வெள்ளி, 22 மார்ச், 2013

ஒற்றை ரோஜா லால்பாக் தோட்டமாகலாம்...- Selective Coloring - ( Bangalore Lalbagh Flower Show )


ஜனவரி 2013 லால்பாக் மலர் கண்காட்சிப் பதிவின் இரண்டாம் பாகமாக அன்று படமாக்கிய மேலும் சில மலர்கள்... செலக்டிவ் கலரிங்கில் மழலைகள்...

# 1
இயற்கையின் வனப்பில்
உயிர்த்திருக்கிறது உலகம்


# 2
Every flower is a soul blossoming in nature.
-Gerard De Nerval


#3  மந்தாரை

பூக்கும் தாவரங்களில் மிகவும் அதிக எண்ணிக்கையிலான சிற்றினங்களைக் (species) கொண்டதாகக் கருதப்படுகிறது ஆர்க்கிட். இக்குடும்பத்தில் 21,950 முதல் 26,049 வரையிலான சிற்றினங்கள் உள்ளன. அதாவது இவற்றின் எண்ணிக்கை உலகில் உள்ள பறவை இனங்களை விட இருமடங்கு அதிகம். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிற மந்தாரை சிங்கப்பூரின் தேசிய மலர் ஆகும். [நன்றி: விக்கிப்பீடியா]

இன்னும் சில வண்ண மலர்கள்:

# 4

#5

#6

#7


நான் இரசித்த விதம் விதமான மலர்களை நீங்களும் கண்டு இரசிக்க வேண்டுமென்கிற ஆவல்தான் வேறென்ன:)?

இதே தினம் எடுத்த வேறு சில படங்களும்:

#8 சீனியர் சிட்டிஸன்ஸ் சுற்றி வர:

#9 
கைவினைப் படைப்பாய் 
வினை தீர்க்கும் விநாயகர்

#10
 கால்மேல் கால்போட்டுக் காத்திருப்பு
வாங்குவோர் வரவுக்காக..
தோட்டக்கலைக்கான பொருட்கள்


#11 பொய் சொன்னா.. மூக்கு வளரும்..
Pinocchio


செலக்டிவ் கலரிங்:

புகைப்படப் பிற்தயாரிப்பில் குறிப்பிட்ட சில இடங்களை மட்டும் வண்ணத்தில் காட்டும் ”செலக்டிவ் கலரிங்”  வலுவாக ஒரு செய்தியைக் கடத்தும் உத்தி.   காற்றில் பறந்து மண்ணில் உதிர்ந்த பழுத்த இலை மட்டும் வண்ணத்தில் காட்டப்படுகையில் வாழ்வின் யதார்த்தம் ஒரு நொடியில் முகத்தில் அறைகிறது.  அழகியலுக்காக மட்டுமின்றி கவன ஈர்ப்புக்காகவும், ஏன், கதை சொல்லும் உத்திக்காகவும் கூட கையாளப்படுகிறது.  செலக்டிவ் கலரிங் செய்யப்பட்ட வகையில் இந்தப் பெண்மொழிப் பதிவின் கடைசிப் படம் எனக்கு ஒரு கவிதையானது. அதற்குள் சொல்லப் படாத ஒரு கதையும் தெரிந்தது.



குடியரசுதின மலர்கண்காட்சி முதலாம் பாகத்தில் சில மழலைச் செல்வங்களின் படங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தேன்.  செலக்டிவ் கலரிங் மூலமாக இப்போது எப்படி தோற்றமளிக்கின்றன பாருங்கள்:

 #12
பொம்முக்குட்டி அம்மா


#13
ஒளிபடைத்த கண்ணினாய்.. 
உறுதி கொண்ட நெஞ்சினாய்..
இளைய பாரதத்தினாய்..


கருப்பொருளை வெளிப்படுத்த..

#13
பாரம்பரியம்


#14
ஒற்றை ரோஜா என் தோட்டமாகலாம்...
- Leo Buscaglia
இந்த ஒற்றை ரோஜா
எனக்கு 
லால்பாக் தோட்டமாகிறது:)!
***

உங்களுக்கும் செலக்டிவ் கலரிங் செய்து பார்க்க ஆசை வருகிறதுதானே?
தமிழில் புகைப்படக் கலை (PiT) தளத்தில் 
படிப்படியான விளக்கங்களுடன் இதோ இரு பதிவுகள்:

செலக்டிவ் கலரிங் செய்து அசத்துவோமா? 

முயன்று பாருங்கள்:)!
***


40 கருத்துகள்:

  1. மலர்களின் அழகும், செலக்டிவ்கலர் செய்த படங்களும் கண்ணையும் கருத்தையும் கவருது.
    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  2. //மலர்களின் அழகும், செலக்டிவ்கலர் செய்த படங்களும் கண்ணையும் கருத்தையும் கவருது.
    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி. //

    ஆமாம்... அதேதான்! :)

    பதிலளிநீக்கு
  3. அனைத்தும் பிரமாதம்...

    முக்கியமாக செலக்டிவ் கலரிங் சூப்பர்ப்...

    பதிலளிநீக்கு
  4. எப்படிப்பா இப்படி எல்லாம் படம் எடுக்கறீங்க!!!!!!!!!!!!பாராட்ட வார்த்தை இல்லை.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. மந்தாரை மலர் அழகு. பெரிதாக்கப் பட்ட படமா? ஒரிஜினல் அளவு என்ன இருக்கும்? தெருவோரங்களில் நிறையப் பூத்திருக்குமோ? [மந்தார மலரே..மந்தார மலரே என்று ஒரு ஜெயச்சந்திரன் பாடிய பாடல் இருக்கிறது]

    7வது படம். மஞ்சள் எப்போதுமே கவர்ச்சிதான்.

    பதிலளிநீக்கு
  6. அத்தனையும் அருமை. செலக்டிவ் கலரிங் நல்ல உத்திதான். இப்ப காமிராக்களும் இதே வசதியோட வருது என்னொட நிகான் 5100விலும் இருக்குது. எப்படிப் பயன்படுத்தறதுன்னு இனிமேத்தான் கத்துகக்ணும். இல்லைன்னா இருக்கவே இருக்காங்க நம்ம ஆசிரியர்கள். கத்துக்கொடுக்க மாட்டாங்களா என்ன? :-)))

    பதிலளிநீக்கு
  7. செலக்டீவ் கலரிங் ரசித்தேன் ராமலக்ஷ்மி. அற்புதம்

    பதிலளிநீக்கு

  8. எனக்கு சில நேரங்களில் அருமையான புகைப் படங்களுடன் கூடிய மெயில்கள் வருகின்றன. அப்படி அண்மையில் வந்தவற்றை உங்களுக்கு ஃபார்வார்ட் செய்ய உங்கள் ஈ மெயில் முகவரி என்னிடம் இருக்கவில்லை. தருவதில் ஆட்சேபணை இல்லையே. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  9. அன்பு ராமலட்சுமி ஆஹா அருமையான செய்தி .சிகரத்தைத்தொட்டுவிட்டீர்கள்
    சாதனைப்பெண்ணாக வந்தது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது மேலும் வளர என் நல்லாசிகள் அன்புடன் விசாலம்

    பதிலளிநீக்கு
  10. அழகிய வண்ண மலர்களுடன் கைவினைப் படைப்பாக
    வந்த விநாயகரும் அருமை !...குட்டீசும் மனத்தைக் கவர்ந்து
    சென்றனர் .அருமையான படைப்பு இதற்க்கு மிக்க நன்றி
    அம்மா .மேலும் தொடர வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  11. எல்லாப்படங்களும் நல்ல அழகு. கீழே கூறியுள்ள வரிகளும் மிகவும் பொருத்தமாகவே உள்ளன. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  12. அந்த ஊதா நிற மலரும், விநாயகரும்... மனசைப் பறிச்சிட்டாங்க! செலக்டிவ் கலர் உத்தி ரொம்பவே ரசனையைத் தூண்டுது! அருமைங்க!

    பதிலளிநீக்கு
  13. ஆஹா அனைத்தும் கண்கவரும் அழகு படங்கள்!!

    பதிலளிநீக்கு
  14. மந்தாரை மலர் நடுவே மால் மருகன் முகம் தெரிகிறதே! ஏதாவது டச் அப் செய்தீர்களா?
    பின் குறிப்பு : ரீட் மோர் என்று க்ளிக் செய்தால், மால்-வேர் இருப்பதாக எச்சரிக்கைதான் வருகிறது. முழுப் பதிவு பார்க்க இயலவில்லை. யு-டான்ஸ் இணைப்பு எதுவும் கொடுத்துள்ளீர்களா?

    பதிலளிநீக்கு
  15. @ஸ்ரீராம்.,

    சுமார் நான்கு அங்குல அளவில் இருந்தது. இது க்ளோஸ் அப் ஷாட் என்பதால் பெரிதாகத் தெரிகிறது. தெருவோரங்களில் பார்த்ததில்லை. தோட்டங்கள் போக பல வீடுகளிலும் விரும்பி வளர்க்கிறார்கள் பல வண்ணங்களில்.

    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  16. @அமைதிச்சாரல்,

    ஆம், 5100 மற்றும் 5200-ன் special effects-ல் வழக்கப்பட்டிருக்கும் வசதி. சுலபம்தான். ஃப்ரேம் செய்த பின் வேண்டிய ஒரு வண்ணமோ அல்லது பல வண்ணங்களையோ தேர்வு செய்தால் மற்ற இடங்கள் கருப்பு வெள்ளையாகி விடுகிறது. (ஆனால், கேன்டிட் படங்கள் எடுக்க சற்று சிரமமே.)

    உங்கள் படங்களைக் காணக் காத்திருக்கிறோம்:)! நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு
  17. @kg gouthaman,

    நீங்கள் சொன்னதும் கவனித்ததில் எனக்கும் தெரிகிறதே! டச் அப் ஏதுமில்லை. இயற்கையிலேயே அமைந்திருக்கிறது. நன்றி.

    முன்னரும் இது போல சிலர் தெரிவித்ததில் இன்ட்லி பட்டையை நீக்கினேன். இப்போது நீங்கள் சொன்னதும் யுடான்ஸ் நீக்கி விட்டேன். தற்போது வேலை பார்க்கிறதா தெரிவியுங்களேன்.

    பதிலளிநீக்கு
  18. கண்ணைக் கவர்கின்றன படங்கள்.

    பதிலளிநீக்கு
  19. @kg gouthaman,

    தகவலுக்கும் அக்கறைக்கும் நன்றிகள் பல!

    பதிலளிநீக்கு
  20. அற்புதமான படங்கள்.

    கூடவே ஒரு ஃபோட்டோக்ராஃபி பாடமும். பயன்படுத்திப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. கண்களுக்கு குளிர்சியூட்டிப் போகும்
    அருமையான புகைப்படங்கள்
    பகிர்வுக்கு நன்றி.தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  22. பொம்மு குட்டி அம்மாவில் செலக்டிவ் கலரில் இரண்டு கலர் இருக்கிறது. சிவப்பு மற்றும் மஞ்சள். என்னுடைய கேமராவில் ஒரு கலர் மட்டுமே கொண்டுவர முடிகிறது. இரண்டு கலர் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்?
    என்னுடைய கமரா மாடல் sony HX10

    பதிலளிநீக்கு
  23. @K.Sivakumar,

    Nikon D5100, D5200 மாடல்களில் நான் விரும்புகிற ஒன்றுக்கும் மேலான வண்ணங்களைக் கொண்டு வரும் வசதி உள்ளது. நான் இங்கே படங்கள் 12 மற்றும் 14-லும் 2 வண்ணங்களை ஃபோட்டோஷாப் மூலமாகக் கொண்டு வந்திருக்கிறேன். செய்முறைக்கான PiT தளத்தின் சுட்டிகளும் பதிவில் தந்திருக்கிறேன், பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  24. லக்ஷ்மி, நீர்க்குறியீட்டிற்கு எந்த மென்பொருள் பயன்படுத்துகிறீர்கள்? அல்லது உங்களது காமிராவிலேயே இந்த வசதி இருக்கிறதா?

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin