வியாழன், 11 அக்டோபர், 2018

பிர்லா மந்திர் - கொல்கத்தா (5)

#1

தொழிலதிபர் பிர்லாவின் குடும்பத்தினரால் நாட்டின் பல இடங்களில் கட்டப்பட்ட இந்துக் கோவில்களில் ஒன்று கொல்கத்தாவிலும் உள்ளது. பளிங்கினால் கட்டப்பட்ட இக்கோவில் அசுதோஷ் செளத்ரி அவென்யூவில் இருக்கிறது.

#2

இக்கோவிலைக் கட்டி முடிக்க 26 வருடங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது.
1996 ஆம் ஆண்டு சுவாமி சித்தானந்தாஜி மஹராஜ் பிரதிஷ்டை செய்ய அதே நாளில் டாக்டர். கரண் சிங்கினால் கோவில் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டது. ஒடிஸாவின் புபனேஷ்வரில் உள்ள லிங்கராஜ் ஆலயத்தைப் பின்பற்றி வடிவமைக்கப் பட்டிருக்கிறது இக்கோவில். கட்டிட வடிவமைப்பாளர் நோமி போஸ், ராஜஸ்தான் ஆலயக் கட்டிடக் கலையையும் சில இடங்களில் பயன்படுத்தியுள்ளார். பகவத் கீதையின் காட்சிகள் பல படங்களாக கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன.


#3

அதிக கூட்டமில்லாத காலை வேளை. நல்ல தரிசனம். கோவிலுக்குள் படம் எடுக்க அனுமதி இல்லை.  பார்த்தவற்றை நினைவிலிருந்து மீட்டெடுத்து விவரிக்கிறேன்:

#4

ண்டபத்தில் பிரதான ( dome ) குவிமாடத்தின் கீழ், ஆளுயர கிருஷ்ணா ராதா  எழுந்தருளியிருக்க, அவர்களின் வலப்பக்கம், சிறிய குவிமாடத்தின் கீழ் தவக் கோலத்தில் இருக்கும் சிவபெருமானின் உருவச்சிலையும், இடப்பக்க மாடத்தின் கீழ் துர்கா தேவியின் சிலையும் உள்ளன. மண்டபத்தை விட்டு வெளியே நோக்கி வருகையில் வலப்பக்கம் இருக்கும் நீண்ட சந்நிதானத்தில் பகவானின் தசாவதாரங்களும் சிலைகளாக இடம் பெற்றுள்ளன. அவற்றுக்கு நடுவே புத்தரின் சிலையும் இடம் பெற்றிருந்தது ஆச்சரியம் அளித்தது. படிக்கட்டுகள் ஏறியதும் பிரகாரத்தின் ஒரு பக்கம் விநாயகர் சந்நதியும் மற்றொரு பக்கம் அனுமார் சந்நதியும் இருந்தன.

#5
கிருஷ்ணரின் பிறந்தநாளான ஜென்மாஷ்டமி அன்று நகரின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் தேடி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
**

(தொடரும்)

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
கொல்கத்தா (3) - அழகிய கட்டிடக் கலை.. விக்டோரியா நினைவிடம்.. (பாகம் 1) - 
கொல்கத்தா (4) - ஹூக்ளி கரையோரம்.. விக்டோரியா நினைவிடம்.. (பாகம் 2) 

6 கருத்துகள்:

  1. காலையில் ஓர் அழகிய ஆலயம் தரிசனம். விவரணை மிக நன்று.

    பதிலளிநீக்கு
  2. வடநாட்டில் நிறைய இடங்களில் தச அவதாரத்தில் புத்தரும் உண்டு ராமலக்ஷ்மி.
    படங்கள் எல்லாம் அழகு.
    நானும் நினைத்துப் பார்த்து கொண்டேன் முன்பு போனதை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin