இந்த வருடக் குடியரசுதின மலர் கண்காட்சியில் மக்கள் மனம் கவர்ந்த சிறப்பம்சங்களான மகாபாரத மணல் சிற்பம், மெகா சைஸில் ஒயிலாக நின்றிருந்த ஜோடி மயில், பொங்கி வந்த பூ அருவி என மேலிருக்கும் படத்திலிருப்பவற்றைப் பாகம் ஒன்றில் பகிர்ந்து கொண்டிருந்தேன். அடுத்த பாகமாகப் பகிர்ந்திடுவதாகச் சொல்லியிருந்த ‘நிருத்யாஞ்சலி’ எனும் நம் நாட்டின் பாரம்பரிய நடனங்களினாலான வணக்கம் விதம் விதமான மலர்கள் பழங்களால் சித்தரிக்கப்பட்டிருந்த காட்சிகளைக் காணலாம் வாங்க..
# 1 வரவேற்கிறது கம்பளம்..
# 2 நிருத்யாஞ்சலி
# 3 பரதம்
# 4 கதக்களி
# 5 கரகம்
கும்பத்தின் உச்சியிலே பச்சைக் கிளி:)!
# 6 பொய்க்கால் குதிரை
# 7 ஒடிசி
# 8 டோலு
# 9 மூங்கில் நடனம்
# 10 பாங்ரா
# 11 குச்சுப்புடி
# 12. கம்சாலே
# 13. மணிப்புரி
இந்த நடன சித்தரிப்புகளை வித்தியாசமாகச் செய்திருக்கலாம் என்பது பலரின் கருத்தும். ஆனால் சிரமமேற்கொண்டு செய்த கலைஞர்களின் உழைப்புக்கான அங்கீகாரமாகப் படமெடுத்துப் பகிர்ந்து கொண்டுள்ளேன். அதுவுமில்லாமல் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் விதமான அவர்களின் தொடர் முயற்சியும் பாராட்டுக்குரியதாக இருக்கிறது.
# 14. பளிங்கு மாளிகை அரிசி மணிகளில்..அரிசிமணிகளாலான தேசியக் கொடியையும், கடுகினால் எழுதப்பட்ட தேசிய கீதத்தையும் சென்ற பதிவில் பதிந்திருந்தேன். அதுபோல தாஜ்மகாலை அரிசி மணிகளால் நுணுக்கமாகச் செதுக்கியிருந்தார்கள். அருகில் சென்று எடுக்க வழியில்லாததால் கண்ணாடியில் விழுந்த பிரதிபலிப்பைத் தவிர்க்க முடியவில்லை. இருந்தாலும் பார்வைக்கு வைத்திருக்கிறேன்.
# 15. பூங்கொத்திலிருந்து தலைநீட்டும் அன்னாசிப் பிஞ்சைப் பாருங்க:)
# 16. இன்னொரு மலர் விரிப்பு
“இந்த முறை போகணுமா...” என ஒவ்வொரு முறையும் கேள்வி எழும். வேண்டாமென எடுக்கும் முடிவு ஒவ்வொரு நாளும் காட்சி குறித்து வெளியாகும் செய்திகளால் மெல்ல மெல்ல வலுவிழந்து கேமராப் பையைத் தூக்க வைத்து விடும்:)! விதம் விதமான மலர்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லைதான். பாருங்க...
# 17. எத்தனை வண்ணங்கள்..மொத்தமாய் காணும் போது மனம் மயங்கதானே செய்கிறது:)?
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
1. 2012 குடியரசு தினக் கண்காட்சி - பெங்களூர் லால்பாக் - மகாபாரத மணல் சிற்பம், பூ அருவி, புத்தர் ஸ்தூபி..
2. தலைநகரின் தாமரைக் கோயில்-பெங்களூரு மலர் கண்காட்சியில்..-சுதந்திரதின சேதி சொல்லி..
3. ஆயிரம் மலர்களே.. - பெங்களூர் லால்பாக் ஆகஸ்ட் 2011 கண்காட்சிப் புகைப்படங்கள் (பாகம்-1)
4. சித்திரப் பூக்கள் - பெங்களூர் லால்பாக் ஆகஸ்ட் 2011 கண்காட்சி (பாகம்-2)
5. 2011 பெங்களூரு குடியரசு தின மலர் கண்காட்சி புகைப்படங்கள்
6. பெங்களூரு லால்பாக்-குடியரசுதின மலர் கண்காட்சி 2010
7. மலரோடு மலராக..-பெங்களூரு லால்பாக்கில்..
அழகு சொட்டுகிறது - புகைப்படங்களில்.
பதிலளிநீக்குகரகமும் மணிப்புரியும் ரொம்பவே தத்ரூபமா இருக்கு, அதுலயும் கரகம் ச்சான்ஸே இல்லை.. அழகு.
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
பதிலளிநீக்குஅற்புதமான படங்கள்.
வாழ்த்துகள்.
கம்பளம் அருமை. நிருத்யாஞ்சலி எதையோ நினைவு படுத்துவதால் கவரவில்லை! கதக்களி அருமை. மணிப்புரி கவர்கிறது. இன்னொரு மலர் விரிப்பு மிகக் கவர்கிறது.
பதிலளிநீக்குஆம், மனதை மயக்கும் மலர்கள்-மலர்களின் படங்கள்.
இந்த முறை போகணுமா...” என ஒவ்வொரு முறையும் கேள்வி எழும். வேண்டாமென எடுக்கும் முடிவு ஒவ்வொரு நாளும் காட்சி குறித்து வெளியாகும் செய்திகளால் மெல்ல மெல்ல வலுவிழந்து கேமராப் பையைத் தூக்க வைத்து விடும்:)! விதம் விதமான மலர்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லைதான். பாருங்க...//
பதிலளிநீக்குராமலக்ஷ்மி, நீங்கள்
கேமராப் பயைத் தூக்கியதால் தான் எங்கள் கண்களுக்கு விருந்து.
நீங்கள் குறிப்பிட்டது போல எத்தனை பேருடைய உழைப்பு! நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். அற்புதமான படங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.
பதிலளிநீக்குபூக்களை எத்தனை விதமாக அலங்கரித்திருக்கிறார்கள்.பூக்களே அழகு.அதை இன்னும் அழகுபடுத்தினால் பார்த்துக்கொண்டேயிருக்கலாம்போல இருக்கு !
பதிலளிநீக்குவாவ்....நேரில் பார்த்தால் கூட இத்தனை அழகா இருக்கும தெரியல படங்கள் சூப்பர் :-)
பதிலளிநீக்குஎத்தனை கலைநயம்!!!
பதிலளிநீக்குஇதையெல்லாம் படம் பிடித்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளீர்கள். சென்று வராத குறை நீங்கியது. நன்றி.
இவர்களின் உழைப்பை பாராட்டித் தான் ஆக வேண்டும். தத்ரூபமாக செய்திருக்கிறார்கள்.
பதிலளிநீக்குமலர்களை காண்பதென்றாலே மகிழ்ச்சி தான்...உங்க காமெரா புண்ணியத்தில் நாங்களும் கண்டுகளித்தோம்.
மணிப்புரி மட்டும் சரியா அமைஞ்சிருக்கு
பதிலளிநீக்குமற்றவைகள் எல்லாமே பரவாயில்லாம நல்ல்லாவே இருக்குப்பா. முயற்சி எடுத்துச்செய்த கலைஞர்களைப் பாராட்டத்தான் வேணும்.
தீம் செலெக்ட் செய்தவருக்கும் பாராட்டு.
கெரகத்துலே கிளியை மறக்கலை பாருங்க!!!!
அருமையான படங்களை எடுத்துப் பகிர்ந்து கொண்ட உங்க கெமெராவுக்கு, கைகளுக்கும் நன்றீஸ்
கூட்டத்திற்கு பயந்து இதுவரை மலர் கண்காட்சிக்கு நான் லால்பாக் போனதேயில்லை
பதிலளிநீக்குதமிழ் உதயம் said...
பதிலளிநீக்கு//அழகு சொட்டுகிறது - புகைப்படங்களில்.//
நன்றி ரமேஷ்.
அமைதிச்சாரல் said...
பதிலளிநீக்கு//கரகமும் மணிப்புரியும் ரொம்பவே தத்ரூபமா இருக்கு, அதுலயும் கரகம் ச்சான்ஸே இல்லை.. அழகு.//
நன்றி சாந்தி:).
Rathnavel Natarajan said...
பதிலளிநீக்கு//அருமையான பதிவு.
அற்புதமான படங்கள்.
வாழ்த்துகள்.//
நன்றி சார்.
ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//கம்பளம் அருமை. நிருத்யாஞ்சலி எதையோ நினைவு படுத்துவதால் கவரவில்லை! கதக்களி அருமை. மணிப்புரி கவர்கிறது. இன்னொரு மலர் விரிப்பு மிகக் கவர்கிறது.
ஆம், மனதை மயக்கும் மலர்கள்-மலர்களின் படங்கள்.//
நன்றி ஸ்ரீராம். இன்னும் நிறையக் கம்பள விரிப்புகளை எடுத்திருந்தேன்:). சிலவற்றை மட்டும் பகிர்ந்துள்ளேன்.
கோமதி அரசு said...
பதிலளிநீக்கு//ராமலக்ஷ்மி, நீங்கள்
கேமராப் பயைத் தூக்கியதால் தான் எங்கள் கண்களுக்கு விருந்து.//
மகிழ்ச்சியும் நன்றியும் கோமதிம்மா.
கவிநயா said...
பதிலளிநீக்கு//நீங்கள் குறிப்பிட்டது போல எத்தனை பேருடைய உழைப்பு! நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். அற்புதமான படங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.//
ஆம், கவிநயா. இன்னும் ரசனையுடன் செய்திருக்கலாமெனத் தோன்றினாலும் அந்த உழைப்புக்கு மரியாதை தர வேண்டுமல்லவா? மிக்க நன்றி:).
ஹேமா said...
பதிலளிநீக்கு//பூக்களை எத்தனை விதமாக அலங்கரித்திருக்கிறார்கள்.பூக்களே அழகு.அதை இன்னும் அழகுபடுத்தினால் பார்த்துக்கொண்டேயிருக்கலாம்போல இருக்கு !//
நன்றி ஹேமா.
ஜெய்லானி said...
பதிலளிநீக்கு//வாவ்....நேரில் பார்த்தால் கூட இத்தனை அழகா இருக்கும தெரியல படங்கள் சூப்பர் :-)//
நன்றி ஜெய்லானி:).
Shakthiprabha said...
பதிலளிநீக்கு//எத்தனை கலைநயம்!!!
இதையெல்லாம் படம் பிடித்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளீர்கள். சென்று வராத குறை நீங்கியது. நன்றி.//
நன்றி ஷக்தி.
கோவை2தில்லி said...
பதிலளிநீக்கு//இவர்களின் உழைப்பை பாராட்டித் தான் ஆக வேண்டும். தத்ரூபமாக செய்திருக்கிறார்கள்.
மலர்களை காண்பதென்றாலே மகிழ்ச்சி தான்...உங்க காமெரா புண்ணியத்தில் நாங்களும் கண்டுகளித்தோம்.//
நன்றி ஆதி.
துளசி கோபால் said...
பதிலளிநீக்கு//மணிப்புரி மட்டும் சரியா அமைஞ்சிருக்கு...தீம் செலெக்ட் செய்தவருக்கும் பாராட்டு...அருமையான படங்களை எடுத்துப் பகிர்ந்து கொண்ட உங்க கெமெராவுக்கு, கைகளுக்கும் நன்றீஸ்//
மகிழ்ச்சியும் நன்றியும்:). மணிப்புரிக்கே அதிக வாக்கு. ஒவ்வொரு முறையும் ஒருமைப்பாட்டினை ஒட்டிய தீமாகவே இருக்கும். 2010-ல் செய்திருந்த இந்தியப் பண்டிகைகள் எனக்குப் பிடித்திருந்தது.
Nundhaa said...
பதிலளிநீக்கு//கூட்டத்திற்கு பயந்து இதுவரை மலர் கண்காட்சிக்கு நான் லால்பாக் போனதேயில்லை//
வாரநாட்களில் ஓரளவு குறைவாக இருக்கும். Glass House உள்ளே சமாளிப்பதுதான் பெரிய சவால். அதை தவிர்த்து விட்டு கூட ஒரு சுற்று போய் வரலாம். இந்த வருடம் மணல் சிற்பம் அருமையாக இருந்தது:). நன்றி நந்தா.
அருமையான பதிவு
பதிலளிநீக்குகண்கொள்ளாக் காட்சிகளாகப் புகைப்படங்கள்.
Muruganandan M.K. said...
பதிலளிநீக்கு//அருமையான பதிவு
கண்கொள்ளாக் காட்சிகளாகப் புகைப்படங்கள்.//
நன்றி டாக்டர்!
கண்களைக் கட்டிப்போடுகின்றது வர்ணங்கள். கம்பளம்,கரகம் அருமை.
பதிலளிநீக்குகாணக்கண்கோடி வேண்டும்...னேரில் பார்க்காத குறையை நீக்கி விட்டீர்கள்..சகோதரி..
பதிலளிநீக்குஅழகானப் படங்கள்!
பதிலளிநீக்குமாதேவி said...
பதிலளிநீக்கு/கண்களைக் கட்டிப்போடுகின்றது வர்ணங்கள். கம்பளம்,கரகம் அருமை./
நன்றி மாதேவி:).
ESWARAN.A said...
பதிலளிநீக்கு//காணக்கண்கோடி வேண்டும்...னேரில் பார்க்காத குறையை நீக்கி விட்டீர்கள்..சகோதரி..//
நலமா? தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
அமைதி அப்பா said...
பதிலளிநீக்கு/அழகானப் படங்கள்!/
நன்றி அமைதி அப்பா.