என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 38
#1
“பிழை செய்திடும் சுதந்திரம் இல்லாவிடில்
அந்த சுதந்திரத்திற்கு எந்த மதிப்புமில்லை.”
#2
“உனது நம்பிக்கைகள் உனது சிந்தனைகளாகின்றன,
உனது சிந்தனைகள் உனது வார்த்தைகளாகின்றன,
உனது வார்த்தைகள் உனது செயல்களாகின்றன,
உனது செயல்கள் உனது பழக்கங்களாகின்றன,
உனது பழக்கங்கள் உனது பண்புகளாகின்றன,
உனது பண்புகள் உனது தலைவிதியாகின்றது!”
#3
மற்றவர்களை மகிழ்விக்கவோ அல்லது இன்னும் மோசமாக,
பிரச்சனையைத் தவிர்க்கவோ சொல்லப்படுகிற
“ஆமாம்” என்பதை விடவும்,
மனதின் ஆழத்திலிருந்து உணர்ந்து சொல்லப்படும்
உண்மையான “இல்லை”
உயர்வானது!
#4
“அன்பே
உலகம் உடமையாகக் கைக் கொண்டிருக்கும்
வலிமையான ஆற்றல்”
#5
“குற்றத்தை வெறுத்திடு. குற்றவாளியை நேசித்திடு.”
_மகாத்மா காந்தி
2 அக்டோபர், மகாத்மா காந்தியின் பிறந்ததின வாரப் பகிர்வாக..
எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும்..!
***
அழகான படங்கள், வாழ்வியல் சிந்தனைகள் அருமை.
பதிலளிநீக்குமகாத்மா காந்தியின் பிறந்ததின சிறப்பு பகிர்வு அருமை.
மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குகாந்தி சொல்லியிருப்பதை செயல்படுத்துவது கடினம்!
பதிலளிநீக்குபடங்களையும் வரிகளையும் ரசித்தேன்.
மறுப்பதற்கில்லை. இன்று நடக்கும் பாதகங்களைப் பார்க்கையில் பாரதி சொல்வதே சரியெனத் தோன்றுகிறது, இல்லையா?
நீக்குநன்றி ஸ்ரீராம்.
பராசக்தி பதிவில் சிலபொன் மொழிகள் பகிர்ந்திருக்கிறேன் ரசிப்பீர்கள்
பதிலளிநீக்குபார்க்கிறேன். வருகைக்கு நன்றி.
நீக்குபடங்களும் பகிர்வும் அருமை
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குமிக உயர்ந்த சிந்தனை முத்துக்கள்! குறிப்பாக மூன்றாவது வாக்கியம் அற்புதம். உங்கள் வீட்டுத் தோட்டத்தில் வந்து உண்பதால் அந்தச் சிறு உயிரினம் பிழை செய்யும் குற்றவாளிகளா என்ன? படங்கள் வெகு அழகு. :).
பதிலளிநீக்குஅட, ஒரு பொருத்தத்திற்காகப் பகிர்ந்தது. மேலும் நாம் இந்த அணில்களைதான் நேசிக்க முடியும். ஸ்ரீராமுக்கு சொன்னது போல, குற்றவாளிகளை நேசிக்க மகாத்மாக்களால் மட்டும்தான் முடியும்.
நீக்குவீட்டுக் கொய்யா, மாங்கனி, மாதுளை எல்லாமே அவற்றுக்குப் போகதான் மிச்சம். சொல்லப் போனால் ஒன்றரை வருடங்கள் இருந்த மாதுளையில் ஒன்றைக் கூட கனிய விட்டதில்லை அணில்கள். அந்தப் படங்களையும் பகிர்ந்திருக்கிறேன் முன்னர்:).
நன்றி.
படங்களுக்கேற்ற அருமையான கவிதைகள்...
பதிலளிநீக்கு