Friday, August 15, 2014

2014 சுதந்திர தினக் கண்காட்சி - பெங்களூர் லால்பாக் - பாகம் 2 ; படங்கள் 30 ( Bangalore Lalbagh Independence Day Flower Show 2014 )

மூவண்ண வாழ்த்து
2014 சுதந்திர தினக் கண்காட்சி லால்பாக் தோட்டத்தின் 200_வது கண்காட்சியும் ஆதலால் முக்கியத்துவம் பெற்று, மைசூர் அரண்மனையை மலர்களால் உருவாக்கியிருந்ததைப் பாகம் ஒன்றில் பார்த்தோம் இங்கே:

மலர்களால் மைசூர் அரண்மனை - 
200_வது லால்பாக் சுதந்திர தின மலர்க் கண்காட்சி - படங்கள் 17
[பதிவைத் தவற விட்டவர்கள் பார்த்து விட்டு வந்து விடுங்கள்:).]

கூட்ட மிகுதியால் அதிக நேரம் நிற்க முடியாமல் வெளியேறி விட்டேன் க்ளாஸ் ஹவுஸிலிருந்து.
#2

ஆகஸ்ட் 8ஆம்தேதி கண்காட்சி ஆரம்பித்த தினத்தில் ஏழாயிரமாக இருந்த வருகையாளர் எண்ணிக்கை நான் சென்றிருந்த 9ஆம் தேதி சனிக்கிழமை 27 ஆயிரமாகி, மறு நாள் ஞாயிறு 50 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. வாரநாட்களுக்குப் பிறகு சுதந்திர தினமான இன்றிலிருந்து அடுத்த 3 நாட்களுக்கு நிச்சயம் கூட்டம் ஜே ஜே என்றுதானிருக்கும் எள் விழ இடமில்லாமல் :)!  3 இலட்சம் ரோஜாக்களால் உருவான அரண்மனையில் வாடிவிட்டிருந்த ஒன்றரை இலட்சம் ரோஜாக்களை சென்ற ஞாயிறு அன்று இரவோடு இரவாக மாற்றி விட்டிருக்கிறார்கள். இந்த மூன்று நாட்களுக்காகவும் கூட அவ்வாறு செய்திருக்கக் கூடும்.  'திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாகதான் இருக்கிறது' என ஒவ்வொரு வருடமும் எழுகிற முணுமுணுப்புகளைப் பின் தள்ளி விடுகிறது இது போல அவர்கள் எடுத்துக் கொள்கிற பிரயத்தனங்களும், பாராட்டுக்குரிய உழைப்பும்.
#3
பொன் விழா கொண்டாட்டத்தில் நினைவுகளை மீட்டெடுக்கும் விதமாக புகைப்படக் கண்காட்சியும் இருந்தது ஒரு அரங்கில்.அங்கேயும் போய் வரலாம். மலர்களையும் சுற்றி வரலாம், வாருங்கள். படங்கள் திறக்க நேரம் எடுத்தால் ஏதேனும் ஒரு படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யுங்கள். வரிசையாக லைட் பாக்ஸில் பார்த்திடலாம்.
#4
#5

#6

 #7 
STAND UNITED
#8 சால்வியா
 சிகப்பு,  இளம்பச்சை, வயலட் வண்ணங்களில்..
சென்ற வருடம் வெள்ளை வண்ணத்தில் நிறைய இருந்தன.
#9

#10  வயலட் வாடத் தொடங்கியிருப்பது தெரிகிறது..

#11  இந்தப் பூக்களின் பெயர் HELICHRYSUM.
நடுப்பகுதி இதே மஞ்சள் நிறத்திலும் இதழ்கள் மட்டும் மஞ்சள், வெளிர் ஊதா உட்பட வெவ்வேறு நிறங்களில் இருந்தன. மற்ற வண்ணங்களில் எடுத்தவற்றைப் பிறிதொரு சமயத்தில் பகிருகிறேன்.

#12 ஊட்டி ரோஜாக்கள்


#13 தனித்தனியாக எடுக்க முடிந்தவற்றில் ஒன்று மட்டும் இப்போது:

#14 Tuber Rose
 #15 போன்சாய்
 #16

 #17 இதை SPIDER PLANT என்கிறார்கள். முதன் முறையாகப் பார்க்கிறேன்.


வர்ண ஜாலங்கள்
 #18

#19
 
 #20

 #21

 #22

#23 புகைப்படக் கண்காட்சி
 #24
 #25
 #26
 #27
#28

#29

# 30

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
***

15 comments:

 1. இனிய சுத்ந்திரதின நல்வாழ்த்துக்கள்.
  மலர்கள் எல்லாம் அருமை.
  நேரில் கலந்து கொண்ட உணர்வை தந்தது படங்கள். வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 2. படங்கள் எல்லாம் அருமை.

  ReplyDelete

 3. காணக் கண் கோடி வேண்டும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. இயற்கையின் அழகினை முழுமையாக ரசிக்க வைத்த தத்ரூபமான
  படங்களைக் கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் அம்மா !

  ReplyDelete
 5. சுதந்திரதின வாழ்த்துக்கள் அக்கா....
  அருமையான படங்கள்... அழகு.

  ReplyDelete
 6. இனிய சுதந்திர தின வாழ்த்துகள் அக்கா..

  எத்தனை வண்ணங்கள்.. எத்தனை வடிவங்கள்.. அத்தனையும் அழகா உங்க கண்வழி காட்டினதுக்கு நன்றிகள் :)

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. @G.M Balasubramaniam,

  நன்றி GMB sir. வார நாட்களில் சென்றீர்களானால் கூட்டம் குறைவாக இருக்கும்.

  ReplyDelete
 9. அச்சோ... அத்தனையும் மனம் கொள்ளை கொள்கின்றன ராமலக்ஷ்மி. கண்களைத் திருப்பவே முடியவில்லை. மனம் நிறைந்த பாராட்டுகள் உங்களுக்கு.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin