மீண்டும் மீண்டும் பூக்களா?
மீண்டு வர முடியாதபடி இயற்கை விரித்த வலையில் மாட்டிக் கொண்டதில்
வருத்தமில்லை. மகிழ்ச்சிதான்.
இங்கே பத்தாவது படத்தில் வைத்த கேள்விக்கு சாட்சியாக முதல் ஒன்பது படங்கள்.
கூடவே பெங்களூர் லால்பாக் சுதந்திரதினக் கண்காட்சி 2013 குறித்த தகவல்கள்..
#1 Canna Flower
பின் வரும் மூன்றும்.. PINK ALAMANDA
#2 மலரக் காத்திருக்கும் மொட்டுக்கள்
#3 ஸ்பீக்கர்
#4 பூ முகத்தைத் திருப்பிக் கொண்டிருப்பது, ஆனையின் முறக் காது போலில்லை?
#5 மலரும் துளிரும்
#6 சிரசாசனம்
#7 ரோஜாப் பூந்தோட்டம்
# 8 சூரியனின் பிரகாசம்
# 9 Cosmos
#10 பூவின் மொழி...
அத்தனை எளிதாக விடை சொல்லிவிட முடியாத இக்கேள்வியைச் சுமந்தபடியேதான் வெளியேறுகிறேன் ஒவ்வொரு முறையும் பூந்தோட்டங்களிலிருந்தும், மலர்க் கண்காட்சிகளிலிருந்தும். இதோ மீண்டும் குழப்பத்தைத் தர வரவேற்கிறது என்னை, இன்று முதல் ஆரம்பமாகி 15 ஆகஸ்ட் வரை நடைபெறவிருக்கும் லால்பாக் சுதந்திரதின மலர்க்கண்காட்சி.
அனுமதிச் சீட்டு எல்லா நுழைவாயில்களிலும் கிடைக்கும். கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.40. சிறுவர்களுக்கு ரூ.10.
9,10,11 மற்றும் 15 தேதிகளில் பெரியவர்களுக்கான கட்டணம் ரூ.50. விடுமுறை நாட்களான இத்தினங்களைத் தவிர்த்தல் நலம்.
கண்காட்சி நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை.
வாகனங்கள் உள்ளே நுழைய அனுமதி இல்லை.
சென்ற முறை போலவே, டபுள் ரோட் நுழைவாயில் உள்ளிருக்கும் வழக்கமான வாகன நிறுத்தத்தில் கண்காட்சி சமயத்தில் வண்டிகள் நிறுத்த அனுமதி இல்லை. பள்ளி பேருந்துகள் மட்டுமே நிறுத்திக் கொள்ளலாம். எனவே, அந்தப் பக்கத்திலிருந்து வருகின்றவர்கள் Dr. MH மாரிகெளடா மெம்மோரியல் ஹாலில் நிறுத்தலாம். சாந்தி நகர் பஸ் நிலையத்திலும், ஜே சி ரோட் பக்கமிருந்து வருகிறவர்கள் அதன் ஒரு திருப்பத்தில் இருக்கும் மயூரா உணவகம் அருகேயுள்ள BBMP பஸ் நிலையத்திலும் வாகனங்களை நிறுத்திடலாம்.

நிறமா.. மணமா..? |

***
உங்க கேள்விக்கு பதில்.. நான் கண்ணில்லாத அல்லது கண்ணை இடைவெளியில் இழந்த ஒருவனாக என்னை நிறுத்தி சொல்கிறேன்.
பதிலளிநீக்குபூவின் மொழி மணம்தான். :)
மலரக் காத்திருக்கும் மொட்டுக்கள் அழகு ..
பதிலளிநீக்குபூவின் மொழிகள் நிறமும் மணமும் அழகும் மென்மையும் என எண்ணற்றவை ..!
மலர்கள் பேசுமா :) பேசுகின்றன பூக்கள்.
பதிலளிநீக்குஅழகு,நிறம் கவர்ந்து இழுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இருந்தும் மணம்தான் மயக்கும் மொழி.
இந்த முறையாவது போக முடியுமா தெரியவில்லை... கூட்டத்தை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது
பதிலளிநீக்குThanks for info!!!!.This time I won't miss it!.Lovely pics!canna flower compo s too gud.
பதிலளிநீக்குவிடையறுக்கவியலாத கேள்வி. அழகிய புகைப்படங்களின் வழியே தொலைதேசத்திலும் நுகர்ந்து ரசித்து அனுபவிக்க இயல்கிறதே அழகிய பூக்களின் மொழிகளை! பாராட்டுகள் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குஅலமாண்டா - அலட்டல் இல்லாத அழகு!
பதிலளிநீக்குcanna flower - மலர்ந்த மஞ்சள் இதழ்த் தாயின் மடியில் மொட்டுகளின் வளர்ச்சி.
சிரசாசனம் - எந்த ராஜாவைக் கண்டு வந்தது இந்த ரோஜாவுக்கு நாணம்? அல்லது தனியாக இருக்கும் சோகத்தில் கீழே இருக்கும் குடும்பத்தைச் சோகமாகப் பார்க்கிறதோ?
நிறமா....மணமா... = காற்றின் நிறத்தை நீங்கள் சொன்னால் இந்தக் கேள்விக்கு நானும் பதில் சொல்வேன்! ['தெரியாது' என்றுதான்!!!]
இப்படிச் சொல்லலாமோ.... பார்ப்பவர்களுக்கு நிறம் மொழி. தூரத்திலிருப்பவர்களுக்கு மணம் மொழி!!!! :)))))
மலரக்காத்திருக்கும் மொட்டுக்கள் அழகோ அழகு.
பதிலளிநீக்குஎல்லாமே நல்ல அழகாக மணம் வீசுவதாக உள்ளன.
மனம் + மணம் நிறைந்த ப்கிர்வுக்கு நன்றிகள்.
அத்தனையும் அருமை. முதல் படம் கண்ணை விட்டு அகலவில்லை...
பதிலளிநீக்குமனிதனுக்கு எது முக்கியம் வலது கண்ணா? இடது கண்ணா? இந்தக்கேள்விக்குப் பதிலில்லாதது போலவே தலைப்பிலிருக்கும் கேள்விக்கும் பதிலில்லை :-))
பதிலளிநீக்குஅத்தனை படங்களும் அருமை.
படங்கள் அனைத்தும் அருமை...
பதிலளிநீக்குஅலமண்டாவும் ,கானாப் பூக்களும் மிக அழகு.
பதிலளிநீக்குபூவின் அழகு,மணம் எல்லாமே வேண்டுமே. இனவிருத்திக்கு மிகமுக்கியமல்லவா.
மலர்கள் எல்லாம் அழகு.
பதிலளிநீக்குஅனைத்தும் மனதை கவர்கின்றன.
ராமலக்ஷ்மி, சுதந்திரதின மலர்கண்காட்சி படங்களுக்கு காத்து இருக்கிறேன்.
ஆஹா எல்லாமே கொள்ளை அழகு,முதல் படம் சூப்பர்ர் அக்கா!!
பதிலளிநீக்குஅத்தனை பூக்களையும் ரசித்தேன். தொடரட்டும் பூக்களின் அணிவகுப்பு.
பதிலளிநீக்குAll pictures, very nice!
பதிலளிநீக்குCanna மஞ்சள் வண்ணத்தில் இன்றுதான் பார்க்கிறேன். வண்ணங்களும் மலர்களும் கேப்ஷன்களும் மனதைக் கொள்ளை கொள்கின்றன ராமலக்ஷ்மி :)
பதிலளிநீக்குவிதவிதமான வண்ணங்களில் பல உணர்வுகளைத் தட்டி எழுப்புகின்றன. அப்படியே அதன் நீட்சியாய் அமைதிக்கு இட்டுச் செல்கின்றன. உங்கள் கேமரா கண்களும் அருமை :)
கொள்ளை அழகு அக்கா.. அப்படியே காமராவுக்குள்ள அள்ளி இருக்கீங்க :))
பதிலளிநீக்கு@இராஜராஜேஸ்வரி,
பதிலளிநீக்குமென்மையும்தான்:). உங்களுக்குப் பிடித்தபடம் பலராலும் பாராட்டப் பட்டிருக்கிறது மற்ற தளங்களிலும். வருகைக்கு மிக்க நன்றி.
@மாதேவி,
பதிலளிநீக்குஉங்கள் சாய்ஸ்:). நன்றி மாதேவி.
@NKR R,
பதிலளிநீக்குநான் சென்ற போது கூட்டமே இருக்கவில்லை இந்த முறை. இன்னும் 3 நாட்கள் உள்ளன. முயன்றிடுங்கள். இதற்கெல்லாம் பயந்தால் முடியுமா:)?
@MangaiMano,
பதிலளிநீக்குநன்றி மங்கை. உங்கள் பகிர்வுக்குக் காத்திருக்கிறேன்:)!
@கீத மஞ்சரி,
பதிலளிநீக்குநன்றி கீதா.
@ஸ்ரீராம்.,
பதிலளிநீக்குகாற்றின் நிறம் எனக்கும் தெரியாது.
அதுசரி, அருகிலிருப்பவருக்குதானே மணம் மொழியாக முடியும்:)?
படங்களை இரசித்ததற்கு நன்றி.
@வை.கோபாலகிருஷ்ணன்,
பதிலளிநீக்குநன்றி VGK sir.
@கோவை2தில்லி,
பதிலளிநீக்குநன்றி ஆதி:)!
@அமைதிச்சாரல்,
பதிலளிநீக்குஸ்ரீராம் போல கேள்வி கேட்டு மாட்டி விடுகிறீர்களே:)?
நன்றி சாந்தி.
@சே. குமார்,
பதிலளிநீக்குநன்றி குமார்.
@வல்லிசிம்ஹன்,
பதிலளிநீக்குஇரண்டுமே வேண்டும்தான்:)! நன்றி வல்லிம்மா.
@கோமதி அரசு,
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா, கண்காட்சிப் படங்களை இரசித்ததற்கும்:)!
@S.Menaga,
பதிலளிநீக்குநன்றி மேனகா.
@வெங்கட் நாகராஜ்,
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
@கே. பி. ஜனா...,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@மதுமிதா,
பதிலளிநீக்குஇரசித்தமைக்கு நன்றி மதுமிதா:)!
@சுசி,
பதிலளிநீக்குநன்றி சுசி:). நலம்தானே?
@சுசி,
பதிலளிநீக்குஇந்தப் படங்கள் யாவும் கபினியில் எடுக்கப்பட்டவை.