Friday, September 23, 2011

ஆயிரம் மலர்களே.. - பெங்களூர் லால்பாக் ஆகஸ்ட் 2011 கண்காட்சிப் புகைப்படங்கள் - பாகம் 1 - ( Bangalore Lalbagh Flower Show )

ஆகஸ்ட் 2011 மலர் கண்காட்சியில் கண்ணாடி மாளிகைக்குள் காட்சிப் படுத்தப்பட்டவை மட்டும் 572 வகை என்றும், பூங்கா எங்குமாக சேர்த்து தோட்டக்கலைப் போட்டியில் பங்கு பெற்றவை 593 வகை என்றும் தெரிவிக்கிறது புள்ளி விவரம். எண்ணவே வேண்டாம் சுற்றும் முற்றும் பார்த்தாலே தெரியும் வாருங்கள் பூக்களின் மத்தியில் புகுந்து ஒரு நடை போய் வரலாம்..

விருப்பமான படங்களைப் பெரிது படுத்தி ரசித்திடுங்கள். பெயர் குறிப்பிடாத மலர்களைப் பற்றித் தெரிந்திருந்தால் சொல்லிச் செல்லுங்கள். குறித்துக் கொள்கிறேன்:)!

#1 மஞ்சள் லில்லி மலர்கள் (Day Lilies)


#2 பூப்பூவா.. (Lilacs)


#3 பெட்டூனியா..



#4 டாலியா (Dahlia) எத்தனை வண்ணங்களில்..

#5 கோழிக் கொண்டைகள் (Cock's Comb)
‘நாங்க மட்டும் குறைஞ்சவங்களா?’ எனப் பல வண்ணங்களில் மிரட்டும் அளவுகளில்.. ஒவ்வொரு வருடமும் முதல் பரிசைத் தட்டியபடி [காட்சி ஆரம்பித்து ஒருவாரம் ஆன நிலையில் கால் கடுக்க நின்றதில் சில களைத்து வாடி..]

#6 பால்சம்

இந்த மலர்கண்காட்சிகளுக்கு பின்னால் ஒரு சரித்திரமும் உள்ளது. 1922_ஆம் ஆண்டு மைசூர் தோட்டக்கலை சங்கம் வருடத்துக்கு இருமுறை கோடைக் காட்சி, குளிர்காலக் காட்சி என நடத்த ஆரம்பித்தது. அதனுடன் அரசின் தோட்டக்கலைத் துறை 1951-ல் கைகோர்த்துக் கொண்டு வருடம் இரண்டு காட்சிகளை குடியரசு தினம் மற்றும் சுதந்திரதினத்தையொட்டி நடத்த ஆரம்பித்து இன்று வரை தொடர்கிறார்கள்.

இந்த ஆகஸ்டில் தலைநகர் தில்லியின் தாமரைக் கோவிலை பல ஆயிரம் வெள்ளை ரோஜாக்கள் மற்றும் சம்பங்கி, நந்தியாவட்டைகளால் எழுப்பியிருந்த அழகை இங்கே பார்த்து மகிழ்ந்தீர்கள்.

#7 கொனார்க் சக்கரம்
அடுத்த முக்கியத்துவம் ஒரிசா சூரியக்கோவிலின் இந்த கொனார்க் சக்கர வடிவமைப்புக்குத் தரப்பட்டிருந்தது. இந்தச் சக்கரம் இந்திய அரசாங்க முத்திரையாக சில நோட்டுத்தாள்களில் இடம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

#8 END POLIO
ரோட்டரி சக்கரம் போலியோவுக்கு முடிவு கட்ட அழைத்து..

காய்ந்த மலர் கொண்டு செய்யும் அலங்காரங்கள், தாய், டட்ச் மற்றும் ஜன்னுர் மலர் அலங்காரங்கள் பயிற்றுவிக்க படுவதாக அறிவித்திருந்தார்கள். காட்சிப்படுத்தப்பட்டிருந்த சில அந்த வகையைச் சேர்ந்தனவா எனத் தெரியாது. பகிர்ந்து கொள்கிறேன்.

#9

#10

#11

#12 வெள்ளை லில்லிகள்

#13 செந்நாரை மலர்கள் (Anthurium)

#14 வெள்ளை அந்தூரியம்

#15 பச்சையிலும்..

ஊட்டியின் ஃபெர்ன் ஹில் கார்டன் குளிர் பிரதேசப் பூக்களின் 40 வகைகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. அவற்றில் சில பார்வைக்கு:

#16

#17

#18

#19 சாமந்திப்பூக்கள்

#20 லிமோனியா

#21

சிலவற்றுக்குத் தமிழில் பெயர் தெரியவில்லை. பூக்களை ரசிக்க மொழி ஒரு தடையா என்ன:)? ரசிப்போம் வாங்க இந்த ஓரங்குலப் ப்ரிமுலா கண்சிமிட்டும் அழகை..

#22 பேரழகி ப்ரிமுலா இச் சின்னஞ்சிறு மலர் ஃப்ளிக்கர் தளத்திலும் பலர் மனதைக் கொள்ளை கொண்டு விட்டது:)!
***

‘ஆயிரம் மலர்களே..’ எனத் தலைப்பிட்டு எண்ணூற்று எண்பத்து எட்டு மலர்களைதான் பாகம் ஒன்றில் காட்டியிருக்கிறேன். மீதம் நூற்றுப் பனிரெண்டுடன் அடுத்த பாகம் “ஒவ்வொரு பூக்களுமே..” வெகு விரைவில்:)!

*****

37 comments:

 1. பூக்கள் வாசனை இல்லாத குறை ஒன்று மட்டும் தான்...கலக்கல்..

  ReplyDelete
 2. ஆஹா ஆஹா கண்ணை கவரும் மலர்கள், அற்புதம் அற்புதம், நன்றிங்கோ.....!!!!

  ReplyDelete
 3. ஹப்பா..படங்களை விட்டும் விழிகளை அகற்ற மனமே இல்லை.மிகவும் ரம்யமாக இருக்கு ராமலக்‌ஷ்மி.

  ReplyDelete
 4. வாவ்... காணக்காண திகட்டவில்லை போங்க... நான் இதுவரை பார்த்திராத ஊர் பெங்களூர்... வரணும்... உங்க காமிரா கண்களுடன் பார்க்கணும்... :) wonderful clicks...

  ReplyDelete
 5. மலர்கள் வியக்க வைக்கின்றன... புகைப்படங்கள் மலைக்க வைக்கின்றன...
  காண வாய்ப்பளித்ததற்கு நன்றி.

  ReplyDelete
 6. அழகழகான பூக்களின் அழகழகான படங்கள்.

  ReplyDelete
 7. ஆயிரம் மலர்களே அந்த மலர்களைப் போன்ற மிகவும் அழகான பதிவு.
  பாராட்டுக்கள். வாழ்த்துகள். vgk

  ReplyDelete
 8. காண கண்கோடி வேண்டும்.

  ReplyDelete
 9. போட்டோவில் மலர்கள் சிரிக்கின்றன...
  அற்புதம் அக்கா.

  ReplyDelete
 10. பூப்பூவா பூத்திருக்கு ஆயிரம்பூ பூமியிலே....பூவிலே சிறந்த பூ என்ன பூ..!!

  எல்லா படங்களுமே அருமை. பூக்களைப் பார்க்க அலுக்குமா என்ன? ப்ரிமுலாவை தனியாகப் பெரிதாகப் போட்டது போல வேறு சில பூக்களையும் ஒரு தனிப் படம் போட்டிருந்தால் அவைகளின் அழகும் இன்னும் தனித்துத் தெரியும்.

  ReplyDelete
 11. மலர்கண்காட்சி அருமை

  பூக்கள் வாசனை இல்லாத குறை ஒன்று மட்டும் தான்...கலக்கல்..என்று
  ரெவெரி அருமையாகச் சொல்லியிருக்கிறார்

  ReplyDelete
 12. பேரழகி பரிமுலாவுக்கு மற்றொரு பெயர் தெரியுமா

  பென்சில் சீவலா

  ReplyDelete
 13. படங்கள் கொள்ளை அழகு!
  லிமோனியா பூ ந்னு நம்ப கஷ்டமா இருக்கு!
  பேரழகிக்கும் என் ஓட்டு இல்லை! :-)))

  ReplyDelete
 14. எல்லா படங்களுமே அருமை.
  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. ரொம்ப பிடித்தது கடைசி படம். எப்படி தான் எல்லா பூக்கள் பெயரும் ஞாபகம் வச்சிக்கிரீன்களோ?

  ReplyDelete
 16. வாவ் என்னே அழகு சூப்பர்!!!

  தமிழ்மணம் 7

  ReplyDelete
 17. ப்ரிமுலா அசத்துது :-)

  எங்கூட்லயும் நிக்குது. இப்பத்தான் பூத்து ஓஞ்சது.

  ReplyDelete
 18. ரெவெரி said...
  //பூக்கள் வாசனை இல்லாத குறை ஒன்று மட்டும் தான்...கலக்கல்..//

  நன்றி ரெவெரி.

  ReplyDelete
 19. MANO நாஞ்சில் மனோ said...
  //ஆஹா ஆஹா கண்ணை கவரும் மலர்கள், அற்புதம் அற்புதம், நன்றிங்கோ.....!!!!//

  மிக்க நன்றி:)!

  ReplyDelete
 20. ஸாதிகா said...
  //ஹப்பா..படங்களை விட்டும் விழிகளை அகற்ற மனமே இல்லை.மிகவும் ரம்யமாக இருக்கு ராமலக்‌ஷ்மி.//

  நன்றி ஸாதிகா.

  ReplyDelete
 21. அப்பாவி தங்கமணி said...
  /வாவ்... காணக்காண திகட்டவில்லை போங்க... நான் இதுவரை பார்த்திராத ஊர் பெங்களூர்... வரணும்... உங்க காமிரா கண்களுடன் பார்க்கணும்... :) wonderful clicks.../

  நன்றி புவனா!

  ReplyDelete
 22. தமிழ் உதயம் said...
  //மலர்கள் வியக்க வைக்கின்றன... புகைப்படங்கள் மலைக்க வைக்கின்றன...
  காண வாய்ப்பளித்ததற்கு நன்றி.//

  மிக்க நன்றி ரமேஷ்!

  ReplyDelete
 23. சுல்தான் said...
  //அழகழகான பூக்களின் அழகழகான படங்கள்.//

  மகிழ்ச்சியும் நன்றியும்.

  ReplyDelete
 24. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //ஆயிரம் மலர்களே அந்த மலர்களைப் போன்ற மிகவும் அழகான பதிவு.
  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.//

  மிக்க நன்றி vgk!

  ReplyDelete
 25. ஜெயந்திமணி said...
  //காண கண்கோடி வேண்டும்.//

  நன்றி தங்கள் முதல் வருகைக்கும்.

  ReplyDelete
 26. சே.குமார் said...
  //போட்டோவில் மலர்கள் சிரிக்கின்றன...
  அற்புதம் அக்கா.//

  நன்றி குமார்.

  ReplyDelete
 27. ஸ்ரீராம். said...
  //பூப்பூவா பூத்திருக்கு ஆயிரம்பூ பூமியிலே....பூவிலே சிறந்த பூ என்ன பூ..!!

  எல்லா படங்களுமே அருமை. பூக்களைப் பார்க்க அலுக்குமா என்ன?//

  நன்றி ஸ்ரீராம்.

  // ப்ரிமுலாவை தனியாகப் பெரிதாகப் போட்டது போல வேறு சில பூக்களையும் ஒரு தனிப் படம் போட்டிருந்தால் அவைகளின் அழகும் இன்னும் தனித்துத் தெரியும்.//

  அடுத்த பாகத்தில் வரும் சில படங்கள்:)!

  ஒவ்வொரு தொகுப்பிலும் தனிமலர்கள் பகிர்வது வழக்கமே. ஆனால் இந்த முறை க்ளாஸ் ஹவுஸ் தவிர்த்து வெளித் தோட்டத்தில் ஸ்டால்கள் இல்லாததால் தனிப் படம் அதிகம் எடுக்கவில்லை.

  ReplyDelete
 28. goma said...
  //மலர்கண்காட்சி அருமை

  பூக்கள் வாசனை இல்லாத குறை ஒன்று மட்டும் தான்...கலக்கல்..என்று
  ரெவெரி அருமையாகச் சொல்லியிருக்கிறார்/

  மிக்க நன்றி!

  ReplyDelete
 29. goma said...
  //பேரழகி பரிமுலாவுக்கு மற்றொரு பெயர் தெரியுமா

  பென்சில் சீவலா//

  ஆம் அப்படிதான் தெரிகிறது:)!

  ReplyDelete
 30. திவா said...
  //படங்கள் கொள்ளை அழகு!
  லிமோனியா பூ ந்னு நம்ப கஷ்டமா இருக்கு!//

  நன்றி.

  மொத்தமாகப் பார்க்கையில் வெள்ளைக் கம்பிகளைச் சுருட்டி விட்ட மாதிரிதான் தெரிகின்றன:)!
  படத்தைப் பெரிது செய்து பாருங்கள்:)! ஓரளவு நம்புவீர்கள். 2, 3 மிமீ அளவிலான பூக்கள்.

  //பேரழகிக்கும் என் ஓட்டு இல்லை! :-)))//

  அதனால் என்ன? ஆயிரத்தில் ஒன்றோ ரெண்டோ குறைத்துக் கொண்டு பொற்காசுகளை வழங்கிச் செல்லுங்கள்:)!

  ReplyDelete
 31. ஆயிஷா அபுல் said...
  //எல்லா படங்களுமே அருமை.
  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 32. மோகன் குமார் said...
  //ரொம்ப பிடித்தது கடைசி படம். எப்படி தான் எல்லா பூக்கள் பெயரும் ஞாபகம் வச்சிக்கிரீன்களோ?//

  சில படமெடுக்கையில் கிடைத்தவை. சில இணையத்தில் தேடிப் பிடித்தவை:)! நன்றி மோகன் குமார்.

  ReplyDelete
 33. சசிகுமார் said...
  //வாவ் என்னே அழகு சூப்பர்!!!//

  நன்றி சசிகுமார்.

  ReplyDelete
 34. அமைதிச்சாரல் said...
  //ப்ரிமுலா அசத்துது :-)

  எங்கூட்லயும் நிக்குது. இப்பத்தான் பூத்து ஓஞ்சது.//

  மகிழ்ச்சி:)! நன்றி சாந்தி.

  ReplyDelete
 35. திரட்டிகளில் வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 36. அழகான மலர்களை நேர்த்தியாகப் படம் பிடித்திருக்கிறீர்கள்.

  மலர் கண்காட்சியை பார்க்க வாய்ப்புக் கிடைக்காத எங்களைப் போன்றவர்களுக்கு இந்தப் பதிவு மிக மகிழ்ச்சியான ஒன்று.
  நன்றி.

  ReplyDelete
 37. நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin