ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

கண்ணுக்குப் புலப்படாதவை

#1
“பணிவில் உயர்ந்து நிற்கையில் 
உயர்ந்த மனிதராகும் தகுதியை நாம் நெருங்கி விடுகிறோம்.” 
_Rabindranath Tagore

#2
சில நேரங்களில் 
ஒரு அறை வேண்டுவதெல்லாம் 
சாடி நிறைய அன்றலர்ந்த மலர்களையே.

#3
“அதிகாலை நடை பயிற்சி முழுநாளுக்குமான வரம்” 
- Henry David

#4
"பந்தயத்தின் தொடக்கத்தைப் பற்றி சிந்திக்காதே, 
முடிவைப் பற்றி சிந்தி"
_Usain Bolt

#5
அமைதி என்பது 
சூர்யோதயத்தையும் அஸ்தமனத்தையும் பார்ப்பது., 
யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் எனத் தெரிந்து கொள்வது.!"

#6
“நீ யாரென்பதை ஆழமாக உணர்வதில்தான் 
அமைதி  கிடைக்குமேயன்றி, 
வாழ்வின் சூழ்நிலைகளைச் சீரமைப்பதால் 
கிடைத்து விடுவதில்லை.”
– Eckhart Tolle


#7
"கண்ணுக்குப் புலப்படாதவை நம்பிக்கையும் பிரார்த்தனையும், 
ஆனால் சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சக்தி கொண்டவை"
_Buddha

#8
உண்மையிடம் 
நம் ஆன்மா உண்மையைப் பேசுவதே 
பிரார்த்தனை!
**
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும், தொகுப்பது தொடருகிறது..
***

17 கருத்துகள்:

  1. ஒவ்வொரு வாசகமும் கைக்கொள்ள வேண்டியதொரு பண்பு அல்லது உணர்ந்து கொள்ள வேண்டியதொரு உண்மையை எளிமையாக உணர்த்துகிறது.

    பிரார்த்தனைக்கான வரையறை மற்றும் படம் மிகவும் பிடித்தம்.

    பதிலளிநீக்கு
  2. முதலில் படங்களை ரசித்து விட்டு பின்னர் வரிகளை ரசித்தேன். குட்டிப்பிள்ளையார் அழகு.

    பதிலளிநீக்கு
  3. பிள்ளையார் படம் - ரொம்பவே கவர்ந்தது.

    மற்றவையும் ரசித்தேன். தேர்ந்தெடுத்த வாசகங்கள் மிகவும் நன்று. தொடரட்டும் உங்கள் சேமிப்பும் பகிர்வும்.

    பதிலளிநீக்கு
  4. புகைப்படங்களுக்கு ஏற்ற அருமையான கவிதைகள்.

    பதிலளிநீக்கு
  5. எல்லாமே அழகு என்றாலும் அந்த கடைசி புகைப்படம்- ராதையும் கண்ணனும்!! எத்தனை கம்பீரமான அழகு!

    பதிலளிநீக்கு
  6. அனைத்து படங்களும் அழகு.
    கண்ணாடி மேஜை விளிம்பில் இருக்கிற கணபதி மனதை கவர்ந்தார்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin