ஞாயிறு, 21 அக்டோபர், 2018

அகமும் புறமும்

#1
“அச்சம் முடிவுறும் இடத்தில் 
வாழ்வு தொடங்குகிறது.”
_Osho

#2
“இயற்கையின் ‘ஆமன்’ என்றும் மலரே!”
_Oliver Wendell Holmes, Sr.


#3
“நாம் நாமாக நம்மை ஒப்புக் கொள்ளுதல் என்பது
 நமது நிறைகளை மட்டுமின்றி 
நமது குறைகளையும்  மதிப்பிடுவது.”
_Sandra Bierig

#4
“சுயமதிப்பின் வறட்சியை 
பணமோ, அங்கீகாரமோ, 
அன்போ, கவனிப்போ, செல்வாக்கோ 
தீர்க்க முடியாது”
 _ Gary Zukav

#5
யார் புறத்தைப் பார்க்கிறார்களோ, 
அவர்கள் கனவு காண்கிறார்கள்; 
யார் அகத்தைப் பார்க்கிறார்களோ, 
அவர்கள் விழித்துக் கொள்கிறார்கள். " 
_ Carl Jung

**
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடர்கிறது..]
***

11 கருத்துகள்:

  1. அருமையான மேற்கோள்கள், அழகான படங்களுடன்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான படங்கள். அழகான வரிகள்.

    பதிலளிநீக்கு
  3. அழகான மலர்கள் சொல்லும் வாழ்வியல் சிந்தனை அருமை.

    பதிலளிநீக்கு
  4. அனைத்தும் அருமை ராமலெக்ஷ்மி. மனதுக்குச் சொல்லிக் கொள்வது போல இருந்தது. அழகு :)

    பதிலளிநீக்கு
  5. சிந்தனையைத் தூண்டும் சிறந்த தற்பரிசோதனை வாசகங்கள். படங்களின் துல்லியம் பிரமிக்க வைக்கின்றன. முதல் படம் ஓவியம் தானே? நீரில் காட்சிகளின் பிரதிபலிப்பு, சிறையை உடைத்து வரும் மொக்கு என அழகு. வாசகத்துக்கும் மிகப் பொருத்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி.

      அசந்து மறந்து அந்த முதல் படத்தில் Water mark செய்ய மறந்து விட்டேன். அதற்காக அது ஓவியமாகி விடுமா:)? ஓவியமான ஒளிப்படம்!

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin