Tuesday, November 26, 2013

எண்ணெழுத்து.. - ஐநூறாவது பதிவு

ஐந்தரை வருடங்கள்.. 500 பதிவுகள்..

மூன்று இலட்சத்து இருபத்து மூன்றாயிரத்து அறுநூறு+ பக்கப் பார்வைகளை எட்டி நிற்கும் முத்துச்சரத்தின் ஐநூறாவது முத்து!

எண்ணிக்கை, கணக்கு அவசியம்தானா என்கிற கேள்வியைப் பின்னுக்குத் தள்ளுகிறது இங்கே பெறுகிற ஊக்கம். தொடர்ந்து இயங்க உரமாக இருப்பதும் அதுவே.  சாத்தியப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பு கலந்த நன்றி!

***

தினமொழிகள் பத்து.. தொகுப்பது தொடர்கிறது..
எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும்..

1. நல்ல நண்பர்கள் நட்சத்திரங்களைப் போல. எல்லா நேரமும் காணக் கிடைக்காவிட்டாலும், இருக்கிறார்கள் நமக்காக எப்போதும்.

2. ஒரு நொடிதான் தேவை புன்னகைக்க. அதன் நினைவோ நீடித்திருக்கும் நாட்கணக்கில், மற்றவர் நெஞ்சங்களில்..

3. அடையும் இலக்கு ஆரம்பப் புள்ளியாக வேண்டும் அடுத்த முன்னேற்றத்துக்கு.

4. கற்பனை எந்த உயரத்துக்கும் எல்லைக்கும் நம்மை இட்டுச் செல்ல வல்லது.

5. கனவுகளுக்கும் நிதர்சனத்துக்கும் நடுவேயான இடைவெளியைக் குறைக்க வல்லது செயல் மட்டுமே.

6. வாழ்வின் மிகப் பெரிய பாடங்களை செய்யும் மிகச் சிறிய தவறுகளிலிருந்தே கற்கிறோம்.

7.  பாசத்தையும், கவனிப்பையும் துரத்தி அடைவது அர்த்தமற்றது. மனதாரத் தரப்படும் அன்பே நாம் பெற்றுக் கொள்ளத் தகுதியானது.

8. எப்போதும் கோபமாக, வாக்குவாதங்களுக்கான சந்தர்ப்பதை ஏதிர் நோக்கியிருப்பவரிடமிருந்து விலகியிருப்பதில் தவறில்லை. உண்மையில்  நம்முடன் அன்றித் தம்முடனே சண்டையிட்டுக் கொள்வதில்தான் அவர்கள் தீவிரமாய் இருக்கிறார்கள்.

9. முன் நோக்கிப் பயணிப்பதற்கானது வாழ்க்கை. தவற விட்டவற்றையும் இழந்தவற்றையும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தால் தடுமாற்றமே மிஞ்சும்.

10. சூரியன் விழுகையில் நட்சத்திரங்கள் எழுகின்றன. நம்பிக்கை அகற்றட்டும் கவலைகளை.

*****

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:64 comments:

 1. 500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அக்கா!! தினமொழிகள் அனைத்தும் முத்துக்கள்...

  ReplyDelete
 2. அக்கா...

  500வது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
  தொடர்ந்து எழுதுங்க...

  ReplyDelete
 3. 500 வது பதிவுக்கு வாழ்த்துகள். முத்துகள் அனைத்தும் அருமை.

  ReplyDelete
 4. ஐநூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.தொடர்ந்து வண்ண மழை பொழியுங்கள்.காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 5. 323666

  இந்த எண்ணின் புதுமையைக் கவனியுங்கள்.

  3 என்ற எண்.

  2 தரம் வருகிறது .

  அந்த 3 ஐ 2 ஆல் மூன்று தரம் பெருக்க

  வருகிறது,

  666

  அதில் என்ன வியப்பு இருக்கிறது ?

  இ ரா ம ல க்ஷ் மி

  எத்தனை எழுத்துக்கள் ?

  அட ! ஆறு.

  இரண்டு வாரத்தைகளாக ?

  ஆமாம்.

  இராம லக்ஷ்மி

  அப்ப 3 எப்படி ?


  நான் ஆல்ரெடி கண்டு பிடிச்சுட்டேன்.

  நீங்க சொல்லுங்க பார்க்கலாம்.


  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 6. தினமொழிகள் அனைத்துமே நன்று....

  உங்கள் முத்துச்சரத்தில் கோர்த்த 500 பதிவுகளும் நல்முத்துகள்.....

  மனமார்ந்த பாராட்டுகள்... மேலும் பல நூறு பதிவுகள் எழுதிட வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. 500-க்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. 500 வது பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்.தொடர்ந்து உங்கள் பணி சிறக்கட்டும்.பத்தும் சிந்திக்க வைத்த முத்தான தினமொழிகள்.

  ReplyDelete
 9. வெற்றிகரமான 500வது பதிவுக்கு என் மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.


  //4. கற்பனை எந்த உயரத்துக்கும் எல்லைக்கும் நம்மை இட்டுச் செல்ல வல்லது.//

  ஆம் உண்மை. கற்பனை உலகம் மிக அழகானது.

  ReplyDelete
 10. 500வது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
  தொடர்ந்து எழுதுங்க...தோழி

  ReplyDelete
 11. ஐநூறாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி. தொடர்ந்து எண்ணங்களாலும் எழுத்துக்களாலும் அழகிய நிழற்படங்களாலும் முத்துச்சரத்தை அலங்கரிக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. ஐநூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்...

  தாத்தா கருத்துரை எப்பவுமே வித்தியாசம்...!

  ReplyDelete
 13. வணக்கம்
  500வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 14. 500ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி...

  ReplyDelete
 15. 500வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
  முத்துக்கள் 10 அருமை.

  ReplyDelete
 16. வெகுவிரைவில் 1000ஐக் கடக்க என் மனம் நிறைந்த வாழ்த்துகள் சகோதரி.

  ReplyDelete
 17. சூரி சார் இரிருந்தாலும் இப்படி புதிர் போகக்கூடாது..

  ReplyDelete
 18. 500 பதிவிற்கு வாழ்த்துக்கள் அக்கா. தொடர வேண்டுகின்றேன்

  ReplyDelete
 19. ஆஹா...... ஐநூறு முத்துக்களா!!!!

  எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் இல்லையோ!!!!

  மனம் நிறைந்த இனிய வாழ்த்து(க்)கள்!

  ReplyDelete
 20. 500 வது பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்.தொடர்ந்து உங்கள் பணி சிறக்கட்டும்.

  ReplyDelete
 21. மிக அருமை ராமலெக்ஷ்மி. எண்ணெழுத்து.. :)வித்யாசம் :)

  வாழ்த்துக்கள் 500 க்கு :) ஆயிரம் பல்லாயிரமாகப் பெருகட்டும். உங்கள் பகிர்வு :)

  ReplyDelete
 22. அக்கா, மனமார்ந்த வாழ்த்துகள்!!

  ReplyDelete
 23. ஐநூறு பதிவுகள் என்பது
  அதுவும் தரமான பயனுள்ள பதிவுகளாகத் தந்தது
  இமாலயச் சாதனையே
  சாதனைகள் தொடர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 24. ஐநூறு முத்துகளுக்கு
  அகம் நிறைந்த வாழ்த்துகள்..!

  ReplyDelete
 25. வாழ்த்துகள்! தொடரட்டும் பல நூறு பதிவுகள்...

  //நல்ல நண்பர்கள் நட்சத்திரங்களைப் போல. எல்லா நேரமும் காணக் கிடைக்காவிட்டாலும், இருக்கிறார்கள் நமக்காக எப்போதும்.//

  அட...!

  ReplyDelete
 26. 500 வது பகிர்வுக்கு வாழ்த்துக்கள் இராமலக்ஷ்மி,தொடருங்கள்...பின்தொடர்கிறோம் நாங்களும்....

  நெஞ்சார்ந்த வாழ்த்துக்களுடன்
  நித்தி ஆனந்த்

  ReplyDelete
 27. @sury Siva,

  3. நீங்களே சொல்லி விடுங்களேன்:)!

  ReplyDelete
 28. @goma,

  முதல் பதிவுக்கு முதல் கருத்திட்ட தங்கள் வாழ்த்து ஐநூறாவது பதிவுக்கும்:)! நன்றி!

  ReplyDelete
 29. @goma,

  முதல் பதிவுக்கு முதல் கருத்திட்ட தங்கள் வாழ்த்து ஐநூறாவது பதிவுக்கும்:)! நன்றி!

  ReplyDelete
 30. @அப்பாதுரை,

  நன்றி.

  சூரி சாரின் விடைக்காக நானும் காத்திருக்கிறேன். 2008_ல் எனக்கு முதன் முதலாகக் கமெண்ட் அளித்த பதிவிலும் புதிர் வைத்திருந்தார்:)!

  ReplyDelete
 31. @துளசி கோபால்,

  நீங்கள் காட்டும் வழியில் நாங்கள் நடக்கிறோம்:)! வாழ்த்துகளில் மகிழ்ச்சி. நன்றி.

  ReplyDelete
 32. அப்ப 3 எப்படி ?


  முத்து என்பதும் மூன்று எழுத்து.

  சரம் என்பதும் மூன்று எழுத்து.


  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 33. @sury Siva,

  நன்றி என்பதும் மூன்று எழுத்து:)!

  உடனடி பதிலில் மகிழ்ச்சி, சூரி sir.

  ReplyDelete
 34. 500 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்! திரு சூரி அவர்களின் கருத்துக்கள் அருமை.
  சிலர் போடும் பின்னூட்டம் பதிவை விட நன்றாக இருக்கும். சூரியும் அந்த சிலரில் ஒருவர். அவரது வாழ்த்துக்களுடன், எங்கள் வாழ்த்துக்களும் உங்களுக்கு சேரட்டும்.

  ReplyDelete
 35. மிக்க மகிழ்ச்சி ராமலக்ஷ்மி ! 500-வது பதிவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ! தினமொழிகள் பதிவு ஃப்ளிக்கரிலும் தொடரட்டும்.. எனது அன்பான வேண்டுகோள் .. :)

  ReplyDelete
 36. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி :-)

  ReplyDelete
 37. @James Vasanth,

  செய்கிறேன்:)! நன்றி ஜேம்ஸ்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin