Saturday, January 24, 2015

தில்லி செங்கோட்டை - 2015 லால்பாக் குடியரசுதினக் கண்காட்சி ( 2015 Bangalore Lalbagh Flower Show ) - பாகம் 1

# அதிபர் ஒபாமாவுக்கு வரவேற்பு
17 ஜனவரி தொடங்கி ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது பெங்களூரில் 2015_ன் குடியரசுதின மலர்க் கண்காட்சி. இது லால்பாகில் நடைபெறும் இருநூற்றியோராவது கண்காட்சி! வழக்கம்போல போகலாமா வேண்டாமா என யோசித்து, பின் வழக்கம்போல போய் வந்து விட்டேன்:)! கூட்டமில்லாத வாரநாளான வியாழன் அன்று, மேலும் கூட்டம் குறைந்த நண்பகல் நேரமாகச் சென்று மாலையில் திரும்பினேன்.

# 2

3 லட்சம் சிகப்பு, வெள்ளை ரோஜாக்கள் மற்றும் சம்பங்கி மலர்களாலான, 28 அடி உயரமும், 50 அடி அகலமுமாக விரிந்து நின்ற “தில்லி செங்கோட்டை”தான் இந்தக் கண்காட்சியில் கண்ணாடி மாளிகையில் இடம் பெற்றிருந்த பிரதான அலங்காரம். தலைநகரின் செங்கோட்டை தேர்வு செய்யப்பட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

26 ஜனவரி அன்று செங்கோட்டையில் நடைபெறவிருக்கும் 2015 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள இருப்பவர் அமெரிக்க அதிபர் ஒபாமா. அதை மனதில் கொண்டு அவரைக் கெளரவிக்கும் பொருட்டே, அவருக்கான வரவேற்பாகவே இந்த வருட மலர் அலங்காரம் அமைக்கப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள். செங்கோட்டை நுழைவாயில் தாண்டி சுதந்திரதேவி சிலையை அமைத்திருந்தார்கள். வேறு வேறு கோணங்களில் கோட்டையைப் பார்க்கலாம், வாங்க..

#3 செங்கோட்டை


#4 இன்னும் பக்கமாய்..

 #5 பக்க வாட்டிலிருந்து..#6 ரோஜாக்களுடன் சம்பங்கி மலர்களும்..

#7 கோட்டை மேல் தேசியக் கொடி

#8 இது மறுபக்கம்

#9 ஒபாமாவை வரவேற்க..

 #10 நல்லுறவு நீடிக்க..


#11 நீதி தேவதை

#12  சுதந்திரதேவிக்குத் துணையாக இருக்கட்டுமென நினைத்து விட்டார்களோ என்னவோ, அவருக்கு நேர் பின்னால் நின்றிருந்தார் நீதி தேவதை.


நீண்ட வாரயிறுதி விடுமுறையாக அமைந்து விட்ட இந்த 3 நாட்களிலும் அதிகம் கூட்டம் எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது. இதனால் வெளியூர்களிலிருந்தும் பல பேருந்துகளில் ஒவ்வொரு கண்காட்சிக்கும் பல பள்ளிகள் மாணவர்களை அழைத்து வருகின்றனர்.  

#13
 #14

இருநூறுக்கும் அதிகமான வகையில் பூக்கள் மற்றும் தாவரங்கள் அவற்றின் பெயர்களுடன் கண்ணாடி மாளிகையில் சுற்றிவரக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இந்த முறை சிறிய அளவில் காய்கறித் தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் குழந்தைகளும் இவற்றை ஆர்வத்துடன் வாசித்து அறிவதைக் காண முடிந்தது. 

# 15

#16

# 17
“செல்ஃபி எடுக்கலாம்னு சொன்னாலும் சொன்னேன். ஃபோகஸ் பண்ண இவ்ளோ நேரமா? அதுக்குள்ள அந்த சூப்பர் கேமராவுக்கு ஒரு போஸ் கொடுத்துட்டு திரும்பறேன்..”

ந்த மூன்று தினங்களில் செல்ல நினைப்பவர்களுக்காக... சில தகவல்கள்:

* 17 ஜனவரி தொடங்கிய கண்காட்சி 26 ஜனவரி குடியரசு தினம் வரை நடைபெறும்.

*நுழைவுக்கட்டணம் விடுமுறை நாட்களில் பெரியவர்களுக்கு ரூ.50; சிறுவர்களுக்கு ரூ.10; பள்ளி மாணவர்களுக்கு இலவசம். *நுழைவுச் சீட்டை இப்போது இணையத்திலும் வாங்கலாம்:http://www.lalbaghflowershow.in/calendar/

* நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

*பாதுகாப்புக்காக ஏராளமான ஆண், பெண் காவலர்கள் அமர்த்தப்பட்டிருப்பதுடன் 40-க்கும் மேலான CCTV, Drone cameras பொருத்தப் பட்டுள்ளன.

* வீட்டுத் தோட்டங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களுக்குமான தற்காலிகக் கடைகளுடன், கைவேலை, சென்னப்பட்னா (மரத்தினாலான) விளையாட்டுப் பொருட்கள் கடைகளும் உள்ளன.

*வாகனங்களுக்கு லால்பாக் உள்ளே அனுமதியில்லை என செய்தித்தாள்களில் அறிவித்திருந்தாலும் நான் சென்றிருந்தபோது அனுமதித்திருந்தார்கள்.  ஆனால் இந்த நாட்களில் பள்ளிப் பேருந்துகள், வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் எனத் தெரிகிறது.

* எப்போதும் ஒரு வாரயிறுதியில் ஆரம்பித்து அடுத்த வாரயிறுதி வரை நீளும் கண்காட்சியில் 4,5 நாட்கள் கழித்துச் செல்லும்போது பெரும்பாலும் அலங்கார அமைப்புகளில் மலர்கள் எல்லாம் வாடிப் போய்தான் காட்சி அளிக்கும். அதை இரவோடு இரவாக மாற்றி விடுவார்கள் அடுத்த வாரயிறுதியில் வரும் அதிகமான மக்களை மனதில் கொண்டு. நான் நேற்று சென்றிருந்தபோது அலங்கார அமைப்புகளின் பல பகுதிகளில் பூக்கள் வாடியே இருந்தன. (சென்று முறை பளிச் மலர்ச்சியுடன் இருக்கையில் படமாக்க முடிந்தது.) ஆயினும் இந்த கடைசி மூன்றுநாட்களுக்காக மூன்று இலட்சம் மலர்களையும் நிச்சயம் இன்று மாற்றியிருப்பார்கள் என நம்புகிறேன்.

ற்றபடி வேறென்ன எனக் கேட்டால் மலரால் ஆன இசை கருவிகளைப் பார்க்க முடிந்தது. எல்லாக் கண்காட்சிகளும் இந்த வடிவங்களில் மட்டும்தானே வித்தியாசப்படுகின்றன என்றொரு அலுப்பு எல்லோருக்குமே இருக்கிறது என்றாலும் அதன் பின்னான உழைப்பு அலுப்பைப் பின்னுக்குத் தள்ளி விடுகிறது.

கிடார், வீணை, பியானோ, தபேலாவுடன் அடுத்த பாகம் வெகுவிரைவில் என்று கூறி உங்களிடமிருந்து விடை பெறுவது... ... :)!

# 18 Cock's comb / கோழிக் கொண்டை


முந்தைய வருடக் கண்காட்சிகளைக் காண இந்த இழை உதவும்.

14 comments:

 1. எல்லா படங்களையும் மிக அழகாய் கொடுத்து நேரில் பார்த்த நிறைவை கொடுத்து விட்டீர்கள்.
  வண்டு மொய்க்கும் மஞ்சள் ரோஜா மிக அழகு. செல்ஃபி எடுக்கும் ஜோடிகளும் அருமை.

  ReplyDelete
 2. //வழக்கம்போல் போகலாமா வேண்டாமா என்று யோசித்து வழக்கம்போல போய்வந்து விட்டேன்//

  ஹா...ஹா...ஹா...

  செல்ஃபிக்கு போஸ் தரும்போதே உங்களுக்கும் நைஸாய் போஸ் தருவது ரசனை!

  படங்களை(யும்) ரசித்தேன்.

  ReplyDelete
 3. மலர்ச் செங்கோட்டை மனசைப் பறிக்கிறது. நேரில் பாக்கலையேன்ற குறை கொஞ்சமும் இல்லாமப் பன்னிட்டீங்க. டாங்ஸு......

  ReplyDelete
 4. படங்கள் அத்தனையும் அழகோ அழகு. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 5. ஆசையை தூணடாதே மகளே!

  ReplyDelete
  Replies
  1. காண வாருங்கள் அடுத்தக் கண்காட்சியை:)!

   Delete
 6. அருமையான படங்கள். ரோஜா மலர்களால் செங்கோட்டை - கண்களைப் பறிக்கிறது...

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin