Sunday, November 13, 2011

நண்பர்கள் - Nov PiT வெற்றிமுத்திரை யாருக்கு? - கோவை என் விகடனில் நடுவர் கருவாயன்

நண்பர்களுக்கோர் அழைப்பு விட்டிருக்கிறார் இம்மாத நடுவர் கருவாயன், நண்பர்களைப் படமாக்க! நடுவர் எடுத்த அருமையான மாதிரிப் படங்களுடன் அறிவிப்புப் பதிவு இங்கே. போட்டிக்கான விதிமுறையெல்லாம் இந்தப் பதிவிலே இருக்கிறது.

நான் தரும் சில மாதிரிப் படங்கள்:

#1. நண்பர்களின் நடைப் பயணம்.. ஒரு ஞாயிறு காலையில்..


#2.இந்த நண்பர்களின் ஞாயிறு காலை
நதி அலைகளோடு ‘ஏலேலோ.. ஐலசா..’வென..

#3. ஆறுதல் சொல்வான் ஆத்ம நண்பன்
“கிடைக்கணும்னு இருக்கிறது கிடைக்காமப் போகாது.”


#4. தோள் கொடுப்பான் தோழன்..
துணை நிற்பாள் தோழி..

#5. “தோள் கொடு தோழா...
பையை மாட்டிக்கணும்..

#6. கற்றதைப் பகிரும்
நல்ல ‘நண்பேன்டா’

#7. “பொறு.. பொறு..
நிச்சயம் நம்மையும் நண்பர்கள் லிஸ்ட்ல சேர்ப்பாங்க..”

நாளை குழந்தைகள் தினம். குழந்தைகளுக்கு என் வாழ்த்துக்கள்:)!!!


#8. புதிய நட்பு..
முகமெல்லாம் பூரிப்பு

#9. இணைபிரியா நண்பர்கள்

#10. எத்தனை சமர்த்து?

#11. குழந்தையின் முதல் தோழிஇப்படி பெற்றோர்-குழந்தை; தாத்தா பாட்டி-பேரக்குழந்தை போல உறவும் நட்பும் ஒருங்கிணைந்த படங்களும் எடுத்தனுப்பலாம். அதில் நட்பு மிளிருமாறு இருத்தல் நலம்.

கோவை என் விகடனில் இம்மாத நடுவர் கருவாயன்:

9/11/11 தேதியிட்ட ஆனந்த விகடன் இணைப்பாகிய கோவை ‘என் விகடன்’_ல் PiT குழும உறுப்பினர் கருவாயன் என்னும் சுரேஷ்பாபுவைப் பற்றி “இது மூன்றாவது கண்” கட்டுரை வெளியாகியுள்ளது:

கருவாயனின் படங்கள் பலவற்றை முன்னரும் PiT போட்டி மாதிரிப் படங்களாகவும் மற்றும் அதீதம் தேர்வாகவும் முத்துச்சரத்தில் பகிர்ந்துகொண்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். என் கட்டுரை, கதைகளுக்கும் விரும்பி உபயோகிப்பதுண்டு.[அட்வான்ஸாகவே அனுமதி வாங்கி வைத்து விட்டேன்:)]. கிராமிய மணமிக்க ஜீவனுள்ள இவரது படங்கள் அனைத்தையும் ரசிக்க இங்கே செல்லுங்கள்: http://www.flickr.com/photos/30041161@N03/

[*“கேமரா என் மூன்றாவது கரம்” என கல்கி எனக்களித்த ஊக்கம் இங்கு:)!]

அடுத்து,
PiT உறுப்பினர் ஜீவ்ஸ் என்ற ஐயப்பனின் படங்கள் இவ்வருட கல்கி தீபாவளி மலர் 2011_ல் வெளியாகியுள்ளன:நேரமின்மை காரணமாகத் தொடர்ந்து பதியாவிட்டாலும் அருமையான படங்கள் அடங்கிய இவரது ஃப்ளிக்கர் முகவரி: http://www.flickr.com/photos/iyappan/ [இனியாவது வாரம் ஓரிரு படங்களேனும் பதிவார் என நம்புகிறேன்:)].

[*இதே தீபாவளி மலரில் வெளியான எனது படங்கள் இங்கே:)!]

கருவாயன், ஜீவ்ஸ் இருவருக்கும் வாழ்த்துக்கள்!!

வெற்றி முத்திரை:அக்டோபர் மாத வெற்றிப்படங்களைப் கவனித்தீர்களா? மாதப் போட்டியில் முதலிடம் பெறும் மூவரையும் பாராட்டி அங்கீகரிக்கும் விதமாக அவர்கள் படங்களிலே “வெற்றி முத்திரை” பதிக்க ஆரம்பித்திருக்கிறது PiT. விருப்பமானவர் அதைத் தங்கள் வலைப்பக்கத்தில் நிரந்தரமாகப் பதிந்து வைக்கலாம். ஃப்ளிக்கரில் அக்கவுண்ட் உள்ளவர்கள் அங்கே பகிர்ந்து கொள்ளலாம். இன்னும் உங்கள் நண்பர்களுடன் FB, Google + போன்ற தளங்களிலும்:)!

இம்மாதம் வெற்றி முத்திரை பெறவிருப்பவர் யார் யார் என்பதை அறிய உங்களைப் போலவே PiT-ம் ஆவலாகக் காத்திருக்கிறது. படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி நவம்பர் 15. விடுமுறையான ஞாயிறுடன் மேலும் 2 நாட்கள் ‘முழுசா’ உங்கள் கையில்:)!

இதுவரை போட்டிக்கு வந்து சேர்ந்த நண்பர்கள் எல்லோருமாய் உற்சாகமாக ஒன்றுகூடி அளவளாவிக் கொண்டிருக்கிறார்கள் இந்த பிகாஸா ஆல்பத்தில். அவர்கள் நட்பைப் பாராட்டி உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து மேலும் உற்சாகமூட்டுங்கள்!!

29 comments:

 1. நட்பை போல, நண்பர்களை போல - புகைப்படங்களும் அற்புதம்.

  ReplyDelete
 2. அருமையான உணர்ச்சிகள் ததும்பும் படங்கள். மனம் நிறைகிறது. வாழ்த்துகள் கருவாயன். ராமலக்ஷ்மி ,ஜீவ்ஸ்.

  ReplyDelete
 3. அக்கா...மூன்றாவது படம் நட்பின் நெருக்கம் சொல்கிறது !

  ReplyDelete
 4. தோள் கொடு தோழா :))
  நல்ல கமெண்ட்
  படங்களைப்பத்தி,,,,, அதுஎப்பவுமே முத்துச்சரத்துல கலக்கல் தான் :)

  ReplyDelete
 5. படங்கள் அழகு. வெற்றி பெற வாழ்த்துகள். சுட்டிகள் போய் பார்த்து வந்தேன்.

  ReplyDelete
 6. படங்கள் அனைத்தும் பார்ப்பவரோடு
  பேசுகின்றன.குறிப்பாக அந்த அலைகள்...
  பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 7. பகிர்வுக்கு நன்றி..வழக்கம் போல் அருமையான படங்கள்.

  ReplyDelete
 8. தோள் கொடுப்பவந்தான் தோழன்.. அது பை மாட்டிக்கவானாலும் சரிதான் :-)))

  படங்களெல்லாம் ஜூப்பர்.

  அப்டியே உங்களைத் தொடர் பதிவுக்கு அழைச்சிருக்கேன்.

  http://amaithicchaaral.blogspot.com/2011/11/blog-post_14.html

  ReplyDelete
 9. அருமையான படங்கள்.

  ReplyDelete
 10. குழந்தையின் முதல் தோழி
  >>.
  இதுதான் பிடிச்சு இருக்கு

  ReplyDelete
 11. தமிழ் உதயம் said...

  //நட்பை போல, நண்பர்களை போல - புகைப்படங்களும் அற்புதம்.//

  நன்றி ரமேஷ்.

  ReplyDelete
 12. வல்லிசிம்ஹன் said...
  //அருமையான உணர்ச்சிகள் ததும்பும் படங்கள். மனம் நிறைகிறது. வாழ்த்துகள் கருவாயன். ராமலக்ஷ்மி ,ஜீவ்ஸ்.//

  நன்றி தங்கள் வாழ்த்துக்களுக்கும்:)!

  ReplyDelete
 13. ஹேமா said...

  //அக்கா...மூன்றாவது படம் நட்பின் நெருக்கம் சொல்கிறது !//

  நன்றி ஹேமா. அதுவே போட்டி ஆல்பத்துக்கு நான் கொடுத்ததும்:)!

  ReplyDelete
 14. முத்துலெட்சுமி/muthuletchumi said...

  //தோள் கொடு தோழா :))
  நல்ல கமெண்ட்
  படங்களைப்பத்தி,,,,, அதுஎப்பவுமே முத்துச்சரத்துல கலக்கல் தான் :)//

  நன்றி முத்துலெட்சுமி, எப்போதும் போலவே கமெண்டுகளை ரசித்திருப்பதற்கு:)!

  ReplyDelete
 15. ஸ்ரீராம். said...
  //படங்கள் அழகு. வெற்றி பெற வாழ்த்துகள். சுட்டிகள் போய் பார்த்து வந்தேன்.//

  மகிழ்ச்சியும் நன்றியும். நான் இப்போது ஓட்டத்தில் இல்லை ஸ்ரீராம். இது அறிவிப்பு மற்றும் படங்களை அனுப்ப நினைவூட்டி ஊக்கம் தரும் பதிவு:)!

  ReplyDelete
 16. Ramani said...
  //படங்கள் அனைத்தும் பார்ப்பவரோடு
  பேசுகின்றன.குறிப்பாக அந்த அலைகள்...
  பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 17. asiya omar said...

  //பகிர்வுக்கு நன்றி..வழக்கம் போல் அருமையான படங்கள்.//

  மிக்க நன்றி ஆசியா:)!

  ReplyDelete
 18. அமைதிச்சாரல் said...

  //தோள் கொடுப்பவந்தான் தோழன்.. அது பை மாட்டிக்கவானாலும் சரிதான் :-)))

  படங்களெல்லாம் ஜூப்பர்.//

  நன்றி சாந்தி, தொடர் பதிவுக்கு அழைத்த அன்புக்கும்:)!

  ReplyDelete
 19. மாதேவி said...

  //அருமையான படங்கள்.//

  நன்றி மாதேவி.

  ReplyDelete
 20. சி.பி.செந்தில்குமார் said...

  //குழந்தையின் முதல் தோழி
  >>.
  இதுதான் பிடிச்சு இருக்கு//

  மிக்க நன்றி செந்தில்குமார்:)!

  ReplyDelete
 21. எல்லா படங்களும் அருமை.

  ReplyDelete
 22. அழகான மனதைத் தொடும் படங்கள்...

  ReplyDelete
 23. கோமதி அரசு said...
  //எல்லா படங்களும் அருமை.//

  நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 24. குமரி எஸ். நீலகண்டன் said...
  //அழகான மனதைத் தொடும் படங்கள்...//

  நன்றி நீலகண்டன்.

  ReplyDelete
 25. இம்மாதப் போட்டிக்கு PiT உறுப்பினருடையவை தவிர்த்து 82 படங்கள் வந்துள்ளன போட்டிக்கு. பிகாஸா ஆல்பம் சென்று ரசிக்கலாம். உங்கள் கருத்துக்களையும் வழங்கலாம். போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் PiT சார்பில் நன்றியும்:)!

  ReplyDelete
 26. சம்ர்த்தாய் முகமெல்லாம் பூரிப்பாய் மனதில் நிறைந்த பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 27. @ இராஜராஜேஸ்வரி,

  மகிழ்ச்சியும் நன்றியும்.

  ReplyDelete
 28. மிக அருமையான படங்கள்.. வெற்றி பெறப்போகிறவர்களுக்கு வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி..:)

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin