ஞாயிறு, 26 ஜனவரி, 2014

ரோஜாப் பூந்தோட்டம் - லால்பாக் பெங்களூர் - ( Bangalore Lalbagh Flower Show 2014 )

#1 மலர்கள் பேசுமா...
17 ஜனவரி 2014  ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் லால்பாக் குடியரசுதினக் மலர்க் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த முறை ‘பூக்கும் பழங்கள்’ காட்சிப் படுத்தப்பட்டிருப்பதாகச் சொல்கிறது TOI.  வெறொன்றுமில்லை.. பழங்கள், காய்கறிகளைச் சேர்க்கச் சிணுங்கும் குழந்தைகளைப் பார்த்துக் கைநீட்டி அழைக்கும் வகையில் மாம்பழம், வெங்காயம், கேரட், மாதுளை, பூண்டு ஆகிய வடிவங்களில் பூ அலங்காரங்கள் இடம்பெற்றிருக்கின்றன கண்ணாடி அரங்கில். கூடவே மெகா Bunny Rabit ஒன்றும். ஆர்வமுள்ள பெங்களூர்வாசிகள் சென்று வாருங்கள்.

வழக்கமாக இரண்டு பிரதான வடிவங்கள் முடிவு செய்யப்பட்டு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அப்படியில்லாமல் இந்தக் கருவை மையமாகக் கொண்டதற்கு ஒரு காரணமும் உள்ளது.  பொன்விழா கொண்டாடுகிறது இவ்வருடம் கர்நாடகாவின் தோட்டக்கலை இலாகா. ஐம்பதாண்டு நிறைவை அனுசரித்தே இந்த காய்-கனி-மலர் அலங்காரங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

சென்ற கண்காட்சிக்கு ஃப்ளிக்கர் நண்பர்களோடு சென்றிருந்த நான் இந்த வருடம் அவர்கள் சென்ற நேரத்தில் சேர்ந்துகொள்ள முடியவில்லை. சென்று வந்த அவர்கள் ‘குழந்தைகளைக் கவருகிறது. மற்றபடி வழக்கமானவைதான். அவசியம் பார்த்தே ஆக வேண்டியதாக இல்லை.’  எனத் தெரிவித்தார்கள் ‘நல்லதாயிற்று’ என நான் சமாதானம் ஆகிக் கொள்ள:). ‘கணினியும் கைவலியும்’ தொடர் கதை ஆகிவிட்டபடியால் ஏராளமாய் எடுத்து வந்து அதைப் பதிவேற்றுகிறேன் பேர்வழி எனக் கையைப் படுத்த வேண்டாமென்கிற தீர்மானத்தில் செல்லவில்லை. ஆனாலும் இருநூறுக்கும் அதிகமாக புனே, ஊட்டி உட்பட நாடெங்கிலுமிருந்துத் தருவிக்கப்பட்டிருக்கும் பூ வகைகள் இந்தக் கண்காட்சி சமயத்தில் மட்டுமே லால்பாகில் காணக் கிடைக்கும் என்பதால் அதைத் தவறவிடுவதில் வருத்தமே. அடுத்த முறை ஈடுகட்டி விடலாம்:). சென்ற வருடம்  சுதந்திரதினக் கண்காட்சியில் அப்படி வகைவகையாய் வரிசைப்படுத்தப் பட்டிருந்தவற்றின் ஒருபகுதியாக இந்த ரோஜாப் பூந்தோட்டம் உங்கள் பார்வைக்கு:

(படங்கள் திறப்பதற்கு நேரம் எடுத்தால் ஏதேனும் ஒன்றின் மேல் க்ளிக் செய்து light box_ல் வரிசையாகக் காணலாம்)

#2

#3

#4

#5

#6

#7

#8

#9

#10


#11

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்!
***

28 கருத்துகள்:

  1. வண்ண ரோஜா பூத்துக் குலுங்கும் சிங்காரத்தோட்டம்.நமக்கு ராமலக்ஷ்மி அளிக்கும் புது உற்சாகம்.நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  2. ரோஜாக்களின் அணிவகுப்பு ஜோரா இருக்கு!

    பதிலளிநீக்கு
  3. கர்நாடகாவின் தோட்டக்கலை இலாகா. ஐம்பதாண்டு நிறைவான பொன் விழாக்கொண்டாட்த்திற்குகாய்-கனி-மலர் அலங்காரங்களுடன் ரோஜாக்கூட்டங்களுக்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு

  4. மலர்ந்த ரோஜாக்களை நேரில் பார்ப்பதைவிட உங்கள் புகைப்படக் கை வண்ணத்தில் அதிகம் ரசிக்க முடிகிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. ரோஜா மலர்கள் மிக அழகு. ராமலக்ஷ்மியின் கைவண்ணத்தில் எல்லாம் மலர்ந்து சிரிக்கிறது.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. மனதை மிகவும் கவர்ந்தது...

    இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. ரோஜாக்கூட்டம்..... மிகச் சிறப்பாய்.....

    பதிலளிநீக்கு
  8. மலர்கள் பேசுமா? பேசுகின்றனவே, உங்கள் புகைப்படங்களில்?

    பதிலளிநீக்கு
  9. படங்கள் கண்ணுக்கு குளிர்ச்சி...அழகோ அழகு...வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  10. //அவசியம் பார்த்தே ஆக வேண்டியதாக இல்லை.’ எனத் தெரிவித்தார்கள் //

    ஆமாம்க்கா, வருடா வருடம் தொடர்ந்து வைக்கும் கண்காட்சிகள் பொதுவாக இப்படித்தான் சலிப்பைத் தந்துவிடுகின்றன. ஆரம்ப வருடங்களில் இருந்ததுபோல ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்கள் குறைய ஆரம்பித்துவிடுகின்றன.

    நானும் அப்படி ஒரு அறிவியல் கண்காட்சிக்கு (பதிவு எழுதுவதற்காகவே) போய்ட்டு வந்து, என்னத்த எழுதன்னு உக்காந்திருக்கேன். புது விஷயங்கள் அல்லது கவனத்தை ஈர்ப்பவை என்று எதுவுமே இல்லை!! :-)

    பதிலளிநீக்கு
  11. 'ரோஜாவுக்கு நிகர் ரோஜா மட்டுமே' என்ற புகழ்பெற்ர வரி நினைவுக்கு வருகிறது! அனைத்துமே அழகென்றாலும் அந்த மஞ்சள் ரோஜா கொள்ளை அழகு!

    பதிலளிநீக்கு
  12. @ஹுஸைனம்மா,

    சரியாகச் சொன்னீர்கள். புது விஷயங்கள் பொறுத்தவரை மலர்க் கண்காட்சிகள் கடந்த சில வருடங்களாகவே பலருக்கும் ஏமாற்றத்தை அளித்து வருகின்றன.

    அறிவியல் கண்காட்சி... சரி, போய் வந்த மட்டில் பார்த்ததைப் பகிர்ந்திடுங்கள்:)!

    நன்றி ஹுஸைனம்மா.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin