சனி, 5 ஆகஸ்ட், 2017

எல்லோருக்கும் ரமணா

#1
பேரமைதியுடன் திகழும் தியான மண்டபத்துடன் கூடிய ரமண மகிரிஷி கோவில் ஒன்று பெங்களூரின் மெக்ரி சர்க்கிள் அருகே உள்ளது.
#2

கோவிலை அடுத்த பூங்காவுக்கு ஏன் “ரமண மகிரிஷி பூங்கா” எனப் பெயர் வந்ததென்பது தற்செயலாகப் பூங்காவை ஒட்டி இருக்கும் மைதானத்தைக் கடந்து சென்ற போதுதான் புரிந்தது.


நான் முன்னர் வசித்த வீட்டிலிருந்து சில கி.மீட்டர் தூரம்த்திலிருக்கிறது இந்தப் பூங்கா. முதலில் அதைப் பற்றிய சில விவரங்களைப் பார்ப்போம்.

பெங்களூரின் நான்கு எல்லைகளையும் வரையறுக்கும் விதமாக 1537 ஆம் ஆண்டு கட்டப்பட்ட 4 கெம்பகெளடா மண்டபங்களில் ஒன்று இந்தப் பூங்காவில்தான் உள்ளது. அந்நாளின் வடக்கு எல்லையைக் குறிக்கிறது இங்குள்ள மண்டபம் மட்டுமே குன்றின் மேல் அல்லாமல் தரை அளவில் அமைந்த ஒன்று. ஒரு சில சிலைகள் தலைகள் இழந்து காணப்பட்டாலும் ஓரளவுக்கு நல்ல நிலையிலேயே உள்ளது. ஒரே தோற்றத்தில் அமைந்த மற்ற மூன்று மண்டபங்கள் கெம்பம்புத்தி ஏரி, அல்சூர் ஏரி, லால்பாக் ஆகிய இடங்களின் அருகே அமைந்துள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியாக ஒற்றைப் பாறையைக் குடைந்து செய்யப் பட்டவை என்பதுவும் இவற்றின் சிறப்பு.

அழகாகப் பராமரிக்கப்பட்டு வந்த பூங்காவுக்கு பூக்களையும் வண்ணத்துப் பூச்சிகளையும் படமெடுப்பதற்காகவே அடிக்கடி முன்னர் செல்வதுண்டு. குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தின் போது நடைபெறும் லால்பாக் மலர் கண்காட்சியைப் பார்க்கச் செல்ல முடியாதவர்களுக்காக இந்தப் பூங்காவிலும் சிறப்பு மலர் அலங்காரங்கள் இருக்கும்.

அப்போது எடுத்த படங்கள் சில பார்வைக்கு:



2011ஆம் வருடம், அன்றைய பெங்களூர்’ எனும் தலைப்பின் கீழ் அமைக்கப்பட்டிருந்த மலரால் ஆன கெம்பகெளடா மண்டபமும், நான் ரமண மகிரிஷி பூங்காவில் படமாக்கிய நிஜ மண்டபமும்:


மலர்க் கண்காட்சி அலங்காரத்திற்காக ஒரு முறை கர்நாடக அரசிடமிருந்து முதல் பரிசினையும் வென்றிருக்கிறது இந்தப் பூங்கா. ஆயினும் என் பார்வையில் வருடங்கள் செல்லச் செல்ல பராமரிப்பு சிறப்பாகத் தெரியவில்லை. ஓரளவுக்கு சுத்தமாக வைத்திருந்தாலும் பல வித மலர்ச் செடிகள் வைப்பதில், பராமரிப்பதில் அக்கறையின்மை ஆர்வக் குறைவு தெரிந்தது. கடைசியாக 2015_ல் சென்ற போது, பூக்கள் அதிகம் இல்லாததால் பார்த்து ரசிக்க ஜனங்களும் இல்லாமல் காலியாகக் கிடந்த பூங்கா:

#3

வருத்தத்துடன் ஒரு சுற்று வந்த பின்னர் அங்கிருந்த மைதானத்தைக் கடந்து சென்ற போதுதான் தெரிந்தது, அடுத்திருந்த நீண்ட கட்டிடம், ரமண மகிரிஷி தியான மண்டபம் என்பதும், அதனாலேயே பூங்காவுக்கும் அந்தப் பெயர் என்பதும்.

#4

கோவிலின் உள்ளிருந்து தெரிகிற முகப்பு, பெங்களூர் பேலஸ் மைதானத்தின் “திரிபுரா வாஸினி” நுழைவாயிலுக்கு நேர் எதிராக அமைந்துள்ளது. இந்த மண்டபம் திரு. குண்டுராவ் மாநில முதல்வராக இருந்த காலத்தில் அவரால் திறந்து வைக்கப் பட்டது.

#5

அமைதியான அதன் சூழல் மக்கள் விரும்பித் தேடி வரும் இடமாக இருக்கிறது. பெரிய தியான கூடத்தில் ஆங்காங்கே அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் மூழ்கியிருந்தவர்களைப் பார்க்க முடிந்தது.

#6

எல்லோருக்கும் ரமணா” என்பதே இந்த நிறுவனத்தின் நோக்கமாக இருக்க, எல்லா தரப்பு மக்களையும், எல்லா வயது மனிதர்களையும் வரவேற்று அரவணைத்துச் செல்கிறது.

#7

பகவானின் விக்ரகமானது இருண்ட குகைக்குள் காணக் கிடைக்கும் ஒளியைப் போல உடலுக்கும் மனதுக்கும் அமைதியை அளிக்க வல்லது எனக் கூறுகின்றார்கள்.

#8

#9


#10


#11

இந்தப் பழமை வாய்ந்த கட்டிடத்தில் 2500 புத்தகங்களைக் கொண்ட நூலகம் ஒன்றும் இயங்கி வருகிறது. ஆன்மீகம், தத்துவம், கலாச்சாரம் தொடர்ப்பான நூல்களோடு பத்திரிகைகளையும் படிக்க வழங்கும் இந்நூலகத்தில் குழந்தைகளுக்கென்று தனிப் பகுதியும் உண்டு. ஒவ்வொரு பவுர்ணமியின் போதும் இரவு ஏழு மணி அளவில் கோவிலைச் சுற்றி வந்து பஜனைகள் நடைபெறுகின்றன.
***


12 கருத்துகள்:

  1. அழகான படங்கள். தலைநகர் தில்லியிலும் ரமண கேந்திரா உண்டு. ஆனால் சிறிய வளாகம். சில முறை சென்றிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. இத்தனை வருடங்கள் பெங்களூரில் இருந்தும் இது பற்றி ஏதும் தெரிந்திருக்கவில்லை பகிர்வுக்கு நன்றி மேம்

    பதிலளிநீக்கு
  3. பெங்களூரில் ஸ்ரீ ராமணருக்கு ஒரு கோயில் இருப்பது தெரியாது . தகவலுக்கு நன்றி ஃ போட்டோக்கள் சூப்பர்

    பதிலளிநீக்கு
  4. அருமையான இடம்...கண்டிப்பாக காண வேண்டும்...

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin