“தீப ஒளி,
சூரிய ஒளி,
நிலவொளி,
பட்டாசு ஒளி,
இப்படி எந்த ஒளியை வேண்டுமானாலும் படம் பிடிச்சு அனுப்புங்க..” என இங்கே அறிவித்திருக்கிறார்கள்.
பகலவனின் ஒளி ஜாலங்களைப் பலவிதமாக முந்தைய போட்டிப் பதிவுகள் சிலவற்றில் காட்டி விட்டுள்ளேன். இப்பதிவில் உள்ள யாவும் பார்வைக்கு வைக்காத புதியவையே.
குறிப்பாக ஒன்றும் ஐந்தும் தலைப்புக்காகவே எடுத்தவை. அவற்றில் ஒன்றையே போட்டிக்குக் கொடுக்க எண்ணியுள்ளேன்.
[படங்கள் கணினித் திரையை விட்டு விலகித் தெரிந்தால் Ctrl மற்றும் minus பொத்தான்களை ஒரு சேர அழுத்தி வேண்டிய அளவுக்குக் கொண்டு வரக் கேட்டுக் கொள்கிறேன்.]
1. ஒரு அகல் ஒரு சுடர் ஒரு மலர்
வாழ்வின் நம்பிக்கையாய்..
***
2. பால் நிலா
***
3. பகலவன் பொன்னொளி
‘நீரிலே.. நீந்துவது.. பொன் மீனா?’
திகைப்பாய் எட்டிப் பார்க்கின்றன மரங்கள்
***
4. அந்தி வானில் சூரியப்பந்து
***
5. ஒளிரும் தீபங்கள்
தீயன துரத்தி
அல்லல் அகற்றி
அகிலம் செழிக்க
பரவட்டும் தீபஒளி!
*** *** ***
இம்மாதப் ஒளிப் படங்கள் இங்கே. போட்டியின் இறுதித் தேதி பதினைந்து அல்ல இருபது என்பதை நினைவூட்டுகிறேன். இதுவரை கலந்திராதவர்கள் ‘ஜோதி’யில் ஐக்கியமாகக் கேட்டுக் கொள்கிறேன்:)!
கயல்விழி முத்துலெட்சுமியின் சிறுமுயற்சி பயணம் ஐந்தாம் ஆண்டுக்குள் நுழைந்திருக்கிறது நேற்று. அவரை வாழ்த்துவோம்.
சகபதிவாளர்களுடன் கலந்துரையாடி, ‘வியல் விருது’ வழங்கித் தொடங்கியுள்ளார் புதுவருடத்தை.
அப்பதிவில் என் முன் அவர் வைத்த கேள்விகளும் நான் தந்த பதில்களும்..
கேள்வி: நீங்க... கவிதையிலும் கதைகளிலும் ஒருவித நேர்மறை எண்ணங்களை விதைக்கறீங்களே.(பல பின்னூட்டங்களிலும் கூட) அந்த விதைகளின் பலன்கள் எப்படி இருக்குமென்று நினைக்கிறீர்கள்?
பதில்: பொதுவாகப் பார்க்கையில் , ஒரு ஊரில் இருக்கும் ஆயிரம் பேரில் ஒருவர் தவறானவராக இருந்தால் அவர் செய்தியாகிறார். நல்லவராய் மற்ற 999 பேரும் இருந்தாலும் கவனிக்கப் படாமல்தான் போகின்றனர். உலக இயல்பு இது. தினம் நாம் எதிர் கொள்ளும் செய்திகள் பெரும்பாலும் எதிர்மறையாகவே உள்ளன. அவை ஒரு அலையாக எதிர்மறை செயல்பாட்டுக்கும் வித்திடுகின்றன. நேர்மறை எழுத்தால் மட்டும் உலகம் திருந்தி விடாது என்பது உண்மை என்றாலும் அதன் தேவையும் அவசியமானது. பெருக்கெடுத்தபடி இருக்கும் எதிர்மறை அலைகளுக்கு அணை போட சிறு சிறு துளியாக (அவை ஒன்று சேர்ந்து பெருவெள்ளமாகும் எனும் நம்பிக்கையோடு) நேர்மறை எண்ணங்களை எழுத்தில் விதைக்கும் வெகு சிலரில் ஒருவராக இருக்க விருப்பம்.
கேள்வி: நேர்மறை எண்ணங்களுக்கு உங்களுக்கு ரோல் மாடல் யாரு?
பதில்: அம்மாவும் கணவரும்.
**************************************
நேர்மறை எண்ணங்களைப் பரப்ப வாழ்த்தி எனக்கும் அவர் அளித்த வியல்(பொன்) விருது இதோ:
இப்பதிவின் படங்கள் ஒன்றும் ஐந்தும் பெற்ற விருதின் நோக்கத்தைப் பிரதிபலிப்பதாக நம்புகிறேன்! மிக்க நன்றி முத்துலெட்சுமி!
ஜோதி’கள் சூப்பர்ர்ர்ர் :)
பதிலளிநீக்குகுமரகம் பால்நிலா ரொம்ப நல்லா இருக்கு. ரொம்ப நல்லாவே இருக்கு. ஆனா தை விட முதலும் ஐந்தும் இன்னும் நல்லா தான் இருக்கு. ரொம்ப குழப்பமா இருக்கே. எதுக்குன்னு பரிசை கொடுப்பேன்!!!
பதிலளிநீக்குபடங்கள் அருமை. விருதிற்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஒண்ணும், அஞ்சும் நல்லாருக்கு. நானும் இதே கான்செப்டில்தான் அனுப்பியிருக்கேன், என்ன ஒரு பொருத்தம் நமக்குள்.. ஹா..ஹா..ஹா.
பதிலளிநீக்குகடைசிப் படம் :)))
பதிலளிநீக்குஅற்புதமான படங்கள்.விருதுக்கு வாழ்த்துக்கள் சகோதரி.
பதிலளிநீக்குபடங்கள் அருமை. விருதுகிடைக்க வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகலக்குது நீரிலும் நேரிலும் இருக்கும் தீபங்கள்..
பதிலளிநீக்குவிருதினை பதிவில் இட்டதுக்கு நன்றிகள்ப்பா.
எல்லா தீபங்க்ளும் அருமை ராமலெக்ஷ்மி..:))
பதிலளிநீக்குபடங்கள் வெகு சிறப்பாக உள்ளது.
பதிலளிநீக்குஅருமையான படங்கள்.
பதிலளிநீக்குஒற்றை அகலும், பால் நிலாவும் டாப். அதனால்தான் நீங்களே முதல் இரண்டாய்ப் போட்டு விட்டீர்களோ?
பதிலளிநீக்குநாளை கார்த்திகைத்திரு மாதம் ஆரம்பம். அருமையாக ஒளியைப் பதிவு முழுவதும் தெளித்திருப்பது அருமை.
பதிலளிநீக்குஅருமையான படங்கள்.
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.எல்லாவற்றிற்கும் பத்தாயிரம் பொன் அனுப்புகிறேன்.
பால் நிலா..மனசை கொள்ளை கொள்கிறது..
பதிலளிநீக்குFIRST IS THE BEST
பதிலளிநீக்குபடங்கள் அருமையா வந்திருக்கு... விருதுக்கு வாழ்த்துக்கள். முத்துலெட்சுமி அக்காவுக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குI like the first one...
பதிலளிநீக்குதீபங்கள் கொள்ளை அழகு:)
பதிலளிநீக்குபடங்கள் ஒவ்வொன்றும் அருமை.
பதிலளிநீக்குபடங்கள் அருமை. விருதுகிடைக்க வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குகடைசிப்படம் மிக மிக அருமை !
பதிலளிநீக்குlast pic is catchy.
பதிலளிநீக்குஅருமையான படங்கள் ராமலக்ஷ்மி. விருதுக்கு வாழ்த்துகள் :)
பதிலளிநீக்குமுதல் படம் அருமை!
பதிலளிநீக்குபால் நிலா ரொம்பப் பிடிச்சுருக்கு!
பதிலளிநீக்குபடங்கள் அருமை .... கடைசி மிக அருமை
பதிலளிநீக்குவாழ்த்துகள்
வாழ்த்துகள்
பதிலளிநீக்குகடைசிப் படம் அருமை
நேர்மறை எண்ணங்களை எழுத்தில் விதைக்கும் வெகு சிலரில் ஒருவராக இருக்க விருப்பம்.
பதிலளிநீக்குஜோதி தெரிகிறது.. வாழ்த்துகள்..
படங்கள் வழக்கம் போலவே கலக்கல்.
பதிலளிநீக்குநிலாவும் சூரியனும் சூப்பர்...
உங்க பதிலை அங்கேயே வாசித்துவிட்டேனே! :-)
தங்களின் வலைபூ நல்ல பதிவுகளைக் கொண்டுள்ளது வாழ்த்துகள்
பதிலளிநீக்குதோழமையுடன்
இரா. தங்கப்பாண்டியன்
vaigai.wordpress.com
சுடர், சூரியன், நிலவு என அனைத்தும் அருமையான ஒளி ஓவியம் சகோ....
பதிலளிநீக்குமுதலும், நான்காவது படமும் ரொம்ப நல்லாயிருக்குங்க.. வாழ்த்துக்களும்..
பதிலளிநீக்குநான்கு படங்களும் கொள்ளை அழகுங்க........வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஒளி என்றாலே நீங்க முந்திக்கிறீங்க!வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதீபம் மற்றும் மலர்கள் ரொம்ப அருமையா இருக்கு! இயல்பான படங்களுக்கு பிறகு படத்திற்காக அமைத்து எடுத்து இருக்கிறீர்கள் போல :-)
பதிலளிநீக்குஎல்லா படங்களும் அருமை ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்கு//தீயன துரத்தி
அல்லல் அகற்றி
அகிலம் செழிக்க
பரவட்டும் தீபஒளி//
அகிலம் செழிக்க பரவட்டும் தீபஒளி.
வாழ்த்துகள்!
***“தீப ஒளி,
பதிலளிநீக்குசூரிய ஒளி,
நிலவொளி,
பட்டாசு ஒளி,***
முத்துச்சரம் ஒளிமயமாத்தான் இருக்குங்க!
வெற்றிபெற வாழ்த்துக்கள்ங்க, ராமலக்ஷ்மி! :)
முதல் படத்தில் ஒளி துல்யம்
பதிலளிநீக்குகடைசி படம் ஒளி வரிசை அற்புதம்!
என் சாய்ஸ் முதலே முதல் வரும்!
கைகள் கொள்ளுதா, ராமலஷ்மி?
பதிலளிநீக்குவிருதுகளும் பரிசுகளும் பாராட்டுகளும் வாங்கி வாங்கி..?
ரொம்ப...ரொ..ம்பப் பெருமையாயிருக்கிறது பெண்ணே!!!
எனக்கும் வாய் கொள்ளவில்லை, சொல்லிச் சொல்லி!!!!
படங்களுக்கு நம்பர் போட்டு CAPTION எழுதுங்கள்.
பதிலளிநீக்கு//1 - 5 இரண்டும் போட்டிக்கு// என்று சொல்லுங்கள்
5வது படம் பிரதிபலிப்புடன் அழகாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
முத்தான மூன்று விளக்கு
பதிலளிநீக்குஅழகான மூன்று பூக்கள்
எதைக் குறிக்கின்றன.
கவிதை
கதை
புகைப்படம்
மூன்றிலும் வெற்றிக் கொடி நாட்டும் முத்துச்சரம்
Deepa oliyil aarambithu
பதிலளிநீக்குDeepa aawaliyil mudithiruppathu
migavum arumai. vaazthukkal.
இப்ப படிக்க நல்லாயிருக்கு
பதிலளிநீக்குசகாதேவன்
படங்கள் மட்டுமல்ல நேர் மறை எண்ணங்கள் குறித்த உங்கள் கருத்தும் அருமை
பதிலளிநீக்குஉங்கள் வேலைகளுக்கு இடையில் மெனக்கெட்டு என் தளத்திற்கு வந்து ஆதரவாக கருத்து கூறியதற்கு மிக்க நன்றி நண்பரே. நான் திரும்பவும் பதிவு போட தங்கள் கமெண்ட்டும் ஒரு முக்கிய காரணம்.
பதிலளிநீக்குஆயில்யன் said...
பதிலளிநீக்கு//ஜோதி’கள் சூப்பர்ர்ர்ர் :)//
நன்றி ஆயில்யன். ஜோதிகளே ஒளிமயமாக சென்றன போட்டிக்கு:)!
அபி அப்பா said...
பதிலளிநீக்கு//குமரகம் பால்நிலா ரொம்ப நல்லா இருக்கு. ரொம்ப நல்லாவே இருக்கு. ஆனா தை விட முதலும் ஐந்தும் இன்னும் நல்லா தான் இருக்கு. ரொம்ப குழப்பமா இருக்கே. எதுக்குன்னு பரிசை கொடுப்பேன்!!!//
நன்றி அபி அப்பா:)! தீபங்கள் எடுக்கும் முன்னர் ‘பால் நிலா’தான் போட்டிக்கு அனுப்புவதாக இருந்தேன்.
LK said...
பதிலளிநீக்கு//படங்கள் அருமை. விருதிற்கு வாழ்த்துக்கள்//
நன்றி எல் கே.
அமைதிச்சாரல் said...
பதிலளிநீக்கு//ஒண்ணும், அஞ்சும் நல்லாருக்கு. நானும் இதே கான்செப்டில்தான் அனுப்பியிருக்கேன், என்ன ஒரு பொருத்தம் நமக்குள்.. ஹா..ஹா..ஹா.//
பார்த்தேங்க, முந்திரிக் கொத்துல ஆரம்பித்து மூன்று தீபங்கள் மூன்று மலர்களெனத் தொடருகிறது:))! உங்கள் படம் மிகப் பிடித்தது எனக்கு. வாழ்த்துக்கள்.
ஈரோடு கதிர் said...
பதிலளிநீக்கு//கடைசிப் படம் :)))//
அதே:)!
ஸாதிகா said...
பதிலளிநீக்கு//அற்புதமான படங்கள்.விருதுக்கு வாழ்த்துக்கள் சகோதரி.//
நன்றி ஸாதிகா.
மாதேவி said...
பதிலளிநீக்கு//படங்கள் அருமை. விருதுகிடைக்க வாழ்த்துக்கள்.//
நன்றி மாதேவி.
முத்துலெட்சுமி/muthuletchumi said...
பதிலளிநீக்கு//கலக்குது நீரிலும் நேரிலும் இருக்கும் தீபங்கள்..
விருதினை பதிவில் இட்டதுக்கு நன்றிகள்ப்பா.//
விருதில் எனக்கு மகிழ்ச்சி. நன்றி முத்துலெட்சுமி:)!
தேனம்மை லெக்ஷ்மணன் said...
பதிலளிநீக்கு//எல்லா தீபங்க்ளும் அருமை ராமலெக்ஷ்மி..:))//
மிக்க நன்றி தேனம்மை:)!
தமிழ் உதயம் said...
பதிலளிநீக்கு//படங்கள் வெகு சிறப்பாக உள்ளது.//
மிக்க நன்றி தமிழ் உதயம்.
புவனேஸ்வரி ராமநாதன் said...
பதிலளிநீக்கு//அருமையான படங்கள்.//
நன்றி புவனேஸ்வரி.
era.thangapandian said...
பதிலளிநீக்கு//தங்களின் வலைபூ நல்ல பதிவுகளைக் கொண்டுள்ளது வாழ்த்துகள்
தோழமையுடன்
இரா. தங்கப்பாண்டியன்//
வலைப்பூவுக்கான வாழ்த்தில் மிக்க மகிழ்ச்சி. நன்றி தங்கப்பாண்டியன்.
கவிநா... said...
பதிலளிநீக்கு//சுடர், சூரியன், நிலவு என அனைத்தும் அருமையான ஒளி ஓவியம் சகோ....//
பாராட்டுக்கு மிக்க நன்றி கவிநா.
க.பாலாசி said...
பதிலளிநீக்கு//முதலும், நான்காவது படமும் ரொம்ப நல்லாயிருக்குங்க.. வாழ்த்துக்களும்..//
சூரியன் எங்கள் வீட்டின் பால்கனியிலிருந்து எடுத்தது:)!. மிக்க நன்றி பாலாசி.
நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
பதிலளிநீக்கு//நான்கு படங்களும் கொள்ளை அழகுங்க........வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி நித்திலம்.
ராஜ நடராஜன் said...
பதிலளிநீக்கு//ஒளி என்றாலே நீங்க முந்திக்கிறீங்க!வாழ்த்துக்கள்.//
புரியலையே என்ன சொல்ல வர்றீங்கன்னு? ஆனாலும் வாழ்த்துக்களுக்கு நன்றி.
கிரி said...
பதிலளிநீக்கு//தீபம் மற்றும் மலர்கள் ரொம்ப அருமையா இருக்கு! இயல்பான படங்களுக்கு பிறகு படத்திற்காக அமைத்து எடுத்து இருக்கிறீர்கள் போல :-)//
PiT வலியுறுத்துவதும் அதைத்தான்! நாங்கதான் கேட்கறதேயில்லை:))!
Out door படமெனில் அதற்கென தனியாக முயற்சித்தது இல்லை. In door எனில் இதற்கு முன்னரும் இப்படி அமைத்து எடுத்ததுண்டு.
மிக்க நன்றி கிரி.
கோமதி அரசு said...
பதிலளிநீக்கு***/எல்லா படங்களும் அருமை ராமலக்ஷ்மி.
//தீயன துரத்தி
அல்லல் அகற்றி
அகிலம் செழிக்க
பரவட்டும் தீபஒளி//
அகிலம் செழிக்க பரவட்டும் தீபஒளி.
வாழ்த்துகள்!/***
வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் நன்றி கோமதிம்மா.
வருண் said...
பதிலளிநீக்கு//***“தீப ஒளி,
சூரிய ஒளி,
நிலவொளி,
பட்டாசு ஒளி,***
முத்துச்சரம் ஒளிமயமாத்தான் இருக்குங்க!
வெற்றிபெற வாழ்த்துக்கள்ங்க, ராமலக்ஷ்மி! :)//
நன்றிகள் வருண்:)!
நானானி said...
பதிலளிநீக்கு//முதல் படத்தில் ஒளி துல்யம்
கடைசி படம் ஒளி வரிசை அற்புதம்!
என் சாய்ஸ் முதலே முதல் வரும்!//
அதுவா இதுவா யோசித்து வரிசையை அனுப்பி விட்டேன். மிக்க நன்றி நானானி!
நானானி said...
பதிலளிநீக்கு//கைகள் கொள்ளுதா, ராமலஷ்மி?
விருதுகளும் பரிசுகளும் பாராட்டுகளும் வாங்கி வாங்கி..?
ரொம்ப...ரொ..ம்பப் பெருமையாயிருக்கிறது பெண்ணே!!!
எனக்கும் வாய் கொள்ளவில்லை, சொல்லிச் சொல்லி!!!!//
உங்கள் ஆசிர்வாதம்:)!
சகாதேவன் said...
பதிலளிநீக்கு//படங்களுக்கு நம்பர் போட்டு CAPTION எழுதுங்கள்.
//1 - 5 இரண்டும் போட்டிக்கு// என்று சொல்லுங்கள்
5வது படம் பிரதிபலிப்புடன் அழகாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.//
ஐந்தையே அனுப்பியிருக்கிறேன். மிக்க நன்றி.
எண் வரிசை கொடுத்து விட்டேன். இந்த ஆலோசனையை இனிவரும் புகைப்படப் பதிவுகளிலும் கவனத்தில் வைக்கிறேன்.
goma said...
பதிலளிநீக்கு//முத்தான மூன்று விளக்கு
அழகான மூன்று பூக்கள்
எதைக் குறிக்கின்றன.
கவிதை
கதை
புகைப்படம்
மூன்றிலும் வெற்றிக் கொடி நாட்டும் முத்துச்சரம்//
தொடரும் ஊக்கத்துக்கு மிக்க நன்றி கோமா:)!
சதங்கா (Sathanga) said...
பதிலளிநீக்கு//Deepa oliyil aarambithu
Deepa aawaliyil mudithiruppathu
migavum arumai. vaazthukkal.//
ரொம்ப நன்றி சதங்கா:)!
சகாதேவன் said...
பதிலளிநீக்கு//இப்ப படிக்க நல்லாயிருக்கு//
நல்ல பிள்ளை நான்:). உடனே சரி செய்து விட்டேன். மீண்டும் நன்றி:)!
மோகன் குமார் said...
பதிலளிநீக்கு//படங்கள் மட்டுமல்ல நேர் மறை எண்ணங்கள் குறித்த உங்கள் கருத்தும் அருமை//
‘பின்னூட்டங்களிலும் கூட’ என முத்துலெட்சுமி தன் கேள்வியில் குறிப்பிட்டிருந்ததைக் கண்டதும், முன்னர் உங்கள் பதிவொன்றில் நீங்களும் அவ்வாறே குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வந்தது:)!
நன்றி மோகன் குமார்.
சசிகுமார் said...
பதிலளிநீக்கு//உங்கள் வேலைகளுக்கு இடையில் மெனக்கெட்டு என் தளத்திற்கு வந்து ஆதரவாக கருத்து கூறியதற்கு மிக்க நன்றி நண்பரே. நான் திரும்பவும் பதிவு போட தங்கள் கமெண்ட்டும் ஒரு முக்கிய காரணம்.//
தொடருங்கள். வாழ்த்துக்கள்:)!
ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//ஒற்றை அகலும், பால் நிலாவும் டாப். அதனால்தான் நீங்களே முதல் இரண்டாய்ப் போட்டு விட்டீர்களோ?//
பாராட்டுக்கு நன்றி ஸ்ரீராம். கடைசியில் ஐந்து முதலாகி போட்டிக்கு சென்றது:)!
வல்லிசிம்ஹன் said...
பதிலளிநீக்கு//நாளை கார்த்திகைத்திரு மாதம் ஆரம்பம். அருமையாக ஒளியைப் பதிவு முழுவதும் தெளித்திருப்பது அருமை.
அருமையான படங்கள்.
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.எல்லாவற்றிற்கும் பத்தாயிரம் பொன் அனுப்புகிறேன்.//
ஆகா மிக்க நன்றி வல்லிம்மா.
ஜெரி ஈசானந்தன். said...
பதிலளிநீக்கு//பால் நிலா..மனசை கொள்ளை கொள்கிறது..//
மிக்க நன்றி ஜெரி ஈசானந்தன்.
goma said...
பதிலளிநீக்கு//FIRST IS THE BEST//
Thanks a lot Goma:)!
சே.குமார் said...
பதிலளிநீக்கு//படங்கள் அருமையா வந்திருக்கு... விருதுக்கு வாழ்த்துக்கள். முத்துலெட்சுமி அக்காவுக்கும் வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி குமார்.
Someone like you said...
பதிலளிநீக்கு//I like the first one...//
Thank you Someone like 'me' :)!
வித்யா said...
பதிலளிநீக்கு//தீபங்கள் கொள்ளை அழகு:)//
நன்றிகள் வித்யா:)!
Sriakila said...
பதிலளிநீக்கு//படங்கள் ஒவ்வொன்றும் அருமை.//
அனைத்தையும் ரசித்தமைக்கு நன்றிகள் ஸ்ரீஅகிலா.
அம்பிகா said...
பதிலளிநீக்கு//படங்கள் அருமை. விருதுகிடைக்க வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி அம்பிகா.
ஹேமா said...
பதிலளிநீக்கு//கடைசிப்படம் மிக மிக அருமை !//
அதையே அனுப்பினேன் ஹேமா. மிக்க நன்றி.
SurveySan said...
பதிலளிநீக்கு//last pic is catchy.//
Thanks Surveysan:)!
கவிநயா said...
பதிலளிநீக்கு//அருமையான படங்கள் ராமலக்ஷ்மி. விருதுக்கு வாழ்த்துகள் :)//
நன்றி கவிநயா:)!
அமைதி அப்பா said...
பதிலளிநீக்கு//முதல் படம் அருமை!//
அது அமைதியை பிரதிபலிக்கும் படமும் கூட:)! நன்றி அமைதி அப்பா.
அன்புடன் அருணா said...
பதிலளிநீக்கு//பால் நிலா ரொம்பப் பிடிச்சுருக்கு!//
மகிழ்ச்சியும் நன்றியும் அருணா.
ஆ.ஞானசேகரன் said...
பதிலளிநீக்கு//படங்கள் அருமை .... கடைசி மிக அருமை
வாழ்த்துகள்//
நன்றிகள் ஞானசேகரன்:)!
திகழ் said...
பதிலளிநீக்கு//வாழ்த்துகள்
கடைசிப் படம் அருமை//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திகழ்:)!
ரிஷபன் said...
பதிலளிநீக்கு//நேர்மறை எண்ணங்களை எழுத்தில் விதைக்கும் வெகு சிலரில் ஒருவராக இருக்க விருப்பம்.
ஜோதி தெரிகிறது.. வாழ்த்துகள்..//
நன்றிகள் ரிஷபன்.
சந்தனமுல்லை said...
பதிலளிநீக்கு//படங்கள் வழக்கம் போலவே கலக்கல்.
நிலாவும் சூரியனும் சூப்பர்...
உங்க பதிலை அங்கேயே வாசித்துவிட்டேனே! :-)//
நன்றி முல்லை. நானும் உங்க பேட்டியை வாசித்து விட்டேன்:)!
ராமலக்ஷ்மி said...
பதிலளிநீக்குதமிழ்மணத்தில் வாக்களித்த 18 பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த 33 பேருக்கும் என் நன்றிகள்.
ஒளிமயமான படங்கள் அத்தனையும் அழகோ அழகு.
பதிலளிநீக்குவெற்றிக்கு வாழ்த்துக்கள் அக்கா.
@ சுந்தரா,
பதிலளிநீக்குமிக்க நன்றி சுந்தரா:)!
Nice Pictures..
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.com/2010/11/blog-post_20.html
வாழ்த்துக்கள் ராமலஷ்மி.
பதிலளிநீக்குஎல்லா படங்களுமே சூப்பர். போட்டி என்று ஒன்று வந்தால் செலக்ட் செய்வது எவ்வளவு பெரிய கஷ்டமான் ஒன்று.
அதிலும் உங்க போட்டோக்களை பார்த்தால் எல்லாமே அழகு.
என்னோட செலக்ஷன். சூரியனும் நிலாவும்.
No. 5 என்னோட தேர்வு !
பதிலளிநீக்குBeautiful and mesmerizing.
பதிலளிநீக்குCongratulations for the award! :-)
முதல் சுற்றில் முன்னேறியது முத்தான மூன்று விளக்கு.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
@ அஹமது இர்ஷாத்,
பதிலளிநீக்குவலைச்சரத்தில் என் வலைப்பூ பற்றிய பகிர்வுக்கு மிக்க நன்றி அஹமது.
Vijisveg Kitchen said...
பதிலளிநீக்கு//வாழ்த்துக்கள் ராமலஷ்மி.
எல்லா படங்களுமே சூப்பர். போட்டி என்று ஒன்று வந்தால் செலக்ட் செய்வது எவ்வளவு பெரிய கஷ்டமான் ஒன்று.//
ஆரம்பக் காலத்தில் முடிவெடுக்க சிரமமாய் உணருவேன். நண்பர்கள் கருத்தையும் கேட்டுக் கொண்டு, கடைசி நிமிடத்தில் எது தோன்றுகிறதோ அதைக் கொடுத்து விடுகிறேன்:)!
//அதிலும் உங்க போட்டோக்களை பார்த்தால் எல்லாமே அழகு.
என்னோட செலக்ஷன். சூரியனும் நிலாவும்.//
மகிழ்ச்சியும் நன்றியும் விஜி.
James Vasanth said...
பதிலளிநீக்கு//No. 5 என்னோட தேர்வு !//
எனதும்:)! நன்றி ஜேம்ஸ்.
Chitra said...
பதிலளிநீக்கு//Beautiful and mesmerizing.
Congratulations for the award! :-)//
நன்றி சித்ரா.
goma said...
பதிலளிநீக்கு//முதல் சுற்றில் முன்னேறியது முத்தான மூன்று விளக்கு.
வாழ்த்துக்கள்//
ஆம்:)! மிக்க நன்றி கோமா.