ஞாயிறு, 28 அக்டோபர், 2018

ஏற்ற இறக்கம்

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 40
 பறவை பார்ப்போம் - பாகம் 31
#1
“தன் செயல்களில் பிரச்சனை இருப்பதை உணராத ஒருவரை 
உங்களால் ஒருபோதும் மாற்ற முடியாது.”


#2
“என்னை கீழே இழுக்கும் வல்லமை எனக்கு மட்டுமே உண்டு, 
ஆனால் மேலும் என்னைக் கீழே இழுக்க
என்னையே நான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.”
 _C. JoyBell C.

#3
“ஏற்ற இறக்கங்களைக் கொண்டது வாழ்க்கை. 
உயரத்தில் இருக்கையில் வசந்தத்தை அனுபவித்திடு. 
இறக்கத்தில் இருக்கையில்..
 உன் ஆன்மாவைத் தொட்டு 
அதன் அழகை உணர்ந்திடு.”
__Debasish Mridha
#4
“உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்.. 
உலகத்தில் போராடலாம்.
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்...”
_கவிஞர் கண்ணதாசன்



#5
 “ஒருவரை விட உயர்வாக இருப்பதில் உன்னதம் ஏதுமில்லை.
 உனது முந்தைய நிலையை விட நீ உயர்ந்து காட்டுவதே 
உண்மையில் உன்னதமானது.”

#6
உன் சிறகுகளை நீ விரித்திடாத வரையில், 
உன்னால் எவ்வளவு தூரம் பறக்க முடியும் 
என்பதைப் பற்றிய எண்ணமே எழும்பாது.” 
_ Napoleon

#7
“வாழ்க்கையில் மிக முக்கியமானது, வெற்றி அல்ல..
அதற்கான போராட்டமே!”
_ Pierre de Courbertin


**
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடர்கிறது..]
***

11 கருத்துகள்:

  1. உன்னை அறிந்தால் வரிகளுடன் வந்திருக்கும் படம் முன்னரே வந்திருக்கிறதே...

    படங்கள் அழகு. வரிகள் அதைவிட.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம்.

      வாய்ப்பே இல்லை:). இந்தத் தொகுப்புகளில் மீண்டும் இடம் பெற்று விடாமல் படங்களை கவனமாகவே தொகுத்து வருகிறேன். ஃப்ளிக்கரில் பதியும் போதே குறிப்பிட்ட தலைப்பின் கீழ் இங்கே ட்ராஃப் செய்து வருகிறேன். மற்ற படங்களை மூலமான ஆங்கில வாசகங்களுடன் FB_யில் பார்த்திருப்பீர்கள். இந்தப் படம் இதே வரிகளுடன் பகிர்ந்திருந்தேன்.

      நீக்கு
    2. இப்போதுதான் நினைவுக்கு வருகிறது, அங்கே இப்படத்துக்கான உங்கள் கருத்தும், மைனா வெயில் குடிக்கும் விவரம் சொன்ன எனது பதிலும் :) !

      நீக்கு
  2. படங்களுக்கான வாசகங்கள் அற்புதம்
    படங்களைப் போலவே.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமாக இருக்கிறீர்களா? நீண்ட இடைவெளிக்குப் பிறகான வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. மனதுக்கு வைராக்கியம் தரும் வரிகள். [யாருடனோ சண்டை போட்டுவிட்டுச் சொல்லும் வாக்கியங்களைப் போல இருக்கிறது:-).]

    முதல் மற்றும் கடைசிப் படம் வார்த்தைகளுக்கு மிகப் பொருத்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. படங்களுக்குப் பொருத்தமாகத் தேடிய வரிகள் :).

      நீக்கு
  4. படங்கள் எல்லாம் அழகு.
    பற்வைகள் எல்லாம் மிக அழகாய் இருக்கிறது.
    சிந்தனைகளும் அருமை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin