புதன், 19 ஜூலை, 2017

என்னால் முடியும்! - மஹாத்ரிய ர பொன்மொழிகள் 11

#1
“நீங்கள் விரும்புவது கிடைப்பதில்லை. 
எதற்கு நீங்கள் தகுதியானவரோ அதுவே கிடைக்கிறது.”


#2
“நம் முன்னோர்கள் கற்றுத் தந்ததை விட்டொழித்தால், 
நம்முடையன எதுவுமே மிஞ்சாது"

#3
“எந்த ஒரு ஈர்ப்புக்கும் ஒரு கவனச் சிதறலும் தேவையாக இருக்கிறது. 
சிறு இடைவேளைகள் இல்லாது போயின் நாம் உடைந்து போவோம்.”

#4
“ஒவ்வொருவரும் ஒவ்வொன்றுக்கும் ஒரு விளக்கம் வைத்திருப்பதோடு, தங்கள் சொல்லே இறுதியானதாக இருக்க விரும்புகிறார்கள்.” 


#5
“எதை எதிர்கொள்ள வேண்டுமோ, 
அதை எதிர் கொண்டே தீர வேண்டும், 
தள்ளிப் போடாமல், கூடிய விரைவில்.”


#6
வாழ்வின் மொழி.. 
“என்னால் முடியும்..” 

#7
“நாளைக்கான முதிர்ச்சியுடன் 
இன்றைய தினத்தை வாழ வேண்டும். 
அப்படி செய்பவனுக்குக் காத்திருக்கிறது 
சிறந்த எதிர்காலம்.”

#8
"பிறக்கும் போது நம் வாழ்க்கை ஒரு வெற்றுத் திரையே. 
நம் ஆற்றலே அதில் சித்திரம் தீட்ட உதவும் வர்ணங்கள்."
#9
“உங்களிடமிருக்கும் விலைமதிக்க முடியாத வளம் நீங்களே. 
போதுமான அளவுக்கு உங்களை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா?"

#10
“உங்கள் அடையாளங்களைக் கை விடுங்கள். 
நீங்கள் போதும்.. 
நீங்கள் மட்டுமே தாராளமாகப் போதும்.”

#11
"வாழ்க்கை நம் மரணத்தைத் தள்ளிப் போடப் போவதில்லை. 
ஆகையால், 
நாம் நம் வாழ்க்கையைத் தள்ளிப் போடாதிருப்போமாக!"
_Mahatria Ra
***
முதல் மூன்று படங்கள் தவிர்த்து மற்ற எட்டும்...: 
என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 20)

16 கருத்துகள்:

  1. படங்களும் அறிவுரைகளும் அருமையாக உள்ளன.

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. கண்ணுக்கு குளிர்ச்சியான
    புகைப்படங்களுடன்
    மனதிற்கு இதம் தரும்
    அருமையான பயனுள்ளபொன்மொழிகளுடன்
    பகிர்ந்த விதம் மிக மிக அருமை
    தொடர்ந்தால் மகிழ்வோம்
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  3. அர்த்தமுள்ள வரிகள். அழகான படங்கள்.

    பதிலளிநீக்கு
  4. படங்களும் சொல்லிய கருத்தும் அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. அறிவுரைகளை தேடிப்பிடித்துப் போடுகிறீர்கள் அறிந்தவையே ஆனாலும் படங்களுடன் பார்க்கும்போது மகிழ்ச்சியே

    பதிலளிநீக்கு
  6. அழகாக தேர்ந்தெடுத்து கோர்த்த அறிவுரை வார்த்தைகள்.
    இன்று தான் திரு T.T. Rangarajan அவர்களின் இந்தப் பெயர் தெரிய வந்தது. நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  7. பதில்கள்


    1. நலம்தானே:)?

      T.T. ரங்கராஜன். அவரது “Unposted Letters" நூலில் இருந்து எடுக்கப்பட்ட வாசகங்கள்.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin