சனி, 9 செப்டம்பர், 2017

ஒரு மஞ்சக் குருவி.. தூக்கணாங்குருவி .. ( Baya Weaver ) - பறவை பார்ப்போம் (பாகம் 18)

#1
ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்கள் தூக்கணாங்குருவிகளின் இனப்பெருக்கக் காலம். சென்ற வருடமும் இதே நேரம்தான் தோட்டத்து முருங்கை மரத்தில் இக்குருவிகள் கட்டிய கூட்டை வியந்து பார்த்து முதன் முதலாகப் படமாக்கிப் பகிர்ந்திருந்தேன்: தூக்கணாங்குருவிகளும்.. செம்மீசைச் சின்னான்களும்.. ! [தொடர்ந்து தினமலர் பட்டம் இதழிலும்.. படங்களுடன்: தேர்ந்த நெசவாளி] முதல் பதிவில் 55-200mm லென்ஸின் ஃபோகல் லென்த் எனக்குப் போதுமானதாக இல்லை என்றும் சொல்லியிருந்தேன். பின் தோட்டத்து விஸிட்டர்களைப் படம் எடுக்க என்றே அடுத்த இரு  மாதங்களில் 70-300mm லென்ஸ் வாங்கியதில் ஓரளவுக்குப் பறவைகளை வீட்டுக்குள் இருந்தே நெருங்க முடிகிறது இப்போது.

#2

கடந்த இருமாதங்களில் பகிர்ந்த படத் தொகுப்புகளில் ஏற்கனவே இந்த சீசனில் எடுத்த படங்கள் சிலவற்றைச் சிந்தனைத் துளிகளோடு பகிர்ந்து விட்டுள்ளேன். மேலும் எடுத்த சில உங்கள் பார்வைக்கு...

#3
"You may see me struggle but you will never see me quit."
- C.J. Watson.
சென்ற வருட சீஸன் முடிந்ததும் கண்ணிலேயே படாமல் காணாது போய் விட்ட தூக்கணாங்குருவிகள், மறுபடியும் இந்த ஜூலையில் கூட்டம் கூட்டமாக வந்து பல கூடுகளை என் வீட்டு மரத்திலும் பக்கத்து வீடு, தோட்டத்தை அடுத்து வெளியே இருக்கும் ஈச்ச மரம் ஆகியவற்றில் கணக்கு வழக்கு இல்லாமல் கூடுகளைக் கட்ட ஆரம்பித்தன.

#3
முருங்கை மரத்திலும் ஈச்ச மரத்திலுமாக..


காலையில் கண் விழித்ததும் சன்னலை சற்றே திறந்து வைத்தால் போதும். ஒரே கான மழைதான்.

#4
"எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவோடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி என்னும் மதுவின் சுவையுண்டு.."
_பாரதியார்

பறவைகளைக் கவனிப்பதே ஒரு சுவாரஸ்யம். அதிலும் இது போன்ற நேர்த்தியான கூடுகளை அவைத் திறமையாக நெய்வதைக் கவனிப்பது.. மனதை இலேசாக்க வல்லதாக இருக்கிறது.

தென்னை மரத்துக் கீற்றில் இருந்தும், ஈச்ச மரத்திலிருந்தும் நீண்ட இலைகளின் ஓர் இழையை இலாவகமாக அலகால் கிழித்து எடுக்கின்றன. பொறுமையாக அவற்றைக் கொண்டு கூட்டினை நெய்கின்றன.

#5

முதலில் பச்சையாகத் தெரிகிற கூடு ஓரிரு தினங்களிலேயே காய்ந்த பழுப்பு நிறத் தோற்றத்துக்கு வந்து விடும். கூட்டுக்கு உள்ளே இரண்டு பாகமாக நடுவே ஒரு தடுப்புடன் கட்டுகின்றன. கீழ் வருவது குடுவை வடிவம் முழுப் பெறாமல் பாதி நிலையில் இருக்கும் கூடு.

#6

வேலைப் பளு தெரியாமல் இருக்க கீச்சுக் கீச்சு எனப் பாடிக் கொண்டும் கிளைகளில் பல்டி அடித்து ஆடிக் கொண்டும்தான் கூடுகளைக் கட்டுகின்றன.

#7

#8
பிடியை விடாதே..
"Hold the vision, trust the process."

#9
பின்னி இழு..
”மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்... கருமமே கண்ணாயினார்.”
-குமரகுருபரர் (நீதிநெறி விளக்கம் 52)

#10
‘அடுத்த நாரினை எந்த மரத்திலிருந்து கிழிக்கலாம்..?’

#11
“பெட்டையோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையில்லாதோர் கூடு கட்டிக் கொண்டு
முட்டை தருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த உணவு கொடுத்தன்பு செய்திங்கு.."
_ பாரதியார்”


#12
“If you don't build your dream someone will hire you to help build theirs.”
_ Tony Gaskins Jr

*
படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. - (பாகம் 22)
**







20 கருத்துகள்:

  1. அழகான படங்கள். இவை கூடு கட்டுவதைப் பார்க்கப் பார்க்க ஆனந்தம் தான்!

    பதிலளிநீக்கு
  2. தூக்கணாங்குருவிக் கூடுகள் சாலையோரம்விற்பதைப்பார்த்து ஒன்று வாங்கி வந்து வீட்டு மரத்தில் கட்டித்தொங்க விட்டேன் ஒரு குருவியாவதுஅண்ட வேண்டுமே மூச்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாம் கட்டாத கூட்டுக்குள் வருவது சந்தேகமே. கட்டிய கூடானாலும் கூட..

      பெரு மழையில் ஒரு கூடு கீழே விழுந்து விட்டது. விழுந்து கிடந்த கூட்டுக்குள் குருவி போவதும் வருவதுமாய் இருப்பதைக் கண்டு, தாழ்ந்த கிளையொன்றில் கூட்டினைக் கட்டி விட்டோம். ஆனால் அங்கே குருவிகள் அதை நெருங்கவேயில்லை.

      நன்றி GMB sir.

      நீக்கு
  3. அழகிய படங்கள். இன்றுதான் வைகோ ஸார் எனக்கொரு வாட்சாப் வீடியோ அனுப்பி இருந்தார். அதில் இது கூடு கட்டும் அழகு பார்த்து ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான பகிர்வு. கட்டும் அழகைக் காணொளியாக்க நிறைய பொறுமை வேண்டும். ட்ரைபாடில் செட் செய்து விட்டுப் போகலாம். நன்றி ஸ்ரீராம்:)!

      நீக்கு
  4. துடிப்பான படங்கள். கணக்கு வழகில்லாமல் கூடுகளா? தொந்தரவாக இராதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில காலை மற்றும் மாலை வேளைகளில் உற்சாகக் கூவல் மணிக்கணக்கில் தொடருகையில் சன்னலை மூடி வைப்பதுண்டு:).

      நீக்கு
  5. அழகிய புகைப்படங்கள்!! அந்த குருவிக்கூடுகள் ஒரு கை தேர்ந்த கட்டட‌க் கலஞரின் கைவண்ணம் போல எத்தனை அழகாக, நுணுக்கமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன!!

    பதிலளிநீக்கு
  6. மூன்று மேற்கோள்களுக்கும் மிக மிகப் பொருத்தமான படங்கள்.உத்வேகம் ஊட்டும் அழகு.
    எல்லா இனங்களிலும் Final approval பெண்தான் போல!!! களிமண்ணை அப்பி, மின்மினிப் பூச்சிகளை ஒட்டுவது சிரமமான வேலைதான்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேற்கோள்கள் என் ஃப்ளிக்கர் பக்கத்தில் பகிரும் போது பதிந்தவை.

      இணைப்பின் மூலம் முந்தைய பதிவைப் படித்து வந்ததற்கும் நன்றி:).

      நீக்கு
  7. முன்பு நான் அணைக்கரை போகும் வழியில் கண்டு அதை பகிர்ந்து கொண்டேன்.
    உங்கள் வீட்டிலிருந்து கூடு கட்டுவதை பார்ப்பது ஆனந்தம் !
    இரவு போய் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். இரவு மின் மினிப்பூச்சிகளை கூட்டில் கொண்டு வைத்து கூட்டை ஓளி ஏற்றும் அறிவை கொடுத்து இருப்பது வியக்க வைக்கும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். பறவைகளின் வாழ்க்கை முறைகள் பலவும் நம்மை வியக்க வைப்பதாகவே இருக்கின்றன. பதிவுக்காகத் தகவல்கள் சேகரிப்பது சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  8. முருங்கை மரத்தில் தூக்கணாங்குருவி ஆச்சர்யம் படங்கள் அழகு

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin