திங்கள், 21 நவம்பர், 2011

இந்த வாரம்-தமிழ்மணம் நட்சத்திரம்

தொடர்ந்து எழுதுவது வழக்கமாக இல்லாமல் தோன்றும் போது எழுதுவதே என் பழக்கம்." 2008 மே மாதம் வலைப்பூ ஆரம்பித்த போது இந்த வாசகம் முத்துச்சரத்தின் முகப்பிலும் என் profile பக்கத்திலும் இருந்தது. அடுத்த இரண்டு வருடங்களும் கூட. ஆனால் இப்போது அவ்வழக்கத்தை “வலைப்பூ ஓரளவு மாற்றி இருப்பதாகவே உணர்கிறேன்” என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளேன்:)!

பதிவுகளின் வகை விரிந்திருப்பதும், 2010 சென்ற வருட அக்டோபர் மாதம் வரை வாரம் ஒரு இடுகையென்ற கொள்கையுடனேயே இருந்த என்னை, வாரம் இரண்டு தருமாறு அக்கறையுடன் கடிந்து கொண்ட நண்பரின் ஆலோசனையை ஏற்றதில் இப்போது வரை அதை செயல்படுத்த முடிந்திருப்பதும் எனக்கே ஆச்சரியமாக உள்ளது.

இதற்கு முன் வலைச்சரம் தொகுத்த வாரத்தில் மட்டுமே தினம் 2 பதிவுகள், அதாவது வலைச்சரத்தில் ஒன்றும் அதற்கான அறிவிப்பாக முத்துச்சரத்தில் ஒன்றும் என தந்து சாதனை படைத்தேன்:)! என் வரையில் முடியுமா எனப் பிரமிப்புடன் கடந்த வாரம் அது. இதோ மீண்டும் அதே போன்ற சூழலில். தினம் ஒன்றுக்கு மேலான பதிவுகள் தரும் விருப்பத்துடன் உங்கள் முன். தமிழ்மணம் நட்சத்திரமாக...

2009-ல் சமூகம் பிரிவில் முதலிடத்துக்கும், 2009, 2010 இரண்டு வருடங்களிலும் தொடர்ந்து காட்சிப்படைப்புகள் பிரிவில் இரண்டாவது இடத்துக்குமாக விருதுகளை வழங்கிக் கெளரவித்த தமிழ்மணம் இப்போது தந்திருக்கும் இன்னொரு அங்கீகாரம் இது. நன்றி தமிழ்மணம்!

னக்கு வலைப்பூ அறிமுகமாகி பதிவுலகம் நுழைந்த சமயத்தில் தமிழ்மணம் மட்டுமே பதிவுகளை இணைக்கும் திரட்டியாக செயல்பட்டு வந்தது. நான் முதன் முதலில் வாசித்த நெல்லை சிவா அவர்களின் வலைப்பூவில் அறிய வந்த, போட்டிகள் பல நடத்திய தேன்கூடு திரட்டி அதன் நிறுவனர் மறைவால் நின்று போயிருந்தது. பதிவுலகப் பிரவேசம் ‘முத்துச்சரம்’ கோர்க்க ஆரம்பிக்கும் முன்னரே நானானி அவர்களது பதிவுகள் சிலவற்றுக்குப் பின்னூட்டமிட்ட வகையில் நிகழ்ந்து விட்டிருந்தது. என் முதல் பதிவுக்கு முதல் கருத்தளித்து வரவேற்றவர் கோமா அவர்கள். நெல்லை சிவா அவர்களே முத்துச்சரத்துக்கு தமிழ்மணம் இணைப்பை ஏற்படுத்தித் தந்தவர். அதுவரை எழுதியவற்றை ஓரிடத்தில் சேமிக்கலாம் எனும் எண்ணத்திலேதான் முத்துச்சரத்தை ஆரம்பித்தேன். ஆனால் தமிழ்மணம் மூலமாக நண்பர்களின் வரவையும், கருத்துக்களையும் பெற முடிந்த வசதி அப்போது அளப்பரிய வியப்பையும், புதிதாக இன்னும் எழுத வேண்டுமெனும் ஊக்கத்தையும் அளித்தன என்றால் அது மிகையன்று.

அந்த சமயத்தில் ரீடர் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. ப்ளாகரில் தொடருபவர் வசதியும் வந்திருக்கவில்லை. தமிழ்மணம் சேவையால் மட்டுமே மற்றவரை வாசிக்க முடிந்தது. பல மாதங்கள் கழித்து ஃபாலோயர் வசதி வந்து, என்னைத் தொடருபவராக நான்கு பேர்களை டேஷ்போர்ட் காட்டியபோது, “அட நம்மையும் நாலு பேரு தொடர்ந்து வாசிக்க நினைக்கறாங்களே..” என மகிழ்ச்சியாகவே இருந்தது:)! அந்த நாலு பேர்: சஞ்சய், புதுகைத்தென்றல், வெண்பூ, ட்ரூத்!!!! அவர்கள் போட்ட பிள்ளையார் சுழி இன்று 435 ஆகவும், ரீடரில் தொடர்பவராக காட்டும் எண்ணிக்கை 516 ஆகவும்.

நான் ரீடரில் தொடருகின்ற 300 பேர்களில் ஒரு நூறு பேரையாவது காணவில்லை:(! யாராவது கண்டு பிடித்துத் தந்தால் தேவலாம். இன்னும் அவர்களைத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறேன் என்றேனும் மீண்டும் வருவார்கள், முன்போல் பதிவிடுவார்கள் என. அதில் சிலபேர் எப்போதேனும் அத்திபூத்த மாதிரி பதிவு போடுகையில் முதல் ஆளாகவோ (அல்லது வேலையாகவோ) சென்று மகிழ்ச்சியுடன் கருத்தளித்து விட்டு வருவேன். சிலபேர் வேலைமிகுதியால் தவிர்க்க முடியாமல் எழுதுவதை நிறுத்தி விட்டார்கள். சிலபேர் ட்விட்டர், ஃபேஸ்புக், கூகுள் பஸ், ப்ளஸ் எனத் தங்கள் களங்களை மாற்றிக் கொண்டு விட்டார்கள். கருத்துப் பரிமாற்றங்களுக்கு வசதியாக அதை அவர்கள் உணர்வதில் தவறொன்றுமில்லை. ஆனால் நமது கருத்துக்களையும் எண்ணங்களையும் ஓரிடமாகச் சேமிக்க வலைப்பூவே சிறப்பானது என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம். விட்டுச் சென்றவர் அனைவரும் மீண்டும் பதிவுலகம் திரும்ப வேண்டும் என்பதே என் அவா.

ணைய இதழ்கள், வலைப் பதிவுகள் இவற்றிலேயே திருப்தியுடன் நகர்ந்து கொண்டிருந்த என்னைப் பத்திரிகைகள் பக்கம் திருப்பியதில் என் அம்மாவுக்கும் முக்கிய பங்கு உண்டு. அவர் கணினியில் அமர்வதில்லை. திண்ணை நினைவுகள் போன்ற சிலபதிவுகளைத் தம்பி பிரிண்ட் எடுத்து வாசிக்கக் கொடுப்பதுண்டு. “நீ நெட்டிலேயே எழுதினா எல்லோரும் எப்படிப் படிக்கறதாம்? பத்திரிகைக்கு எழுது” என விடாமல் நச்சரித்ததன் பேரிலேயே முயன்றிடும் எண்ணம் வந்தது. பெங்களூரில் தமிழ் பத்திரிகைகளைக் குறிப்பிட்ட கடைகளைத் தேடிச் சென்று வாங்குவது பெரிய சிரமமாகவே இருந்து வருகிறது இன்று வரையிலும். ஆனாலும் எடுத்த முயற்சிகள் பலன் தந்ததில் என்னை விட அம்மாவுக்கே மகிழ்ச்சி. சிவசிவா எனும் சிந்தனை மட்டும் போதுமென ஓய்வெடுக்க வேண்டிய வயதிலும் பிள்ளைகள் நலனுக்காகப் பிரார்த்திப்பதும், ஊக்கம் தருவதும், கவலைப்படுவதுமாகவே இந்த அம்மாக்கள். அதை நினைத்து நெகிழ்வாய் உணருகையில் நானும் (அவரிடம் கற்றதைப் பின்பற்றும்) அம்மாதான் என்பது கூட மறந்து போகிறது:)!

வீட்டிலே கிடைக்கும் ஊக்கம், ஒத்துழைப்பு பற்றி இங்கேயே பதித்து வைத்து விட்டுள்ளேன் மிகுந்த மனநிறைவுடன்:


இந்த வார நட்சத்திரம் - ஓர் அறிமுகம்

சொந்தமண் நெல்லை. பெங்களூரில் வாசம். படிப்பு: எம்.ஏ,எம்.ஃபில் ஆங்கிலம் இலக்கியம். கல்விக் கண் திறந்தவர்கள்: இக்னேஷியஸ் கான்வென்ட் பள்ளி, சாரா டக்கர் கல்லூரி மற்றும் ஆய்வுப் பட்டம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தினின்று.

எழுத்து எண்பது, தொன்னூறுகளில் 'நண்பர் வட்டம்' இலக்கியப் பத்திரிகையில் ஆரம்பித்து திண்ணை, கீற்று, வார்ப்பு, உயிரோசை, யூத்ஃபுல் விகடன், நவீனவிருட்சம், அதீதம், வல்லமை, பண்புடன் இணைய இதழ்களிலும்; சமீபமாக கல்கி, தினமணி கதிர், கலைமகள்,ஆனந்த விகடன், தேவதை, லேடீஸ் ஸ்பெஷல், இவள் புதியவள் போன்ற பத்திரிகைகளிலும்; வடக்கு வாசல், அகநாழிகை, நவீனவிருட்சம் சிற்றிதழ்களிலுமாகத் தொடர்கிறது. அதீதம் http://www.atheetham.com/ இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இணைந்து செயலாற்றுவது கூடுதல் செய்தி.

2008-லிருந்து என் எண்ணங்களை எழுத்துக்களாகவும், கருத்தைக் கவர்ந்தவற்றை நிழற்படங்களாகவும் முத்துச்சரத்தில் கோர்த்து வருகிறேன். முத்துச்சரம் குறித்த ஒரு அறிமுகத்துக்கு இந்தப் பதிவு பொருத்தமாக இருக்குமென எண்ணுகிறேன்: http://tamilamudam.blogspot.com/2011/03/blog-post_07.html
புகைப்படக்கலை மீது இயல்பாகவே இருந்த ஆர்வம் ‘தமிழில் புகைப்படக்கலை’ http://photography-in-tamil.blogspot.com/ மூலமாக வளர்ந்து இப்போது அத்தளத்தின் உறுப்பினர்களில் ஒருவராகப் பொறுப்பு வகிப்பதிலும், Flickr தளத்தில் http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/ எனும் பக்கத்தில் படங்களைத் தொடர்ந்து பகிர்வதன் மூலமாகவும் தொடர்கின்றது.

மென்பொருள் நிறுவனமொன்றில் Vice President ஆக பதவி வகிக்கும் கணவருக்கும், பொறியியல் மூன்றாம் ஆண்டில் இருக்கும் மகனுக்கும் உறுதுணையாக இருந்து வரும் என் செயல்பாடுகள் அனைத்துக்கும் அவர்கள் தரும் ஒத்துழைப்பும் ஆத்மார்த்தமானது.
***
[நிறைவு நாளில் எடுத்து ஸ்க்ரீன் ஷாட்டுடன் அங்கு தரப்பட்டிருந்த அறிமுகத்தை அப்டேட் செய்திருக்கிறேன்.]

நீங்கள் தரும் ஊக்கம் பற்றித் தனியே சொல்ல வேண்டுமா? நண்பர்களின் கருத்துக்களே இன்றளவும் எனைச் செலுத்தும் சக்தியாக...

சந்திக்கலாம் வாரம் முழுவதும், தினம் தினம்:)!

*****

பி.கு: ஒருவார குறுகிய அவகாசத்தில் ஏற்றிருக்கும் பொறுப்பு ஆகையால் பெரிய திட்டமிடல் இயலாது போயினும் முடிந்தவரை மீள் பதிவுகளைத் தவிர்க்க முயன்றிடுகிறேன். முடிவுறாதிருக்கும் சிங்கப்பூர் பயணத் தொடரின் ஒருசில பாகங்களையும் மாலைப் பதிவுகளாகத் தந்திட எண்ணம், புகைப்படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கலாமென.

126 கருத்துகள்:

  1. (சின்ன) டீச்சருக்கு
    நட்சத்திர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. தகுதி வாய்ந்த உங்களுக்கு கிடைத்த இன்னொரு மகுடம்... வாழ்த்துக்கள் அக்கா.. TM 1

    பதிலளிநீக்கு
  3. உங்களுக்கு கிடைத்த சிறப்பு மிகுந்த பெருமையை அளிக்கிறது... உங்கள் வலைப்பூ பங்களிப்புகளின் வரலாறு மிகுந்த சுவையானது... அம்மாவிற்காக இணையத்திலிருந்து இதழ்களையும் தேடி வந்து படைத்தமை மனதிற்கு இதம் தருபவை.... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல கதைகள், நல்ல கவிதைகள், நல்ல புகைப்படங்கள் - காணலாம் இந்த வாரம் முழுக்க. அதற்கு தமிழ்மணத்திற்கு நனறி. உங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. தமிழ்மண நட்சத்திர வாழ்த்துகள் :-)

    பதிலளிநீக்கு
  6. //ஓய்வெடுக்க வேண்டிய வயதிலும் பிள்ளைகள் நலனுக்காகப் பிரார்த்திப்பதும், ஊக்கம் தருவதும், கவலைப்படுவதுமாகவே இந்த அம்மாக்கள். அதை நினைத்து நெகிழ்வாய் உணருகையில் நானும் அம்மாதான் என்பது கூட மறந்து போகிறது:)!//

    ஊக்கங்களைப் பெறுவதில் குழந்தையாகவும், தருவதில் தாயாகவும் இருக்கிறீர்கள் என்கிறீர்கள். உண்மைதான். நீங்கள் மற்ற பதிவர்களுக்குத் தரும் ஊக்கங்களும் பாராத் தக்கவை.

    தமிழ் மணத்தில் இந்த வாரம் அசத்த வாழ்த்துகள்.

    --
    அன்புடன்
    ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  7. நட்சத்திர வாழ்த்துக்கள் :) ராமலக்‌ஷ்மி.. அசத்துங்க..

    பதிலளிநீக்கு
  8. இந்த வார நட்சத்திரத்திற்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். அமர்க்களப்படுத்துங்கள். நாங்கள் தொடர்கிறோம்...

    பதிலளிநீக்கு
  9. இவ்ளோ தாமதமாக அழைத்த தமிழ் மணம் மீது கோபம் வருது. :))

    இந்த பதிவுக்கு வாழ்த்து சொல்லவே பெரிய கியூ நிக்குது. ப்ளாக் உள்ளே வர முடியலை. ஒரே கூட்ட நெரிசல் :))

    இந்த வார முடிவில் நீங்க நம்பர் ஒன் ஆகிடுவீங்க. அதற்கு அட்வான்ஸ் வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  10. ஹுசைனம்மா: நீங்க ஊரில தான் இருக்கீங்களா? பாக்கவே முடியலை :))

    பதிலளிநீக்கு
  11. ரொம்ப சந்தோஷம்... மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  12. நல்வாழ்த்துக்கள் ராமலஷ்மி.

    பதிலளிநீக்கு
  13. தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. // இவ்ளோ தாமதமாக அழைத்த தமிழ் மணம் மீது கோபம் வருது. :))

    //

    எனக்கு,ராமலெஷ்மி அக்காவுக்கெல்லாம் முன்னோடியான புதுகை தென்றல் அக்காவுக்கே இன்னும் அழைப்பு இல்லை. :(

    பதிலளிநீக்கு
  15. தங்கள் விரிவான பின்னூட்டம்
    புதியவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும்
    ஒருவாரம் தங்கள் அருமையான பதிவுகளுக்காக
    ஆவலுடன் காத்திருக்கிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. வாருங்கள்...நட்சத்திரமாய் ஒளிர் விடுங்கள்!!!

    பதிலளிநீக்கு
  17. வாழ்த்துக்கள் ராமலட்சுமி மேடம்...

    பதிலளிநீக்கு
  18. மக்களோட மக்களா நானும் என் வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன் தோழி.
    :))

    கலக்குங்க...!

    நட்சத்திர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இனிய நட்சத்திர வாழ்த்து(க்)கள்!

    பதிலளிநீக்கு
  20. பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் கூட நட்சத்திர வாரம் இது!

    வாழ்த்துகள் அக்கா.

    பதிலளிநீக்கு
  21. “நீ நெட்டிலேயே எழுதினா எல்லோரும் எப்படிப் படிக்கறதாம்? பத்திரிகைக்கு எழுது” என விடாமல் நச்சரித்ததன் பேரிலேயே முயன்றிடும் எண்ணம் வந்தது. பெங்களூரில் தமிழ் பத்திரிகைகளைக் குறிப்பிட்ட கடைகளைத் தேடிச் சென்று வாங்குவது பெரிய சிரமமாகவே இருந்து வருகிறது இன்று வரையிலும். ஆனாலும் எடுத்த முயற்சிகள் பலன் தந்ததில் என்னை விட அம்மாவுக்கே மகிழ்ச்சி. சிவசிவா எனும் சிந்தனை மட்டும் போதுமென ஓய்வெடுக்க வேண்டிய வயதிலும் பிள்ளைகள் நலனுக்காகப் பிரார்த்திப்பதும், ஊக்கம் தருவதும், கவலைப்படுவதுமாகவே இந்த அம்மாக்கள். அதை நினைத்து நெகிழ்வாய் உணருகையில் நானும் அவரிடம் கற்றதைப் பின்பற்றும் அம்மாதான் என்பது கூட மறந்து போகிறது:)!//


    தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    அம்மாவின் ஊக்கத்திற்கு அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  22. அன்பு ராமலக்ஷ்மி, எல்லாவகையிலும் அசத்துவீர்கள்.
    இந்த வாரமும் கலக்குவீர்கள். அன்புடன் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  23. U seem to have changed the look of your blog.

    Color is pleasing; so also, will be the blogposts to come !

    பதிலளிநீக்கு
  24. நெஞ்சம் நிறைய இனிய நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  25. முதற் கண் நட்சத்திர பதிவர் ஆனதற்கு என் வாழ்த்துகள்!
    ஆரம்ப முன்னுரையிலேயே தங்களைப் பற்றிய சிறு குறிப்பு
    கிடைத்தது!
    தொடருங்கள் தொடர்வேன்
    நேரம் கிடைக்கும் போது என வலைவழி வருக!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  26. மிக்க மகிழ்ச்சி ராமலஷ்மி..நிலவு ஒன்று சில நாட்களுக்கு நட்சத்திரமாகப்போகிறதா? வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  27. நமது கருத்துக்களையும் எண்ணங்களையும் ஓரிடமாகச் சேமிக்க வலைப்பூவே சிறப்பானது என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம். //

    என்னதும் அக்கா :)

    //சந்திக்கலாம் வாரம் முழுவதும், தினம் தினம்:)!//

    சந்தோஷத்தோடவும் எதிர்பார்ப்போடவும் இருக்கேன் :))

    பதிலளிநீக்கு
  28. தமிழ்மண நட்சத்திர வாழ்த்துகள் பூங்கொத்தோடு!

    பதிலளிநீக்கு
  29. தருமி said...
    //(சின்ன) டீச்சருக்கு
    நட்சத்திர வாழ்த்துகள்.//

    முதல் நட்சத்திர வாழ்த்து:)! மகிழ்ச்சியும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  30. சசிகுமார் said...
    //தகுதி வாய்ந்த உங்களுக்கு கிடைத்த இன்னொரு மகுடம்... வாழ்த்துக்கள் அக்கா.. TM 1//

    நன்றி சசிகுமார்.

    பதிலளிநீக்கு
  31. குமரி எஸ். நீலகண்டன் said...
    //உங்களுக்கு கிடைத்த சிறப்பு மிகுந்த பெருமையை அளிக்கிறது... உங்கள் வலைப்பூ பங்களிப்புகளின் வரலாறு மிகுந்த சுவையானது... அம்மாவிற்காக இணையத்திலிருந்து இதழ்களையும் தேடி வந்து படைத்தமை மனதிற்கு இதம் தருபவை.... வாழ்த்துக்கள்.//

    மகிழ்ச்சியும் நன்றியும் நீலகண்டன்.

    பதிலளிநீக்கு
  32. தமிழ் உதயம் said...
    //நல்ல கதைகள், நல்ல கவிதைகள், நல்ல புகைப்படங்கள் - காணலாம் இந்த வாரம் முழுக்க. அதற்கு தமிழ்மணத்திற்கு நனறி. உங்களுக்கு வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி ரமேஷ்:)!

    பதிலளிநீக்கு
  33. சந்தனமுல்லை said...
    //தமிழ்மண நட்சத்திர வாழ்த்துகள் :-)//

    மகிழ்ச்சியும் நன்றியும் முல்லை:)!

    பதிலளிநீக்கு
  34. கோவி.கண்ணன் said...
    //நல்வாழ்த்துகள்//

    மிக்க நன்றி கோவி.கண்ணன்.

    பதிலளிநீக்கு
  35. ஹுஸைனம்மா said...
    //நட்சத்திர வாழ்த்துகள் அக்கா.//

    வாங்க ஹுஸைனம்மா. ஹஜ் பயணம் இனிதே அமைந்திருக்கும் என நம்புகிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  36. ஆயில்யன் said...
    //வாழ்த்துகள் அக்கா :)//

    நன்றி ஆயில்யன்:)!

    பதிலளிநீக்கு
  37. ஸ்ரீராம். said...

    //ஊக்கங்களைப் பெறுவதில் குழந்தையாகவும், தருவதில் தாயாகவும் இருக்கிறீர்கள் என்கிறீர்கள். உண்மைதான். //

    சரியான புரிதல் ஸ்ரீராம். உங்கள் கருத்தைக் கண்டபின் இன்னும் சற்று விளக்கமாகச் சொல்லிவிட்டேன்:)!

    //நீங்கள் மற்ற பதிவர்களுக்குத் தரும் ஊக்கங்களும் பாராட்டத் தக்கவை.

    தமிழ் மணத்தில் இந்த வாரம் அசத்த வாழ்த்துகள். //

    மகிழ்ச்சியும் நன்றியும்:)!

    பதிலளிநீக்கு
  38. பொறுப்பான குடும்பத்தலைவி. எழுத்திலும் தெளிவாக தெரிகின்றது.
    நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  39. புதுகை.அப்துல்லா said...
    //வாழ்த்துகள்க்கா.//

    மிக்க நன்றி அப்துல்லா.

    பதிலளிநீக்கு
  40. Thekkikattan|தெகா said...
    //கலக்குங்க, ராம ... :)//

    மிக்க நன்றி தெகா:)!

    பதிலளிநீக்கு
  41. முத்துலெட்சுமி/muthuletchumi said...
    //நட்சத்திர வாழ்த்துக்கள் :) ராமலக்‌ஷ்மி.. அசத்துங்க..//

    நன்றி முத்துலெட்சுமி:)!

    பதிலளிநீக்கு
  42. கணேஷ் said...
    //இந்த வார நட்சத்திரத்திற்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். அமர்க்களப்படுத்துங்கள். நாங்கள் தொடர்கிறோம்...//

    நன்றிங்க கணேஷ்.

    பதிலளிநீக்கு
  43. அமைதிச்சாரல் said...
    //கலக்குங்க நட்சத்திரமே :-)//

    நன்றி சாந்தி:)!

    பதிலளிநீக்கு
  44. திகழ் said...
    //வாழ்த்துகள்//

    மகிழ்ச்சியும் நன்றியும் திகழ்.

    பதிலளிநீக்கு
  45. Lakshmi said...
    //தமிழ் மண நட்சத்திர வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  46. மோகன் குமார் said...
    //இவ்ளோ தாமதமாக அழைத்த தமிழ் மணம் மீது கோபம் வருது. :)) //

    “எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது”:)! எதையும் நான் இப்படி எடுத்துக் கொள்வதே வழக்கம்.

    //இந்த பதிவுக்கு வாழ்த்து சொல்லவே பெரிய கியூ நிக்குது. ப்ளாக் உள்ளே வர முடியலை. ஒரே கூட்ட நெரிசல் :))

    இந்த வார முடிவில் நீங்க நம்பர் ஒன் ஆகிடுவீங்க. அதற்கு அட்வான்ஸ் வாழ்த்துகள் !//

    இதோ எப்படி ஒரு வாய்ப்பை ஏற்ற வேளையில் எத்தனை பேர் அன்புடன் வந்து வாழ்த்துகிறீர்கள்... அதுதான் என் மனதில் நம்பர் ஒன் ஆக உள்ளது:)! தங்கள் அன்புக்கும் நன்றி மோகன்குமார்:)!

    பதிலளிநீக்கு
  47. Kanchana Radhakrishnan said...
    //நட்சத்திர வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  48. T.V.ராதாகிருஷ்ணன் said...
    //நட்சத்திர வாழ்த்துகள்.//

    நன்றி டி வி ஆர் சார்.

    பதிலளிநீக்கு
  49. க.பாலாசி said...
    //ரொம்ப சந்தோஷம்... மனமார்ந்த வாழ்த்துக்கள்..//

    மிக்க நன்றி புதுமாப்பிள்ளை பாலாசி:)!

    பதிலளிநீக்கு
  50. சென்னை பித்தன் said...
    //நட்சத்திர வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  51. சி.பி.செந்தில்குமார் said...
    //வாழ்த்துகள் மேடம்//

    நன்றி செந்தில்குமார்.

    பதிலளிநீக்கு
  52. என். உலகநாதன் said...
    //வாழ்த்துகள் மேடம்.//

    தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  53. asiya omar said...
    //நல்வாழ்த்துக்கள் ராமலஷ்மி.//

    நன்றி ஆசியா:)!

    பதிலளிநீக்கு
  54. துபாய் ராஜா said...
    //தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள்.//

    மகிழ்ச்சியும் நன்றியும் ராஜா.

    பதிலளிநீக்கு
  55. புதுகை.அப்துல்லா said...
    ***// இவ்ளோ தாமதமாக அழைத்த தமிழ் மணம் மீது கோபம் வருது. :)) //

    எனக்கு,ராமலெஷ்மி அக்காவுக்கெல்லாம் முன்னோடியான புதுகை தென்றல் அக்காவுக்கே இன்னும் அழைப்பு இல்லை. :(//***

    அவர்களுக்கும் விரைவில் வருமென நம்புகிறேன். நாம் எல்லாம் ஒரே மாசத்தில் பதிவுலகம் வந்த க்ரூப்:)!

    பதிலளிநீக்கு
  56. Ramani said...
    //தங்கள் விரிவான பின்னூட்டம்
    புதியவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும்
    ஒருவாரம் தங்கள் அருமையான பதிவுகளுக்காக
    ஆவலுடன் காத்திருக்கிறோம்
    தொடர வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  57. பாச மலர் / Paasa Malar said...
    //வாழ்த்துகள் ராமலக்ஷ்மி....//

    மிக்க நன்றி மலர்:)!

    பதிலளிநீக்கு
  58. Shakthiprabha said...
    //வாருங்கள்...நட்சத்திரமாய் ஒளிர் விடுங்கள்!!!//

    நன்றி ஷக்தி!

    பதிலளிநீக்கு
  59. மணிஜி...... said...
    //வாழ்த்துக்கள் ராமலட்சுமி மேடம்...//

    மிக்க நன்றி மணிஜி.

    பதிலளிநீக்கு
  60. Kousalya said...
    //மக்களோட மக்களா நானும் என் வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன் தோழி.
    :))

    கலக்குங்க...!

    நட்சத்திர வாழ்த்துக்கள்.//

    மகிழ்ச்சியும் நன்றியும் கெளசல்யா:)!

    பதிலளிநீக்கு
  61. துளசி கோபால் said...
    //மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இனிய நட்சத்திர வாழ்த்து(க்)கள்!//

    மிக்க மகிழ்ச்சி மேடம்:)!

    பதிலளிநீக்கு
  62. இப்னு ஹம்துன் said...
    //பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் கூட நட்சத்திர வாரம் இது!

    வாழ்த்துகள் அக்கா.//

    அன்புக்கு நன்றி இப்னு.

    பதிலளிநீக்கு
  63. kg gouthaman said...
    //வாழ்த்துகள். கலக்குங்க.//

    மிக்க நன்றி கெளதமன்.

    பதிலளிநீக்கு
  64. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //Hearty Congratulations,
    STAR Madam. //

    மிக்க நன்றிங்க vgk.

    பதிலளிநீக்கு
  65. கோமதி அரசு said...
    //தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    அம்மாவின் ஊக்கத்திற்கு அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.//

    நன்றி கோமதிம்மா. ஒரு அம்மாவாக என் அம்மாவுக்குத் தந்த வாழ்த்தை அவர்களுக்குச் சொல்லி விடுகிறேன்:)!

    பதிலளிநீக்கு
  66. வல்லிசிம்ஹன் said...
    //அன்பு ராமலக்ஷ்மி, எல்லாவகையிலும் அசத்துவீர்கள்.
    இந்த வாரமும் கலக்குவீர்கள். அன்புடன் வாழ்த்துகள்.//

    தங்கள் அன்பு கலந்த ஆசிக்கு நன்றி வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  67. ஸாதிகா said...
    //நட்சத்திர வாழ்த்துக்கள்.//

    நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  68. passerby said...
    //U seem to have changed the look of your blog.

    Color is pleasing; so also, will be the blogposts to come !//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  69. kathir said...
    //நெஞ்சம் நிறைய இனிய நல்வாழ்த்துகள்!//

    மிக்க நன்றி கதிர்:)!

    பதிலளிநீக்கு
  70. புலவர் சா இராமாநுசம் said...
    //முதற் கண் நட்சத்திர பதிவர் ஆனதற்கு என் வாழ்த்துகள்!
    ஆரம்ப முன்னுரையிலேயே தங்களைப் பற்றிய சிறு குறிப்பு
    கிடைத்தது!
    தொடருங்கள் தொடர்வேன்
    நேரம் கிடைக்கும் போது என வலைவழி வருக!//

    மகிழ்ச்சியும் நன்றியும். நேரம் கிட்டுகையில் அவசியம் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  71. முகுந்த் அம்மா said...
    //நட்சத்திர வாழ்த்துகள்//

    நன்றி முகுந்த் அம்மா:)!

    பதிலளிநீக்கு
  72. மாதேவி said...
    //நட்சத்திர வாழ்த்துக்கள்.//

    நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  73. ஷைலஜா said...
    //மிக்க மகிழ்ச்சி ராமலஷ்மி..நிலவு ஒன்று சில நாட்களுக்கு நட்சத்திரமாகப்போகிறதா? வாழ்த்துகள்!//

    நன்றி ஷைலஜா:)!

    பதிலளிநீக்கு
  74. சுசி said...

    //நமது கருத்துக்களையும் எண்ணங்களையும் ஓரிடமாகச் சேமிக்க வலைப்பூவே சிறப்பானது என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம். //

    என்னதும் அக்கா :)//

    என் கட்சி நீங்களும்:)! மகிழ்ச்சி.

    //சந்தோஷத்தோடவும் எதிர்பார்ப்போடவும் இருக்கேன் :))//

    நன்றி சுசி:)!

    பதிலளிநீக்கு
  75. அன்புடன் அருணா said...

    //தமிழ்மண நட்சத்திர வாழ்த்துகள் பூங்கொத்தோடு!//

    நன்றி அருணா.

    பதிலளிநீக்கு
  76. துரைடேனியல் said...

    //Vaalthukkal. Thodarkirom.//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  77. செ.சரவணக்குமார் said...

    //நட்சத்திர வாழ்த்துகள்.//

    நன்றி சரவணக்குமார்.

    பதிலளிநீக்கு
  78. ஜோதிஜி திருப்பூர் said...

    //பொறுப்பான குடும்பத்தலைவி. எழுத்திலும் தெளிவாக தெரிகின்றது.
    நல்வாழ்த்துகள்//

    மிக்க நன்றி ஜோதிஜி.

    பதிலளிநீக்கு
  79. வெங்கட் நாகராஜ் said...

    //வாழ்த்துகள்....//

    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  80. நட்சத்திர வாழ்த்துகள் இராமலஷ்மி

    பதிலளிநீக்கு
  81. மனம் நிறைந்த வாழ்த்துகள் அக்கா !

    பதிலளிநீக்கு
  82. அன்பின் ராமலக்ஷ்மி - தமிழ் மண நடசத்திரமாக ஒளிர்வதற்கு பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள். அறிமுகம் மற்றும் இவ்விடுகை - இரண்டுமே அருமை. நல்வாழ்த்துகள் ராமலக்ஷ்மி - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  83. மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா :)

    பதிலளிநீக்கு
  84. பாலராஜன்கீதா said...
    //நட்சத்திர வாழ்த்துகள் இராமலஷ்மி//

    மகிழ்ச்சியும் நன்றியும்:)!

    பதிலளிநீக்கு
  85. "உழவன்" "Uzhavan" said...
    //மனமார்ந்த வாழ்த்துகள்!//

    நன்றி உழவன்!

    பதிலளிநீக்கு
  86. ஹேமா said...
    //மனம் நிறைந்த வாழ்த்துகள் அக்கா !//

    நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  87. cheena (சீனா) said...
    //அன்பின் ராமலக்ஷ்மி - தமிழ் மண நடசத்திரமாக ஒளிர்வதற்கு பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள். அறிமுகம் மற்றும் இவ்விடுகை - இரண்டுமே அருமை. நல்வாழ்த்துகள் ராமலக்ஷ்மி//

    மகிழ்ச்சியும் நன்றியும் சீனா சார்.

    பதிலளிநீக்கு
  88. சுந்தரா said...
    //மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா :)//

    நன்றி சுந்தரா:)!

    பதிலளிநீக்கு
  89. நட்சத்திர வார வாழ்த்துக்கள்ங்க ராமலக்ஷ்மி! :)

    பதிலளிநீக்கு
  90. நட்சத்திர வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி. உங்களுக்கு இதை எப்போதோ தந்து இருக்க வேண்டும் மிகத் தாமதமான ஒன்று.

    மேலும் பல உயரங்களைத் தொட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  91. @ கிரி,

    வாழ்த்துக்கும் அன்புக்கும் நன்றி:)!

    பதிலளிநீக்கு
  92. திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கு என் நன்றி.

    பதிலளிநீக்கு
  93. அன்பு ஃப்ரண்ட்!
    நீங்கள் இப்போது தான் தமிழ்மண நட்சத்திரம் ஆனீர்கள் என்பதில் ஒரு வித சோகம் இருப்பினும் இப்போதாவது அவர்கள் கண்டு கொண்டார்களே என்னும் மகிழ்வு அதை தூக்கி அடித்து விட்டது. கவிதையே பிடிக்காத என்னை கூட திரும்பி பார்க்க வைத்த உங்கள் கவிதைகள், உங்கள் கேமிரா கவிதைகள், உங்கள் பழகும் தன்மை, உங்கள் இனிய அறிவுரைகள் .... இதல்லாம் லட்சத்தில் ஒருவருக்கே கை கூடும்.. உங்களுக்கு கை கூடியது. உங்களை என்ன சொல்லி வாழ்த்துவது? எனக்கேது வார்த்தைகள்? அல்லது தமிழுக்கு ஏது வார்தைகள்? உங்க படைப்புகளை நீங்க நட்சத்திரமா ஆகித்தான் நாங்க படிக்கனுமா என்ன? தேடித்தேடி படிக்கும் படைப்புகள் அல்லவா உங்கள் படைப்புகள். இப்போ நட்சத்திரமா ஆன பின்னே பல புதியவர்களும் படிக்க போறாங்க. எங்க ஃபிரண்ட் எழுதுவதை ரசிக்க போறாங்க என்று நினைக்கும் போது சந்தோஷம் மேலிடுகிறது.

    உங்கள் எழுத்துகளை ஆவணப்படுத்தும் தமிழ்மணத்துக்கு என் பிரத்யோக நன்றிகள்.

    என்றும்

    அபிஅப்பா
    அபிஅம்மா
    அபி & நட்ராஜ்

    பதிலளிநீக்கு
  94. எனது வாழ்த்துக்களையம் சேர்த்துக் கொள்ளுங்கள் அம்மா...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

    பதிலளிநீக்கு
  95. @
    அபிஅப்பா
    அபிஅம்மா
    அபி & நட்ராஜ்,

    அனைவரின் அன்புக்கும் என் நன்றி!!

    பதிலளிநீக்கு
  96. @ ம.தி.சுதா,

    மிக்க நன்றி, தங்கள் முதல் வருகைக்கும்.

    பதிலளிநீக்கு
  97. உங்கள் சிந்தையின் எளிமையும், எண்ணத்தின் இனிமையும் உங்கள் எழுத்துக்களின் பலம். உங்கள் பார்வையின் கோணம், காமிராவின் பலம். ஆழ்ந்த சிந்தனையின் தாக்கம்..உங்கள் கவிதையின் பலம். நீங்கள் நட்சத்திரமாகியிருப்பது, தமிழ்மணத்திற்கும், தமிழ் வலைப்பூ நண்ப/ரசிகர்களுக்குப் பலம். மேலும் பல சிகரம் எட்டி, வருகின்ற வருடம் பதிப்புலகிற்கும் உங்களின் கவிதை/கதைகளை புத்தகமாக்கி, உங்கள் உலகம் இன்னும் விரிய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  98. வாழ்த்துக்கள் இராமலக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  99. @ இனியன்,

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin