“சூரியன் கூடத் தனியேதான் இருக்கிறது.
ஆனாலும் பிரகாசமாகவே இருக்கிறது.”
ஆனாலும் பிரகாசமாகவே இருக்கிறது.”
#2
“நீண்ட தொலைவுக்கு உங்கள் பார்வை செல்ல வேண்டாம், ஏனெனில் உங்களால் எதையுமே பார்க்க முடியாது போகும்.”
“ஐந்தே நிமிடக் கருத்துப் பரிமாற்றம் ஓர் ஆண்டுக்கு மேலாக இழுத்தடிக்க வல்ல மனஸ்தாபத்தையும் குழப்பத்தையும் தவிர்க்க உதவும்.”
_Joyce Meyer
#4
"வாழும் கலையானது விட வேண்டியதை விட்டு, பற்றிக் கொள்ள வேண்டியதைப் பற்றிக் கொள்ளும் அழகிய கலவையில் அடங்கியிருக்கிறது."
_ Havelock Ellis
#5
‘நாய்கள் பேசும், புரிந்து கொள்ளக் கூடியவர்களிடம் மட்டும்.’
_Orhan Pamuk
#6
“தனிமைக்கென்று ஒரு சக்தி உள்ளது.
வெகு சிலராலேயே அதைக் கையாள முடியும்.”
— StevenAitchison
#7
"எல்லோரையும் போலவே இருக்க உங்களைத் தயார் செய்யும் உலகில், நீங்கள் நீங்களாக இருத்தலே வாழ்க்கையின் மிகப் பெரிய சவால் ஆகும்."
- Drake
#8
‘அடைய விரும்பும் அனைத்தும் அச்சத்துக்கு அப்பால் உள்ளன.’
#9
'வாழ்க்கையின் போக்கில் போகிறவர்களுக்குத் தெரியும், வேறெந்த உந்து சக்தியும் தேவையில்லை என்பது '
_Lao Tzu
#10
‘வாழ்க்கையைப் பார்த்துப் புன்னகை புரி. அது உன்னை நோக்கி திரும்பப் புன்னகைக்கும்.’
#11
'இந்த வாழ்க்கை உனக்குக் கொடுக்கப்பட்டிருப்பதன் காரணம், அதை வாழ்வதற்கான பலம் உனக்கு இருக்கிறது என்பதனாலேயே!’
(எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடரும்..)
***
சூரியன் தனியே இருந்தாலும் பிரகாசமாக இருக்க தன்னைத்தானே எரித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது!
பதிலளிநீக்குநாய்கள் மட்டுமல்ல, செடிகொடிகளும் பேசும் - புரிந்து கொள்பவர்களிடம்!
படங்களையும் வரிகளையும் ரசித்தேன்.
உண்மைதான்.
நீக்குபடத்துக்காக இங்கே நாய்களைப் பற்றி மட்டும். செடி கொடி பாசம் என்றதும் எனது ‘இதுவும் கடந்து போகும்’ கதை நினைவுக்கு வருகிறது: http://tamilamudam.blogspot.in/2013/01/blog-post_17.html
நன்றி ஸ்ரீராம்:).
அழகான படங்கள் அழகான பொருத்தமான வரிகள்.
பதிலளிநீக்கு//வாழ்க்கையின் போக்கில் போகிறவர்களுக்கு //
பிடித்த வரி.
நன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்களும் வரிகளும் ரசனைமிக்கவை
பதிலளிநீக்குமிக்க நன்றி GMB sir.
நீக்குஆகா...!
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
நீக்குஅழகிய படங்களுடன் தொகுப்பு அருமை.
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
நீக்குசிறப்பான வாசகங்களும்...அழகு படங்களும்...
பதிலளிநீக்குநன்றி அனுராதா.
நீக்குஎவற்றை விட்டுவிடுவது, எவற்றைப் பற்றிக்கொள்வது என்பது அறிந்து, புரிந்து, உணர்ந்து நிலைப்பது என்பது, Yes அழகிய கலை தான்.
பதிலளிநீக்குபெரிய வினா, சிறிய வினாவினை நினைவூட்டுகிறது.
சிந்தனையைத் தூண்டும் தொகுப்பு. அருமை.
http://tamilamudam.blogspot.in/2017/05/blog-post_16.html எனது ‘வினா வினா’ கவிதையை நினைவு கூர்ந்திருப்பது மகிழ்ச்சி. மிக்க நன்றி.
நீக்குபுகைப்படங்கள் மிக அழகு! அதுவும் அந்த முருங்கை இலைகள் கூட அத்தனை அழகாயிருக்கின்றன!
பதிலளிநீக்குஇனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!!
நன்றி மனோம்மா. தங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!
நீக்கு