#
எனது ஃப்ளிக்கர் பட ஓடை (My Flickr Photostream) :
ஃப்ளிக்கர் தளத்தில் டிசம்பர் 30 வரையிலும் 435 படங்கள் பதிவேற்றம் ஆகி, அன்றன்றையப் படங்களுடன், பழைய படங்களுக்கும் ஆல்பங்களுக்குமான வருகைகளும் சேர்க்கப்பட்டு 2025_ல் 921995 பக்கப் பார்வைகளைப் பெற்றுள்ளதாகக் காட்டுகிறது ஃப்ளிக்கர் புள்ளி விவரம்.
2025_ஆம் ஆண்டுப் படங்கள் தொகுக்கப்பட்ட தனி ஆல்பத்தின் இணைப்பு இங்கே: https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/albums/72177720322899258/
17 ஆண்டு ஃப்ளிக்கர் பயணத்தில், இந்த ஆண்டின் இறுதியில் எழுபத்து எட்டு இலட்சத்து இருபதாயிரம் பக்கப் பார்வைகளுடன், 5510 படங்கள் நிறைவு செய்துள்ளேன்.
சென்ற வருடத்தைய புள்ளி விவரம் இங்கே.தொழில் நுட்பப் பிரச்சனையால் ஏப்ரல் தவிர்த்து மாதாமாதம் ஃப்ளிக்கர் தளம் மின்னஞ்சலில் அனுப்பி வைத்த புள்ளி விவரங்கள் எனது சேமிப்புக்காகவும் இங்கே:
#ஜனவரி
#மார்ச்
#மே
#ஜூன்
#அக்டோபர்
#நவம்பர்
#டிசம்பர்
இரண்டு கேலரிகளில் "Cover Photo"_வாக கெளரவிக்கப்பட்ட படங்கள்:
மார்ச் மாதத்தில், எழுத்தாளரும், ‘நமது மண்வாசம்’ மாத இதழின் ஆசிரியருமான ப. திருமலை அவர்களின் 60_ஆவது நூலின் முகப்பு அட்டையாக நான் எடுத்த ஒளிப்படம்.. இங்கே.
இடைவெளியின்றி, ஆர்வம் குன்றாமல் இப்பயணம் தொடர்வது மனதுக்கு நிறைவாகவே உள்ளது.
இந்தப் பயணத்துக்கு உறுதுணையாக மற்றுமோர் கருவி புதிதாக உடன் இணைகிறது. எப்போதும் இரு கேமராக்கள் தேவைப்படுகிற சூழலில் 2010_ல் வாங்கிய Nikon D5000 (cropped sensor) கேமரா 14 ஆண்டு காலம் திறம்பட உழைத்த பின், சென்ற வருடம் தன் சேவையை நிறுத்திக் கொண்டது. இடையே 2017_ல் வாங்கிய Nikon D750 (Full frame) கேமராவுடன் தற்போது புதிதாக இணைகிறது Nikon Z5 II Mirrorless Full frame கேமரா. மிரர்லெஸ் தொழில்நுட்பத்தையும் அறிந்து ஆராய்ந்து அனுபவிக்க வேண்டும் இல்லையா:)? அதில் எடுக்கும் படங்களுடனும் 2026_ன் ஒளிப்பட பயணம் தொடரும்.
முத்துச்சரம்:
2025_ஆம் ஆண்டில் மாதம் சராசரியாக 5 பதிவுகள் தர முடிந்திருப்பதே ஆச்சரியம் :). சமீப வருடங்களாக அதிக அளவில் தந்து கொண்டிருந்த ஞாயிறு-வாழ்வியல் சிந்தனைகள் படத் தொகுப்பு இந்த முறை 13 பதிவுகளே. ஹைதராபாத், இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் மைசூர் பயணப் பதிவுகள், உயிரியல் பூங்காவில் படமாக்கிய விலங்குகள்-பறவைகளின் படங்கள் தகவல்களுடன், சென்னையில் கோயில்கள் மற்றும் போர்ட்ரெயிட் படத் தொகுப்புகள் சில, தகவல்களுடனான ‘பறவை பார்ப்போம்’ பதிவுகள் ஆகியனவும் வரிசையில் சேருகின்றன.
'சொல்வனம்' இதழில் மொழிபெயர்ப்புப் பதிவுகள் - 3
கவிதைகள்: 'கீற்று' (1); 'நவீன விருட்சம்' (2); 'புன்னகை' (1) ;
'பண்புடன்' இதழில் கவிதைகள் (3), குறுங்கவிதை தொகுப்புகள் (3)
அதிகமாக பதிவுகள் தராத நிலையிலும் இந்த வருடம் வழக்கமான பதிவுகளை விடவும் பழைய பதிவுகளுக்கு அதிகமான பக்கப் பார்வைகள் இருந்தன. முத்துச்சரம் பத்து இலட்சம் பக்கப் பார்வைகளைக் கடந்ததும் இந்த வருடமே. ஒரு கணக்குக்காக இந்த வருட இறுதியின் புள்ளி விவரத்தையும் சேமிக்கிறேன்:
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
***
.jpg)





.jpg)

%20-%20A.jpg)


.jpg)






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக