முத்துச்சரம்:
இப்போதுதான் பிறந்தது போலிருந்த 2017 இதோ முடியப் போகிறது. முத்துச்சரத்தில் கோத்தவற்றில் திரும்பிப் பார்க்கும் வகையில் அதிகம் ஏதுமின்றி நகர்ந்து போன வருடம். இருந்தாலும் இந்த வருடக் குறிப்பாக இருக்கட்டுமென...
சராசரியாக மாதம் ஐந்து பதிவுகள். எழுத்து குறைந்து போனாலும் கேமராவை கீழே வைக்காததால் ஃப்ளிக்கரில் பகிர்ந்த படங்களின் தொகுப்புகள், பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன் ‘வாழ்வியல் சிந்தனைகள்’ பகுப்பின் கீழ்: (17 பதிவுகள்)
2008_ஆம் ஆண்டு தொடங்கிய ஃப்ளிக்கர் பக்கத்தில், சராசரியாக தினம் ஒன்றாகப் பதிந்த படங்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இடைவிடாமல் ஒரு துறையிலேனும் இயங்கி வருவதில் திருப்தியே.
முத்துச்சரத்தில், புகைப்பட வரிசையில் என் வீட்டுத் தோட்டத்தில்.. (19 பதிவுகள்) மற்றும் பறவை பார்ப்போம் (12 பதிவுகள்) பாகங்களும் அடங்கும்.
தினமலர் பட்டம் இதழில், எடுத்த படங்களுடன் வெளியான தகவல்கள்: (5)
படம், கல்கி தீபாவளி மலரில்.. (1)
கவிதைகள்: சொல்வனம் மின்னிதழில் (2), தென்றல் அமெரிக்கப் பத்திரிகையில் (2) , மங்கையர் மலர் தீபாவளி சிறப்பிதழில் (1)
#
#
#
நூல் விமர்சனங்கள்: கல்கியில் (1) ; திண்ணையில் (2)
#
#
#
பயணம்: சேமிப்பில் கிடந்து போனப் படங்களைப் பகிர்ந்திடும் எண்ணத்தில்.., மைசூர் பதிவுகள் (3);
சிறுகதை:
ஸ்ரீராம் கேட்டுக் கொண்டதால் எழுதிய ஒரே கதை.
கதைக்குக் கிடைத்த பாராட்டுகள் அவரையே சேரும்!
வரும் வருடத்திற்கான திட்டம் என எதையும் வைத்துக் கொள்ளப் போவதில்லை. சொன்னதைச் செய்யாத உறுத்தலே மிஞ்சுகிறது. இயன்றதைச் செய்ய வேண்டும். இயன்ற வரையிலும் தொடர்ந்து செயல்பட வேண்டும். இந்த எண்ணத்துடனே வரவேற்க உள்ளேன் வரும் வருடத்தை!
**
வல்லமை:
வல்லமை மின்னிதழில் ஆறாவது முறையாக, படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வான எனது படம்:
படத்துக்கு வந்த கவிதைகள் இங்கே.
போட்டி முடிவு இங்கே.
ஆல்பம்:
வருட ஆரம்பத்தில் தோழி சாந்தியுடனான சந்திப்பை இங்கே பகிர்ந்திருந்தேன். தவிர இந்த ஆண்டில் வாய்த்த மற்றுமொரு சந்திப்பு, திரு. ஐயப்பன் கிருஷ்ணனின் புது இல்லத்தில் திரு. ஹரி கிருஷ்ணன் மற்றும் திரு மகேஷ் ஆகியோருடன்..
பாகுபலி:
கோமதீஸ்வர் சிலை (Gommateshwara Statue) 57 அடி உயரம் கொண்ட, கர்நாடகா மாநிலத்தின் ஹாசன் மாவட்டதிலுள்ள விந்தியகிரி மலையடிவாரத்தில், திகம்பர சமண சமய மையங்கள் அதிகம் கொண்ட ஷரவணபெலகுலா எனுமிடத்தில் அருள்பாலித்து நிற்கிறார் 57 அடி உயரம் கொண்ட, பாகுபலி. அருகதரான பாகுபலிக்குப் அர்ப்பணிக்கப்பட்ட கோமதீஸ்வரர் எனும் பெயர் கொண்ட இச்சிலை ஒரே கருங்கல்லால் வடிக்கப்பட்டது.
மேலைக் கங்க மன்னரின் படைத்தலைவரும், அமைச்சருமான சந்திரராயன் என்பவரால் கிபி 983ல் உருவாக்கப்பட்டது. தீர்த்தங்கரராகிய கோமதீஸ்வர் கடுந்தவம் புரிகையில் அவரைச் சுற்றி எறும்புப் புற்று தோன்றி தலைப்பாகம் வரை மறைத்திருந்ததாகவும், உடலில் கொடிகள் படர்ந்து சுற்றிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. அதனாலேயே சிலையும் அந்த கோலத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோமதீஸ்வரர் சிலைக்கு 12 ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் மகாமஸ்தக அபிஷேகத்தின் போது உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் இங்கு கூடுகின்றனர். குடமுழுக்கின் போது கோமதீஸ்வரர் சிலைக்கு 1008 கலசங்களிலிருந்து நீர், பால், தயிர், சந்தனம், குங்குமப்பூ, குங்குமம் மற்றும் இளநீரால் அபிசேகம் நடைபெறும். திருமுடி அருகே பக்தர்கள் நின்று அபிஷேகம் செய்ய அந்த உயரத்துக்கு தளம் அமைத்து வசதி செய்து தரப்படுகிறது. 2006-ல் அவ்விழாவையொட்டி சென்றிருந்த போது அபிஷேகத்தைக் காணும் வாய்ப்புக் கிட்டியது. 12 ஆண்டுகள் கழித்து வருகிற ஆண்ட 2018 பிப்ரவரி 17 முதல் 24_ஆம் தேதிகள் வரையிலும் நடைபெற உள்ள மகாமஸ்தக அபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சுமார் 25 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மலையின் உச்சிக்குச் செல்ல சுமார் 700 படிகள் ஏறிச் செல்ல வேண்டியிருக்கும். காலணிகளுக்கு அனுமதியில்லை. ஆனால் கற்படிக்கட்டுகளிலிருக்கும் வெப்பத்திலிருந்து பாதங்களைப் பாதுகாத்துக் கொள்ள காலுறைகள் அணிந்து செல்லலாம். முன்னரே எடுத்துச் செல்வது நலம். இல்லையெனில் அடிவாரத்தில் விற்பனைக்கும், வாடகைக்கும் வைத்திருக்கிறார்கள். ஏறிச் செல்லும் போது இடையிடையே சற்று நின்று ஓய்வெடுத்துக் கொள்ளலாம் இப்படி..:)
#
வயதானவர்கள், குழந்தைகளை கூடைகளில் நான்கு பேர் சுமந்து செல்லும் சேவையும் உள்ளது. இந்த மகாமஸ்தக விழாவுக்கு மலை உச்சிக்குச் செல்லும் வகையிலும், சிலையின் உச்சிக்கு அபிஷேகத்திற்குச் செல்லவும் லிஃப்ட் வசதி வைக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இலட்சக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் அனைவருக்கும் இதைப் பயன்படுத்துவது சாத்தியமாகாது. 2018 மகாமஸ்தக அபிஷேகத்தைக் காண விரும்புகிறவர்கள் முன் கூட்டியே திட்டமிட ஆரம்பிக்கலாம். மேலதிகத் தகவல்களை இந்தப் பக்கத்திலிருந்து அறிந்திடலாம்:
படத்துளி:
#
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
இப்போதுதான் பிறந்தது போலிருந்த 2017 இதோ முடியப் போகிறது. முத்துச்சரத்தில் கோத்தவற்றில் திரும்பிப் பார்க்கும் வகையில் அதிகம் ஏதுமின்றி நகர்ந்து போன வருடம். இருந்தாலும் இந்த வருடக் குறிப்பாக இருக்கட்டுமென...
சராசரியாக மாதம் ஐந்து பதிவுகள். எழுத்து குறைந்து போனாலும் கேமராவை கீழே வைக்காததால் ஃப்ளிக்கரில் பகிர்ந்த படங்களின் தொகுப்புகள், பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன் ‘வாழ்வியல் சிந்தனைகள்’ பகுப்பின் கீழ்: (17 பதிவுகள்)
2008_ஆம் ஆண்டு தொடங்கிய ஃப்ளிக்கர் பக்கத்தில், சராசரியாக தினம் ஒன்றாகப் பதிந்த படங்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இடைவிடாமல் ஒரு துறையிலேனும் இயங்கி வருவதில் திருப்தியே.
முத்துச்சரத்தில், புகைப்பட வரிசையில் என் வீட்டுத் தோட்டத்தில்.. (19 பதிவுகள்) மற்றும் பறவை பார்ப்போம் (12 பதிவுகள்) பாகங்களும் அடங்கும்.
தினமலர் பட்டம் இதழில், எடுத்த படங்களுடன் வெளியான தகவல்கள்: (5)
படம், கல்கி தீபாவளி மலரில்.. (1)
கவிதைகள்: சொல்வனம் மின்னிதழில் (2), தென்றல் அமெரிக்கப் பத்திரிகையில் (2) , மங்கையர் மலர் தீபாவளி சிறப்பிதழில் (1)
#
#
#
நூல் விமர்சனங்கள்: கல்கியில் (1) ; திண்ணையில் (2)
#
#
#
பயணம்: சேமிப்பில் கிடந்து போனப் படங்களைப் பகிர்ந்திடும் எண்ணத்தில்.., மைசூர் பதிவுகள் (3);
சிறுகதை:
ஸ்ரீராம் கேட்டுக் கொண்டதால் எழுதிய ஒரே கதை.
கதைக்குக் கிடைத்த பாராட்டுகள் அவரையே சேரும்!
வரும் வருடத்திற்கான திட்டம் என எதையும் வைத்துக் கொள்ளப் போவதில்லை. சொன்னதைச் செய்யாத உறுத்தலே மிஞ்சுகிறது. இயன்றதைச் செய்ய வேண்டும். இயன்ற வரையிலும் தொடர்ந்து செயல்பட வேண்டும். இந்த எண்ணத்துடனே வரவேற்க உள்ளேன் வரும் வருடத்தை!
**
வல்லமை:
வல்லமை மின்னிதழில் ஆறாவது முறையாக, படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வான எனது படம்:
படத்துக்கு வந்த கவிதைகள் இங்கே.
போட்டி முடிவு இங்கே.
வல்லமை ஆசிரியர் குழுவினருக்கு எனது நன்றி. கலந்து கொண்டவர்களுக்கும் வெற்றி பெற்றவருக்கும் வாழ்த்துகள்!
**
[இதே படத்துக்கு நான் எழுதி தென்றலில் வெளியான கவிதை இங்கே .]
***
ஆல்பம்:
வருட ஆரம்பத்தில் தோழி சாந்தியுடனான சந்திப்பை இங்கே பகிர்ந்திருந்தேன். தவிர இந்த ஆண்டில் வாய்த்த மற்றுமொரு சந்திப்பு, திரு. ஐயப்பன் கிருஷ்ணனின் புது இல்லத்தில் திரு. ஹரி கிருஷ்ணன் மற்றும் திரு மகேஷ் ஆகியோருடன்..
மொபைல் க்ளிக்ஸ்.. |
பாகுபலி:
கோமதீஸ்வர் சிலை (Gommateshwara Statue) 57 அடி உயரம் கொண்ட, கர்நாடகா மாநிலத்தின் ஹாசன் மாவட்டதிலுள்ள விந்தியகிரி மலையடிவாரத்தில், திகம்பர சமண சமய மையங்கள் அதிகம் கொண்ட ஷரவணபெலகுலா எனுமிடத்தில் அருள்பாலித்து நிற்கிறார் 57 அடி உயரம் கொண்ட, பாகுபலி. அருகதரான பாகுபலிக்குப் அர்ப்பணிக்கப்பட்ட கோமதீஸ்வரர் எனும் பெயர் கொண்ட இச்சிலை ஒரே கருங்கல்லால் வடிக்கப்பட்டது.
கோமதீஸ்வரர் சிலைக்கு 12 ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் மகாமஸ்தக அபிஷேகத்தின் போது உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் இங்கு கூடுகின்றனர். குடமுழுக்கின் போது கோமதீஸ்வரர் சிலைக்கு 1008 கலசங்களிலிருந்து நீர், பால், தயிர், சந்தனம், குங்குமப்பூ, குங்குமம் மற்றும் இளநீரால் அபிசேகம் நடைபெறும். திருமுடி அருகே பக்தர்கள் நின்று அபிஷேகம் செய்ய அந்த உயரத்துக்கு தளம் அமைத்து வசதி செய்து தரப்படுகிறது. 2006-ல் அவ்விழாவையொட்டி சென்றிருந்த போது அபிஷேகத்தைக் காணும் வாய்ப்புக் கிட்டியது. 12 ஆண்டுகள் கழித்து வருகிற ஆண்ட 2018 பிப்ரவரி 17 முதல் 24_ஆம் தேதிகள் வரையிலும் நடைபெற உள்ள மகாமஸ்தக அபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சுமார் 25 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மலையின் உச்சிக்குச் செல்ல சுமார் 700 படிகள் ஏறிச் செல்ல வேண்டியிருக்கும். காலணிகளுக்கு அனுமதியில்லை. ஆனால் கற்படிக்கட்டுகளிலிருக்கும் வெப்பத்திலிருந்து பாதங்களைப் பாதுகாத்துக் கொள்ள காலுறைகள் அணிந்து செல்லலாம். முன்னரே எடுத்துச் செல்வது நலம். இல்லையெனில் அடிவாரத்தில் விற்பனைக்கும், வாடகைக்கும் வைத்திருக்கிறார்கள். ஏறிச் செல்லும் போது இடையிடையே சற்று நின்று ஓய்வெடுத்துக் கொள்ளலாம் இப்படி..:)
#
வயதானவர்கள், குழந்தைகளை கூடைகளில் நான்கு பேர் சுமந்து செல்லும் சேவையும் உள்ளது. இந்த மகாமஸ்தக விழாவுக்கு மலை உச்சிக்குச் செல்லும் வகையிலும், சிலையின் உச்சிக்கு அபிஷேகத்திற்குச் செல்லவும் லிஃப்ட் வசதி வைக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இலட்சக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் அனைவருக்கும் இதைப் பயன்படுத்துவது சாத்தியமாகாது. 2018 மகாமஸ்தக அபிஷேகத்தைக் காண விரும்புகிறவர்கள் முன் கூட்டியே திட்டமிட ஆரம்பிக்கலாம். மேலதிகத் தகவல்களை இந்தப் பக்கத்திலிருந்து அறிந்திடலாம்:
படத்துளி:
#
‘தேடல்களை ஒரு போதும் நிறுத்திடாதீர்கள்!’
பயணம் தொடரும்.. ** |
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
***
நல்லதொரு சுய பார்வை! திரும்பிப் பார்க்கும்போது நம் பணி நமக்கே திருப்தி அளிக்கும்படி இருந்தால் அது போதும் என்பது என் எண்ணம். வரும் வருடத்தில் இன்னும் கொஞ்சம் அதிக பதிவுகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதவேண்டும் நீங்கள் என்பது என்வேண்டுகோள்.
பதிலளிநீக்குவாழ்த்துகளும், பாராட்டுகளும்.
/நம் பணி நமக்கே திருப்தி அளிக்கும்படி/ நீங்கள் சொல்வது சரியே.
நீக்குநிச்சயம் முயன்றிடுகிறேன்.
நன்றி ஸ்ரீராம்.
திரும்பிப் பார்த்ததில் கிடைத்த விஷயங்கள் நன்று. வரும் வருடம் இன்னும் சிறப்பாய் இருக்கட்டும்.
பதிலளிநீக்குகவிதைகள், கதைகள் பக்கமும் கவனம் திருப்புங்கள்....
நன்றி வெங்கட். முயன்றிடுவேன்.
நீக்குசுய மதிப்பீடு நம்மை மென்மேலும் வளர வைக்கும். உங்களது பணி சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குகடந்த நிகழ்வுகளை திரும்பிப் பார்ப்பதும் சுவைதான்
பதிலளிநீக்குஆம். நன்றி GMB sir.
நீக்குதிரும்பி பார்த்த பார்வை ரசனைக்கு உரியதாய் இருந்தது தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி பூவிழி.
நீக்குசிறந்த தொகுப்பு - தங்கள்
பதிலளிநீக்குஆளுமையை வெளிப்படுத்தும் ஒரே பதிவு!
இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்
எந்த உறவுக்கும் அமைய வேண்டுமென
அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்!
மிக்க நன்றி.
நீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரியாரே
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குமனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குநன்றி மனோம்மா.
நீக்குஅழகிய படங்கள், கட்டுரைகள், கவிதைகள், பொன்மொழிகள், இயற்கையின் படைப்புகளைக் குறித்த தகவல்கள் என ஒவ்வொன்றும் தரம் குன்றாத மிகச் சிறந்த படைப்புகள். உங்களுடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்புக்குப் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஉங்களுடைய எழுத்துக்களை வாசிக்கும்போது எப்போதும் மனதில் நேர்மறையான எண்ணங்களும், இயற்கை நேசிக்கும் தன்மையையும் மேலோங்கின. மிக்க நன்றி.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி. தொடர்ந்து அளித்து வந்த கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
நீக்குஇந்த புதிய ஆண்டு மகிழ்வோடு அமைய எனது வாழ்த்துக்களும் ....
பதிலளிநீக்குபல அழகிய படங்களுடன் உங்கள் பார்வை அழகு...
சரவணபெலகோல பார்க்க விரும்பும் ஒரு இடம்...
பார்க்கலாம் வாய்ப்பு கிடைக்கும் போது..அதற்கு முன் இங்கே அழகிய தரிசனம் கிடைத்தது ,,நன்றி..
வாய்ப்பு கிடைத்தால் அவசியம் செல்லுங்கள்.
நீக்குநன்றி அனுராதா.
திரும்பி பார்ப்பது நல்லது தான், புதிய ஆண்டில் பல சாதனைகள் தொடரட்டும்.
பதிலளிநீக்குபடங்கள் அழகு.
நன்றி கோமதிம்மா.
நீக்கு