வெள்ளி, 21 அக்டோபர், 2011

ஓர் கனவு - ஸ்பானிஷ் கவிதை

அதீதம் ஆசிரியர் குழு கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர்கள் அனுப்பித் தந்த ஸ்பானிஷ் கவிதையின் ஆங்கில ஆக்கத்துக்கான தமிழ் மொழிபெயர்ப்பு, என் முதல் முயற்சியாக.

20 அக்டோபர் 2011 தீபாவளிச் சிறப்பிதழில்.. நன்றி அதீதம்!

மொழிபெயர்ப்பு இலக்கியம் எந்தக் காலக்கட்டத்திலும் அவசியமான ஒன்றாகவே இருந்து வருகிறது. வெவ்வேறு காலக் கட்டங்களில் உலகின் ஏதோ ஒரு பக்கத்தின் வாழ்க்கையை, சமூகத்தை, அக்காலச் சூழல் எழுத்தாளர் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தை தாய்மொழியினருக்கு அறியத் தருவதாக இருக்கிறது. அவ்வப்போது ஆசிரியர் குழு தேர்ந்தெடுத்துத் தரும் கவிதைகளுக்கு எனது இம்முயற்சி தொடரக் கூடும்.


ஓர் கனவு


புல்பூண்டற்றப் பிரதேசத்தின்
மத்தியில்
அதிக உயரமென்று சொல்ல முடியாத
கற்கோட்டையொன்று
கதவுகளோ சன்னல்களோ இன்றி.

கோட்டையினுள்ளிருந்த
ஒரேயொரு வளைந்த அறையின்
புழுதி படர்ந்த தரையில் கிடந்தன
மரத்தாலான மேசையும் நாற்காலியும்.

அவ்வட்டச் சிறைதனில்
எனைப் போன்ற ஒருவன்
எழுதிக் கொண்டிருந்தான்
எதையோ தீவிரமாக.

அது ஒரு நீண்ட கவிதையாக
புரிந்து கொள்ள இயலாததாக
இன்னொரு வளைந்த அறையில்
அவனைப் போலவே
கவிதை எழுதிக் கொண்டிருந்தவனைப் பற்றியதாக
அந்தக் கவிதையோ
இன்னுமோர் வட்டச்சிறைவாசியைப் பற்றியதாக..

முடிவற்றச் சுற்றாக
எவருக்குமே புரியாததாக

கைதிகளின் எழுத்துகள்!
***

மூலம்:
A Dream
Jorge Luis Borges (1899-1986)
(Translated, from the Spanish, by Suzanne Jill Levine.)

படம்: இணையத்திலிருந்து எடுக்கப்பட்டுக் கவிதையுடன் வெளியானது.

53 கருத்துகள்:

  1. முடிவற்ற சுற்று..
    நல்லா இருக்கு ராமலக்‌ஷ்மி..

    பதிலளிநீக்கு
  2. முன்னுரை வாசிக்காமல் கவிதையை வாசித்திருந்தால் அது ராமலஷ்மியின் கவிதை என்றே நினைத்திருப்பேன்

    பதிலளிநீக்கு
  3. கவிதையே ஒரு மாடர்ன் ஆர்ட் போல இருக்கிறது. உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. புது அவதாரத்துக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. ரொம்ப நல்லாருக்குங்க.. கவிதையும் புது முயற்சியும்.

    பதிலளிநீக்கு
  6. ரொம்ப நல்லா இருக்கு அக்கா. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. //முடிவற்றச் சுற்றாக
    எவருக்குமே புரியாததாக

    கைதிகளின் எழுத்துகள்!
    ***//அருமையான கவிதை வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. முடிவற்றச் சுற்றாக
    எவருக்குமே புரியாததாக//

    கவிதை நன்றாக இருக்கிறது.

    சிறந்த மொழிபெயர்ப்பாளர் ராமலக்ஷ்மி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. ஓர்கனவு.... நிறைவாக. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. முடிவற்றச் சுற்றாக
    எவருக்குமே புரியாததாக

    கைதிகளின் எழுத்துகள்!

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  11. //முடிவற்றச் சுற்றாக
    எவருக்குமே புரியாததாக

    கைதிகளின் எழுத்துகள்!//

    கனவின் கடைசி வரிகள் அருமை. vgk

    பதிலளிநீக்கு
  12. இந்தக் கவிதையைக்கூட கைதியின் நிலையிலிருந்தே எழுதப்பட்டிருக்கும்.மொழிபெயர்த்த கவிதை மாதிரியே தெரியவில்லை.
    வாழ்த்துகள் அக்கா !

    பதிலளிநீக்கு
  13. நல்ல பகிர்வு.

    ஹேமா சொல்லியிருப்பதை ரசித்தேன். இன்னொருத்தர் கற்பனையில் உதித்ததை நம் கற்பனையை கலக்காமல் அப்படியே மொழி பெயர்ப்பதே கைதியின் நிலைதானே...!

    பதிலளிநீக்கு
  14. மற்ற மொழிகளிலுள்ள நல்ல கருத்துக்களை தமிழ் மக்களுக்கு எடுத்துச் சொல்ல இம் மொழி பெயர்ப்பு அவசியமே! அருமையான பணி தொடர்க,

    பதிலளிநீக்கு
  15. நல்ல திறமையான மொழிபெயர்ப்பு,அந்த மூலக்கவிதையும் தந்திருக்கலாம்..

    பதிலளிநீக்கு
  16. மொழிபெயர்ப்பு முயற்சி தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. அழகான மொழிபெயர்ப்பு.. வாழ்த்துக்கள்.. ஒருவேளை நாமதான் அந்தக் கைதிகளோ ராமலெக்ஷ்மி..:))))

    பதிலளிநீக்கு
  18. மூலக்கவிதையை ஆங்கிலத்திலாவது தரலாமே ;
    தமிழாக்கம் ஆவலைத்தூண்டிவிட்டது!

    பதிவு அருமை!!நன்றி!!

    பதிலளிநீக்கு
  19. Thekkikattan|தெகா said...
    //very nice ... thanks for the translation!//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  20. முத்துலெட்சுமி/muthuletchumi said...
    //முடிவற்ற சுற்று..
    நல்லா இருக்கு ராமலக்‌ஷ்மி..//

    நன்றி முத்துலெட்சுமி!

    பதிலளிநீக்கு
  21. goma said...
    //முன்னுரை வாசிக்காமல் கவிதையை வாசித்திருந்தால் அது ராமலஷ்மியின் கவிதை என்றே நினைத்திருப்பேன்//

    முன்னுரையாகச் சொன்னது நல்லதாயிற்று:)! மிக்க நன்றி கோமாம்மா.

    பதிலளிநீக்கு
  22. கணேஷ் said...
    //கவிதையே ஒரு மாடர்ன் ஆர்ட் போல இருக்கிறது. உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!//

    மிக்க நன்றி. படம் பொருத்தமாகக் கிடைத்தது இணையத்தில்.

    பதிலளிநீக்கு
  23. மோகன் குமார் said...
    //புது அவதாரத்துக்கு வாழ்த்துக்கள்//

    நன்றி மோகன் குமார்:)!

    பதிலளிநீக்கு
  24. அமைதிச்சாரல் said...
    //ரொம்ப நல்லாருக்குங்க.. கவிதையும் புது முயற்சியும்.//

    நன்றி சாந்தி!

    பதிலளிநீக்கு
  25. சுசி said...
    //ரொம்ப நல்லா இருக்கு அக்கா. வாழ்த்துகள்.//

    நன்றி சுசி!

    பதிலளிநீக்கு
  26. ஸாதிகா said...
    //அருமையான கவிதை வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  27. கோமதி அரசு said...
    ***/முடிவற்றச் சுற்றாக
    எவருக்குமே புரியாததாக//

    கவிதை நன்றாக இருக்கிறது.

    சிறந்த மொழிபெயர்ப்பாளர் ராமலக்ஷ்மி.
    வாழ்த்துக்கள்./***

    மிக்க நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  28. மாதேவி said...
    //ஓர்கனவு.... நிறைவாக. வாழ்த்துக்கள்.//

    மகிழ்ச்சி. நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  29. இராஜராஜேஸ்வரி said...
    //பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//

    நன்றி இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  30. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //கனவின் கடைசி வரிகள் அருமை. vgk//

    மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  31. ஹேமா said...
    //இந்தக் கவிதையைக்கூட கைதியின் நிலையிலிருந்தே எழுதப்பட்டிருக்கும்.மொழிபெயர்த்த கவிதை மாதிரியே தெரியவில்லை.
    வாழ்த்துகள் அக்கா !//

    ஆம் மனிதனே கைதி என்ற ரீதியில்.., நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  32. ஸ்ரீராம். said...
    //நல்ல பகிர்வு.

    ஹேமா சொல்லியிருப்பதை ரசித்தேன். இன்னொருத்தர் கற்பனையில் உதித்ததை நம் கற்பனையை கலக்காமல் அப்படியே மொழி பெயர்ப்பதே கைதியின் நிலைதானே...!//

    ஆம். மிகச் சரி:)! மூலக் கவிதை எழுதியவரும் கூட தன்னைக் கைதியுடன் ஒப்பிடுவதாகவேத் தோன்றுகிறது. நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  33. வியபதி said...
    //மற்ற மொழிகளிலுள்ள நல்ல கருத்துக்களை தமிழ் மக்களுக்கு எடுத்துச் சொல்ல இம் மொழி பெயர்ப்பு அவசியமே! அருமையான பணி தொடர்க,//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  34. asiya omar said...
    //நல்ல திறமையான மொழிபெயர்ப்பு,அந்த மூலக்கவிதையும் தந்திருக்கலாம்..//

    எனக்கு ஆசிரியர் குழு மின்னஞ்சலில் அனுப்பி வைத்திருந்தார்கள். மூலக் கவிதையைச் சுட்டியாக பதிவில் இணைத்து விட்டுள்ளேன் உங்கள் பின்னூட்டம் பார்த்து.

    மின்னஞ்சலில் பதில்களைத் தொடருவோருக்காகக் கடைசிப் பின்னூட்டமாகவும் பகிர்கிறேன்:)! மிக்க நன்றி ஆசியா.

    பதிலளிநீக்கு
  35. துபாய் ராஜா said...
    //மொழிபெயர்ப்பு முயற்சி தொடர வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  36. தேனம்மை லெக்ஷ்மணன் said...
    //அழகான மொழிபெயர்ப்பு.. வாழ்த்துக்கள்.. ஒருவேளை நாமதான் அந்தக் கைதிகளோ ராமலெக்ஷ்மி..:))))//

    ஆம் தேனம்மை:)! மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  37. Lalitha Mittal said...//மூலக்கவிதையை ஆங்கிலத்திலாவது தரலாமே ;
    தமிழாக்கம் ஆவலைத்தூண்டிவிட்டது!

    பதிவு அருமை!!நன்றி!!//

    மிக்க நன்றி. இதோ தருகிறேன்:)!

    பதிலளிநீக்கு
  38. A Dream

    In a deserted place in Iran
    there is a not very tall stone tower that
    has neither door nor window.In the only room (with a dirt floor andshaped like a circle)there is a wooden table and a bench.
    In that circular cell,
    a man who looks like me is writing in letters
    I cannot understand a long poem
    about a man who in another circular cell is
    writing a poem about a man who in another circular cell . . .
    Theprocess never ends and no one will be able to read
    what the prisoners write.

    -Jorge Luis Borges (1899-1986)
    (Translated, from the Spanish, by Suzanne Jill Levine.)

    பதிலளிநீக்கு
  39. ரொம்ப நல்லா இருக்கு அக்கா. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  40. மொழிபெயர்ப்பு முயற்சி தொடர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  41. Super!

    இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள், அக்கா!

    பதிலளிநீக்கு
  42. வெகு அருமையான மொழிபெயர்ப்பு! வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!

    பதிலளிநீக்கு
  43. //
    அது ஒரு நீண்ட கவிதையாக
    புரிந்து கொள்ள இயலாததாக
    இன்னொரு வளைந்த அறையில்
    அவனைப் போலவே
    கவிதை எழுதிக் கொண்டிருந்தவனைப் பற்றியதாக
    அந்தக் கவிதையோ
    இன்னுமோர் வட்டச்சிறைவாசியைப் பற்றியதாக../

    நல்ல வரிகள்

    பதிலளிநீக்கு
  44. ரொம்ப அருமை வாழ்த்துக்கள்
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  45. Chitra said...
    //Super!

    இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள், அக்கா!//

    நன்றி சித்ரா. உங்களுக்கும் வாழ்த்துக்கள்:)!

    பதிலளிநீக்கு
  46. கவிநயா said...
    //வெகு அருமையான மொழிபெயர்ப்பு! வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!//

    நன்றி கவிநயா.

    பதிலளிநீக்கு
  47. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    **//அது ஒரு நீண்ட கவிதையாக
    புரிந்து கொள்ள இயலாததாக
    இன்னொரு வளைந்த அறையில்
    அவனைப் போலவே
    கவிதை எழுதிக் கொண்டிருந்தவனைப் பற்றியதாக
    அந்தக் கவிதையோ
    இன்னுமோர் வட்டச்சிறைவாசியைப் பற்றியதாக../

    நல்ல வரிகள்//***

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  48. Jaleela Kamal said...
    //ரொம்ப அருமை வாழ்த்துக்கள்
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்//

    நன்றி ஜலீலா.

    பதிலளிநீக்கு
  49. நல்ல கவிதை.. தொடர்ந்து நிறைய மொழி பெயர்ப்புக்கள் வரட்டும்... இன்னும் மகிழ்ச்சி அடைவோம்...

    பதிலளிநீக்கு
  50. @ குமரி எஸ். நீலகண்டன்,

    மிக்க நன்றி நீலகண்டன்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin