வியாழன், 10 நவம்பர், 2011

சின்ன நாடு.. பெரிய பேரு..-சிங்கப்பூர் பயண அனுபவம்(பாகம்-2)-படங்களுடன்

சிறிய நாடானாலும் சீரிய வளர்ச்சியால் பெரிய அளவில் பேசப்படும் நாடு சிங்கப்பூர்.

# 1. நீல வானைத் தொட நீளும் நீலக் கட்டிடம்



# 2. பறவைப் பார்வையில் பாலம்

“ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் வந்திருந்தால் இந்த சாலைகள், மால்கள் இவை பிரமிப்பைத் தந்திருக்கக் கூடும். பெங்களூரில் மலிந்து விட்ட மால் கலாச்சாரத்தினாலும், பெருகி விட்ட ஜனத்தொகை மற்றும் ஐடி வளர்ச்சியால் ஊரைச் சுற்றி வளைந்தோடும் ரிங் ரோட்களினாலும், குறிப்பாகச் சமீபத்தில் சில்க் போர்ட் ஜங்ஷனிலிருந்து எலக்ட்ரானிக் சிடி ஜங்ஷனுக்கு பத்து நிமிடங்களில் பறக்க வைக்கும் ஃப்ளை ஓவர் போன்றவற்றாலும் அத்தகு ஆச்சரியம் ஏற்படவில்லை” என்ற போது சிங்கப்பூர்வாழ் நண்பர் “ஒரு வாரம் இருந்ததை வைத்தெல்லாம் எடை போடக் முடியாது” என வாதிட ஆரம்பித்து விட்டார்.

அவர் வாதத்திலும் ஓரளவு நியாயம் இருக்கிறதுதான். ஒரு நாடு எத்தனை வளர்ந்தாலும் விதிமுறைகளை அமல்படுத்துவதில் அரசும் சரி, கடைப்பிடிப்பதில் மக்களும் சரி, காட்டுகிற அலட்சியப் போக்கு ஒன்றே பெரிய பெரிய வித்தியாசங்களை ஏற்படுத்தி விடுகிறதே. அந்த வகையில் நிமிர்ந்துதான் நிற்கிறது தன் கட்டிடங்களைப் போலவே இந்நாடும் எனத் தோன்றியது. இதோ அதோ என இழுத்துக் கொண்டிருந்த பெங்களூர் மெட்ரோ முழுமையாக செயல்பட ஆரம்பித்து விட்டது. இங்குள்ள மாதிரியான பராமரிப்பும் திட்டமிடலும் அரசின் பக்கமிருந்தும், சட்டத்தை மதிப்பதில் மக்கள் பக்கமிருந்தும் ஒத்துழைப்பு எப்படி இருக்குமென்கிற கேள்வி எழவே செய்கிறது.

அனைவரும் போற்றுவதற்கு ஏற்றாற் போல சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்து வசதி மிக வசதியான ஒன்றாகவே உள்ளது. நகரின் எந்த மூலைக்கும் எளிதாகச் சென்று விடலாம். பிங்க் லைன், க்ரீன் லைன் என இரண்டு பாதைகளில் ஓடும் மெட்ரோக்களில் எங்கே ஏறி எப்படி மாறி செல்ல வேண்டுமென்பதை மிகத் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள் ஒவ்வொரு ஸ்டேஷன்களின் வாசல்களிலிலுமிருக்கும் வரை படத்தில். அதிலும் சென்று பார்க்க விரும்பி மெட்ரோ, மற்றும் பஸ்ஸிலுமாகப் பயணித்தோம் ஜுராங் பறவைகள் பூங்காவிற்கு.

இரயில் நிலையங்களில் பயணிகள் கடைப்பிடிக்கும் ஒழுங்கு பாராட்ட வேண்டிய ஒன்று. மெட்ரோ பராமரிப்பும் சிறப்பு.
# 3பயணிகள் முண்டியடிக்காமல் இறங்குபவருக்கு வழிவிட்ட பின்னரே ஏறுகிறார்கள். 20 வருடங்களுக்கு முன்னர் மும்பையில் வசித்த போது சபபர்ன் ரெயில்களில் பயணித்தது. பிறகு இப்போது சிங்கப்பூர் மெட்ரோவில். ஒவ்வொரு ஸ்டேஷன் வரவிருக்கையிலும் அறிவிப்பு செய்கிறார்கள். அதுவும் ஆட்சி மொழிகளான மலாய், மண்டரின்(சீனக் கிளை மொழி), ஆங்கிலம் இவற்றோடு தமிழிலும் அறிவிப்பு வருகையில் மகிழ்ச்சியாகவே இருந்தது. பக்கத்து மாநிலமேயானாலும் கர்நாடகத்தில் தமிழும், தமிழ் படங்களும், தமிழர்களும் சந்திக்கும் பிரச்சனைகள் மனதில் ஒரு கணம் வந்து சென்றது.

வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்களுக்குத் தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நாலு வயது பொடியர்களிலிருந்து வயதானவர்வரை விதிவிலக்கின்றி அநேகம் பேர் மொபைலில் கேம் விளையாடியபடி இருக்கிறார்கள் பயணிக்கையில். “ஜப்பான் இரயில்களில் அத்தனை பேருமே தத்தமது மொபைலுக்குள் முகம் புதைத்திருப்பர். அதற்கு இங்கே தேவலாம்” என்றார் கணவர். இரயில் நிலையத்திலிருந்து வெளியேறியதும் பேருந்தைப் பிடிக்க வரிசையில் நின்று பொறுமையாகச் செல்லுகிறார்கள். பேருந்து ஓட்டுநருக்கு எழுபது வயதிருக்கலாம் போலிருந்தது (சென்டோஸா தீவிலும் பெரிய பேருந்துகளை சின்னப் பெண்கள் வெகு லாவகமாக ஓட்டினார்கள். அருகிலிருந்து கவனித்ததில் அவை ஆட்டோ கியர் என்பது புரிய வந்துது).

நம் நாட்டில் வழக்கொழிந்து வரும் சைக்கிள் ரிக்‌ஷா(பெங்களூரில் நான் கண்டதில்லை) அங்கு இன்னும் புழக்கத்தில் இருப்பது ஆச்சரியம் அளித்தது:

# 4 ‘அந்தக் கடையில ஃப்ரஷ் ஜூஸ் நல்லாருக்கும். குடிக்கிறீங்களா..?’



உணவைப் பொறுத்தவரை ஷாப்பிங்கிற்கு மக்கள் முற்றுகையிடும் முஸ்தஃபா அருகே அமைந்த முருகன் இட்லி, சரவண பவன், ஆனந்த பவன், கோமளா விலாஸ் ஆகியவற்றில் நல்ல இந்திய சாப்பாடு கிடைக்கின்றன.

# 5 இந்தக் கடையில சாப்பாடு நல்லாருக்கும்

சரவண பவன் இருக்கும் அதே வரிசையில் இருப்பதே ஒரிஜனல் ‘முருகன் இட்லி’. (அதற்கு முந்தைய திருப்பத்தில் ‘முருகன் இட்லி’ எனும் போர்டுடன் ஈ ஓட்டிக் கொண்டிருந்த உணவகத்தை சந்தேகத்தின் பேரில் முதல்நாளே தவிர்த்தது நல்லதாயிற்று). ‘சுற்றிப் பார்க்கச் செல்லுமிடங்களில் சைவச் சாப்பாடு கிடைப்பது சிரமம். ஒவ்வொரு இடங்களில் நடக்கவும் பார்க்கவும் நிறைய நேரமெடுக்கும் ஆகையால் பசி தாங்க பழங்கள், பிஸ்கெட், தண்ணீர் இவற்றை பையில் எடுத்துச் செல்வது நல்லது’ என்றார் செல்லும் முன்னரே தோழி ஒருவர். தண்ணீர் மற்றும் எனது கேமரா, லென்ஸுகள் எடையே சில கிலோ எடை வந்து விடுவதால் எடுத்து வருபவர்களுக்கு[:)] மேலும் சுமையாகி விடுமே என நான் அந்த ஆலோசனையை செயல்படுத்தாது விட்டதற்கு ஓரிடத்தில் மட்டும் வருந்த நேரிட்டது. ஜூராங் பார்கில் சுற்றிக் களைத்து அடுத்து நேராக நைட் சஃபாரி செல்ல வேண்டியிருந்த சூழலில் அங்கிருந்த உணவகத்துக்குள் நுழைந்தால் சைவ உணவு எதுவுமே இல்லை. ப்ரெட் பட்டர் ஜாம் மற்றும் பழங்கள் எம் மேல் இரக்கம் காட்டின. சிறுகுழந்தைகளை அழைத்துச் செல்லுபவர்கள் என் தோழி சொன்னதைப் பின்பற்றுவது நலம்.
***

# 6 ஆன்டர்சன் பாலம்
சிங்கப்பூர் நதியின் அக்கரையிலிருந்த இந்த ஆண்டர்சன் பாலத்தை எஸ்ப்ளனேட் பார்க்கிலிருந்து படமாக்கினேன். எஸ்ப்ளனேட் பூங்காவின் ஒரு மரத்தடியில் கனத்த மெளனத்தைப் போர்த்திக் கொண்டு நிற்கிறது இந்தியன் நேஷனல் ஆர்மி(INA) சிப்பாய்களுக்கான நினைவுச் சின்னம்.

# 7. நேதாஜி எழுப்பிய அதே இடத்தில்...


1945-ல் இரண்டாம் உலகப் போரில் உயிர்நீத்த சிப்பாய்களின் நினைவாக ஜூலை எட்டாம் தேதி சுபாஷ் சந்திர போஸ் இங்கு அடிக்கல் நாட்டி நினைவுச்சின்னம் ஒன்றை எழுப்பியிருந்தார். ஒற்றுமை, நம்பிக்கை, தியாகம் எனும் கொள்கைகளும் அதில் பொறிக்கப்பட்டிருந்தன. ஆனால் அப்போது சிங்கப்பூரை ஆக்ரமித்த மவுண்ட்பேட்டனின் படை அவரது உத்திரவின் பேரில் அதைத் தகர்த்து விட்டது. பின்னர் சிங்கப்பூரின் நேஷனல் ஹெரிடேஜ் போர்ட் 1995ஆம் ஆண்டு சிங்கப்பூர்வாழ் இந்தியர் அளித்த நிதியுதவியுடன் இப்போதை நினைவுச் சின்னத்தை எழுப்பியிருக்கிறது.

எஸ்ப்ளனேட் பார்க்கில் பழைய உச்சிநீதி மன்றம் எதிரே சாலையைப் பார்த்து அமைந்திருக்கிறது முதலாம் உலகப் போரில் உயிர்நீத்த சிப்பாய்களுக்கான நினைவுச்சின்னம். இதையடுத்த படத்தில் இருப்பதன் முன் பக்கமே இது. அகன்ற நினைவாலயத்தை இரண்டு பக்கமும் வாகனங்கள் நின்றிருந்தபடியால் இப்படி எடுக்க வேண்டியதாயிற்று.

# 8. முதலாம் உலகப்போர் நினைவுச் சின்னம்



# 9. இரண்டாம் உலகப்போர் நினைவுச் சின்னம்

# 10. சிவிலியன் வார் மெமோரியல் பார்க்இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய ஆக்ரமிப்பின் போது உயிரிழந்த பொதுஜனங்களின் நினைவாக எழுப்பப்பட்டது.

இருபத்தியோராம் நூற்றாண்டினுள் நுழைந்த பின்னும் யுத்தம் இல்லாத ஒரு பூமியை நாம் இன்னும் உருவாக்கவில்லை என்பது வேதனையான விஷயம்.

***

# 11. ஆர்மீனியன் சர்ச்

சிங்கப்பூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் இந்த அமெரிக்க தேவாலயம் இந்நாட்டின் பல முக்கிய கட்டிடங்களை நிர்மாணித்த George Drumgoole Coleman என்பவரின் மாஸ்டர் பீஸ் என்றே கருதப்படுகிறது.1835-ல் கட்டப்பட்ட இதுவே சிங்கப்பூரின் இரண்டாவது தேவாலயம் என்பதும் குறிப்பிடத் தக்கது.

[படங்கள் 10,11 மற்றும் கீழ்வரும் 12 ஆகியன விரைந்து கொண்டிருந்த வாகனத்திலிருந்து படமாக்கப்பட்டிருப்பதை கூர்ந்து கவனித்தால் புலனாகும். பகிர்ந்திடும் ஆவலில் பதிந்துள்ளேன்.]

# 12. கொடி பறக்குதுசிங்கப்பூரின் சுதந்திர தினம் முடிந்த சில தினங்களில் சென்றிருந்தோம். அநேகமாக அத்தனைக் கட்டிடங்கள், குடியிருப்புகளின் மாடிகள் என எங்கும் தேசியக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன, சென்றிருந்த தியான் ஹாக் கெங் சீனக் கோவில் உட்பட.

# 13. சீனக் கோவில்
இந்தக் கோவிலிலும் உள்ளே செல்லுகையில் இடது பக்கதிலும் திரும்பி வருகையில் வலது பக்கத்திலும் வாகனம் நின்றபடியால் சாலையின் மறுபுறமிருந்து முழுத்தோற்றத்தை எடுக்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டியதாயிற்று. இதன் வெளிக்கூரை, உட்கூரை மற்றும் உள்ளிருந்த தெய்வங்கள் குறித்துத் தனிப் பதிவாக பிறிதொரு சமயம் பகிர்ந்திடுகிறேன். ஒரு காலத்தில் மீனவக் கிராமமாக இருந்ததை இப்போதும் நன்றியுடன் தங்கள் அடையாளமாகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் சிங்கப்பூரின், மீனவரைக் காக்கும் மாஜூ(mazu) மாதாவே இக்கோவிலில் பிரதான தெய்வம்:

# 14. கடலன்னை மாஜு


சீன நம்பிக்கைகள் பல இடங்களில் கடைப்பிடிக்கப் படுவதைக் காணமுடிந்தது. பாம்பினை கழுத்தில் அணிந்து கொண்டால் அதிர்ஷ்டமும் நலமும் பெருகும் என நம்புகிறார்கள். வேறு காரணம் இருப்பின் அறிந்தவர் பகிர்ந்திடுங்கள். பொது இடங்களில் (மெர்லயன் பார்த்து விட்டு வாகனத்துக்குத் திரும்பும் வழியில்) இதற்கென்றேப் பாம்பைக் கொண்டு வருகிறார்கள். கூடவே ராஜயோகம் வருமெனச் சொல்லாமல் சொல்லவோ என்னவோ பளபளவெனத் தொப்பியும் கொடுக்கிறார்கள் இப்படி:

# 15. “யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே..”



கீழ் வருவது செண்டோஸா தீவின் அண்டர்வாட்டர் உலகின் வெளிப்புறமிருந்த தோட்டத்தில்:

# 16. “இளங்கன்றுகள் நாங்க பயமறியோம்..”
இந்தப் படம் 16 கல்கி தீபாவளி மலர் 2011-ல் வெளியானதுமாகும்.

(தொடரும்)

தொடர்புடைய பதிவு:1.என் கேமரா பார்வையில் சிங்கப்பூர் - பயண அனுபவம் (பாகம்-1)

70 கருத்துகள்:

  1. அருமையான ஃபோட்டோ கவரேஜ்

    பதிலளிநீக்கு
  2. சிங்கப்பூர் வடை எனக்கா அல்லது நாஞ்சில் மனோ கொத்திக்கொண்டு போய் விட்டாரா

    பதிலளிநீக்கு
  3. அழகழகான படங்களுடன் நல்ல பதிவு. நேரில் சிங்கப்பூர் போனது போன்ற உணர்வு ஏற்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. அழகான படங்கள், அருமையான வர்ணனைகளுடன்.

    பதிலளிநீக்கு
  5. நிமிர்ந்துதான் நிற்கிறது தன் கட்டிடங்களைப் போலவே இந்நாடும் /

    அழகான படங்களுடன் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  6. முத்தக்கா...சிங்கப்பூர் இயல்பாகவே அழகா அல்லது உங்கள் புகைப்படப்பெட்டியால் சிங்கப்பூர் இவ்வளவு அழகானதா !

    பதிலளிநீக்கு
  7. எல்லாமே அழகா இருக்கு அக்கா.

    பதிலளிநீக்கு
  8. 1. "வானம் தொட்டு விடும் தூரம்தான்..."
    2. "வளைந்த பாதை...வளையாத பார்வை!"
    3. "இரயில் பயணங்களில்..."
    (பொதுமக்களின் இந்தக் கட்டுப்பாடு இன்னும் எத்தனை காலமானாலும் நம் மக்களுக்கு (நான் உட்பட) வராது என்பது ஒரு சோகம்)
    4. ரிகஷா மாமா (இன்னுமா)
    நினைவுச் சின்னம் படங்களும் விவரமும் அருமை.
    "இருபத்தியோராம் நூற்றாண்டிலும் யுத்தம் இல்லாத பூமி..." இதற்கு இன்னும் ஏழு புத்தர்கள் பிறந்து வர வேண்டும்! மனித மனதில் ஆசையும் பேதமும் என்று மறையும்?
    கடைசிப் படம்...ஓடற பாம்பைக் கையில் பிடிக்கும் வயது என்பது சரிதான் போல...இந்தப் படமும் கல்கி தீபாவளி மலரில் வந்ததா...வாழ்த்துகள்.
    இராஜராஜேஸ்வரியின் ஒருவரி கமெண்ட் பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  9. // நம் நாட்டில் வழக்கொழிந்து வரும் சைக்கிள் ரிக்‌ஷா(பெங்களூரில் நான் கண்டதில்லை) அங்கு இன்னும் புழக்கத்தில் இருப்பது ஆச்சரியம் அளித்தது/

    இது சுற்றிப்பார்க்க மட்டுமே ஆகும் வழக்கமான போக்குவரத்திற்கு அல்ல உதாரணத்திற்கு சுற்றுலாக்கு வருபவர்கள் பயன்படுத்த அதுவும் குறிப்பிட்ட இடங்கள் மட்டுமே..

    // ‘சுற்றிப் பார்க்கச் செல்லுமிடங்களில் சைவச் சாப்பாடு கிடைப்பது சிரமம். //

    food court அனைத்து இடங்களிலும் இருக்கும் அங்கே எப்படியும் நம்ம கடை இருக்கும் ஆனால் நல்ல சாப்பாடு கிடைப்பது சிரமம் தான்.

    சீன மக்களின் நம்பிக்கைகள் பல இந்து மதத்தை ஒட்டியே இருக்கும்.

    விரிவாக கூறி இருக்கீங்க ராமலக்ஷ்மி. நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  10. //நம் நாட்டில் வழக்கொழிந்து வரும் சைக்கிள் ரிக்‌ஷா(பெங்களூரில் நான் கண்டதில்லை) அங்கு இன்னும் புழக்கத்தில் இருப்பது ஆச்சரியம் அளித்தது://

    அது குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு குட்டி இந்தியாவைச் சுற்றிக்காட்ட வைத்திருக்கிறார்கள், பல ரிக்‌ஷாக்களில் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கும், குட்டி இந்தியா சந்து பொந்தெல்லாம் புகுந்து போகும், பாட்டு, லைட்டெல்லாம் போட்டு அழைத்துச் செல்வார்கள். மற்றபடி உள்ளூர்வாசிகள் ரிக்‌ஷாவில் ஏறி நான் பார்த்ததே இல்லை ஏனெனில் இது அந்த இடத்தைச் சுற்ற டாக்ஸி மீட்டரைவிடக் கூடுதல் கட்டணம் பெறப்படுகிறது. பண்பாட்டுச் சின்னம் என்ற அளவில் சுற்றுலாவிற்காக இன்னும் உள்ளது

    *******

    புகைப்படங்கள் அதன் கோணங்கள், விவரம் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  11. நல்ல இருக்கு

    நன்றி,
    ஜோசப்
    http://www.tamilcomedyworld.com

    பதிலளிநீக்கு
  12. அழகழகான படங்களுடன் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டமை அழகு. உள்ளத்தைக் கொள்ளை கொண்டது சிங்கப்பூரும், அதை விவரித்த உங்கள் எழுத்தும். நன்றிகள் பல....

    பதிலளிநீக்கு
  13. அக்கா...
    பதிவும் படங்களும் அருமை.
    அழகான படங்கள்... ரசிக்க வைத்தன.

    பதிலளிநீக்கு
  14. அழகான படங்கள், அருமையான வர்ணனைகளுடன்.

    பதிலளிநீக்கு
  15. அழகழகா இருக்கு சிங்கப்பூர். அந்த அழகைக் கொத்திக்கிட்டு வந்த உங்க காமிராவுக்கு நன்றிகள் :-)

    பதிலளிநீக்கு
  16. அக்காவின் சிங்கிள் காமிராவுக்குள்ளே
    ’சிங்க்’ ஆகிவிட்டது சிங்கப்பூர் :))

    பதிலளிநீக்கு
  17. பிரம்மீப்பூட்டும் படங்கள்.அழகிய காட்சிகளை ராமலக்‌ஷ்மியின் படம் மேலும் பொலிவுற செய்து விட்டன.

    பதிலளிநீக்கு
  18. சாப்பாட்டு விஷயத்தில் கையில் எடுத்துச் செல்வதுதான் பெஸ்ட்.

    படங்களை வழக்கம்போல ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  19. வாவ் அசத்தல் படங்களுடன் செய்திகளும் அறுசுவை விருந்து...!!!

    பதிலளிநீக்கு
  20. நல்ல பயணக்கட்டுரை, நன்றி

    சிங்கப்பூரில் ஆண்டர்சன் பாலம் அருகே சிங்கப்பூர் நதியின் கரையோரத்தில் தொடக்க கால சிங்கப்பூர் குறித்த சிலைகள் இருக்கின்றன. அதில் ஒரு இடத்தில் - வட்டிக்கு கடன் கொடுப்பவர், கடன் வாங்கும் வியாபாரி, அந்த வியாபாரியின் வண்டியிழுக்கும் தொழிலாளி அகியவை உள்ளன.

    இதில் சிறப்பு (அல்லது சோகம்) என்னவெனில் - வட்டிக்கு கடன் கொடுப்பவர் தமிழ் செட்டியார், செட்டியாரிடம் கடன்வாங்கி தொழில் செய்யும் வியாபாரி ஒரு சீனர், வியாபாரியிடம் வண்டியிழுக்கும் தொழிலாளி ஒரு தமிழர்.

    சிறைக்கைதிகளை கொத்தடிமைகளாக்கி ரபேல் சிங்கப்பூரை உருவாக்கினார். அவர்களும் தமிழ்நாட்டிலிருந்து அந்தமானுக்கு நாடுகடத்தப்பட்ட தமிழ் சிறைக்கைதிகள்.

    பதிலளிநீக்கு
  21. படங்கள் அனைத்தும் சூப்பர்ப்! சிங்கப்பூரை விவரித்த உங்கள் எழுத்தும் அழகு!!!

    பதிலளிநீக்கு
  22. நீங்க சிங்கப்பூர் வந்திங்களா... நான் இப்பதான் விடுமுறைமுடிந்து தாயகத்திலிருந்து சிங்கப்பூர் வந்தேன்.
    படங்கள் மிக அழகு.

    பதிலளிநீக்கு
  23. அருமையான பயணக் கட்டுரை ராமலக்ஷ்மி.

    படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  24. MangaiMano said...
    //superb...pics and information//

    நன்றி மங்கை:)!

    பதிலளிநீக்கு
  25. goma said...
    //அருமையான ஃபோட்டோ கவரேஜ்//

    மிக்க நன்றி:)!

    பதிலளிநீக்கு
  26. goma said...
    //சிங்கப்பூர் வடை எனக்கா அல்லது நாஞ்சில் மனோ கொத்திக்கொண்டு போய் விட்டாரா//

    மங்கை மனோ:)! மிக அருமையாக படம் எடுப்பார். அதீதம் தீபாவளி சிறப்பிதழில் இவரது படம் வெளியாகியுள்ளது நேரம் கிடைக்கும்போது பாருங்களேன்
    இங்கே.

    பதிலளிநீக்கு
  27. மோகன் குமார் said...
    //பிரம்மாண்டமா இருக்கு//

    நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  28. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //அழகழகான படங்களுடன் நல்ல பதிவு. நேரில் சிங்கப்பூர் போனது போன்ற உணர்வு ஏற்பட்டது.//

    மிக்க நன்றி vgk.

    பதிலளிநீக்கு
  29. தமிழ் உதயம் said...
    //அழகான படங்கள், அருமையான வர்ணனைகளுடன்.//

    நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  30. இராஜராஜேஸ்வரி said...
    //நிமிர்ந்துதான் நிற்கிறது தன் கட்டிடங்களைப் போலவே இந்நாடும் /

    அழகான படங்களுடன் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..//

    நன்றி இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  31. S.Menaga said...
    //அழகான படங்கள்+வர்ணனை...//

    நன்றி மேனகா.

    பதிலளிநீக்கு
  32. ஹேமா said...
    //முத்தக்கா...சிங்கப்பூர் இயல்பாகவே அழகா அல்லது உங்கள் புகைப்படப்பெட்டியால் சிங்கப்பூர் இவ்வளவு அழகானதா !//

    நன்றி ஹேமா, இயல்பில்தான் அழகு!
    காமிரா கொத்தியிருப்பது கொஞ்சமே:)!

    பதிலளிநீக்கு
  33. சுசி said...
    //எல்லாமே அழகா இருக்கு அக்கா.//

    நன்றி சுசி.

    பதிலளிநீக்கு
  34. ஸ்ரீராம். said...
    1. "வானம் தொட்டு விடும் தூரம்தான்..."
    2. "வளைந்த பாதை...வளையாத பார்வை!"------ இதற்கு இன்னும் ஏழு புத்தர்கள் பிறந்து வர வேண்டும்! மனித மனதில் ஆசையும் பேதமும் என்று மறையும்?//

    மகிழ்ச்சியும் நன்றியும் ஸ்ரீராம்:)! இரண்டு உட்பட அனைத்து கமெண்டுகளையும் ரசித்தேன்.

    //இராஜராஜேஸ்வரியின் ஒருவரி கமெண்ட் பிரமாதம்.//

    எனது வரியை வழிமொழிந்திருக்கிறார் அவர். அந்த வரி உங்களுக்கும் பிடித்ததாக எடுத்துக் கொள்கிறேன்:)!

    பதிலளிநீக்கு
  35. கிரி said...

    //இது சுற்றிப்பார்க்க மட்டுமே ஆகும் வழக்கமான போக்குவரத்திற்கு அல்ல உதாரணத்திற்கு சுற்றுலாக்கு வருபவர்கள் பயன்படுத்த அதுவும் குறிப்பிட்ட இடங்கள் மட்டுமே..//

    தெளிவு படுத்தியமைக்கு நன்றி:)!

    //ஆனால் நல்ல சாப்பாடு கிடைப்பது சிரமம் தான்.//

    வந்த எடுத்தில் ரிஸ்க் எடுக்க முடியாதே. நேரமானாலும் நல்ல சாப்பாட்டைத் தேடிச் செல்வதே உசிதமானது இல்லையா? அதனால் ஸ்நாக்ஸ் எடுத்துச் செல்வது பயனளிக்கும், குறிப்பாகச் சிறுகுழந்தைகளுடன் செல்பவர். நைட் சஃபாரி சென்று வந்த போது வாகனத்தில் கூட வந்த கைக்குழந்தை பசியில் விடாமல் அழுதபடியே வந்தது ஒரு தனிக்கதை.

    //விரிவாக கூறி இருக்கீங்க ராமலக்ஷ்மி. நன்றாக இருந்தது.//

    நன்றி கிரி:)!

    பதிலளிநீக்கு
  36. கோவி.கண்ணன் said...
    //அது குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு குட்டி இந்தியாவைச் சுற்றிக்காட்ட வைத்திருக்கிறார்கள்,..... பண்பாட்டுச் சின்னம் என்ற அளவில் சுற்றுலாவிற்காக இன்னும் உள்ளது//

    விரிவான விளக்கத்துக்கு நன்றி. மோட்டர் பொருத்தப்பட்டிருக்கும் என்பதும் ஆறுதலான செய்தி.

    *******

    //புகைப்படங்கள் அதன் கோணங்கள், விவரம் அனைத்தும் அருமை.//

    மிக்க நன்றி:)!

    பதிலளிநீக்கு
  37. JesusJoseph said...
    //நல்ல இருக்கு//

    நன்றி, தங்கள் முதல் வருகைக்கும்.

    பதிலளிநீக்கு
  38. கணேஷ் said...
    //அழகழகான படங்களுடன் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டமை அழகு. உள்ளத்தைக் கொள்ளை கொண்டது சிங்கப்பூரும், அதை விவரித்த உங்கள் எழுத்தும். நன்றிகள் பல....//

    மகிழ்ச்சியும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  39. சே.குமார் said...
    //அக்கா...
    பதிவும் படங்களும் அருமை.
    அழகான படங்கள்... ரசிக்க வைத்தன.//

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  40. துளசி கோபால் said...
    //அ

    ரு

    மை!!!!!!//

    நன்றி மேடம்:)! எல்லாம் உங்களிடம் கற்றதின் சிறிய வெளிப்பாடே:)!

    பதிலளிநீக்கு
  41. சசிகுமார் said...
    //சூப்பர் அக்கா....//

    நன்றி சசிகுமார்.

    பதிலளிநீக்கு
  42. Lakshmi said...
    //அழகான படங்கள், அருமையான வர்ணனைகளுடன்.//

    மிக்க நன்றிங்க லக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  43. அமைதிச்சாரல் said...
    //அழகழகா இருக்கு சிங்கப்பூர். அந்த அழகைக் கொத்திக்கிட்டு வந்த உங்க காமிராவுக்கு நன்றிகள் :-)//

    நன்றி சாந்தி:)!

    பதிலளிநீக்கு
  44. துரை. ந. உ 9443337783 said...
    //அக்காவின் சிங்கிள் காமிராவுக்குள்ளே
    ’சிங்க்’ ஆகிவிட்டது சிங்கப்பூர் :))//

    நன்றிங்க துரை:)!

    பதிலளிநீக்கு
  45. ஸாதிகா said...
    //பிரம்மீப்பூட்டும் படங்கள்.அழகிய காட்சிகளை ராமலக்‌ஷ்மியின் படம் மேலும் பொலிவுற செய்து விட்டன.//

    மிக்க நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  46. புதுகைத் தென்றல் said...
    //சாப்பாட்டு விஷயத்தில் கையில் எடுத்துச் செல்வதுதான் பெஸ்ட்.

    படங்களை வழக்கம்போல ரசித்தேன்.//

    நன்றி தென்றல். ஆம் சில இடங்களில் சுற்றிப் பார்த்து வெளிவர மணிக்கணக்கில் ஆகி விடுவதால் எடுத்துச் செல்வதே நல்லது.

    பதிலளிநீக்கு
  47. MANO நாஞ்சில் மனோ said...
    //வாவ் அசத்தல் படங்களுடன் செய்திகளும் அறுசுவை விருந்து...!!!//

    மிக்க நன்றி மனோ.

    பதிலளிநீக்கு
  48. அருள் said...
    //நல்ல பயணக்கட்டுரை, நன்றி

    சிங்கப்பூரில் ஆண்டர்சன் பாலம் அருகே..... நாடுகடத்தப்பட்ட தமிழ் சிறைக்கைதிகள்.//

    வருகைக்கும் பகிர்ந்திருக்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  49. Priya said...
    //படங்கள் அனைத்தும் சூப்பர்ப்! சிங்கப்பூரை விவரித்த உங்கள் எழுத்தும் அழகு!!!//

    நன்றி ப்ரியா.

    பதிலளிநீக்கு
  50. சி.கருணாகரசு said...
    //நீங்க சிங்கப்பூர் வந்திங்களா... நான் இப்பதான் விடுமுறைமுடிந்து தாயகத்திலிருந்து சிங்கப்பூர் வந்தேன்.
    படங்கள் மிக அழகு.//

    ஆகஸ்டில் வந்திருந்தேன். நன்றி கருணாகரசு.

    பதிலளிநீக்கு
  51. கோமதி அரசு said...
    //அருமையான பயணக் கட்டுரை ராமலக்ஷ்மி.

    படங்கள் எல்லாம் அருமை.//

    நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  52. //எனது வரியை வழிமொழிந்திருக்கிறார் அவர். அந்த வரி உங்களுக்கும் பிடித்ததாக எடுத்துக் கொள்கிறேன்:)//

    // அந்த வகையில் நிமிர்ந்துதான் நிற்கிறது தன் கட்டிடங்களைப் போலவே இந்நாடும் எனத் தோன்றியது//

    ஆமாம் உண்மைதான் மறுபடிப் போய் படித்து எடுத்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  53. நேரிலேயே பார்த்தது போன்ற உணர்வைத் தந்தன படங்களும், பகிர்ந்த அனுபவங்களும்.

    பதிலளிநீக்கு
  54. அழகான, அருமையான படங்கள்.விவரங்கள்.

    நெல்லை சந்திப்பின் போது உங்களைப் பற்றியும் பெருமையாக பேசிக்கொண்டிருந்தோம்.

    அடுத்த முறை தாங்கள் சிங்கப்பூர் வந்தாலோ அல்லது நெல்லை வரும்போதோ நிச்சயம் சந்திப்போம்.

    நன்றி.வணக்கம்.

    பதிலளிநீக்கு
  55. சின்ன நாடு... பெரிய பேரு... பெருத்த மகிழ்ச்சியான அனுபவம் எங்கள் அனைவருக்கும்... உங்களின் தரமான புகைப்படங்கள் மூலமாக....

    பதிலளிநீக்கு
  56. Kanchana Radhakrishnan said...
    //அழகான படங்கள்.அருமை.//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  57. துபாய் ராஜா said...
    //அழகான, அருமையான படங்கள்.விவரங்கள்.

    நெல்லை சந்திப்பின் போது உங்களைப் பற்றியும் பெருமையாக பேசிக்கொண்டிருந்தோம்.//

    சந்திக்கலாம். மகிழ்ச்சியும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  58. குமரி எஸ். நீலகண்டன் said...
    //சின்ன நாடு... பெரிய பேரு... பெருத்த மகிழ்ச்சியான அனுபவம் எங்கள் அனைவருக்கும்... உங்களின் தரமான புகைப்படங்கள் மூலமாக....//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நீலகண்டன்.

    பதிலளிநீக்கு
  59. அழகிய சிங்கப்பூர் உங்கள் கைகளில்.

    பதிலளிநீக்கு
  60. மேடம் படங்கள் ரொம்பா நல்லா இருக்கு,நீங்கள் தொந்திரவாக கருதவிலையெனில் தாங்கள் பயன் படுத்தும் காமர வகை,பிராண்டு ,மாடல் லென்ஸ் கிட் போன்ற தகவலை பதிலளிக்க முடியுமா !
    star9688@gmail.com
    malaithural.blogspot.com

    பதிலளிநீக்கு
  61. மழைதூறல் said...
    //விமர்சனம் அருமை.

    மேடம் படங்கள் ரொம்பா நல்லா இருக்கு,நீங்கள் தொந்திரவாக கருதவிலையெனில் தாங்கள் பயன் படுத்தும் காமர வகை,பிராண்டு ,மாடல் லென்ஸ் கிட் போன்ற தகவலை பதிலளிக்க முடியுமா ! //

    Camera: Nikon D5000.
    Lenses: 18-55mm and 55-200mm Nikon.

    கருத்துக்கு நன்றி. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin