மே மாத PiT போட்டி உடைகளுக்கு எனப் படம் எடுக்க இருப்பவர்களுக்கு மட்டுமின்றி பொதுவாகவே படங்களுக்கு எந்தவிதமான உடைகள் அட்டகாசமாக அம்சமாக அமையும் என்பது குறித்து ஒரு சில குறிப்புகள். PiT தளத்தில் நான் இட்ட பதிவை இங்கும் பகிர்ந்து கொள்கிறேன்.
மீடியம் மற்றும் டார்க் பின்னணியில் படம் எடுக்க டார்க் கலர் உடைகள் என்றைக்கும் பொருத்தம். டார்க் பின்னணி என்பது ஒரு கராஜ் முன்னாலோ வீட்டு சன்னலின் வெளிப்புறம் நிற்க வைத்தோ எடுக்கலாம். அதுவுமில்லாமல் டார்க் ஷேட்ஸ் ஒருவரை இன்னும் ஸ்லிம்மாகவும் காட்டும்!
அழுத்தமான வண்ணத்துக்கும் 'அடிக்க வரும்' வண்ணத்துக்குமான வித்தியாசத்தையும் நினைவில் நிறுத்திடுங்கள். ப்ரைட் கலர்களை புகைப்படங்களுக்குத் தவிர்த்திடுங்கள்.
உடையில் வாசகங்கள் படத்துக்கு அழகூட்டாது. உடையின் சிறப்பை.. முகத்தின் பூரிப்பை.. கவனிக்க விடாது.
முழுக் கை உடைகள் பிரமாதமாகத் தெரியும்.
[படம்: 1 # கருவாயன்]
க்ளோஸ் நெக், ஹை நெக் இன்னும் அழகென்று படங்களே சொல்கின்றன.[படம்: 2 # ராமலக்ஷ்மி]
கையற்ற மற்றும் அரைக்கால் உடைகளை தவிர்த்தல் நலம். உடல் பாகங்களே கவனத்தைப் பெறுவதாகி விடும். ஆனால் சின்னஞ்சிறு தவழும் மற்றும் நடை பயிலும் குழந்தைகளைப் பொறுத்தவரை சில விஷயங்கள் ரிவர்ஸ். அவர்களது உடல் அதிகம் தெரியுமாறு, பிரகாசமான ப்ரைட் கலர்கள் அணிவித்து எடுக்கலாம். பேட்டர்ன், எழுத்துக்கள், படங்களுடனும் உடைகள் இருக்கலாம். படம்: 4_ல் கவனியுங்கள்.
ஒரு உடையில் எடுக்கும் போது க்ளோஸ் அப், முழுப்படம், இரண்டுக்கும் நடுவிலாக என பலவாறாக எடுத்து சிறப்பானதை தேர்வு செய்திடலாம்.
மெயின் உடை, கச்சேரி போல களை கட்ட, பக்க வாத்தியங்களிலும் அக்கறை காட்டணும். பெல்ட், ஜாக்கட், காலணி, தொப்பி, ஸ்கார்ஃப் போன்றவை மேலும் அழகூட்டும், பெரியவர் சிறியவர் பேதமின்றி. (படம்_2-ல் பாப்பாவின் ஹேர் பேண்ட்).

உடையின் காண்ட்ராஸ்ட் கலரில் ஸ்கார்ஃபை குழந்தைகள் கழுத்தில் கட்டி படம் எடுத்துப் பாருங்களேன். சொக்கிப் போகலாம் ஒரு பூங்கொத்தைப் பார்க்கிற மாதிரி:)! [படம்:3 # இணையம்]
குழந்தைகளை எடுக்கையில், அவர்கள் நமக்கு ஒத்துழைக்கும் இதமான சூழலை உருவாக்கித் தரணும். அவுட் டோரில் எடுப்பது இயற்கையான பின்னணிகளுடன் அருமையான படங்களைத் தரும் என்பதோடு குழந்தைகள் தங்களைப் படமெடுக்கிறார்கள் எனும் உணர்விலிருந்து விடுபட்டு சுற்றுப்புறத்தில் லயித்து இயல்பாக போஸ் கொடுப்பார்கள். நீங்களே பாருங்க:)![படம்: 4 # கருவாயன்]
அவுட் டோர் படங்களை காலை பத்தரை மணிக்கு முன்பாகவும், மாலை என்றால் ஐந்து மணிக்கு மேலும் எடுத்தால் சூரிய வெளிச்சம் அழகாய் ஒத்துழைக்கும்.
லைட் பின்னணிக்கு லைட் கலர்கள் பரவாயில்லை. மெலிந்த உடலமைப்பு கொண்டவராயின் லைட் கலர் உடையில் டார்க் பின்னணியிலும் தோன்றி அசத்தலாம் இப்படி:
[படம்:5 # ஜீவ்ஸ்]
மிதமாக, ஒரு சீராகப் பரவி நிற்கும் இப்படத்தின் லைட்டிங் என்னைக் குறிப்பாகக் கவர்ந்த ஒன்று. [நான் பொதுவாக இரண்டு பக்கமும் டேபிள் லாம்ப் வைத்து ஒளியூட்டுவேன். ஒரு சில இடங்களில் அதீத ஒளி விழுந்து போவதைத் தவிர்க்க முடிந்ததில்லை.] எனவே இப்படம் குறித்து ஜீவ்ஸிடம் கேட்டதும், எடுத்த விதத்தை ஒரு படமாக அனுப்பி வைத்து விட்டார். நன்றி ஜீவ்ஸ்!
வீட்டுக்குள்ளே மினி ஸ்டூடியோவும் ‘எதிரொளி’யும்:
ஒரு கயிறு கட்டி தேவையான வண்ணத்தில் ஒரு புடவை அல்லது துப்பட்டாவை இப்படிப் பின்னணியில் தொங்க விடுங்கள். இங்கே இவர் லைட் கலர் உடையை எடுப்பாகக் காட்ட கருப்பு வண்ணத்தை தேர்ந்தெடுத்துள்ளார்.

இடப்பக்கம் ஒரு ட்ரைபாடில் எக்ஸ்டர்னல் ஃப்ளாஷை பொறுத்தி கூரையைப் பார்த்து வைக்க, ஒளி கூரையில் பட்டு சிறுமியின் மேல் விழுந்து மீண்டும் ரிஃப்ளெக்ட் ஆகி வலப்பக்கமிருக்கும் தெர்மகோல் ஷீட்டின் மேல்பட்டுத் தெறித்து ‘எதிரொளி’யாய் தேவதையைக் குளிப்பாட்டியிருக்கிறது:)!
பெண்கள் உடைக்கேற்ற இயல்பான ஹேர் ஸ்டைல் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். ஆண்கள் ஓரிருநாள் முள்ளுத் தாடிகள் இல்லாமல் க்ளீன் ஷேவ்ட் ஆக இருப்பது உடைக்கும் பிரகாசத்தைத் தரும்.
நம்ம ஊர் உடையான புடவை உலகெங்கும் கொண்டாடப்படுவதன் காரணம், முழுநீளத்தில் விதவிதமாய் உடுத்தும் வகையில் வியக்க வைப்பதால்தான் என்பது சொல்லியா தெரியணும்:)? புடவை மட்டுமில்லாமல் பாரம்பரிய உடையான வேட்டியும் ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு கலாச்சாரத்தில் ஒவ்வொரு விதமாக அணியப் படுகிறது. உழைப்பாளிகள், கிராம நகர மக்கள் தங்கள் செளகரியத்துக்கேற்ப வேட்டியை மடித்துக் கட்டுவதும், புடவையை இழுத்துச் செருகிக் கொள்வதும் ஒரு ஸ்டைல். கருப்பு வெள்ளையிலும் கவனத்தை உடை மேல் செலுத்த வைக்க கருவாயனால் மட்டுமே முடியும்:[படம்:6 # கருவாயன்]
அற்புதமான காட்சிகள் கண்ணுக்கு கிட்டும் போது உச்சி வெயில் எல்லாம் பார்க்க முடியாதில்லையா:)? அந்த வெயிலும் கூட இந்தத் தம்பதியரை ஆசிர்வதிப்பது போல அழகாய் ஒத்துழைத்திருக்கிறது!
நம்மைச் சுற்றி ரசனையான உடைகளுக்கா பஞ்சம்:)?
பதினைந்தாம் தேதிக்குள் படம் எடுத்து சீக்கிரமா அனுப்பி வையுங்க:)!

***
அருமையா டிப்ஸ் குடுத்திருக்கிறீர்கள்...
பதிலளிநீக்குThank you for the fashion tips.
பதிலளிநீக்குEach and every photo is poetic by itself. :-)
Thanks. Busy with works and may not be able to participate in this competition.
பதிலளிநீக்குGood tips given by you.
ஒவ்வொரு படமும் ஒவ்வொரு அழகு...டிப்ஸ் அருமை. ஓல்டு இஸ் கோல்டு என்பது கருப்புவெள்ளைப் படமாக இருந்தாலும் புரிய வைக்கிறது.
பதிலளிநீக்குஉடைகளும் பளிச்... புகைப்படங்களும் பளிச்...
பதிலளிநீக்குசூப்பர் டிப்சு, நடைமுறை படுத்திர வேண்டியதுதான்....
பதிலளிநீக்குஉடைகளுக்கு விளம்பரப்படம் எடுக்க வகுப்பெடுத்தது போல நல்லா குறிப்பு குடுத்திருக்கீங்க ராமலக்ஷ்மி..:)
பதிலளிநீக்குவாவ்.....அந்த இரட்டைக்கொம்புச் சடைதான் எனக்கு நிறையப் பிடிச்சிருக்கு அக்கா !
பதிலளிநீக்குடிப்ஸ் அனைவருக்கும் உதவியாக இருக்கும். போட்டோக்களும் மிக அழகு.
பதிலளிநீக்குடிப்ஸ் super.
பதிலளிநீக்குபெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்
பதிலளிநீக்குஎன்ன்ன்ன்னைச் சொன்னேன் :))))
அட்டகாசமான அட்வைசஸ்.. நேரில் இன்னும் கேட்டுத் தெரிஞ்சுக்கணும் ராமலெக்ஷ்மி..:)
பதிலளிநீக்குஅ, ஆ, இப்பதான் கத்துக்கிட்டுருக்கேன்.
பதிலளிநீக்குகூடிய சீக்கிரம் நானும் போட்டோ எடுக்கலாம்னு நம்பிக்கை வருது.
நல்ல பதிவு.
டிப்ஸ் அருமை
பதிலளிநீக்குடிப்ஸ்க்கு மிக்க நன்றி அக்கா!!இன்னும் நிறைய சொல்லித்தாங்க...
பதிலளிநீக்குகவிதையாய் கண்களில் களிநடனம் புரிகின்றன உங்களின் கலைமிகுப் புகைப்படங்கள்
பதிலளிநீக்குசில சமயங்களில் வண்ணப் புகைப் படங்களை விட கறுப்பு வெள்ளை அழகு!
பதிலளிநீக்குகடந்த இரண்டு நாட்களாக Blogger-ல் ஏற்பட்ட பிரச்சனையால் காணாமல் போன பின்னூட்டங்கள் மின்னஞ்சலில் இருந்து மீட்கப்பட்டுத் தொடர்கின்றன:
பதிலளிநீக்குPRASANNA has left a new comment on your post "பளிச் என்று ‘உடை’ - மே போட்டிக்குப் படம் எடுக்க சி...":
//nice tips//
-------------
நன்றி பிரசன்னா.
சசிகுமார் has left a new comment on your post "பளிச் என்று ‘உடை’ - மே போட்டிக்குப் படம் எடுக்க...":
பதிலளிநீக்கு//டிப்ஸ் அனைவருக்கும் உதவியாக இருக்கும். போட்டோக்களும் மிக அழகு.//
-------------
நன்றி சசிகுமார்.
Kanchana has left a new comment on your post "பளிச் என்று ‘உடை’ - மே போட்டிக்குப் படம் எடுக்க...":
பதிலளிநீக்கு//டிப்ஸ் super.//
---------------
நன்றி மேடம்.
அமைதி அப்பா has left a new comment on your post "பளிச் என்று ‘உடை’ - மே போட்டிக்குப் படம் எடுக்க...":
பதிலளிநீக்கு//அ, ஆ, இப்பதான் கத்துக்கிட்டுருக்கேன்.
கூடிய சீக்கிரம் நானும் போட்டோ எடுக்கலாம்னு நம்பிக்கை வருது.
நல்ல பதிவு.//
----------------
நன்றி அமைதி அப்பா:)!
r.v.saravanan has left a new comment on your post "பளிச் என்று ‘உடை’ - மே போட்டிக்குப் படம் எடுக்க...":
பதிலளிநீக்கு//டிப்ஸ் அருமை //
மிக்க நன்றி சரவணன்.
sathia has left a new comment on your post "பளிச் என்று ‘உடை’ - மே போட்டிக்குப் படம் எடுக்க...":
பதிலளிநீக்கு//டிப்ஸ்க்கு மிக்க நன்றி அக்கா!!இன்னும் நிறைய சொல்லித்தாங்க...//
----------------
மிக்க நன்றி மேனகா.
ஈரோடு கதிர் has left a new comment on your post "பளிச் என்று ‘உடை’ - மே போட்டிக்குப் படம் எடுக்க...":
பதிலளிநீக்கு//பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்
என்ன்ன்ன்னைச் சொன்னேன் :))))//
----------------
அட எத்தனை எளிதான தலைப்பு! நாளை வரை டைம் இருக்கு. முடிவை மறுபரிசீலனை செய்யவும்:)!
Thenammai has left a new comment on your post "பளிச் என்று ‘உடை’ - மே போட்டிக்குப் படம் எடுக்க...":
பதிலளிநீக்கு//அட்டகாசமான அட்வைசஸ்.. நேரில் இன்னும் கேட்டுத் தெரிஞ்சுக்கணும் ராமலெக்ஷ்மி..:)//
----------------
எப்போ வர்றீங்க:)? நன்றி தேனம்மை.
Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்) said...
பதிலளிநீக்கு//அருமையா டிப்ஸ் குடுத்திருக்கிறீர்கள்...//
மிக்க நன்றி மைதிலி:)!
Chitra said...
பதிலளிநீக்கு//Thank you for the fashion tips.
Each and every photo is poetic by itself. :-)//
Thanks a lot Chitra:)!
மோகன் குமார் said...
பதிலளிநீக்கு//Thanks. Busy with works and may not be able to participate in this competition.
Good tips given by you.//
நன்றி மோகன்குமார். அடுத்த முறையிலிருந்தேனும் கலந்து கொள்ள ஆரம்பியுங்கள்:)!
சரண் said...
பதிலளிநீக்கு//ஒவ்வொரு படமும் ஒவ்வொரு அழகு...டிப்ஸ் அருமை. ஓல்டு இஸ் கோல்டு என்பது கருப்புவெள்ளைப் படமாக இருந்தாலும் புரிய வைக்கிறது.//
மிக்க நன்றி சரண். ஆம் கருப்பு வெள்ளை படங்கள் எப்போதும் காவியங்கள்தாம்:)!
தமிழ் உதயம் said...
பதிலளிநீக்கு//உடைகளும் பளிச்... புகைப்படங்களும் பளிச்...//
நன்றி தமிழ் உதயம்:)!
MANO நாஞ்சில் மனோ said...
பதிலளிநீக்கு//சூப்பர் டிப்சு, நடைமுறை படுத்திர வேண்டியதுதான்....//
நன்றி மனோ.
முத்துலெட்சுமி/muthuletchumi said...
பதிலளிநீக்கு//உடைகளுக்கு விளம்பரப்படம் எடுக்க வகுப்பெடுத்தது போல நல்லா குறிப்பு குடுத்திருக்கீங்க ராமலக்ஷ்மி..:)//
நன்றி முத்துலெட்சுமி:)!
ஹேமா said...
பதிலளிநீக்கு//வாவ்.....அந்த இரட்டைக்கொம்புச் சடைதான் எனக்கு நிறையப் பிடிச்சிருக்கு அக்கா !//
நன்றி ஹேமா:)!
குமரி எஸ். நீலகண்டன் said...
பதிலளிநீக்கு//கவிதையாய் கண்களில் களிநடனம் புரிகின்றன உங்களின் கலைமிகுப் புகைப்படங்கள்//
மிக்க நன்றி நீலகண்டன். படம் இரண்டு தவிர்த்து மற்றவை பிட் குழு உறுப்பினர்களுடையது.
ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//சில சமயங்களில் வண்ணப் புகைப் படங்களை விட கறுப்பு வெள்ளை அழகு!//
மறுப்பதற்கில்லை. நன்றி ஸ்ரீராம்:)!
தமிழ்மணம் மற்றும் இன்ட்லியில் வாக்களித்த நட்புகளுக்கு என் நன்றிகள்.
பதிலளிநீக்குமுதல் படம்...அட்டகாசம்...Thanks for giving informations.
பதிலளிநீக்குhttp://zenguna.blogspot.com
சிவப்பு நிறமும் நீண்ட கழுத்தும் முழுக்கை சட்டையும் சிறுமிக்கும் சிறுவனுக்கும் மிக அழகாக உள்ளது
பதிலளிநீக்குநீங்க போட்ட்ருக்க படங்களைப் பாத்தா எனக்கே ஃபோட்டோ பிடிக்கணும்போல கை துறுதுறுக்குது. ஆனா, சொல்லிருக்க டெக்னிகல் விஷயங்கள் என்னை “அடங்கு”னு எச்சரிக்குது!! ;-))))))
பதிலளிநீக்குகுணசேகரன்... said...
பதிலளிநீக்கு//முதல் படம்...அட்டகாசம்...Thanks for giving informations.//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குணசேகரன்.
ஹுஸைனம்மா said...
பதிலளிநீக்கு//நீங்க போட்ட்ருக்க படங்களைப் பாத்தா எனக்கே ஃபோட்டோ பிடிக்கணும்போல கை துறுதுறுக்குது. ஆனா, சொல்லிருக்க டெக்னிகல் விஷயங்கள் என்னை “அடங்கு”னு எச்சரிக்குது!! ;-))))))//
இன்டோர் மட்டும்தானே டெக்னிகல். மற்றவை நம் அன்றாட புகைப்படப் பயன்பாட்டுக்கு உரியவைதானே? துறுதுறுக்கும் கைகளைக் கட்டிப் போடாதீர்கள்:)!
நன்றி ஹுஸைனம்மா.
soorya said...
பதிலளிநீக்கு//சிவப்பு நிறமும் நீண்ட கழுத்தும் முழுக்கை சட்டையும் சிறுமிக்கும் சிறுவனுக்கும் மிக அழகாக உள்ளது.//
உங்களைப் போன்ற சிறுவருக்கு அழகான உடையாக அமையும். ரசித்தமைக்கு மிக்க நன்றி சூர்யா.
அனுபவக் குறிப்புகள் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றிகள்! படம் ஒவ்வொன்றும் 'பளிச்' அழகு!
பதிலளிநீக்கு@ கவிநயா,
பதிலளிநீக்குமிக்க நன்றி:)!