ககிட்ட இருந்து நானும் கத்துட்டேன் இந்த 15 நாட்களாக அதையேதான் ஃபாலோ பண்றேன்...நீங்கள் கண்டிப்பாக வலைப்பதிவுலகத்தின் புதையல்தான்... இதை நான் உங்களின் அனைத்து இடுகைகளையும் வாசித்த வாசகனாய் கூறுகிறேன்...

    வாழ்த்துகள் ராமலக்ஷ்மி மேடம்

    பதிலளிநீக்கு
  15. //சிலருக்கு பதிவிடுவது பொழுதுபோக்கு, ரிலாக்ஸேஷன். சிலருக்கு வடிகால். சிலருக்குத் தம் எழுத்துக்களை ஆவணப்படுத்தும் இடம்//

    சரியாக சொன்னீர்கள்.. சதமடித்ததுக்கு வாழ்த்துக்கள். 100 விரைவில் 1000 ஆகட்டும்.

    பதிலளிநீக்கு
  16. //
    தமிழ் ப்ளாகர் திரட்டி//

    புதுசா இருக்கு திரட்டி ஆனாலும் இந்த திரட்டி என்னையெல்லாம் கண்டுக்கவே இல்லை இருக்கட்டும் இருக்கட்டும் வச்சுக்கிறேன் , அதுவும் சரிதான் நானெல்லாம் ஒரு பிளாக்கரா? காமெடியன்தானே.. :)))

    //அந்நியப் படுத்துவது போல் நன்றி நன்றி என சொல்வது நமக்குள் தேவையா என்கிற மாதிரியான ஒன்றுபட்டதொரு உணர்வு வந்து விட்ட நிலையிலும் சொல்லாமல் இருக்க முடியுமா?//

    இதேதான் மேடம் நானும் நினைக்கிறேன் ஆனாலும் அது சொல்லாட்டினா அடுத்த போஸ்ட்டுக்கு கருத்து சொல்ல வரமாட்டேன்றாங்க ஒரு சிலர் , மிகச்சிலர் அது எதுவும் எதிர்பார்க்காமல் எப்பவும் போல கருத்து சொல்றாங்க..

    பதிலளிநீக்கு
  17. என் அன்பான வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  18. மனதார்ந்த வாழ்த்துக்கள் அக்கா

    ( நானும் டெஸ்ட் தான் ஆடுறேன் )

    விஜய்

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துக்கள் சதத்திற்கு!

    பதிலளிநீக்கு
  20. செஞ்சுரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
    எண்ணங்களை கோர்வையாக உங்களைப்
    போல் எனக்கு எழுத வராது.
    அதனால் ஒரு வரியில்:
    இன்னும் பல நூறு பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  21. உங்கள் எழுத்து முதிர்ச்சியையும் பக்குவத்தையும் காட்டும் இன்னொரு அழகிய பதிவு... சதம் அடித்ததற்கு வாழ்த்துக்கள் தோழி... அந்த 210 ல் நானும் ஒருத்தி என்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் பல அழகிய பதிவுகளை படிக்க காத்துள்ளேன்... நன்றி....

    பதிலளிநீக்கு
  22. இன்னும் பல நூறு சதம் அடிக்க வாழ்த்துகள். :)

    பதிலளிநீக்கு
  23. 100வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

    பதிலளிநீக்கு
  24. மனம் நிறைந்த வாழ்த்துகள் அக்கா.

    பதிலளிநீக்கு
  25. ராமலக்ஷ்மி,100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!

    //ஊக்கம் எனும் உரத்தினால் ஆக்கங்களும் பகிர்வுகளும் பதிவுகளாய் மலரட்டும்.வலைப்பூ செழிக்கட்டும்.//

    பதிவர் அனைவருக்கும் உங்கள் ஊக்கம் நல்ல உரம்தான். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    வலைப்பூ செழிக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  26. வாழ்த்துக்கள் அக்கா.

    //இடைவெளிகள் தவிர்க்க முடியாது போனாலும் எழுதுவதை முழுவதுமாய் நிறுத்தி விடாது இருப்போம். நேரம் அனுமதிக்கையில் பதிவதைத் தொடர்வோம். மற்றவரை இயன்றவரை வாசிப்போம். கருத்துக்களைப் பகிர்ந்திடுவோம். ஊக்கம் எனும் உரத்தினால் ஆக்கங்களும் பகிர்வுகளும் பதிவுகளாய் மலரட்டும். வலைப்பூ வனம் செழிக்கட்டும்.//

    பதிவர்களின் உறுதி மொழியா இதை ஏத்துக்கலாம்.

    பதிலளிநீக்கு
  27. http://encounter-ekambaram-ips.blogspot.com/2010/06/blog-post_13.html

    இந்த பதிவிற்கு உங்கள் பின்னூட்டத்தை வரவேற்கிறேன். நன்றி

    பதிலளிநீக்கு
  28. வாழ்த்துக்கள்ங்க ராமலக்ஷ்மி!! :)

    பதிலளிநீக்கு
  29. வாழ்த்துகள் சகா!

    உங்கள் பன்முக தன்மையில் எப்பவும் எனக்கு பிரமிப்பு இருக்கும்.

    எதை செய்தாலும் அதில் 'நறுக்' இருக்கும். உங்களிடமிருந்து கற்றுக் கொண்டது இது எனலாம்.

    சந்தோசமா இருக்கு. தொடருங்கள்..

    பதிலளிநீக்கு
  30. மனமார்ந்த வாழ்த்துகள் ராமலஷ்மி

    //ஆரம்ப ஆர்வம் வேகம் தாகம் எல்லாம் ஒரு கட்டத்தில் வடிந்து விடுவது எல்லோருக்கும் பொதுவாக நடக்கக் கூடியதே. நானும் அதற்கு விதிவிலக்கல்ல.
    //

    எனக்கு ஆரம்பத்திலயே தோணிடுச்சு. :) ஆரம்பத்தில ரொம்பநாள் அதிகம் பதிவே போடலை நான் :)

    பதிலளிநீக்கு
  31. வாழ்த்துக்கள்
    இன்னும் அதிக உற்சாகத்துடன் தொடருங்கள் .

    பதிலளிநீக்கு
  32. சதம் அடித்தற்கு வாழ்த்துக்கள். சீக்கிரமே வரவிருக்கும் ஆயிராமாவது பதிவிற்கும் இப்பொழுதே வாழ்த்துக்கள் :-).

    பதிலளிநீக்கு
  33. நான் உங்க புகைப்பட ரசிகன்.அதிலும் தேடிபிடித்து பார்ப்பவன்....
    முத்துச்சரத்தின் நூறாவது பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  34. >இடைவெளிகள் தவிர்க்க முடியாது போனாலும் எழுதுவதை முழுவதுமாய் நிறுத்தி விடாது இருப்போம்.

    well said! congratulations!

    பதிலளிநீக்கு
  35. வாழ்த்துக்கள் மேடம்.
    பொதுவாக பேசுவது ஒரு கலை என்று சொல்வார்கள். நன்றி சொல்வது கூட அப்படித்தான். கட்சிக் கூட்டத்திலும், பள்ளி ஆண்டு விழாக்களிலும் கூட நன்றி சொல்வார்கள். நம்ம பழைய பிளாக்கர் டெம்ப்ளேட்டே மாதிரி. ஆனால் நீங்கள் இந்த நூறாவது பதிவின் போது நன்றி சொல்வதைக் கூட மிக நேர்த்தியாக பதிந்திருக்கிறீர்கள்.உங்களுடைய எல்லா பதிவுகளிலும் காணப்படும் நேர்த்தி இதிலும் இருக்கிறது.

    புகைப்பட நிபுணர் இல்லை...ஆர்வலர்தான் என்று சொல்லியிருக்கீங்க. இதுதான் தன்னடக்கம் என்பதா?

    பதிலளிநீக்கு
  36. பல நூறு சதம் அடிக்க வாழ்த்துகள்.

    :)

    பதிலளிநீக்கு
  37. விரும்பியதைப் பதிய இத்தனை எளிதாய் நமக்கென ஒரு தளம், அதைப் பிறரிடம் கொண்டு சேர்க்க திரட்டிகளெனும் களம் என இணையம் தந்திருக்கும் வரங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வோம்.-//

    ரொம்ப அழகா சொல்லி இருக்கிங்க...

    உங்க புகைபடங்களுக்கு நான் ரசிகன்..

    இன்னும் அடித்து ஆட வாழ்த்துக்கள்..
    என்றும் அன்புடன்
    ஜாக்கிசேகர்

    பதிலளிநீக்கு
  38. நூறாவது பதிவிற்கு வாழ்த்துகள் அம்மா..

    பதிலளிநீக்கு
  39. அம்ம்ம்மாடீ...நுறாவது இப்பத்தானா? எப்பமே வந்திருக்குமென்று நினைத்தேனே!
    இருந்தாலும் என் அன்பான வாழ்த்துக்கள்!!!!

    இன்னும் நின்னு அடிச்சு ஆட வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  40. ரொம்ப சந்தோஷம்பா, பதிவுலகு குறித்து அழகாச்சொல்லியிருக்கீங்க.

    சதம அடித்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  41. வாழ்த்துகள் ராமல்ஷ்மி! இன்னும் பல மைல்கல்களை எட்டிட வாழ்த்துகிறேன்! :-)

    பதிலளிநீக்கு
  42. 100 வாழ்த்துகள்.:))

    // 100 தான் எழுதியுள்ளீர்களா? ஆச்சரியமாய் உள்ளது! அதற்கு மேலும் எழுதிய மாதிரி தாக்கம் !!//

    ஆமாங்க எனக்கும்தான். :))

    பதிலளிநீக்கு
  43. ரொம்ப சந்தோஷம் அக்கா. 100 பதிவுகள். ஒவ்வொரு பதிவும் மிக சிறப்பாக செதுக்கப்பட்டு... இன்று 100 பதிவை கடந்து இருக்கிறீர்கள்.

    இந்த பதிவுகளில் எது சிறந்தது எது என்று சொல்ல முடியாத அளவில் அனைத்து பதிவுகளையும் சிறப்பாக அளித்து இருக்கிறீர்கள்.

    முத்துசரத்தில் இந்த 100 நட்சத்திரங்களை பதித்து இருக்கிறீர்கள். வான் உயர வெற்றியாக இந்த 100-வது பதிவு. வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  44. Blogger ப்ரியமுடன்...வசந்த் said...

    ஒரு ஊக்குவிப்பாளராக உங்களின் பின்னூட்டங்கள் புதியவர் பழையவர் என்ற வித்யாசமின்றி அது தவிர்த்து அடித்து கூறுகிறேன் எந்த தளத்திலும் முகச்சுளிப்பு யாருக்குமே வந்திருக்காது.
    ///

    இதை நானும் வழிமொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  45. அருமையாக எழுதி இருக்கீங்க, அதோடு 100 அடித்ததற்கும் வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதி மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  46. நூறாம் இடுகைக்கு வாழ்த்துகள் அக்கா.

    பதிலளிநீக்கு
  47. பதிவுலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் திருப்தி. வாரம் ஓருமுறை எழுதினாலும் செலக்டிவ்வாக தாங்கள் படைப்பினை தந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சென்றவாரம்கூட யூத்புல் விகடனில் தங்களின் கவிதையொன்றை படித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. இதுபோல் தொடர்ந்து தங்களின் பங்களிப்பை (படைப்பாயினும், புகைப்படங்களாயினும்) வலையுலகத்திற்கு தாருங்கள். நானும் காத்திருக்கிறேன். நூறு இடுகைகளை தொட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  48. // மொத்தப் பதிவுகளில் 25 சதவிகிதம் புகைப்படப் பதிவுகள், நிபுணராய் இல்லாவிட்டாலும் ஒரு ஆர்வலராய்..//

    நீங்க தான் நிபுணர் சாதா பாயிண்ட் அன் சூட்ல என்னா கலக்கு கலக்குரீங்க :-))

    சென்சுரிக்கு வாழ்துக்கள் அக்கா :-))

    தொடர்ந்து கலக்குங்க

    பதிலளிநீக்கு
  49. நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்... இன்னும் பல சிகரங்கள் தொட வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  50. // நேரம் அனுமதிக்கையில் பதிவதைத் தொடர்வோம்.//
    இதுதான் உண்மை முதலில் நாம், நம்
    குடும்பம்.நம் வேலை,இதுதான் முக்கியம் ,பாலோயர்,ஹிட்,பின்னூட்டம் இதெல்லாம் பின்னர்தான்,நம் மன திருப்திக்காதான் எழுதுகிறோம் ,எதுக்காகவும் நம்மை மாற்றிக்கொள்ள அவசியமில்லை 100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அக்கா..

    பதிலளிநீக்கு
  51. நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் அக்கா :)

    பதிலளிநீக்கு
  52. செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்...

    //நானறிந்து அற்புதமான பதிவுகள் தந்து கொண்டிருந்த பலர், பல்வேறு காரணங்களால் ஒதுங்கிக் கொண்டு விட்டுள்ளார்கள்.

    அவர்களில் சிலர் அவ்வப்போது மைதானத்தில் தலை காட்டுவதும், சிலபல சிக்ஸர்களை விளாசி மகிழ்வித்து விட்டு ‘மீண்டும் விரைவில் சந்திப்போம்’ என உத்திரவு வாங்கிக் கொள்வதுமாய் இருக்கிறார்கள்.

    சிலருக்கு பதிவிடுவது பொழுதுபோக்கு, ரிலாக்ஸேஷன். சிலருக்கு வடிகால். சிலருக்குத் தம் எழுத்துக்களை ஆவணப்படுத்தும் இடம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்//

    நானும் இப்படித்தான் நினைத்தேன். நீங்கள் அழகான வரிகளில் கொண்டு வந்து விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  53. வாழ்த்துக்கள் தோழர் !
    " விரும்பியதைப் பதிய இத்தனை எளிதாய் நமக்கென ஒரு தளம், அதைப் பிறரிடம் கொண்டு சேர்க்க திரட்டிகளெனும் களம் என இணையம் தந்திருக்கும் வரங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வோம். "
    uruthi kolgiren தோழர் !

    பதிலளிநீக்கு
  54. மிக்க மகிழ்ச்சி.. சொன்ன விதமும் நன்று.
    கோடான கோடி வாழ்த்துகள் :-))

    பதிலளிநீக்கு
  55. முத்துச்சரத்தின் 100 வது சரம் வாழ்த்துகள்.
    மேலும் பூத்துக் குலுங்கட்டும்.

    பதிலளிநீக்கு
  56. அக்கா, சில பேர் ரொம்பக் குறைவா, அளவா, அவசியமாத்தான் பேசுவாங்க; ஆனா சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் ஆணி அடிச்சா மாதிரி இருக்கும். அதேமாதிரி நீங்க நூறுதான் எழுதிருக்கீங்கன்னாலும், அழுத்தமா எல்லார் மனசிலயும் ஆயிரம் பதிவுகளா இருக்கீங்கன்னு புரியுது!!

    மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா!!

    பதிலளிநீக்கு
  57. மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா!

    முத்துக்கள் இன்னும் பலநூறாகப் பெருகட்டும்.

    பதிலளிநீக்கு
  58. இது முத்தான சதம் & சத்தான சதம்.

    இனிய வாழ்த்து(க்)கள்.

    எண்ணிக்கை மேன்மேலும் வளர என் ஆசிகள்.

    நல்லா இருங்க.

    பதிலளிநீக்கு
  59. excellent mam :):):)

    congrats... and keep going... :)

    my best wishes....

    பதிலளிநீக்கு
  60. நூறு மலர்களைத் தொடுத்துக் கோத்த முத்துச் சரம் வாச மிகு மலர்மாலையாக இருக்கிறது. இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  61. நட்புடன் ஜமால் said...
    //சிலருக்கு பதிவிடுவது பொழுதுபோக்கு, ரிலாக்ஸேஷன். சிலருக்கு வடிகால். சிலருக்குத் தம் எழுத்துக்களை ஆவணப்படுத்தும் இடம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.]]

    நிதர்சணம்//

    சொல்லிக் கொண்டே போக இன்னும் உள்ளனவே ஜமால்:)!

    --------------------------
    //99க்கும் +1க்கும் வாழ்த்துகள்!!!//

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தந்திருக்கும் வருகைக்கும் முதல் வாழ்த்துக்கும் என் நன்றிகள்:)!

    பதிலளிநீக்கு
  62. ஆயில்யன் said...
    //வாழ்த்துக்கள் அக்கா :)//

    நன்றிகள் ஆயில்யன்:)!

    பதிலளிநீக்கு
  63. அத்திரி said...
    //வாழ்த்துக்கள் அக்கா//

    நன்றி அத்திரி.

    பதிலளிநீக்கு
  64. மோகன் குமார் said...
    //மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். 100 தான் எழுதியுள்ளீர்களா? ஆச்சரியமாய் உள்ளது! அதற்கு மேலும் எழுதிய மாதிரி தாக்கம் !!//

    உங்கள் கருத்திலும் வாழ்த்திலும் எனக்கும் மகிழ்ச்சி. நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  65. aambalsamkannan said...
    //வாழ்த்துக்க‌ள் மேட‌ம்//

    நன்றி ஆம்பல் சாம்கண்ணன்.

    பதிலளிநீக்கு
  66. நண்டு @நொரண்டு -ஈரோடு said...

    //வாழ்த்துக்கள் .//

    நன்றிகள் நண்டு.

    பதிலளிநீக்கு
  67. ஈரோடு கதிர் said...

    // வாழ்த்துகள்...

    இனிமேலும் கொம்பெனி ஸ்ஸ்ஸ்ஸ்லோவா இல்லாம... கொஞ்சூண்டு ஓவர்டைம் பார்த்து வாரத்துக்கு ரெண்டு அல்லது மூனு வர வாழ்த்துகள்//

    நன்றி கதிர்:))! உங்கள் கருத்தை மனதில் கொண்டு முயற்சி செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  68. Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    // வாழ்த்துகள் ராமலக்ஷ்மி மேடம். 100... முடிவில்லாமல் தொடர என் அன்பான வாழ்த்துகள். உங்கள் ஸ்டார்ஜன்.//

    நன்றிகள் ஸ்டார்ஜன்.

    பதிலளிநீக்கு
  69. அபி அப்பா said...

    // உங்க 100 வது பதிவே ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க. 200ம் மேல பாலோயர்ஸ். எதுவுமே சோடை இல்லாத அழகான படைப்புகள். இன்னும் பல நூறு ஆயிரமாக வளர வாழ்த்துக்கள்!//

    மிக்க நன்றி அபி அப்பா.

    பதிலளிநீக்கு
  70. Truth said...

    // வாழ்த்துக்கள் மேடம்.//

    முன்னரே குறிப்பிட்டிருந்தாலும், மீண்டும் சொல்லிக் கொள்வதில் தவறில்லைதானே:)? முத்துச்சரத்தைத் தொடர ஆரம்பித்த முதல் நால்வரில் ஒருவர் நீங்கள். நூறாவதுக்கு வாழ்த்த வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  71. நாகை சிவா said...

    //Keep Going :)//

    மிக்க நன்றி சிவா.

    பதிலளிநீக்கு
  72. வல்லிசிம்ஹன் said...

    //அன்பு ராமல்ச்க்ஷ்மி, இன்னும் நிறைய செய்திகளும் ,கவிதைகளும், அன்பு எண்ணங்களும் இங்கெ பரிமளிக்க என் வாழ்த்துகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களைப் பற்றி நீங்களே அப்ரைஸ் செய்திருப்பது,தன்னம்பிக்கையையும், நேர்மையையும் காண்பிக்கிறது. மனம் நிறைந்த வாழ்த்துகள் மா.//

    வாழ்த்துக்களுக்கும் ஆசிகளுக்கும், ஆரம்பத்திலிருந்து தந்து வந்த ஊக்கத்துக்கும் என் நன்றிகள் வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  73. அம்பிகா said...

    ***/ வாழ்த்துக்கள் சகோதரி.
    சந்தோஷமாக இருக்கிறது.

    \\விரும்பியதைப் பதிய இத்தனை எளிதாய் நமக்கென ஒரு தளம், அதைப் பிறரிடம் கொண்டு சேர்க்க திரட்டிகளெனும் களம் என இணையம் தந்திருக்கும் வரங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வோம்.\\
    உற்சாகத்துடன் தொடருங்கள்./***

    மிக்க நன்றி அம்பிகா.

    பதிலளிநீக்கு
  74. ஊர்சுற்றி said...

    //மிகுந்த வாழ்த்துக்கள் அக்கா!
    இந்த ஊர்சுற்றி ஜோன்சன், திரும்பவும் வலைசுற்ற வந்தாச்சு! :)//

    நன்றி ஜோன்சன். பதிவில் நான் சொன்ன மாதிரி இடைவெளி விட்டுக் காணாது போனவர்கள் மறுபடி எழுத வருவதைக் கண்டால் சந்தோஷம் மேலிடுகிறது.

    //எனக்கான தமிழ்மண விருதுக்கு, உங்களுடைய வாழ்த்துக்கு நன்றிகள்.//

    இருக்கட்டும். இன்னும் பல பதிவுகள் தந்து மேலும் பல விருதுகள் பெற்றிட மீண்டும் வாழ்த்துக்கள்:)!

    பதிலளிநீக்கு
  75. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    // வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.. சதம் அடிச்சாச்சு.. இனி அடிச்சு ஆடுங்க.. ;)//

    எல்லோரும் இதையேதான் சொல்றாங்க, அடிச்சு ஆடலாம்னு:)! முயற்சி செய்கிறேன். நன்றி முத்துலெட்சுமி.

    பதிலளிநீக்கு
  76. Jeeves said...

    //100 அடிச்சுட்டு ஸ்டெடியா போறதுக்கு வாழ்த்துகள். மேலும் 1000 அடிப்பதற்கான அட்வான்ஸ் வாழ்த்துகள்.//

    நன்றி நன்றி ஜீவ்ஸ்:)!

    பதிலளிநீக்கு
  77. தமிழ் அமுதன் said...

    // வலையுலகில் உங்களுக்கென ஒரு நிரந்தர இடத்தினை பெற்று இருக்கின்றீர்கள்..!
    வாழ்த்துக்கள்..!//

    நன்றி ஜீவன்.

    பதிலளிநீக்கு
  78. goma said...

    // இன்னும் பல சென்ச்சுரி போட வாழ்த்துகிறேன்//

    முதல் பதிவுக்கு முதல் பின்னூட்டமிட்ட உங்கள் வாழ்த்தை வணங்கி ஏற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  79. Mrs.Menagasathia said...

    //முதல் சதத்திற்கு வாழ்த்துக்கள் அக்கா!!//

    நன்றி மேனகா.

    பதிலளிநீக்கு
  80. அமுதா said...

    //வாழ்த்துக்கள் மேடம்//

    நன்றி அமுதா.

    பதிலளிநீக்கு
  81. ப்ரியமுடன்...வசந்த் said...

    // இடைவெளி விட்டு மெதுவாக செஞ்சுரி அடிச்ச வலையுல ராகுல்திராவிட் ராமலக்ஷ்மி மேடம்ன்னு கூட சொல்லலாமோ?//

    :)!

    // ஒரு ஊக்குவிப்பாளராக உங்களின் பின்னூட்டங்கள் புதியவர் பழையவர் என்ற வித்யாசமின்றி அது தவிர்த்து அடித்து கூறுகிறேன் எந்த தளத்திலும் முகச்சுளிப்பு யாருக்குமே வந்திருக்காது அதே சமயம் மிகவும் பிரச்சினைகள் உங்களுக்கு பிடிக்காத இடுகைகளுக்கு கண்டிப்பாக உங்களின் பின்னூட்டங்களை காண இயலாது இந்த ஒரு விஷயத்தை உங்ககிட்ட இருந்து நானும் கத்துட்டேன் இந்த 15 நாட்களாக அதையேதான் ஃபாலோ பண்றேன்...நீங்கள் கண்டிப்பாக வலைப்பதிவுலகத்தின் புதையல்தான்... இதை நான் உங்களின் அனைத்து இடுகைகளையும் வாசித்த வாசகனாய் கூறுகிறேன்...

    வாழ்த்துகள் ராமலக்ஷ்மி மேடம்//

    எனது வரவிருக்கும் படைப்பைக் கூடக் கவனித்துப் பட்டியலிட்டதுடன் என்னென்னவோ சொல்லி புகழ்ந்து விட்டுள்ளீர்களே வசந்த். அத்தனைக்கும் தகுதி இல்லாவிட்டாலும் உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள்.

    மற்றபடி பின்னூட்டங்கள் குறித்த உங்களின் கணிப்புகள் சரியே. ஆரம்ப காலம் போல அதிகநேரம் செலவிட இயலாவிடினும் இயன்றவரை மற்றவர்களை ஊக்கப்படுத்துவதையும் தொடர்ந்து செய்து வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  82. ப்ரியமுடன்...வசந்த் said...

    ***/ //தமிழ் ப்ளாகர் திரட்டி//

    புதுசா இருக்கு திரட்டி ஆனாலும் இந்த திரட்டி என்னையெல்லாம் கண்டுக்கவே இல்லை இருக்கட்டும் இருக்கட்டும் வச்சுக்கிறேன்/***

    இங்கிருந்து கணிசமான பேர் வலைப்பூவுக்கு வந்து செல்வதை ஃபீட்ஜிட் காட்டுகிறது. அதன் மூலமாகவே இழை பிடித்துச் சென்று நானும் அறிந்தேன்.

    பட்டியல் நிரந்தரமென நினைக்கவில்லை. மாறும் போது நீங்களும் நிச்சயம் இடம் பெறுவீர்கள்:)! வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  83. அமைதிச்சாரல் said...

    ***/ //சிலருக்கு பதிவிடுவது பொழுதுபோக்கு, ரிலாக்ஸேஷன். சிலருக்கு வடிகால். சிலருக்குத் தம் எழுத்துக்களை ஆவணப்படுத்தும் இடம்//

    சரியாக சொன்னீர்கள்.. சதமடித்ததுக்கு வாழ்த்துக்கள். 100 விரைவில் 1000 ஆகட்டும்./***

    நன்றி அமைதிச் சாரல்.

    பதிலளிநீக்கு
  84. ஜெஸ்வந்தி said...

    //என் அன்பான வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//

    நன்றி ஜெஸ்வந்தி.

    பதிலளிநீக்கு
  85. வாழ்த்துக்கள்.....


    பின்னூட்டம் இடுவதே எனக்கு விருப்பம் .. அதும் அதிக கை வலியால் பதிவுகளை படிக்கும் போது எதிர் கேள்வியும் சண்டையும் போடமுடியவில்லை...

    பதிலளிநீக்கு
  86. விஜய் said...

    //மனதார்ந்த வாழ்த்துக்கள் அக்கா//

    நன்றி விஜய்.

    // ( நானும் டெஸ்ட் தான் ஆடுறேன் )//

    நிதானமானாலும் நிலைத்து ஆட வாழ்த்துக்கள்:)!

    பதிலளிநீக்கு
  87. தமிழ் பிரியன் said...

    //வாழ்த்துக்கள் சதத்திற்கு!//

    நன்றிகள் தமிழ் பிரியன்:)!

    பதிலளிநீக்கு
  88. James Vasanth said...

    //செஞ்சுரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
    எண்ணங்களை கோர்வையாக உங்களைப்
    போல் எனக்கு எழுத வராது.
    அதனால் ஒரு வரியில்:
    இன்னும் பல நூறு பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.//

    எழுத எழுத வந்து விடும் ஜேம்ஸ். இப்போதுதானே வலைப்பூ ஆரம்பித்துள்ளீர்கள். தொடர்ந்து எழுதி வாருங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன் உங்கள் எழுத்துக்களை வாசிக்க.

    வாழ்த்துக்களுக்கு நன்றி:)!

    பதிலளிநீக்கு
  89. அப்பாவி தங்கமணி said...

    // உங்கள் எழுத்து முதிர்ச்சியையும் பக்குவத்தையும் காட்டும் இன்னொரு அழகிய பதிவு... சதம் அடித்ததற்கு வாழ்த்துக்கள் தோழி... அந்த 210 ல் நானும் ஒருத்தி என்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் பல அழகிய பதிவுகளை படிக்க காத்துள்ளேன்... நன்றி....//

    பாராட்டுக்கும் தொடரும் அன்புக்கும் மிக்க நன்றி புவனா.

    பதிலளிநீக்கு
  90. butterfly Surya said...

    // இன்னும் பல நூறு சதம் அடிக்க வாழ்த்துகள். :)//

    நன்றிகள் சூர்யா.

    பதிலளிநீக்கு
  91. கோபிநாத் said...

    //100வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))//

    வாழ்த்த வந்த அன்பிற்கு என் நன்றிகள் கோபிநாத்.

    பதிலளிநீக்கு
  92. ஹேமா said...

    //மனம் நிறைந்த வாழ்த்துகள் அக்கா.//

    மிக்க நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  93. கோமதி அரசு said...

    ***/ ராமலக்ஷ்மி,100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!/***

    ஆசிகளாய் வந்த வாழ்த்துக்களுக்கு நன்றிம்மா.

    ***/ //ஊக்கம் எனும் உரத்தினால் ஆக்கங்களும் பகிர்வுகளும் பதிவுகளாய் மலரட்டும்.வலைப்பூ செழிக்கட்டும்.//

    பதிவர் அனைவருக்கும் உங்கள் ஊக்கம் நல்ல உரம்தான். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    வலைப்பூ செழிக்க வாழ்த்துக்கள்./***

    பதிவுலகின் பெரிய ப்ளஸ் அதுதானேம்மா. எல்லோரும் மற்றவருக்குத் தவறாமல் இயன்றவரை செய்வோம். உங்கள் வாழ்த்துப்படியே ஆகட்டும்.

    பதிலளிநீக்கு
  94. @ யுவராஜ்,

    நேரம் கிடைக்கையில் அவசியம் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  95. வருண் said...

    //வாழ்த்துக்கள்ங்க ராமலக்ஷ்மி!! :)//

    நன்றி வருண், என் பல பதிவுகளுக்குத் தாங்கள் பகிர்ந்து கொண்ட விரிவான கருத்துக்களுக்கும்:)!

    பதிலளிநீக்கு
  96. பா.ராஜாராம் said...

    //வாழ்த்துகள் சகா!

    உங்கள் பன்முக தன்மையில் எப்பவும் எனக்கு பிரமிப்பு இருக்கும்.

    எதை செய்தாலும் அதில் 'நறுக்' இருக்கும். உங்களிடமிருந்து கற்றுக் கொண்டது இது எனலாம்.

    சந்தோசமா இருக்கு. தொடருங்கள்..//

    உங்கள் வாழ்த்தும் பாராட்டும் எனக்கும் சந்தோஷம் பா ரா. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  97. சின்ன அம்மிணி said...

    // மனமார்ந்த வாழ்த்துகள் ராமலஷ்மி//

    நன்றி அம்மிணி.

    *** //ஆரம்ப ஆர்வம் வேகம் தாகம் எல்லாம் ஒரு கட்டத்தில் வடிந்து விடுவது எல்லோருக்கும் பொதுவாக நடக்கக் கூடியதே. நானும் அதற்கு விதிவிலக்கல்ல.//

    எனக்கு ஆரம்பத்திலயே தோணிடுச்சு. :) ஆரம்பத்தில ரொம்பநாள் அதிகம் பதிவே போடலை நான் :)/***

    நானும் கவனித்திருக்கிறேன். அப்போது ரீடரில் தொடரும் வசதி பற்றியெல்லாம் தெரியாது. துளசிமேடம் பதிவிலிருந்து இழை பிடித்து உங்கள் வலைப்பூவுக்கு
    வந்து வந்து ஏமாந்து திரும்புவேன்:))! இப்போது பரவாயில்லை உங்கள் வேகம். Keep it up:)!

    பதிலளிநீக்கு
  98. cp senthilkumar said...

    // வாழ்த்துக்கள்//

    நன்றி செந்தில் குமார்.

    பதிலளிநீக்கு
  99. Mahi_Granny said...

    //வாழ்த்துக்கள்
    இன்னும் அதிக உற்சாகத்துடன் தொடருங்கள் .//

    உற்சாகம் தருகிறது உங்கள் வாழ்த்து. நன்றி முதல் வருகைக்கும்.

    பதிலளிநீக்கு
  100. இராமசாமி கண்ணண் said...

    //சதம் அடித்தற்கு வாழ்த்துக்கள். சீக்கிரமே வரவிருக்கும் ஆயிராமாவது பதிவிற்கும் இப்பொழுதே வாழ்த்துக்கள் :-).//

    ஆயிரமா...? அதுவும் சீக்கிரமா...?

    சரி உங்கள் வாக்கு பலிக்கட்டும். நன்றி இராமசாமி கண்ணன்.

    பதிலளிநீக்கு
  101. ஆறாக‌ ஓடும் எழுத்தும்
    நூறாக‌ ப‌லே‌ ப‌திவுக‌ளும்
    ஜோராக‌வே ப‌ட‌ங்க‌ளும்
    கூராக‌ ந‌ற்சிந்த‌னையும்

    தாராள‌மாய் ம‌ன‌ம்விட்டு
    பாராட்டும் ந‌ற்குண‌மும்
    சேராம‌ல் சேர்ந்த‌ விந்தை
    ஊராரை உற்றார் ஆக்கும்

    நாராலான‌ மாலை அல்ல‌
    யாராலும் கோர்க்க‌ இய‌லா
    ஓராயிர‌ம் ந‌ல்முத்துக்க‌ளை
    சீராக‌ கோர்த்த‌ முத்துச‌ர‌ம்!

    என்றும் அன்புட‌ன்
    த‌மாம் பாலா

    பதிலளிநீக்கு
  102. மேலும் மேலும் சதமடிக்க வாழ்த்துக்கள், ராமலக்ஷ்மி...

    பதிலளிநீக்கு
  103. இப்போதுதான் நூறாவது பதிவா? ஆச்சர்யம்தான்.. வாழ்த்துக்கள் வசந்தின் பாராட்டில் இருந்த குறிப்பை மனதில் வாங்கிக் கொண்டேன்...மறுபடியும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  104. அச்சச்சோ கொஞ்சம் லேட்டாயிடுச்சு!பூங்கொத்துடன் வாழ்த்துக்கள் 100க்கும் உங்கள் அடித்து ஆடும் திறமைக்கும்!

    பதிலளிநீக்கு
  105. தாராபுரத்தான் said...

    //நானும் வாழ்த்துகிறேன்.//

    தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  106. T.V.ராதாகிருஷ்ணன் said...

    // வாழ்த்துகள்//

    நன்றிகள் டி வி ஆர் சார்!

    பதிலளிநீக்கு
  107. சி. கருணாகரசு said...

    // நான் உங்க புகைப்பட ரசிகன்.அதிலும் தேடிபிடித்து பார்ப்பவன்....//

    கேட்க சந்தோஷமாய் உள்ளது:)!

    //முத்துச்சரத்தின் நூறாவது பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி கருணாகரசு.

    பதிலளிநீக்கு
  108. அப்பாதுரை said...

    ***/இடைவெளிகள் தவிர்க்க முடியாது போனாலும் எழுதுவதை முழுவதுமாய் நிறுத்தி விடாது இருப்போம்.

    well said! congratulations!/***

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

    பதிலளிநீக்கு
  109. திருவாரூரிலிருந்து சரவணன் said...

    // வாழ்த்துக்கள் மேடம்.
    பொதுவாக பேசுவது ஒரு கலை என்று சொல்வார்கள். நன்றி சொல்வது கூட அப்படித்தான். கட்சிக் கூட்டத்திலும், பள்ளி ஆண்டு விழாக்களிலும் கூட நன்றி சொல்வார்கள். நம்ம பழைய பிளாக்கர் டெம்ப்ளேட்டே மாதிரி. ஆனால் நீங்கள் இந்த நூறாவது பதிவின் போது நன்றி சொல்வதைக் கூட மிக நேர்த்தியாக பதிந்திருக்கிறீர்கள்.உங்களுடைய எல்லா பதிவுகளிலும் காணப்படும் நேர்த்தி இதிலும் இருக்கிறது.//

    நன்றி சரவணன். உங்கள் கருத்துக்களை நீங்கள் பகிர்ந்திடும் விதத்தை நானும் தொடர்ந்து ரசித்து வருகிறேன்:)!

    // புகைப்பட நிபுணர் இல்லை...ஆர்வலர்தான் என்று சொல்லியிருக்கீங்க. இதுதான் தன்னடக்கம் என்பதா?//

    உண்மையைதான் சொல்லியிருக்கிறேன்:)! வல்லுநர் அல்ல, இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.

    பதிலளிநீக்கு
  110. ஷர்புதீன் said...

    // பல நூறு சதம் அடிக்க வாழ்த்துகள்.

    :)//

    நன்றி ஷர்புதீன்.

    பதிலளிநீக்கு
  111. ஜாக்கி சேகர் said...

    ***/விரும்பியதைப் பதிய இத்தனை எளிதாய் நமக்கென ஒரு தளம், அதைப் பிறரிடம் கொண்டு சேர்க்க திரட்டிகளெனும் களம் என இணையம் தந்திருக்கும் வரங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வோம்.-//

    ரொம்ப அழகா சொல்லி இருக்கிங்க.../***

    நன்றி.

    // உங்க புகைபடங்களுக்கு நான் ரசிகன்..//

    பலரும் இப்படி இங்கு சொல்லியிருப்பது வியப்பாகவும் அதே நேரம் மகிழ்வாகவும் உள்ளது:)!

    //இன்னும் அடித்து ஆட வாழ்த்துக்கள்..
    என்றும் அன்புடன்
    ஜாக்கிசேகர்//

    உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  112. சென்ஷி said...

    // நூறாவது பதிவிற்கு வாழ்த்துகள் அம்மா..//

    மிக்க நன்றி சென்ஷி:)!

    பதிலளிநீக்கு
  113. நானானி said...

    //அம்ம்ம்மாடீ...நுறாவது இப்பத்தானா? எப்பமே வந்திருக்குமென்று நினைத்தேனே!
    இருந்தாலும் என் அன்பான வாழ்த்துக்கள்!!!!

    இன்னும் நின்னு அடிச்சு ஆட வாழ்த்துகிறேன்.//

    வாங்க நானானி. வலைப்பூ என்பதே உங்கள் நைன்வெஸ்ட் மூலமாகதான் எனக்கு அறிமுகமானது. ஆசிகளாய் வந்திருக்கும் உங்கள் வாழ்த்துக்களுக்கு என் வணக்கங்கள்:)!

    பதிலளிநீக்கு
  114. SurveySan said...

    // congrats madam! :)//

    நன்றி சர்வேசன், என் பல படைப்புகளுக்கு மூலமாக இருந்த உங்கள் பதிவுகளுக்கும் சேர்த்து:)!

    பதிலளிநீக்கு
  115. புதுகைத் தென்றல் said...

    // ரொம்ப சந்தோஷம்பா, பதிவுலகு குறித்து அழகாச்சொல்லியிருக்கீங்க.

    சதம அடித்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்//

    தோழி உங்கள் வாழ்த்தில் உள்ளம் குளிர்ந்தது. நன்றிகள் தென்றல்.

    பதிலளிநீக்கு
  116. சந்தனமுல்லை said...

    //வாழ்த்துகள் ராமல்ஷ்மி! இன்னும் பல மைல்கல்களை எட்டிட வாழ்த்துகிறேன்! :-)//

    கடந்து வந்த பதிவுகளில் என் கூடவே வந்த பலரில் நீங்களும் ஒருவர். உங்கள் வாழ்த்துக்கள் நிச்சயம் அடுத்த மைல்கல்லை எட்டிட உதவும். நன்றி முல்லை:)!

    பதிலளிநீக்கு
  117. 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

    ***// 100 வாழ்த்துகள்.:))

    // 100 தான் எழுதியுள்ளீர்களா? ஆச்சரியமாய் உள்ளது! அதற்கு மேலும் எழுதிய மாதிரி தாக்கம் !!//

    ஆமாங்க எனக்கும்தான். :))//***

    அறியும் போது இன்னும் பொறுப்பு கூடுகிற மாதிரி ஒரு உணர்வு. நல்லது. நன்றி சங்கர்.

    பதிலளிநீக்கு
  118. கடையம் ஆனந்த் said...

    //ரொம்ப சந்தோஷம் அக்கா. 100 பதிவுகள். ஒவ்வொரு பதிவும் மிக சிறப்பாக செதுக்கப்பட்டு... இன்று 100 பதிவை கடந்து இருக்கிறீர்கள்.

    இந்த பதிவுகளில் எது சிறந்தது எது என்று சொல்ல முடியாத அளவில் அனைத்து பதிவுகளையும் சிறப்பாக அளித்து இருக்கிறீர்கள்.

    முத்துசரத்தில் இந்த 100 நட்சத்திரங்களை பதித்து இருக்கிறீர்கள். வான் உயர வெற்றியாக இந்த 100-வது பதிவு. வாழ்த்துக்கள் அக்கா.//

    தொடர்ந்து வாசித்து வரும் உங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஆனந்த்! பதிவுகளுக்கிடையேயான இடைவெளிகள் சற்று அதிகமானால் பலமுறை ‘அடுத்த பதிவு எப்போது’ எனப் பின்னூட்டமிட்டு தொடர்ந்து பதிய உத்வேகமும் தந்திருக்கிறீர்கள்:)! அதற்கும் இப்போது என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  119. சசிகுமார் said...

    //அருமையாக எழுதி இருக்கீங்க, அதோடு 100 அடித்ததற்கும் வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதி மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா.//

    மிக்க நன்றி சசிகுமார்.

    பதிலளிநீக்கு
  120. எம்.எம்.அப்துல்லா said...

    //நூறாம் இடுகைக்கு வாழ்த்துகள் அக்கா.//

    மிக்க நன்றி அப்துல்லா.

    பதிலளிநீக்கு
  121. க.பாலாசி said...

    // பதிவுலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் திருப்தி.//

    சரியாகச் சொன்னீர்கள். ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பங்களும் அவரவருக்கு சரியானவையே. மற்றவரால் மதிக்கப் பட வேண்டியவையே. வேகமாய் வரிசையாய் பதிபவர்களைக் கண்டு எனக்குப் பிரமிப்புதான்:)!

    // வாரம் ஓருமுறை எழுதினாலும் செலக்டிவ்வாக தாங்கள் படைப்பினை தந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சென்றவாரம்கூட யூத்புல் விகடனில் தங்களின் கவிதையொன்றை படித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. இதுபோல் தொடர்ந்து தங்களின் பங்களிப்பை (படைப்பாயினும், புகைப்படங்களாயினும்) வலையுலகத்திற்கு தாருங்கள். நானும் காத்திருக்கிறேன். நூறு இடுகைகளை தொட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்..//

    வாழ்த்துக்களுக்கும், விகடன் கவிதைக்கான பாராட்டுக்கும் நன்றிகள் பாலாசி.

    பதிலளிநீக்கு
  122. கார்த்திக் said...

    ***/ // மொத்தப் பதிவுகளில் 25 சதவிகிதம் புகைப்படப் பதிவுகள், நிபுணராய் இல்லாவிட்டாலும் ஒரு ஆர்வலராய்..//

    நீங்க தான் நிபுணர் சாதா பாயிண்ட் அன் சூட்ல என்னா கலக்கு கலக்குரீங்க :-))//***

    நீங்க சொன்னா சரி. DSLR-ன் எடையும் பயன்படுத்தும் முறைகளும் என்னை யோசிக்க வைக்கின்றன. P&S-லேயே high end பயன்பாட்டுடன் உள்ளவற்றைப் பரிசீலித்து வருகிறேன் என்பது உங்களுக்கான கூடுதல் தகவல்:)!

    //சென்சுரிக்கு வாழ்துக்கள் அக்கா :-))

    தொடர்ந்து கலக்குங்க//

    நன்றி கார்த்திக்.

    பதிலளிநீக்கு
  123. வித்யா said...

    // வாழ்த்துகள்:))//

    வாங்க வித்யா:)! நன்றி!

    பதிலளிநீக்கு
  124. குடந்தை அன்புமணி said...

    // நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்... இன்னும் பல சிகரங்கள் தொட வாழ்த்துகள்...//

    மிக்க நன்றி அன்புமணி.

    பதிலளிநீக்கு
  125. தமிழ் வெங்கட் said...

    ***/ // நேரம் அனுமதிக்கையில் பதிவதைத் தொடர்வோம்.//
    இதுதான் உண்மை முதலில் நாம், நம்
    குடும்பம்.நம் வேலை,இதுதான் முக்கியம் ,பாலோயர்,ஹிட்,பின்னூட்டம் இதெல்லாம் பின்னர்தான்,நம் மன திருப்திக்காதான் எழுதுகிறோம் ,எதுக்காகவும் நம்மை மாற்றிக்கொள்ள அவசியமில்லை 100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அக்கா../***

    சரியாகச் சொன்னீர்கள். ‘ஆத்ம திருப்தி’ அதுவே முதலில். கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  126. RAMYA said...

    //நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் அக்கா :)//

    மிக்க நன்றி ரம்யா:)!

    பதிலளிநீக்கு
  127. கண்ணா.. said...

    // செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்...//

    நன்றி கண்ணா.

    ***/ //நானறிந்து அற்புதமான பதிவுகள் தந்து கொண்டிருந்த பலர், பல்வேறு காரணங்களால் ஒதுங்கிக் கொண்டு விட்டுள்ளார்கள்.

    அவர்களில் சிலர் அவ்வப்போது மைதானத்தில் தலை காட்டுவதும், சிலபல சிக்ஸர்களை விளாசி மகிழ்வித்து விட்டு ‘மீண்டும் விரைவில் சந்திப்போம்’ என உத்திரவு வாங்கிக் கொள்வதுமாய் இருக்கிறார்கள்.

    சிலருக்கு பதிவிடுவது பொழுதுபோக்கு, ரிலாக்ஸேஷன். சிலருக்கு வடிகால். சிலருக்குத் தம் எழுத்துக்களை ஆவணப்படுத்தும் இடம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்//

    நானும் இப்படித்தான் நினைத்தேன். நீங்கள் அழகான வரிகளில் கொண்டு வந்து விட்டீர்கள்//***

    நானறிந்தவர்கள் பெயரினைக் குறிப்பிடவில்லை. ஒவ்வொருவர் அனுபவத்துக்கும் இது ஒத்துப்போகுமென்றும் தெரியும்:)!

    பதிலளிநீக்கு
  128. நியோ said...

    // வாழ்த்துக்கள் தோழர் !
    " விரும்பியதைப் பதிய இத்தனை எளிதாய் நமக்கென ஒரு தளம், அதைப் பிறரிடம் கொண்டு சேர்க்க திரட்டிகளெனும் களம் என இணையம் தந்திருக்கும் வரங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வோம். "
    uruthi kolgiren தோழர் !//

    முதல் வருகைக்கும், ஒத்த கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  129. "உழவன்" "Uzhavan" said...

    // மிக்க மகிழ்ச்சி.. சொன்ன விதமும் நன்று.
    கோடான கோடி வாழ்த்துகள் :-))//

    நன்றிகள் உழவன்.

    பதிலளிநீக்கு
  130. மாதேவி said...

    // முத்துச்சரத்தின் 100 வது சரம் வாழ்த்துகள்.
    மேலும் பூத்துக் குலுங்கட்டும்.//

    நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  131. ஹுஸைனம்மா said...

    // அக்கா, சில பேர் ரொம்பக் குறைவா, அளவா, அவசியமாத்தான் பேசுவாங்க; ஆனா சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் ஆணி அடிச்சா மாதிரி இருக்கும். அதேமாதிரி நீங்க நூறுதான் எழுதிருக்கீங்கன்னாலும், அழுத்தமா எல்லார் மனசிலயும் ஆயிரம் பதிவுகளா இருக்கீங்கன்னு புரியுது!!

    மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா!!//

    அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஹுஸைனம்மா.

    பதிலளிநீக்கு
  132. சுந்தரா said...

    // மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா!

    முத்துக்கள் இன்னும் பலநூறாகப் பெருகட்டும்.//

    நன்றி சுந்தரா. அப்படியே ஆகட்டும்.

    பதிலளிநீக்கு
  133. துளசி கோபால் said...

    // இது முத்தான சதம் & சத்தான சதம்.

    இனிய வாழ்த்து(க்)கள்.

    எண்ணிக்கை மேன்மேலும் வளர என் ஆசிகள்.

    நல்லா இருங்க.//

    என்னையும் சேர்த்து எத்தனையோ பதிவர்களுக்கு மானசீக குருவாகிய உங்கள் ஆசிகளும் வாழ்த்துகளும் இந்த நேரத்தில் எனக்கு அவசியம் தேவை. மிக்க நன்றி மேடம்.

    சொல்லித் தெரிய வேண்டியதே இல்லை அத்தனை பதிவர்களுக்கும் எழுதும் உத்வேகத்தைத் தந்து கொண்டிருப்பது தாங்கள்தான் என்பதை.

    பதிலளிநீக்கு
  134. நசரேயன் said...

    // வாழ்த்துக்கள்//

    நன்றி நசரேயன்.

    பதிலளிநீக்கு
  135. ரசிகன்! said...

    //excellent mam :):):)

    congrats... and keep going... :)

    my best wishes....//

    நன்றி ரசிகன்:)!

    பதிலளிநீக்கு
  136. மனோ சாமிநாதன் said...

    //நூறு மலர்களைத் தொடுத்துக் கோத்த முத்துச் சரம் வாச மிகு மலர்மாலையாக இருக்கிறது. இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!!//

    மிகவும் நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  137. malar said...

    // வாழ்த்துக்கள்.....//

    நன்றி மலர்.

    // பின்னூட்டம் இடுவதே எனக்கு விருப்பம் .. அதும் அதிக கை வலியால் பதிவுகளை படிக்கும் போது எதிர் கேள்வியும் சண்டையும் போடமுடியவில்லை...//

    எதிர் கேள்வி கேளுங்க. சண்டையெல்லாம் போடாதீங்க:))!
    கைவலிக்குக் காரணம் நீங்கள் கணினி உபயோகிக்கிற போஸ்ச்சராக இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதையும் சற்று கவனியுங்கள். இந்தப் பிரச்சனை முன்னர் எனக்கும் இருந்திருக்கிறது. ஏன், பலருக்கும்:)!

    பதிலளிநீக்கு
  138. Dammam Bala (தமாம் பாலா) said...

    // ஆறாக‌ ஓடும் எழுத்தும்
    நூறாக‌ ப‌லே‌ ப‌திவுக‌ளும்
    ஜோராக‌வே ப‌ட‌ங்க‌ளும்
    கூராக‌ ந‌ற்சிந்த‌னையும்

    தாராள‌மாய் ம‌ன‌ம்விட்டு
    பாராட்டும் ந‌ற்குண‌மும்
    சேராம‌ல் சேர்ந்த‌ விந்தை
    ஊராரை உற்றார் ஆக்கும்

    நாராலான‌ மாலை அல்ல‌
    யாராலும் கோர்க்க‌ இய‌லா
    ஓராயிர‌ம் ந‌ல்முத்துக்க‌ளை
    சீராக‌ கோர்த்த‌ முத்துச‌ர‌ம்!

    என்றும் அன்புட‌ன்
    த‌மாம் பாலா//

    அருவியெனப் பொங்கி வந்த அழகான பாடலுக்கும், பாராட்டின் பின் இருக்கும் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பாலா:)!

    பதிலளிநீக்கு
  139. Ammu said...

    // மேலும் மேலும் சதமடிக்க வாழ்த்துக்கள், ராமலக்ஷ்மி...//

    நன்றி அம்மு. உனது வாழ்த்தினை நம் அத்தனை பள்ளி, கல்லூரி தோழிகளின் நல்வாழ்த்துக்களாக நினைத்து அக மகிழ்கிறேன். உண்மை.

    பதிலளிநீக்கு
  140. ஸ்ரீராம். said...

    // இப்போதுதான் நூறாவது பதிவா? ஆச்சர்யம்தான்.. வாழ்த்துக்கள் வசந்தின் பாராட்டில் இருந்த குறிப்பை மனதில் வாங்கிக் கொண்டேன்...மறுபடியும் வாழ்த்துக்கள்.//

    நன்றி ஸ்ரீராம். நல்லது:)!

    பதிலளிநீக்கு
  141. அன்புடன் அருணா said...

    //அச்சச்சோ கொஞ்சம் லேட்டாயிடுச்சு!பூங்கொத்துடன் வாழ்த்துக்கள் 100க்கும் உங்கள் அடித்து ஆடும் திறமைக்கும்!//

    உங்கள் பூங்கொத்துக்காகக் காத்திருந்தேன்:)! நன்றி அருணா.

    பதிலளிநீக்கு
  142. அமைதி அப்பா said...

    //வாழ்த்துக்கள் மேடம்//

    நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  143. தமிழ் மணத்தில் வாக்களித்த 18 பேருக்கும், தமிழிஷில் வாக்களித்த 20 பேருக்கும் என் நன்றிகள் நன்றிகள்:)!!

    பதிலளிநீக்கு
  144. தாமதமான வாழ்த்துக்கள் :-) மெதுவா மெதுவா வந்து நூறை தொட்டுட்டீங்க! :-) பெரிய விஷயம் தான்

    "தவிரவும் ரீடரில் தொடரும் 70 பேருக்கும்,"

    உங்களை ரீடரில் 70 பேர் தொடரவில்லை 282 பேர் தொடருகிறார்கள்.. :-) இது உத்தேசமான எண்ணிக்கை தான் கண்டிப்பாக இதை விட அதிகமாக இருக்கும்.

    இப்பவும் நான் கூறுவது குடும்பம் வேலை நண்பர்கள் இவற்றிக்கு பிறகு வலைப்பதிவை வைத்துக்கொள்ளுங்கள்..எந்த வித சுணக்கமும் வராமல் வெறுப்பும் வராமல் உற்சாகமாக எழுத முடியும் எப்போதும் போல.

    மேலும் சிறப்பான இடுகைகளை தர அன்பான வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  145. @ கிரி,

    //தாமதமான வாழ்த்துக்கள் :-) மெதுவா மெதுவா வந்து நூறை தொட்டுட்டீங்க! :-) பெரிய விஷயம் தான்//

    தாமதம் இல்லை. மேலும் உங்கள் வாழ்த்துக்கள் எப்போதும் எனக்கு உண்டெனத் தெரியும். ரொம்ப 'மெதுவா மெதுவா’-தான்:))!

    //"தவிரவும் ரீடரில் தொடரும் 70 பேருக்கும்,"

    உங்களை ரீடரில் 70 பேர் தொடரவில்லை 282 பேர் தொடருகிறார்கள்.. :-) இது உத்தேசமான எண்ணிக்கை தான் கண்டிப்பாக இதை விட அதிகமாக இருக்கும்.//

    ப்ளாகரில் தொடருபவர் எண்ணிக்கை டிஃபால்டாக ரீடரில் சேர்ந்து விடுமென நினைத்து அப்படிக் கூறினேன். திருத்திட்டால் போயிற்று:)! இன்னும் ‘தெம்பு’ கூடுமே:)!

    //இப்பவும் நான் கூறுவது குடும்பம் வேலை நண்பர்கள் இவற்றிக்கு பிறகு வலைப்பதிவை வைத்துக்கொள்ளுங்கள்..எந்த வித சுணக்கமும் வராமல் வெறுப்பும் வராமல் உற்சாகமாக எழுத முடியும் எப்போதும் போல.//

    உண்மைதான். தமிழ் வெங்கட் அவர்களும் இதே கருத்தைத் தெரிவித்திருக்கிறார் பாருங்கள். அதைதான் ‘நேரம் அனுமதிக்கையில்’ என நானும் குறிப்பிட்டுள்ளேன். பதிவர்கள் எல்லோரும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய ஒன்று. நீங்கள் சொல்வது போல அப்போதுதான் உற்சாகமாய் பதிவதைத் தொடர இயலும். உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி கிரி.

    பதிலளிநீக்கு
  146. வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  147. வாழ்த்துகள் ராமலஷ்மி! மேலும் மேலும் சாதனை புரிய வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  148. மனமார்ந்த வாழ்த்துகளை (மிகத் தாமதமாக) தெரிவித்துக் கொள்கிறேன், ராமலக்ஷ்மி!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin