Saturday, January 26, 2013

குடியரசு தின மலர்க் கண்காட்சி 2013 - பெங்களூர் லால்பாக் - படங்கள்

#1


18 ஜனவரி 2013, அன்று கர்நாடக முதலமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டு பெங்களூர் லால்பாகில் நடந்து கொண்டிருக்கிறது மலர் கண்காட்சி. இந்த வருடத்தின் பிரதான அம்சமாக 35 அடி உயரமும், 20X20 அடி பரப்பளவும் கொண்ட ஈஃபில் டவர் உருவாகியிருக்கிறது இரண்டரை இலட்சம் ரோஜாக்களாலும் பத்தாயிரம் ஆர்க்கிட் மலர்களாலும். அதன் முன்னே 6 அடி உயரத்தில் எழுந்தருளி நிற்கிறார் விவேகானந்தர். அவரது பொன்மொழிகளும் சிலையைச் சுற்றி பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. விவேகானந்தரின் 150-வது பிறந்த தினம் அனுசரிக்கப்படுகிற ஆண்டு இது. இந்த இரண்டு மலர்க் கட்டுமானங்களுடன் அந்தூரியம் மலர்களால் ஆன உடையணிந்த பார்பி பொம்மையும் இடம் பெற்றிருக்கிறது. போகச் சுற்றி வரப் பல மலர் அலங்காரங்கள், போன்சாய் பார்க்கில் 500 செடிகள் என நீள்கிறது மக்களைக் கவரும் அம்சங்கள். .... 

'இத்தனை வருடங்களிலும் பெங்களூரில் எது மாறினாலும், திருவிழா போல் வருடம் இருமுறை நடைபெறும் மலர்கண்காட்சிகளும், அலைமோதும் கூட்டமும், ஆர்வத்துடன் காண வரும் மக்களின் உற்சாகமும் மட்டும் மாறவேயில்லை' என ஒருவர் பத்திரிகைப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். அது உண்மையும் கூட.” என சென்ற பதிவில்  கண்காட்சி குறித்த தகவல்களைப் பகிர்ந்திருந்தேன். சென்று வந்து, படங்கள் இருபத்து மூன்றைப் பகிர்ந்து கொள்கிறேன் குடியரசு தின வாழ்த்துகளுடன்.

#2


#3 முக்கிய அம்சங்களாய் பாரீஸின் ஈஃபில் கோபுரமும் விவேகானந்தரும்..இந்த முறை பிரமாதமாகச் சொல்லிக் கொள்ளும்படி இல்லை மலர்க் கண்காட்சி. வருடத்துக்கு வருடம் பிரயத்தனங்கள் குறைந்து வருகிறது.
கிளாஸ் ஹவுஸ் உள் தவிர்த்து வெளியிடங்களில் கண்காட்சிக்காக அமைக்கப்படும் தோட்டங்கள் கண்ணில் படவில்லை. இன்று சென்றால் கூட்டம் அலைமோதுமென்றே நேற்று வெள்ளிக்கிழமை நானும் தோழியும் மதியம் மூன்றரை மணியளவில் சென்றிருந்தோம். டபுள் ரோட் கேட்டில் வாகனங்களுக்கு அனுமதி இல்லாததால் பிரதான நுழைவாயில் வழியாகச் சென்றோம்.

#4 கெம்பகெளடா கோபுரம்
செல்லும் வழியில் வாகனத்தின் உள்ளிருந்து எடுத்த படம்

#5 மூன்று மணி இருபத்தைந்து நிமிடங்கள்:)!

#6 வரவேற்கும் குதிரை வீரன்

ஆயினும் மிலாடி நபிக்காக நேற்று அரசு விடுமுறை தினம் என்பதால் நுழையும் போது அதிகம் இல்லாவிட்டாலும் மாலை நெருங்க நெருங்க மக்கள் வரவு அதிகமானது.

#7


பாதுகாப்புக்காகப்  போலீஸ் எண்ணிக்கையை அதிகப் படுத்தியிருந்தார்கள். ஆனால் இதுபோன்ற கண்காட்சிகளில் நடந்து கொள்ளும் விதம் பற்றி முறையாகப் பயிற்றுவிக்கப்பட்ட மாதிரித் தெரியவில்லை. கூட்டம் அதிகமில்லாத சமயத்திலும் கூட ஜனங்களை நகருமாறு தொடர்ந்து கெடுபிடி செய்ததுடன் ஆளாளுக்கு கையில் விசில் வைத்துக் கொண்டு விடாமல் ஊதி பொது ஜனங்களின் காதில் இரத்தம் கசிய வைத்துக் கொண்டிருந்தார்கள். மக்கள் வருவது மலர்களை இரசிக்க. சென்ற முறைகளில் இது போன்ற அமர்க்களங்கள் இருக்கவில்லை.

மைசூர் தசரா நினைவில் வந்து போனது. போலீஸ், மக்கள் தசராக் காட்சிகளை சங்கடப்படாமல் இரசிக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டினார்கள். சிறுவர்களுக்கு முன் வரிசையில் இடம் ஏற்படுத்திக் கொடுப்பது.  எங்கேங்கே இடம் இருக்கிறதெனப் பார்த்து மக்களை சாலையின் மறுப்பக்கம் அவர்களே அழைத்துப் போய் அமர வைப்பது என செயல்பட்ட விதம் பாராட்டுக்குரியதாக இருந்தது. இங்கே நிலைமை தலைகீழ்.  கூட்டத்தை நெறிப்படுத்துவது அவசியம்தான். அதைத் தன்மையாகச் செய்யலாம். காதைக் கிழிக்கும் விசில் சத்தத்தினாலும், காற்றிலே கம்பை ஆட்டி சிலம்பம் ஆடிக் கொண்டிருந்த போலீஸ் மேலான சலிப்பினாலும், வேறு வேறு கோணங்களில் முயன்றிடாமல் ஒரு சில படங்களுடன் வெளியேறி விட்டோம் க்ளாஸ் ஹவுஸிலிருந்து.

#8
இரண்டரை இலட்சம் ரோஜாக்கள்.. பத்தாயிரம் ஆர்க்கிட் மலர்கள்..
உழைத்த கரங்களுக்குப் பாராட்டுகள்!

#9

35 அடி உயரமும், 20X20 அடி பரப்பளவும்
இந்த வருடம் ஜனவரி 12, சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்ததினத்தை கர்நாடகா எங்கிலும் சிறப்பாகக் கொண்டாடினார்கள். அன்று காலை பள்ளிக் குழந்தைகள் பலரும் விவேகானந்தர் போல் உடையுடுத்தி ஊர்வலமாகச் சென்றதைப் பார்க்க முடிந்தது. எங்கள் பகுதியில் அன்றைய தினம் முழுவதும் மைதானத்தில் கூட்டம், சொற்பொழிவுகள் இரவு வரை நடந்தன. மலர்கண்காட்சியிலும் மரியாதை செலுத்தப்பட்டிருக்கிறார் விவேகானந்தர்.

#10 பாறை மேல்..


#11 அந்தூரியம் மலர்களால் ஆன ஆடையில் அழகி.
பார்பி என செய்திகளில் சொல்லப்பட்டிருந்தாலும் முகம் பார்க்க அப்படியில்லை.
#12


# க்ளாஸ் ஹவுஸின் சுவரையொட்டிய மூலைகளில் மூங்கில்களால் ஆனா பெரிய மேடைகளில் வெவ்வேறு வித பூச்செடிகள் அலங்காரமாக அடுக்கப்பட்டிருந்தன.
#13

#14

#15

#16 கம்பளம்

#17 கூட்டத்தில்.. ஒரு மழலை மலர்
தலைமுறை இடைவெளி:)?!
நாளைய சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாக என்னைக் கவர்ந்த மழலை மலர்கள்.

#18#19


#20#21


#22

#23 வாழ்க பாரதம்!
[Poinsettia]

***தொடர்புடைய முந்தைய பதிவுகள்:41 comments:

 1. படங்களும் பகிர்வும் அருமையாக இருந்தது மனம் மகிழ வைத்த கண்காட்சி !!...வாழ்த்துக்கள் உங்களுக்கும் .மிக்க
  நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete
 2. அழகான படங்கள்..

  தலைப்பாகையும் குட்டிப்பாப்பாவும் முட்டிக்கற மாதிரியான அழகான கோணம் அசத்தல் :-)))

  ReplyDelete
 3. வண்ணப் பூக்கள், மழலைப் பூக்கள் எல்லாப் படங்களும் அருமை. விசில் மற்றும் கெடுபிடிகளுக்கிடையிலும் அழகிய படங்கள் எடுத்துப் பகிர்ந்துள்ளீர்கள்.

  ReplyDelete
 4. படங்கள் அனைத்தும் கண்கொள்ளாக் காட்சிகள்.இரத்தம் ஒரே நிறம் நிலவட்டும் சகோதரத்துவம் -இது நல்லாயிருக்கே...வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. படங்கள் அத்தனையும் அருமை

  ReplyDelete
 6. ஆனந்தம் தரும் அழகிய பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

  ReplyDelete
 7. படங்களும் பகிர்வும் அருமை.... சிறப்பான பகிர்வு.

  ReplyDelete
 8. ராமலக்ஷமி, குடியரசு தின மலர்க் கண்காட்சி 2013 படங்கள் எல்லாம் அருமை.
  குழந்தைகள் எல்லாம் மனதை கவ்ர்ந்தார்கள்.

  ReplyDelete
 9. ரொம்பவும் கூட்டம் என்று கேள்விப் பட்டேன். போக முடியவில்லை.

  போய்ப் பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் உங்களது அழகிய புகைப்படங்கள் மூலம் குறைந்தது.

  பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 10. எல்லாமே அருமை.ஆனால் நீங்க அந்த பாப்பாவை நிஜமான யானைமேல் வைத்து படம் எடுத்திருக்கணும் ?

  ReplyDelete
 11. மலர் கண்காட்சி படங்கள் மிக அழகு.குழந்தைகள் படங்களும் மனதை கொள்ளை கொண்டது.

  ReplyDelete
 12. படங்களும் விவரங்களும் வழக்கம் போல் நன்று!

  "இந்த முறை செல்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை" என்று தாங்கள் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தீர்கள். அவசியம் தாங்கள் சென்று வரவேண்டும் என்று மனதில் நினைத்தேன். அது, நடந்துவிட்டது. மகிழ்ச்சி!

  ************

  //கூட்டம் அதிகமில்லாத சமயத்திலும் கூட ஜனங்களை நகருமாறு தொடர்ந்து கெடுபிடி செய்ததுடன் ஆளாளுக்கு கையில் விசில் வைத்துக் கொண்டு விடாமல் ஊதி பொது ஜனங்களின் காதில் இரத்தம் கசிய வைத்துக் கொண்டிருந்தார்கள்//

  அங்கு என்ன நடந்தது என்பதை தெளிவாக புரிந்துக் கொள்ள முடிகிறது.

  ReplyDelete
 13. போட்டோஸ் கலக்கல் அக்கா....

  ReplyDelete
 14. @அம்பாளடியாள்,

  மகிழ்ச்சியும் நன்றியும்.

  ReplyDelete
 15. @கோமதி அரசு,

  மகிழ்ச்சியும் நன்றியும் கோமதிம்மா.

  ReplyDelete
 16. @Ranjani Narayanan,

  நன்றி ரஞ்சனிம்மா:). ஆம், கடைசி இரண்டு தினங்கள் மிக அதிகமான கூட்டமென நானும் அறிய வந்தேன்.

  ReplyDelete
 17. மலர்களும் குழந்தைகளும் பார்த்து ரசிக்க அலுக்கவே அலுக்காது. உங்கள் லென்ஸ் மூலம் பார்த்து ரசிப்பதும் அப்படியே. அருமையான படங்கள். அதிலும் மலர்களாலான அந்த ஈபில் டவர்...! மலைக்க வைக்கிறது!

  ReplyDelete
 18. படங்களில் மனம் லயித்து விட்டது. அழகுங்க.

  ReplyDelete
 19. //விடாமல் ஊதி பொது ஜனங்களின் காதில் இரத்தம் கசிய வைத்துக் கொண்டிருந்தார்கள்...சென்ற முறைகளில் இது போன்ற அமர்க்களங்கள் இருக்கவில்லை//

  போன முறை காவலர்கள் ரிலாக்ஸாக இருப்பது போன்ற புகைப்படங்களை அந்தப் பதிவில் போட்டிருந்தீங்களே, அ தைக் காவலர்கள் பார்த்திருப்பாங்களோ? அதான், கரெக்டா நீங்க போகும்போது கெடுபிடியா இருந்திருப்பாங்களோ? :-))))

  ReplyDelete
 20. //பகிர்ந்து கொள்கிறேன் சுதந்திர தின வாழ்த்துகளுடன்.//

  இவ்ளோ அட்வான்ஸாகவா? :-)))))

  ReplyDelete
 21. @ஹுஸைனம்மா,


  திருத்தி விட்டேன்:)! நன்றி.

  ReplyDelete
 22. @ஹுஸைனம்மா,

  இந்த முறையும் பாதி காவலர்கள் ரிலாக்ஸ்டாக ஆங்காங்கே நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களையும் விட்டு வைக்கவில்லை! ஃப்ளிக்கரில் பகிர உள்ளேன். அடுத்த முறை என்னாகுமோ:))?

  ReplyDelete
 23. அழகிய படப் பகிர்வு.

  ReplyDelete
 24. ஒவ்வொரு படமும் கண்ணில் ஒத்திக்க வச்சது!

  கடைசிப்படம் poinsettia. இங்கே கிறிஸ்மஸ் சீஸனுக்கு இதுதான் சிம்பிள் & ஸ்வீட்டான பரிசு.

  உங்கூருக்குத் தங்கச்சியான எங்கூரில் இந்த வார இறுதியில் மலர் கண்காட்சி நடக்கப்போகுது.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin