Sunday, November 27, 2011

நட்சத்திர வாரமும் நன்றி நவிலும் நேரமும்

கண்சிமிட்டும் நேரத்தில் கடந்து விட்டது வாரம். வாய்ப்பு வந்த வேளையில் சேமிப்பில் இருந்த சில பதிவுகளை மட்டுமே நம்பிச் சரி என ஏற்றுக் கொண்டாலும் ஒருவித மலைப்பு இருக்கவே செய்தது. ஆயினும் சராசரியாகத் தினம் இரண்டு என்ற விகிதத்தில் இத்துடன் 16 இடுகைகள் அளிக்க முடிந்தது என்றால் அது நண்பர்களின் ஊக்கத்தினாலும், நட்சத்திரமாகப் பொறுப்பேற்றது அறிந்து வழக்கமாக வராதவர்கள் கூட தேடி வந்து முதல் பதிவில் அளித்த வாழ்த்துகள் தந்த பலத்தினாலுமே.இவ்வார முன்னணி இருபது வலைப்பதிவுகளில் அதிக பார்வையாளர்களைப் பெற்று முதலிடத்தில் முத்துச்சரம். எதிர்பாராதது. வாழ்த்தியிருந்தார் இன்றைய பதிவில் நண்பர் ஒருவர். ஒருநாள் முதல்வர் போலக் கிடைத்த இந்த ஒருவாரச் சிறப்புக்குக் காரணம் முகப்பில் தனிக்கவனம், இடுகைகளின் எண்ணிக்கை, நண்பர்களின் ஆதரவு ஆகியவையே. கூகுள் ஸ்டாட்ஸ் தினம் சில ஆயிரங்களில் காட்டியப் பார்வையாளர்கள் எண்ணிக்கைச் சற்று மிரளவே வைத்தது. இந்த இடத்தின் புரிதல் சரிவர இன்றிப் பெரிய திட்டமிடலும் இல்லாமல் தொடங்கியிருந்த வேளையில் மாலை நேரப் பதிவுகளாக 3 நாட்கள் பயணக்கட்டுரையைப் புகைப்படங்களுடன் பகிர்ந்த போது ‘நட்சத்திர வாரத்தில் ஒரே மாதிரியான அதுவும் புகைப்படங்களாகவே வேண்டாமே’ என அன்புடன் அறிவுறுத்திய உரிமையுடன் கேட்டுக் கொண்ட நட்புகளுக்கு என் சிறப்பு நன்றி. ஆம், அதிகம்பேர்கள் ரசித்தாலும், புகைப்படங்களை எப்போது வேண்டுமானாலும் பகிரலாம்தான். எழுதும் எண்ணத்தில் குறிப்புகளோடு நிறுத்தியிருந்த பதிவுகளை வேகமாகச் செயல்பட்டு எழுதிப் பதிந்தேன். நள்ளிரவில் பெற்றோம்.. இன்னும்.. ; இவர்களுக்குப் பூங்கொத்து இரண்டுமே மனதுக்கு நிறைவாக. நிறைவு நாளான இன்று வெளியாகியுள்ள தினமணி கதிர் சிறுகதையும் சமூகத்துக்கான இன்னொரு பதிவாக அமைந்ததில் திருப்தி.

வாசிப்பின் மீதான நேசம் மக்களுக்கு வற்றிவிடவில்லை எனக்காட்டுவதாக அமைந்திருந்தன வாழ்வை வளமாக்கும் புத்தகங்கள், புத்தகக் கண்காட்சிப் பதிவு ஆகியன பெற்ற பார்வையாளர்களின் எண்ணிக்கை. மலரும் நினைவுகளுடன், குறும்பட விமர்சனம், கவிதை, வாசிப்பனுபவம், புகைப்படக் கலையை வளர்க்கும் PiT என இயன்றவரை (மீள்பதிவுகள் இன்றி) மாறுபட்டப் பதிவுகளைப் பகிர்ந்ததாகவே என் வரையில் எண்ணுகிறேன்.

வாய்ப்பளித்த தமிழ்மணத்துக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!
*****

42 comments:

 1. தமிழ்மண நட்சத்திரமாக ஜொலித்ததற்கும், அதிலும் தாங்கள் முதலிடம் பெற்றதற்கும் என் அன்பான வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். vgk

  ReplyDelete
 2. ஒருநாள் முதல்வர் பதவியில் நாட்டுக்கு நன்மை செய்து மனநிறைவு பெற்றது போல் நல்ல பதிவுகளை கொடுத்தோம் நட்சத்திர வாரத்தில் என்று நீங்கள் மனநிறைவு பெறலாம் ராமலக்ஷ்மி.

  தமிழ்மண நட்சத்திர வாரத்தை சிறப்பாய் முடித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. நான் பதிவுலகத்திற்கு புதுசு!இந்த வாரம் முழுதும் உங்கள் வலையில் உள்ள பழைய பதிவுகளைப் படித்துக் கொண்டு இருந்தேன். நிறைய புத்தகங்களைப் பற்றிய பதிவுகள் பிடித்திருந்தது. நன்றி!
  நானும் புத்தகம் பற்றி இன்று ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.

  என் வலையில் ;

  யானை ஆடி நின்றிருந்த காலியான கொட்டில்...!

  ReplyDelete
 4. அழகாயும் அற்புதமாயும் இந்த வாரத்தை ஜொலிக்கவைத்தீர்கள் அக்கா.வாழ்த்துகள் !

  ReplyDelete
 5. நட்சத்திர வாரப் பதிவுகளை ரொம்பவே சிறப்பாகவும் சிரத்தையாகவும் செஞ்சுட்டீங்க. எங்கள் இனிய பாராட்டுகள் ராமலக்ஷ்மி. அதி சூப்பர்

  ReplyDelete
 6. சிறப்பான வாரத்துக்கு பாராட்டுகள்.
  ஒருநாள் முதல்வர் பதவி நிரந்தரமாகப் பாராட்டுகள்.
  தினமணிக்கதிர் சிருகதிக்கு வாழ்த்துகள், பாராட்டுகள்.

  ReplyDelete
 7. இந்த வாரத்தின் தங்கள் முதல் அறிமுக பதிவிலேயே தாங்கள் முதலிடம் பெறுவீர்கள் என சொன்னதை நினைவு கூறுகிறேன் யுவர் ஆனர். வாழ்த்துகள்

  ReplyDelete
 8. கொஞ்சம் ஆஸ்வாசம் படுத்திக்கொள்ளவும்.....

  கிவ் அ ச்சோட்டாசா பிரேக்....

  ReplyDelete
 9. முதல் இடத்திற்கு முதல் வாழ்த்து. நட்சத்திர வாரங்களில் அருமையான எண்ணங்களைப் பதிந்ததற்கும் இனிய வாழ்ர்த்துகள் ராமலக்ஷ்மி. உங்கள் உழைப்பு என்றும் வீண் போகாது.

  ReplyDelete
 10. நன்றாக நிறைவாக முடிந்தது நட்சத்திர வாரம். ஒரு விழாவினை நிறைவாக நடத்தி பங்குகொண்ட மகிழ்ச்சியினை இது நிச்சயம் தந்திருக்கும்.. உங்கள் எழுத்தாற்றலுக்கும் கலைத் திறனுக்குமான உரிய அங்கீகாரமிது. அதுவும் இயல்பாய் நிகழ்வது....

  ReplyDelete
 11. உங்கள் எழுத்துக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்திருப்பார்கள். நட்சத்திர வாரம் இனிமை.

  ReplyDelete
 12. வாழ்த்துகள் ! mam

  ReplyDelete
 13. வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தாங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி..!
  நம்ம தளத்தில்:
  "மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

  ReplyDelete
 14. முதலிடம் பெற்றதற்குவாழ்த்துகள்.
  நட்சத்திர வாரம் சூப்பர்.

  ReplyDelete
 15. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //தமிழ்மண நட்சத்திரமாக ஜொலித்ததற்கும், அதிலும் தாங்கள் முதலிடம் பெற்றதற்கும் என் அன்பான வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். vgk//

  மிக்க நன்றி vgk sir.

  ReplyDelete
 16. கோமதி அரசு said...
  //ஒருநாள் முதல்வர் பதவியில் நாட்டுக்கு நன்மை செய்து மனநிறைவு பெற்றது போல் நல்ல பதிவுகளை கொடுத்தோம் நட்சத்திர வாரத்தில் என்று நீங்கள் மனநிறைவு பெறலாம் ராமலக்ஷ்மி.

  தமிழ்மண நட்சத்திர வாரத்தை சிறப்பாய் முடித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.//

  நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 17. மாயன் : அகமும் புறமும் said...
  //நான் பதிவுலகத்திற்கு புதுசு!இந்த வாரம் முழுதும் உங்கள் வலையில் உள்ள பழைய பதிவுகளைப் படித்துக் கொண்டு இருந்தேன். நிறைய புத்தகங்களைப் பற்றிய பதிவுகள் பிடித்திருந்தது. நன்றி!//

  நல்லது. நன்றி தங்கள் முதல் வருகைக்கும்.

  ReplyDelete
 18. ஹேமா said...
  //அழகாயும் அற்புதமாயும் இந்த வாரத்தை ஜொலிக்கவைத்தீர்கள் அக்கா.வாழ்த்துகள் !//

  மிக்க நன்றி ஹேமா.

  ReplyDelete
 19. துளசி கோபால் said...
  //நட்சத்திர வாரப் பதிவுகளை ரொம்பவே சிறப்பாகவும் சிரத்தையாகவும் செஞ்சுட்டீங்க. எங்கள் இனிய பாராட்டுகள் ராமலக்ஷ்மி. அதி சூப்பர்//

  மகிழ்ச்சியும் நன்றியும் மேடம்.

  ReplyDelete
 20. ஸ்ரீராம். said...
  //சிறப்பான வாரத்துக்கு பாராட்டுகள்.
  ஒருநாள் முதல்வர் பதவி நிரந்தரமாகப் பாராட்டுகள்.
  தினமணிக்கதிர் சிறுகதைக்கு வாழ்த்துகள், பாராட்டுகள்.//

  முதல்வர் பதவி நிரந்தரமா வேண்டாவே வேண்டாம்:)! இனி வழக்கமான வேகத்தில் வாரம் ஒன்றோ இரண்டோ எனத் தொடர்வேன். பாராட்டுகளுக்கு மனமார்ந்த நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 21. மோகன் குமார் said...
  //இந்த வாரத்தின் தங்கள் முதல் அறிமுக பதிவிலேயே தாங்கள் முதலிடம் பெறுவீர்கள் என சொன்னதை நினைவு கூறுகிறேன் யுவர் ஆனர். வாழ்த்துகள்//

  கணிப்பு தவறென்றே நினைத்தேன்:)! ஆருடத்துக்கும் சேர்த்து என் அன்பு நன்றி.

  ReplyDelete
 22. goma said...
  //கொஞ்சம் ஆஸ்வாசம் படுத்திக்கொள்ளவும்.....

  கிவ் அ ச்சோட்டாசா பிரேக்....//

  யெஸ் டேக்கிங் எ ப்ரேக். நன்றி கோமாம்மா:)!

  ReplyDelete
 23. வல்லிசிம்ஹன் said...
  //முதல் இடத்திற்கு முதல் வாழ்த்து. நட்சத்திர வாரங்களில் அருமையான எண்ணங்களைப் பதிந்ததற்கும் இனிய வாழ்ர்த்துகள் ராமலக்ஷ்மி. உங்கள் உழைப்பு என்றும் வீண் போகாது.//

  அன்புக்கும் ஆசிக்கும் நன்றி வல்லிம்மா.

  ReplyDelete
 24. புதுகை.அப்துல்லா said...
  //மகிழ்ச்சி :)//

  மிக்க நன்றி அப்துல்லா:)!

  ReplyDelete
 25. குமரி எஸ். நீலகண்டன் said...
  //நன்றாக நிறைவாக முடிந்தது நட்சத்திர வாரம். ஒரு விழாவினை நிறைவாக நடத்தி பங்குகொண்ட மகிழ்ச்சியினை இது நிச்சயம் தந்திருக்கும்.. உங்கள் எழுத்தாற்றலுக்கும் கலைத் திறனுக்குமான உரிய அங்கீகாரமிது. அதுவும் இயல்பாய் நிகழ்வது....//

  ஒரு வகையில் அப்படிதான் உணர்ந்தேன். மிக்க நன்றி நீலகண்டன்.

  ReplyDelete
 26. Shakthiprabha said...
  //உங்கள் எழுத்துக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்திருப்பார்கள். நட்சத்திர வாரம் இனிமை.//

  மிக்க நன்றி ஷக்தி.

  ReplyDelete
 27. MangaiMano said...
  //வாழ்த்துகள் ! mam//

  நன்றி மங்கை:)!

  ReplyDelete
 28. திண்டுக்கல் தனபாலன் said...
  //வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தாங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். //

  மிக்க நன்றி, முதல் வருகைக்கும்.

  ReplyDelete
 29. Kanchana Radhakrishnan said...
  //முதலிடம் பெற்றதற்குவாழ்த்துகள்.
  நட்சத்திர வாரம் சூப்பர்.//

  நன்றி மேடம்.

  ReplyDelete
 30. நட்சத்திர வாரத்தை சிறப்பா நடத்தியதுக்கு வாழ்த்துகள் நட்சத்திர முதல்வரே.. ஒரு நாள்ன்னாலும் முதல்வ்ர் முதல்வர்தான் :-)

  ReplyDelete
 31. வாழ்த்துக்கள் அம்மா ......

  ReplyDelete
 32. அசத்தியதற்கு பூங்கொத்துக்கள்!

  ReplyDelete
 33. அமைதிச்சாரல் said...
  //நட்சத்திர வாரத்தை சிறப்பா நடத்தியதுக்கு வாழ்த்துகள் நட்சத்திர முதல்வரே.. ஒரு நாள்ன்னாலும் முதல்வ்ர் முதல்வர்தான் :-)//

  நன்றி சாந்தி:)!

  ReplyDelete
 34. அம்பாளடியாள் said...
  //வாழ்த்துக்கள் அம்மா ......//

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  ReplyDelete
 35. அன்புடன் அருணா said...
  //அசத்தியதற்கு பூங்கொத்துக்கள்!//

  நன்றி அருணா.

  ReplyDelete
 36. மொதலே படிக்க முடியல... மன்னிக்கணும்... இப்ப தான் சேத்து வெச்சு எல்லாமும் படிச்சேன்.. .அழகா எழுதி இருக்கீங்க வாரம் முழுக்க...வாழ்த்துக்கள்..:)

  ReplyDelete
 37. வணக்கம்...
  புதியதோர் மகளிர் திரட்டி... புதிய முயற்சி.. உங்களின் அதரவு தேவை...
  மங்கையர் உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...
  நீங்கள் வலைப்பூவீல் அல்லது இணையத்தளத்தில் எழுதும் மங்கையரா...?
  உங்கள் வலைப்பூ/இணையத்தளம் மகளிருக்கு பயனளிக் கூடியதா?
  உங்கள் பதிவுகளை இன்றே இங்கு இணைத்துக்கொளுங்கள்..
  http://ithu-mangayarulagam.blogspot.com/

  ReplyDelete
 38. அழகாயும் அற்புதமாயும் இந்த வாரத்தை ஜொலிக்கவைத்தீர்கள்

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 39. அப்பாவி தங்கமணி said...
  //இப்ப தான் சேத்து வெச்சு எல்லாமும் படிச்சேன்.. .அழகா எழுதி இருக்கீங்க வாரம் முழுக்க...வாழ்த்துக்கள்..:)//

  நன்றி புவனா:)!

  ReplyDelete
 40. @ மங்கையர் உலகம்,

  நல்ல முயற்சி. வாழ்த்துகள்! தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 41. Lakshmi said...
  //அழகாயும் அற்புதமாயும் இந்த வாரத்தை ஜொலிக்கவைத்தீர்கள்

  வாழ்த்துக்கள்.//

  நன்றி லக்ஷ்மிம்மா.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin