வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

நாகணவாய் - பறவை பார்ப்போம் (பாகம் 17)

#1
காட்டு மைனா
வேறு பெயர்: காட்டு  நாகணவாய்
தெற்கு ஆசியாவின் வெப்ப மண்டலப் பகுதிகளான இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பர்மா மற்றும் இந்தோநேஷியாவில் சாதாரணமாகத் தென்படுகிற பறவை காட்டு மைனா. மரங்களில் அடையும், கிளைகளைப் பற்றி அமரும் 'பாசரைன்' (Passerine) வகைப் பறவைகளுள் ஒன்றே மைனா.


வனப் பகுதிகளிலும் வயல்வெளிகளிலும் பார்க்கலாம். குறிப்பாக நீர் நிலைகளுக்கு அருகாமையில் நெல் சாகுபடியான வயல் பக்கங்களில் அதிகமாகத் தென்படும்.

#2
ஆங்கிலப் பெயர்: Jungle myna

ஒன்பது அங்குல உயரத்தில் சாம்பல்  நிறத்தில் இருக்கும்.
தலையும் சிறகுகளும் சற்று அழுத்தமான நிறத்தில் இருக்கும். சிறகுகளில் இருக்கும் வெண்ணிறக் கோடுகள் பறக்கும் போது தெரியும். வாலின் நுனி வெண்மையாக இருக்கும். தலையின் நெற்றிப் பகுதியில் குஞ்சம் போன்ற குடுமி தூக்கிக் கொண்டு நிற்கும்.


#3
உயிரியல் பெயர்: Acridotheres fuscus
இவை தம் கூடுகளை மரப் பொந்துகளில் அமைக்கின்றன. பனை மரங்களையே பெரும்பாலும் தேர்ந்தெடுக்கின்றன. மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடுகின்றன.

#4  
அலகுகளும் உறுதியான கால்களும் பளீர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். கண்களைச் சுற்றி திறந்த தோல் வரியாக இருக்காது. தென்னிந்தியாவில் காணப்படும் மைனாக்களின் கண் கருவிழிகள் நீல நிறத்தில் இருக்கும். ஆண் பெண் பறவைகள் தோற்றத்தில் ஒரே போலவே இருக்குமாயினும் வளர்ந்த குஞ்சுகள் அதிக பழுப்பு வண்ணத்தில் இருக்கும்.

சிறிய அளவிலிருந்து நடுத்தர அளவு வரையிலான ஸ்டார்லிங் வகைப் பறவைகள் யாவும் போலவே காட்டு மைனாவும் அனைத்துண்ணிகளாக, பழங்கள், தானியங்கள் மற்றும் பூச்சிகளை உண்டு உயிர் வாழ்கின்றன.

ஆசியாவின் பல பகுதிகளில் இவை செல்லப் பறவைகளாகவும் வளர்க்கப்படுகின்றன, குறிப்பாக இவற்றின் பேசும் மற்றும் பாடும் திறனுக்காக.

மைனாக்களில் பல வகைகள் இருக்கின்றன என்றாலும் நமக்கு அடிக்கடி தரிசனம் கொடுப்பவை இந்திய மைனாக்களும் காட்டு மைனாக்களும். 

#5
இந்திய மைனா
அறிவியல் பெயர்: Acridotheres tristis

இரண்டுக்குமான வித்தியாசம் என்றால் Common Myna அல்லது Indian Myna என அறியப்படும் பறவைகளுக்குக் கண்களைச் சுற்றி அலகு மற்றும் கால்களின் நிறத்தை ஒத்து மஞ்சள் நிற வளைவுகள் இருக்கும். காட்டு மைனாக்களுக்கு அது கிடையாது. இந்திய மைனாவின் அறிவியல் பெயர்: Acridotheres tristis

முன்பிருந்த வீட்டில் எடுத்த படங்கள் மூன்றின் கொலாஜ். இதில்
மேலிருக்கும் காட்டு மைனாவின் இரண்டு படங்கள்.. பல பத்திரிகைகளில் வெளியானவை.  கீழே இருப்பது இந்திய மைனா!
இந்திய நாகணவாய்
***

தகவல்கள்: விக்கிப்பீடியா உட்பட  இணையத்தில் சேகரித்துத் தமிழாக்கம் செய்தவை.
படங்கள் 1- 5என் வீட்டுத் தோட்டத்தில்.. - (பாகம் 21)


16 கருத்துகள்:

  1. காட்டு மைனா,இந்திய மைனா கண்டு கொண்டோம்.
    மைனாக்கள் எங்கள் வீட்டிற்கும் வருகின்றன.

    பதிலளிநீக்கு
  2. டெல்லியில் எங்கள் வீட்டுக்குப் பின்புறமுள்ள பச்சைச் சதுரவெளியில் நாட்டு மைனாக்கள் நிறையக் கண்டிருக்கிறேன். பால்கனியில் ஏதாவது தானியம் போட்டால் கொத்தித்திங்க வரும். காட்டுமைனாவை இப்போதுதான் கவனிக்கிறேன். பெங்களூருவில் நான் சுற்றும் இடங்களில் எங்காவது கண்ணில்படுகிறதா எனப் பார்க்கவேண்டும். முருங்கைமரக்கிளையில் அமர்ந்திருக்கும் பறவைப் படம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருங்கை மரத்தில் அமர்ந்திருப்பது காட்டு மைனா. தங்கள் பகிர்வுக்கு நன்றி.

      நீக்கு
  3. கொஞ்சும் கிளி குருவி மைனாவே ..... மைனாக்கள் கிளிகள் போல் பேசும் திறன் உள்ளதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், பழக்கப்படுத்தினால் காட்டு மைனாக்கள் பேசவும் பாடவும் செய்கின்றனவாம். காட்டு மைனாவைப் போலவே ஆனால் சற்றே குட்டையான வாலைக் கொண்ட மலை மைனாக்கள் நன்றாகப் பாடக் கூடியவை.

      நீக்கு
  4. பதில்கள்
    1. பேசுமாம். தகவலுக்காக, இணையத்தில் மைனாக்கள் பேசுகிற காணொளிகள் கிடைக்கின்றன. நன்றி ராஜி.

      நீக்கு
  5. பழைய வீட்டில் மைனாக்களின் சத்தம் சண்டை, விளையாட்டு எல்லாம் பார்க்கலாம், கேட்கலாம். இங்கு எப்போதாவது வரும்.பிஸ்கட் தூள், ரஸ்க் தூள் வைத்தால் உடனே வந்து காலி செய்து விடும்.

    காட்டு நாகணவாய் , இந்திய நாகணவாய் தெரிந்து கொண்டோம்.
    படங்கள் அழகு, துல்லியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். மைனாக்கள் அதிகமாக சத்தமிடும். உங்களது பழைய வீட்டில் பலவிதப் பறவைகள் வருமே. இங்கு இப்போது தூக்கணாங்குருவிகளின் இனப்பெருக்கக் காலம். 4,5 கூடுகள் கட்டியுள்ளன. அவற்றைக் கவனிப்பது சுவாரஸ்யமான பொழுதுபோக்காக உள்ளது.

      நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  6. ஒன்பது அங்குல உயரம், நெற்றியில் குஞ்சம், அழுத்தமான நிறம், வாலின் நுணி வெண்மை என வர்ணிப்பது, காத்திருந்து காத்திருந்து புகைப்படம் எடுப்பது, தகவல்களைத் திரட்டுவது...,
    உங்களின் பொறுமைக்கும், ஆர்வத்துக்கும், உழைப்புக்கும் பாராட்டுக்கள்.

    அடுத்தமுறை பார்க்க வேண்டும் பறக்கும்போது வெண்ணிறக் கோடுகள் தெரிகிறதா என்று :-).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. கடந்த பத்து நாட்களில் மைனா கண்ணில் பட்டதா:)?

      நீக்கு
  7. பறவை அறிமுகம் படங்களுடன் அழகு அக்கா...

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin