செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

சேற்றிலே செந்தாமரைகளும் ஆஸ்கார் அவார்டுகளும்



ட்டு வயது நிரம்பாச் சிறுமி
அடிக்கிறாள் எட்டுக் குட்டிக் கரணம்-
குருட்டுப் பையன் குரல் எடுத்து
பாடுகிறான் தோதாகப் பாடல் ஒன்று-
பக்கத்தில் சோதாவாய்த் தெரிந்த
பாலகன் அவன் நண்பனின் விரல்கள்
அசாதாரணமாய் அற்புதமாய்
விளையாடுகின்றன மத்தளத்தில்-
சிந்தை மயங்குகிறது அவர் வித்தையில்-
செவிகள் சிலிர்க்கின்றன கேட்கையில்-
விழிகள் விரிகின்றன வியப்பில்-
புருவங்கள் உயர்கின்றன
அளவு கடந்த ஆச்சரியத்தில்-
கலைவாணியின் பூரண அருள்
வீதிக் கரையோரம் தாராளமாய்ப்
புரள்கின்ற புதிரான விந்தையில்!

போக்குவரத்து நெரிசல் அல்லது
சிவப்பு நிறத்தில் சிக்னல்-
போக முடியாமல் வாகனங்கள்-
வேகம் வேகமென
விரையும் மாந்தர்கள்
ஆரன் அடித்து அடித்து என்ஜினை
அலுப்புடன் அணைத்துக்
காத்திருக்கும் தருணங்கள்-
இதுதான் இச்சிறாருக்கு இறைவன்
அன்றைய பொழுதுக்குக்
கருணை காட்டும் கணங்கள்.

செம்பஞ்சுத் தலையுடன்
புழுதி பூசிய உடம்புடன்
கிழிந்து தொங்கும் உடையுடன்
ஒவ்வொரு வண்டிக் கதவும்
ஒற்றை விரலால் தயங்கிப் பின்
ஓங்கித் தட்டப் படுகையில்
ஒரிரு கண்ணாடிகளே இறங்கிடும்
இரக்கம் 'காசாக'க் கைமாறிடும்.

இறங்காக் கண்ணாடிகள்
ஏஸியின் குளிரிலும்
இறுக்கமாய் புழுங்கிடும்-
‘கொடுத்தால் கூடிடும்
இக்கொடுமை’ மிகப்
பொறுப்பாய் பேசிடும்-
தெருவிலே இப்படிக்
கையேந்த வைத்தப்
பெற்றவரின்
பொறுப்பின்மையைக்
கடுப்பாய் ஏசிடும்.

'கொடுக்கா விட்டால்
கிடைக்காத ஏமாற்றத்தில்
ஆத்திரமாகித் தீட்டிடுவாரோ
அழுத்தமாய்ச் சித்திரத்தை
விரலிடுக்கு நாணயம் எனும்
விசித்திர ஆயுதத்தால்
பளபளக்கும் தம்
பணக்காரவண்டி மேலே’
பயத்துடனே படபடப்பாய்
சீமை வாகனங்கள் சில
சிட்டாய் விரைந்திடும்-
வெறுப்பாய்ப் பார்வையை வீசிடும்!
***
தே நெரிசல்
அதே சிக்னல்-
அதே கெஞ்சும் கண்கள்
அதே பிஞ்சு விரல்கள்-
தட்டப் படுகின்றன
வண்டிக் கதவுகள்.
ஓரிரு அன்றி அநேகமாய்
எல்லாக் கண்ணாடிகளும்
இப்போது இறங்குகின்றன
இரக்கம் ‘நோட்டாக’க்
கைமாறுகின்றன
‘பாவம் யார் கையில்
வதை படுவரோ
வசூல் இல்லையெனில்’ என.

அத்துடன் அடங்காத கருணை
அக்கறையும் காட்டுகிறது-
மீட்க வேண்டும் காவலர்-
கொடுக்க வேண்டும் கல்வி-
ஆவன செய்ய வேண்டும் அரசு-
நெஞ்சம் குறுகுறுக்கக்
கொஞ்சம் கொஞ்சமாய்
எழுகின்றன குரல்கள்.

இங்குதான் நிற்கிறதோ
ஸ்லம்டாக் மில்லியனர்
ஆயிரம் குற்றச்சாட்டுகளையும்
அநாயசமாய் கடந்து நிமிர்ந்து-
நிராதரவான இவர் பின்னணியை
வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து.

சேற்றிலே மலர்ந்து
சோற்றுக்காக உலர்ந்து
வேற்று மனிதரின்
வஞ்சகத்தால்
கைகால் பார்வை
பலவந்தமாய்
பறிக்கவும்பட்டு
இன்னலை
இன்னலென்றும்
கொடுமையைக்
கொடுமையென்றும்
புரிந்திடக் கூட இயலாத
பூக்கள் இவற்றைச்
சமூகம் மீட்டெடுத்துச்
சரியாக வாழ வைத்தால்
அந்தச் செந்தாமரைகளின்
ஆசிகளும் வாழ்த்துக்களுமே
ஆயிரம் ஆயிரம்
ஆஸ்கார் அவார்டுகளுக்குச்
சரிநிகர் சமானமாகுமே!
*** *** ***



பி.கு:


இந்தப் படத்தில் வருவது போல எழுகின்ற இரு கேள்விகள்:

இச்செந்தாமரைகளின் சீர்குலைவுக்கு யாரைத்தான் நோவது?

அ. பெற்றவர் ஆ. சமூகம் இ. அரசு ஈ. விதி

இதற்கு 'அனைத்தும்தான்' என்ற சொல்லத் தோன்றினால்..

இவரை மீட்டு வாழ வைப்பதால் யாருக்கு லாபம்?

அ. அவருக்கு ஆ.நமக்கு இ.நாட்டுக்கு ஈ.உலகுக்கே

இதற்கும் சொல்லிடலாம்: 'அனைத்தும்தான்’!

போட்டி விதிகளின்படி இப்பதில் பரிசினை இழந்தாலும், மனதால் ஆவோம் கோடீஸ்வரராய் மாற்றங்கள் இவர் வாழ்வில் சீக்கிரமே வரப் பிரார்த்தித்து ..!
*** *** ***

[படங்கள்:இணையத்திலிருந்து]





இங்கு வலையேற்றிய பின் மார்ச் 2009 ‘மனிதம்’ மின்னிதழிலும் வெளியாகியுள்ளது:
















படத்தின் மேல் 'க்ளிக்'கிட்டு காண்க.]


இக்கவிதை








21 - 24 பிப்ரவரி, 2009 இளமை விகடன் இணைய தள "குட்... Blogs" பிரிவில் பரிந்துரைக்கப்பட்டு பின்னர்










2 மார்ச் 2009 அன்று வெளியாகியும் உள்ளது. நன்றி விகடன்!




85 கருத்துகள்:

  1. கவிதையும் நீங்க தேர்ந்தெடுத்த படங்களும் நல்லா இருக்கு பிரண்ட்!

    ஆனா இன்றைக்கு செவ்வாய் நான் கும்மி அடிப்பதில்லை என விரதம்! ஸோ நாளை வந்து கும்மிக்கிறேன்:-))

    குறிப்பு: ஆபீஸில் கொடுமை படுத்துறாங்க வேலை எல்லாம் செய்ய சொல்லி!

    பதிலளிநீக்கு
  2. ஆனா இன்றைக்கு செவ்வாய் நான் கும்மி அடிப்பதில்லை என விரதம்! //

    எங்களுக்கு விரதமில்லை அபி அப்பா.

    பதிலளிநீக்கு
  3. Hi

    We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

    Please check your blog post link here

    If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

    Sincerely Yours

    Valaipookkal Team

    பதிலளிநீக்கு
  4. ஆஹா ராமலக்‌ஷ்மி,

    கும்ம சான்ஸ் கிடைச்சதுல பதிவைப் பத்தி ஒண்ணும் சொல்லலை. தப்பா நினைக்காதீங்க.

    அருமையான கவிதை. கவிக்குயிலுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. அபி அப்பா said...

    //கவிதையும் நீங்க தேர்ந்தெடுத்த படங்களும் நல்லா இருக்கு பிரண்ட்!//

    நன்றி.

    //ஆனா இன்றைக்கு செவ்வாய் நான் கும்மி அடிப்பதில்லை என விரதம்!//

    இனிமே என் எல்லா பதிவும் செவ்வாய்தான்:)!

    பதிலளிநீக்கு
  6. புதுகைத் தென்றல் said...

    //அருமையான கவிதை. கவிக்குயிலுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.//

    நன்றி தென்றல்.

    பதிலளிநீக்கு
  7. அதிலும் பச்சிளம் குழந்தைகளை(யார் பெற்றதோ?காசுக்காக கை மாறியதோ?)கொழுத்தும் வெயிலில் துவளத் துவள தோளில் சுமந்து கை நீட்டும் தாய்(?)மார்களின் சோகமும் இவ்வகையைச் சார்ந்ததுதானே? வாங்கிய காசில் அவைகளுக்கு ஒரு குவளை பாலாவது கிடைக்குமா?

    கண் முன்னே காணும் பரிதாபக் காட்சிகளை கடைவிரித்து விட்டீர்கள்!!(புரிந்து)கொள்வார் யார்?

    //ஆபீஸில் கொடுமை படுத்துறாங்க வேலை எல்லாம் செய்ய சொல்லி!//

    அப்படியே அபி அப்பா மாதியானவர்களுக்கும் ஒரு நல்ல வழி சொல்லிவிடுங்கள்.
    நான் சொல்லும் வழி, பேசாமல் வீட்டிலேயே இருந்து வேளாவேளைக்கு உண்டு உறங்கி நிம்மதியாக காலங்கழிக்கலாம். அப்ப பூவாவுக்கு என்ன வழி என்கிறீர்களா?

    இருங்க...பூவா?தலையா? போட்டுப் பார்த்து சொல்கிறேன்!!!!

    எனக்கும் விரதமெல்லாம் இல்லை!!!

    பதிலளிநீக்கு
  8. நெஞ்சை பிழியும் உண்மை...சுய நலத்தை மட்டும் நினைப்பதால் பிறர் நலத்தில் அக்கறை இல்லை.

    ஆனா இதுக்கு எல்லாம் தீர்வு எது?

    பதிலளிநீக்கு
  9. //அப்படியே அபி அப்பா மாதியானவர்களுக்கும் ஒரு நல்ல வழி சொல்லிவிடுங்கள்.
    நான் சொல்லும் வழி, பேசாமல் வீட்டிலேயே இருந்து வேளாவேளைக்கு உண்டு உறங்கி நிம்மதியாக காலங்கழிக்கலாம். அப்ப பூவாவுக்கு என்ன வழி என்கிறீர்களா?

    இருங்க...பூவா?தலையா? போட்டுப் பார்த்து சொல்கிறேன்!!!!

    எனக்கும் விரதமெல்லாம் இல்லை!!!
    //

    நானானியக்கா நான் இன்னிக்கு மௌன விரதம். உங்களுக்கு பதில் சொல்ல மாட்டேன் போங்க. பதில் எதுனா சொல்லி காரை விட்டு இடிச்சுட்டு கவிதை போடுவீங்க. நான் வரலைப்பா இந்த ஆட்டைக்கு!:-))

    பதிலளிநீக்கு
  10. //
    போட்டி விதிகளின்படி இப்பதில் பரிசினை இழந்தாலும், மனதால் ஆவோம் கோடீஸ்வரராய் மாற்றங்கள் இவர் வாழ்வில் சீக்கிரமே வரப் பிரார்த்தித்து ..!
    //

    நல்ல கவிதை + நல்ல எண்ணம் = அருமையான பதிவு..

    பதிலளிநீக்கு
  11. நெகிழும் வகையில் எழுதியிருக்கீங்க ராம் மேடம்.

    யாரை நோவது
    பெற்றவரையா, சமூகத்தையா?

    பதிலளிநீக்கு
  12. இன்னும் 'ஸ்லம் டாக்' பார்க்கவில்லை. நீங்கள் எழுதியது 'நான் கடவுள்' படக்காட்சிகளுடனும் பொருந்தும் என்று நினைக்கிறேன் (அதுவும் இன்னும் பார்க்கவில்லை).

    நல்ல காத்திரமான கவிதை.

    அனுஜன்யா

    பதிலளிநீக்கு
  13. கவிதை நன்றாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் செதுக்கினால் நன்றாக இருந்திருக்கும்.

    சிக்னல்: சமிக்ஞை

    பதிலளிநீக்கு
  14. Valaipookkal said...

    //We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

    Please check your blog post link here//

    பார்த்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  15. நானானி said...

    //வாங்கிய காசில் அவைகளுக்கு ஒரு குவளை பாலாவது கிடைக்குமா?//

    கிடைக்கிற மாதிரி தெரிவதில்லை, பார்க்கையிலே.

    //கண் முன்னே காணும் பரிதாபக் காட்சிகளை கடைவிரித்து விட்டீர்கள்!!(புரிந்து)கொள்வார் யார்?//

    கொள்ள வேண்டும் கொற்றவன். அதற்காகத்தான் தந்தோம் அரியாசனம்.

    பதிலளிநீக்கு
  16. நானானி said...

    //அப்படியே அபி அப்பா மாதியானவர்களுக்கும் ஒரு நல்ல வழி சொல்லிவிடுங்கள்.//

    பாவம் அவரே காரை விட்டு இடித்து கவி பாடி விடுவோம் எனப் பயந்து போயிருக்கிறார், விட்டு விடுவோம்:)!

    பதிலளிநீக்கு
  17. sindhusubash said...

    //நெஞ்சை பிழியும் உண்மை...சுய நலத்தை மட்டும் நினைப்பதால் பிறர் நலத்தில் அக்கறை இல்லை.//

    எல்லோரும் நலமுற்றிருந்தால்தான் நாடு மட்டுமல்ல உலகமே சுபிட்சம் பெறும்.

    //ஆனா இதுக்கு எல்லாம் தீர்வு எது?//

    தீர்த்து வைக்க வேண்டியவர்கள் மனதில் ஏற்பட வேண்டும் பொறுப்புணர்வு. தனிமனிதரால் இயலக் கூடியதாகத் தெரியவில்லை. சமூக அமைப்புகளும் சட்டமும் காரியத்தில் இறங்கி காண வேண்டும் தீர்வு.

    கருத்துக்கு நன்றி சிந்து.

    பதிலளிநீக்கு
  18. அபி அப்பா said...
    //நானானியக்கா நான் இன்னிக்கு மௌன விரதம். உங்களுக்கு பதில் சொல்ல மாட்டேன் போங்க. பதில் எதுனா சொல்லி காரை விட்டு இடிச்சுட்டு கவிதை போடுவீங்க. நான் வரலைப்பா இந்த ஆட்டைக்கு!:-))//

    நானானி எங்க ஊர்க்காரர், நான் தர்றேன் கியாரண்டி. அப்படியெல்லாம் யாரும் எதுவும் செய்ய மாட்டோம்:))!

    பதிலளிநீக்கு
  19. வெண்பூ said...

    //நல்ல கவிதை + நல்ல எண்ணம் = அருமையான பதிவு..//

    நல்ல பாராட்டுக்கு நன்றி வெண்பூ!

    பதிலளிநீக்கு
  20. நாகை சிவா said...

    //அருமை :)//

    நன்றி சிவா!

    பதிலளிநீக்கு
  21. அமிர்தவர்ஷினி அம்மா said...

    //நெகிழும் வகையில் எழுதியிருக்கீங்க ராம் மேடம்.//

    நன்றி.

    //யாரை நோவது
    பெற்றவரையா, சமூகத்தையா?//

    எல்லோரையும்தான் என்பதுதான் சரியான பதிலாக இருக்க முடியும் அமித்து அம்மா:(!

    பதிலளிநீக்கு
  22. அனுஜன்யா said...

    //இன்னும் 'ஸ்லம் டாக்' பார்க்கவில்லை.//

    கட்டாயம் பாருங்கள்.

    // நீங்கள் எழுதியது 'நான் கடவுள்' படக்காட்சிகளுடனும் பொருந்தும் என்று நினைக்கிறேன் (அதுவும் இன்னும் பார்க்கவில்லை).//

    எனக்கும் பார்க்கும் எண்ணம் இருக்கிறது.

    //நல்ல காத்திரமான கவிதை.//

    கருத்துக்கு நன்றி அனுஜன்யா.

    பதிலளிநீக்கு
  23. மஞ்சூர் ராசா said...

    //கவிதை நன்றாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் செதுக்கினால் நன்றாக இருந்திருக்கும்.//

    எனக்கும் கூட அவ்வாறு தோன்றியது:)!

    //சிக்னல்: சமிக்ஞை//

    நான் ’சிக்னல்’ என்ற வார்த்தையை பிரயோகித்தது ‘நெரிசல்’ வார்த்தைக்குப் பொருத்தமாயிருக்கும் என்பதால். ஆங்கில வார்த்தையைத் தவிர்த்திருக்கலாம்தான்:)!

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மஞ்சூர் ராசா!

    பதிலளிநீக்கு
  24. தினம் தினம் காணும் பரிதாபக் காட்சிகளை கவிதையாக வடித்து கேள்விகள் எழுப்பீருக்கிறீர்கள் ராமலஷ்மி. படங்கள் வேறு உங்களின் தேர்வில் நன்றாக இருக்கின்றன.பாராட்டுகிறேன் இதற்கு உங்களை.


    நாளை வரும் என்று நம்புவோம்!

    ஷைலஜா

    பதிலளிநீக்கு
  25. அபி அப்பா!!எனக்கு பதில் சொல்லாங்காட்டியும் வாயைத் தொறந்து எதையோ சொல்லி விரதத்தை பங்கப் படுத்திவிட்டீர்கள்!!!!ஹா..ஹா..!

    என்னோட ட்ரைவிங்க் லைசென்ஸ் பாராகிவிட்டது. எனவே வண்டி எடுப்பதாவது...உங்க மீது மோதுவதாவது...? தைரியமாக நீங்க சாலையில் போகலாம்!!

    பதிலளிநீக்கு
  26. வழக்கம்போலவே உங்கள் கவிதை..

    உருக்கமான வார்த்தைகளை கொட்டித் தீர்த்திருக்கிறீர்கள்..

    பதிலளிநீக்கு
  27. //கொள்ள வேண்டும் கொற்றவன். அதற்காகத்தான் தந்தோம் அரியாசனம்.//

    யார்..?நாமா தந்தோம் அந்த அரியாசனம்?
    அவர்களே எடுத்துக்கொண்ட
    சிறியாசனம்!!!-அங்கே
    அவர்கள் கொற்றவர்கள் அல்ல..
    கொண்டா..கொண்டா..என்று பொருள்
    பெற்றவர்கள்!!!இந்த
    புரிதல்கள் எல்லாம்
    அற்றவர்கள்!!

    பதிலளிநீக்கு
  28. படம் பார்த்து விட்டு படிக்கிறேன் :-)

    பதிலளிநீக்கு
  29. கவிதை அருமை.
    ஸ்லம்டாக் மில்லீனியர் பாத்துட்டு கொஞ்சம் மீளும் [spelling correct-a? :-( ] போது "நான் கடவுள்" படம் பாத்து இன்னும் மனசு கஷ்டாமாயிடிச்சு. நீங்க "நான் கடவுள்" படம் பாக்கலேன்னு நினைக்கிறேன். ஒரு வேளை நீங்க பாக்கலேன்னா கண்டிப்பா பாத்துட்டு ஒரு கவிதை எழுதுங்க. அதையும் படிக்க வெயிட்டிங்

    பதிலளிநீக்கு
  30. ஷைலஜா said...

    //தினம் தினம் காணும் பரிதாபக் காட்சிகளை கவிதையாக வடித்து கேள்விகள் எழுப்பீருக்கிறீர்கள் ராமலஷ்மி.//

    நம் எல்லோர் மனதிலும் எழுகின்ற கேள்விகள்தானே ஷைலஜா?

    //படங்கள் வேறு உங்களின் தேர்வில் நன்றாக இருக்கின்றன.பாராட்டுகிறேன் இதற்கு உங்களை.//

    நன்றி.


    //நாளை வரும் என்று நம்புவோம்!//

    நம்பிக்கைதான் வாழ்க்கை என்கிற நல்வார்த்தைகளுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  31. நானானி said...நானானி said...

    //அபி அப்பா!!....

    என்னோட ட்ரைவிங்க் லைசென்ஸ் பாராகிவிட்டது. எனவே வண்டி எடுப்பதாவது...உங்க மீது மோதுவதாவது...? தைரியமாக நீங்க சாலையில் போகலாம்!!//

    அபி அப்பா, நோட் த பாயின்ட். ட்ராஃபிக் இஸ் க்ளியர்ட்:))!

    பதிலளிநீக்கு
  32. முத்துலெட்சுமி-கயல்விழி said...

    //வழக்கம்போலவே உங்கள் கவிதை..

    உருக்கமான வார்த்தைகளை கொட்டித் தீர்த்திருக்கிறீர்கள்..//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.

    பதிலளிநீக்கு
  33. கவிதை நல்லா இருக்குங்க.. அதுவும் தாங்கள் வார்த்தைகளைக் கோர்க்கும் விதமே தனி.. நீங்க கேட்ட முதல் கேள்விக்கான பதில் பெற்றோர், பெற்றோரிர்க்கு இல்லாத அக்கறை சமூகத்திற்கு எப்படி வரும் என்பதே என் கேள்வி?????

    பதிலளிநீக்கு
  34. வழக்கம் போலவே கவித்துவ வரிகளால் சிந்திக்க வைத்திருக்கிறீர்கள். கூடவே படங்களும்! நல்ல பதிவு!! சுயநலம் என்றைக்கு தான் குறையுமோ தெரியல!!

    பதிலளிநீக்கு
  35. நானானி said...

    //அவர்கள் கொற்றவர்கள் அல்ல..
    கொண்டா..கொண்டா..
    என்று பொருள் பெற்றவர்கள்!!!
    இந்த புரிதல்கள்
    எல்லாம் அற்றவர்கள்!!//

    அருமையாய் கவிபாடி அவர் போக்கினைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறீர்கள் நானானி!

    //யார்..?நாமா தந்தோம் அந்த அரியாசனம்?//

    நான் சொல்ல வந்தது யாதனில்,

    வாக்குச் சீட்டு என்றொரு
    துருப்புச் சீட்டு
    வாகாக வருகிறது கைக்கு
    ஐந்தாண்டுக்கு ஒரு முறை
    அல்லது அற்ப காரணங்களுக்காக
    ஆட்சி கவிழ்க்க கலைக்கப்படும்
    ஒவ்வொரு முறையும்.
    கவனமாய் அதைப் பயன்படுத்தாதது
    நம் தவறுதானோ என்கின்ற
    கலக்கத்தில் குழப்பத்தில்
    அளிக்கின்றோம் அரியணையை
    மாற்றி மாற்றி..
    அவர்களோ கொள்ளை
    அடித்துத்தான் செல்கிறார்கள்
    நீங்கள் சொல்கிற மாதிரி..
    இதுதான் இந்நாட்டின் விதியெனில்
    இந்த இழிநிலைக்கு எதுதான் தீர்வு:(?

    பதிலளிநீக்கு
  36. சேற்றிலே மலர்ந்து
    சோற்றுக்காக உலர்ந்து///

    கனத்த வரிகள்!

    யாரை நோவது?

    பதிலளிநீக்கு
  37. அருமை

    எப்படி இப்படி எல்லாம்

    /இந்தப் படத்தில் வருவது போல எழுகின்ற இரு கேள்விகள்:

    இச்செந்தாமரைகளின் சீர்குலைவுக்கு யாரைத்தான் நோவது?

    அ. பெற்றவர் ஆ. சமூகம் இ. அரசு ஈ. விதி

    இதற்கு 'அனைத்தும்தான்' என்ற சொல்லத் தோன்றினால்..

    இவரை மீட்டு வாழ வைப்பதால் யாருக்கு லாபம்?

    அ. அவருக்கு ஆ.நமக்கு இ.நாட்டுக்கு ஈ.உலகுக்கே

    இதற்கும் சொல்லிடலாம்: 'அனைத்தும்தான்’!/

    அதிலும் கடைசி வரிகள் கலக்கல்

    பதிலளிநீக்கு
  38. கிரி said...

    // படம் பார்த்து விட்டு படிக்கிறேன் :-)//

    நல்லது கிரி! படிப்பது இருக்கட்டும். படத்தைக் கண்டிப்பாகப் பாருங்கள்:).

    பதிலளிநீக்கு
  39. Truth said...

    //கவிதை அருமை.
    ஸ்லம்டாக் மில்லீனியர் பாத்துட்டு கொஞ்சம் மீளும் [spelling correct-a? :-( ] போது "நான் கடவுள்" படம் பாத்து இன்னும் மனசு கஷ்டாமாயிடிச்சு. நீங்க "நான் கடவுள்" படம் பாக்கலேன்னு நினைக்கிறேன்.//

    அனுஜன்யாவும் இதையேதான் குறிப்பிட்டிருக்கிறார் ட்ரூத்.


    //ஒரு வேளை நீங்க பாக்கலேன்னா கண்டிப்பா பாத்துட்டு ஒரு கவிதை எழுதுங்க. அதையும் படிக்க வெயிட்டிங்//

    நேரம் வாய்க்கையில் அவசியம் பார்க்கிறேன். கவிதை? முயற்சிக்கிறேன்:)!

    பதிலளிநீக்கு
  40. Poornima Saravana kumar said...

    //கவிதை நல்லா இருக்குங்க.. அதுவும் தாங்கள் வார்த்தைகளைக் கோர்க்கும் விதமே தனி..//

    நன்றி பூர்ணிமா.

    //நீங்க கேட்ட முதல் கேள்விக்கான பதில் பெற்றோர், பெற்றோரிர்க்கு இல்லாத அக்கறை சமூகத்திற்கு எப்படி வரும் என்பதே என் கேள்வி?????//

    பெற்றோரை விட்டுப் பிரிய நேர்ந்து இக்கொடுமைகளை அனுபவிக்கும் சிறார்கள் ஒருபுறமிருக்க பெற்றோராலேயே இச்செயல்களில் ஈடுபடுத்தப் படுபவரும் உள்ளனர்தான். ஆனால் அதற்கும் காரணம் அவர்கள் வறுமை, உழைத்துப் பிழைக்கலாம் என்றெல்லாம் சிந்திக்கும் திறனோ விழிப்புணர்வோ அற்ற அறிவின்மை, இத்தகைய வாழ்வு பழகிப் போனதால் அதை ஒரு தவறாகக் கூட எண்ணத் தோன்றாத பேதமை இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாமே பூர்ணிமா. இதற்கெல்லாம் சமுதாயம் பொறுப்பில்லையா? ஆகையால்தான் இரண்டு கேள்விகளுக்குமே எனது பதில் ‘அனைத்தும்’ ஆயிற்று.

    என் எண்ணத்தைப் பகிர்ந்திடும் வண்ணமாக எழுப்பிய கேள்விக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  41. உள்ளத்தைக் குத்தும் உண்மைகள். கேள்விகளும் பதில்களும் சரிதான். படம் இன்னும் பார்க்கலை. வழக்கம்போல சமுதாய அக்கறையில் முகிழ்த்த உங்கள் முத்தை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  42. ''நாமா தந்தோம் அரியாசனம்?' என்றது....கள்ளவோட்டுக்கள் போட்டு அவர்களாகவே ஏறி அமர்ந்து கொண்ட சிறியாசனம், என்ற அர்த்தத்தில்தான்.
    நடந்து முடிந்த இடைத்தேர்தல் சொல்லுமே...அக்காவியத்தை!!!!

    பதிலளிநீக்கு
  43. fantastic.

    //இறங்காக் கண்ணாடிகள்
    ஏஸியின் குளிரிலும்
    இறுக்கமாய் புழுங்கிடும்-
    ‘கொடுத்தால் கூடிடும்
    இக்கொடுமை’ மிகப்
    பொறுப்பாய் பேசிடும்-
    தெருவிலே இப்படிக்
    கையேந்த வைத்தப்
    பெற்றவரின்
    பொறுப்பின்மையைக்
    கடுப்பாய் ஏசிடும்.
    //

    same blood ;(

    பதிலளிநீக்கு
  44. ****‘பாவம் யார் கையில்
    வதை படுவரோ
    வசூல் இல்லையெனில்’ என.****

    இதுதாங்க ரொம்ப எரிச்சலையும் கோபத்தையும் வரவழைக்குது. நம்ம ஊர்லதாங்க "காந்தி" "புத்தர்" "மஹாவீரர்" போன்றவர்கள் உதித்தார்கள். நமக்குத்தான் மனிதாபிமானம் அதிகம். இப்படிப்பட்ட நம்மில் எப்படி இதுபோல் "மிருகங்கள்" உருவாகுது?

    எனக்கு உண்மையிலேயே புரியலை. பிச்சைக்காரர்களை வைத்து பிழைப்பு நடுத்துபவர்கள் மிருங்களை விட கேவலமானவர்கள் என்பேன்.

    எனக்கு இவர்கள் மனநிலைதான் புரியமாட்டேன்கிது. விலங்குகள் இப்படியெல்லாம் செய்வதில்லை.

    --------------
    ***இச்செந்தாமரைகளின் சீர்குலைவுக்கு யாரைத்தான் நோவது?***

    அவள் தாய், நம் சட்டம் ஒழுங்கு. நம் அரசியல் தலைவர்கள்.

    ஒருவர் கொலை செய்தால் சட்டத்தில் இருந்து தப்பிப்பது அரிது. அதேபோல் இது போல் குழந்தைகளை பாழ் செய்யும் அயோக்கியர்களை (கொலைகாரகளைப் பிடிப்பதுபோல்) பிடித்து சுட்டுக்கொல்லனும்! அதை சட்டம் மற்றும் போலிஸ்தான் செய்ய முடியும்.

    பதிலளிநீக்கு
  45. வீதியின் காட்சிகள்
    விரியுது கண்முன்

    வழக்கம்போல நிறையபேர் சொன்ன மாதிரி, அழகாய் வார்த்தைகளைக் கோர்த்து கவிதை படைத்த

    //அருமையான கவிதை. கவிக்குயிலுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.//

    அதே ! அதே !!

    பதிலளிநீக்கு
  46. இசக்கிமுத்து said...

    //வழக்கம் போலவே கவித்துவ வரிகளால் சிந்திக்க வைத்திருக்கிறீர்கள். கூடவே படங்களும்! நல்ல பதிவு!!//

    நன்றி இசக்கிமுத்து.

    //சுயநலம் என்றைக்கு தான் குறையுமோ தெரியல!!//

    பொதுநலத்தில் அக்கறை வைத்து எல்லோரும் நலமே வாழ்ந்தால் அதில் நம் நலமும் அடங்கும் என்கிற சிந்தனை இருந்தாலே உலகம் சுபிட்சம் பெறும். நல்லது நடக்கும் என்று நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  47. ஜீவன் said..

    // //சேற்றிலே மலர்ந்து
    சோற்றுக்காக உலர்ந்து///

    கனத்த வரிகள்!

    யாரை நோவது? //

    ’யாவரையும்’ என்பதைத்தான் என் பதிலாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் ஜீவன். கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  48. திகழ்மிளிர் said...

    //அருமை
    எப்படி இப்படி எல்லாம்//

    //அதிலும் கடைசி வரிகள் கலக்கல் //

    படத்தைப் பார்த்ததும் தோன்றிய எண்ணங்களையும் சிந்தித்ததில் எழும்பிய கேள்விகளையும்தான் வரிகளாக வடித்துள்ளேன். ரசனைக்கும் கருத்துக்கும் நன்றி திகழ்மிளிர்.

    பதிலளிநீக்கு
  49. கவிநயா said...

    //உள்ளத்தைக் குத்தும் உண்மைகள். கேள்விகளும் பதில்களும் சரிதான்.//

    ஆமாம், தனிப்பட்டு யாரையும் நோக்கி இவரே காரணமென விரல் நீட்டக் கூடியதாக இல்லை இந்தப் பிரச்சனை.

    //படம் இன்னும் பார்க்கலை. வழக்கம்போல சமுதாய அக்கறையில் முகிழ்த்த உங்கள் முத்தை ரசித்தேன்.//

    வாய்ப்புக் கிடைத்தால் படத்தைப் பாருங்கள். கருத்துக்களுக்கு நன்றி கவிநயா!

    நன்றி கவிநயா

    பதிலளிநீக்கு
  50. இப்பொழுதுதான் பாலாவின் படம் பார்த்தேன்.. எத்தனைவிதமான மனிதர்கள்..எத்தனைவிதமான முகங்கள்.. ஒரு வயிறு உணவுக்காய்..யாரோ குறுகிய மனப்பான்மை கொண்டவர்களின் நல்வாழ்வுக்காய்..தன்னையே உறுக்கிக்கொண்டு..வதைகளில் வாழ்ந்தபடி :(

    உங்கள் கவிதை விழி கசியச் செய்தது சகோதரி..நல்லதொரு பதிவு..

    என்றிவர்களை மீட்கப் போகிறோம்? :(

    பதிலளிநீக்கு
  51. நானானி said...

    //''நாமா தந்தோம் அரியாசனம்?' என்றது....கள்ளவோட்டுக்கள் போட்டு அவர்களாகவே ஏறி அமர்ந்து கொண்ட சிறியாசனம், என்ற அர்த்தத்தில்தான்.
    நடந்து முடிந்த இடைத்தேர்தல் சொல்லுமே...அக்காவியத்தை!!!!//

    புரிந்தத நானானி:), சிறியாசனம் எனும் [பதவி]வெறியாசனம். இப்படி நாற்காலியைச் சுற்றி அத்தனை கட்சிகளும் ம்யூசிகல் சேர் விளையாடிக் கொண்டே இருக்கையில் நாட்டுப் பிரச்சனைகள் தீர எங்கிருந்து வழி பிறக்கும், என்னமோ போங்க:(!

    பதிலளிநீக்கு
  52. /*இன்னலை
    இன்னலென்றும்
    கொடுமையைக்
    கொடுமையென்றும்
    புரிந்திடக் கூட இயலாத
    பூக்கள் இவற்றைச்
    சமூகம் மீட்டெடுத்துச்
    சரியாக வாழ வைத்தால்
    அந்தச் செந்தாமரைகளின்
    ஆசிகளும் வாழ்த்துக்களுமே
    ஆயிரம் ஆயிரம்
    ஆஸ்கார் அவார்டுகளுக்குச்
    சரிநிகர் சமானமாகுமே!*/
    மிக உருக்கமான கவிதை.

    /*இச்செந்தாமரைகளின் சீர்குலைவுக்கு யாரைத்தான் நோவது*/
    யாரை நோவது? எது உண்மை எது பொய் என்று மனிதர்கள் மீதே நம்பிக்கை இழந்து கொண்டிருக்கும் நிலைக்கு யாரை நோவது? ஆனால் எல்லோருக்குமே இவர்களை வாழ வைக்க வழி உள்ளது. யாரும் செய்யாவிட்டால் செய்ய வைக்கும் அரசு வேண்டும்... இல்லை என்றால் ஆங்காங்கே செய்யப்படும் முயற்சிகள் கூட முழுமை பெறாது போகும். எத்தனையோ சமூக நிறுவனங்கள் குழந்தைகளை எடுத்து வளர்த்தும் ஏன் இந்த நிலை என்று வேதனையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  53. புதுகை தென்றல்! வாம்மா மின்னல்!


    நான் வந்திட்டேன்.

    ஏதோ சீரியஸ் போஸ்டா இருக்கே கொஞ்சமா கும்முவோம்னு விட்டுட்டேன்,

    இங்க வேணாம், சரியான நேரம் வாய்ப்பு கிடைக்கும்போது நான் தென்றலா? புயலான்னு காட்டுறேன்
    அபி அப்பா

    :)))

    பதிலளிநீக்கு
  54. SurveySan said...

    //fantastic.//

    இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவலை எனக்கு அதிகப் படுத்தியது இப்படத்துக்கான உங்களது விமர்சனப் பதிவு. அதற்கும் சேர்த்து என் நன்றிகள் சர்வேசன்.

    //இறங்காக் கண்ணாடிகள்
    ஏஸியின் குளிரிலும்
    இறுக்கமாய் புழுங்கிடும்-
    ‘கொடுத்தால் கூடிடும்
    இக்கொடுமை’ மிகப்
    பொறுப்பாய் பேசிடும்-
    தெருவிலே இப்படிக்
    கையேந்த வைத்தப்
    பெற்றவரின்
    பொறுப்பின்மையைக்
    கடுப்பாய் ஏசிடும்.//

    same blood ;( ///

    இது எல்லோருக்கும் நியாயமாக ஏற்படக் கூடிய உணர்வுதான். ஆனால் அச்செயல்களுக்குப் பின் இருக்கும் பல விஷயங்கள் நம்மை யோசிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  55. வருண் said...
    //எனக்கு உண்மையிலேயே புரியலை. பிச்சைக்காரர்களை வைத்து பிழைப்பு நடுத்துபவர்கள் மிருங்களை விட கேவலமானவர்கள் என்பேன்.//

    எனக்கு இவர்கள் மனநிலைதான் புரியமாட்டேன்கிது.//

    உங்கள் மனக்குமுறல் புரிகிறது வருண். அதுவும் எதுவும் அறியாப் பிஞ்சுக் குழந்தைகளை இதில் ஈடுபடுத்துவது பெரிய கொடுமை.

    //***இச்செந்தாமரைகளின் சீர்குலைவுக்கு யாரைத்தான் நோவது?***

    அவள் தாய், நம் சட்டம் ஒழுங்கு. நம் அரசியல் தலைவர்கள்.

    ஒருவர் கொலை செய்தால் சட்டத்தில் இருந்து தப்பிப்பது அரிது. அதேபோல் இது போல் குழந்தைகளை பாழ் செய்யும் அயோக்கியர்களை (கொலைகாரகளைப் பிடிப்பதுபோல்) பிடித்து சுட்டுக்கொல்லனும்! அதை சட்டம் மற்றும் போலிஸ்தான் செய்ய முடியும். //

    உங்கள் தார்மீகமான கோபம் நியாயமானதே. சட்டங்கள் கடுமையாக்கப் பட்டாலொழிய இந்த அவலங்களுக்குத் தீர்வு காணவே இயலாது. சமூகத்தில் இப்படியும் ஒரு பாகத்தினர் சீரழிவதைக் கண்டு கொள்ளாமலே இருந்து விட்டு, பிறகு அவர்கள் தீவிரவாதிகளாக உருவாக நேருகையில் ’கொஞ்சமும் மனிதாபிமானவற்றவர்களாக’ அவர்களை விமர்சிக்கிறது சமூகம். 'இந்தச் சமூகம் எங்களுக்கு என்ன செய்தது' என்கிற அவர்களது கேள்விகளுக்கும் விடையற்று இது ஒரு சுழற்சியாகி விட்டது:(!

    பதிலளிநீக்கு
  56. சதங்கா (Sathanga) said...

    //வீதியின் காட்சிகள்
    விரியுது கண்முன்//

    இங்கு இக்காட்சிகளைக் காணாது எந்த பெரிய வீதியையும் கடந்திட இயலாது சதங்கா:(!

    //அதே! அதே!!//

    பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  57. அமுதா said...
    //யாரை நோவது? எது உண்மை எது பொய் என்று மனிதர்கள் மீதே நம்பிக்கை இழந்து கொண்டிருக்கும் நிலைக்கு யாரை நோவது?//

    உண்மைதான் அமுதா:(!

    //ஆனால் எல்லோருக்குமே இவர்களை வாழ வைக்க வழி உள்ளது. யாரும் செய்யாவிட்டால் செய்ய வைக்கும் அரசு வேண்டும்... இல்லை என்றால் ஆங்காங்கே செய்யப்படும் முயற்சிகள் கூட முழுமை பெறாது போகும்.//

    மிகச் சரியாகச் சொன்னீர்கள். என்னதான் சமூக அமைப்புகள் முயன்றாலும் சட்டமும் அரசும் துணை நின்றால்தான் மாற்றங்கள் சாத்தியமாகும்.

    கருத்துக்களுக்கு நன்றி அமுதா.

    பதிலளிநீக்கு
  58. அபி அப்பா said...
    //உங்க கார் இடிச்ச கவிதை தேடி தேடியே//

    நான் வேறு இடிக்க வேண்டுமாக்கும்?
    அபி உங்க கொமட்டுல இடிச்ச இடியே
    ஜென்மத்துக்கும் போதும்.

    பதிலளிநீக்கு
  59. புதுகைத் தென்றல் said...
    // சரியான நேரம் வாய்ப்பு கிடைக்கும்போது நான் தென்றலா? புயலான்னு காட்டுறேன்//

    அபி அப்பா, மின்னலாக வந்த தென்றல் இடியாக இடித்து விட்டுப் போயிருக்கிறார்கள், கவனம்:)!

    பதிலளிநீக்கு
  60. நானானி said...
    //நான் வேறு இடிக்க வேண்டுமாக்கும்?//

    சரியாகச் சொன்னீர்கள் நானானி. அபி இடித்தது பத்தாது என இப்பதான் தென்றலும் இடியாக முழங்கி விட்டுப் போயிருக்கிறார்கள்:)!

    பதிலளிநீக்கு
  61. எம்.ரிஷான் ஷெரீப் said...

    //இப்பொழுதுதான் பாலாவின் படம் பார்த்தேன்.. எத்தனைவிதமான மனிதர்கள்..எத்தனைவிதமான முகங்கள்.. ஒரு வயிறு உணவுக்காய்..யாரோ குறுகிய மனப்பான்மை கொண்டவர்களின் நல்வாழ்வுக்காய்..தன்னையே உறுக்கிக்கொண்டு..வதைகளில் வாழ்ந்தபடி :(//

    நான் கடவுள் படமும் இந்தப் பிரச்சனையை ஒட்டியதே எனப் பலரும் கூற அறிந்தேன் ரிஷான்.

    //உங்கள் கவிதை விழி கசியச் செய்தது சகோதரி..நல்லதொரு பதிவு..

    என்றிவர்களை மீட்கப் போகிறோம்? :(//

    இந்தக் கேள்விக்கான விடை மட்டும்தான் புலப்படவே மாட்டேன்கிறது. அரசும் சட்டமும் மனம் வைத்தால் கட்டாயம் மார்க்கம் உண்டு.

    பதிலளிநீக்கு
  62. ராமலக்ஷ்மி எதை சொல்லுவது
    எதை விடுப்பது??? ம்ம்ம்ம்
    அப்படியே உள்ளத்தை உங்க
    பதிவிலேயே சொற்களால் கட்டி
    போட்டுடீங்க.

    ரசிச்சேன் என்று சொல்லுவது
    வெறும் வார்த்தை மட்டும்
    போதாது.

    பதிலளிநீக்கு
  63. ஒவ்வொரு வார்த்தையும் அனுபவித்து
    படித்தேன். அந்த ஏழை குழந்தைகளின்
    வாழ்க்கையை நினைத்தால் மனது
    கனக்கிறது, அவர்களை கடக்கும்போது
    இவர்களுக்கு என்ன வழி??

    யார் கொடுப்பார்கள் ??

    வாழ்க்கை முழுவதுமே இந்த சிக்னல் தானா?

    இந்த எனது கேள்விகள் தான் மனதை கலங்க வைக்கும்.

    பதிலளிநீக்கு
  64. படங்களும் அருமையோ அருமை.
    உங்களுக்கு எந்த விருது கொடுத்தாலும்
    தகும்.

    பதிலளிநீக்கு
  65. RAMYA said...

    // அவர்களை கடக்கும்போது
    இவர்களுக்கு என்ன வழி??

    யார் கொடுப்பார்கள் ??

    வாழ்க்கை முழுவதுமே இந்த சிக்னல் தானா?

    இந்த எனது கேள்விகள் தான் மனதை கலங்க வைக்கும்.//

    இந்தக் கேள்விகளுக்கு நல்ல விடைகள் கிடைக்க வேண்டுவோம்.
    அவர்கள் வாழ்வில் நல் மாற்றங்கள் நிகழ்ந்தால் அதுதான் நமக்கெல்லாம் விருது. உங்கள் ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ரம்யா!

    பதிலளிநீக்கு
  66. அன்புள்ள திருமதி ராமலக்ஷ்மி,

    அனுதினமும் காண்கின்ற காட்சி. அவை தரும் உணர்வுகள். இவைகள் ஒரு நொடியில் மறந்துபோகும் சாதாரண விஷயமா என்ற கேள்வியோடு இந்த மானுடத்தின் பார்வைக்கு உங்கள் படைப்பை தந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    "குடிசை நாய் கோடீஸ்வரன்" என்ற படத்தைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த படம் கொண்டுவந்துள்ள சர்ச்சைகள் என்னில் எத்தனையோ கேள்விகளை எழுப்பியுள்ளன. ஒரு ஏழைச் சிறுவன் கோடீஸ்வரனானால் போதுமா? இந்த வறுமையை காட்டி சம்பாதித்து பேரும் பெருமையும் வாங்கின சினிமாக் கூட்டத்திற்கு முதலீடு இந்த வறுமை தானே? நன்றிக் கடனாக இந்த ஏழ்மைக்கு என்ன தான் செய்தார்கள்? செய்ய உள்ளார்கள்? 110 கோடி மக்கள் நிறைந்த இந்த இந்தியா அநேகரால் படை எடுத்து கசக்கிப் பிழிந்து எறியப்பட்ட எச்சம். இது ஆமை வேகத்துடன் 60-61 வருடங்கள் தான் வளர்ந்துள்ளது. ஆம்!! இந்தியவை அரசியல்வாதிகள் அந்த வேகத்தில் தான் இந்தியாவை வளர்த்தியுள்ளது. ஒவ்வொரு தெருவின் மூலையிலும் ஒரு ஏழைக்குடும்பம் ஒருவேளை உணவிற்கு வழியின்றி பட்டினி மரணத்திற்குள் மூழ்கிக்கொண்டிருக்க தொடர்ந்து நமது பள்ளிகள் ஆங்கிலத்தில் கற்பித்துக் கொண்டிருக்கிறது
    " ஆல் இண்டியன்ஸ் ஆர் மை பிரதேர்ஸ் ஏண்ட் சிஸ்டேர்ஸ்" !!

    இறைவா
    இந்தியாவிற்கு
    இதயம் கொடு!!!

    நல்வாழ்த்துக்கள் திருமதி ராமலக்ஷ்மி

    அன்புடன் என் சுரேஷ்

    பதிலளிநீக்கு
  67. N Suresh said...
    //அனுதினமும் காண்கின்ற காட்சி. அவை தரும் உணர்வுகள். இவைகள் ஒரு நொடியில் மறந்துபோகும் சாதாரண விஷயமா என்ற கேள்வியோடு இந்த மானுடத்தின் பார்வைக்கு உங்கள் படைப்பை தந்துள்ளீர்கள்.//

    உண்மைதான்.

    //வாழ்த்துக்கள்.//

    நன்றி.

    //"குடிசை நாய் கோடீஸ்வரன்" என்ற படத்தைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த படம் கொண்டுவந்துள்ள சர்ச்சைகள் என்னில் எத்தனையோ கேள்விகளை எழுப்பியுள்ளன. ஒரு ஏழைச் சிறுவன் கோடீஸ்வரனானால் போதுமா? //

    போதாதுதான். மேலும் கதையில் வரும் இந்த வகையான அதிர்ஷ்டம் கோடியில் ஒருவருக்கு மட்டுமே வாய்க்கக் கூடியது. நாம் வேண்டுவது அது அல்லவே. அத்தகைய பாதிக்கப் பட்ட சிறுவர்கள் மீட்கப் பட்டு அடிப்படை வசதி, வாழ்வாதாரத்துக்கு தேவையான் கல்வி அளிக்கப் பட வேண்டும் என்பதே.

    //இந்த வறுமையை காட்டி சம்பாதித்து பேரும் பெருமையும் வாங்கின சினிமாக் கூட்டத்திற்கு முதலீடு இந்த வறுமை தானே?நன்றிக் கடனாக இந்த ஏழ்மைக்கு என்ன தான் செய்தார்கள்? செய்ய உள்ளார்கள்?//

    நீங்கள் சொல்வது உண்மைதான். படத்தைப் பற்றிய பிரதான சர்ச்சையும் இதுவேதான். இவர்கள் வறுமையைக் காட்டித்தான் சம்பாதித்தார்கள். ஆனால் அந்த வறுமையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது நன்மையில் முடிய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. நன்றிக் கடனாக அந்த சினிமா எடுத்தவர்கள் ஏதேனும் செய்தே ஆக வேண்டும் என நாம் எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்கு இந்தக் கதை இல்லையெனில் இன்னொரு கதை.

    ஓரிரு தினங்களுக்கு முன் டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் ஒரு செய்தி. இப்படத்துக்குப் பிறகு “ஸ்லம் டூர்” என்பது பிரபலமாகியுள்ளதாக. வெளிநாட்டினரை இது போன்ற சேரிகளுக்கு அழைத்துச் சென்று ‘இதுதான் 12 பேர் தங்கும் அறை’ என்று காட்டி பணம் சம்பாதிக்கப் படுவதாக. வறுமை பணமாக்கப் படும் அவலங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

    // 110 கோடி மக்கள் நிறைந்த இந்த இந்தியா அநேகரால் படை எடுத்து கசக்கிப் பிழிந்து எறியப்பட்ட எச்சம். இது ஆமை வேகத்துடன் 60-61 வருடங்கள் தான் வளர்ந்துள்ளது. ஆம்!! இந்தியவை அரசியல்வாதிகள் அந்த வேகத்தில் தான் இந்தியாவை வளர்த்தியுள்ளது//

    இது.. இதுதான் நான் சொல்ல வந்தது. ஆமை வேகமோ அசுர வேகமோ.. ‘வளர்ந்துள்ளது’ ’வளர்ந்து விட்டோம்’ ‘நாங்கள்தான் வளர்த்தே விட்டோம்’ என்றெல்லாம் வாய் கிழியப் பேசும் அரசியல்வாதிகள் இனி உலகம் நம் நாட்டைப் பார்க்கும் பார்வையில் வெட்கப் பட்டாவது ஆவன செய்வார்களா என்பதே என் கேள்வி.

    //. ஒவ்வொரு தெருவின் மூலையிலும் ஒரு ஏழைக்குடும்பம் ஒருவேளை உணவிற்கு வழியின்றி பட்டினி மரணத்திற்குள் மூழ்கிக்கொண்டிருக்க தொடர்ந்து நமது பள்ளிகள் ஆங்கிலத்தில் கற்பித்துக் கொண்டிருக்கிறது
    " ஆல் இண்டியன்ஸ் ஆர் மை பிரதேர்ஸ் ஏண்ட் சிஸ்டேர்ஸ்" !!

    இறைவா
    இந்தியாவிற்கு
    இதயம் கொடு!!!//

    உண்மைதான் சுரேஷ். பள்ளிகளில் ஒலிக்கும் அந்த அர்த்தமற்ற பிரார்த்தனையை விட நீங்கள் முடிவாய் சொல்லியிருக்கும் வரிகளே நம் பிரார்த்தனையாக இருக்கட்டும்.

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  68. //படத்தைக் கண்டிப்பாகப் பாருங்கள்:).//

    கண்டிப்பாக. சிங்கையில் இந்த வாரம் தான் வெளியிட்டார்கள். நான் எப்போதும் திரைஅரங்கில் தான் பார்ப்பேன் ;-)

    பதிலளிநீக்கு
  69. கிரி said...

    //கண்டிப்பாக. சிங்கையில் இந்த வாரம் தான் வெளியிட்டார்கள்.//

    பார்த்து விட்டு சொல்லுங்கள்:)!

    //நான் எப்போதும் திரைஅரங்கில் தான் பார்ப்பேன் ;-)//

    தெரியும் தெரியும்:)! அட, நான் கூட இந்தப் படத்தைத் தியேட்டரில்தான் பார்த்தேன். ஆதாரம் இங்கே:)!

    பதிலளிநீக்கு
  70. இன்னிக்கு பாருங்க யூத்புல் விகடன் http://youthful.vikatan.com/youth/index.asp. இந்த செந்தாமரை அங்கே பூத்திருக்கு :)

    பதிலளிநீக்கு
  71. //ராமலக்ஷ்மி said...
    கிரி said...
    //கண்டிப்பாக. சிங்கையில் இந்த வாரம் தான் வெளியிட்டார்கள்.//
    பார்த்து விட்டு சொல்லுங்கள்:)!//

    இன்று பார்த்து விட்டேன் ராமலக்ஷ்மி.

    அருமை! என்ன! நம்ம நாட்டு மானத்தை தான் வாங்கிட்டாங்க! ;-)

    பொதுவா எனக்கு செட்டிங் போடாமல் இயல்பாக எடுக்கப்படும் படங்களே ரொம்ப பிடிக்கும் மஹாநதி(சிறை மட்டுமே செட்டிங் அது கூட தெரியாது) வெய்யில், பருத்தி வீரன் போன்ற படங்கள்.

    அதே போல இந்த படத்திலும் எடுக்கப்பட்ட காட்சிகள் இடங்கள் அனைத்தும் உயிரோட்டம் உள்ளவை.

    இந்த ஆங்கில இயக்குனர் எப்படி நம் பழக்க வழக்கங்கள் திரை காட்சிகள் போன்றவற்றை அசத்தலாக எடுத்தார் என்று எனக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது.

    சேரி மக்களின் வாழ்க்கை, சிகப்பு விளக்கு பகுதி, தாஜ்மஹால் என்று அனைத்து இடங்களும் அத்தனை அருமையாக காட்டப்பட்டு இருந்தன.

    அதுவும் அவர் 2 கோடி வெல்ல போகும் போது அனைத்து மக்களும் டிவி முன் இருந்து அவருக்காக வேண்டுவது (முகபாவனைகள்), அருமையாக காட்டப்பட்டு இருந்தது (செயற்கையாக இல்லாமல்)

    நான் ஒரிஜினல் DVD வாங்க போகிறேன் .. :-)

    பதிலளிநீக்கு
  72. ஆனந்தவிகடனின் சிறப்புப் பாராட்டைப் பெற்ற ராமலக்ஷ்மிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  73. வாழ்த்துக்கள்!

    கலக்கிப்புட்டீங்க!

    பதிலளிநீக்கு
  74. வாழ்த்துகள் சகோதரி,

    ஆனந்தவிகடனின் "Good Blogs'ல் நீங்கள். மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  75. Congratulations, Ramalakshmi! :-)

    Honestly, you deserve more than this recognition, Ramalakshmi :-)
    Let us hope quality bloggers like you are well-recognized and appreciated and, your poems and articles reach millions of Tamils in the future!

    -வருண்

    பதிலளிநீக்கு
  76. சதங்கா (Sathanga) said...

    //இன்னிக்கு பாருங்க யூத்புல் விகடன் http://youthful.vikatan.com/youth/index.asp. இந்த செந்தாமரை அங்கே பூத்திருக்கு :)//

    நன்றி சதங்கா:). உங்கள் ‘உறுமி மேளம்’ அங்கே ஒலித்த மறுநாள் ’செந்தாமரை’யும் பூத்து விட்டதில் இருவருக்குமே இரட்டை மகிழ்ச்சி!!

    பதிலளிநீக்கு
  77. கிரி said...

    //அருமை! என்ன! நம்ம நாட்டு மானத்தை தான் வாங்கிட்டாங்க! ;-)//

    அப்படி நினைத்தாவது நாடு முன்னேறி விட்டது என மார் தட்டும் அரசியல்வாதிகள் வெட்கப் பட்டு ஆவன செய்யட்டுமே கிரி.

    ஒரு நல்ல மினி விமர்சனமே தந்திருக்கிறீர்கள் பின்னூட்டத்தில்:)!


    //நான் ஒரிஜினல் DVD வாங்க போகிறேன் .. :-)//

    நல்லது. நானும் சர்வேசன் திரைபார்வையில் படித்து விட்டு பார்க்க விரும்பிய ‘மும்பை மேரி ஜான்’ ஒரிஜனல்:) டிவிடி வாங்கி வைத்திருக்கிறேன். இனிதான் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  78. நானானி said...

    //ஆனந்தவிகடனின் சிறப்புப் பாராட்டைப் பெற்ற ராமலக்ஷ்மிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!//

    என் மனமார்ந்த நன்றிகள். உங்கள் பாராட்டுக்கள் எனக்கு என்றைக்கும் தனிச் சிறப்பு:)!

    பதிலளிநீக்கு
  79. SurveySan said...

    //வாழ்த்துக்கள்!

    கலக்கிப்புட்டீங்க!//

    ஸ்லம்டாக் படத்துக்கான உங்கள் திரைப்பார்வையைப் படித்துக் கிடைத்த பொறியில் படைத்த கவிதை இது என்றால் அது மிகையல்ல. அதற்கும் சேர்த்து என் நன்றிகள்:)!

    பதிலளிநீக்கு
  80. இப்னு ஹம்துன் said...

    //வாழ்த்துகள் சகோதரி,

    ஆனந்தவிகடனின் "Good Blogs'ல் நீங்கள். மகிழ்ச்சி//

    உங்கள் வாழ்த்துக்களுக்கும் முதல் வருகைக்கும் நன்றி இப்னு. உங்களைப் போன்ற கவிஞரிடமிருந்து பெறும் பாராட்டு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

    பதிலளிநீக்கு
  81. வருண் said...

    //Congratulations, Ramalakshmi! :-)

    Honestly, you deserve more than this recognition, Ramalakshmi :-)
    Let us hope quality bloggers like you are well-recognized and appreciated and, your poems and articles reach millions of Tamils in the future!//

    உங்கள் மனம் திறந்த பாராட்டுக்கு மிக்க நன்றி வருண்:)! இன்னும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்கிற உந்துதலைக் கொடுக்கிறது உங்கள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  82. N Suresh said...

    //நன்றிக் கடனாக இந்த ஏழ்மைக்கு என்ன தான் செய்தார்கள்? செய்ய உள்ளார்கள்?//

    சுரேஷ் உங்களது ஆதங்கத்துக்கு ஒரு ஆறுதலாக இருக்கிறதா பாருங்கள் இந்தச் செய்தி:
    Danny Boyle sets up Mumbai slums charity.

    நல்லவை நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin